நூற்றோட்டம்
நூல்கள் | அறிமுகம் | திறனாய்வு
நூற்றோட்டம் பகுதியில் நூல்கள், அறிமுகம், திறனாய்வு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் நூல்களின் அறிமுகங்கள், திறனாய்வுகள் மாத்திரம் இணைக்கப்படுதல் வேண்டும். ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் நூல்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இணைக்கப்படல் வேண்டும்.
801 topics in this forum
-
மிக பிரபலமானவர்களை கொண்டு வெளியீடு செய்கின்றீர்கள் .வாழ்த்துக்கள் சாத்திரி .
-
- 7 replies
- 918 views
-
-
வணக்கம் ஆயுத எழுத்து.பாகம் 2.அடுத்த வாரத்திலிருந்து அனைவரும் பெற்றுக்கொள்ளலாம். பக்கம் .288 அட்டை.நூல் வடிவமைப்பு. ஜீவமணி விற்பனை உரிமை பூபாளம் புத்தகப் பண்ணை பிரதியின் விலை. 350 இந்திய ரூபாய்கள். ஐரோப்பா இங்கிலாந்து தபால் செலவுடன் 15 யூரோக்கள் கனடா, அமேரிக்கா தபால் செலவுடன் 25 டொலர்கள். அவுஸ்திரேலியா. நியூசிலாந்து தபால் செலவுடன் 25 அவுஸ்திரேலிய டொலர்கள். தொடர்புகளுக்கு. சிராஜுதீன். வாட்ஸ் அப். +91 94430 66449 வங்கி கணக்கிலக்கம். Mohammed sirajudeen, INDIAN BANK, ASHOK NAGAR BARANCH, A/C NO: 786149344 IFSC CODE: IDIB000A031 கனடாவில் காலம் செல்வம் அவர்களிடமும். இலங்கையில் வடக்கில் கவிஞர் கருணாகரனிடமும். கிழக்கு மற்றும் இலங்கையின் ஏனைய பகுதிகள் அனைத்துக்கும் பாத்திமா புத்தக…
-
- 2 replies
- 350 views
- 1 follower
-
-
90களின் முற்பகுதியில் எழுத்து தமிழ் ஊடகங்களின் வளர்ச்சி ஐரோப்பாவில் கோலோச்சிய காலம். செய்திகளை அறிந்து கொள்வதற்கான ஒரே வழியாக எழுத்து ஊடகங்களும் அந்தந்த நாடுகளில் இயங்கிய புலிகளின் கிளைகளினால் இயக்கப்பட்டு வந்த தொலைபேசி வாயிலான செய்திச் சேவையுமே இருந்து வந்தன. அத்தகைய காலத்தில் பல வார, மாத சஞ்சிகைகளும் பத்திரிகைகளும் வெளிவந்த போதிலும் பரிசிலிருந்து வெளிவந்த 'ஈழநாடு' 'ஈழமுரசு' ஆகிய பத்திரிகைகள் அதிகளவு வாசகர்களைக் கொண்ட செய்தித்தாள்களாக இருந்து வந்தன. ஒவ்வொரு பதன் கிழமையும் இவ்விரு செய்தித்தாள்களும் அனைத்துக் கடைகளிலும் கிடைக்கும். பெரும்பாலும் மாலைக்குள் செய்தித்தாள் விற்றுத் தீர்ந்து விடும். நேரம் தவறிப்போனால் செய்தித்தாள் கிடைக்காது ஏ…
-
- 2 replies
- 561 views
-
-
உலகில் எல்லோருடைய தலைகளுக்குள்ளும் நிறையக் கதைகள் தேங்கிக் கிடக்கின்றன, சிலர் அவற்றை அவ்வப்போது மற்றவர்களுடன் பகிர்ந்து தங்கள் தலைப் பாரத்தைக் குறைத்துக்கொள்கின்றனர், இன்னும் பலர் அதை வெளியில் சொல்லத் தெரியாமல் அப்படியே தலைக்குள் குப்பையாகத் தேக்கி வைத்து தம்முடனேயே அதையும் புதைத்து விடுகின்றனர். இதில் நான் சொன்ன முதல்ரகம்தான் இந்த ‘வனநாயகன்’ நாவல், 2016 இல் கிழக்கு பதிப்பகம் மூலம் வெளிவந்த இந்த நாவலை இன்றுதான் வாசிக்கும் வாய்ப்பு பெற்றேன். இதை எழுதியவர் ஆரூர் பாஸ்கர், இவர் அமெரிக்காவின் கிழக்கில் உள்ள புளோரிடா மாநிலத்தில் வசிக்கிறார். “வனநாயகன் என்றால் என்ன?” என்று இப்போது நீங்கள் உங்கள் தலைக்குள் கேட்பது எனக்குப் புரிகிறது. மலேசியாவில் அதிகமாக இருக்கும் ‘உராங்…
-
- 0 replies
- 432 views
-
-
வரும் ஜனவரி வெளியாக இருக்கும் ஆறாவடு நாவலைக் குறித்தான நேர்காணல் ஒன்று அண்மையில் தீபம் தொலைக்காட்சியில் இடம்பெற்றிருந்தது. அந்த காணொளியை நேரடியாக இங்கே இணைக்கத் தெரியவில்லை. இந்த இணைப்பில் பார்க்கலாம்
-
- 16 replies
- 2.1k views
-
-
ஈழத்தில் முகிழ்த்த நாவலாசிரியர்களின் எண்ணிக்கை விரல் விட்டு எண்ணும் நிலையில்தான் இன்னும் இருக்கிறது...இந்த நிலையில் சயந்தனின் ஆறாவடு நாவலுடனான வரவு ஈழத்து இலக்கியத்திற்க்கு புத்துயிர் கொடுக்கும் ஒன்றாக இருக்கும்...சயந்தனின் நாவல் பற்றிய சிறுகுறிப்பை இன்று தமிழ்ப் பேப்பரில் படிக்கக்கிடைத்தது...அதில் அந்த நாவலில் வரும் ஒரு சிறுபகுதியை இணைத்திருந்தார்..என்னடா இது என்னைப்பற்றியே எழுதி இருக்குது எண்டு வியந்தேன்..அந்தக்காலப் பகுதியில் அந்தமண்ணில் இருந்திருந்தால் நீங்கள் எல்லோரும் அப்படித்தான் உணருவீர்கள்...அந்தக் காலப்பகுதியில் அங்கு இல்லாதவர்கள் அந்தக் காலத்தை சயந்தனின் எழுத்துக்களில் சுவாசிப்பீர்கள்..எங்கட மண்ணின்ர தூசியைக் கூடச் சுவாசித்துப் பாக்காதவர்கள் எல்லாம் உலோகங்களாய்…
-
- 6 replies
- 1.6k views
-
-
சயந்தனை ஷோபாசக்தியின் குட்டித்தம்பி என்று சொல்லலாம். ஒரே உலகம். ஒரே பார்வை. நாவலின் கதைக்களனும் மையப்பாத்திரமும் கூட கிட்டத்தட்ட ஒன்று தான். ஈழப் போர். ஒரு பக்கம் புலிகளும் இன்னபிற சிறு போராட்ட குழுக்களும். இன்னொரு பக்கம் சிங்கள ராணுவம். இடையில் அரசியலற்ற ஒரு மக்கள் திரள். அவர்கள் இலங்கைப் படை மற்றும் போராட்ட குழுக்கள் மத்தியில் மாட்டிக் கொண்டவர்கள். ஆற்றில் ஒழுக்கில் இழுத்துக் கொண்டு போகப்படும் மரத்துண்டை போன்றவர்கள். கதைசொல்லி இத்திரள் மத்தியில் இருந்து வருகிறவன். அவன் தப்பித்து வெளிநாட்டுக்கு செல்ல முயல்கிறவன். அங்கும் கடும் அரசியல் மற்றும் உளநெருக்கடியை சந்திக்கிறவன். சயந்தனின் நாயகன் வெளிநாட்டு மண்ணை அடைகிற போராட்டத்திலேயே உயிர்விட்டு விடுகிறான். ஷோபாசக்தியின் …
-
- 0 replies
- 773 views
-
-
ஆறிப்போன காயங்களின் வலி உண்மையில் அவை ஆறிப்போகாத வடுக்களின் நினைவுகள் தான். 18 ஆண்டுகள் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் போராளியாக செயற்ப்பட்ட வெற்றி செல்வியின் ஏழாவது நூல் இதுவாகும். பெயருக்கு ஏற்றாற் போல அவர் வெற்றி செல்வியாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார். நம் வாழ்க்கையில் தினம் தினம் எத்தனையோ நூல்களை வாசிக்கின்றோம். ஆனால் ஏனோ ஒரு சில நூல்கள் தான் எப்போதும் நெஞ்சை வருடிக்கொண்டே இருக்கும். அதுபோலத்தான் இந்த நூலும். அவர் வாழ்ந்த சமூக சூழலில் உள்ள மக்களின் பிரச்சினைகள்தான் அவரது படைப்புக்களின் கருவாக மாறியுள்ளது. ஆறிப்போன காயங்களின் வலி என்ற இந்நூல் 2016 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தவமணி வெளியீட்கதால் வெளியிடப்பட்டது. ஈழப் போருக்கு பின்னரான காலப்பகுதியில் புனர்வாழ…
-
- 3 replies
- 958 views
-
-
ஏன் குமரன் கடைசி மட்டும் வெயிட் பண்ணினவன், What was his problem? Girl Is Mine(தமிழில்மேகலா) கதையை வாசித்த ஹர்ஷால், அதை அவர் மனைவிக்கு போய் சொல்ல, அவரும் வாசித்துவிட்டு, பிடித்துப்போய், மூவரும் ஒரு நாள் டின்னர் போனோம். Merlot, கோப்பையில் இன்னமும் தளம்பவில்லை … இரண்டாவது சுற்றில் அந்த கேள்வி வந்தது. அது ஒரு உளவியல். கதையில் வரும் மேகலா படித்தவள். இன்டலிஜண்ட்.. குமரனை காதலிக்கிறாள். எங்கே அது தெரிந்துவிடுமோ என்ற பயத்தில் கொஞ்சம் extra cautious ஆக இருப்பதற்காக அவளே அவர்களுக்கிடையில் ஒரு திரையை போட்டுவிட, அதுவே குமரன் அவளை நெருங்க விடாமல் தடுத்துவிட்டது. Anti climax. அங்க தான் ஜேகே நீங்க எழுத்தாளரா தோல்வி அடைஞ்சிட்டீங்க. பெண்களுக்கு ஒருத்தனை பிடித்துவிட்டால…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஆவா குறூப்பா நாமா? திருமறை கலாமன்றத்திற்கு வாருங்கள் வரும் ஞாயிற்றுக்கிழமை! யோ.கர்ணன் இப்பொழுதெல்லாம் யாழ்ப்பாணத்தில் இலக்கிய கூட்டங்களிற்கு செல்ல மிகுந்த தயக்கமாகவும் அச்சமாகவும் இருக்கின்றது. அச்சம் குறித்த விரிவான பதிவொன்று எழுதலாம் என திட்டமிட்டுக் கொண்டிருந்த சமயத்தில் தயக்கம் குறித்து உடனடியாக எழுத வேண்டியதாகி விட்டது. இலக்கிய கூட்டங்களிற்கு செல்வதற்கு எதனால் தயக்க வேண்டியுள்ளது என்பது குறித்து இப்பொழுது சிறிய குறிப்பொன்று. அச்சம் குறித்து பின்னர் விரிவாக எழுத வேண்டும். அண்மையில் நண்பரொருவரிற்கு நேர்ந்த துயரமிது. யாழ்ப்பாணத்தில் அவர் புத்தக வெளியீடு நடத்தினார். அவர் பிறப்பில் ஒரு இந்துவாக இருக்க வேண்டும். இலக்கியவாதியாகிற்றே. இப்பொழுது ஒரு மதமும் கிடையா…
-
- 0 replies
- 854 views
-
-
மேற்கத்திய இசையை எளிதாக கற்றுக்கொள்வதற்கும், மேற்கத்திய இசைக்குறிப்புகளைப் படிக்கவும் எழுதவும் கற்றுக்கொள்வதற்கும் தமிழில் பாடங்களே இல்லை என்ற குறையைப் போக்க வந்திருக்கிறது ஒளிப்பதிவாளர் செழியனின் ‘த மியூசிக் ஸ்கூல்’ வெளியீடு. எளிய தமிழில் வந்திருக்கும் இந்தப் புத்தகங்களின் மூலம் வீட்டிலிருந்தே மேற்கத்திய இசையைக் கற்றுக்கொள்ள முடியும். இந்த இசைப்பாடங்கள் பத்து வயதிலிருந்து, பெரியவர்கள் வரை கற்றுக்கொள்வதற்கு உதவுபவை. 15 ஆண்டுகள் உழைப்பில் உருவான நூல் இது. 1,700 பக்கங்கள், 200-க்கும் மேற்பட்ட பாடங்கள், 1,000-க்கும் மேற்பட்ட விளக்கப் படங்கள் போன்றவற்றோடு இந்தப் புத்தகத் தொகுதி உருவாக்கப்பட்டிருக்கிறது. தேவைப்படும் இடங்களில் ஒலி உதாரணங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஒரு வகுப…
-
- 0 replies
- 2.9k views
-
-
பொயற் ஐயாவும் இடையில் கூட்டத்தை தன் கையில் எடுக்கப்பார்த்தார் (24 ஆவது நிமிடத்தில் இருந்து). ஆனால் ஷோபாசக்தி ஒரு மாதிரி தனது கலந்துரையாடலுக்குள் கொண்டுசேர்த்துவிட்டார்.
-
- 15 replies
- 4.5k views
-
-
இணையத்தில் விரியும் தமிழ் நூலகங்கள் நூலகம் சென்று படிக்கும் ஆர்வம் சற்று குறைந்து வரும் இக்காலத்தில் இணையத்தில் பல மின்னியல் நூலகங்கள் உருவாகி வருகின்றன. பெரிய நூல்களையும் அதிகப் பக்கங்களைக் கொண்ட நூல்களையும் ஒளி அச்சு முறையில் எடுத்தும் மின்னியல் நூலகத்தில் சேர்த்துள்ளார்கள். அதிலும் இந்திய மொழிகளில் தமிழ் நூல்களே அதிகமாக மின்பதிப்பாக்கம் பெற்றுள்ளன என்பது நமக்கெல்லாம் பெருமை. உலக மின்னியல் நூலகம் உலக மின்னியல் நூலகம் (http://catalog .crl.edu) என்பது, UNESCO மற்றும் அமெரிக்க காங்கிரஸ் நூலகம் இணைந்து வழிநடத்தும் அனைத்துலக மின்னியல் நூலகமாகும். உலக மின்னியல் நூலகத்திற்கு உலகளாவிய அளவில் 30 - மேற்பட்ட தேசிய நூலகங்களோடும், கல்வி நூலகங்களோடும் ஒப்பந்த இணைப்பும…
-
- 1 reply
- 771 views
-
-
இந்திய மொழிகளில் தமிழின் சாதனை; வெளிவந்தது மூன்றாவது முறையாக விரிவாக்கப்பட்ட ‘க்ரியா’ அகராதி: கரோனாவுடனான போராட்டத்தின் மத்தியில் வெளியிட்டார் ராமகிருஷ்ணன் வையாபுரிப்பிள்ளை ஆசிரியராகப் பங்கெடுத்து வெளிக்கொண்டுவந்த ‘தமிழ்ப் பேரகராதி’ (Tamil Lexicon) எக்காலத்துக்குமான ஒரு பெரும் சாதனை என்றால், தற்காலத் தமிழுக்கான ‘க்ரியா’ அகராதி நாம் வாழும் காலத்தில் ஒரு முக்கியமான சாதனை. அகராதிக்கான இலக்கணங்களை முழுமையாகக் கொண்டு, கச்சிதமான எழுத்துருக்களோடும் வடிவத்தோடும் அமைந்த ‘க்ரியாவின்’ தற்காலத் தமிழ் அகராதி இப்போது இன்னொரு மைல்கல்லை எட்டியிருக்கிறது; அது மேலும் விரிவாக்கப்பட்டு மூன்றாம் பதிப்பாக வெளிவந்திருக்கிறது. இன்றைய தலைமுறையினரையும் நம்முடைய மொழி முழ…
-
- 0 replies
- 494 views
-
-
[size=4]இந்திய வரலாறு ஓர் அறிமுகம்[/size] [size=3][size=4]டி.டி. கோசாம்பி[/size][/size] [size=3] [/size] [size=3][size=4]வெளியீடு: விடியல் பதிப்பகம், பக்கம்: 656, HB, விலை: ரூ. 350/-[/size][/size] [size=3][size=4]இந்திய வரலாறு பற்றிய மாபெரும் படைப்பு ‘இந்திய வரலாறு ஓர் அறிமுகம்.’ இப்புத்தகத்தில் கருத்தைக் கவரும் வகையில் விரிவாக வழங்கப்பட்டுள்ள அடிப்படைச் சிக்கல்களின் தேர்வு, பகுப்பாய்வு, நவீன விளக்கமுறை, அறிவியல் சார்ந்த முறையியல் ஆகியவை இந்திய வரலாற்று ஆய்விற்குப் புதிய அணுகுமுறைக்கான அடிப்படையை வழங்குகிறது.[/size][/size] [size=3][size=4]பேராசிரியர் டி.டி.கோசாம்பி புதிய பல கேள்விகளைக் கிளப்பியுள்ளார். பல கேள்விகளுக்…
-
- 1 reply
- 1.3k views
-
-
`` ‘திராவிட மாடல்’ என்பது என்ன? இந்தக் கருத்தாக்கத்தின் அடிப்படை பற்றி விளக்க முடியுமா?’’ “சாதிய ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிரான ஓர் அரசியல் இயக்கம், ஓரளவு எல்லோரையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியை வழங்குவது சாத்தியம் என்பதைத் தமிழ்நாட்டின் வரலாறு காட்டுகிறது. இதுவே ‘திராவிட மாடல்’ என்ற கருத்தாக்கத்தின் அடிப்படை. உத்தரப்பிரதேசம், பீகார் போன்ற வட மாநிலங்களிலும் சாதியை அடிப்படையாகக் கொண்ட அரசியல் திரட்சி நடந்தது. ஆனால், அது பொருளாதார வளர்ச்சியைத் தரவில்லை. தமிழ்நாட்டில் இந்தத் திரட்சி எப்படிப்பட்டது, எதை முன்னிறுத்தியது என்ற புள்ளியில் திராவிட மாடலை ஆராய்ந்திருக்கிறோம். சாதிய அடிப்படையிலேயே தொழில்கள் நிர்ணயிக்கப்படுகின்றன எனும்போது, இந்த நிலையை ஒழிக்க நவீனக் கல்வி,…
-
- 1 reply
- 848 views
-
-
இந்து சுந்தரேசனின் Twentieth Wife மற்றும் The Feast of Roses எனும் இரு நாவல்கள். இந்தியாவில் பிறந்து வளர்ந்த இந்து சுந்தரேசன் தற்போது Seattle, அமெரிக்காவில் வசிக்கிறார். Twentieth Wife, The Feast of Roses மற்றும் Shadow Princess என முகலாய சாம்ராஜ்யத்துடன் சம்பந்தப்பட்ட 3 நாவலகளின் தொகுப்பில், அவரது தாயார் மதுரம் சுந்தரேசனால் தமிழில் “ இருபதாவது இல்லத்தரசி” மற்றும் “ இதய ரோஜா” என்ற தலைப்புகளில் இரு நாவல்களை மொழிபெயர்த்துள்ளார். எப்பொழுதும் சரித்திர நாவல்களை வாசிப்பதில் ஆர்வம் உள்ளதால், புதிய நாவலாசிரியரின் இந்த இரு நாவல்களையும் சமீபத்தில் வாசித்தேன். ஆங்கிலத்தில் இருந்து நேரடி தமிழாக்கம் செய்யப்பட்டது போன்று வசனங்கள் தோன்றினாலும் பொழுது போக்கிற்காகவும், சரித்தி…
-
- 0 replies
- 525 views
-
-
ம து போதையில் மாரடைத்துப் போன பரமேஸ்வரன் நாயருக்கு, சவரம் செய்து மூக்குச்சளி குண்டிப்பீ துடைத்து குளிப்பாட்டி பவுடர் போட்டு கை கால் பெருவிரல்கள் சேர்த்துக் கட்டி உடை மாற்றி சென்ட் அடித்து பிரேதத்தை கருநீள பெஞ்சில் நீளமாக படுக்கவைத்துவிட்டு கொஞ்சம் அருசியுடன் வந்தார் அப்பா. அன்னைக்கு ராத்திரி வீட்டில சோறு. பூரா பொண நாத்தம். ஒரு சவரக்காரனின் கவிதை மயிருகள். பெரும் மனச்சிதைவை உருவாக்கிய ஒரு கவிதைத்தொகுதி. முதல் இரண்டு கவிதைகளுடன் வாசிப்பதை நிறுத்திவிட்டு பாரிஸின் புறநகர் நோக்கி சென்றுகொண்டிருந்த நீண்ட தொடரூந்தின் யன்னல் ஊடாக பார்வை வெளியே விழுத்தி என்னை ஆற்றுப்படுத்தினேன். அன்றொருநாள் பெரியம்மாவின் இறுதிக் க…
-
- 4 replies
- 1.1k views
-
-
இன்னும் சொல்லாதவை - தெணியான் முருகபூபதி நாவலாக எழுதியிருக்கவேண்டிய ஒரு படைப்பு சுயவரலாறாகியுள்ளது. தெணியான் ஒரு கதைசொல்லி. சிறுகதைகள்ää நாவல்கள் உட்பட சில தொடர்களும் கட்டுரைகளும் எழுதியிருப்பவர். அவரது எந்தவொரு படைப்பை உன்னிப்பாகப்பார்த்தாலும் அவர் ஒரு சிறந்த கதைசொல்லி என்ற முடிவுக்கே வாசகர்கள் வந்துவிடுவார்கள். இன்னும் சொல்லாதவை நுலைப்படித்தபோது எனக்கு உடனடியாக நினைவுக்கு வந்தவர் தமிழ்நாட்டின் கரிசல்கட்டுமைந்தன் கி.ராஜநாராயணன். அவரும் சிறந்த கதைசொல்லி. அத்துடன் பிரதேச மொழிவழக்குகளை அநாயசமாகவும் சுவாரஸ்யமாகவும் சொல்லவல்லவர். தெணியான் எங்கள் தேசத்தின் வடமராட்சிக்கதைசொல்லி. இந்நூலின் பதிப்புரையில் பின்வரும் பந்தி எனக்கு முக்கியத்துவமாகப்பட்டது. ஒரு எழுத்தாளன…
-
- 0 replies
- 695 views
-
-
உலக புத்தக தினம்: வாசிப்போம், நேசிப்போம். உலக புத்தக தினம் தமிழ்நாட்டில் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஐரோப்பாவில் வாழ்ந்த தலை சிறந்த இலக்கியவாதியும், நாடக மேதையாகக் கருதப்படுகிறவருமான வில்லியம் ஷேக்ஸ்பியர் பிறந்ததும் இறந்ததும் இந்நாளில் தான் என்பதால் இந்த நாளை உலக, புத்தக தினம் கொண்டாட தேர்ந்தெடுத்துள்ளனர். உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு கலாச்சாரங்களைப் பற்றி விழிப்புணர்வு பெறுவதற்கு புத்தகம் ஒரு சிறந்த கருவியாக விளங்குகிறது. இதனால், ஷேக்ஸ்பியர் உள்ளிட்ட புகழ் பெற்ற எழுத்தாளர்களின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாளை போற்றும் வகையில் ஏப்ரல் 23-ந் தேதியை உலக புத்தக தினமாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது. அனைவருக்கும் வாசிக்கும் உரிமை, அனைத்து மக்கள் வாழ்விடங்களிலும் நூல…
-
- 0 replies
- 572 views
-
-
டேய் ஜேகே, இன்றைக்கு இலக்கிய வாசிப்புப் பழக்கம் இளம் தலைமுறையிடையே அருகிவிட்டதா? இதற்குச் சரியாகப் பதில் சொல்லாவிட்டால் உன் தலை வெடித்துச் சுக்கல் நூறாகிவிடும்.. அன்புடன், வேதாளம். டியர் வேதாளம், இலக்கிய வாசிப்புப் பழக்கம் எது என்பதில் எனக்கு எப்போதுமே குழப்பம் வந்திருக்கிறது. எப்போதாவது இதுதான் இலக்கியம் என்று தெளிவடையும் சந்தர்ப்பத்தில் ஒரு பயங்கரவாதி அதனைக் குண்டுவைத்து தகர்த்துவிடுகிறான். “ஜே ஜே சில குறிப்புகள்” வாசித்துவிட்டு அட என்று நிமிர்ந்தால் அது ஒரு மட்டமான புத்தகம் என்கிறது ஒரு உயிரி. “என் மேல் விழுந்த மழைத்துளியே, இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?” என்றவனை கவிஞனே இல்லை என்கிறார்கள். ஒரு கறாரான மதிப்பீட்டின்படி பார்த்தால் தமிழில் இலக்கிய வாசிப்…
-
- 0 replies
- 432 views
-
-
இமிழ் ; கதை மலர் April 20, 2024 — அகரன் — இமிழ் என்றால் ‘இனிதான முழக்கம்’ என்ற பொருள். ‘முழக்கம்’ எப்படி இனிதாகும்? என்ற கேள்வி எழும். ஒருசொல்லை உருவாக்குவது அப்படி ஒன்றும் இலகுவானதல்ல. பழந்தமிழரின் பாடல்களில் எங்கெங்கு‘இழிழ்’ பயன்படுத்தப்பட்டது என்பதில் இருந்து இனிய முழக்கத்தை புரிந்துகொள்ளலாம். கடற்கரையை பலரும் விரும்புவர். நாம் எவ்வளவு சிறியவர் என்று அறிவித்தபடி கடல் இருக்கும். கடலை பார்க்க முதலே அதன் ஓசை காதுக்கு வந்துவிடும். அந்த அலைகளின் இசையை ‘இழிழ்’ என்கிறது ‘பாடு தமிழ் பனி கடல் பருகி…’என்ற பழந்தமிழ்ப் பாடல். உலகமெல்லாம் சூரியனை பூமி தொலைக்கும் நேரத்தில் சில பறவை இனங்கள் கூட்டமாக இருந்து அன்றைய…
-
- 0 replies
- 746 views
-
-
இமையத்தின் 'செல்லாத பணம்' இளங்கோ-டிசே வாழ்க்கை நாம் நினைத்த எந்த ஒழுங்கிலும் போவதில்லை. எவையெல்லாம்அடுத்து நிகழும் என்பதும் நமக்குத் தெரிவதில்லை. சம்பவங்கள் ஒவ்வொன்றும்நடந்தபின்னும் இப்படி நடந்திருந்தால் அல்லது நடக்காதிருந்தால்என்னவாகியிருக்குமென பின்னோக்கிப் பார்க்க மட்டுமே மனிதர்களாகிய நம்மால்முடியும். 'செல்லாத பணத்திலும்' ரேவதி தீக்குளித்து வைத்தியசாலைக்குக்கொண்டுவரப்படும்போதுதான் நமக்குத் தெரிகிறது. அவ்வாறு ரேவதி தீக்குளிப்புடன்போராடும்போது அவரோடு சம்பந்தப்பட்ட மனிதர்கள் தீக்குளிப்பு நடக்க முன்னர்நடந்த நிகழ்வுகளை ஒவ்வொரு திசைகளிலிருந்து அசைபோடுகின்றனர், உரையாடுகின்றனர். ரேவதியின் இந்த நிலைக்காகக் கோபப்படுகின்றனர், பரிதாபப்படுகின்றனர், இரக்கம் கொள்கின்றனர், இற…
-
- 0 replies
- 682 views
-
-
இயற்கையுடன் ஒன்றிணைந்து வாழும் உலகம் செய்வோர் குரல்: இலங்கையின் தொல்குடிகளான வேடர் சமூக வழக்காறுகள். இன்றைய காலகட்டத்தின் அதிக பேசுபொருளாக இருப்பவர்கள் பழங்குடி மக்கள். பழங்குடி மக்களை ஆதிக்குடிகள், தொல்குடிகள் என்று பொதுவாக அழைப்பர். ஆயினும் பிரதேசத்திற்குப் பிரதேசம் வேறு வேறு பெயர்களைக் கொண்டவர்களாக இவர்கள் காணப்படுகின்றனர். அவுஸ்ரேலிய அபொறிஜின்கள், நியுசிலாந்தின் மயோரிகள் என பல்லாயிரக்கணக்கான தனித்துவமான பெயர்களைக் கொண்டவர்களாக பழங்குடிகள் வாழ்ந்து வருகின்றனர். இலங்கையின் பழங்குடிகள் அல்லது தொல்குடிகள் ‘வேடுவர்’ என அழைக்கப்படுவர். பழங்குடி மக்கள் தேசத்தின் முதல் மக்கள் (People of First Nation) எனவும் உலகம் முழுவதும் அழைக்கப்படுகின்றனர். இந்த மக்களி…
-
- 0 replies
- 725 views
-
-
இது முற்றிலும் பெண்களால் நிரப்பப்பட்ட நாவல். பெண்ணின் அகவுலகை ஆணின் பார்வையிலிருந்து பார்த்துப் பழகிய நமக்கு இதுவொரு புது அனுபவமாக இருக்கும். நாவலின் மையக்கருத்தை பின்னட்டையிலிருக்கும் குறிப்பிலிருந்து ஓரளவு அறிய முடிகிறது. இஸ்லாமிய சமூகத்தைப் பற்றிய படைப்பாக்கப் பிரதிகள் தமிழில் அதிகம் வெளியாவதில்லை, வெளிவந்தவையும் ஓர் ஆணின் பார்வையிலிருந்தே அமைந்து வந்துள்ளது. முன்னுரையில் குறிப்பிட்டது போன்று "முதல் ஜாமத்தைக் காட்டிலும், விபரீதமானது - கனவுகள் பெருகும் இரண்டாம் ஜாமம்". அது எல்லைகளற்றது, கட்டுப்படுத்த முடியாதது, தணல் போன்றது, ஆழ்ந்த நினைவுகளைக் கிளறிக் கொணர்வது. நாவலில் வரும் பகுதிகளைக் குறிப்பிடாமல், என்னுள் உணர்ந்தவற்றை இங்கு குறிப்பிட்டுள்ளேன். ராபியா என்ற…
-
- 8 replies
- 3k views
-