மெய்யெனப் படுவது
மெய்யியல் | நற்சிந்தனைகள் | ஆன்மீகம் | இசங்கள் | பகுத்தறிவு
மெய்யெனப் படுவது பகுதியில் மெய்யியல், நற்சிந்தனைகள், ஆன்மீகம், இசங்கள், பகுத்தறிவு பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் மதப் பிரச்சாரம், திருவிழாக்கள் போன்ற பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும்.
1238 topics in this forum
-
உருமாறி.. தனக்குத் தானே குழிபறிக்கும்.. புலம்பெயர் தமிழ் இலக்கிய சந்திப்புக்கள். அண்மையில் இங்கிலாந்தின் தலைநகரில்.. லண்டனில் வழமை போல.. ஒரு சில பத்துப் பேர் கூடி 40 வது தமிழ் இலக்கிய சந்திப்பு என்ற ஒன்றை நடத்தி முடித்தார்கள். இவர்கள் வழமையாகப் பேசும் விடயம்.. புலி எதிர்ப்பும்.. புலி வசைபாடலும்.. புலிக்கு அரசியல் மற்றும் மனித உரிமைகள் வகுப்பெடுப்பதுமாகும். ஆனால் இம்முறை அது இவற்றிற்கு மேலதிகமாக பேசிய விடயங்கள் குறித்து தகவல்கள் வந்துள்ளன. அங்கு பேசிய புலி இலக்கியத்திற்கு அப்பால் சென்று மற்றைய விடயங்கள் என்று பார்த்தால்.. 1. சிறீலங்காவில் சிங்களத்தின் போர் வெற்றிக்குப் பின்னான மூவின நல்லிணக்கம். (இதனை போருக்கு முந்தி எத்தனையோ தலைவர்கள் செய்ய முயன்று தோற்றுப் ப…
-
- 19 replies
- 1.9k views
-
-
*12,000* ஆண்டுகளுக்கு முன் கடலால் அழிக்கப்பட்ட நகரம் கிருஷ்ணன் உத்தவரிடம் தெரிவித்தார் உத்தவரே யாதவகுலம் சீக்கிரமே அழியப்போவது நிச்சயம்.அது மட்டுமின்றி,இன்றையிலிருந்து ஏழாம்நாள் துவாரகையை கடல் பொங்கி மூழ்கடிக்கப்போகிறது. எனவே நீங்கள் இங்கிருந்து தீர்த்தயாத்திரைக்கு புறப்பட்டு சென்றுவிடுங்கள். கிருஷ்ணன் இறக்கபோவதை நினைத்து உத்தவர் மனம்வருந்தினார். அவரது வருத்தத்தை கண்ட கிருஷணன் அவருக்கு உபதேசித்த உபதேசங்கள் உத்தவகீதை என்று அழைக்கப்படுகிறது. கிருஷ்ணர் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் !!!! http://www.youtube.com/watch?v=nQZFS9Hij0M http://www.youtube.com/watch?v=GQuMGjXfF7Y நன்றி : I Love Tamilnadu
-
- 0 replies
- 1.4k views
-
-
பிள்ளையார் சிலை பால் குடித்தது எவ்வாறு? மூட நம்பிக்கைகள் நமக்கு ஒன்றும் புதியவை அல்ல. சமூகத்தில் பரவியிருக்கும் அறிவியலுக்கு அப்பாற்பட்ட மூடநம்பிக்கைகள் பலவற்றை நாம் பார்த்திருக்கிறோம். இதன் ஒருவகை வெளிப்பாடு தான் பிள்ளையார் சிலைகள் ‘பால் குடிப்பதாக’ மக்கள் கூட்டம் நம்பிய நிகழ்வுமாகும். இது அறிவியலாளர்கள் சிந்தனையையும் முட்டத் தவறவில்லை. பலரால் நோக்கப்பட்ட இந்தக் கருத்தாக்கத்திற்குத் தெளிவான விளக்கம் உண்டு. நீரோ, பாலோ வேறெந்த நீர்மமோ ஒரு கரண்டியிலோ சிறிய கிண்ணத்திலோ எடுத்துக்கொள்ளப்படும்போது அதன் புறப்பரப்பு தட்டையாக இல்லாமல் சிறிது வளைந்திருக்கும் என்பது நன்கு அறியப்பட்ட விடயம். புறப்பரப்பு விசையால் (‘surface tension’) நீர்மம் தனது மேற்பரப்பைச் சுருக்கிக்கொள்ள மு…
-
- 13 replies
- 4.4k views
-
-
ஐரோப்பிய பெண்ணடிமை நாகரீகம் - ஒரு வரலாறு கலையரசன் மேற்கத்திய நாடுகளை சேர்ந்த ஐரோப்பியர்கள், "வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் இருந்தே, நாகரீகத்தில் சிறந்து விளங்கியது போலவும், ஜனநாயகம், பெண்ணுரிமைக்கு மதிப்பளித்து வந்தது போலவும்", பலர் இன்றைக்கும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். பாமர மக்கள் மட்டுமல்ல, படித்தவர்கள் கூட அவ்வாறான நம்பிக்கையை கொண்டுள்ளனர். புராதன ஐரோப்பியர்களின் தலை சிறந்த நாகரீகம், நமது காலத்திய சவூதி அரேபியர்களும், தாலிபான்களும் நடைமுறைப் படுத்திய "இஸ்லாமிய மத அடிப்படைவாத" நாகரீகத்தை பெரிதும் ஒத்திருந்தது, என்பது ஆச்சரியத்திற்குரியது. பலருக்கு இது புதிய தகவலாக இருக்கலாம். இன்றைக்கும் மேற்கு ஐரோப்பிய, அமெரிக்க பாடநூல்களில் கிரேக்க நாகரீகம் ப…
-
- 0 replies
- 1.8k views
-
-
மூச்சின் இயல்பும் மகிமையும் { "மகராஜி" என்று அழைக்கப்படும் பிரேம் ராவத் [ Prem Rawat] அவர்களின் உரைகளிலிருந்து தெரிந்தெடுக்கப்பட்ட பகுதிகள்.} நீங்கள் உயிரோடு இருக்கும்வரை இந்த மூச்சு என்ற அன்பளிப்பு உங்கள் உள்ளே வந்து கொண்டே இருக்கும். நீங்கள் துயரப்படும்போதும் அது அங்கு இருக்கிறது. நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கும்போதும் உங்கள் மூச்சு அங்கேயே இருக்கிறது. நீங்கள் அழும்போதும் அந்த மூச்சு தொடர்ந்து அங்கேயே இருக்கிறது. நீங்கள் சிரிக்கும்போதும் அது அங்கேயே இருக்கிறது.இந்த உலகமே நிலைகுலைந்து போகும்போதும் அந்த மூச்சு தொடர்ந்தும் அங்கேயே இருக்கிறது. எனவே அத்தகைய உங்கள் மூச்சை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டாமா? அது இலவசமானது. அது விலைமதிக்கமுடியாத பெறுமதிமிக்க ஒரு பொருள். ம…
-
- 0 replies
- 1.5k views
-
-
புத்தரின் வாழ்வும் வாக்கும் http://www.youtube.com/watch?v=Qs3UlBv7snE http://www.youtube.com/watch?v=Ptf-_auadL4
-
- 0 replies
- 608 views
-
-
சித்தமெல்லாம் சிவமயம் – 108 சித்தர்களின் பெயர்கள் – தியானம்,மருத்துவம்,ஆன்மீகம்,தத்துவம்,விஞ்ஞானம்,ரசாயனம்,சிற்பம், மொழியறிவு என பல்வேறுபட்ட துறைகளில் சிறந்து விளங்கியவர்கள் நம் சித்தர்கள். செம்பு, கல், மண் என எதுவையும் தங்கமாக்கும் சொர்ண ரகசியம், ஒருவரின் உடலிலிருந்து மறு உடலுக்கு உயிர் மாறும் கூடுவிட்டு கூடு பாயும் முறை, விலங்குகளுடன் பேசுதல், வசிகரித்தல், உயிர் கொடுத்தல், நீரில் நடத்தல், காற்றில் மிதத்தல் என பல்வேறு சித்துகள் எனப்படும் திறன்களையும் பெற்றிருந்தார்கள். சாதாரண மக்களாலும், சமய விற்பனையாளர்களாலும் சொல்லப்பட்ட புனைவுக்கதைகளை நான் இங்கு சொல்லப்போவதில்லை. சித்தர்களைப் பற்றி ஆய்வு நடத்தும் சித்தரியல் நூல்களையும், விங்கிபீடியா, அக்னி சிறகு போன்ற சிறந்த வலை…
-
- 0 replies
- 3.6k views
-
-
சாதிக்கொள்கை சைவக்கொள்கை அன்று. சாதி அமைப்பு சைவம் உருவாக்கியது அன்று. சாதிப் பாகுபாடு சைவம் செய்தது அன்று. சாதிவெறி சைவநெறி அன்று. `குலம் ஒன்று; இறைவர் ஒருவர்’ என்பது சைவத்தின் அடிப்படைக் கொள்கை. இக்கொள்கைக்கு மாறான எக்கொள்கையும் சைவத்துக்கும் புறம்பான கொள்கையே ஆகும். சாதிப் பாகுபாட்டைச் சைவம் நெடுகிலும் எதிர்த்தே வந்துள்ளது. சாதியமைப்பு என்பது எங்கோ வெகுதொலைவில் யாரிடமோ உள்ள ஒன்றாக இருந்திருந்தால் அதனை எதிர்க்க வேண்டிய கட்டாயம் சைவச் சான்றோருக்கு ஏற்பட்டிருக்காது. தங்களைச் சைவர்கள் எனச் சொல்லிக்கொண்டே சிலர் சாதிக்கொள்கையைக் கைக்கொண்டதோடு அன்றியும் அதனைச் சைவத்திலும் பயில முயன்றனர். சாதிப் பாகுபாட்டால் சமயத்தையும் சமுதாயத்தையும் சீரழிக்கத் தலைப்பட்டனர…
-
- 2 replies
- 3.6k views
-
-
திகதி 1 மனவெளி யாவும் அவனொளி நிறைந்தால் உயிரொளி வீச உலகில் வாழலாம். திகதி 2 யாம் அறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவதெங்கும் காணோம். திகதி 3 யார் பார்க்கா விட்டாலும் கடவுள் நம்மை பார்க்கிறார். திகதி 4 உயர்ந்த விசயங்கள் எல்லோரையும் நிமிர்ந்து பார்க்க செய்யும். திகதி 5 கெளரீசன் கெளரீயை அடித்ததில்லை இவன் அவளை அடிக்கலாமா? திகதி 6 சீட்டால் பிழைத்துக் கொண்டால் வட்டி குட்டி போடும்: சீட்டே பிழைத்தால் முதலும் குட்டி போடும். திகதி 7 அற்ப சலுகைகளுக்காக மதம் மாறுபவன் சொற்ப சலுகைகளுக்காக மனைவியை மாற்ற மாட்டானா? திகதி 8 மனசாட்சிக்கு மேலானதொரு சாட்சியில்லை அதை மதிக்கா விட்டால் உனக்கு ஆட்சிய…
-
- 730 replies
- 52.6k views
-
-
இஸ்லாம் மார்க்கத்துக்கும் இந்து மதத்திற்கும் உள்ள ஒற்றுமை அற்ற தன்மை-பெரியார் இஸ்லாம் மத ஒழுக்கம் 1. மதுபானம் கூடாது. 2. சூதாடுதல் கூடாது. 3. விபசாரம் கூடாது. 4. வட்டி வாங்குதல் கூடாது. 5. போர் செய்தல் கூடாது. இந்து மத ஒழுக்கம் 1. கடவுள்களுக்கு மது படைக்கவேண்டும். (ராமாயணம்) 2. அரசர்க்கு சூது உரியது. (பாரதம்) 3. கடவுள்களே விபசாரம் செய்திருக்கின்றன. (கிருஷ்ணன், முருகன்) விபசாரிகளை அனுமதிக்கின்றன. (தேவதாசிகள் முறை) 4. வட்டி வாங்குவது வருணாச்சிரம முறை. (வைசிய தர்மம்) 5. கடவுள்கள் யுத்தம் செய்திருக்கின்றன. யுத்தம் அரச நீதி, அரச தர்மம். (கந்தப்புராணம், பாரதம், ராமாயணம்) மதக்கொள்கைகள், திட்டங்கள் ஆகியவைகளில் இந்து மதம், இ…
-
- 2 replies
- 2.9k views
-
-
இந்த இரண்டு இணைப்புகளிலும் உள்ள காணொளிகள் விஞ்ஞானமும் சமயமும் வேறுபடுகிறது, ஏன் விஞ்ஞானம் வளர்கிறது, ................. எனும் விவாதம் விஞ்ஞானம் எதையும் முடிந்த முடிவு என ஏற்று கொள்வதில்லை, தொடர்சியாக ஏற்கனவே இருக்கும் கண்டு பிடிப்புகளை, கருத்துகளை விமர்சனத்துக்கும் கேள்விக்கும் உட்படுத்துகிறது ...... இப்படி நிறைய இருக்கிறது. முதல் 2.46 நிமிட காணொளி இரண்டாவதில் இருந்து எடுத்த சிறிய பகுதி.
-
- 2 replies
- 3.3k views
-
-
சும்மா இரு ”சும்மா இருப்பதே சுகம்” - மிகவும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட ஆன்மிக வாசகங்களுள் ஒன்று. சோம்பேறிகளின் பொன்மொழி என்றும் திண்ணைத் தீவிட்டிகளின் சித்தாந்தம் என்றும் உழைக்காமல் வயிறு வளர்க்க நினைக்கும் சோற்றுத் தடியர்கள் ஆன்மிகம் என்னும் போர்வையில் கண்டுபிடித்து வைத்த குறுக்கு வழிகளின் இதுவும் ஒன்று என்றும் விமரிசனம் செய்யப்பட்ட வாசகம் இது. உண்மையில் இந்த வாசகம் சோம்பேறிகளின் அரிப்புக்குச் சொறிந்து கொடுத்து சொகுசு நல்கும் நோக்கில் கூறப்பட்ட ஒன்றல்ல. இது சோம்பேறி குரு ஒருவர் சோம்பேறிச் சீடனுக்கு உபதேசித்த ஒன்றல்ல. இவ்வாசகத்தைச் சரியாகப் புரிந்துகொள்ள வேறு கோணத்தில் இருந்து அணுகுவோம். “சும்மா இரு” என்று சொல்வது “ஓய்வு கொள்” என்று சொல்வது போன்ற அறிவுர…
-
- 0 replies
- 5.2k views
-
-
பஞ்சாங்கம் 2013 http://www.hindutemple-sg-swiss.ch/wp-content/uploads/2013panjangam-2.jpg
-
- 6 replies
- 4.6k views
-
-
ஆழ்வார்களில் அறிவியல் – பா. பொன்னி ஆன்மீகமும் அறிவியலும் கண்ணுக்குப் புலனாகாத ஓர் இழையால் நெருங்கிப் பிணைக்கப்பட்டிருப்பதை அவற்றை ஆழ்ந்து படிப்போர் உணரலாம். ஆன்மீகத்திலிருந்து கிளைக்கும் அறிவியல் மீண்டும் ஆன்மீகத்திலேயே நிறைவு பெறுவதைக் காணமுடிகின்றது. வானியல், உடலியல் தொடர்பான செய்திகள் ஆழ்வார்களின் அருளிச் செயலில் காணலாகும் தன்மையை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும். அணுக்கொள்கை: அணுவினை ஆக்கவோ, அழிக்கவோ இயலாது. ஆனால் ஒரு வகை ஆற்றலை மற்றொரு வகையாக மாற்ற இயலும் என்று அறிவியலார் கூறுவர். ஆழ்வார்களும் இறைவனை அத்தகைய அணுவிற்கு இணையாகக் கூறுகின்றனர். திருமால் உலகப் பொருட்கள் அனைத்திற்கும் வித்தாக அமைபவன். அவனில் இருந்து தான் உலகப் பொருட்கள் தோன்றுகின்றன. ஆயினும் …
-
- 0 replies
- 738 views
-
-
ஈழத்திற்கு சிவபூமி என்று பெயர். இப் பெயரை ஈழத்தவர்கள் தங்கள் தேசத்துக்கு சூட்டிக் கொண்டவர்கள் அல்ல. மாறாக, திருமந்திரத்தைத் தந்தருளிய திருமூலர் ஈழ மண்ணை சிவபூமி என்று நாமம் சூட்டி அழைத்தார். சிவபூமி என்று புகழப்பட்ட எங்கள் ஈழத்திரு நாட்டில், சைவசமயத்தின் நிலைமை கவலைக் குரியதாகி வருகிறது. மதமாற்றத்தின் கொடுஞ் செயலில் ஈடுபடு வோரால் மட்டுமன்றி, சைவாலயங்களை நோக் கிய இருட்டுத்தாக்குதல் நடத்தும் ஒரு பெரும் தீய சக்திகளின் காடைத்தனங்களும் எங்கள் சைவாலயங்களில் இருக்கக் கூடிய வரலாற் றுப் பெருமை மிக்க விக்கிரகங்களை - சிற்பங் களை நிர்மூலமாக்கி வருகின்றன. இது தவிர பித்தளையை, செப்பை கிலோ வுக்கு நிறுத்து விற்கும் கயவர் கூட்டம் ஒன்று சைவாலயங்களில் இருக்கக் கூடிய, விலை உயர்ந்த ஐம்பொன…
-
- 4 replies
- 874 views
-
-
http://www.mukavare.com/2012/05/blog-post_13.html#.UPR78R1QaFA
-
- 2 replies
- 1.1k views
-
-
கோவில் திருவிழாக்களில் நாம் செய்யும் சடங்குகள் நம்மில் சிலருக்கு மிகுந்த நம்பிக்கையும் சிலருக்கு நிறைய கேள்விகளையும் எழுப்புவதில் சந்தேகமேயில்லை. உந்தித் தள்ளும் காரண அறிவால் சிந்தனை வேறாய்ப் போவது இயற்கை... அங்கு என்னதான் நடக்கிறது? FILE இந்த கலாசாரத்தில் கடவுளுக்கு ஓர் உறுதியான உருவம் கிடையாது. யாருக்கு எப்படித் தேவையோ, அப்படி உருவாக்கிக்கொள்ள முடியும். மனிதன் முழுமையாக விடுதலை ஆக வேண்டும். அதாவது முக்தி ஒன்றுதான் இந்தக் கலாசாரத்தின் நோக்கம். உலகிலேயே இந்தக் கலாசாரம் மட்டுமே இப்படி இருக்கிறது. எப்போது நீங்கள் இந்தக் கலாசாரத்தில் பிறந்தீர்களோ, அப்போதே உங்கள் குடும்பம், உங்கள் தொழில், உங்கள் கடவுள் எல்லாமே சைடு பிசினஸ்தான். மெயின் பிசினஸ் முக்த…
-
- 4 replies
- 749 views
-
-
வரிசைப் படுத்தி எண்களைக் கணக்கிட்டால் 5 சிறியது 6 பெரியது. ஆனால் இங்கே ஐந்து பெரிதென்றும் ஆறு சிறிதென்றும் குறிப்பிடுவதற்குக் காரணம் ஆறறிவு உயிரான மனிதர்களை விட ஐயறிவுயிர்களான விலங்குகளும் பறவைகளும் பண்பில், பழகும் தன்மையில், பாசம் காட்டுவதில், தொலைநோக்குச் சிந்தனையில் மனிதனைக் காட்டிலும் உன்னதமானதாக விளங்குகின்றன. நுகர்வுக் கலாசாரத்தின் நுகர்தன்மையில் பூட்டப்பட்ட மனிதன் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் தன் இயல்பை இழந்து இருப்பைத் தொலைத்து மீண்டும் அவன் பழைய கற்காலத்தை நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கிறான். காலம் எத்தனை கோலம் போட்டாலும் ஐயறிவுயிர்கள் தத்தம் இயல்பை இழந்துவிடாமல் தங்களைத் தற்காத்துக் கொள்கின்றன. இதை சம கால மனிதனுக்கு உணர்த்தத்தான் விருதுகள் பல பெற்று தமிழுக்…
-
- 4 replies
- 981 views
-
-
“இளைஞர்களே, எழுந்துநில்லுங்கள். தோல்வியில் துவண்டு வறுமையில் வாடிக்கொண்டிருக்கும் சமுதாயத்தை பலமான கரங்களால் மாற்றியமைப்போம். பலவீனமாக இருக்கிறோமே என வருத்தப்படாதீர்கள். பயந்து கொண்டே வாழ்வதில் எந்த அர்த்தமும் இல்லை. பயத்திற்கு ஒரே பரிகாரம் வலிமையைக் குறித்து சிந்திப்பது தான். அளவற்ற தன்னம்பிக்கை பயத்தை விரட்டிவிடும். பயங்கரமான வேகத்துடன் செயல்புரிவதன் மூலமே வெற்றி இலக்கை விரைவில் அடைய முடியும். என்னோடு வாருங்கள். உங்களுக்கு தோள்கொடுக்க நான் தயாராக இருக்கிறேன்” என்று இளைஞர்களுக்கு தன் வீரக்குரலால் அழைப்பு விடுத்தவர் சுவாமி விவேகானந்தர். தனது இரத்தத்தால் இளைஞர்களுக்கு கடிதம் எழுதி அனைவர் மனதிலும் மகாகாவியம் படைத்து இறந்த பின்னும் குருவாக வாழ்ந்துகொண்டிருக்கும் விவேகானந்…
-
- 4 replies
- 9.4k views
-
-
உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு தனித்துவம் இருக்கிறது.இதில் ஒருவர் பெரியவர் இன்னொருவர் சிறியவர் என்ற பாகுபாடு இல்லை.ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்திறமை உண்டு.ஒருவரிடம் உள்ள திறமை மற்றொருவரிடம் இருக்காது. ஆனால் சிலர், "நான் அவன் போல் இல்லையே..! இவன் போல் இல்லையே...!!" என்று பொறாமைப் படுகின்றனர். "நான் அவனைப் போன்று அறிவாளியாக இல்லையே!" என்று தங்கள் மீதே ஒரு தன்னம்பிக்கை அற்ற ஒருவர்களாக உள்ளனர். எலி ஒன்று, ஒரு பெரிய மரத்தின் அடியில் உள்ள வலையில் வாழ்ந்து வந்தது. அதற்கு அந்த மரத்தை மிகவும் பிடிக்கும்.ஏனென்றால், அது எண்ணற்ற உயிர்களுக்கு அடைக்கலம் தருகிறது.அந்த மரத்தை அதில் உள்ள பறவைகள் தினமும் வாழ்த்திச் சென்றன. இதையெல்லாம் பார்த்த அதற்கு, “நாம் இதைப் போன்று ஒரு மரமாக இ…
-
- 7 replies
- 1.3k views
-
-
மாதவச் சிவஞான சுவாமிகள் http://www.mediafire.com/?uriloxzpq76s2lr
-
- 1 reply
- 1k views
-
-
பசியில் இருந்த ஒரு பெண் சிங்கம் நீண்ட போராட்டத்தின் பின் ஒரு மானை வேட்டையாடி இறையை துண்டிக்க ஆரம்பித்தது. சிறிது நேரத்தில் மான் கருவுற்றிருப்பதை கண்டு கொண்டது. இதனால் கடும் அதிர்ச்சிக்குள்ளாகிய சிங்கம் உடனே தாயின் வயிற்றிலிருந்து வெளியேறிய குட்டியை காப்பற்றுவதற்காக பகீரத பிரயத்தனம் மேற்கொண்டது. இறுதியில் நீண்ட நேர முயற்சி பலனளிக்காது குட்டி இறக்க நேரிட்டது. இதைத் தாங்க முடியாத சிங்கமும் கீழே சாய்ந்து கொண்டது. சிறிது நேரத்தின் பின் இந்த நிகழ்வை முழுவதுமாக படம் பிடித்துக்கொண்டிருந்தவர் அருகில் சென்று பார்த்த போது சிங்கம் இறந்து கிடந்தது.. மனிதர்களிடம் தொலைந்து போன கருணை... குட்டி ஆடு தப்பிவந்தா குள்ள நரிக்குச் சொந்தம்; குள்ளநரி தப்பி வந்தா கொறவனுக்குச் சொந்தம்…
-
- 6 replies
- 4.9k views
-
-
குங்குமத்தால் உண்டாகும் பயன்கள் குண்டலினி ஆற்றல் புருவங்களின் மத்தியில் உள்ளது. உடலில் உள்ள ஆற்றலைத் தக்கவைக்கவும் கட்டுப்படுத்தவும் உதவுவதாகக் கூறப்படுகிறது. குங்குமப் பொட்டு நெற்றியைக் குளிர்வித்து நம்மை பாதுகாக்க வேண்டியும் மற்றும் ஆற்றல் இழப்பையும் தடுக்கிறது. சில நேரங்களில் முழு நெற்றியும் சந்தனம் அல்லது (விபூதி)பஸ்மத்தால் மூடப்பட்டிருக்கும். அக்குப்ரஷர் பாயிண்ட்-டான நெற்றி வகிடு மற்றும் புருவ மத்தியை மனஅழுத்தம் அதிகமாக இருக்கும் போது ஆட்காட்டி விரலால் அழுத்தித் தொடும் போது மனச்சோர்வு குறைகிறது. குங்குமம் பொதுவாக மஞ்சள், படிகாரம், கறையம் (அயோடின்), கற்பூரம், முதலியன கலந்து செய்யப்படுகிறது. இதில் கஸ்தூரி திரவியமும் சந்தனமும் கலந்தும் செய்து கொள்ளல…
-
- 0 replies
- 3.9k views
-
-
இதைப் படிக்க ஆரம்பிக்கும் முன் இது எல்லா ஃபாஸ்ட்ஃபுட் கோயில்களுக்கும் பொருந்தாது என்பதை கவனத்தில்கொள்ள வேண்டும். எல்லா லட்சணங்களையும் கொண்டிருக்கும் கோயில்களுக்கு மட்டும் தான் இது. பழங்காலத்து கோயில்களில் எல்லாம் இது 100% சதவிகிதம் உள்ளது. எப்படி எனறு கேட்பவர்களுக்கு கொஞ்சம் விளக்கமாக சொல்கிறேன்: பூமியின் காந்த அலைகள் அதிகம் வீசப்படும் இடங்கள்தான் இந்த கோயில்களின் சரியான லொகேஷன். இது பொதுவாக ஊருக்கு ஒதுக்குபுறமான இடங்கள், மலை ஸ்தலங்கள் மற்றும் ஆழ்ந்த இடங்கள் தான் இதன் ஐடென்டிட்டி. கோயில்களில் ஒரு அபரிதமான காந்த சக்தியும், பாஸிட்டிவ் எனர்ஜியும் அதிகம் கொண்டிருக்கும். இது நார்த் போல் சவுத் போல் திரஸ்ட் வகை ஆகும். முக்கிய சிலைதான் இந்த மையப்பகுதியில் வீற்றீருக்கும். அதை ந…
-
- 22 replies
- 5k views
-
-
மார்கழி குளிரில் அதிகாலை எழும்பி குளித்துவிட்டு ஊர் பெரிசுகள் இளசுகளுடன் திரும்பாவை பாடாத யாரும் இந்த களத்தில் இருக்கமாட்டார்கள், அந்த நேரம் காதலிகளை காண்பதற்கு எத்தனை விதமா செயற்பாட்டிருப்போம், அது ஒரு பெற்காலம், ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ ஸ்ரீ மாணிக்கவாசக சுவாமிகள் திருவண்ணாமலையில் அருளிய திருவெம்பாவை பாடல்கள்: ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண் மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான் மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய் வீதிவாய்க் கேட்டலுமே, விம்மிவிம்மி மெய்ம்மறந்து போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டுஇங்ஙன் ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என் னேஎன்னே ஈதேஎம் தோழி பரிசுஏலோர் எம்பாவாய் !!…
-
- 9 replies
- 3.5k views
-