சமூகச் சாளரம்
சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்
சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
2251 topics in this forum
-
எமது இன்றைய சமுதாயமும் எழும் கேள்விகளும்....!!!
-
- 0 replies
- 518 views
-
-
இந்தத் தலைமுறை... என்ன மாதிரியான, மனோநிலையில் இருக்கிறார்கள் என்பதை... இதைவிட அழகாக யாராலும் சித்தரிக்க முடியாது.
-
- 2 replies
- 752 views
-
-
நீங்கள் உங்கள் நிறுவனத்துக்கு நாணயமாக நடந்து கொள்வீர்களா? இப்படி ஒரு கேள்விக்கு நிச்சயம், ஓரளவு, மாட்டேன் என்று மூன்றுவிதப் பதில்களைக் கொடுத்தால், எல்லோருமே ‘நிச்சயமாக’ என்ற பதிலைத்தான் தேர்ந்தெடுப்பார்கள் (நடைமுறையில் ‘ஓரளவு’ என்று நடந்துகொள்ளக் கூடியவர்கள் உட்பட). எனவே இதுபோன்ற (போலியான பதில் வர வாய்ப்புள்ள) கேள்விகளைக் கேட்டு நபர்களைத் தேர்வு செய்வதை நிறுவனங்கள் விரும்பாது. ஆனால் கேள்வியைக் கொஞ்சம் சுற்றி வளைத்துக் கேட்டால் மாட்டிக் கொள்ள வாய்ப்பு உண்டு. சுற்றி வளைக்கும் கேள்வி “உங்களுக்கு வேறொரு நிறுவனத்திலிருந்து வேலையில் சேர அழைப்பு வருகிறது. நீங்கள் எங்கள் நிறுவனத்தை விட்டுச் சென்று விடுவீர்களா?’’. இந்தக் கேள்விக்கு உங்கள் பதில் என்னவாக இருக்க…
-
- 1 reply
- 736 views
-
-
இன்று மேலை நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி புலம் பெயர் தமிழர் வாழ்விலும் கணிசமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. புலம் பெயர் சமுதாயத்தின் உழைக்கும் வர்க்கம் கடந்த 25 வருட காலங்களின் பின்னர் முதுமையைத் தொட ஆரம்பித்துவிட்டது. அவர்களுடைய வாழ்வு ஓய்வூதிய பகுதிக்குள் போயுள்ளது. முதலாவது தலைமுறை போன்ற உழைப்பு சக்தியையும், ஊருக்கு பணம் அனுப்ப வேண்டும் என்ற உணர்வையும் இரண்டாவது தலைமுறை வளர்த்துக் கொள்ளவில்லை. இந்த நிலையில் ஐரோப்பா வறுமைக்குள் வீழ்ந்து கொண்டிருக்கிறது. ஆகவே வருங்காலங்களில் இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் இருந்து வெளிநாட்டு பணத்தை பெற்று வாழ்வோர் கணிசமான சிக்கல்களை சந்திக்க நேரிடும். அதேவேளை முன்னைய காலங்களைவிட இந்த ஆண்டின் முதல் ஆறுமாத கா…
-
- 6 replies
- 1k views
-
-
கலி முத்தி போச்சா? மைத்ரேயர்: கலி காலத்தில் என்ன நடக்கும்? பாரசாரர்: மைத்ரேயரே கலியினுடைய விஸ்வரூபத்தினை விபரமாக சொல்கிறேன் கேள் கலிகாலத்தில் திருமணங்கள் தர்மாமன முறையில் நடைபெறமாட்டா குருகுல மாணவ முறையும் இராது எந்த மனிதன் ஆனாலும் பொருள் உள்ளவனே அரசன் ஆவான் குலம் கல்வி முதலியவன் கணக்கில் எடுக்கபடமாட்டா. பெண்களுக்கு கூந்தல் நீளமாக இருந்தாலே அழகி என்ற கர்வம் வந்துவிடும். கலி வளர வளர பொன்னும் பொருளும் நசிந்து போகும். மேலும் எவனாகினும் பொருள் உடையவனையே பெண்கள் தங்கள் புருசனாக வரித்து கொள்வர்.எவனிடத்தில் பொன்னும் பொருளும் அதிகம் உள்ளதோ அவனையே தலைவனாக ஏற்று கொள்வார்கள். கலியுகத்திலே புத்திக்கு பயன் பொருள் சேர்பது மட்டுமே தவிர வேறு எதுவும் தர்மமாக ஏற்று…
-
- 0 replies
- 1.9k views
-
-
ஆண்டவன் சன்னதியில் ஆடையை கழற்ற நிர்பந்திப்பதா? -குருசாமி மயில்வாகனன் சில பிரபல கோவில்களில் ஆண்கள் சட்டை இல்லாமல் திறந்த மார்புடன் வர நிர்பந்தம் தரப்படுகிறது. இன்றைய தலைமுறையினர் பலர் இதில் மாற்றம் வேண்டுகின்றனர். ”இதில் மாற்றம் அவசியம் தான்” என நாராயணகுரு சச்சிதானந்தாவும், அய்யா வைகுண்டர் கோவில் பிரஜாபதியும் ஆதரிக்கின்றனர். என்ன செய்யலாம் ஒரு விவாதம்; நாராயணகுரு நிறுவிய சிவகிரி மடத்தின் தலைவரான ஆன்மீகவாதியான சுவாமி சச்சிதானந்தாவே சட்டையைக் கழற்றும் விதமான ஆடை கட்டுப்பாடுகளை கைவிடலாம் எனக் கூறி இருப்பது பலத்த வரவேற்பை பெற்று, கேரள அரசு இது குறித்து ஆன்மீக பெரியோர்களிடம் ஆலோசித்து வருகிறது. வழக்கம் போல பழமைவாதிகள் …
-
- 0 replies
- 466 views
-
-
அம்மா இருக்கும்போது செய்யவேண்டியவை. இவற்றைத்தான் அம்மா இருக்கும் போது செய்ய வேண்டியவை/ செய்திருக்க வேண்டியவை என்று என்னால் பட்டியலிட முடியுமா என்று எனக்கு தோன்றவில்லை. இதை அம்மா இருக்கும்போதும் எழுதிவிட முடியாது. அம்மாவை இழந்த வலியின் விளிம்பில் இருந்து இன்னொருவரின் அம்மாவுக்கு நடந்துவிடக்கூடாது என்ற ஆதங்கத்தில் வேணும் என்றால் இதை எழுதலாம் என்று தோணுகிறது. உலகில் எல்லா அம்மாக்களுக்கும் தங்களின் பிள்ளைகள் ஒரு நல்ல நிலையில் நன்றாக வாழவேண்டும் என்று ஒரு ஆசை சில வேளைகளில் பேராசையாக கூட இருக்கலாம். ஆனால் அது அம்மாக்களால் மட்டுமே முடியும். தங்களின் கனவுகளை பிள்ளைகள் மூலம் நிறைவேற்றிவிடலாம் என்ற ஒரு ஆதங்கதிலுமே பெரும்பாலும் வாழுவார்க…
-
- 7 replies
- 3.4k views
-
-
சொல்லி அழுதுவிட்டால் பாரம் குறையும்’ - மன அழுத்தம் நீங்க மருத்துவர் அறிவுரை கோவை வயது வித்தியாசம், வசதி வாய்ப்புகள் என எதையும் பாராமல் பலரையும் ஆட்கொள்கிறது மன அழுத்தம். நாளாக நாளாக எண்ணங்களின் குவியல் அழுத்தமாக மாறி, சில நேரங்களில் தற்கொலை வரை கொண்டுபோய் நிறுத்துகிறது. அதற்கான சமீபத்திய உதாரணம், பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத். தற்கொலை என்பது தனிமனிதச் செயல் என்றாலும், அவர்களைச் சார்ந்த குடும்பமும், சமூகமும் இதனால் பாதிக்கப்படுகிறது. இந்தியாவில் ஒரு லட்சம் மக்கள்தொகையை எடுத்துக்கொண்டால், அதில் ஆண்டுக்கு சராசரியாக 10 பேர் வரை தற்கொலை செய்துகொள்வதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன காரணங்கள் என்ன? கோ…
-
- 0 replies
- 804 views
-
-
அழகான கைகள் யாருடைய கைகள்? சில வருடங்களுக்கு முன்பு, வெலிங்டனில் உள்ள ராணுவ அதிகாரி ஒருவரின் வீட்டுக்குச் சென்று இருந்தேன். அவரது வரவேற்பறையில் இரண்டு கைகளின் புகைப்படம். யாரோ ஒரு புனிதரின் கைகளாக இருக்கக்கூடும் என்று நினைத்து, அதைப்பற்றிக் கேட்கவே இல்லை. அவரோடு காரில் பயணம் செய்யும்போது, அதேபோன்ற கைகளின் புகைப்படத்தை மறுபடியும் பார்த்தேன். ஆவலில் அது யாருடைய கைகள் என்று கேட்டேன். அவர் புகைப்படத்தைக் கையில் எடுத்துப் பார்க்கும்படியாகச் சொன்னார். புகைப்படத்தை அருகில் தொட்டுப் பார்த்தபோது, அது வயதான ஒரு பெண்ணின் கைகள் என்பதைக் கண்டுகொண்டேன். முதுமையின் ரேகை படிந்த நீண்ட விரல்கள். நகங்கள் சுத்தமாக வெட்டப்பட்டு இருக்கின்றன. நரம்புகள் புடைத்துத் தெரிகின்றன. யாராக இ…
-
- 1 reply
- 2.3k views
-
-
வணக்கம், யாழ் உறவு ஒருவரின்ட கையெழுத்தில காணப்பட்ட கீழ்வரும் கருத்து சிறிது நேரம் அல்ல.. நீண்டநேரம் என்னை சிந்திக்க வைத்தது. இதை வாசிக்க உங்களுக்கு என்ன தோன்றுது என்று ஒருக்கால் சொல்லுங்கோ: ''உனை அழவைக்கும் உறவு உன் உறவுக்குத் தகுதியற்றது உன் அழுகைக்கு தகுதியான உறவு உனை ஒருபோதும் அழ விடாது உறவை நினைத்து அழாதே.'' மேலுள்ள கருத்தை எங்கட தனிப்பட்ட வாழ்வில இருக்கிற பல்வேறுவிதமான உறவுநிலைகளில இருந்து - சமூகம், நாடுவரை சீர்தூக்கி ஒப்பிட்டு பார்க்கலாம். உங்களுக்கு விளங்கியதை சொல்லுங்கோ.உங்கள் விளக்கங்களிற்கு நன்றி!
-
- 10 replies
- 2.6k views
-
-
ஜான்வி மூலே பிபிசி மராத்தி "ஒரு நபர் இடது கை பழக்கமுள்ளவர் என்றால், அவருக்கு ஏதுவாக இல்லாதபோதும், வலது கையைப் பயன்படுத்தும்படி அவரை வற்புறுத்துவீர்களா? அவரால் கட்டாயப்படுத்தப்படுவதை ஏற்றுக் கொண்டு வலது கையை பயன்படுத்த முடியுமா? அதே தர்க்கம் தான் ஓரின ஈர்ப்பாளர்களுக்கும் பொருந்தும்." மும்பையில் வசிக்கும் ஓரின ஈர்ப்பாளரான சுமித் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பாலின மாற்று சிகிச்சை (Conversion therapy) குறித்து பேசுகிறார். அவர் ஓரின ஈர்ப்பு பிரச்சனையை தீர்க்க பாலின மாற்று சிகிச்சையை மேற்கொள்ள வேண்டியிருந்தது. "மாற்று பாலின சிகிச்சை" என்ற சொல், ஒரு நபரின் பாலியல் விருப்ப நிலையை (Sexual Orientation) மாற்றும் அல்லது ஒரு நபரின் பாலின அடையாளத்தை (Gende…
-
- 0 replies
- 474 views
-
-
திருமணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர் என்று சொல்வார்கள். அந்த திருமணம் செய்யும் போது, திருமணம் செய்து கொள்ளப் போகும் தெரியாதவராக இருந்தால், அவர் எப்பேர்பட்டவர் என்பது தெரியாமல், மனமானது ஒருவித அழுத்தத்துடனும், படபடப்புடனும் இருக்கும். ஆனால் அந்த திருமணமானது விருப்பப்பட்டவருடன் நடந்தால், அப்போது வாழும் வாழ்க்கையே ஒரு தனி சுகம் தான். மேலும் அந்த வாழ்க்கையானது இனிமையாக செல்லும். அந்த வகையில் திருமணம் செய்து கொள்ள போகும் நபர், மிகவும் நெருங்கிய நண்பனாகவோ/தோழியாகவோ இருந்தால், எப்படி இருக்கும் என்று யோசித்ததுண்டா? ஆம், தெரியாதவரை திருமணம் செய்து கொண்டு, மனம் ஒத்துப் போகாமல் இருந்து, அடிக்கடி சண்டை போடுவதை விட, நன்கு புரிந்து கொண்டு, காதல் மலர வைத்த தோழன்/தோழியை மணந்தால், நிறைய …
-
- 12 replies
- 1.3k views
-
-
வேலை நேரத்தில் ஆபாசப்படம் பார்ப்பது உங்கள் தொழில்வாழ்க்கைக்கு எமனாகலாம். ஆனால் இது தெரிந்தும், நீங்கள் நினைப்பதைவிட அதிகமானோர் இந்த ஆபத்தில் இறங்குகின்றனர். வேலைநேரத்தில் சிறிதே இடைவெளி எடுத்துக்கொண்டு, இன்ஸ்டாகிராமில் ஸ்க்ரோல் செய்வதையும், ஷாப்பிங் செய்வதையும் ஏன் புதிய டேட்டிங் செயலியை பயன்படுத்துவதைக் கூட பலரும் ஒப்புக்கொள்வார்கள். ஆனால் ஆபாசப்படங்களை பார்ப்பது? இது நிச்சயமாக அனுமதிக்கப்படாததுதான். ஆனால், இன்றைய சூழலில் மிகவும் எளிமையாக ஆன்லைனில் அணுக முடிவதால், இது மிகவும் பரவலாகிவிட்டது என்று உளவியலாளர்கள் மற்றும் இணைய பாதுகாப்பு நிபுணர்கள் நம்புகிறார்கள். 60%க்கும் அதிகமான பேர் வேலை நாளின் போது ஆபாசபடங்களின் நுகர்வு பெருகுவது க…
-
- 1 reply
- 740 views
-
-
நேரம் ஒதுக்குங்கள் நம்பினால் நம்புங்கள், கணவன் மனைவியரிடையே உள்ள பிரச்சினைகளின் மையம் இந்த விஷயம் தான். “எனக்காக அவரு டைம் ஸ்பென்ட் பண்ண மாட்டேங்கறாரு” ! ஆண்களுடைய விருப்பங்களும் பெண்களுடைய விருப்பங்களும் தனித்தனியானவை. ஆண்களுக்கு கிரிக்கெட் மோகம் இருக்கும் போது, பெண்களுக்கு சீரியல் மோகம் இருக்கும். ஆண்கள் தூங்கி ஓய்வெடுக்க விரும்பும் போது பெண்கள் பேசிக்கொண்டிருக்க விரும்புவார்கள். ஆண்களுக்கு ஷாப்பிங் அலர்ஜியாய் இருக்கும். பெண்களுக்கோ அது தான் எனர்ஜியாய் இருக்கும். இப்படி மாறி மாறி இருக்கின்ற ரசனைகள் ஒரு கூரையின் கீழ் வந்து சேர்வது தானே குடும்பம் ! இந்த இடத்தில் ரசனைகள் முட்டிக் கொள்ளாமல் எப்படி இணைந்து பயணிக்கின்றன என்பது தான் கவனிக்க வேண்டிய விஷயம். “அவருக்க…
-
- 2 replies
- 1.2k views
-
-
குழந்தைகளின் மனிதவளத் திறனை வளர்ப்பது எப்படி? கரோனா தெருந்தொற்றுப் பேரிடர் காலத்தில் இணையவழியிலும் தொலைக்காட்சிகள் வழியாகவும் மாணவர்களுக்கு கல்வி சென்றுசேர்வதற்கு அரசு, பள்ளி, கல்லூரிகள் வழிகளை ஏற்படுத்தியிருக்கின்றன. ஆனால் மாணவர்களின் மனநலனும் பட்டம் பெற்று வெளியேறும் நாளைய பணியாளர்களான இன்றைய மாணவர்களின் மனிதவளத் திறன் குறைவாக இருப்பதை உலக வங்கியின் மனித முதலீட்டுக் குறியீடு (ஹெச்.சி.ஐ.) வெளிப்படுத்தியிருக்கிறது. இந்த ஹெச்.சி.ஐ.-க்கு அடிப்படையாக இருப்பது மனநலம். மாணவர்களின் மனநலன் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததுடன் ஒப்பிடும்போது, பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பது கண்டறியப் பட்டுள்ளது. இதற்கு பல்வேறு காரணங்கள் முன்வைக்கப்…
-
- 0 replies
- 478 views
-
-
"அனுராத புரத்தில் தமிழர்" கி மு மூன்றாம் நூற்றாண்டுகளில் அசோகனால் இலங்கைக்கு பௌத்த மதத்தை பரப்புவதற்காக ஒரு குழு அனுப்பப் பட்டது.அப்பொழுது அனுராத புரத்தை "திஸ " என்ற மன்னன் ஆட்சி செய்து கொண்டு இருந்தான். அவன் அவ் மதத்தில் கவரப் பட்டு, தனது மக்களுடன் மதம் மாறினான். அத்துடன் தனது பெயரையும் "தேவ நம்பிய திஸ " [King Devanampiya Tissa/307-267 BC ] என்று மாற்றினான். இவ் மன்னன் இறந்த சில ஆண்டுகளின் பின்பு, கி.மு 237 ஆம் ஆண்டு அளவில், சேன [ஈழசேனன் / சேனன்],குத்தக [நாககுத்தன் / குத்திகன்] [Sena and Guththika/ 237-215 BC] என்ற இரு தமிழ் மன்னர்கள் மொத்தம் இருபத்தி இரண்டு ஆண்டுகள் அனுராத புரத்தில் இருந்து ஆட்சி செய்தனர். இவ்விரு தமிழ் மன்னர்களின் பின் சில காலம் கழித்து, எல்லா…
-
- 0 replies
- 743 views
-
-
திருமணமான புதிதில் இளம் தம்பதிகள் பேசும் பேச்சில் நேரம் போவதே தெரியாது. அந்த பேச்சில் அவ்வளவு சுவாரசியம் இருக்கும். இதில் பெரிய வேடிக்கை என்னவென்றால், அவ்வளவு நேரம் என்ன பேசினோம் என்றே தெரியாவிட்டாலும் கூட, அவர்கள் தொடர்ந்து எதையாவது பேசிக்கொண்டே இருப்பார்கள். பெண்கள் பொதுவாக சுற்றி வளைத்துத்தான் பேசுவார்கள். ஒன்றை எதிர்பார்த்துக் கொண்டு வெளியே வேறு ஒன்றை பேசுவார்கள். பெரும்பாலும், `நான் கோபமாக இல்லை’ என்று பெண் சொன்னால், கண்டிப்பாக `நான் கோபமாக இருக்கிறேன்’ என்று அர்த்தம். `நான் வருந்துகிறேன்’ என்று அவள் கணவனிடம் சொன்னால், `நீயும் வருந்து’ என்று பொருள். `நீ என்னை எவ்வளவு தூரம் நேசிக்கிறாய்?’ என்று மனைவி கேட்டால், கணவனுக்குப் பிடிக்காத ஏதோ ஒன்றை அவள் செய்…
-
- 3 replies
- 1.1k views
-
-
கொத்தடிமை முறையை ஒழிக்கும் நோக்கில் உலகம் முழுவதும் சைக்கிளில் பயணிக்கிறார் சென்னையைச் சேர்ந்த இந்த இளைஞர். அமெரிக்காவில் மென்பொருள் துறையில் பணியாற்றி வந்த இவர், கடந்த நான்கு ஆண்டுகளில் பல நாடுகளுக்கும் சைக்கிளில் பயணித்து வருகிறார். இதில் திரட்டிய நிதியில், 100க்கும் மேற்பட்ட கொத்தடிமைகளை மீட்டு, அவர்கள் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறுகிறார் நரேஷ் குமார். https://www.bbc.com/tamil/india-49363376
-
- 0 replies
- 456 views
-
-
எங்கள் உறவுகள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் எல்லாம் குடும்ப உறவுகளான தாத்தா, பாட்டி அம்மம்மா,அப்பப்பா என எல்லோரும் கூட இருப்பது ஒருவரம் என்று தான் இத்தனை நாட்கள் சொல்லிக்கொண்டு வந்தோம். ஆனால் பெரும்பாலும் புலம்பெயர்த்தோர் தம் பெற்றோரை நன்றாக வைத்ட்டுப் பார்க்கிறார்களா என்றால் பெரும்பாலுமில்லை என்ற பதில் தான் வரும். சாதாரணமாகப் பெண்கள் தம் பெற்ரோரைத் தம்முடன் வைத்திருப்பர். ஏனெனில் அவர்களுக்கிடையே பிரச்சனைகள் ஏற்படுவதுக்குறைவு. ஆனால் மாமனாரைத் தம்முடன் வைத்திருந்தாலும் மாமியாரைத் தம்முடன் வைத்திருப்பதைப் பெரும்பாலான பெண்கள் விரும்புவதில்லை. ஆனால் பெற்ற பெண்பிள்ளைகள் பலர் தமது பெற்றோரை வயதுபோன காலத்தில் நின்மதியாக இருக்கவிடாது தம் உதவிக்காகப் பெற்றோரை தம்முடன் வைத்திருப்…
-
- 23 replies
- 3k views
- 1 follower
-
-
அண்மையில் எனக்கு தெரிந்த இளைஞன் ஒருவன் இறந்துவிட்டான் என்ற துன்பமான செய்தி என் காதுகளை எட்டியதில் இருந்து மனது பல நூற்றுக்கனக்கான எண்ண ஓட்டங்களால் நிறைது போயிருக்கிறது..கடுமையான உழைப்பாளி அவன்..இரண்டு வேலை அதனுடன் ஞாயிற்றுக்கிழமைகளில் இன்னொரு வேலை என பணத்திற்காக கடுமையாக தன்னை வருத்தி உழைத்துக்கொண்டிருந்த ஒருவன்..இதுவரைக்கும் ஒரு சுற்றுலாகூட தன் குடும்பத்துடன் அவன் போனதில்லை..எனக்கு தெரிந்து வேலையிடம்,வீடு இந்த இரண்டையும் தவிர அண்மைக்காலங்களில் அவன் போன இடங்கள் என்று எதுவும் இல்லை..மரணம் மிகவிரைவாக அவனை அழைத்து சென்று விட்டது..அந்த தாக்கத்தில் என் மனதில் எழுந்த சிந்தனைகளே இவை.. எம்மில் அநேகமானவர்களின் வாழ்க்கை ஏதாவது ஒன்றை நோக்கிய ஓட்டமாகவே ஒவ்வொரு நொடியும் கழிந்துபோ…
-
- 41 replies
- 6.8k views
-
-
தமிழர்களாகிய நாம் அன்று தொடக்கம் கொண்டாடிய சில பண்டிகைகள் ஏதோ பல காரணங்களினால் இன்று புறக்கணிக்கப்பட்டு வருகின்றது. கொண்டாடப்பட்ட பண்டிகைகள் எமக்குரியவை அல்ல.. என விவாதிக்கப்படுகின்றது. உண்மையில் தமிழர்கள் கொண்டாடக்கூடிய, உரிமையுள்ள பண்டிகைகள் எவை? தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.
-
- 16 replies
- 10.4k views
-
-
என்னினமே என்சனமே என்னை உனக்குத் தெரிகிறதா? என்று ஒரு கவிஞன் பாடல் இயற்றினான். அந்தப் பாடல் வரிகள் குறித்து சில மாற்றங்கள் செய்திருக்க வேண்டும் என்பது நம் நினைப்பு. அந்த மாற்றம்: என்னினமே என்சனமே உன்னை உனக்குத் தெரிகிறதா? என்பதாக இருந்திருக்க வேண்டும்? உன்னையே நீ அறிவாய் என்ற தத்துவம் மிகவும் முக்கியமானது. என்னை எனக்கு அறிவித்தான் எங்கள் குரு நாதன் என்ற தவத்திரு யோகர்சுவாமியின் திருவாக்குக்கு அப்பால் இன்னொரு எடுத்துக் காட்டுத் தேவையில்லை. எனவே என்னை நான் அறிதல் என்பது மிக வும் முக்கியமானதாகும்.எனினும் தமிழ் மக் களாகிய நாம் எங்களை நாங்களே அறிதல் என்பதில் தவறிழைத்து விடுகிறோம். கடந்த ஒரு சில தினங்களுக்கு முன்னர் கொழும்பிலுள்ள ஐந்து நட்சத்திர விடுதியில் நடந்த த…
-
- 0 replies
- 924 views
-
-
ஜனநாயகமற்ற குடும்ப நிறுவனங்களும் , கணவர்களினால் வன்முறைகளை எதிர்கொள்ளும் பெண்களும்.! இலங்கையில் ஐந்து பெண்களில் ஒருவர் தன் கணவனால் முன்னெடுக்கப்படும் வன்முறையை எதிர்கொள்கின்றாள் என்ற அதிர்ச்சியூட்டும் புள்ளிவிபரம் ஒன்று கடந்த வாரம் வெளியாகியிருந்தது. சனத்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் கடந்த ஆண்டில் நிகழ்ந்த பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பான தனது முதலாவது தேசிய கணக்கெடுப்பை ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியத்தின் ஆதரவுடன் முன்னெடுத்திருந்தது. இந்த ஆய்வின் முடிவில் வெளியான அறிக்கையிலேயே இந்த முக்கியமான தகவல் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இலங்கையின் 25 மாவட்டங்களையும் உள்ளடக்கியதாக 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய 2 ஆயிரத்…
-
- 0 replies
- 460 views
-
-
தொலைபேசி பாவனையும், இன்றைய மாணவர்களின் நிலையும் 68 Views தகவல் தொடர்பாடல் சாதனம் என்பது ஒரு கருத்தை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு பரிமாற்றம் செய்யும் கருவியாகும். அவற்றில் இன்று உலகையே ஒரு சட்டைப் பையினுள் சுருக்கி வைத்திருக்கும் ஒரு கருவியாக கையடக்கத் தொலைபேசி காணப்படுகின்றது. தொலைபேசி, சமூகத்தில் உள்ள அனைத்து நபர்களிடமும் செல்வாக்குச் செலுத்தும் அதேவேளை, மாணவ சமூகத்தில் இது பாரிய மாற்றத்தினைப் கொண்டுவருகிறது. இன்றைய மாணவர்கள் தங்களது கற்றல் செயற்பாடுகளையும் மறந்து தொலைபேசியின் ஆக்கிரமிப்பிற்கு உள்ளாகின்றனர். மாணவர்கள் தங்களைச் சுற்றி நடப்பவை யாது? ஏன புரியாத அளவிற்கு அதன் செல்வாக்கிற்கு உட்பட்டவர்களாக காணப்படுகின்றனர். தங்…
-
- 0 replies
- 9.4k views
-
-
கந்த சஷ்டி விரதம்(உபவாசம்) பிடிக்கும் முறையை யாரவது கூறுங்களேன் ஒவ்வொருத்தர் ஒவ்வொரு வித மாக கூறுகிறார்கள் தொடர்ந்து 18 வருடம் பிடிக்கணும் என்கிறார்கள் ஆறு ஆறு ஆக பிரித்து, ஆறு வருடம் ஒருநேரம் சோறு கறி மற்ற ஆறு வருடம்,சர்க்கரை பொங்கல்)ஆறு வருடம் உபவாசம் உபவாசம் இருப்பவர்கள் பாலும் பழமும் தானே ஒரு நேரம் எடுத்து கொள்ளனும்..?
-
- 56 replies
- 23.2k views
-