சமூகச் சாளரம்
சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்
சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
2251 topics in this forum
-
சமூக வழிநடத்தலில் ஆலயங்களின் பங்களிப்பு
-
- 1 reply
- 756 views
-
-
“சுதந்திரம் என்றுமே அதிகார வர்க்கத்தினரால் தானாக வழங்கப்படுவதில்லை, அது ஒடுக்கப்பட்டவர்களின் தேவைகள் ஒலிக்கப்படும்போது மட்டுமே பெறப்படுகிறது” —மார்டின் லூதர்கிங் பிறப்பை அறுதியிட்டு நிர்ணயிக்க இயலாத உயிரினங்கள் அனைத்தும் உணவு, நீர், வாழிடங்கள் போன்ற தன் தேவைகளுக்கும், வசதிகளுக்கும் ஏற்றவாறு தனக்கான புகலிடத்தை நிலை நிறுத்திக்கொள்ள விரும்புகிறது. அதனால்தான் ஆயிரக்கணக்கான மைல்கள் வலசைபோகும் தேசாந்திரித் தட்டான்கள் முதல் பறவைகளும், விலங்குகளும், மனிதர்களும் இன்று விரிந்து பரவி வாழ்கிறது. இவ்வாறு புலம்பெயர்தலில் உள்ள தேடல் மனநிறைவையும், புதிய வாழ்வையும் தரும். ஆன…
-
- 0 replies
- 755 views
-
-
இலங்கை: கருக்கலைப்பு சட்டம் பெண்களுக்கு வரமா? சாபமா? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionகோப்புப்படம் "ஒன்பது மாதங்கள் கஷ்டப்பட்டு குழந்தையை பிரசவித்தேன். அது கருவில் இருக்கும்போதே உயிர் பிழைக்க வைப்பது கஷ்டம் என மருத்துவர்கள் தெரிவித்துவிட்டார்கள். பிரசவித்தபின் குழந்தைக்கு பொருத்தியிருந்த கருவியை அகற்றப் போவதாகவும் கூறினார…
-
- 0 replies
- 755 views
-
-
பன்மைத்துவ கற்றலும் கற்பித்தலும் – இரா.சுலக்ஷன. மனிதர் அவர்தம் உடல் இயக்கமும், வாழ்வியல் இயக்கமும் கற்றல் – கற்பித்தல் ஆகிய செயற்பாடுகளின் அடிப்படையில் இடம்பெறும் நிகழ்வு தான் என்பது, தூண்டலுக்கு ஏற்ப துலங்கல் என்ற மனிதரின் அடிப்படை உடலியக்க செயற்பாட்டின் ஊடாக வெளிப்பட்டு நிற்கும் உண்மை நிலைப்பாடாகும். இந்த அடிப்படையில் நோக்கும்போது தூண்டல் – துலங்கல் என்ற இயல்பொத்த செயற்பாட்டில் கற்றல் – கற்பித்தல் ஆகிய செயல்முறைகளின் செல்வாக்கு நிலையினை அவதானிக்கலாம். தூண்டல் காரணி ஒன்றாக அமைகின்ற போதும், துலங்கல் என்பது அவரவர் அனுபவம் சார்ந்து, இயல்பு நிலை சார்ந்து, சூழல் சார்ந்து, பிறப்புரிமை சார்ந்து மாறுபட்டு அல்லது வேறுபட்டு அமையும் என்பதும் இயல்பான நிலைப்பாடாகும். …
-
- 0 replies
- 755 views
-
-
வாழ்க்கையில் அனைத்தையும் சமநிலையில் சமாளிப்பது எப்படி? நாம் வாழ்க்கையில் எவ்வளவோ பிரச்சனைகளையும், சவால்களையும் எதிர் நோக்கியிருக்கிறோம். அதேபோல் பல பாஸிட்டிவ்வான விஷயங்களையும் சந்தித்து இருக்கிறோம். இருந்தாலும், வெற்றிகளையும் நன்மைகளையும் கண்டு அளவுக்கு அதிகமாக சந்தோஷமாக இருக்காமலும், தோல்விகளையும் துன்பங்களையும் கண்டு மிகவும் துவண்டு போகாமல் இருக்கவும் நாம் கற்றிருக்கிறோமா, பழகியிருக்கிறோமா? இதுதான் நம் வாழ்க்கையில் முக்கியமான விஷயம். இன்பத்தையும் துன்பத்தையும் தோள்களில் போட்டுக் கொண்டு வாழ்க்கையை ஒரே சமநிலையில் கொண்டு செல்கிறோமா என்பதை நமக்கு நாமே அவ்வப்போது அலசி ஆராய்ந்து கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட ஒரு சில வழிமுறைகளை இப்போது நாம் பார்க்கலாம். முன் நோக்கிய…
-
- 3 replies
- 754 views
-
-
மாதவிடாய் விடுப்பும் சாத்தியப்பாடுகளும் - கனகலிங்கம் கோபிகிருஷ்ணா மாதவிடாய்க் காலத்தில், வேலைசெய்யும் பெண்களுக்கான விடுப்பை ஏற்பாடுகளைச் செய்வதற்கான வேண்டுகோள் விடுக்கப்பட்டால், அதை அமைச்சரவைப் பரிந்துரைப்பதற்குத் தயாராக இருப்பதாக, பெண்கள் விவகார அமைச்சர் சந்திராணி பண்டார, ஒரு வாரத்துக்கு முன்னர் தெரிவித்திருந்தார். சீனாவில் சில மாகாணங்களில் இருப்பதைப் போன்று, அதிகபட்சமாக இரண்டு நாள் விடுப்பை வழங்குவதற்கு ஆராய முடியுமெனவும் அவர் தெரிவித்திருந்தார். சில வாரங்களுக்கு முன்னதாக வெளியாகியிருந்த செய்தியின் அடிப்படையில், மாதவிடாய்க் காலத்தில் அதிகபட்சமாக ஒருநாள் விடுப்பை வழங்குவதற்கான முன்மொழிவொன்றை, …
-
- 3 replies
- 754 views
-
-
டேய் பங்காளி!, அந்த சானல் பாரேன் என்று ஒரு குறிப்பிட்ட டிவி சானல் பெயரை வாட்ஸ்அப் – இல் அனுப்பி இருந்தான் நண்பன். இரவு 11.45க்கு டிவி பாக்க சொல்றானே பையன்! என்று புத்தகத்தை மூடி வைத்துவிட்டு அவன் சொன்ன அந்த நிகழ்ச்சியை வைத்தேன். ஒரு இளம் வயது தொகுப்பாளினி முழுவதும் இரட்டை அர்த்தத்தில் பேசிக்கொண்டு இருந்தார்!. “என்னடா நம்ம ஊர் ஆடல் பாடல் நிகழ்ச்சியை விட ஆபாசமா இருக்கே!” அப்படி என்ன தான் நிகழ்ச்சி என்று பார்த்தால், குழந்தையின்மை பற்றிய சந்தேகங்கள் கேட்கும் நிகழ்ச்சி. அது சரி! என்று வேறு சானல்கள் வைத்தால் 90% தமிழ் தொலைக்காட்சியில் இரவு நேரக் காட்சியாக தாம்பத்தியம் தொடர்பான நிகழ்ச்சிகள்தான் அத்தனையும்! உச்ச கட்டமாய் ஒரு நிகழ்ச்சியின் தொகுப்பாளினி நிகழ்ச்சி முடியும்போது…
-
- 0 replies
- 752 views
-
-
இந்தத் தலைமுறை... என்ன மாதிரியான, மனோநிலையில் இருக்கிறார்கள் என்பதை... இதைவிட அழகாக யாராலும் சித்தரிக்க முடியாது.
-
- 2 replies
- 750 views
-
-
“தூக்க விவாகரத்து” உங்கள் உறவைப் பாதுகாக்கட்டும் February 20, 2021 — சீவகன் பூபாலரட்ணம் — இந்தக் கட்டுரையை ஆரம்பிப்பதே எனக்கு கொஞ்சம் சிரமமாகத்தான் இருந்தது. பிபிசி ஆங்கிலம் மற்றும் குட்ஹவுஸ்கீப்பிங்.கொம் ஆகிய ஊடகங்களை தழுவி இந்த கட்டுரையை எழுதுகிறேன். ஆனால், இதில் முக்கியமாக விவாதிக்கப்படும் “sleep divorce” என்னும் சொல்லுக்கு என்ன தமிழ் சொல்லை பயன்படுத்துவது என்பதுதான் எனக்கு சிக்கலாகியது. அதாவது இதனை தூக்க விவாகரத்து, நித்திரை விவாகரத்து என்று சொல்லலாம் என்று முடிவு செய்தேன். ஆனால், இதற்கு சரியான விளக்கத்தை தரக்கூடிய ஏதாவது வேறு தமிழ் சொல் இருந்தால் யாரும் பரிந்துரைக்கலாம். இப்போதைக்கு இந்தக் கட்டுரையில்“தூக்க விவாகரத்து” என்ற சொற்தொடரை ந…
-
- 0 replies
- 749 views
-
-
குழந்தைகளிடம் நல்ல பழக்கங்கள் வளர... இந்த சின்ன சின்ன தவறுகளை செய்யாதீர்கள் பெற்றோர்களே! ராஜவிபீஷிகா Parenting ( Photo by Juliane Liebermann on Unsplash ) சின்னச் சின்ன விஷயங்களின் மூலம் பெரிய மாற்றத்தை குழந்தைகளிடம் நாம் காண முடியும். எதையும், என்றும் குழந்தைகளிடம் கட்டாயப்படுத்தித் திணிக்க முடியாது என்பதை மனதில்கொள்ள வேண்டும். ``குழந்தைகளை `வழிக்குக் கொண்டு வருவது' எப்படி என்று பெற்றோரை கேட்டால், பெரும்பாலானவர்கள் `வாய்ப்பே இல்லைங்க' என்பார்கள். 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் தங்களின் 75% பழக்கவழக்கங்களை, தாங்கள் பார்க்கும் விஷயங்கள் மூலமாக மட்டுமே கற்றுக்கொள்கிறார்கள். எனவே, ஐந்து வயதுக்குள் அவர்களை செம்மைப்படுத்துவதன் ம…
-
- 0 replies
- 749 views
-
-
கடந்தும் நிற்கும் நினைவுகள்… ஒவ்வொரு முறையும் ஒரு வருடத்தைக் கடந்து போகும் போது, 'இந்த வருடத்தில் எனக்கு அது கிடைக்கவில்லையே, எனக்கு இது நடக்கவில்லையே' என்ற வருத்தம் எல்லோருக்கும் இருக்கும். இவ்வாறு நாம் சலிப்போடு கடந்துபோகும் ஒவ்வொரு வருடமும் ஒரு பாடம் தான். அத்தனை ஆண்டுகளும் அனுபவம் தான். மலை உச்சியில் நின்று பார்க்கும்போது ஊரின் மொத்த அழகும் தெரிவதுபோல, ஒரு வருடம் முடியும் போது அதைத் திரும்பிப் பார்த்தோம் என்றால் அதன் மொத்த அர்த்தமும் புரியும். கடந்த வருடத்தில் நாம் திரும்பி பார்க்க வேண்டிய தருணங்கள் பற்றி இங்கு பார்ப்போம். 1. கடந்த வருடத்தில் நீங்கள் சந்தித்த சில நல்ல மனிதர்கள் யாரென்று யோசித்து பார…
-
- 0 replies
- 747 views
-
-
-
இளிப்பியல் - ஜெயமோகன் September 7, 2020 ஒரு நாளில் எப்படியும் பதினைந்து இருபது ஏளனப்படங்கள் [மீம்ஸ்] எனக்கு வந்துவிடுகின்றன. ஒரு கேலிச்சித்திரத்தை [கார்ட்டூன்] உருவாக்குவது கடினம். அதை வரையவேண்டும், அதற்கு கலைஞன் வேண்டும். ஏளனப்படத்தை எவர் வேண்டுமென்றாலும் உருவாக்கலாம். அதற்கு மென்பொருட்களே உள்ளன. அவற்றை பரப்புவதும் எளிது. தீவிரமான ஒரு நிலைபாடு கொண்டிருந்தால்போதும், அதன் ஆதரவாளர்கள் அதை தலைக்கொண்டு பரப்புவார்கள். அது ஒருநாள் முதல் கூடிப்போனால் ஒருவாரம் வரை உலவி மறையும். வடிவேலு ஏளனப்படங்களின் நாயகன். அடுத்தபடியாக கவுண்டமணி. ஆரம்பத்தில் ஒரு மெல்லிய ஈடுபாடு இருந்தது. சிரிப்பதுமுண்டு. ஆனால் வரவர எரிச்சல் ஏற்படுகிறது. அனுப்புபவரை உடனே பிளாக் செய்துவ…
-
- 0 replies
- 746 views
-
-
-
-
இலங்கையில் இணைய வழிக்கல்வியிலுள்ள சவால்கள் இன்றைய இடர்காலச் சூழலில் மாணவர்கள் தொடர்ச்சியாகக் கல்வியினைக் கற்க முடியாமல் இடர்படுகின்றார். இச் சூழலில் கற்றல் கற்பித்தல் என்பது சவாலான விடயமாகவே காணப்படுகின்றது. இந்நிலையில் இலங்கையில் மாணவர்களைத் தொடர்சியாகக் கற்றலின்பால் வைத்து இருப்பதற்காக தேசியகல்வி நிறுவகமும் கல்வியமைச்சும் இணைந்து தொலைக்காட்சியூடாகக் கற்பித்தலை நடாத்துகின்றது. இதை தவிர மாகாணக்கல்வித் திணைக்களங்களும், வலயக்கல்வி அலுவலகங்களும், பாடசாலைகளும், தனியார் கல்விநிலையங்களும், தன்னார்வ நிறுவனங்களும் இணையவழிக்கற்றல், செயலட்டை, மாதிரிக்கற்பித்தற்காட்சிகள் என்பவற்றை நடாத்துகின்றன. இருந்தபோதிலும் இவற்றினை பயன்படுத்தல், தயாரித்தலில் பல்வேறுபட்ட சவால்கள் காணப…
-
- 0 replies
- 744 views
-
-
கனடாவின் ஆதி மனிதர்கள் தோன்றி ஏறத்தாழ 12,௦௦௦ ஆண்டுகள் இருந்திருக்கலாம் என்கிறது ஒரு ஆய்வு. அவர்கள் வாழ்வின் பெரும்பகுதி, கடுமையான சூழலில் கழிந்தாலும் கூட நீர், காற்று போன்ற வளங்களை மாசுபடுத்தாமல், நிலப்பரப்பை சேதப்படுத்தாமல், வீணாக வேட்டையாடி அழிக்காமல் வாழ்ந்தனர். அவர்கள் கூட்டம் கூட்டமாக சுய ஆளுமையுடன், மற்ற கூட்டத்தின் இறையாண்மைக்கு மதிப்பளித்தும் அங்கீகாரம் வழங்கியும் வாழ்ந்துள்ளனர். பிற்காலத்தில், அவர்களுக்குள் வாழ்க்கை முறை மற்றும் கலாச்சாரத்தில் ஒரு பொதுவான ஒற்றுமை மற்றும் ஆளுமை இருந்துள்ளது. அவர்கள் பயன்படுத்திய கருவிகள், உடைகள், குடியிருப்பு, மற்றும் உடைகள் போன்றவற்றில் இதனைக் காண முடியும். படம் – kladata.com பெரும்பாலான கனடாவின் ஆதிவாசிகள் வேட்டைய…
-
- 0 replies
- 743 views
-
-
யாராவது உங்களுக்கு தெரியாதவர்கள் அல்லது புதியவர்கள்(strangers) உங்களுக்கு உதவினார்களா? இச்சம்பவம் பல வருடங்களுக்கு முன் நிகழ்ந்தது.காலை 5 மணிக்கு வேலை.4.30 அளவில் புறப்பட்டு போகும் வழியில் நண்பர் ஒருவரையும் ஏற்றிக்கொண்டு தான் வேலைக்கு செல்வேன்.அன்று பொலிஸ் என்னை மறித்தார்.எங்கே இந்த நேரம் போகிறாய் எனக்கேட்டார்."வேலைக்கு என சொல்லி வேலை அடையாள அட்டையை (badge)காட்டினேன்.சரி வாகனச்சாரதி அனுமதிப்பத்திரத்தை( Driving licence) எடு என்றார்.என்னிடம் இல்லை அனுமதி பத்திரம் மட்டுமே உண்டென்றும் கூறினேன்.அவர் சொன்னார் உன்னால் வாகனத்தை ஓட்ட முடியாதே இந்த பத்திரத்துடன்(permit) என்றார்.திடீரென காரின் உள்ளுக்குள் நோட்டமிட்டார்.பின்னுக்கு இருக்கும் பாக்கில்(school bag) என்ன என்றார்.பு…
-
- 3 replies
- 743 views
-
-
'90 சதவிகித பெண்கள் தங்கள் உடலை வெறுக்கின்றனர்'- ஏன்? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க '90 சதவிகித பெண்கள் தங்கள் உடலை வெறுக்கின்றனர்', உடல் மீதான பெண்களின் சுயவெறுப்புக்கு அவர்களுடைய தாயின் பொறுப்பும் முக்கியமானது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES "13 வயதாக இருந்தபோது என்னை பார்ப்பவர்கள் வயதுக்கு மீறிய வளர்ச்சி என்று சொல்வார்கள். அப்போது 5.6 அடி உயரம் இருந்த என்னைப் பற்ற…
-
- 0 replies
- 742 views
-
-
தமிழர்களின் மாறாத ரசனை - வண்ணநிலவன் தொலைக்காட்சி, சினிமாவின் குறுகிய வடிவம்தான். அதனால்தான் அதைச் சின்னத்திரை என்கிறார்கள். ‘தகவல் ஒளிபரப்பு’ என்று வரும்போது, தொலைக்காட்சி, சினிமாவைவிடப் பன்மடங்கு பயனுள்ளது. சினிமாவை நாம் வெறும் கதை சொல்லும் ஊடகமாகத்தான் பயன்படுத்தி வருகிறோம். சமூகத்துக்குத் தேவையான பயனுள்ள தகவல்கள் சினிமாவில் அபூர்வமாகத்தான் பரிமாறப்படுகின்றன. ஆனால், தொலைக்காட்சி அப்படியல்ல. அது நிஜமான தகவல் ஒளிபரப்பு ஊடகம். இதைத்தான் பல்வேறு விதமான செய்திச் சேனல்கள், டிஸ்கவரி, ஹிஸ்டரி, நேஷ்னல் ஜியோகிராபி, அனிமல் பிளானட் முதலான பல்வேறு, சமூகத்துக்குத் தேவையான கருத்துக்களைச் சொல்லும் சேனல்களும் உறுதிசெய்கின்றன. மக்களுக்குக் கற்றுத் தருவதில் சினிமாவைவிட மேற்கண…
-
- 0 replies
- 742 views
-
-
'அம்பானியின் வறுமை' என்னும் தலைப்பில் 'அருஞ்சொல்' இதழில் அதன் ஆசிரியர் சமஸ் இன்று எழுதியிருக்கும் கட்டுரை இது. அம்பானிக்கு மட்டும் இல்லை, எங்களுக்கும் கூட இது பொருத்தமே. ****************** அம்பானியின் வறுமை சமஸ் 20 Mar 2024 ஊரிலிருந்து சென்னைக்கு வந்த பிறகு நீங்கள் இழந்ததாக நினைப்பது எதுவும் உண்டா? இப்படி யாராவது கேட்கும்போதெல்லாம் ஒரு விஷயம் தோன்றி மறையும். ஊர்ப் பக்கக் கல்யாணச் சாப்பாடு! எது நாம் வாழும் ஊரோ அதுவே நம் சொந்த ஊர் என்று எண்ணுபவன் நான். தீபாவளி, பொங்கல் என்றால் ஊருக்குச் செல்வது, ஊரில் திருவிழா என்றால் மூட்டை கட்டிக்கொண்டு கிளம்புவது, வீட்டில் ஏதும் விசேஷ நிகழ்வு என்றால் அதைப் பிறந்த ஊரில் திட்டமிடுவது… இதையெல்லாம் முற்றிலுமாக வெறுப்…
-
- 1 reply
- 741 views
- 1 follower
-
-
இலங்கையின் ஹார்வி வைன்ஸ்டீன்கள் யார்? உலகில் இடம்பெறும் விடயங்களைப் பற்றி, சிறியளவுக்கும் ஆர்வமில்லாதவராக இருந்தாலொழிய, ஐக்கிய அமெரிக்காவில் அண்மைக்காலமாக முன்வைக்கப்பட்டுவரும் வன்புணர்வு, பாலியல் குற்றச்சாட்டுகள் ஆகியன பற்றி அறிந்திருப்பீர்கள். மிகப்பெரிய தலைகள் எல்லாம், இக்குற்றச்சாட்டுகள் காரணமாக உருண்டுகொண்டிருக்கின்றன. உலகப் புகழ்பெற்ற திரைப்படத் தயாரிப்பாளரான ஹார்வி வைன்ஸ்டீன் தொடர்பான ஊடக அறிக்கையைத் தொடர்ந்து தான், இவ்விவகாரம் மிகவும் அதிகளவில் கவனம்பெற்றது. வைன்ஸ்டீனைத் தொடர்ந்து, இன்னும் பல திரைப்பட நட்சத்திரங்கள் சிக்கிக் கொண்டனர். அவர்களின் பின்னர், அலபாமாவின் அடுத்த செனட்டராக வருவதற்காகப் போட…
-
- 0 replies
- 741 views
-
-
#NoMoreStress "கல்யாணத்துக்குப் பிறகு மனைவியை சிவன், பார்வதி மாதிரி நம்மோட பாதியா நெனைச்சி மதிப்புக்கொடுக்கணும்னு ஒவ்வொரு ஆம்பளையும் நினைக்க ஆரம்பிச்சா குடும்பத்துக்குள்ள சண்டை, சச்சரவு இல்லாமப் போயிரும்!" தம்பதியருக்குள் சிறு கருத்து வேறுபாடு ஏற்பட்டால்கூட விவாகரத்து பத்திரம் வாசிப்பது மிகச் சாதாரணமாகிவிட்டது. ஏன், திருமணம் முடிந்த ஒரு வாரத்துக்குள்ளேயே தம்பதிக்குள் ஒத்துப்போகாவிட்டால் பிரிந்துவிடுவது என்று பரஸ்பரம் பேசி முடிவு செய்வதும் அதிகரித்து வருகிறது. தம்பதிக்குள் பெருக்கெடுக்க வேண்டிய காதல், அன்பு, பாசம், நேசம், புரிந்து கொள்ளும் பக்குவம், வெளிப்படுத்தவேண்டிய அந்நியோன்யம், விட்டுக்கொடுக்கும் பண்பு குறித்த அக்கறை இல்லாததால் இனிக்க வேண்டிய இல்ல…
-
- 1 reply
- 740 views
-
-
வாழ்க்கையில் சிங்கிளாக வாழ்வது பலமா, பலவீனமா? படத்தின் காப்புரிமைJUSTIN SETTERFIELD ஓர் உறவுமுறையில் இல்லாமல் தனித்து இருப்பதால் அதிக நன்மைகள் இருப்பதாக கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த பெல்லா டிபோலோ என்ற ஆராய்ச்சியாளர் கண்டறிந்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள கட்டுரையில், நாம் நினைப்பதைவிட ஓர் உறவுமுறையில் இல்லாமல் தனியாக இருப்பதால் பல நன்மைகள் இருப்பதாகவும், அது அந்த நபருக்கு மட்டுமின்றி அவர் சார்ந்த சமூகத்திற்கும் நன்மைகள் இருப்பதாகவும் அதில் அவர் கூறியுள்ளார். படத்தின் காப்புரிமைDAVID SILVERMAN பெல்லா டிபோலோ ஆராய்ச்சியின் முக்கிய வெளிப்பாடுகள் சிலவற்றைப் பார்க்கலாம்.ள் தனித்து இருப்பதா…
-
- 0 replies
- 739 views
-
-
A : ஏங்க இந்த ஏரியால இனியவன்-னு ஒருத்தர், அவரு வீடு எங்க இருக்கு-னு தெரியுமா? B : இல்லைங்க தெரியாது A : அவரு பிரபல எழுத்தாளருங்க,நிறைய விருதுலாம் வாங்கி இருக்காருங்க B : அப்படியா! தெரியலைங்களே A : (தயங்கியபடி) அவருக்கு கூட கொஞ்சம் உடம்பு சரியில்ல B : அட அந்த கால் கொஞ்சம்,நடக்க முடியாம தடுமாறி நடப்பாரே அவர சொல்லுறீங்களா? A : அவர்தான் B : இத முதல்லயே சொல்ல கூடாதா.... இப்புடியே நேரா போய் வலது பக்கம் திரும்புனீங்க-னா இரண்டாவது வீடு. இந்த நிகழ்வில் இருந்து என்ன புரிந்து கொண்டீர்கள்? அவர் சக மனிதரை அடையாளப்படுத்திய விதம் சரியா? இப்படித்தான் இன்று பெரும்பாலான மக்கள் சக மனிதரின் குறையை சொல்லியே அவர்களை அடையாளப்படுத்துகிறார்கள்.சிலர் அறிந்தும்,சிலர் அறியாமலு…
-
- 0 replies
- 739 views
-