சமூகச் சாளரம்
சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்
சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
2251 topics in this forum
-
இரட்டைக்குழந்தைகள், ஒவ்வொன்றுக்கும் வேறு வேறு தந்தையர். பிரேசில் நாட்டில், பதும வயது பத்தொன்பது வயது பெண், இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுத்தார். கருவுற்ற தினமன்று, இருவருடன் உடலுறவு கொண்டதால், அந்த இருவரில் யார் குழந்தைகளின் தந்தை என அறிய, குழந்தைகளுக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்ய, இரண்டுமே வேறு, வேறு என்று தெரிய வந்து மருத்துவ உலகமும், பெண்ணும், பெண்ணின் ஒழுக்கம் குறித்து அவரது உறவினர்களும் அதிர்ச்சி அடைந்தது மட்டுமல்லாது, உலகமே வியப்புடன் இது எப்படி சாத்தியம் என அரண்டு போயுள்ளது. உலகலாவிய ரீதியில் வைரலாகி உள்ளது இந்த சங்கதி. https://www.dailymail.co.uk/news/article-11188561/amp/Brazilian-woman-19-gives-birth-twins-DIFFERENT-fathers.html
-
- 4 replies
- 528 views
-
-
" இதுவும் கடந்து விடுவேன்" ....... காலச்சக்கரத்தின் வேக சுழற்சியால் வாழ்க்கை இன்பமும் துன்பமுமாய் போராடடமும் வெற்றியுமாய் நகர்ந்து செல்கையில் ...நோய்வாய்ப்படுதல் ஒரு திடீர் விபத்தாக வந்து விடுகிறது . நோயற்று வாழவே எல்லோரும் விரும்புவோம் நோய் கண்டு, மருத்துவ மனைகண்டு தாதியர் துணை கொண்டு படுக்கைதனில் வீழும்போது .. "என்னடா வாழ்க்கை" இது என்று சலிக்க தோன்றி விடும். அரை மயக்கத்தில் உன் உறவினர் ,அருகில் அப்போது தான் சத்திரசிகிச்சை முடித்து படுக்கையில் கிடத்தியிருப்பார்கள். எல்லாம் மரத்துப்போய் அசைக்க முடியாமல் உன் உடலின் அங்கமே உனக்கு சுமையாக கொக்கியில் மாட்டிய …
-
- 30 replies
- 1.4k views
- 3 followers
-
-
சென்னையில் நடந்த லெஸ்பியன் திருமணம்: தமிழ் பெண்ணை கரம்பிடித்த வங்கதேச பெண் 4 செப்டெம்பர் 2022, 02:38 GMT பட மூலாதாரம்,GETTY IMAGES சென்னையில் தமிழ்ப் பெண்ணுக்கும் வங்கதேசப் பெண்ணுக்கும் மரபான முறைப்படி திருமணம் நடந்ததாக டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. "தமிழ்நாட்டைச் சேர்ந்த சுபிக்ஷா சுப்பிரமணி என்ற பெண்ணும் வங்கதேசத்தைச் சேர்ந்த டினா தாஸ் என்ற பெண்ணும் சென்னையில் திருமணம் செய்துகொண்டனர். சுபிக்ஷா தமிழ்நாட்டு முறைப்படி சேலை அணிந்து கொண்டும் டினா தாஸ் பைஜாமா அணிந்துகொண்டும் திருமண நிகழ்வில் பங்கேற்றனர். மதுரையைப் பூர்வீகமாகக் கொண்ட சுபிக்ஷாவின் குடும்ப முறைப்படி இந்தத் திரு…
-
- 1 reply
- 529 views
- 2 followers
-
-
மாறும் வாழ்வியல்: நிரந்தர உறவில்லாத காதலையும் காமத்தையும் தேடும் இளைய தலைமுறை - காரணம் என்ன? கேசி நோனிக்ஸ் பிபிசி ஃபியூச்சர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, "உறுதியான உறவாக மாறவாய்ப்பில்லாத ஒருவருடன் இருப்பது 'நேரத்தை வீணடிப்பதாகும்' என்ற கருத்துக்கு, சிச்சுவேஷன்ஷிப் எதிரானது" என்கிறார் எலிசபெத் ஆம்ஸ்ட்ராங். உறவுகளில் தன் துணையுடன் மிக மிக உறுதியாக இருப்பதற்கும் சாதாரணமாக இருப்பதற்கும் இடையே உள்ள நடுப்பகுதியை மக்கள் பெரும்பாலும் தவிர்க்கிறார்கள். ஆனால் இளவயதினர் அதைத் தேர்வு செய்கிறார்கள். ஒரு ஜோடி தங்கள் உறவை இன்ன…
-
- 0 replies
- 504 views
- 1 follower
-
-
நான் லண்டனில் வசிக்கிறேன். எங்களுக்கு குழந்தை இல்லாததால் நான் எங்கள் ஊரில் (யாழ்) ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்க மிகவும் ஆசைப்படுகிறேன். எனக்கு(procedure) இதில் இங்கு என்ன செய்யவேண்டும் அங்கு என்ன செய்ய வேண்டும் என்று எதுவும் தெரியவில்லை. தயவு செய்து இது பற்றி தெரிந்தவர்கள் எனக்கு சொல்லி உதவ முடியுமா??
-
- 8 replies
- 812 views
- 1 follower
-
-
கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த ரதி மேனனுக்கு வயது 59. அவரின் கணவர் கடந்தாண்டு உயிரிழந்துவிட்டார். மகள்கள் இருவரும் திருமணமாகி தங்கள் குடும்பத்துடன் வசித்து வந்தனர். இதுபோன்ற சூழ்நிலையில், பெரும்பாலும் அம்மாக்கள் தங்கள் மிச்ச ஆயுளை தனிமையில் கழிக்கத் தள்ளப்பட்டிருப்பார்கள். ஆனால் ரதியின் மகள் பிரசீதா தன் தாயை அப்படி விட்டுவிடவில்லை. ‘வயது வெறும் எண்ணிக்கைதான். வாழ்வின் மீதி நாள்களுக்கு அம்மாவுக்கு துணை தேவை’ என்று எண்ணினார். தன் அம்மாவுக்கு, குடும்பத்தின் உதவியுடன் மறுமணம் செய்து வைத்துள்ளார். இதுகுறித்து பிரசீதா கூறுகையில், ``அம்மா, நான், என் சகோதரி நண்பர்களை போலத்தான் வளர்ந்தோம். எந்த வ…
-
- 1 reply
- 680 views
- 1 follower
-
-
வாழ்வுநிலை vs வாழ்க்கைத்தரம் வாழ்வுநிலை, வாழ்க்கைத்தரம், இவற்றை முறையே ஆங்கிலத்தில் standard of living, quality of life என்பர். இவையிரண்டுமே கிட்டத்தட்ட ஒன்றுதான், ஆனால் வெவ்வேறானவை. சொத்து, வருமானம், அந்தஸ்து, உணவு, உடை, உறையுள் எல்லாமும் செழிக்க இருந்தால் அவருக்கான வாழ்வுநிலை மேம்பட்டதாகக் கருதலாம் ஒப்பீட்டளவில். ஒருவருக்கொருவர் ஒப்பீடுகள் நடக்கின்றன. ஏழை, பணக்காரன், நடுத்தரக்காரன் என்றெல்லாம் மதிப்பீடுகள் இடம் பெறுகின்றன. இயல்பாகவே, பணமிருப்பவருக்கு மருத்துவம், கல்வி, வாய்ப்புகள் என்பவை எளிதில் கிட்டிவிடும். ஆகவே அவரின் வாழ்வுநிலை மேம்பட்டது என்பதாகக் கருதப்படுகின்றது. பண்புகள், விழுமியம்(வேல்யூஸ்), இன்பம், உடல்நலம் முதலானவை நன்றாக இருப்பதாகக் கருதினால்,…
-
- 0 replies
- 619 views
- 1 follower
-
-
அறிவும் உணர்வும் தடுமாறும் காதல் written by காயத்ரி மஹதிJuly 25, 2022 காதலில் தமக்கே தமக்கான கனவுக்கன்னியோ, கனவு நாயகனோ தேவை என்று பல எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கும் இளைஞர்கள் கூட்டம் அதிகம் என அறிவோம். இங்கு கனவுக்கன்னி, கனவு நாயகன் என்று அறியப்படுபவர்களின் அழகு, உடை, அவர்கள் விரும்பிச் சாப்பிடும் உணவு, உண்ணும் முறைகள், அவர்களுடைய உடல் எடை, அவர்கள் செய்யும் அலங்காரங்கள் ஆகியவற்றைத் தாமும் செய்து அந்த நபரை அப்படியே நகலெடுப்பார்கள். இப்படியாகத்தான் ஒவ்வொரு கனவு நாயகனும், கனவுக்கன்னியும் உருவாக்கப்படுகிறார்கள். தற்போதைய யூட்யூப் சமுகத்தில் அவர்களுக்கென்று மிகப்பெரிய ஒரு ரசிகப் பட்டாளத்தை உருவாக்கி வைத்தும் இருக்கிறார்கள். இவை எல்லாவற்றையும் மீறி தற்போதைய கால…
-
- 0 replies
- 511 views
-
-
குழந்தை வளர்ப்பு: குழந்தைகளிடம் பெற்றோர் செய்யக்கூடாதவை என்னென்ன? நதாஷா பத்வார் பிபிசி இந்திக்காக 25 ஜூலை 2022 சிறுவயதில் கொஞ்ச நேரத்திற்கு எங்கோ தொலைந்து போன கதைகள் என் வயதில் இருக்கும் பெரும்பாலானோரிடம் இருக்கும். பெற்றோருடன் ஒரு பொது இடத்திற்கு சென்று, பெற்றோர் இருவரும் உங்கள் கையைப் பிடித்திருக்கவில்லை என்பதை திடீரென்று உணர்ந்து, அவர்களிடமிருந்து பிரிந்து, கூட்டத்தில் தொலைந்து போன அந்த நினைவுகள் அனைவரிடமும் உள்ளன. அப்போதைய உலகம் மிகவும் பரிச்சயமானதாகவும் ஒப்பீட்டளவில் சிறியதாகவும் இருந்தது. அந்த காலகட்டத்தில் மொபைல் போன் இல்லையென்றாலும்கூட பெற்றோர்கள் தங்க…
-
- 0 replies
- 325 views
- 1 follower
-
-
வேலை நேரத்தில் ஆபாசப்படம் பார்ப்பது உங்கள் தொழில்வாழ்க்கைக்கு எமனாகலாம். ஆனால் இது தெரிந்தும், நீங்கள் நினைப்பதைவிட அதிகமானோர் இந்த ஆபத்தில் இறங்குகின்றனர். வேலைநேரத்தில் சிறிதே இடைவெளி எடுத்துக்கொண்டு, இன்ஸ்டாகிராமில் ஸ்க்ரோல் செய்வதையும், ஷாப்பிங் செய்வதையும் ஏன் புதிய டேட்டிங் செயலியை பயன்படுத்துவதைக் கூட பலரும் ஒப்புக்கொள்வார்கள். ஆனால் ஆபாசப்படங்களை பார்ப்பது? இது நிச்சயமாக அனுமதிக்கப்படாததுதான். ஆனால், இன்றைய சூழலில் மிகவும் எளிமையாக ஆன்லைனில் அணுக முடிவதால், இது மிகவும் பரவலாகிவிட்டது என்று உளவியலாளர்கள் மற்றும் இணைய பாதுகாப்பு நிபுணர்கள் நம்புகிறார்கள். 60%க்கும் அதிகமான பேர் வேலை நாளின் போது ஆபாசபடங்களின் நுகர்வு பெருகுவது க…
-
- 1 reply
- 736 views
-
-
காதல்: பிரிந்து பிரிந்து சேரும் காதலர்களுக்கு பின்னிருக்கும் உளவியல் என்ன? 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES "நம் இருவருக்கும் இனிமேல் ஒத்துவராது" என்று முகத்தில் கண்ணீர் வழிந்தோடியபடி, ஜார்ஜிடம் சொன்னார் யேன்ஸ். இதைச் சொல்லிவிட்டு இதயம் நொறுங்க, விசும்பலுடன் வீடு திரும்பினார் அவர். ஆனால், இது முதன்முறையல்ல. கடந்த இரண்டு மாத காலத்தில் இது மூன்றாவது முறை. இந்த முறை யேன்ஸ் திரும்பி வரப்போவதில்லை என்றும் சொல்லியிருந்தார். "பழைய நினைவுகளைக் கிண்டிவிட்டு அதில் உழலுவதென்பது மனித வாழ்வில் இயல்பானது. சொல்லப்போனால், மூன்றில் இரண்டு பங்கு கல்லூரி மாணவர்கள் பிரிந்து சேர்ந்த காதலுடன்தான் இருக்க…
-
- 0 replies
- 265 views
- 1 follower
-
-
*பிள்ளைகள் அனைவரையும் திருமணம் முடித்துக் கொடுத்த பணியிலிருந்து ஓய்வு பெற்ற மூத்த குடிமக்கள் கீழ்கண்ட பத்து கட்டளைகளை பின்பற்றினால் வாழ்வின் கடைசி பக்கங்கள் மிகவும் சுவாரசியமாகவும் இனிமையாகவும் இருக்கும்* 1- எந்த நிலையிலும் உங்கள் வாழ்வின் கடைசி பகுதியில் உங்க பிள்ளைகளுடன் சேர்ந்து வாழ நினைக்காதீர்கள். (உங்கள் சுதந்திரம் அனைத்தும் பறிபோகும்) 2- உங்க பேரக்குழந்தைகளின் மேல் உங்களுக்கு எவ்வித உரிமையும் இல்லை என்பதை மறக்கவேண்டாம். குழந்தை வளர்ப்பில் மகனுக்கோ மகளுக்கோ எவ்வித அறிவுரையும் சொல்லாதீர்கள். உங்கள் அறிவுரை மற்றும் அனுபவங்களை அவர்கள் மதிக்க மாட்டார்கள். (மதிக்கத்தெரியாது) 3- விலகியே இருங்கள் உறவுகள் இனிமையா இருக்கும். என் பிள்ளை என்பிள்ளை என பதறாதீர்கள். சிறக…
-
- 1 reply
- 547 views
-
-
ஓய்வூதியம் - சுப. சோமசுந்தரம் திருநெல்வேலி மாவட்டம் காரியாண்டி என்னும் குக்கிராமத்தைச் சேர்ந்த துரைப்பாண்டி தாத்தா தமது தொண்ணூறு வயதிலும் பனையேறும் தொழில் செய்து தம்மையும் தமது மனைவியையும் காப்பாற்றிக் கொள்கிறார் எனும் தகவல் சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வலம் வந்தது. அவர் போற்றுதலுக்குரியவர்; போற்றப்பட்டார் என்பது சரிதான். காட்சித் திரையில் இதனைக் கண்ட ஒவ்வொருவரும், "நம்மிடையே வாழ்வையே சாகசமாக ஏற்று இப்படி ஒருவர் வாழ்கிறார் !" என்று பெருமிதத்தில் நெஞ்சு விம்மியது வரை கூட சரிதான். "நம்மிடையே அரைசாண் வயிற்றுக்காக ஒருவரை தள்ளாத வயதிலும் அல்லல்பட வைத்தோமே !" என்னும் குற்ற உணர்வு இச்ச…
-
- 8 replies
- 2k views
- 1 follower
-
-
மிருகங்கள் மற்றும் பறவைகள் தனது போக்கிலேயே போகின்றன. எந்த மனமாற்றமும் கொண்டிடாது. ஆனால் மனிதர்களின் மனமோ….வினாடிக்கு வினாடி மாறக்கூடியது. தாவக்கூடியது. மனிதன் மட்டும் ஏன் குருடு, செவுடு, நொண்டி, மூளைவளர்ச்சி இன்மை இன்னும் பல குறைபாடுடன் பிறக்கிறான்? விலங்குகள் பறவைகள் அவ்வாறு பிறப்பது இல்லை ஏன்? மற்ற விலங்குகளை ஒப்பிடும்போது இந்தப் பரிணாம வளர்ச்சியில் நமக்கு கிடைத்தது முதுகுவலி யும் கழுத்து வலியும் தான் ஏனென்றால் உண்மையில் மற்ற உயிரினங்கள் தங்கள் சூழ்நிலைக்கு ஏற்ப தகவமைப்பைப் பெற்றுள்ளன மனிதன…
-
- 0 replies
- 2.6k views
-
-
ஒரு பாலின உறவு: இலங்கை நண்பியை கரம் பிடிக்க வந்த இந்திய பெண் - மனநல பரிசோதனைக்கு உத்தரவிட்ட நீதிமன்றம் யூ.எல். மப்றூக் பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இலங்கையில் உள்ள நண்பி ஒருவரை தேடி வந்த, இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண், இலங்கை நண்பியுடன் சேர்ந்து வாழப் போவதாகவும், அவரை இந்தியாவுக்கு அழைத்துச் செல்லப் போவதாகவும் கூறியதையடுத்து, இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்றுள்ளது. இந்திய தமிழ் பெண் (24 வயது) ஒருவருக்கும், இலங்கை அம்பாறை மாவட்டத்திலுள்ள முஸ்லிம் பெண் (19) ஒருவருக்கும் இடையில் தொலைபேசி வழியாக நட்பு ஏற்பட்டுள்ளது. …
-
- 20 replies
- 1.3k views
- 2 followers
-
-
வேண்டுதல்களும் வாழ்த்துகளும் ஒருவர் உடல் நலக்குறைவால் வருந்தும்போது அவர் நலம் பெற பிரார்த்திப்போம் அதேநேரம் பிரார்த்தனை மீது நம்பிக்கையற்றவர்கள் அல்லது கடவுள் நம்பிக்கையற்றவர்கள் நலம் பெற வாழ்த்துவார்கள் இது சரியா?? ஒருவருக்கு கடவுள் நம்பிக்கை இல்லாதபோது வாழ்த்துக்கள் மட்டும் எப்படி பலிக்கும் என்று எதிர்பார்த்து வாழ்த்தமுடியும்??? (உண்மையில் தெரிந்து கொள்ளவே கேட்கின்றேன்)
-
- 2 replies
- 1.2k views
-
-
நவீனக் கல்வி நம்மை தீயவர்களாக்குகிறதா? – ஆர். அபிலாஷ் May 31, 2022 - Uyirmmai Media · இலக்கியம் கட்டுரை கல்வி இல்லை, நாம் ஏற்கனவே தீயவர்கள் தாம். இதை நான் சொல்லவில்லை. மிகச்சிறந்த தத்துவவாதிகளில் ஒருவரான இமானுவெல் கேண்ட் தனது “கல்வியியல் குறித்த உரைகளில்” சொல்கிறார். என்னுடைய கருத்து ஏற்கனவே கடைந்தெடுத்த கொடியவர்களான நம்மை இந்த சமூக, பொருளாதார அமைப்பும், கூடுதலாக கல்வியமைப்பும் மேலும் கொடியவர்களாக, அறம் பிறழ்ந்தவர்களாக மாற்றுகிறது என்பதே. ஒரு உதாரணத்துக்கு, இந்த உலகின் ஆகக்கொடூரமான, மனிதகுலத்துக்கே பேரழிவைக் கொண்டு வந்துள்ள குற்றங்களை இழைத்தவர்கள் யாரென்றால் அதிகமாகப் படித்தவர்களே. கல்வி நமது தீய சுபாவத்துக்கு ஒரு கூர்மையை, முனைப்பை அளிக்கிறது, தெளிவான இ…
-
- 2 replies
- 493 views
- 1 follower
-
-
காதல் வந்தால் உடலில் நடக்கும் மாற்றங்கள் என்ன? இச்சை வந்தால் நடப்பவை என்ன? 10 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES லவ் ஃபீவர், காதல் பித்து, வயிற்றில் பட்டாம்பூச்சி பறப்பது போன்ற உணர்வு - இப்படி காதல் உணர்வு எப்படி இருக்கும் என்பதை விவரிக்க நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வழி இருக்கும். ஆனால், நாம் காதலில் விழும்போது உண்மையில் நம் மூளையில் என்ன மாதிரியான மாற்றங்கள் நிகழும்? காதல் மற்றும் இச்சை இரண்டையும் எப்படி வித்தியாசப்படுத்துவது? நரம்பியல் அறிவியல் பார்வையில் காதல் என்பது என்ன? ரட்கெர்ஸ் பல்கலைக்கழகத்தின் ஹெலென் இ ஃபிஷர் கூற்றுப்படி, காதல் உணர்வில் மூன்று அம்சங்கள் உள்ளன. அந்த ம…
-
- 0 replies
- 307 views
- 1 follower
-
-
மரபு ரீதியான குறைபாட்டுடன் விந்து தானம் செய்த நபருக்கு பிறந்த 15 குழந்தைகள் வில் ஜெஃபார்ட் பிபிசி செய்திகள் 13 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,FACEBOOK படக்குறிப்பு, ஜேம்ஸ் மேக்டூகல் இங்கிலாந்தில் மரபியல் ரீதியான குறைபாடு கொண்ட நபர் ஒருவர் தனது விந்தணுவை தானம் செய்து, அதன்மூலம் 15 குழந்தைகள் பிறந்துள்ளன. இதுதொடர்பான வழக்கு விசாரணையில் இது தெரியவந்துள்ளது. மேலும், தான் விந்து தானம் செய்வதாக அந்நபர் ஃபேஸ்புக்கில் விளம்பரம் கொடுத்து இவ்வாறு செய்துள்ளார். ஜேம்ஸ் மேக்டூகல் என்ற அந்த நபருக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு கற்றல் குறைபாடு ஏற்படும் மரபியல் ர…
-
- 0 replies
- 462 views
- 1 follower
-
-
"திருமணம் வேண்டாம், குழந்தை மட்டும் போதும்" - ஒற்றை தாயாக மாறிய பெண் 4 மணி நேரங்களுக்கு முன்னர் பல பெண்களைப் போலவே, குஜராத்தின் பரூச் நகரைச் சேர்ந்த டிம்பி பர்மர், தனது தாய்மையை முழுமையாக அனுபவித்து மகிழும் பெருமைக்குரிய தாய். ஆனால், அவரது தனிச் சிறப்பு, அவர் திருமணம் செய்துகொள்ளாத ஒற்றைத் தாய். 35 வயதான டிம்பி தனது குழந்தையைப் பெற்றெடுக்க சோதனைக் குழாய் குழந்தை முறையை தேர்ந்தெடுத்தார். டிம்பி திருமணம் வேண்டாமென முடிவுக்கு வருவதற்கு குடும்ப பிரச்னையே காரணம். அதேநேரம், தாய்மையை அனுபவிக்க விரும்பிய அவர், ஒற்றைத் தாயாக முடிவெடுத்தார். சோதனைக் குழாய் மூலம் குழந்தை பெறும் வழிமுறை முழுதும் மருத்துவரின் வழிகாட்டுதல் படிதான் நடக்கும். சமூகத்திடமிருந…
-
- 0 replies
- 417 views
- 1 follower
-
-
தாய் மகனுக்கு எழுதிய டைரி குறிப்பு.... தலைக்கு மேல் நான் தூக்கி கொஞ்சிய என் தங்க மகன் என் தலைக்கு மேல் வளர்ந்து நிற்கிறான் ஒரு பயம் எனக்கு எப்போதாவது ஒருநாள் என் விசயத்தில் தலையிடாதே என்று சொல்லிவிடுவானோ என்று மகனே மறந்தும் அப்படி சொல்லிவிடாதே மரணித்து போய்விடுவேன் சின்ன வயதில் நீ அடிக்கடி கேள்விகேட்ப்பாய் நான் சலிக்காமல் பதில் சொல்வேன் என் வயதான காலத்தில் நானும் உன்னிடம் குழந்தை போல் வினா எழுப்பக்கூடும் கத்தாதே வாயை மூடு என்று சொல்லிவிடாதே வலி தாங்க முடியாத பாவி நான் வீடெல்லாம் நீ இறைத்து வைத்த சோற்றுப் பருக்கையை என் விரல்களால் கூட்டி அள்ளுவேன் என் முதிர் வயதில் என் வாய்க்கொண்டு செல்லும் உணவ…
-
- 0 replies
- 383 views
-
-
கீதா பாண்டே பிபிசி ந்யூஸ், டெல்லி இந்தியாவில் காலை உணவில் உப்பு அதிகமாக இருந்ததால் மனைவியைக் கொன்றதாக குற்றமசாட்டப்பட்ட 46 வயது ஆடவரை கடந்த மாதம் போலீசார் கைதுசெய்தனர். "மேற்கு நகரமான மும்பையின் அருகிலுள்ள தானேவில் ஒரு வங்கியில் பணிபுரியும் நிகேஷ் கக், தனது 40 வயது மனைவியின் கழுத்தை ஆத்திரத்தில் நெரித்தார். காரணம், அவர் பரிமாறிய ஜவ்வரிசி உப்புமாவில், உப்பு அதிகம் இருந்தது," என்று காவல்துறை அதிகாரி மிலிந்த். தேசாய் பிபிசியிடம் கூறினார். தன் தந்தை தனது தாயார் நிர்மலாவை பின்தொடர்ந்து படுக்கையறைக்குள் சென்று உப்பு பற்றி புகார் சொல்லியபடி அவரை அடிக்கத் தொடங்கினார் என்று இந்த குற்றத்தை நேரில் பார்த்த தம்பதியின் 12 வயது மகன் காவல்துறையிடம் கூறி…
-
- 11 replies
- 1.2k views
-
-
வாழ்தல் பணிதல் என்பது வேறு; குனிதல் என்பது வேறு! அதைப் போலவே, வாழ்தல் என்பது வேறு; பிழைத்திருத்தல் என்பது வேறு. எப்படி? பணி என்றால் என்ன? செய்கை. செய்பவரைத்தான் பணியாளர் என்கின்றோம். எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும் செல்வர்க்கே செல்வம் தகைத்து. எல்லாருக்கு நல்லதாம் செய்து கொடுப்பது; எல்லாச் செல்வங்கள் இருப்பினும் இச்செல்வம் அதனைக் காட்டிலும் சிறப்பு. செயலன்றிப் பிறர் பொருட்டுக் குனிதல் வெறும் பாவனை என்பதினாலே அது வெற்றுக் குனிதல். கீழ்ப்படிதல் என்றாகின்றது. மூச்சுக் கொண்டு, சிந்தை கொண்டு, ஒவ்வொரு பொழுதையும் நுகர்ந்து செழித்து உயிர்த்திருப்பது வாழ்தல். வாழ்க, வாழிய, வாழ்வு என்பதெல்லாம் இதன் நீட்சி. தவறவிடுதல், குற்றம்புரிதல், தீங்கிழைத்தல் இவையெல்ல…
-
- 0 replies
- 807 views
- 1 follower
-
-
ஒருவருடைய உடல் அமைப்பைப்பற்றி பேசாதீர்கள். மனசு ரொம்ப கஷ்டப்படும். ஒரு காலத்தில் அவர்களும் ஒல்லியாக அழகாக இருந்தவர்கள் தான்.
-
- 0 replies
- 518 views
- 1 follower
-
-
நாம் சாகமாட்டோம். விலை இன்னும் ஒருமடங்கு அதிகரித்தாலும் நாங்கள் சாகவே மாட்டோம். எங்கள் அனுபவங்களை விசாரித்துப்பாருங்கள். ஆயிரம் இடம்பெயர்வுகளை சந்தித்தோம் நாங்கள் சாகவே இல்லை. பலவருடம் மின்சாரமின்றி வாழ்ந்தோம் நாங்கள் சாகவே இல்லை. எரி வாயு என்றால் என்னவென்று தெரியாமல் வாழ்ந்தோம் நாங்கள் சாகவே இல்லை. எரிபொருள் இன்றியும் வாழ்ந்தோம் நாங்கள் சாகவே இல்லை. தொலைபேசி இல்லாமல் வாழ்ந்தோம் நாங்கள் சாகவே இல்லை. தம்புள்ளை மரக்கறி இல்லாமல் வாழ்ந்தோம் நாங்கள் சாகவே இல்லை. சீனி இன்றி பனங்கட்டியுடன் பிளேன்ரீ குடித்தோம் நாங்கள் சாகவே இல்லை. அங்கர் இன்றியும் வாழ்ந்தோம் நாங்கள் சாகவே இல்லை. பசளை இன்றியிம் விவசாயம் செய்தோம் நாங்கள் சாகவே இல்லை. வீட்டி…
-
- 0 replies
- 461 views
-