Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நூற்றோட்டம்

நூல்கள் | அறிமுகம் | திறனாய்வு

பதிவாளர் கவனத்திற்கு!

நூற்றோட்டம் பகுதியில் நூல்கள், அறிமுகம், திறனாய்வு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் நூல்களின் அறிமுகங்கள், திறனாய்வுகள் மாத்திரம் இணைக்கப்படுதல் வேண்டும். ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் நூல்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இணைக்கப்படல் வேண்டும்.

  1. கௌரவன் -1 - ஆனந்த் நீலகண்டன் - (தமிழில் நாகலட்சுமி சண்முகம்)இப்போது வாசிப்பில்.. பலவருடங்களிற்கு முன்னர் ஒரு லட்சத்திற்கு அதிகமானோர் கலந்து கொண்டாடும் ஒரு விழா ஒன்றில் கேரள மாநிலத்தின் பொருவழி கிராமத்திலுள்ள மலைநடைக்கோவிலில் பார்த்ததாகவும் அவ்விழா இதிகாசத்தில் மிகக்கெட்டவனாக சித்தரிக்கப்பட்ட துரியோதனனிற்காக கொண்டாடப்படும் விழா எனவும் பெரும்பாலோரினால் கெட்டவனாக சித்தரிக்கப்படும் ஒருவனிற்கு விழா கொண்டாடும் அளவிற்கு அவன் அந்த கிராம மக்களிற்கு செய்தது என்ன என ஆராயும் போது ..அந்த கிராமத்தின் வரலாறு மகாபாரத காலத்தோடு தொடர்பு பட்டதாக காணப்பட்டதாகவும் கூறுகிறார் மகாபாரதத்தில் நாடு கடத்தப்பட்டிருந்த பாண்டவர்களை தேடி துரியோதனன் இக்கிராமத்திற்கு வந்ததாகவும் ..தாகத்த…

  2. ஊடறு, விடியலின் வெளியீடாக வந்த “பெயரிடாத நட்சத்திரங்கள்” (2011) எனும் கவிதைத் தொகுப்பில் 26 ஈழப்பெண் போராளிகளின் கவிதைகள் இடம்பெற்றுள்ளன.கவிஞர் நகுலா எழுதிய “பெயரிடாத நட்சத்திரங்கள்” எனும் கவிதையின் தலைப்பே இத்தொகுப்பிற்கும் வைக்கப்பட்டுள்ளது. கவித்துவம் நிரம்பிய இத்தொகுப்பு வாசிப்பாளனுக்கு ஈழப்பெண் போராளிகளைப் பற்றிய புதிய அனுபவங்களைத் தருகிறது. “இதுவல்லோ கவிதை” என்கிற எண்ணம்தான் ஒவ்வொரு கவிதையின் வாசிப்பிலும் உணரமுடிகிறது. இந்நூலை வாசிக்கத் தொடங்கும்போது பிடித்தமான வரிகளை அடிகோடிடுவதற்கு வண்ணம் பூசும் பேனாவை எடுத்துக்கொண்டேன். ஒவ்வொரு கவிதையின் வாசிப்பிலும் உணர்கிறேன், பிடித்தமான வரிகளை வண்ணமிடுவதென்றால் எல்லா வரிகளையும் வண்ணமிட வேண்டும். இருப்பினும் சில வரிகளையாவது…

  3. முன்பெல்லாம் முதலில் யாழில் பதிவேற்றிய பின்னரே அதன் இணைப்பை ஏனைய வலைத்தளங்களில் பதிவு செய்வது என் வழக்கம். தற்சமயம் நிழற்படம் அல்லது வீடியோவுடன் பதிவிட வேண்டி சிலவற்றை முகநூலில் ஏற்றி, பின்னர் மீள்பதிவாக யாழில் பதிவேற்றுகிறேன். கீழ்க்காணும் நூல் அறிமுகமும் எனது முகநூல் பதிவு. புத்தக அட்டை இறுதியில் உள்ள இணைப்பில் : என் நண்பரும் குருநாதருமான ஆங்கிலப் பேராசிரியர் முனைவர் ச.தில்லைநாயகம் அவர்கள், தந்தை பெரியாரின் 'பொருள் முதல்வாதம்' எனும் நூலினைத் தமக்கே உரித்தான எளிய, தரமான ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்கள். அஃதாவது பாமரர்க்கான எளிமையும் சான்றோர்க்கான தரமும் என இரு நோக்கு அன்னாரது மொழிச் சிறப்பு. இம்மொழி பெயர்ப்பு 'கலப்பை பதிப்பக'த்தால் வெளியிடப் பட்டுள…

  4. எமது பெருமைக்குரிய எழுத்தாளர் தமிழ்நதி அவர்களின் மூன்று நூல்களின் அறிமுகமும் கருத்தாடலும். வரும் சனிக்கிழமை (Sep 27) 3 மணிக்கு. இடம்: அண்ணாமலை வளாக அரங்கு. Scarborough சந்திப்போம் வாருங்கள் நண்பர்களே.

  5. அதிகாரத்தில் தெறிக்கும் வன்மம் 1. 'Road to Nandikadal' என்பது புலிகளை ஆயுதப்போராட்டத்தின் மூலம் வெற்றிகொண்டதை சிங்கள இராணுவத் தரப்பிலிருக்கும் ஒருவர் கொண்டாடிக் குதூகலிக்கின்ற ஒரு நூலாகும். முகமாலையில் தரித்து நின்ற 53 டிவிசனுக்குத் தலைமை தாங்கிய கமல் குணரட்னே நான்காவது ஈழப்போரில் இறுதியில் புலிகளின் தலைவர் கொல்லப்படுகின்ற தாக்குதலை நிகழ்த்தியதுவரை பலவற்றை எழுதிச் செல்கின்றார். புலிகளின் தலைவரைப் புகழ்ந்திருக்கின்றாரென 2ம் அத்தியாயம் மட்டும் வாசித்துவிட்டு 'புகழ்' பரப்பியவர்கள், இந்நூலை முழுமையாகக் கடைசி அத்தியாயம் வரை வாசித்திருந்தால் அவர்களுக்கு நிச்சயம் கடும் சினம் வந்திருக்கும். ஒரு நாய் தன் காலின் மீது கிடக்கிறது எனவும், நாயின் அடையாள அட்…

  6. தாமரைக்குள ஞாபகங்கள் – ப. தெய்வீகன் சிவபெருமான் வீட்டுச் சிக்கல் கயிலாயத்துக்கு போன வாரம் போய் வந்தது அருமையானதொரு அனுபவமாக அமைந்தது. சிவபெருமான் தனது வீட்டில் நிற்கவேணும் என்று போன தடவை கேட்டுக் கொண்டதற்கிணங்க இந்த முறை இரண்டு நாட்கள் அவர் வீட்டிலேயே தங்கிக் கொண்டேன். பயங்கர பிஸியான ஆளென்றாலும் வீட்டுச் சாப்பாடு தான் உடம்புக்கு நல்லது என்று உமாதேவி அக்காவை இருத்தி எழுப்புறார். “லண்டன் – கனடா பக்கமிருக்கிற பெண்ணியவாதிகள் இதையெல்லாம் கண்டால் உங்களை துலைச்சுப்போடுவினம் தெரியுமோ?” – என்று கேட்க அவர் நீலம் பாரித்த கழுத்தின் வழியாக நைக் ரீ சேர்ட்டை போட்டுக்கொண்டு “உந்த விசர் கதையளை விட்டுட்டு கால்ஃப் விளையாட வாரும்” – என்று கூட்டிக்கொண்டு போனார். “உங்களுக்கும் அக…

  7. வடுக்களின் அடையாளமாக..... இளங்கோவின் ‘சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்’ - -க. நவம் புறநடைகளிருப்பினும், பொதுவாக ஒரு தொகுப்பிலுள்ள கதைகளில், ஒரு கதையின் தலைப்பே புத்தகத்தின் பெயராய் இருப்பது வழக்கம். ‘சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்’ என்ற பெயரை பொருளடக்கத்தில் தேடினேன்; காணவில்லை. கதைகளுக்குள் அதன் அடிமுடி தேடியலைந்தேன்; அகப்படவில்லை. எமது உடலின் Central Nervous System எனப்படும் மைய நரம்புத் தொகுதியின் நடுப்பகுதியில் உள்ள Grey Matter எனப்படும் நரைச் சடலத்திற்கும் இந்தக் கதைகளுக்கும் சம்பந்தமிருக்க வாய்ப்பில்லை. பதிலாக ஒரு தெளிவோ, நிச்சயமோ அற்ற இடைநிலையின் குறியீடாகவே சாம்பல் நிறத்தைக் கருதவேண்டியுள்ளது. ஆனால், வைரவர் எப்படி இங்கு வந்து சேர்ந்தார்? யாழ்ப்பாணத்…

  8. ஓ.வி. விஜயனின் ‘கசாக்கிண்ட இதிகாசம்’ மலையாளத்தின் செவ்வியல் நாவல். 1969-ம் ஆண்டு வெளிவந்த இது இதுவரை 50க்கும் மேற்பட்ட பதிப்புகள் கண்டுள்ளது. தெற்காசியாவில் அதிகம் விற்பனையான நவீன நாவல் என்ற சிறப்பும் இதற்குண்டு. ஓ.வி.விஜயன் எழுத்தாளர், பத்திரிகையாளர் என்ற பன்முக அடையாளம் கொண்டவர். ‘தி இந்து’ வில் கார்டூனிஸ்டாகப் பணியாற்றியவர். பல உலக மொழிகளில் இந்நாவல் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. காலச்சுவடு பதிப்பகம், சென்னைப் புத்தகக் காட்சியை ஒட்டி இந்நாவலைத் தமிழில் கொண்டுவரவிருக்கிறது. எழுத்தாளர் யூமா வாசுகி மொழிபெயர்த்துள்ள இந்நாவலில் இருந்து ஒரு பகுதி… அழுதுகொண்டு வீட்டுக்குச் செல்லக் கூடாது. ஆபிதா முகங்கழுவி ஆசுவாசமடைய ஓடைப் பக்கம் நடந்தாள். ஓடையோரத்தில் அப்புக்கிளி தும்பி பிடித…

  9. ஒரு மூடன் கதை சொன்னால்; கோத்தாவின் ‘சதி’ - ஆதிரன் மார்ச் மாதம் ஆறாம் திகதி புதன்கிழமை முன்னாள் இலங்கை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சே தனது எக்ஸ் தளத்தில் பின்வருமாறு பதிவிட்டிருந்தார். ‘‘நாளை வியாழன் 07 மார்ச் 2024 முதல் ஜனாதிபதி பதவியிலிருந்து என்னை வெளியேற்றுவதற்கான சதி என்ற எனது புத்தகம் ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் முன்னணிப் புத்தகக் கடைகளில் கிடைக்கும். இது சர்வதேச ரீதியில் அனுசரணை வழங்கப்பட்ட ஆட்சிமாற்ற நடவடிக்கையின் ஒரு நேரடி அனுபவம்’’ நூல் வெளியீட்டு விழாவென எந்தக் கொண்டாட்டமுமில்லை. ‘கோத்தா இப்போது ஜனாதிபதியாயிருந்தால் இந்தப் புத்தக வௌியீட்டு விழாவை வெகுவிமரிசையாகக் கோலாகலமாக ஒரு பெருந்திருவிழாவாகக் கொண்டாடிக் கழித்திருப்பார்’ என ஒரு நண்பர் எனக்கு…

  10. Tuesday, October 15, 2024 காமேச்வரன் தன்னுடைய சிறு வயதிலேயே அன்னையை இழந்து, பின்னர் தந்தை கல்யாணம் செய்துகொண்ட சித்தியின் கொடுமையால் வீட்டை விட்டு வெளியேறுகிறான். ரயிலில் அவனை சந்திக்கும் வத்சன் என்பவர் அவனைக் கூட்டிச்செல்கிறார. அவருக்கு சமையல் கலை தெரியும் என்பதால் ஒரு கோவிலில் சமைக்கும் வேலை அவருக்கு. அவருடனேயே தங்கி கொள்ளும் காமேச்வரன், சமையலைக் கற்றுகொண்டு அவரையே குருவாக எண்ணிக் கொள்கிறான். அவரின் இறப்புக்கு பின்னர் அவனுடைய நினைவுகளில் அவர் எப்பொழுதும் இருந்து கொண்டிருக்கிறார். காமேச்வரன் இப்பொழுது காசி, பத்ரிநாத் எனச் செல்லும் யாத்ரிகர்களுக்கு சமைப்பவனாக தனி ரயிலில் வேலைக்கு இருக்கிறான். அவன் சமையலை அனைவரும் புகழ்கிறார்கள். அப்படி ஒரு பயணத்தில்தான் …

  11. கோவிந்தனின் புதியதோர் உலகம் :மறு வாசிப்பு - குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக யமுனா ராஜேந்திரன் புதியதோர் உலகம் நாவலின் முதல் பதிப்பு 1985 ஆம் ஆண்டு மே மாதம் வெளியானது. அதனது இரண்டாவது பதிப்பு 1997 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியானது. முதலாவது பதிப்பு வெளியானபோது உயிருடன் இருந்த கோவிந்தன் இரண்டாவது பதிப்பு வெளிவரும் முன்பே, கவிஞர் செல்வியைப் போலவே விடுதலைப் புலிகளால் ‘காணாமல்’ போகச் செய்யப்பட்டார். 1985 ஆம் ஆண்டு வெளியான தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் உட்கட்சிப் போராட்டம் பற்றிய கோவிந்தனின் புதியதோர் உலகம் நாவலை விடுதலைப்புலிகள் பரவலாக விநியோகித்தார்கள். கோவிந்தனின் நாவல் வெளியான காலத்தின் பின், சில மாதங்களில் 1986 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைக் கழக…

  12. தனுஜா (ஈழத் திருநங்கையின் பயணமும் போராட்டமும்-Elanko DSe ) .................. ஒருநாள் நண்பர் ஒருவரோடு பயணித்தபோது டிக்-டொக்கில் ஒரு பெண் நன்றாகப் பேசுகிறார் என ஒரு காணொளியைக் காட்டினார். அட, இவரை நன்கு தெரியுமே, எனது முகநூல் நண்பர் என்று சொன்னேன். அது தனுஜா. அவர் பல்லாயிரக்கணக்கனோர் பின் தொடர்கின்ற ஒரு பிரபல்யமாக டிக்-டொக்கில் இருக்கிறாரெனவெனவும் அந்த நண்பரினூடாகக் கேள்விப்பட்டேன். அப்படித்தான் பிறகு லெனின் சிவத்தின் 'ரூபா' திரைப்படம் வந்தபோது அது தனது வாழ்வின் பாதிப்பில் இருந்து உருவான கதையென்று தனுஜா தனது முகநூலில் எழுதியிருந்ததும் நினைவிலிருக்கிறது (?). இப்படியாகத் தொலைவிலிருந்து நான் அவதானித்துக் கொண்டிருந்த தனுஜாவினது சுயவரலாற்றுப் …

  13. டாக்டர் நோயல் நடேசன் ஆஸ்திரேலியாவில் கால்நடைமருத்துவராகப் பணியாற்றுகிறார். வண்ணாதிகுளம், அசோகனின் வைத்தியசாலை போன்ற சிறப்பான நாவல்களையும் வாழும் சுவடுகள் என்ற விலங்குகளுக்கான சிகிட்சை அனுபவத் தொகுப்பு நூலையும் எழுதியிருக்கிறார். ஆஸ்ரேலியாவில் 12 ஆண்டுகளாக ‘உதயம்’ என்ற பத்திரிகையை தமிழ் – ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் வெளியிட்டுள்ளார். அவரது சமீபத்திய புத்தகமான நைல் நதிக்கரையோரம் என்ற பயணநூலை வாசித்தேன். சுவாரஸ்யமாக, வரலாற்றுத் துல்லியத்துடன் எழுதப்பட்ட சிறந்த பயணநூலது. ஒரு மருத்துவரின் பார்வையில் வரலாறு அணுகப்படுகிறது என்பதே இதன் தனிச்சிறப்பு. பொதுவாக நான் தமிழில் வெளியாகும் பயணநூல்களைப் படிப்பதில்லை. பெரும்பான்மை பயணநூற்கள் எங்கே என்ன சாப்பிட்டோம். புகைப்படம…

  14. `20 ஆம் நூற்றாண்டின் ஈழத்துத் தமிழ்க் கவிதை வளர்ச்சியைப் புகட்டி நிற்கும் மகத்தான தொகுப்பு' [17 - January - 2007] [Font Size - A - A - A] {தினக்குரல்} தென் கிழக்கு ஆசியாவிலேயே மிகச்சிறந்த நூலகத்தை உடையதென்ற புகழை முன்னர் யாழ்ப்பாணமே தன் வசம் வைத்திருந்தது. இத்தகைய நிலைமை யாழ்ப்பாணம் பெறுவதற்கு அதற்கான தகுதியைக் கொடுத்தவை யாழ்ப்பாண மக்களின் கல்வியும் அவர்களது தீவிர வாசிப்புப் பண்பாடுமாகும். யாழ்ப்பாண மக்களின் வாசிப்பிற்குப் பசளையிட்டவை; அக்காலத்தில் அங்கு இயங்கிக் கொண்டிருந்த புத்தக சாலைகளெனில் அதற்கு மறுப்பிருக்காது. இத்தகைய புத்தகசாலைகளில் பூபாலசிங்கம் புத்தகசாலையுமொன்றாகும். இப்புத்தக நிலையங்கள் தரமான நூல்களையும் சஞ்சிகைகளையும் இறக்குமதி செய்தும் கொள்வனவு…

    • 8 replies
    • 13.2k views
  15. ஏனைய மொழிகளுடன் ஒப்பிடும் போது தமிழ் இலக்கியம் மகா சமுத்திரம் போன்று காட்சியளிப்பதைக் காணலாம். அதன் தொன்மையில், அதன் வண்மையில் அதன் அகலத்தில் அன்றும், இன்றும், என்றும் முதலிடம் வகிப்பது தமிழ் இலக்கியமே என்பதை யாரும் மறுக்க முடியாது. சங்ககால இலக்கியங்கள், சங்கமருவியகால இலக்கியங்கள், பல்வர் கால, சோழர்கால இலக்கியங்கள், பிற்காலச் சிற்றிலக்கியங்கள், புராணங்கள், இதிகாசங்கள் ஐம்பெருங் காப்பியங்கள் என்று அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனாலும் என்ன இந்த ஆழ்ந்தகன்ற சமுத்திரத்தில் ஒரு துளியாவது நம்மவர்கள் அறிவார்களா? பழங்காலத் தமிழ் அறிஞர்களைப் போல இக்காலப் பல்கலைக்கழகப் படைப்பாளிகள் நமது தமிழ் இலக்கியம் பற்றி அறிந்திருக்கவில்லை என்பது நிதர்சன உண்மை. பழந்தமிழ் இலக்கியம் பற்றிப் பேசு…

    • 1 reply
    • 5.4k views
  16. தமிழகத்தில் இருக்கும் யாழ்க்கள தோழ தோழியருக்கு, எதிர்வரும் புத்தகக் கண்காட்ச்சியை ஒட்டி எனது மூன்று புத்தகங்கள் வெளிவருகின்றது. 1. அவளது கூரையில் நிலா ஒளிர்கிறது -3 குறுநாவல்கள் 2. தோற்றுப் போனவர்களின் பாடல் - கவிதைத் தொகுதி 3. ஈழம் - நேற்று இன்று நாளை - நேர்காணல்களும் கட்டுரைகளும் டிசம்பர் 25 கிறிஸ்மஸ் நாளில் மாலை 5.30 மணிக்கு உயிர்மை பதிப்பகம் என்னுடைய குறுநாவலை தேவ நேயப் பாவாணர் நூலக்த்தில் வைத்து வெளியிடுகிறது. வெளியீட்டுரை திரைப்பட இயக்குனர் வெற்றி மாறன். மேற்படி நிகழ்வில் தமிழ் நதியின் குறு நாவல் தொகுதி உட்ப்பட மேலும் பல புத்தங்கள் வெளியிடப் படுவது குறிப்பிடத் தக்கது. சென்னையில் இருக்கும் யாழ் கழ அன்பர்கள் எனது அழைப்பை ஏற்றுக் கொள்ளவும்

    • 7 replies
    • 1.6k views
  17. வீடில்லா புத்தகங்கள் 1 - புயலின் கண் சாலையோரக் கடைகளில் விற்கப்படும் பழைய புத்தகங்களை வீடில்லாத புத்தகங்கள் என்று சொல்வார் புகழ் பெற்ற பெண் எழுத்தாளர் வர்ஜீனியா வுல்ப். எந்த ஊருக்குப் போனாலும் பழைய புத்தகக் கடைகளைத் தேடிப் போகிறவன் நான். பழைய புத்தகங்களின் மீதான காதல் என்பது முடிவில்லாத தேடல். புயலின் கண் எத்தனையோ அரிய புத்தகங்களை, இலக்கிய இதழ்களைத் தற்செயலாகப் பழைய புத்தகக் கடைகளில் கண்டெடுத்திருக்கிறேன். அந்தத் தருணங்களில் நிலவில் கால் வைத்தவன் அடைந்த சந்தோஷத்தைவிடவும் கூடுதல் மகிழ்ச்சியை நான் அடைந்திருக்கிறேன். பழைய புத்தகங்களைப் பேரம் பேசி வாங்குவது ஒரு கலை. நாம் புத்தகத்தை ஆசையாகக் கையில் எடுக்கும்போதே புத்தக வியாபாரிக்கு இது முக்கியமானது எனத் தெரிந்து…

    • 62 replies
    • 27.2k views
  18. யாழ் கருத்துக்களத்தில் கனடாவில் இருந்து காவலூர் கண்மணியாக உலாவந்த திருமதி ஜெனிற்ரா மரியாம்பிள்ளை அவர்களின் இரு நூல்கள் இன்று தாயகத்தில் அறிமுகப்படுத்தப்படுகின்றன.. "வெள்ளைப்புறா ஒன்று" என்ற சிறுகதைத்தொகுதியும் "மலர்கள் பேசுமா" என்ற கவிதைத் தொகுப்புமாக இரு நூல்கள் அறிமுகமாகின்றன. அவருடைய இந்நூல்கள் பற்றிய மேலதிக விபரங்கள் தற்சமயம் கிடைக்கப்பெறவில்லை.. இருப்பினும் "கலாநிதி" இ. பாலசுந்தரம் அவர்கள் வழங்கிய அணிந்துரையும் , எங்கள் கருத்துக்கள நண்பர் காவலூர் கண்மணி(ஜெனிற்ரா மரியாம்பிள்ளை) எழுதிய ஜன்னல் வழியையும் அவருடைய நூலின் வடிவத்தையும் இங்கு இணைக்கிறேன். என் ஜன்னல் வழி….. என் ஜன்னலுக்கு கம்பிகளில்லை ஆனால் கனவுகள் நிறைய உண்டு. ஓடும் ரயிலை விட்டு வேகமாக ஓடிச்ச…

  19. முகமற்ற புத்தனின் உடல் எங்கும் நிறைந்திருக்கிற சூழலில்.. தவிர்க்கமுடியாத ஆயுதங்களுடன் புத்தனின் முகம்.. அது தமிழ் இனத்தின் முகம்..அதுவே தமிழ்ச்செல்வனின் முகம்.. - டிராட்ஸ்கி மருதுவின் கோடுகளும் வார்த்தைளும் நூலில்.. கோடுகளும் வார்த்தைகளும் நூலினை தற்போது இணையத்தில் பெற முடியம் http://vadaly.com/shop/?page_id=3&cate...p;product_id=14

  20. ‘நெகிழ வைக்கும் நட்பு’ - பிரமிளின் படைப்புகளை தொகுத்த வாசகர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைFACEBOOK புலம் பெயர்ந்த தமிழ் எழுத்தாளர் பிரமிளின் வெளிவராத எழுத்துகள் மற்றும் அவரது முழுபடைப்புக்களையும் பத்து ஆண்டுகளாக சேகரித்து அவரது நெருங்கிய நண்பர் கால சுப்ரமணியம் வெளியிட்டுள்ளார். …

  21. இமையத்தின் 'செல்லாத பணம்' இளங்கோ-டிசே வாழ்க்கை நாம் நினைத்த எந்த ஒழுங்கிலும் போவதில்லை. எவையெல்லாம்அடுத்து நிகழும் என்பதும் நமக்குத் தெரிவதில்லை. சம்பவங்கள் ஒவ்வொன்றும்நடந்தபின்னும் இப்படி நடந்திருந்தால் அல்லது நடக்காதிருந்தால்என்னவாகியிருக்குமென பின்னோக்கிப் பார்க்க மட்டுமே மனிதர்களாகிய நம்மால்முடியும். 'செல்லாத பணத்திலும்' ரேவதி தீக்குளித்து வைத்தியசாலைக்குக்கொண்டுவரப்படும்போதுதான் நமக்குத் தெரிகிறது. அவ்வாறு ரேவதி தீக்குளிப்புடன்போராடும்போது அவரோடு சம்பந்தப்பட்ட மனிதர்கள் தீக்குளிப்பு நடக்க முன்னர்நடந்த நிகழ்வுகளை ஒவ்வொரு திசைகளிலிருந்து அசைபோடுகின்றனர், உரையாடுகின்றனர். ரேவதியின் இந்த நிலைக்காகக் கோபப்படுகின்றனர், பரிதாபப்படுகின்றனர், இரக்கம் கொள்கின்றனர், இற…

  22. உலக அரசியலை புரட்டிப் போடுமா ஒபாமா எழுதிய புறொமிஸ் லான்ட் நூல் 3 மில்லியன் பிரதிகள் விற்பனைக்கு -அ.நிக்ஸன்- அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா (Barack Obama) புறொமிஸ் லான்ட் (A.Promised Land) (வாக்குறுதியளிக்கப்பட்ட பூமி) என்ற அமெரிக்க ஆட்சி பற்றிய நூல் ஒன்றை எழுத்தியுள்ளர். இந்நூல் எதிர்வரும் 17ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அமெரிக்காவின் வோஷிங்கடன் டிசி நகரில் வெளியிடப்படவுள்ளது. 17ஆம் திகதி ஒபாமாவின் 58ஆவது பிறந்த நாளாகும். பிறந்த நாள் அன்று மூன்று மில்லியன் நூல்கள் விற்பனை செய்யப்படுமென நியுயோர்க் ரைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இரண்டு தொகுதிகளாக வெளியிடப்படவுள்ள இந்த நூலில், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த நான்கு ஆண்டுகளில் மேற்கொண்ட அரசியல், பொ…

    • 2 replies
    • 727 views
  23. காற்றில் துளிர்க்கும் யாழ் சோழகக்கொண்டல் அ. முத்துலிங்கம் எழுத்தில் கனவென தூரத்தில் மிதக்கும் பால்யத்தின் நிலம் எங்கள் ஊர் கொள்ளிடக்கரையில் வானுக்குள் தலை நுழைத்து அரைநூற்றாண்டு வயதுடைய ஆலமரம் நிற்குமிடமே பிரதான நீர்த்துறை. அக்கரை கண்ணுக்கெட்டாத தூரம்வரை நீலம்பாரித்து நெடும்புனல் பாய்ந்த காலம் முதல், திசையின் தொடுப்புள்ளி வரை வெற்று மணலாகி கிடக்கும் இந்நாள் வரையிலும் அதுதான் நீர்த்துறை. எம் தகப்பனாருடைய காலத்திற்கு பிறகே இவ்விடம் துறையாக இருக்கிறது. எங்கள் தாத்தாவுக்கோ குளிக்கவும் துவைக்கவும் தோதுவான இடமென்பது இலவமரத்துத் துறைதான். பள்ளிநாட்களில் பார்வையில்லாத என் பெரியதாத்தாவை கைத்தடியைப் பிடித்துக்கொண்டு ஆற்றுக்கு கூட்டிப்போனால், இளவமரத்து துறைக்குத்த…

  24. ன்பானவர்களே! “பகிரப்படாதபக்கங்கள்” என்ற நூல் தமிழீழ மண்ணின் பல லட்சம் தியாகங்களின் உச்சங்களில் ஒரு சில உச்சங்களை தன் உள்ளத்தில் சுமந்து வெளி வருகிறது. இது மாவீரங்களின் அதி உச்ச தியாகம் என்பதில் எக்கருத்து வேறுபாடுகளும் இருக்க முடியாது. கண்ணீர்களை வர வைக்கும் வரலாற்று வலிகளை சுமந்து கார்த்திகை வேங்கைகளுக்காக அவர்களுக்குச் சொந்தமான கார்த்திகை மாதத்திலையே காந்தள் பூவாக பூக்க இருக்கிறது. வரும் கார்த்திகை மாதம் இப்புத்தக வெளியீட்டு நிகழ்வை நடாத்த மாவீரர் நினைவுகளைச் சுமந்து பயணிக்கும் ஏற்பாட்டாளர்கள் திட்டமிட்டுள்ளார்கள். விரைவில் இது தொடர்பான மேலதிக செய்திகளை உங்களுடன் பகிர்வேன். என்றும் எம் தியாகச் செம்மல்களின் பாதம் பணிந்து அவர்களின் நினைவுகளோடு நிமிர்ந்து நிற்கும் அ…

  25. கனடா பெண்ணிய எழுத்தாளர் நிரூபாவின் ‘இடாவேணி’ நூல் யாழில் வெளியீடு! கனடாவில் வசிக்கும் பெண்ணிய எழுத்தாளர் நிரூபாவின் ‘இடாவேணி’ நூல் அறிமுகமும் உரையாடலும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வு, நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை 4.30 மணியளவில் யாழ்ப்பாணம் பொது நூலகக் குவிவுமாடக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. நூல் பற்றிய அறிமுகத்தை சுரேகா பரம் என்பவர் நிகழ்த்தியதுடன் கருத்தியல் சார்ந்த பெண்ணிய அணுகுமுறையை மதுஷா மாதங்கியும் வாசிப்பு அனுபவத்தை பிறைநிலா கிருஷ் ஆகியோரும் நிகழ்த்தினர். இந்நிகழ்வில், இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள், புலம்பெயர் இலக்கியவாதிகள், இலக்கிய ஆர்வலர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், நூலாசிரியரின் உறவினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.