சமூகச் சாளரம்
சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்
சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
2256 topics in this forum
-
கோபக்கார மனைவியை சமாளிப்பது எப்படி தெரியுமா? குடும்பத்தில் மனைவிகள் கோபம் அடைய, கணவன்களும் பல நேரங்களில் காரணமாகி விடுகின்றனர் என்பது அவர்களுக்கு புரிவதில்லை. உங்கள் கோபக்கார மனைவியை சமாளிக்க இதோ ஒரு சில டிப்ஸ்…. உங்கள் மனைவியை பார்க்கும் போது புன்னகை செய்ய மறக்காதீர்கள். நீங்கள் புன்னகை செய்தாலே அடுத்த நொடியில் கோபத்தை மறந்து விடுவார்கள். உங்கள் மனைவி தெரியாமல் செய்யும் சிறு சிறு தவறுகளைக் கூட சுட்டிக்காட்டி கண்டபடி திட்டாதீர்கள். அவர்கள் தவறு செய்து இருப்பின் பொறுமையாக தவறை எடுத்து கூறுங்கள். முக்கிய வேலைகளில் ஈடுபடும் போது அன்பாய் பேச வேண்டுமே தவிர தொந்தரவு செய…
-
- 30 replies
- 4.4k views
- 1 follower
-
-
2021 புத்தாண்டு: சமூக இடைவெளியில் கழிந்த 2020 - தொடுவதால் ஏற்படும் நன்மை என்ன? பட மூலாதாரம், GETTY IMAGES நீங்கள் உங்கள் அன்புக்குரியவரை கட்டி அணைப்பதையோ, முத்தம் கொடுப்பதையோ மிஸ் செய்கிறீர்களா? உங்கள் அலுவலகத்தில் சக பணியாளர்களுக்கு கை கொடுப்பதை மிஸ் செய்கிறீர்களா? இந்த 2020ஆம் ஆண்டு, உலகம் முழுவதும் உள்ள பலருக்கு ஒரு 'சமூக இடைவெளி' ஆண்டாக அமைந்திருக்கும். அதுமட்டுமல்லாமல் கிட்டத்தட்ட ஆண்டின் முக்கால் பகுதி பொது முடக்க கட்டுப்பாடுகளுடனேயே இருந்தது. இந்நிலையில் அன்புக்குரியவர்களை நேரில் சந்திப்பது, பேசுவது, அதாவது இந்த கோவிட் 19 கட்டுப்பாடுகளுக்கு முந்தைய காலத்தில் இருந்ததை போல, ஒருவரோடு ஒருவர் இண…
-
- 0 replies
- 465 views
-
-
`யாரையும் கட்டிப்பிடிக்காதீங்க!' - கொரோனாவின் அடுத்த அலை குறித்து எச்சரிக்கும் WHO மா.அருந்ததி Hug நண்பர்களையும் உறவினர்களையும் கட்டிப்பிடிப்பதை தவிர்த்திடுங்கள் என்று எச்சரிக்கிறது உலக சுகாதார நிறுவனமான 'WHO'. நாம் பிறர் மேல் வைத்திருக்கும் அன்பையும் அரவணைப்பையும் அவர்களைக் கட்டிப்பிடித்து வெளிப்படுத்த விரும்புவோம். வெளிப்படுத்திக்கொண்டும் இருந்தோம். நடுவில் கொரோனா வந்த பிறகு இந்த 'கட்டிப்பிடி வைத்தியத்திற்கு' இடைவேளை விட வேண்டி வந்தது. சில மாதங்கள்வரை 'ஹக்' கலாசாரத்தையும் மறந்திருந்தோம். தொடுதல் தற்போது கட்டுப்பாடுகளில் ஏற்பட்டுள்ள தாராள தளர்வுகளாலும் மற்றவர்கள…
-
- 2 replies
- 697 views
-
-
நடராஜன் சுந்தர் பிபிசி தமிழுக்காக மணி நேரங்களுக்கு முன்னர் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே சின்னபரூர் கிராமத்தைச் சேர்ந்த கோதண்டராமன் என்பவரது மகன் கண்ணதாசன்(வயது 52). குடும்ப வறுமையின் காரணமாக கண்ணதாசனின் 11 வயதில், தாயார் பூங்காவனம் அம்மாள் தனது உறவினர்களுடன் அவரை வேலைக்காக மும்பை அனுப்பி வைத்துள்ளார். மும்பை தாராவி அருகே வசித்து வந்த இவர், அங்குள்ள உணவகம் ஒன்றில் தொடர்ந்து 6 வருடங்கள் பணியாற்றி வந்துள்ளார். இதையடுத்து தமிழகத்தைச் சேர்ந்த நண்பர் ஒருவருடன் இணைத்து கவரிங் நகைகள் மற்றும் பொருட்கள் விற்றுவந்தார், நாளடைவில் அதே தொழிலைச் சொந்தமாகச் செய்யத் தொடங்கினர். அந்த நேரத்தில் அப்பகுதியில் ரௌ…
-
- 0 replies
- 584 views
-
-
தெளிவான பார்வையுள்ள சட்டங்களால் தான் பெண்கள் மீதான வன்முறைகளைக் குறைக்க முடியும் 25 Views நவம்பர் 25 ஆம் நாளை பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு சர்வதேச தினமாகப் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி இந்தியா, தமிழகத்தில் உள்ள புதிய குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஓவியா அவர்கள் ‘இலக்கு’இணையத்திற்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணல் வடிவம். கேள்வி- பெண்களுக்கெதிரான வன்முறைகளை எத்தனை விதமாக வகைப்படுத்தலாம்? பதில் – பொதுவாக அமைப்பு ரீதியான வன்முறைகள். இந்த சமூகம் ஒரு ஆணாதிக்க அமைப்பாக பெண்ணின் மீது நிகழ்த்தகூடிய வன்முறைகள். மதம் போன்ற நிறுவனங்களைப் பயன்படுத்தி நடத்தக்கூடிய அல்லது மத ரீதியாக நடத்தக்கூடிய வன்…
-
- 0 replies
- 441 views
-
-
முகநூலும் பெண்களும் ஒரு நோக்கு- நிவேதா உதயராயன் பெண்கள் இன்றி இவ்வுலகில் எதும் இல்லை என்பது எல்லோரும் அறிந்ததுதான். ஆனாலும் அன்றுதொட்டுப் பெண்கள் தெய்வங்களாக, மனவலிமை உடையவர்களாக, இளகிய மனம் கொண்டவர்களாக, குடும்பச் சுமைகளைத் தம் உடலாலும் மனதாலும் சுமப்பவர்களாக, உடல்வலிமை அற்றவர்களாக என பல அவதாரங்கள் கொண்டவர்களாக கடந்தகாலங்களில் கூறப்பட்டார்கள். அதன் பின்னர் பெண்ணியம், புரட்சி, சமவுரிமை என்றெல்லாம் மாற்றங்களுக்கு உட்பட்டு பெண்ணின் வளர்ச்சியில் பாரிய மாற்றங்களும் ஏற்படலாயின. பொருளாதார வளர்ச்சியிலும் பெண்ணின் பங்கு சமமாகக் கணக்கிடப்பட்டு, பெண் கல்வியிலும் வேலை வாய்ப்புக்களிலும் முதன்மையடைந்து இன்று தன் சுய சம்பாத்தியத்தில் ஆண் சாராது வாழும் …
-
- 29 replies
- 3.8k views
-
-
தாய்மையை ஏன் பால் நீக்கம் செய்ய வேண்டும்? by vithaiDecember 4, 2020 இலங்கை அரசாங்கத்தின் முன்பள்ளிக் கல்வி தொடர்பான அரச கொள்கையின் 2017 ஆம் ஆண்டு பெறப்பட்ட தரவுகளின் படி இலங்கை முழுவதும் 578,160 குழந்தைகளுக்கு முன்பிள்ளைப்பராயக் கல்வி மற்றும் பராமரிப்பினை (Early Childhood Education Development and Care) வழங்குவதற்காக 28,449 முன்பள்ளி ஆசிரியர்கள் பணியாற்றுவதாகத் தகவல் கிடைக்கின்றது. இவ் ஆசிரியர்களில் 99% வீதமானவர்கள் பெண்களாக இருக்கிறார்கள். இதுவரை கிடைக்கின்ற தகவலின் படி கிழக்கு மாகாணத்தில் இருக்கும் கல்முனையில் மட்டுமே ஓர் ஆண் ஆசிரியர் இருக்கிறார். இங்கே ஏன் பெருவாரியாக முன்பிள்ளைப்பராயக் குழந்தைகளுக்கான கல்வி மற்றும் பராமரிப்பில் ஆண்கள் பங்கெடுப்பதில்லை…
-
- 0 replies
- 459 views
-
-
சிறுவர் உளநலம் : சில அவதானங்கள் by vithaiNovember 29, 2020 சிறுவர்களிற்குக் கல்வியுரிமையும் வாழும் உரிமையும் மிக அடிப்படையானது. இரண்டிற்கும் அவர்களின் மனதின் நிலை பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டியது அவசியம். சிறுவர்களின் உளவியல் சார்ந்து அவர்களின் உரிமைகள் சார்ந்து புத்தகங்களிலும் சட்டங்களிலும் முன்னேற்றகரமான திருத்தங்கள் உருவாகி வருகின்ற போதும் நடைமுறையில் இன்னமும் அவர்களை அந்த அறிதல்கள் சென்று சேரவில்லை அல்லது அதிலிருந்து கிடைக்க வேண்டிய பயன்களை அவர்களால் இன்னமும் அனுபவிக்க முடியவில்லை. இதற்கான அடிப்படைக் காரணம் அவர்களின் உரிமைகளை நம் சமூகம் மதிப்பதில்லை. பெரும்பாலானவர்களுக்குத் தாம் ஏன் குழந்தை பெற்றுக்கொள்கிறோம் என்பது தெரிவதில்லை. …
-
- 0 replies
- 901 views
-
-
பெற்றோர் எனும் உயர் பதவி -செல்வி.டிலக்சனி.மோகராசா 26 Views குழந்தைகளை உடல் நலத்துடன் வளர்ப்பதுடன், உளநலத்தை ஊட்டி வளருங்கள். அவர்களின் எதிர்கால உலகம் அழகாகத் தெரியும். “எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே; பின் நல்லவராவதும் தீயவராவதும்…” “தூக்க மருந்தினை போன்றவை பெற்றோர் போற்றும் புகழ் உரைகள்…” ஆகவே இன்றைய இளைஞர்கள் “சிகரட் குடிக்கிறான், தெருவில் நிற்கிறான், குடிக்கின்றான், ஒரே நண்பர்களுடன் திரியுறான், அதிகமாக Phone பாவிக்கின்றான், Game விளையாடுறான்” என நிதம் வசை பாடுகின்றோம். இவை எல்லாவற்றையும் நாம் பிள்ளைகளின் பிழையென கூறுகிறோம். ஆனால் உண்மையில் ஒரு பிள்ளையின் நடத்தையை பெற்றோரின் வ…
-
- 0 replies
- 508 views
-
-
கோவிட்-19: ஐந்தில் ஒருவருக்கு மனநல பாதிப்புகள் ஏற்படலாம்... எப்படி எதிர்கொள்வது? Dr. ஜெயஸ்ரீ ஷர்மா Representational Image கோவிட்-19 பாதிப்பால் ஏற்படும் மனநலப் பிரச்னைகளின் தீவிரத்தை நாம் இன்னும் முழுவதுமாகக் கணிக்கவில்லை என்கிறது அறிவியல் உலகம். மனநலப் பிரச்னை உள்ளவர்களுக்கான ஆலோசனை மையங்களின் தொலைபேசிகள் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருக்கின்றன. இமெயில்கள் வந்து குவிகின்றன. கோவிட்-19 இன்னும் என்னென்ன பிரச்னைகளையும் ஆச்சர்யங்களையும் வைத்துள்ளதோ என்று எண்ணும்படியாக மனநலமும் இதனால் பெருமளவில் பாதிக்கப்படுகிறது என்பது குறித்த புள்ளிவிபரங்கள் அண்மையில் வந்துள்ளன. கோவிட்-19 பாதித்தவர்களில் 20 சதவிகிதம் பேருக்கு மன…
-
- 0 replies
- 420 views
-
-
பெற்றோரோடு உறங்க விரும்பும் பிள்ளைகளுக்கு ஆளுமைத்திறன் குறையும்:ஆய்வு முடிவு அம்மாவுடனே உறங்க விரும்பும் பிள்ளைகளுக்கு ஆளுமைத்திறன் குறைந்திருப்பதாக புதிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அவர்கள் எல்லா விஷயத்திலும் ‘அம்மா பிள்ளை’யாகவே இருந்து இளம் வயதுக்கே உரிய தங்கள் முடிவெடுக்கும் ஆற்றலை இழந்து விடுவார்கள். குழந்தைகள் தாயின் அருகாமையை எப்போதும் விரும்புகின்றன. தாய் தன் அருகில் இருந்தால் அவை நம்பிக்கையும், உற்சாகமும் கொள்கின்றன. தாய் தங்கள் அருகில் இல்லாவிட்டால் பயந்து அழத்தொடங்கி விடுகின்றன. தாயின் அருகாமையை குழந்தைகள் வாசனையாலும், தொடுதலாலும் உணர்கின்றன. எல்லாக் குழந்தைகளும், எப்போதும் அம்மாவுடனே தூங்க விரும்புகின்றன. அம்மா தன் …
-
- 2 replies
- 617 views
-
-
மீனாட்சி. ஜே பிபிசிக்காக 20 நவம்பர் 2020 பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தியாவைத் தாயகமாகக் கொண்டது என்பதாலும், எல்லா சமயங்களிலும் நிறைய கிடைப்பதாலும், கட்டுப்படியாகும் விலை என்பதாலும் இந்தியாவில் எல்லா சமயங்களிலும் பயன்படுத்தக்கூடியதாக வாழைப்பழம் இருக்கிறது. நாட்டின் கலாசாரக் கட்டமைப்புடன் இது பிணைந்திருக்கிறது. 10 ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு திருமணமான புதிதில், தென்னிந்தியாவில் நாகர்கோவிலில் என் மாமியாரின் வீடு அருகே சாலையோரம் எங்களை நிறுத்தினார்கள். மத சம்பிரதாயத்துக்கு சில வாழைப்பழங்களை அப்போது வாங்கினார்கள். சத்துகள் மிகுந்த வாழைப்பழ சீப்புகளை நான் புதிராகப் பார்த்தேன். மஞ்…
-
- 4 replies
- 1.2k views
-
-
கார் ஓட்டும் பெண்களுக்கு ஆண்களால் ஏற்படும் பாதிப்புகள் பெண்கள் தங்கள் சக்திக்கு மீறிய சில செயல்களை செய்து கொண்டிருக்கிறார்கள் என்றும், ஆண்கள் துணை இல்லாவிட்டால் அவர்கள் வாழ்க்கையே அஸ்தமித்துவிடும் என்றும் சில ஆண்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள், பெண்கள் கார் ஓட்டுவதைகூட வினோதமாக பார்ப்பார்கள். கார் ஓட்டிச்செல்லும் பெண்கள் சிக்னலில் நின்றால் அவர்களை பார்த்து கிண்டலடிப்பது, அவர்களை தன் பக்கம் திசை திருப்பும் விதமாக தேவையின்றி ‘ஹார்ன்’ ஓசையை எழுப்புவது போன்ற வேலைகளிலும் ஈடுபடுவார்கள். இன்னொரு வகை ஆத்திரக்காரர்களும் இருக்கிறார்கள். அவர்கள், ‘இவங்களெல்லாம் கார் ஓட்ட வந்திட்டாங்க! நாடு உருப்பட்ட மாதிரிதான்’ என்று வயிற்றெரிச்சலை வெளிப்படுத்து…
-
- 0 replies
- 928 views
-
-
திருமணமான பெண்களுக்கு 10 தாம்பத்திய ரகசியங்கள் திருமணமான பெண்கள் தங்கள் தாம்பத்திய வாழ்க்கையை சிறப்பாக அமைத்துக்கொள்ள தெரிந்துவைத்துக்கொள்ள வேண்டிய பத்து ரகசியமான விஷயங்கள்: பெண்கள் பூப்படைதல் மூலம் வயதுக்கு வந்துவிட்டாலும், அப்போதே இனப்பெருக்க திறனுக்கான முழுஆற்றலையும் அவர்கள் உடல் பெற்றுவிடுவதில்லை. பூப்படைவதில் தொடங்கி அதற்கான வளர்ச்சி மெல்ல மெல்ல நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. பெண்களின் உடலில் 17, 18 வயதில் வியத்தகு மாற்றங்கள் உருவாகிறது. அப்போதிருந்து உருவாகும் பாலியல் ஆர்வம் 35-40 வயது வரை சீராக நீடிக்கிறது. ஆனால் 40-45 வயதுகளில் உடலில் ஏற்படும் மாற்றங்களால் அந்த ஆர்வம்கட்டுப்படுகிறது. பெண்களுக்கு மனோபாஸ் காலகட்டத்திற்கு பின்பும் தாம்பத்யத்தை அனுபவ…
-
- 3 replies
- 4.2k views
-
-
ஜனநாயகமற்ற குடும்ப நிறுவனங்களும் , கணவர்களினால் வன்முறைகளை எதிர்கொள்ளும் பெண்களும்.! இலங்கையில் ஐந்து பெண்களில் ஒருவர் தன் கணவனால் முன்னெடுக்கப்படும் வன்முறையை எதிர்கொள்கின்றாள் என்ற அதிர்ச்சியூட்டும் புள்ளிவிபரம் ஒன்று கடந்த வாரம் வெளியாகியிருந்தது. சனத்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் கடந்த ஆண்டில் நிகழ்ந்த பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பான தனது முதலாவது தேசிய கணக்கெடுப்பை ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியத்தின் ஆதரவுடன் முன்னெடுத்திருந்தது. இந்த ஆய்வின் முடிவில் வெளியான அறிக்கையிலேயே இந்த முக்கியமான தகவல் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இலங்கையின் 25 மாவட்டங்களையும் உள்ளடக்கியதாக 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய 2 ஆயிரத்…
-
- 0 replies
- 475 views
-
-
உங்களின் வாழ்க்கைச்செலவுகளை கட்டுபடுத்துவதற்கு நீங்கள் என்ன என்ன ஐடியா க்களை பயன்படுத்துகிறீர்கள் கீழே உள்ளவை fb எடுத்தவை உங்களின் முறையையும் சொல்லுங்க *********************************************************************************************************************************** மினிமலிசம் என்பது குறைவான பொருட்களுடன் வாழுதல். வீடு நிறைய பொருட்களை சேர்த்துவைத்தால் அதன்பின் பொருட்களுக்கு சேவை செய்தே வாழ்நாள் வீணாகிவிடும். நாலு பேர் இருக்கும் வீட்டில் 10- 20 தட்டுகள், 10- 20 டம்ளர்கள் புழக்கத்தில் இருப்பதை காணமுடியும். எப்போது பார்த்தாலும் கிட்சன் சிங் நிரம்பியே இருக்கும். பாத்திரம், கழுவி, கழுவி ஓய்ந்துபோய்விடுவார்கள் . …
-
- 2 replies
- 676 views
-
-
வீல்சேரில் மனைவி; பார்வை குறைந்த கணவன் - துயரை வென்ற காதல் கதை மனோகர் தேவதாஸ்: பார்வை போனால் என்ன? ஓவியங்கள் மீதான காதல் குறையவில்லை முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் 23 பிப்ரவரி 2020 படக்குறிப்பு, மனோகர் தேவதாஸ் மதுரை குறித்த ஓவியங்களுக்காக கவனம்பெற்ற ஓவியரான மனோகர் தேவதாஸ், பார்வையை முழுமையாக இழந்த நிலையிலும் சென்னையின் பாரம்பரிய கட்டடங்களின் ஓவியங்கள் அடங்கிய அடுத்த புத்தகத்தை விரைவில் வெளியிடவிருக்கிறார். The Green Well yea…
-
- 0 replies
- 627 views
-
-
``என்னைத் துரத்தின கணவர் முன்னால வாழ்ந்து காட்டணும்!'' - தன்னம்பிக்கை மனுஷி பிரியா துரை.வேம்பையன்நா.ராஜமுருகன் உளுந்தங்கஞ்சி விற்கும் பிரியா ( படம்: நா.ராஜமுருகன் ) வேலாயுதம்பாளையம் கடைவீதியில் சைக்கிளில் உளுந்தங்கஞ்சி விற்றுக்கொண்டிருந்த பிரியாவை எதேச்சையாகப் பார்த்தோம். அவரிடம் பேசினோம். ``என்னைக் காதலிச்சு திருமணம் பண்ணிக்கிட்ட என் வீட்டுக்காரர், ஏழு வருஷம் என்கூட வாழ்ந்தாரு. அப்புறம் என்னை விரட்டிவிட்டுட்டு, வேற பெண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிட்டாரு. ரெண்டு பிள்ளைகளையும் விட்டுட்டு, செத்துடலாமானு எல்லாம்கூட எனக்குத் தோணுச்சு. ஆனா, `நாம ஏன் சாகணும். நம்மை உதாசீனப்படுத்தினவங்க முன்னாடி கம்பீரமா வாழ்ந்து காட்டணும்'னு நினைச்சே…
-
- 2 replies
- 701 views
-
-
குழந்தைகள் சாதியத்தை எவ்வாறு அறிகிறார்கள் ? by vithaiNovember 8, 2020 http://vithaikulumam.com/wp-content/uploads/2020/11/Kids-and-Casteism.jpg என்னுடைய தம்பியின் சிறுபிராயத்தில், வீட்டிற்கு வரும் ’வெள்ளை’ என்ற மரமேறும் தொழிலாளியைக் காட்டிப் பயப்படுத்தி அவனுக்குப் பூச்சாண்டி காட்டவும் சோறு ஊட்டவும் செய்வார்கள். வெள்ளை வாறான், வெள்ளேட்டைப்பிடிச்சு குடுத்துடுவன் என்பதாக பயமுறுத்துவார்கள். அவனும் வெள்ளைக்குப் பயப்பிடுவான். ஊரில் அத்தனை பேர் இருந்தும் ஏன் குழந்தையொன்றைப் பயமுறுத்த வெள்ளை என்ற கேள்வி எழுகிறது. அன்றைக்கு வெள்ளைக்கும் தான் பூச்சாண்டியாக இருப்பதில் ஒரு தயக்கமும் இருக்கவில்லை அல்லது வெள்ளையால் அதை மறுக்கவும் முடியவில்லை. இவ்வாறு ”பூச்சாண்டி” காட்டி…
-
- 0 replies
- 530 views
-
-
குழந்தைகளிடம் நல்ல பழக்கங்கள் வளர... இந்த சின்ன சின்ன தவறுகளை செய்யாதீர்கள் பெற்றோர்களே! ராஜவிபீஷிகா Parenting ( Photo by Juliane Liebermann on Unsplash ) சின்னச் சின்ன விஷயங்களின் மூலம் பெரிய மாற்றத்தை குழந்தைகளிடம் நாம் காண முடியும். எதையும், என்றும் குழந்தைகளிடம் கட்டாயப்படுத்தித் திணிக்க முடியாது என்பதை மனதில்கொள்ள வேண்டும். ``குழந்தைகளை `வழிக்குக் கொண்டு வருவது' எப்படி என்று பெற்றோரை கேட்டால், பெரும்பாலானவர்கள் `வாய்ப்பே இல்லைங்க' என்பார்கள். 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் தங்களின் 75% பழக்கவழக்கங்களை, தாங்கள் பார்க்கும் விஷயங்கள் மூலமாக மட்டுமே கற்றுக்கொள்கிறார்கள். எனவே, ஐந்து வயதுக்குள் அவர்களை செம்மைப்படுத்துவதன் ம…
-
- 0 replies
- 771 views
-
-
நரி குறவர்களின் உணவும் வாழ்வியலும்
-
- 3 replies
- 979 views
-
-
போருக்கு பின்னர் வடக்கில் அதிகரிக்கும் தற்கொலைகள் 48 Views போருக்கு பின்னரான காலப்பகுதியில் வடக்கு மாகாணத்தில் தற்கொலை வீதங்கள் அதிகரித்துக் காணப்படுகின்றமை மிகவும் வேதனைக்குரிய விடயமாக உள்ளது. தற்கொலைகளை தடுக்கும் நோக்கில் பல செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதும், அவை போதியளவில் மக்களுக்கு பயனளிக்கவில்லை என்றே கூற முடியும். வடக்கின் 5 மாவட்டங்களில் இருந்தும் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு நோயாளார்கள் மாற்றப்படுவது வழமை. அந்த தகவலின் அடிப்படையில், கடந்த 2013ஆம் ஆண்டில் இருந்து தற்கொலைகள் எண்ணிக்கையளவில் வீழ்ச்சி கண்டுள்ள போதிலும், வருடாந்தம் 500இற்கும் மேற்பட்டவர்கள் தற்கொலைக்கு முயன்…
-
- 0 replies
- 795 views
-
-
மாணவனுக்கு தேவாரம் பாட மறுப்பு – சாதிய புறக்கணிப்பா? 45 Views கிளிநொச்சி பெரியபரந்தன் பகுதியில் அமைந்துள்ள பிள்ளையார் ஆலயம் ஒன்றில் ஆலய நிர்வாகத்தால் உயர்தரம் படிக்கும் மாணவன் ஒருவன் தேவாரம் பாடுவதற்கு சென்ற போது அனுமதி மறுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டுள்ளார். இந்தக் காலத்தில் இளைஞர்கள் ஆலயத்திற்கு செல்வது என்பதே மிக மிக அரிது. அவ்வாறு சென்றாலும் தேவாரம் தெரிந்துகொண்டு பாடுவது என்பது அதனிலும் அரிது. அத்தோடு இவ் இளைஞனின் வயதை ஒத்தவர்கள் கஞ்சா, கசிப்பு வாள்வெட்டு, என பல்வேறு சமூக விரோத செயற்பாடுகளில் ஈடுப்பட்டு வரும் நிலையில் இவர்களை போன்றவர்கள் தட்டிக்கொடுத்து ஊக்கவிக்க படுவதற்குபதிலாக ஆலயத்தை விட்டு வெளியேற்றுவது மிகமிகத்…
-
- 35 replies
- 4.6k views
-
-
புதிய கல்வி மறுசீரமைப்பிலேனும் மதிப்பீட்டு அணுகுமுறை மாற்றமுறுமா.? - நிர்மலன் கலைத்திட்டத்திலுள்ள கற்றல் இலக்குகளை அடைவதில் மாணவர்கள் எந்தளவு முன்னேற்றம் அடைந்துள்ளார்கள் என்பதனைத் தொடர்ந்து மதிப்பீடு செய்தல் ஆசிரியர்கள், அதிபர்கள், கல்வி நிர்வாகிகள் போன்றோரின் முக்கிய பணியாகக் கருதப்படுகின்றது. கற்றல் இலக்குகளை மாணவர்கள் அடைந்துள்ளனரா என மதிப்பிடவும், கற்றல் இடர்பாடுகளைக் கண்டறிந்து அதற்கான பரிகார வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தி அனைத்து மாணவர்களும் குறித்த கற்றல் இலக்கை அடையச் செய்வதற்கு மதிப்பீடு இன்றியமையாதது ஆகும். இதுவே மதிப்பீட்டின் பிரதான நோக்கமாகவும் கருதப்படுகின்றது. அத்துடன் பாடசாலைகளில் மாணவர்களின் கல்வித்தரத்துடன் சமூகப் பண்புகள், ஆளுமைகள், ஒழுக்க…
-
- 0 replies
- 494 views
-
-
தனிமைப்படுத்தலுக்கு... உட்பட்ட வீடு. இப்படியான வீட்டிலிருந்து வெளியே போறவங்கள பார்த்து 119 ற்கு அழைத்து சொல்வது இல்லை நீங்க செய்ய வேண்டியது!! அந்த வீட்டுக்கு அழைப்பெடுத்து சாப்பிட தேவையானதெல்லாம் இருக்கா? மருந்து ஏதும் வாங்கணுமா? சமையல் வாயு இருக்கா? எதும் அவசியம் இருந்தா கூப்பிடுங்கனு சொல்வதோடு அப்படி ஏதும் தேவைனா அத முடிஞ்சளவு நம்மளையும் பாதுகாத்துகிட்டு செய்து தர்றது தான் மனுஷதன்மை. நமக்கும் இதே நிலைமை வர ரொம்ப காலமோ ரொம்ப தூரமோ இல்ல; ஞாபகம் இருக்கட்டும் Logan Subramaniam
-
- 0 replies
- 568 views
-