நூற்றோட்டம்
நூல்கள் | அறிமுகம் | திறனாய்வு
நூற்றோட்டம் பகுதியில் நூல்கள், அறிமுகம், திறனாய்வு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் நூல்களின் அறிமுகங்கள், திறனாய்வுகள் மாத்திரம் இணைக்கப்படுதல் வேண்டும். ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் நூல்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இணைக்கப்படல் வேண்டும்.
802 topics in this forum
-
நீதித் துறையில் பயணித்த ஒரு போராளியின் வாழ்க்கை! பீட்டர் துரைராஜ் 22 அத்தியாயங்கள் கொண்ட இந்த நூலை தன் வரலாறு என சுருக்கி வகைப் படுத்த இயலாது. சட்டம், நீதிமன்றம், வழக்குரைஞர்களின் தொழில், பல முக்கிய வழக்குகள், தீர்ப்புகள்.. இவற்றை உண்மைச் சம்பவங்களுடன் இணைத்துச் சொல்லும் போது, அது சமகால சமூக, அரசியல் வரலாறாக ஆகி விடுகிறது! ஜெய்பீம் திரைப்பட வெற்றியைத் தொடந்து, வெகுமக்களின் அன்பிற்குரியவராக கே.சந்துரு மாறிவிட்டார். மாணவர் சங்கத் தலைவர், மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர்,வழக்கறிஞர், நீதிபதி என பல நிலைகளில் இவர் பணியாற்றியுள்ளார். வழக்கறிஞராக பணிபுரிந்த காலத்தில் மனித உரிமை தொடர்பான வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்காக இலவ…
-
- 0 replies
- 592 views
-
-
எனக்குப் பிடித்த சில புத்தகங்கள் - 2020 இளங்கோ-டிசே (1) அற்றவைகளால் நிரம்பியவள் - பிரியா விஜயராகவன் (நாவல்) பிரியா இதை 2008/2009 காலங்களில் எழுதத் தொடங்கியபோது, யார் இவர் இவ்வளவு சுவாரசியமாக எழுதுகின்றாரே என ஒவ்வொரு அத்தியாயங்களையும் 'காட்சி' வலைப்பதிவில் வாசித்திருக்கின்றேன். அங்கே இந்த நாவல் இடைநடுவில் நின்றுபோனாலும், யார் இந்த யமுனா என்று (அப்போது யமுனா ராகவன் என்று புனைபெயரில் எழுதியிருந்தார்; அது அவரின் அம்மாவினதும் அப்பாவினதும் பெயர்களை இணைத்து வந்த புனைபெயர்) தேடியிருக்கின்றேன். அப்படி அவர் யாரெனத்தேடி அக்காலத்தில் அவர் இங்கிலாந்தில் இருக்கின்றார் என்பதையும் நானாகவே தேடிக் கண்டுபிடித்தேன். அது ஒரு வாசகர் தனக்குப் பிடித்த எழுத்தாளரைத் தே…
-
- 0 replies
- 590 views
-
-
புலிகளுக்குப் பின்னான தமிழ் அரசியல்:- இந்திய அமைதிப் படையினர் வெளியேறிக்கொண்டிருந்த பின்னணியில் நிலாந்தன் திசை பத்திரிகையில் அரசியல் பத்திகளை எழுதத் தொடங்கினார். அதிலிருந்து தொடக்கி இருபத்தியேழு ஆண்டுகளாக எழுதிவரும் அவர் ஈழநாதம், வீரகேசரி, தினக்குரல் ,உதயன் ஆகிய பத்திரிகைகளில் எழுதியுள்ளார். கடந்த ஆறு ஆண்டுகளாக தினக்குரல் வார பத்திரிகையில் தொடர்ச்சியாக எழுதி வருகிறார். தினக்குரலில் வரும் அவருடைய கட்டுரைகள் பின்னர் குளோபல் தமிழ் செய்திகள், பொங்குதமிழ், மாற்றம் Jds Lanka(Journalist for Democracy in SriLanka)போன்ற பல இணையத் தளங்களிலும் பிரசுரிக்கப்படுகின்றன. போர்க்காலங்களில் அவர் எழுதிய நூற்றுக் கணக்கான கட்டுரைகளை மீளப் பெறமுடியாத ஒ…
-
- 0 replies
- 587 views
-
-
நொயல் நடேசனின் ‘கானல் தேசம்’ : கசப்பின் இதிகாசம் – தெய்வீகன் February 17, 2019 ஈழத்தமிழ் இலக்கிய படைப்புலகத்திலிருந்து வெளிவந்து கொண்டிருக்கும் போரியல் சார்ந்த பிரதிகளுக்கு “ஜனவசியம்” மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுவது ஒன்றும் புதிதான விடயம் அல்ல. ஆனால், அந்தப் பிரதிகள் என்ன வகையிலான அரசியலை பேசுகின்றன என்பதைப் பொறுத்து ஒவ்வொரு தரப்பிலிருந்தும் பல்வேறு விமர்சனங்கள் இருந்து வந்துள்ளன. ஈழத்தில் போர் முடிந்த பின்னர் வெளிவந்த பிரதிகளை மாத்திரம் எடுத்து நோக்குவோமானால் அவற்றில் முக்கால்வாசிக்கும் மேற்பட்ட பிரதிகள் பிரச்சார நெடி நிறைந்தவையாகவும் போரினால் பொதுமக்கள் இழந்தவற்றை முன்னிறுத்தி எழுதப்பட்டிருக்கின்ற பாடுகளாகவுமே காணப்பட்டிருக்கின்றன. அதிலும், இன்னும் சொல்…
-
- 1 reply
- 582 views
-
-
ஒரு கவிதைப் படைப்பானது எப்போது உணர்வுகளை ஊடுருவிச் செல்கின்றதோ அப்போதே அது ஒரு வெற்றிபெற்ற படைப்பாகிறது. அப்படியானதொரு படைப்பினை வெறுமனே கற்றுக் கொள்வதாலோ அல்லது அனுபவத்தாலோ உருவாக்கிவிடமுடியாது. ஒரு நிகழ்தலின் உண்மையை உணர்ந்து, உணர்ச்சிகளால் ஊடுருவி பார்க்கும் பார்வை யாருக்கு வாய்கிறதோ, அந்த பார்வையில் ஒரு அழகியல் கலந்து உணர்வுகளை தளம்பச்செய்யும் வகையில் யாரால் வெளிவிட முடிகிறதோ அவரால் மட்டுமே வெற்றிபெற்ற ஒரு கவிதையை பிரசவிக்க முடியும். அந்தவகையில் “நிகழ்தலும் நிகழ்தல் நிமித்தமும்” என்ற காரண கரியத் தொடர்புகளை தன்னிலை சார்ந்து வெளிக்கொண்டுவந்துள்ளார் பூங்குழலி வீரன். அவர் தன்னிலை சார்ந்து அவற்றை வெளிக்கொண்டு வந்த போதிலும் ஒவ்வொருவரையும் தன்வயப்படுத்தி ஒருமுறை தம்…
-
- 1 reply
- 580 views
-
-
அதிகாரத்தில் தெறிக்கும் வன்மம் 1. 'Road to Nandikadal' என்பது புலிகளை ஆயுதப்போராட்டத்தின் மூலம் வெற்றிகொண்டதை சிங்கள இராணுவத் தரப்பிலிருக்கும் ஒருவர் கொண்டாடிக் குதூகலிக்கின்ற ஒரு நூலாகும். முகமாலையில் தரித்து நின்ற 53 டிவிசனுக்குத் தலைமை தாங்கிய கமல் குணரட்னே நான்காவது ஈழப்போரில் இறுதியில் புலிகளின் தலைவர் கொல்லப்படுகின்ற தாக்குதலை நிகழ்த்தியதுவரை பலவற்றை எழுதிச் செல்கின்றார். புலிகளின் தலைவரைப் புகழ்ந்திருக்கின்றாரென 2ம் அத்தியாயம் மட்டும் வாசித்துவிட்டு 'புகழ்' பரப்பியவர்கள், இந்நூலை முழுமையாகக் கடைசி அத்தியாயம் வரை வாசித்திருந்தால் அவர்களுக்கு நிச்சயம் கடும் சினம் வந்திருக்கும். ஒரு நாய் தன் காலின் மீது கிடக்கிறது எனவும், நாயின் அடையாள அட்…
-
- 4 replies
- 575 views
- 1 follower
-
-
தினக்குரல்' வாரமலரில் வேதநாயகம் தபேந்திரனினால் 'யாழ்ப்பாண நினைவுகள்' என்ற தலைப்பில் தொடராக எழுதப்பட்ட முதல் முப்பது கட்டுரைகளை கைதடி 'சிவகாமி பதிப்பகம்' தொகுத்து நூலாக வெளியிடுகின்றது. இந்நிகழ்வு யாழ்ப்பாணம் நீராவியடி, கல்லூரி வீதியில் உள்ள இலங்கை வேந்தன் கல்லூரியில் எதிர்வரும் 27 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு அரசாங்க பொதுச் சேவை ஆணைக்குழுவின் உறுப்பினர் உடுவை எஸ்.தில்லைநடராஜா தலைமையில் இடம்பெறவுள்ளது. இந்த நிகழ்வில் வரவேற்புரையை பண்டாரவளை கல்வி வலய தமிழ் பிரிவு கல்விப் பணிப்பாளர் சி.மதியழகனும் வாழ்த்துரைகளை 'ஞாயிறு தினக்குரலின்' பிரதம ஆசிரியர் பாரதி இராஜநாயகம், வட மாகாண உள்ளக கணக்காய்வு திணைக்களப் பணிப்பாளர் நா.இராசநாயம், வட மாகாண சமூக சேவைகள் திணைக்களப்…
-
- 0 replies
- 575 views
-
-
10 நாட்கள், 10 லட்சம் தலைப்புகள், ஒருகோடி புத்தகங்கள்; துவங்கியது சென்னை புத்தக கண்காட்சி! சென்னை; தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் நடத்தும் 39 வது சென்னை புத்தக கண்காட்சி சென்னை தீவுத்திடலில் இன்று துவங்குகிறது. இதில் விகடனின் புதிய இலக்கிய வெளியீடான தடம் இதழுக்கென பிரத்யேக அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. பபாசி எனப்படும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் ஆண்டுதோறும் சென்னையில் புத்தக கண்காட்சியை நடத்திவருகிறது. ஆண்டுதோறும் வாசகர்களுக்கு இந்த 10 தினங்கள் தீபாவளி கொண்டாட்டமாக இருக்கும். கோடிக்கணக்கான புத்தகங்களில் தங்கள் அறிவுப்பசிக்கு உகந்த புத்தகங்களை ஒரே இடத்தில் தேடி வாங்கிச்செல்வது அவர்களுக்கு பெரும்…
-
- 0 replies
- 574 views
-
-
உலக புத்தக தினம்: வாசிப்போம், நேசிப்போம். உலக புத்தக தினம் தமிழ்நாட்டில் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஐரோப்பாவில் வாழ்ந்த தலை சிறந்த இலக்கியவாதியும், நாடக மேதையாகக் கருதப்படுகிறவருமான வில்லியம் ஷேக்ஸ்பியர் பிறந்ததும் இறந்ததும் இந்நாளில் தான் என்பதால் இந்த நாளை உலக, புத்தக தினம் கொண்டாட தேர்ந்தெடுத்துள்ளனர். உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு கலாச்சாரங்களைப் பற்றி விழிப்புணர்வு பெறுவதற்கு புத்தகம் ஒரு சிறந்த கருவியாக விளங்குகிறது. இதனால், ஷேக்ஸ்பியர் உள்ளிட்ட புகழ் பெற்ற எழுத்தாளர்களின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாளை போற்றும் வகையில் ஏப்ரல் 23-ந் தேதியை உலக புத்தக தினமாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது. அனைவருக்கும் வாசிக்கும் உரிமை, அனைத்து மக்கள் வாழ்விடங்களிலும் நூல…
-
- 0 replies
- 573 views
-
-
-
- 0 replies
- 573 views
-
-
பள்ளிக்கூடம் பற்றி தீபச்செல்வன் எழுதப் போகும் புதிய நாவல். பள்ளிக்கூடத்தை மையப்படுத்தி புதிய நாவல் ஒன்றை எழுதப் போவதாக அறிவித்துள்ளார் கவிஞர் தீபச்செல்வன். நடுகல் நாவல் வாயிலாக தமிழர்களின் பரவலான கவனத்தை பெற்றவர் தீபச்செல்வன். மூவாயிரம் பிரதிகளை கடந்து மூன்றாவது பதிப்பை நடுகல் கடந்திருப்பதாக அண்மையில் கூறினார் தீபச்செல்வன். அத்துடன் பயங்கரவாதி என்ற புதிய நாவலை எழுதி வருவதாகவும் அறிவித்திருந்த நிலையில் தற்போது பள்ளிக்கூடத்தை மையப்படுத்தி புதிய நாவல் ஒன்றை எழுதப் போவதாக குறிப்பிட்டுள்ளார். ஒரு எழுத்தாளன் ஆசிரியராக பணியாற்றுவது சிறந்த வாய்ப்புத்தான். எதிர்காலத்தில் பள்ளிக்கூடத்தை மையப்படுத்தி, கிளிநொச்சி மண்ணின் கல்வியை மையப்படுத்தி ஒரு நாவலை எழுதப் …
-
- 0 replies
- 573 views
-
-
18/02/2012 சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஆறாவடு நாவல் குறித்த கருத்துப் பகிர்வு நிகழ்வில் நிலாந்தன் ஆற்றிய உரையின் மீள் செம்மையாக்கப்பட்ட (நிலாந்தனால்) வடிவம்) ஆறாவடு நாவல் ஒரு யுத்தசாட்சியம்.அதனழகியல் பெறுமானங்கள் குறித்து, நானிங்கு பேசப்போவதில்லை. அதன் அரசியல் உள்ளடக்கத்தைப் பற்றியே நான் இங்கு பேச விழைகிறேன். யுத்தத்தின் முதற்பலி உண்மை. பலியிடப்படும் உண்மைக்கு சாட்சியாக இருப்பதே போர் இலக்கியம். அது உண்மைக்கு எவ்வளவுக்கு எவ்வளவு கிட்டவாக வருகின்றதோ அவ்வளவுக்கு அவ்வளவு யுத்த சாட்சியம் முழுமையானதாக அமையும்.அது எவ்வளவுக்கு எவ்வளவு உண்மையில் இருந்து விலகிச்செல்கிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு சாட்சியம் பலவீனமானதாக ஒருதலைப்பட்சமாக மாறுகிறது.அதாவது உண்மையை அதிகம் நெரு…
-
- 0 replies
- 571 views
-
-
ராஜசுந்தரராஜனின் 'நாடோடித்தடம்' இளங்கோ-டிசே கடந்த நான்கு நாட்களாக ராஜசுந்தரராஜனின் 'நாடோடித்தடத்தை' வாசித்துக்கொண்டிருந்தேன். இவ்வாசிப்பிற்கிடையில் வேறு ஒரு படைப்பை வாசித்து தலையில் முட்டி, எதையாவது அதுகுறித்து எழுதித்தொலைத்துவிடுவேனோ என்ற பதற்றத்தை விலத்தி, தன் தடத்தில் சுவாரசியமாகத் தொடர்ந்து கொண்டு சென்றதற்கு ராஜசுந்தரராஜனுக்கு முதலில் நன்றி சொல்லவேண்டும்.நமது முன்னோடிகளிடம், ஒரு நல்ல படைப்பை எப்படி எழுதுவது என்பது கற்றுக்கொள்வதற்கு மட்டுமின்றி, ஒரு மோசமான படைப்பை எவ்வாறு எழுதாமல் தவிர்ப்பது என்பதற்கும் அவர்களிடமே செல்லவேண்டியிருக்கின்றது. அவ்வாறு சமகாலத்தில் எழுதுபவர்களுக்கு பரவலாக வாசிக்கும் ஒரு அரியபழக்கம் இருக்குமாயின்,, எத்தனையோ ஆக்கங்களை வாசித்து நாமும் …
-
- 0 replies
- 569 views
-
-
திரை ஊடகத்தில் மண் சார்ந்த கலைஞராகத் தொடர்ந்து தன்னை முன்னிறுத்திவருபவர் தங்கர் பச்சான். அவர் எழுதிய கதைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 20 கதைகள் இந்தத் தொகுப்பில் இருக்கின்றன. முந்திரிக் காட்டு மனிதர்களின் வாழ்வை வேரோடும் வேரடி மண்ணோடும் நம் முன்னால் வைக்கும் இக்கதைகளில், அவர்களுடன் பின்னிப்பிணைந்த கால்நடைகள், பறவைகள், மரங்கள், செடிகள், கொடிகளும் மனிதர்களைப் போலவே விளிம்புநிலை கதாபாத்திரங்களாக நம்முடன் பேசுகின்றன. முந்திரிக் காடுகளும் பலா மரங்களும் நிறைந்த செம்மண் காணிகளின் நடுவே, ஈரம் காயாமல் இருந்த விவசாய வாழ்வு எவ்வித ஒளிவுமறைவும் இன்றிக் கதைகளில் விரிகிறது. கொஞ்சமாக நிலம் வைத்திருக்கும் குறுவிவசாயக் குடும்பங்களின் அன்றாடப் பாடுகள், விவசாயக் கூலிகள், கரும்புத் தோட்ட…
-
- 1 reply
- 567 views
-
-
-
- 1 reply
- 567 views
-
-
யாழ் நூலின் தோற்றம் November 15, 2023 ( செங்கதிரோன் த.கோபாலகிருஸ்ணன்.) சுவாமி விபுலானந்த அடிகளாரைப் பற்றிய வாசிப்பு அனுபவங்களினூடாகப் பயணிக்கும்போது யாழ்நூலின் தோற்றத்திற்கு அடிகோலிய இரண்டு காரணிகளை எம்மால் உணர்ந்து கொள்ள முடியும். ஒன்று ‘சிலப்பதிகாரம்’ மீது அடிகளாருக்கு இருந்த அதீதபற்று. மற்றது மட்டக்களப்பு வாவியின் ‘பாடும்மீன்’ இசையில் அடிகளார் தன் மனதைப் பறிகொடுத்தமை. கிழக்கிலங்கையில் அடிகளார் பிறந்த பூமியான காரைதீவுக் கிராமத்தில் அமைந்துள்ள ‘கண்ணகை அம்மன் ஆலயம்’ பிரசித்தமானது. இளமைப்பருவத்தில் தன் தாயாரான கண்ணம்மையுடன் இவ்வாலயத்திற்குச் சென்று வழிபட்டதோடு வருடாவருடம் நடைபெறும் திருவிழாவிலே – கண்ணகை அம்மன் குளுர்த்திச் சடங்கிலே…
-
- 0 replies
- 566 views
-
-
ரமேஷ் வவுனியன் எழுதிய ``தேடலின் வலி`` நூல் வெளியீடு ..வவுனியா ..
-
- 1 reply
- 566 views
-
-
90களின் முற்பகுதியில் எழுத்து தமிழ் ஊடகங்களின் வளர்ச்சி ஐரோப்பாவில் கோலோச்சிய காலம். செய்திகளை அறிந்து கொள்வதற்கான ஒரே வழியாக எழுத்து ஊடகங்களும் அந்தந்த நாடுகளில் இயங்கிய புலிகளின் கிளைகளினால் இயக்கப்பட்டு வந்த தொலைபேசி வாயிலான செய்திச் சேவையுமே இருந்து வந்தன. அத்தகைய காலத்தில் பல வார, மாத சஞ்சிகைகளும் பத்திரிகைகளும் வெளிவந்த போதிலும் பரிசிலிருந்து வெளிவந்த 'ஈழநாடு' 'ஈழமுரசு' ஆகிய பத்திரிகைகள் அதிகளவு வாசகர்களைக் கொண்ட செய்தித்தாள்களாக இருந்து வந்தன. ஒவ்வொரு பதன் கிழமையும் இவ்விரு செய்தித்தாள்களும் அனைத்துக் கடைகளிலும் கிடைக்கும். பெரும்பாலும் மாலைக்குள் செய்தித்தாள் விற்றுத் தீர்ந்து விடும். நேரம் தவறிப்போனால் செய்தித்தாள் கிடைக்காது ஏ…
-
- 2 replies
- 564 views
-
-
கார்டன் வைஸ் எழுதிய "கூண்டு - இலங்கை போரும் விடுதலைப்புலிகளின் இறுதி நாட்களும்" என்ற சர்ச்சைக்குரிய புத்தகத்தை பற்றிய எனது பார்வை. யாழில் இந்த புத்தகம் பற்றி ஏற்கனவே வேறொரு திரி இருந்ததை அவதானித்திருந்தேன். அதில் பல கருத்துக்குள் கத்தரிக்கப்பட்டுள்ளன. ஒரு சூடான விவாதம் நடந்தற்கான அடையாளமாகவே அதனை பார்க்கின்றேன். நான் இங்கு புத்தகத்தில் உள்ள சர்ச்சைக்குரிய விடயங்களை கேள்விக்குறியாக்க விரும்பவில்லை. இந்த நூலின் பின் அட்டையில் தெளிவாக ஒன்றை சொல்லியிருக்கிறார் கார்டன் வைஸ். "பக்கச்சார்பின்றி அறக்கடப்பாட்டோடு எழுதப்பட்டுள்ள இந்த நூலின் கருத்துக்கள் எல்லாவற்றோடும் ஒருவர் உடன்பட வேண்டியதில்லை...." எனவே அவர் முன்வைத்த கருத்துக்கள் மற்றும் குறிப்புகள் பற்றி நாம் ஆரா…
-
- 0 replies
- 563 views
-
-
கடந்த ஞாயிற்றுக் கிழமை (09.04.2017) அன்று யேர்மனி டோட்முண்ட் நகரில் அமைந்துள்ள தமிழர் அரங்கத்தில் அறிவியல் எழுத்தாளர் ராஜ்சிவா அவர்களுடனான கலந்துரையாடல், சாந்தி நேசக்கரம் அவர்களின் 'உயிரணை' நாவல் அறிமுகம், என்னுடைய 'நாங்கள்' சிற்றிதழ் அறிமுகம் ஆகிய மூன்று நிகழ்வுகளும் சிறப்பாக நடந்தன. 50இற்கும் மேற்பட்டவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள். ராஜ்சிவா அவர்களுடைய அறிவியல் விளக்கங்களை சபையோர் கவனமாக செவிமடுத்தனர். இப்படி ஒரு கலந்துரையாடல் எமது சூழலுக்கு புதிது என்பதனால், இந்த முயற்சிக்கு ஆதரவு இருக்குமா என்கின்ற சந்தேகத்தில் நான் அவருக்கு ஒரு மணித்தியாலமே ஒதுக்கியிருந்தேன். சபையோரின் ஆர்வத்தினால் நிகழ்வு மேலும் அரை மணித்தியாலம் நீண்டது. ராஜ்சிவா அவர்க…
-
- 0 replies
- 560 views
-
-
சித்தார்த்தனின் விநோதச் சம்பவங்கள் – நூல் விமர்சனம் August 28, 2020 சு.கஜமுகன் லண்டன்காரர் என்னும் குறுநாவலிற்கு பிறகு சேனன் எழுதி இருக்கும் இரண்டாவது நாவலே சித்தார்த்தனின் விநோதச் சம்பவங்கள் ஆகும். இதுவும் ஒரு வகையான யுத்த நாவல்தான் என்றபோதும் யுத்தத்தையும் அதன் துயரத்தையும் மட்டும் பேசாமல் அதன் அரசியல், வரலாற்றுப் பின்னணியை நிகழ்கால சம்பவங்களுடன் சேர்த்துப் பேசுகின்றது. இக்கதையில் போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்களின் வீரதீர செயல்களோ அல்லது தனிநபர் சாகாசங்களோ பேசப்படவில்லை மாறாக யுத்தம் நிகழ்ந்த இந்த வரலாற்றுத் தருணத்தில் வாழ்ந்த எளிய மக்களின் அன்றாட வாழ்வு, யுத்தத்தில் எதிரொலித்த அவர்களின் அவலக்குரல் மற்றும் யுத்தத்தின் பின்னர் நிர்கதியாக்கப்பட்ட அவர்களின் …
-
- 0 replies
- 560 views
-
-
நன்றி கலாபூஷணம் .திருமதி கோகிலா மகேந்திரன் நிவேதா உதயராயனின் ,''உணர்வுகள் கொன்றுவிடு '' சிறுகதைத்தொகுதி -ஒரு விமர்சனம் சிறுகதை எழுதுவது ஒரு கலை .ஒரு உணர்வினை அல்லது பெறுமானத்தினை வெளிப்படுத்துவதிலும் ,தொடர்புறுத்துவதிலும் மனிதத்திறன் வெளிப்படும் ஒரு முறை என்று கூறலாம் .சிறு கதை வாழ்வின் ஒரு வெட்டுமுகமாக அமைய வேண்டும் என்பது அன்டன் செக்கோவின் கருத்து . நிவேதா உதயராயன் ''உணர்வுகள் கொன்றுவிடு ''என்ற தனது இரண்டாவது சிறுகதைத் தொகுதியை புலம்பெயர் எழுத்தாளர் என்ற வகையில் பிரித்தானியாவில் இருந்து தந்துள்ளார் ''.உணர்வுகள் ''உடன் வந்திருக்க வேண்டிய ,''ஐ ''வேற்றுமை உருபை த் தவிர்த்து வித்தியாசமாய் ஒரு தலைப்புடன் வந்திருக்கும் இந்த நூல…
-
- 0 replies
- 559 views
-
-
Road to Nandikadal வாசித்து முடித்துவிட்டேன். முகமாலையில் தரித்து நின்ற 53 டிவிசனுக்குத் தலைமை தாங்கிய கமல் குணரத்தின நான்காவது ஈழப்போரில் இறுதியில் புலிகளின் தலைவர் கொல்லப்படுகின்ற தாக்குதல் வரை சொல்வதே இந்த நூல். புலிகளின் தலைவரைப் புகழ்ந்திருக்கின்றாரென 2ம் அத்தியாயம் மட்டும் வாசித்துவிட்டு 'புகழ்' பரப்பிய புலி ஆதரவாளர்கள் கடைசி அத்தியாயம் வரை வாசித்திருந்தால் கடும் சினம் வந்திருக்கும். ஒரு நாய் தன் கால் மீது கிடக்கிறது எனவும், நாயின் அடையாள சின்னம் எதுவெனவும் புலிகளின் தலைவரை -அவர் ஒரு மனிதர் என்றளவில் கூட- சிறிதும் மரியாதை கொடுக்காமல் இருப்பதை வாசித்திருந்தால், புகழைப் பதிந்தவர்கள் தம் பதிவுகளை மறைத்துவிட்டு ஓடியிருப்பார்கள். புலிகளைத் தீவிரவாதிகளென எல்லா இட…
-
- 1 reply
- 558 views
-
-
நூல் அறிமுகம் : கி.இளம்பிறை அவர்களின் 'வழித்துணை நினைவுகள்' - சுப.சோமசுந்தரம் 03-11-2024 அன்று எழுத்தாளர் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர் பாசத்திற்குரிய திருமதி கி.இளம்பிறை என்ற பிரபா அவர்கள் எழுதிய இரண்டு நூல்களின் வெளியீட்டு விழா நெல்லை தியாகராஜநகரில் அமைந்திருக்கும் மின் ஊழியர் சிஐடியு சங்கக் கட்டிடத்தில் இனிதே நடைபெற்றது. 'வழித்துணை நினைவுகள்' மற்றும் 'திருவாசகம் - ஒரு தேடல்' என்பன அந்நூல்கள். இவற்றுள் 'வழித்துணை நினைவுகள்' எனும் கவிதை நூல் மீது பேசுமாறு இளம்பிறை அம்மா அவர்கள் முன்னரே எனக்கு அன்புக் கட்டளையிட்டிருந்தார்கள். புத்தகத்தை மின்னஞ்சலில் எனக்கு அனுப்பியும் தந்திருந்தார்கள். நான் பேசியது நன்றாக அமைந்ததாக விழாவி…
-
- 0 replies
- 557 views
- 1 follower
-
-
படித்தோம் சொல்கின்றோம்: நீடித்த போரின் வலி சுமந்த மக்களின் கதைகளைப்பேசும் "வன்னியாச்சி"! வன்னிபெருநிலப்பரப்பின் ஓலங்களை படைப்பிலக்கியத்தில் ஒலிக்கச்செய்த தாமரைச்செல்வி! முருகபூபதி நீடித்த போரினால் வலிசுமந்த மக்களின் கதைகளைச்சொல்லும் தாமரைச்செல்வியின் " வன்னியாச்சி" பெரும் கதைத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள 37 கதைகளையும், ஜீவநதியில் இம்மாதம் வெளியான அவனும் அவளும் என்ற சிறுகதையையும் சேர்த்து மொத்தம் 38 கதைகளையும் படித்து முடித்த தருணத்தில், தமிழ் ஊடகங்களில் " அரசின் மகா வலி - தமிழருக்கு மன வலி " என்ற தலைப்பிலும் தொனியிலும் செய்திகள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. மக்கள் வலிசுமந்த மேனியராகவே கடந்த மூன்றரை தசாப்த காலமாக வாழ்ந்துகொண்டிருக்கின்றனர் என்பதை, தனது கதைகளின் ஊடாக பத…
-
- 0 replies
- 556 views
-