சமூகச் சாளரம்
சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்
சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
2253 topics in this forum
-
கடந்து வந்த பாதையினை நினைத்து பார்க்கிறேன். வழக்கம் போலவே மிக ஆவலுடனும் எதிர்பார்ப்புடனும் வருடம் 2022 ஆரம்பித்திருந்தது . கொரோனாவின் தாக்கமும் நாட்டில் இருந்தது . சித்திரை யில் சற்று தணிந்து ....மெல்லமெல்ல மறைய தொடங்கியது. முக கவசம் சற்று விலகியது இருப்பினும் சிலர் தற்பாதுகாப்புக்காக அணியத்தொடங்கினர் . வாழ்க்கை தன போக்கில் சென்றது . வீட்டுக் காரர் பென்சனியர் ஆனார். அவரது பொழுது பேரப்பிள்ளைகளை பள்ளிக்கு கூட்டி செல்வதும் வருவது ஆக, .மாலை வேளை செல்லப்பிராணியுடனும் பேரப்பிள்ளை களுடனும் சைக்கிள் ஒடடமும் உலாத்துமாக இருந்தது. ஆவணியில் என் மூழங்ககாலுக்கான சத்திர சிகிச்சை திகதி நிர்ணயம் செய்யப்பட்டு நல்லபடியாக முடிந்தது. நானும் வலிகள் பல கடந்து ...மீண்டு தற்போது நலமா…
-
- 0 replies
- 724 views
- 1 follower
-
-
30 ஆண்டுகளில் இந்தியாவில் 1 கோடி கருக்கலைப்பு: கருவுக்கு வாழ்வுரிமை உண்டா? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES பாலியல் வன்கொடுமை வழக்கு ஒன்றில் பாதிக்கப்பட்ட பெண் கருவுற்றிருந்த நிலையில், அந்த பெண்ணின் கர்ப்பத்தை கலைக்க மும்பை உயர் நீதிமன்றம் அனுமதி மறுத்துவிட்டது. பாலியல் வன்புணர்வால் பாதிக்கப்பட்ட 18 வயது பெண்ணின் கரு 27 வாரங்கள் வளர்ந்துவிட்ட நிலை…
-
- 0 replies
- 724 views
-
-
எச்.எம்.எம்.பர்ஸான் வெளியில் சென்று வந்த கணவன், வீட்டுக்குள் வரும் போது கைகளைக் கழுவிவிட்டு உள்ளே வரும்படி கூறிய மனைவி மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவமொன்று, நேற்று (16) இரவு இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, “வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஓட்டமாவடி - மீராவோடை பகுதியிலுள்ள நபரொருவர், வெளியில் சென்று மீண்டும் தன்னுடைய வீட்டுக்குள் வந்துள்ளார். அப்போது அவருடைய மனைவி, நாட்டில் கொரோனா தொற்று அதிகரிப்பதாகவும் கைகளைக் கழுவுமாறும் அறிவுறுத்துதல்கள் வழங்கியுள்ளார். இதனையடுத்து ஆத்திரம் அடைந்த கணவன், மனைவி மீது தாக்குதலை நடத்தியுள்ளார். தாக்குதலில் காயமடைந்த மனைவி, வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரு…
-
- 0 replies
- 724 views
-
-
இது கோலார் தங்க வயலில் பிறந்து வளர்ந்த தமிழரான பெஜவாடா வில்சன் அவர்களின் பேட்டி. 'அருஞ்சொல்' இதழிற்காக ரா. செந்திகுமார் வில்சனை பேட்டி எடுத்திருந்தார். கைகளால் மலம் அள்ளும் துப்புரவுத் தொழிலாள குடும்பம் ஒன்றில் பிறந்த மதிப்புக்குரிய வில்சன் அவர்களுடனான இந்த உரையாடல் அறியாத பல வேதனையான நிகழ்வுகளையும், சமூகக் கொடுமைகளையும் வெளிச்சத்திற்கு எடுத்து வருகின்றது. பேட்டியில் இருக்கும் ஒரு பகுதி: "மனிதர்களுடைய மலத்தை இன்னொரு சக மனிதன் கையால் எடுப்பதும், சுமப்பதும் என்ன மாதிரியான வேலை என்று ஆத்திரமும், அழுகையும் வந்தது. ஆனால், எங்கள் துப்புரவுக் குடியிருப்பில் இருந்தவர்கள் எல்லாம் மகிழ்ச்சியாகவே இருக்கிறார்கள். காலை 6.00 மணிக்கு வேலையைத் தொடங்கி பகல் 10.30 மணி அளவில…
-
-
- 7 replies
- 722 views
- 1 follower
-
-
‘முகவரி’க்கு உதவிக்கரம் நீட்டிய முக்கியப் பிரமுகர்கள் மற்றும் ‘முகவரி’ அமைப்பின் மூலம் உயர்கல்வி பயிலும் மாணவர்கள். திறமையும் ஆர்வமும் இருந்தும் வறுமையின் காரணத்தால் உயர் கல்விக்குப் போகமுடியாத நிலையில் இருக்கும் மாணவர்களுக்கு ஏற்றம் தரும் ஏணியாய் நிற்கிறது சென்னை போரூரில் உள்ள ‘முகவரி’ அமைப்பு. சேலம் ஆத்தூரைச் சேர்ந்த இளைஞர் கே.ரமேஷ். பட்டய கணக்கர் படிப்பைத் தொடரும் இவர் தான் ஏழை மாணவர்களுக்காக ‘முகவரி’யை உருவாக்கியவர். “எங்கள் ஊரைச் சேர்ந்த விவசாய கூலித் தொழிலாளியின் மகள் கஸ்தூரிக்கு மருத்துவம் படிக்க வேண்டும் என்று ஆசை. 2003-ல் ‘ப்ளஸ் டூ’ தேர்வில் நல்ல மதிப்பெண்ணும் எடுத்திருந்தார். ஆனால், குடும்ப வறுமை அந்தப் பெண்ணின் லட்சியத்தைத் தகர்த்து…
-
- 1 reply
- 721 views
-
-
கருத்தடை மாத்திரைகளைப் பயன்படுத்தும் பெண்கள் அதிக நாள் உயிர்வாழ்வதாக பிரிட்டனில் நடந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. பொதுவாக கருத்தடை மாத்திரைகள் பயன்படுத்துவதால் கர்ப்பப்பை புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் பெண்களைத் தாக்கும் என்று பரவலான எண்ணம் உள்ளது. ஆனால் பிரிட்டனிலுள்ள ராயல் காலேஜ் ஆஃப் ஜெனரல் பிசிஷியன்ஸ் நடத்திய ஆய்வில் கருத்தடை மாத்திரையை பயன்படுத்துவதால் அதிக நாட்கள் பெண்களால் உயிர்வாழ முடியும் என்பது தெரியவந்துள்ளது. இந்த கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியர் பிலிப் ஹானஃபோர்ட் இதுகுறித்து கூறியதாவது: 40 ஆண்டுகளுக்கும் மேலாக 46 ஆயிரம் பிரிட்டன் பெண்களிடம் இந்த ஆய்வை நடத்தினோம். கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்தினால் பெண்கள் நீண்ட நாட்கள் உயிர் வாழ முடியும் என்பது இ…
-
- 0 replies
- 721 views
-
-
-
ஒரு நிமிடம் கூட பேஸ்புக் பார்க்காமல் இருக்க முடியவில்லையா? நீங்கள் சமூக வலைதளங்களில், அதிலும் முக்கியமாக ஃபேஸ் புக்கில் தீவிரமாக இயங்குபவர்களா? உங்களுக்குத் தான் இந்த பதிவு. தயவு செய்து சிறிது நேரம் ஒதுக்கி முழுவதும் படித்துவிடுங்கள். நீங்கள் எழுதிய ஃபேஸ்புக் பதிவுகளை அடிக்கடி படித்தும், அதற்கு என்ன என்ன பதில்கள், விருப்பக் குறிகள் வந்துள்ளன என்பதை எல்லாம் அடிக்கடி பார்ப்பது, வண்டி ஓட்டும் போது, அலுவலக கூட்டத்தில், அல்லது பயணத்தில் என எப்போதும் எங்கும் கையில் மொபைலுடன் இருக்கிறீர்கள் எனில் உங்களுக்கே தெரியாமல் சில பிரச்னைகளை நீங்கள் விரைவில் சந்திக்கக் கூடும். இதன…
-
- 0 replies
- 719 views
-
-
Published By: DIGITAL DESK 3 15 SEP, 2023 | 04:38 PM ஆண்கள் உடலால் வலிமையானவர்கள் என்றும் ஆண்கள் சிங்கம் போன்றவர்கள் என்றும் உவமைகளால் அலங்கரித்து அலங்கரித்து அவர்களின் உணர்வுகள் இலை மறை காயாகவே காணாமல் போகச் செய்கிறது. அதேபோல் தான் ஆண்கள் தினமும் இலைமறை காயாகவேதான் ஒவ்வொரு வருடமும் தெரியப்படாமல் கலந்து செல்கின்றது. ஆண்களுக்கு நிகர் பெண்கள் பெண்களுக்கு நிகர் ஆண்கள் என்று கூவல்கள் இருந்தாலும் அவை அறைக்கூவல்களாகவே ஒழித்து மறைகின்றன மகளிர் தினம் கொண்டாடப்படும் அளவிற்கு ஆண்கள் தினம் பேசப்படுவது கூட இல்லை. சமூக வலைத்தளங்களாக இருக்கலாம் தொழில்துறை நிறுவனங்களாக இருக்கலாம் இவ்வளவு ஏன் ஒரு சாதாரண அடிப்படை அழகான குடும்பத்தில் கூட இரு…
-
- 1 reply
- 718 views
- 1 follower
-
-
இளமைக்கும் முதுமைக்கும் இறைவன் செயலி! ஸ்மார்ட்போனுடன் தொடங்குகிறது 78 வயதான மு.ரகுராமன் மற்றும் அவரது மனைவி சுலோச்சனாவின் (68) காலைப் பொழுதுகள். Image captionசெயலியில் தோன்றும் தேவார பாடல் புதுக்கோட்டையை சேர்ந்த இந்த தம்பதி தற்போது தங்களது இரண்டு மகன்களுடன் சென்னையில் வசித்து வருகிறார்கள். தேவாரம், பஜனை பாடல்கள் என பல ஆன்மீக பாடல்கள் அடங்கிய செயலிகளை (ஆப்) போனில் டவுன்லோட் செய்து கேட்பதுதான் பொழுதுபோக்கு. காலத்திற்கு ஏற்ற தொழில்நுட்பத்தை கற்றுக்கொள்ளவேண்டும் என்பதுதான் இவர்கள் சொல்லும் அனுபவப்பாடம். செயலிகளின் பயன்பாடு பற்றி பேசும் சுலோச்சனா, ''எங்களது இளவயதில் ராதா கல்யாணம், சீதா கல்யாணம் என ஒரு நாள் தொடங…
-
- 0 replies
- 716 views
-
-
சமீபத்தில் "உங்கள் குழாயில்"(Youtube) தேடியபோது மனதை தொட்ட குறும்படம் இது.. ! ஏற்கனவே நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? "கால்நடையா போகிறேன்.. கஞ்சன் கிட்டே கேட்கிறேன்.. உழைச்சு திங்க வயசில்லே.. உசிரை மாய்க்க மனசில்லே.. என்ன மட்டும் மறந்திட்டியே.. பிச்சைக்கார கடவுளே.." http://youtu.be/oPZTjdzS1-s
-
- 0 replies
- 715 views
-
-
நெல்சன் மண்டேலாவின், ஒரு நிறவெறி அனுபவம் வக்கீலாக பட்டத்தினைப் பெற்றுக் கொண்ட மண்டேலா ஆசை ஆசையாய் புதிய கார் ஒன்றினை வாங்கி இருந்தார். கோர்ட், சூட் போட்டுக் கொண்டு சும்மா ஊர் சுத்தி வர புறப்பட்டார். நீண்ட நேரம் ஓடியவர், பெற்றோல் தீர்வதனைக் கவனிக்க வில்லை. நகரத்துக்கு வெளியே கார் நின்று விட்டது. பெற்றோல் கானை தூக்கிக் கொண்டு சில மைல்கள் நடந்து ஒரு வீடு ஒன்றினைத் தட்டி, கதவினை திறந்த வெள்ளையரிடம் பெற்றோல் கேட்டார். வெள்ளையர், மேலும், கீழும் பார்த்து விட்டு, கதவினை அறைந்து சாத்தினார். அப்போது தான் செய்த தவறு புரிந்தது மண்டேலாவுக்கு. மேலும் சில மைல்கள் நடந்து இன்னுமொரு வீட்டினைத் தட்டினார். இம்முறை மிகவும் உசாராக, கதவினை திறந்த வெள…
-
- 0 replies
- 714 views
-
-
-
- 1 reply
- 712 views
-
-
இன்று ஜெயமோகன் அவர்களின் தளத்தில் இந்தக் கட்டுரை இருந்தது. ***** மையங்களால் அழித்தல்- ராமர்கோயில் பற்றி. March 14, 2024 வரலாறு முழுக்க மாபெரும் சுவரெழுத்துபோலத் தெரிவதும், ஆனால் அதேசமயம் சாமானியர்களால் புரிந்துகொள்ளவே முடியாததுமான ஒரு கருத்து உண்டு. ‘வலுவான மையம் கொண்ட அமைப்புகள் மிக எளிதில் சரிவடையும்‘ என்பதுதான் அது. ஓர் அமைப்பு வலிமையாகவும், நீடித்ததாகவும் இருக்கவேண்டும் என்றால் அதற்கு மிக வலிமையான மையம் தேவை என சாமானியர் நம்புகிறார்கள். ஆகவே அமைப்பை உருவாக்கும்போதே மையத்தை உருவாக்குகிறார்கள். மையத்தை வலுவாக்கிக்கொண்டே செல்கிறார்கள். அந்த அமைப்பு வலுவிழக்கும் என்று தோன்றினால் அஞ்சி மையத்தை மேலும் மேலும் அழுத்தமானதாக ஆக்குகிறார்கள். அந்த அமைப்பு ஒட்டுமொ…
-
- 0 replies
- 711 views
-
-
மும்பையில் இருந்த காலத்தில் சிவாஜி பார்க் கடற்கரைக்கு நாயுடன் ஜாக்கிங் செல்வது என் வழக்கம். அங்குத் தான் அந்த பையாஜி அறிமுகம். பொதுவாக உ.பி., பிஹார் உள்ளிட்ட வட இந்தியர்களைப் பையாஜி என்று அழைப்பது ஒரு வழக்கம். அவர் ஒரு பானிபூரி வியாபாரி. கடற்கரையில் கடை போட்டிருந்தார். கடை என்றால் நீங்கள் நினைப்பதுபோல் அல்ல.. ஒரு நீளமான கூடை. அதன் மேல் ஒரு பெட்டி வைத்து உள்ளுக்குள் பானிப்பூரி ஐட்டங்கள் இருக்கும். வீடு திரும்பும் போது கடையை முதுகில் கட்டி கொண்டுவந்துவிடுவார். அவ்வளவு தான் அந்தக் கடை. சிலமாதங்களாக அவர் கடை போடும் இடம் வெறுமையாக இருந்தது. ``ஊருக்கு போய்ருப்பார் போல..’’ என்று நினைத்திருந்தேன். ஒரு நாள் பையாஜியை தெரிந்த இன்னொரு நண்பரை பார்த்தபோது விசாரித்தேன். ``எனக்கும்…
-
- 3 replies
- 711 views
-
-
குழந்தைகளுக்கு யாரும் பயிற்றுவிச்சதா தெரியல்ல. நீங்கள் கைகளை நீட்டினாலே போதும்.. ஓடி வந்து உங்களிடம் சரணடைந்து விடுவார்கள். அதேபோல்.. அவர்களுக்கும் ஏதாவது தேவைன்னா.. கையை நீட்டி.. உங்களின் மூளையை துண்டித் துலங்கச் செய்துவிடுகின்றனர். உங்கள் மனதை கொள்ளை அடித்து விடுகின்றனர். உங்களுக்கு குழந்தைகளின் எச்செயல்கள் அவர்கள் மீது.. எல்லா வேலையையும் விட்டிட்டு.. கவனம் செலுத்தனும்.. அல்லது அவர்களின் செயலுக்கு நிச்சயம் ஏதாவது அவங்க மகிழும் படி செய்யனும் என்று தோன்றச் செய்யுது...?! நான் நேற்றைய தினம்.. ஒரு உறவினரின் வீட்டுக்கு அவசர அலுவலா போயிருந்தன். அங்கு ஒரு 2/3 வயசு இருக்கும். சுட்டிப் பொண்ணு. அவங்க வீட்ட போனதில இருந்து அவா என்னைப் பார்த்துக் கொண்டே நிண்டா. ஆனால் …
-
- 2 replies
- 711 views
-
-
கொரோன தாண்டவமாடிய காலத்தில் நிறைய உதவி தேவைப்படுவோருக்கு உதவி செய்த தொண்டு நிறுவனம் . வெளிநாட்டு உதவியுடன் மக்களை பட்டியினியில் இருந்து காத்தவர்கள். தற்போதும் செய்து கொண்டு இருந்தவர்கள் இவர்களுக்கு குரல் கொடுப்பது அவசியம்.
-
- 2 replies
- 711 views
-
-
சிறுவயதில் இருந்தே சிலர் நண்பர்களாக இருப்பார்கள். திடீரென்று ஒருநாள் இருவருக்கும் இடையே காதலாக மாறியிருக்கும். ஆனால் இருவரும் அதை வெளிப்படுத்திக் கொள்ள தயங்குவார்கள். எப்படி சொல்வது என்ன நினைப்பானோ என்று ஒருவித அச்ச உணர்வு ஏற்படும். நண்பர்களாக இருக்கும் இருவருக்குள் காதல் ஏற்படுவது இயல்புதான். அதை தகுந்த தருணம் பார்த்து தெரிவித்தால் வெற்றியாகும் என்கின்றனர் நிபுணர்கள். அவர்கள் கூறும் ஆலோசனைகளை படியுங்களேன். என்னதான் நண்பர்களாக இருந்தாலும் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே ஏற்படும் நெருக்கம் ஒரு ரசாயான மாற்றத்தை ஏற்படுத்தும். அடிக்கடி மிக அருகருகே இருக்க நேரிடுவதால் நட்பானது காதலாக கனியும். உடனே சட்டென்று காதலை வெளிப்படுத்த வேண்டாம். நேரம் பார்த்து எதிராளிக்கும் அந்த உணர்வ…
-
- 0 replies
- 710 views
-
-
உளவியல் பாதிப்புகளை பொருட்படுத்தத் தவறினால் அது சமூகத்திலும் குடும்பங்களிலும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும்! நேர்காணல் – ஆன் (உளவியலாளர்) உளவளத்துறையில் கற்றுள்ள ஆன், அதன்மூலம் சேவைகளைச் செய்ய விரும்புகிறார். ஒரு பெண் உளவியலாளரான இவர் யுத்தத்தினால் பாதிப்படைந்த மக்களுக்கும் அந்தப் பிரதேசங்களுக்கும் சேவையாற்றுவதே தன்னுடைய இன்றைய விருப்பம் என்கிறார் . உளவியலார் “ஆனு”டன் உளவளத்துணை, போரின் பின்னரான அதன் தேவைகள், இந்தச் சேவைகளைச் செய்வதில் உள்ள பிரச்சினைகள், உளவளத்தினால் கிடைக்கும் பெறுபேறுகள் போன்றவற்றைப் பற்றிப் பேசினேன். இந்த நேர்காணல் கடந்த ஓகஸ்ற் மாதம் கொழும்பு ஜானகி ஹொட்டேலில் செய்யப்பட்டது. கூடவே சக ஊடக நண்பர்கள் ந. பரமேஸ்வரன் மற்றும் சு.சிறிகுமரன் ஆகியோர் உட…
-
- 0 replies
- 707 views
-
-
குழந்தைகளுக்கான மனோவியல் ஆலோசகர் ஒருவரைச் சந்திக்க நேர்ந்தது. யதேச்சையான சந்திப்பு இல்லை. நண்பர் ஒருவர் ஆலோசகரைப் பற்றிச் சொல்லியிருந்தார். வெகு காலமாகவே இந்த சப்ஜெக்டில் எனக்கு குழப்பம்தான். அதுவும் இந்த ஃபேஸ்புக் வந்த பிறகு எக்கச்சக்கம். முந்தைய தலைமுறையினர் தமது பிள்ளைகளுக்காக இந்தத் தலைமுறையினர் அளவுக்கு excite ஆகவில்லையென்றுதான் நினைக்கிறேன். ‘என் மகன் அதைச் செய்கிறான்; என் மகள் அறிவாளியாக இருக்கிறாள்’ என்று இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி அடுத்தவர்களை பதற்றமடையச் செய்யவில்லை. அப்படியே அறிவாளியாகவும், திறமையாளனாகவும் இருந்தாலும் கூட அதை அப்பட்டமாக வெளியில் பேசியதில்லை. ஆனால் நம் தலைமுறை மாறிவிட்டது. தம் மகன் ஒன்றுக்கடிப்பதைக் கூட படம் எடுத்து போட்டுவிடுகிறார்கள்…
-
- 0 replies
- 707 views
-
-
சாதிய விடுதலைக்கான முன்நிபந்தனை? மீராபாரதி லண்டனில் 2008 ஆண்டு பிப்ரவரி மாதம் 16 - 17 தேதிகளில் நடைபெறவுள்ள இரண்டாவது தலித் மாநாட்டிற்கான இந்த கட்டுரை எழுதப்படுகின்றது. பொருளாதார காரணங்களினால் மாநாட்டில் நேரடியான பங்குபெற முடியாமையினால் இக்கட்டுரை மாநாட்டிற்கும் மற்றும் பிற சஞ்சிகைகளுக்கும் அனுப்பப்படுகின்றது. சுமூக விடுதலைப் போராட்டமோ அல்லது தேசிய விடுதலைப் போராட்டமோ சாதியின் பெயரால் அடக்கப்பட்ட மக்களுக்கு எந்தவகையிலும் விடுதலையைப் பெற்றுத்தரப் போவதில்லை. இந்த நிலையில் இன்று நடைபெறும் ஆயுதங்தாங்கிய தேசிய விடுதலைப் போராட்டம் கடைசிவரை சாதி விடுதலையை முன்னெடுத்து விடுவிக்கும் என்பதற்கான எந்த சாத்தியப்பாடுகளும் இல்லை. தேசிய விடுதலையையே பெற்றுத்தராது விடப்போகும்…
-
- 0 replies
- 707 views
-
-
கனடாவில் அதிகரிக்கும் கருணைக் கொலைகள்! கனேடிய அரசாங்கத்தின் புதிய அரவுகளின்படி, கருணைக் கொலை அல்லது மருத்துவ உதவியினால் உயிரிழப்வர்களின் எண்ணிக்கையானது கனடாவில் அதிகரித்து வருகின்றது. கருணைக் கொலையானது கனடாவில் கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டமாக்கப்பட்டது. 2023 ஆம் ஆண்டில் மாத்திரம் சுமார் 15,300 பேர் இறப்பதில் மருத்துவ உதவி பெற்றதாகக் காட்டும் தரவுகளை புதன்கிழமை கனடாவின் சுகாதார பிரிவு வெளியிட்டது. இது கனடாவில் கடந்த ஆண்டு பதிவான மொத்த இறப்புகளில் 4.7 சதவீதத்தை குறிக்கிறது. இவர்களில் பெரும்பாலானவர்கள் சராசரியாக 77 வயதுக்கும் அதிகமானவர்கள். அவர்களில் சுமார் 96 சதவீதமானோர் புற்றுநோய் போன்ற கடுமையான மருத்துவ நோயினால் பாதிக்கப்படவர்கள் ஆவர். …
-
- 0 replies
- 706 views
-
-
தற் காலத்தில் எங்கும் விழாக்கள் நடைபெறுவதனால் இதை இங்குஎழுதுகின்றேன் மனம் அமைதியடைய வேண்டும் என்பதற்காகவே ஆலயம் செல்கினஈறோம். ஆனால் சிலர் ஆலயங்களிற்கு வரும்போது ஒரு திருமண வீட்டிற்கு போகின்றவர்கள் போலவே வருகின்றார்கள். அவ்வாறு வந்தவர்களில் சிலர் பிராத்தனை நடைபெறும் போதெல்லாம் கதைத்துக்கொண்டு நிற்கின்றார்கள். இதை பார்க்கும் போது ஆலயம் செல்வதன் நோக்கம் கேள்விக் குறியாகின்றது. வருங்கால சந்ததியினருக்கு இவ் நிலமை ஒரு பிழையான அவிப்பிராயதிதை ஏற்படுத்தாதா. உண்மையாகவே ஆலயம் போய் தம் மனக்கவலைகளை இறைவனிடம் கூறி வழிபாடு செய்பவர்களின் நிலை
-
- 0 replies
- 705 views
-
-
வேலை உங்களை எரிக்க அனுமதிக்காதீர்கள்! ஸ்ரீதர் சுப்ரமணியம் இங்கிலாந்தில் பணிபுரிந்தபோது எங்கள் டீமில் டிம்* என்று ஒருவர் இருந்தார். நன்றாக வேலை செய்துகொண்டிருந்தவர் திடீரென்று சொதப்ப ஆரம்பித்தார். யுஐ டிசைனராக இருந்த அவரிடம் இருந்து, டிசைன்கள் அரைகுறைத் தரத்துடன் வர ஆரம்பித்தன. ஏதாவது கமென்ட் சொன்னால் அதை வைத்து ரொம்ப மன அழுத்தத்துக்கு ஆளாகிவிடுவார். "என்னால் இவ்வளவுதான் முடியும் ஸ்ரீ" என்று சிடுசிடுப்பார். ரொம்ப அழுத்திக் கேட்டால், கோபக் கணையுடன் எதிர்மறை கமென்ட்டுகள் பாய்ந்து வரும். ஒருகட்டத்தில் இந்த ஆளை வேலையை விட்டுத் தூக்கிவிட வேண்டியதுதான் என்கிற முடிவுக்கே வந்துவிட்டேன். டிம்மைப் பற்றி என் மேனேஜரிடம் சொன்னேன். முழுவதையும் நிதானமாகக் கேட்ட அவர், "டிம் ஒருவ…
-
- 2 replies
- 704 views
-
-
குழந்தைக்குத் தேவை அப்பாவின் அரவணைப்பு! .......... குழந்தைப் பருவத்தில் அப்பாவின் அரவணைப்பு தவிர அவசியமான வேறு எந்தத் தேவையும் இருப்பதாக என்னால் நினைக்க முடியவில்லை... - சிக்மண்ட் ஃபிராய்ட் (மனவியலாளர்) சிம்மாசனங்களை விட்டு இறங்காத அப்பாக்களுக்கு குழந்தையின் இனிசியலில் மட்டும்தான் இடம். குழந்தையோடு குழந்தையாக இறங்கி, விளையாடி, தோற்று, அடி வாங்கி, அழுவதுபோல நடித்து, கன்னத்தில் முத்தமிட்டு, தோளில் கட்டிக்கொண்டு பம்பரமாகச் சுற்றும் அப்பாக்களுக்கு மட்டுமே இதயத்தில் இடம். எவ்வளவு பரபரப்பான அப்பாவாக இருந்தாலும் பிள்ளைக்காக சொத்து சேர்ப்பதைவிட முக்கியம் அவர்களுடன் செலவிடும் மதிப்புமிக்க நேரம்தான் என்கிறார் மனநல மருத்துவர் மீனாட்சி. அப்பாவுடன் இருக்கும்போது குழந்தைகளுக்கு நேர…
-
- 1 reply
- 703 views
-