சமூகச் சாளரம்
சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்
சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
2251 topics in this forum
-
கரும்பாலை ஏரியா குழந்தைகளை கரை சேர்க்கும் ‘ஸீட்’ அமைப்பு கார்த்திக் பாரதி ‘எங்களுக்கான அதிகபட்ச ஆசை எதுவும் கிடையாது. இயலாதவர்களுக்கு எங்களின் உதவி தேவைப்படும் வரை இந்த நிறுவனம் இருக்கும். அதன் பிறகு கலைத்து விடுவோம்’ என்கிறார் ‘ஸீட்’ (SEED) நிறுவனத்தின் கார்த்திக் பாரதி. நிறுவனம் சிறியதாக இருந்தாலும் இவர்களின் சேவை பெரியது. மதுரை கரும்பாலை ஏரியா என்பது, கட்டிடத் தொழிலாளர்கள், துப்புரவுப் பணியாளர்கள், வீட்டு வேலையாட்கள் என உடல் உழைப் பாளிகளை உள்ளடக்கிய பகுதி. இங்கு வசிப்பவர்களின் குழந்தை களை பள்ளிக்கு படிக்க அனுப்பு வதே பெரிய காரியம் என்ற நிலையை மாற்றி, இப்போது இங்கே பிஹெச்.டி. மாணவர்கள் வரை உருவாகி இருக்கிறார்கள். இதற்கு மூலகாரணம் கார்த்திக் பாரதி. இவரு…
-
- 0 replies
- 686 views
-
-
தமிழர்களின் மாறாத ரசனை - வண்ணநிலவன் தொலைக்காட்சி, சினிமாவின் குறுகிய வடிவம்தான். அதனால்தான் அதைச் சின்னத்திரை என்கிறார்கள். ‘தகவல் ஒளிபரப்பு’ என்று வரும்போது, தொலைக்காட்சி, சினிமாவைவிடப் பன்மடங்கு பயனுள்ளது. சினிமாவை நாம் வெறும் கதை சொல்லும் ஊடகமாகத்தான் பயன்படுத்தி வருகிறோம். சமூகத்துக்குத் தேவையான பயனுள்ள தகவல்கள் சினிமாவில் அபூர்வமாகத்தான் பரிமாறப்படுகின்றன. ஆனால், தொலைக்காட்சி அப்படியல்ல. அது நிஜமான தகவல் ஒளிபரப்பு ஊடகம். இதைத்தான் பல்வேறு விதமான செய்திச் சேனல்கள், டிஸ்கவரி, ஹிஸ்டரி, நேஷ்னல் ஜியோகிராபி, அனிமல் பிளானட் முதலான பல்வேறு, சமூகத்துக்குத் தேவையான கருத்துக்களைச் சொல்லும் சேனல்களும் உறுதிசெய்கின்றன. மக்களுக்குக் கற்றுத் தருவதில் சினிமாவைவிட மேற்கண…
-
- 0 replies
- 739 views
-
-
பென்சகோலா என்ற பகுதியைச் சேர்ந்தவர் சிந்தியா ராபின்சன். இவருடைய கணவர் சிகரெட்டுக்கு அடிமையாகி தொடர்ந்து புகைப்பிடிக்கும் பழக்கம் கொண்டவர். ஒரு நாளைக்கு 3 பாக்கெட் என தனது 13ஆவது வயதில் இருந்து தொடந்து 20 வருடங்கள் புகைப்பிடித்த இவர் 36 ஆவது வயதில் புற்றுநோயால் உயிரிழநதார். இதனயைடுத்து தனது கணவர் உயிரிழந்ததற்கு ஆர்ஜே ரெனால்ட் சிகரெட்டே காரணம் என்றும், அந்நிறுவனம் தங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த புளோரிடா நீதிமன்றம், புகைப்பிடித்து உயிரிழந்தது இயற்கைக்கு மாறான மரணம் என்றும் இதற்கு காரணமான ஆர்ஜே ரெனால்ட்ஸ் சிகரெட் நிறுவனம், உயிழந்தவரின் குடும்பத்திற்கு 23 பில்லியன் டாலர் இழப்பீடு வழங்க வேண்டும் என…
-
- 5 replies
- 965 views
-
-
மனைவியை அடிப்பது கணவனின் உரிமையா? - இந்துஜா ரகுநாதன் ஜெர்மனியில் தேனிலவைக் கொண்டாட புதுமணத் தம்பதி சுகன்யாவும் அசோக்கும் (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன) சென்றிருந்தனர். ஊரைச் சுற்றிப் பார்க்கக் கிளம்பிய இருவரும் ஹோட்டல் வாசலில் காருக்காகக் காத்திருந்த போது, அங்கிருந்த ஜெர்மானியர் ஒருவர் சுகன்யாவைப் பார்த்து, “யூ லுக் வெரி பியூட்டிஃபுல் இன் திஸ் இண்டியன் டிரெஸ்” (நீங்கள் இந்த இந்திய உடையில் மிக அழகாக இருக்கிறீர்கள்) என்று சொன்னார். அதற்கு நன்றி கூறிவிட்டு திரும்பிய சுகன்யாவுக்கு விழுந்தது கன்னத்தில் ஒரு அறை. அறைந்தது அவளுடைய கணவன் அசோக். சற்றும் எதிர்பாராமல் வந்த அடியின் அதிர்ச்சியில் உறைந்த சுகன்யா தான் செய்த தவறு என்ன என்று புரியாமல் நின்றாள். “எவனோ ஒருவன் உன…
-
- 34 replies
- 7.3k views
-
-
அனேகமான எமது குடும்பங்களில் அன்றாடம் நடைபெறும் ஒரு முடிவில்லா விடயம் நீயா நானாவில் பார்க்க கிடைத்தது. இங்கு ஆண் பிள்ளைகள் பெண் பிள்ளைகள் இருபாலருமே தாங்கள் செய்வது சரி தான் என்று வாதாடுகிறார்கள். இவர்களை தூங்க வைக்க பெற்றோர்கள் மிகவும் கஸ்டப்பட்டு நோய் நொடிக்குள்ளும் சிக்கித் தவிக்கிறார்கள். இங்கு வேதனையான விடயம் என்னவென்றால் இளம் வயது தம்பதியினர் கூட ஒருவர் தூங்கும் போது மற்றவர் கணனி முன்பாகவோ தொலைக்காட்சி முன்பாகவோ விடிய விடிய இருக்கிறார்கள். முடிவில் டாக்டர்கள் கூறுவதைக் கேட்டால் இந்த நிகழ்ச்சியில் பங்கு கொண்ட அனேகமானோர் ஏதோ ஒரு வகை தாக்கத்திற்கு உள்ளாகி இருக்கிறார்கள். எமது குடும்பங்களிலும் அனேகமாக பல்கலைக் கழகம் செல்லும் பிள்ளைகள் வீட்டில் இதே பிரச்ச…
-
- 1 reply
- 967 views
-
-
பயிரை மேயும் வேலிகள் - கேஷாயினி எட்மண்ட் சில நாட்களுக்கு முன் சிலி நாட்டிலிருந்து வந்திருந்த பெண் ஒருவரை சந்தித்து உரையாடும் சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தது. பெயர் வலேரியா. இவர் ஒரு நாடக கலைஞர். அண்மையில் இலங்கையின் கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கும் சென்று அங்கு பயில்கின்ற மாணவர்களையும் சந்தித்து பயிற்சிகளை வழங்கியிருந்தார். இந்தியர் ஒருவரை திருமணம் செய்துள்ள இவர் இரு பெண் குழந்தைகளின் தாய்;. கணவரை விவாகரத்து செய்துவிட்டார். தற்போது இந்தியாவில் வசித்து வருகின்றார். அவருடன் இப்போது கொழும்பில் வசித்து வருகின்றவரான அமெரிக்க பெண்ணான இவோன் என்பரும் என்னை சந்தித்தித்தார். இவோன் ஒரு எழுத்தாளர். தற்போதும் ஒரு புத்தகம் எழுதிக்கொண்டிருக்கின்றார். இவருக்கு பிடித்த துறை பொர…
-
- 5 replies
- 1.2k views
-
-
கோப்புப் படம்: எஸ்.ஆர்.ரகுநாதன் வேடிக்கை பார்க்கும் வாழ்க்கை வாடிக்கையாக மாறும்போது கொண்ட வியப்பு எல்லாம் விரக்தியாய் மாறும் என எதிர்ப்பார்த்தில்லை. சினிமா போலி பிம்பத்தை கொடுத்து சில சமயங்களில் யதார்த்தை மறைத்து விடும் என்று கேட்டதுண்டு. ஐ.டி.துறையில் இணைந்த பிறகு தான் இத்துறை பற்றிய பிம்பம் எவ்வளவு அபத்தமாக திரையில் அமைந்திருக்கிறது என்பதை உணர முடிந்தது. கடந்து செல்லும் நீண்ட நெடும் சாலையை கடக்க முடியாமல் மீளத் துடிக்கும் மன ஓட்டங்கள் ஏராளம். ராஜீவ் காந்தி சாலையில் மனதால் தொலைந்துபோன சில மனிதர்களின் கதைதான் இப்பதிவு. ஐ.டி. துறையில் நான் சந்தித்த மனிதர்களின் வாழ்க்கைதான் இப்பதிவில் இணைக்கப்பட்டுள்ளது. கீழ் குறிப்பிடப்பட்டுள்ள கதாப்பாத்திரப் பெயர்கள் மாற்றப்பட்டிருக்க…
-
- 0 replies
- 856 views
-
-
அலுவலகத்தில் ஒரு மேனேஜர் இருக்கிறார். வடக்கத்திக்காரர். தமிழ் தெரியும். திருச்சியில் கல்லூரிப்படிப்பை படித்த எஃபெக்ட். கல்லூரியில் படிப்பை முடித்துவிட்டு வேறொரு நிறுவனத்தில் ஒன்றரை வருடங்கள் பணியாற்றியிருக்கிறார். பிறகு நிறுவனம் மாறியவர் படபடவென மேலேறி இப்பொழுது முதுநிலை மேலாளர் ஆகிவிட்டார். சொம்படித்து ஆனார், பின்வாசல் வழியாக வந்தார் என்றெல்லாம் சிறுமைப்படுத்தி விட முடியாது. சின்சியர் சிந்தாமணி. பொழுது விடிந்ததும் அலுவலகம் வந்தார் என்றால் எல்லோரையும் வீட்டுக்கு அனுப்பிவிட்டுத்தான் மூட்டையைக் கட்டுவார். இடையில் ஃபேஸ்புக், ட்விட்டர் மட்டுமில்லை வேறு எந்த இணையத்தளத்தையும் திறந்து வைத்துக் கூட பார்த்ததில்லை. அவர் என்ன வேலை செய்கிறார் என்பதை மோப்பம் பிடிக்கவே அடிக்கடி அருகில்…
-
- 6 replies
- 1k views
-
-
குழந்தைகளுக்கான மனோவியல் ஆலோசகர் ஒருவரைச் சந்திக்க நேர்ந்தது. யதேச்சையான சந்திப்பு இல்லை. நண்பர் ஒருவர் ஆலோசகரைப் பற்றிச் சொல்லியிருந்தார். வெகு காலமாகவே இந்த சப்ஜெக்டில் எனக்கு குழப்பம்தான். அதுவும் இந்த ஃபேஸ்புக் வந்த பிறகு எக்கச்சக்கம். முந்தைய தலைமுறையினர் தமது பிள்ளைகளுக்காக இந்தத் தலைமுறையினர் அளவுக்கு excite ஆகவில்லையென்றுதான் நினைக்கிறேன். ‘என் மகன் அதைச் செய்கிறான்; என் மகள் அறிவாளியாக இருக்கிறாள்’ என்று இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி அடுத்தவர்களை பதற்றமடையச் செய்யவில்லை. அப்படியே அறிவாளியாகவும், திறமையாளனாகவும் இருந்தாலும் கூட அதை அப்பட்டமாக வெளியில் பேசியதில்லை. ஆனால் நம் தலைமுறை மாறிவிட்டது. தம் மகன் ஒன்றுக்கடிப்பதைக் கூட படம் எடுத்து போட்டுவிடுகிறார்கள்…
-
- 0 replies
- 691 views
-
-
கலியாணம் முடிஞ்சி 11ஆம் நாள் எய்ட்ஸ்! ஜெரா படம் | நேர்க்காணல் கண்டவர் அதைப் பெருந்தேடல் என்றுதான் சொல்லவேண்டும். ஒரு விழிப்புணர்வுக்காக, எச்.ஐ.வி. தொற்றுக்குள்ளான ஒருவரின் கதையை வெளியிடுவது என்று நீண்டகாலமாகவே திட்டமிட்டு, குறித்த நோயாளர்களைத் தேடிவந்தோம். இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட எச்.ஐ.வி. நோயாளர்கள் யாழ்ப்பாணத்திலிருந்தும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஊடகங்களில் பேச மறுக்கின்றனர். அவர்கள் மத்தியிலிருந்து, “நாங்கள் ஊடகங்களில் பேசுகின்றோம்” என்று முன்வந்தது ஒரு குடும்பம். “எங்கள பாக்க வருத்தம் வந்தாக்கள் மாதிரி தெரியேல்லயோ?” அவர்களை நாங்கள் கண்டதும் கேட்ட முதல் கேள்வியில் நிலைகுலைந்துதான் போனோம்! 30 வயதுக்குட்பட்ட இளந் தம்பதியினர் அவர்கள். உடல்சோர்வோ, மனச் சோர்வோ…
-
- 8 replies
- 10.9k views
-
-
"இது தாண்டா லவ்!" சக்கர நாற்காலியில் மனைவியை இருத்தி கடற்கரையோரம் உலாவச் சென்ற அந்தத் தாத்தாவைப் பார்த்து நண்பன் சொன்னான் - சில வருடங்களுக்குமுன். 'இவர்கள் காதல் திருமணம் செய்திருப்பார்களா?' 'உண்மையான காதலன் இப்படித்தான் இருப்பான்' தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தான். எனக்குக் கண்ணாடித் தாத்தாவின் ஞாபகம் வந்தது. ‘எனக்கும் கூட ஒரு உண்மையான காதலைத் தெரியும்' என்றேன். கண்ணாடித்தாத்தா நல்லதோர் கதைசொல்லி. கதை கேட்பது எப்போதும் எங்களுக்குப் பிடித்தமான விசயமாகவே இருக்கிறது. நமது குழந்தைப் பருவத்தில் நம் முதற்செயல் கவனித்தலும், கதை கேட்பதுமாகவே ஆரம்பிக்கிறது. அதுவே முதல் தேடல். அப்போது தொற்றிக் கொண்ட ஆர்வம் இறுதிவரை குறைவதில்லை. கதை சொல்லுதல் என…
-
- 0 replies
- 923 views
-
-
சமூக வலைத்தளங்களின் வளர்ச்சி ஊகத்திற்கு அப்பால் உள்ளது. ஃபேஸ்புக், டுவிட்டர், கூகுள் ப்ளஸ் போன்ற பல சமூக வலைத்தளங்கள் தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளன. அலுவலகங்களில் பெரும் பிரச்சினையாக விவாதிக்கப்பட்டும் விஷயங்களில் ஒன்று வேலை நேரத்தில் ஊழியர்கள் தனிப் பட்ட விஷயங்களுக்காக இத்தகைய வலைத்தளங்களை மேய்ந்துகொண்டிருப்பதுதான். பெரும்பாலான நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் வேலை நேரத்தைச் சமூக வலைத்தளங்கள் அபகரித்துக் கொள்வதாக நினைக்கின்றன. எனவே அலுவலகத்தில் சமூக வலைத்தளங்களை முடக்கிவைத்துள்ளன. இது பெரும்பாலும் கீழ்நிலையில் உள்ள ஊழியர்களுக்குத்தான். ஏனெனில் உயர் மட்டத்தில் உள்ளவர்கள் பொறுப்பு மிக்கவர்களாகவே எப்போதும் கருதப்படுகிறார்கள். எனவே அவர்களுக்கு இப்படித் தடையேதும் விதிக்கப்படுவ…
-
- 0 replies
- 677 views
-
-
சமூக இணையத்தளமான பேஸ்புக்கை உபயோகிப்பவர்களில் 32 சதவீதத்தினர் தமது வாழ்க்கை துணையை விட்டு விலகுவது தொடர்பில் சிந்திப்பதாக புதிய ஆய்வு ஒன்று கூறுகின்றது. அமெரிக்க போஸ்டன் நகரைச் சேர்ந்த பேராசிரியர் ஜேம்ஸ் ஈ காட்ஸ் தலைமையிலான ஆய்வாளர்களால் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இரு ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் பேஸ்புக்குகளை உபயோகிக்கும் 43 நாடுகளைச் சேர்ந்த விவாகரத்து பெற்ற, திருமணம் செய்து கொண்ட18 வயதுக்கும் 39 வயதுக்குமிடைப்பட்ட வயதுடைய 1160 தனி நபர்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பேஸ்புக்கை அதிகளவில் உபயோகிப்பவர்கள் விவாகரத்து தொடர்பில் 2.18 சதவீத வளர்ச்சிக்கு பங்களிப்புச் செய்துள்ளதாக இந்த ஆய்வு கூறுகிறது. http://www.virakesari.lk/articles/2014/07/03…
-
- 13 replies
- 1.1k views
-
-
http://youtu.be/hdWi9B3OyFA நாளுக்கு நாள் புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்கள் தங்கள் மகள்களின் பூப்படைதல் நிகழ்வை நாகரீகத்தின் உச்சமாக நடாத்திக் கொண்டிருக்கும் கொண்டாட்டங்களை தினமும் அறிகிறோம். இந்த வீடியோ இணைப்பில் இன்னொரு புதுவகை விழா. ஒருகாலம் தேசத்தின் பாடல்களை பாடிய பாடகர் சாந்தன், பிறின்சி ரஞ்சித்குமார் போன்றோர் பாடலைப்பாட புதுவை அன்பன் பாடலொன்றை சடங்கிற்கு உரிய சிறுமிக்காக பாடியுள்ளார்கள். மிகவும் வருத்தம் தருகிறது இந்நிகழ்வு. பெண் பிள்ளைகள் துணிச்சலோடு சாதனைகள் படைக்கும் திறமையாளர்களாக வளர்ந்து வர வேண்டிய வளர்க்கப்பட வேண்டிய இக்காலத்தில் போகப்பொருளாகவே பெண்பிள்ளைகளை அவர்களது எண்ணங்களை சிதைக்கும் நிகழ்வாகவே இன்றைய கால சாமத்தியச் சடங்குகள் நடாத்தப்படுகிறது.…
-
- 49 replies
- 4.3k views
-
-
ஆண்-பெண் நட்பு: காமம் மற்றும் சமஅந்தஸ்து வெறும் தோழியான ஒரு girl friend ஐ எப்படி அழைக்க? நான் பங்கேற்ற ஆண்-பெண் சமநிலை பற்றின ஒரு நீயாநானா விவாத படப்பிடிப்பின் போது இந்த சிக்கலை பல பங்கேற்பாளர்கள் ஏதோ புதுசு என்பது போல் திடுக்கிட்டவாறு எதிர்கொண்டனர். கோபிநாத் தொடர்ந்து ஒவ்வொரு முறையும் “அந்த கெர்ல் பிரண்ட் இல்லீங்க” என்று சொல்ல நேர்ந்தது. Female friend என்ற சொல் ஏதோ மிக்ஸி கிரைண்டர் போன்ற இரைச்சலை கொண்டுள்ளது. சிநேகிதி, தோழி ஆகிய பதங்களை வானம்பாடிகளில் இருந்து இடதுசாரிகள், பெண் பத்திரிகைகள் வரை அர்த்தம் திரித்து விட்டனர். ஆண்நண்பர்களும் இருக்கும்பட்சத்தில் ஒரு பெண்ணின் தோழி கெர்ல் பிரண்டா வெறும் பிரண்டா? ஆனால் இது ஒரு சொல்லாக்கம் பற்றின பிரச்சனை அல்லவே! ஆண்-பெண் …
-
- 0 replies
- 7.4k views
-
-
-
- 6 replies
- 1.2k views
-
-
அம்மா அப்பா. ஜேர்மனிய தமிழ் கலப்புத்திருமண விவரணப்பட முன்னோட்டம். http://www.kino-zeit.de/filme/amma-appa# http://www.kino-zeit.de/filme/trailer/amma-appa http://www.ammaandappa.com/#!homeeng/c14zq
-
- 3 replies
- 1.1k views
-
-
வணக்கம் உறவுகளே என்னை அறிய என்னை புடம்போட அதை எதிர் கொள்ள என்றுமே பின்னிற்பதில்லை.. அந்தவகையில் எனது சில எழுத்துக்கள் அல்லது கலந்துரையாடல்கள் என்னைப்பற்றியோ அல்லது எனது வயது சார்ந்தோ வெளியில் விமர்சிக்கப்படுவதாக அறிந்தேன்.... என்றுமே பின் முதுகில் குத்துபவர்கள் பற்றி நான் கவலைப்பட்டதில்லை அத்துடன் அது தெரியவரும் போது அதற்காக நேரடி விவாதங்களை எதிர்கொள்ள தயங்குவதில்லை............ இங்கு திறக்கப்படும் அனைத்து திரிகளிலும் அனைத்து கருத்தாளர்களுடனும் விவாதிப்பவன் அல்லது கலந்து கொள்பவன் யான். நான் ஒரு எழுத்தாளனோ அல்லது படைப்பாளியோ அல்ல ஆனால் படைப்புக்கள் கருத்துக்கள் மற்றும் தாயகம் சார்ந்து விவாதிக்க என்னால் முடியும். அநேகமாக சீரியசான வ…
-
- 42 replies
- 2.9k views
-
-
ஆண்களின் உலகம் அண்மை காலமாக ஆண்களின் உலகம் மீதான அன்பும், மதிப்பும் கூடிக்கொண்டே இருக்கிறது. 30 வயதில் ஒரு தியாகியைப் போல குடும்பப் பொறுப்புகள் சுமந்து திரிபவர்களின் முகங்களும், தன்னிடம் இருக்கும் கடைசி சில்லறைக் காசு வரை உடனிருக்கும் நண்பர்களுக்காய் செலவிடும் மனங்களும், ஜவ்வாது மலையின் பழங்குடி சிறுமி படிக்கவியலாமல் போனதற்காய் தி.நகர் பேருந்து நிலையத்தில் நள்ளிரவில் கண்ணீர் விட்ட தோழனுமாய்… அன்பு நிறைந்த ஆண்கள் நிறையப்பேரை சமீபமாய் காண்கிறேன்! எழுத்தில், திரையில், பொதுவில்… ஆண்கள் என்றால் பொறுப்பற்ற பொறுக்கிகள் என்ற சித்திரம் பின்னப்பட்டிருக்கிறது. இது முழு பொய் இல்லை, முழு உண்மையும் இல்லை. முப்பதைக் கடந்த வயதில்… தங்கையின் திருமணம், அக்காவின் பேறுகாலம் என நில்ல…
-
- 0 replies
- 1.5k views
-
-
இந்தியா முழுவதும் கடந்த இரண்டு நாட்களாக, சமூக வலைதளமான ட்விட்டரில் #TheMistakeGirlsMake என்ற ஹஷ்டேக் பிரபலமடைந்து இருந்தது. இந்த ஹஷ்டேக்கை வைத்து ஆண்களும் பெண்களும் பல ட்வீட்களைத் தட்டினர். சிலர் நகைச்சுவையாகவும், எவரையும் புண்படுத்தாத வகையிலும் ட்வீட் செய்ய, பெரும்பாலானவர்கள் பெண் மோகம் கொண்ட வாசகங்களையும், பெண்களை வெறுக்கும் வாசகங்களையும், அவர்களை மிக மோசமாக இழிவுபடுத்தும் வகையிலும் ட்வீட் செய்தனர். "பெண்ணாக பிறப்பதே தவறு", "அவர்கள் எதையாவது சரியாக செய்வதுண்டா?", "நம்பத் தகுந்த ஒருவரை சோதிப்பதாக நினைத்துக்கொண்டு தன் சிறிய ஐ.க்யூ. மூலம் ஏமாற்றுவது" போன்ற ட்வீட்களைத் பதிவு செய்தனர். மேலும் சிலர், இங்கு வெளியிட முடியாத அளவிற்கு மிக மோசமான ட்வீட்களையும் பதிவு செய்தன…
-
- 5 replies
- 1.1k views
-
-
எவன் போட்டுக் கொடுத்தான்? வா மணிகண்டன் சில விஷயங்களைக் காதிலேயே போட்டுக் கொள்ளக் கூடாது. யாராவது நம்மிடம் வந்து ‘அவன் அப்படியாமே இவள் இப்படியாமே’ என்றாலும் சரி. ‘அவர் உங்களைப் பத்தி அப்படி சொன்னார்’ என்றாலும் சரி- காதை மூடிக் கொள்ள வேண்டும். சிலர் ஒரு படி மேலே போய் ‘அந்த ஆளைப் பத்தி என்ன நினைக்கறீங்க?’ என்பார்கள். போட்டு வாங்குகிறார்களாம். எதையாவது சொல்லி வாயை மூடியிருக்க மாட்டோம் ஆனால் சம்பந்தப்பட்டவருக்கு தகவல் சென்று சேர்ந்திருக்கும். திரும்பிய பக்கமெல்லாம் இப்படிப்பட்ட மனிதர்களைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. தன்னை நல்லவனாகக் காட்டிக் கொள்வதற்காக அடுத்தவர்களை கெட்டவர்களாக மாற்றிவிட தயங்காத உலகம் இது. எங்கள் லே-அவுட்டில் குடியிருக்கும் நண்பர் பன்னாட்டு …
-
- 1 reply
- 1.1k views
-
-
எஸ் வி வேணுகோபாலன் மொகலம்மா என்ற பெண்மணியைப் பற்றிய ஆங்கிலக் கட்டுரை ஒன்றை வாசிக்க நேர்ந்தபோது கல்வியின் பெருமை குறித்த புதிய பரிமாணம் எனக்குக் கிடைத்தது. ஆந்திர பிரதேசத்தைச் சார்ந்த இந்தப் பெண், இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் இந்தியாவுக்கு வருகை தந்தபோது அவரால் சிறப்பிக்கப்பட்டார். ஹர்ஷ் மெந்தர் எழுதிய அந்தக் கட்டுரை, எந்த இடத்திலிருந்து அந்தப் பெண் இந்தப் பெருமைக்குரிய இடத்தை வந்தடைந்தார் என்பதை தி இந்து நாளிதழில் அருமையாகப் படம் பிடித்துக் காட்டி இருந்தது. பிறந்த முதலாம் ஆண்டிலேயே காய்ச்சல் ஏற்பட்டதை அடுத்து, மொகலம்மா நடக்க முடியாத குழந்தையாக வளர்ந்தார். பல குறைபாடுகளுடன் வாழ்ந்து கொண்டிருந்த அந்தக் குழந்தையின் தாய், மொகலம்மாவுக்கான எதிர்காலம் அவரது கல்வியில் இருக்கிறது …
-
- 2 replies
- 1.5k views
-
-
பாலியல் அத்து மீறல்கள் வா. மணிகண்டன் www.nisaptham.com மிகச் சமீபத்தில் இந்தியாவில் நிகழ்ந்த பெண்களுக்கு எதிரான கொடுமைகள் என்று பட்டியல் எடுத்தால் பயங்கரமாக இருக்கிறது. வன்புணர்ந்து பிறகு தலையில் அடித்துக் கொல்வது, அடையாளம் தெரியாதபடிக்கு பாதி உடலை எரித்துவிட்டு போவது, தூக்கில் தொங்கவிடுவது என்று ஒவ்வொன்றும் குரூரமாக இருக்கின்றன. இவற்றையெல்லாம் வெறும் செய்தியாகப் படித்தால் பெரிதாக பாதிப்பு தெரிவதில்லை. நம் உறவுப் பெண் யாரையாவது அந்த இடத்தில் ஒரு வினாடிக்கு பொருத்திப் பார்த்தால் நெஞ்சுக்குள் மிகப்பெரிய உருண்டை ஒன்று அடைத்துக் கொள்கிறது. இவையெல்லாம் உத்தரப்பிரதேசத்திலும் டெல்லியிலும்தான் நடக்கின்றன என்றில்லை. கொஞ்ச நாட்களுக்கு முன்பாக பெருந்துறையில் பெண் போ…
-
- 1 reply
- 982 views
-
-
ஆதங்கம் - உஷா கனகரட்ணம் 30 மே 2014 சின்ன விரல்களிடையே பென்சிலைப் பிடித்தபடி சின்னது ஏதோ எழுதிக் கொண்டிருக்கிறது. இடையிடையே எழுதுவதை நிறுத்திவிட்டு பென்சிலை மோவாயில் தேய்த்தபடி தீவிரமாக யோசிக்கிறது. பார்த்துக் கொண்டிருந்த கயலுக்கு சிரிப்பாக வந்தது. அதன் பிஞ்சுக் கால்களையும் கைகளையும் கம்பளிக்குள் புதைத்து, பிடரியில் கை வைத்து சுகத்தை விட அதிகமான பயத்துடன் அவளைத் தூக்கிச் சென்ற காலங்கள் நினைவில் வந்தது. நான்கு வருடங்கள் எப்படிப் பறந்தன என்று புரியவில்லை. இங்கு வந்திருக்கும் சில நாட்களாகத் தான் இப்படி நிதானமாக உட்கார்ந்து குழந்தையை ரசிக்க முடிகிறது. இத்தனை வருடங்களை வீணாக நம்மைப் பற்றிய கவலையில் ஏக்கத்திலேயே கழித்து விட்டோமோ... உனக்கு ஒரு நல்ல தாயாக இருந்தேனா…
-
- 4 replies
- 875 views
-
-
பணி இடத்தில் - சபல புத்தி உடைய ஆண்களை சமாளிப்பது எப்படி? [Thursday, 2014-05-22 18:30:36] பணி இடத்தில் அனைவரும் பெண்களிடம் கண்ணியமாக நடந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. சில சபலபுத்தி கொண்டவர்களும் இருக்கத்தான் செய்வார்கள். அவர்களிடம் இருந்து தப்பிக்கும் கலையை பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டும். சக ஆண் ஊழியர்கள் தொடக்கத்தில் நல்ல மாதிரி பட்டால் கூட அளவுக்கு அதிகமாக அவர்களிடம் பேச வேண்டாம். யாரைப் பற்றியுமே சரியான முடிவுக்கு வர சிறிது காலம் தேவை. அதுவரை பொறுத்திருந்து, பிறகு நட்பு பாராட்டுவது நல்லது. உங்களுக்கு உங்கள் வேலை மிகவும் தேவையானதாக இருக்கலாம். அந்த வருமானத்தை நம்பித்தான் உங்கள் குடும்பமும், வருங்காலமும் இருக்கிறது என்கிற நிலைகூட இருக்கலாம். ஆனால் இதையெல…
-
- 25 replies
- 4.1k views
-