சமூகச் சாளரம்
சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்
சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
2251 topics in this forum
-
வணக்கம்... சிந்தித்துப்பாருங்கள்... சில தமிழர்கள் தமக்கு தாமாகவே ஆங்கில மொழியிலான புனைபெயர்களை விரும்பி வைத்துக்கொள்கிறாகள்.. அதையே பல இடங்களில் பாவிக்கவும் செய்கிறர்கள், ஏன் அவர்களுக்கு அவர்கள்ளின் தாய், தந்தயர் ஒளுங்கான பெயர் வைக்கவில்லயா? அல்லது தமிழில் பெயர் இருந்தால் அது நாகரிகம் இல்லையா? இவர்களின் மன நிலமைதான் என்ன? எமது தாய்மொழியில் தான் எமது பெயர்கள் அமைவது எமக்கு பெருமைதரும் ஒருவிடயமாக இருக்கவேண்டும், உனக்கு புனைபெயர்வைக்கவேண்டுமா? அழகாண தமிழ் பெயர்களை வைக்கவேண்டியதுதானே? அதை விடுத்து ஏன் ஆங்கில மொழியில் வைக்கவேண்டும்? ஒரு தமிழனுக்கே தமிழ் பற்றி இல்லாத இடத்தில் நாம் அதை மற்ற வரிடம் எதிர்பாக்கலாமா?
-
- 1 reply
- 1.6k views
-
-
வணக்கம் யாழ் கள நண்பர்களே எமது பண்பாட்டு வாழ்வியல் நிகழ்வுகளில் ஒன்று திருமணம். அத் திருமணங்களில் நூற்றுக்கு எண்பது வீதமானவை பேச்சுத்திருமணங்களே! மனித வாழ்க்கை வட்டத்தில் மிகவும் முக்கியமான இந் நிகழ்வில் இப்போதைய கால கட்டங்களில் பெரும்பாலான பேச்சுத்திருமணங்கள் இப்பொழுது பெரும் துன்பியல் நிகழ்வாக மாறிவருகின்றன இதில் மிகவும் பாதிக்கப்படும் தரப்பினரும் பெரும்பாலும் பெண்களாகவே இருக்கின்றனர் குறிப்பாக தாயகத்தில் இருந்து வெளிநாட்டு மாப்பிள்ளைகளை மணந்து வெளிநாட்டுக்கு குடிபெயரும் தமிழ்ப் பெண்களே கூடுதலாக பாதிக்கப் படுகின்றனர். ஆதலினால் என் யாழ் கள நண்பர்களே பேச்சுத்திருமணம் என்பது எம் தமிழ்ப்பெண்களுக்கு அநீதியானதா (unfair)? அல்லது இம் முறை எங்கள் சமூகப்பிழையா? ஒரு …
-
- 38 replies
- 5.6k views
-
-
பெண்களிடம் ஆண்கள் பரவசமடையும் தருணங்கள் சந்தோஷத்திலோ அல்லது துக்கத்திலோ, காதலி தன்னுடைய புஜங்களில் சாயும் பொழுது, தனக்கு ஏற்றவள் இவள் தான் என்று ஆண்கள் உணர்வார்கள். தன் காதலி முத்தமிடும் அந்த தருணங்களில் தன்னைச் சுற்றி உலகத்தில் நடப்பவை அனைத்துமே சரியானது தான் என்று ஆண்கள் உணர்கிறார்கள். சில நேரங்களில், தன் காதலி வாக்குவாதம் செய்து கோபப்படும் பொழுது தன் காதலியின் அழகை ரசிப்பார்கள். காதலர்கள் இருவருக்குள்ளும் பெரிய சண்டை ஏற்பட்டுவிட்டு, பிரிந்து சென்று, சில நிமிடங்கள் கழித்து தன் காதலி போன் செய்யும் போது, அவளுடைய பெயர் தன் செல்போனில் வரும்போது... ஆண்கள் தன் காதலி விரும்பும் ஒரு விஷயத்தை செய்து அவர்களை சந்தோஷப்படுத்தும் போது, அந்த சந்தோஷத்தில் த…
-
- 40 replies
- 14k views
-
-
வாழ்வியல் சிந்தனை முத்துகள் `எதுவும் நம் கையில் இல்லை என்ற சோம்பேறி வேதாந்தம் வேண்டாம். `நான் வாழ்வது என் கையில் என்ற உறுதியுடன் புது வாழ்வு வாழ்ந்து பலனைப் பெருக்குக. இளைப்பாற வேண்டிய விடுமுறையில் களைப்பு வெள்ளத்தில் மூழ்கும் அளவுக்கு, மீறிய வேலையில் இறங்கிவிடாதீர்கள்! வாரத்தின் ஏழு நாள்களில் பணிக்கு, ஓய்வுக்கு, குடும்பத்தினருடன் கழிக்க, ஊர் மக்களிடம், தொண்டுக்கென நேரத்தைத் திட்டமிட்டு ஒதுக்குங்கள்! சலிப்போ, சோம்பலோ தோன்றாது! நம்மிடம் உள்ள ஆற்றலை நாம் எவரும் குறைத்து மதிப்பிடக் கூடாது; அய்யோ என்னால் இது முடியுமா? என்று எடுத்த எடுப்பிலேயே எதையும் கண்டு அச்சப்படத் தேவையில்லை. ``நம்மால் முடியாதது எவராலும் முடியாது; எவராலும் முடியாதது நம்மால் மட்…
-
- 0 replies
- 1.1k views
-
-
" முயற்சியும், பயிற்சியும் இருந்தால் வானம் தொட்டு விடும் தூரம் தான்! " | " இன்று அமர்க்களமான நாள்!" என்று சொல்லிக் கொண்டு வாழ்வின் காலைப் பொழுதைத் துவங்குங்கள். எம். எஸ். உதயமூர்த்தி எழுதி வடித்த தன்னம்பிக்கை ஊட்டும், சுயசிந்தனையை தூண்டும் கட்டுரைகள் பல. சமூகத்தில் அவரின் கட்டுரைகளை வாசித்து சுயசிந்தனையோடு... முன்னேறி வாழ்வில் வெற்றி பெற்றவர்கள் பலர். அத்தகைய வெற்றிகளுக்கும், இளைய தலைமுறையின் வழிகாட்டுதலுக்கு தீ பந்தமாகவும் விளங்கும் டாக்டர். எம். எஸ். உதயமூர்த்தி அவர்களின் எண்ண கடலிலிருந்து ஒரு கட்டுரைத் துளி உங்கள் பார்வைக்கு... " உன்னால் முடியும் " ஒரு காலத்தில் ரோம் சாம்ராஜ்யம் புகழ்பெற்ற நாடாக, ஆட்சியாக இருந்தது. ஆனால், அதன் புகழ் நிலைபெற்று…
-
- 1 reply
- 3.4k views
-
-
வணக்கம், 2008ம் ஆண்டு யாழில எனது கடைசித் தலைப்பாக இந்த பொல்லுக்கொடுத்து அடிவாங்குதல் பற்றி கதைக்கலாம் எண்டு நினைக்கிறன். நான் ஏற்கனவே குறிப்பாக யாழ் மூலம் இதில அதிகம் அனுபவப்பட்டு இருக்கிறதால - எனது அனுபவங்களை இதில சொல்லுறதை குறைச்சு உங்களுக்கு ஏதாவது அனுபவங்கள் இருந்தால் அதுபற்றி அறிஞ்சுகொள்ள விரும்புறன். பொல்லுக்கொடுத்து அடிவாங்குபவர்களில முக்கியமான ஆக்கள் எண்டு பார்த்தால் படைப்பாளிகள், மற்றது ஊடகத்துறையை சேர்ந்தவர்கள் எண்டு சொல்லலாம்தானே? பலர் இந்த தர்ம அடியை வாங்குற பயத்திலதான் படைப்பு இலக்கியங்களில ஈடுபடுவது குறைவோ எண்டும் எண்ணவேண்டி இருக்கிது. யாழில கூட பலர் சுய ஆக்கங்கள் செய்யாமல் இருக்கிறதுக்கு இல்லாட்டிக்கு பதில் கருத்துக்கள் எழுதாமல் வெறும் பார்வையாளர்…
-
- 12 replies
- 2.6k views
-
-
Monday, February 18, 2008 உங்களைத் தொலைத்து விடாதீர்கள்! ஒரு மனிதனின் குழந்தைப் பருவத்தில் இருந்தே அவனை மற்றவர்கள் போல் மாற்றும் முயற்சி ஆரம்பிக்கிறது. "அந்தப் பாப்பாவப் பாரு எப்படி சமத்தா இருக்கு". குழந்தையில் இருந்தே மற்றவர் சிந்தனைகளையும், நம்பிக்கைகளையும் அவன் திணிக்கப் பெறுகிறான். "அவனைப் போல் இரு. இவனைப் போல ஆகு....." என்ற கட்டளைகள் வார்த்தைகளாகவும், சூட்சுமமாகவும் அவன் மனதில் ஏற்றப்படுகின்றன. இது தான் சிறந்தது, இது பிரயோஜனமில்லாதது என்பதை மற்றவர்கள் அவனுக்காக தீர்மானித்து விடுகிறார்கள். மற்றவர் வகுத்த பாதையில் பயணம் நடக்கிற வரையில் அவன் விமரிசனங்களை சந்திக்க வேண்டியதில்லை. தனித்துவம் என்பதை பொதுவாக சமூகம் சகித்துக் கொள்வதில்லை. தப்பித் தவறி ஒருவன் தன் தன…
-
- 3 replies
- 2.1k views
-
-
வணக்கம் வஞ்சிகளுக்கும் ,வேந்தர்களுக்கும் இன்றைக்கு நான் அறிந்த விசயம் ஒன்றை உங்களுக்கும் தெரியபடுத்த விரும்புகிறேன் என்னதான் காதல் ____இனிப்பு ,தேன் ,அமிர்த்தம் என்றாலும் அதைசிலர் தவறாக பயன் படுத்தி தங்கள் வாழ்கையை கேள்வி குறியாக்கி விடுகின்றானர் அண்மையில் நான் அறிந்த சம்பவம் ஒன்று பெண் .....ஆறு மாதம் தனது படிப்பை முடித்திருந்தால் ஒரு பொறியியலாளர் ஆண்...... வெளிநாட்டில் இருந்து சென்ற ஒருவர் இருவரும் காதலித்தார்களாம் ஆனால் இது வீட்டுக்கு பிடிக்கவில்லையாம் உடனே இருவரும் வீட்டை விட்டு ஓடி விட்டனர்........ ........................என்னதான் பிள்ளையை பெற்று வளர்த்து,எவ்வளவு கஸ்ரப்பட்டு காசு செலவழித்து ,படிப்பித்து பெரியவர்களாக்கி வளர்த்து விடுகின்ற…
-
- 44 replies
- 6k views
-
-
ஒவ்வெரு மனிதனின் வாழ்க்கையிலும் பயம் சில நேரங்களில் துரத்துகிறது எதனால் பயம் ஏற்படுகிறது ,ஏன் பயம் என்னை துரத்துகிறது ,பயம் என்பது சில நேரங்களில் என்னால் எதையும் சாதிக்க முடியாமல் ஆக்கிவிடுகிறதே ,என்று சில சூழ்நிலைகளில் நாம் சிந்திப்போம் ,இனி இந்த பயம் நீங்க நாம் என்ன செய்ய வேண்டும் பயத்தின் விளிம்பிலிருந்து எப்படி நழுவுவது என்பதை பற்றிய ஆய்வு கட்டுரை .......................... எந்த சூழ்நிலையில் பயம் ஏற்படுகிறது இதனுடைய சூழ்நிலையும் மனதில் ஏற்படும் மாற்றங்களே .பொதுவாக நாம் எந்த காரியத்தில் பயப்படுகிறோமோ அதை பற்றி நம் எண்ணும் சில தவறுகள் ,நாம் மற்றவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் போது அந்த தீங்கு அவனை எட்டும் முன்னால் ஏற்படும் ஒரு பயம் ,நாம் நம்முடைய வேலையிலாக இரு…
-
- 2 replies
- 7.7k views
-
-
வணக்கம், இண்டைக்கு எங்கட ஆக்களிண்ட ஒரு வலைத்தளத்துக்கு போய் அங்க நடக்கிற அரட்டையை பார்வையாளராக இருந்து Screen Shots எடுத்து இருக்கிறன். உங்களுக்கு இதில எழுதப்படுறதுகள் ஏதும் விளங்கிதோ எண்டு வாசிச்சு சொல்லுங்கோ. இஞ்ச இருக்கிற யாராச்சும் அங்கையும்போய் அரட்டை அடிச்சு இருந்தால் மன்னிச்சு கொள்ளுங்கோ. நான் Screen Shots எடுக்கேக்க வேகமா அரட்டை அடிக்கப்பட்டதால சம்பாசணைகள் இடைக்கிடை வெட்டுப்பட்டு போச்சிது. நிறையப்பேர் ஒரே நேரத்தில ஒரு மலசலகூடத்துக்க இருந்து கடலைபோடுறதால கிடுகிடு எண்டு சம்பாசணை வேகமாக போகிது. பி/கு: யாழுக்கையும் கருத்தாடல் தளத்தில இதுதானே கொஞ்சம் நாகரீகமான முறையில நடக்கிது எண்டு என்னை கேட்கக்கூடாது. தவிர, யாழ் ஆக்க…
-
- 33 replies
- 6.6k views
-
-
வணக்கம், நான் சுமார் பத்துவருடங்கள் தாவரபோசணியாக இருந்தது. பிறகு இஞ்சால வந்தாப்பிறகு மச்சமும் கலந்து அடிக்கிறது. அண்மையில நாங்கள் சாப்பிடுற இந்த மச்ச வகைகள் எப்பிடி உருவாக்கப்படுகிது எண்டுறது சம்மந்தமாக சில காணொளிகளை பார்த்தன். நீங்களும் அதை பார்த்து மகிழ்வதற்காக அல்ல.. பார்த்து அழுவதற்காக இதில இணைக்கிறன். மிருகவதை சம்மந்தமாக இதைவிட அகோரமான காணொளிகள் இருக்கிது. இணைக்கமுடியவில்லை. யூரியூப்பிற்கு போனால் இதுபற்றி ஊறிப்பட்ட காணொளிகள் இருக்கிது. பார்க்கலாம். பெரும்பாலான காணொளிகளுக்கு கொடி காட்டப்பட்டு இருக்கிறதால லொகின் பண்ணி உள்ள போனால்தான் பார்க்கலாம். எங்களுக்கு சாப்பிடேக்க கொண்டாட்டம். ஆனால் எங்கள் வயிற்று பசியுக்கு ஆகுதியாக போகின்ற பிராணிகளிண்ட மரண ஓலங்கள், வேதனைகள் …
-
- 19 replies
- 4.8k views
-
-
சில நாட்களுக்கு முன்பு படித்தது. யார் சொன்னாங்கனு சரியாத் தெரியல, ஆனா படிக்க நல்லா இருந்தது. என்ன சொல்லியிருக்காங்கனா, "Try" என்கிற வார்த்தையை அகராதியிலிருந்து விலக்கிவிடுவது நல்லதுனு சொல்லியிருக்காங்க. சரி அப்படி என்ன தான் அந்த வார்த்தைல பிரச்சனைனு பாக்கலாம். Try என்ற சொல் நம்முடைய மூளைக்கு வெற்றிய மறைச்சு, தோல்விக்கான வழிய காட்டுதாம். என்னடா சிறுபிள்ளைத்தனமாக இருக்குனு நீங்க நினைக்கிற மாதிரி தாங்க நானும் நினைச்சேன். மேல படிச்சாத்தான் இது கூட ஒரு விதத்துல சரீன்னு பட்டுது. ஒரு உதாரணத்தோட விளக்கியிருக்காங்க. ஒரு குழந்தைக் கிட்ட ஒரு பென்சில் தந்து, "Try dropping this pencil" அப்படீன்னு சொல்றதா வெச்சிக்குவோம். அந்தக் குழந்தை என்ன பண்ணும்? பென்சிலக் கீழ போடும். அந்த…
-
- 0 replies
- 731 views
-
-
ஆண்களின் சிந்தனையும், பெண்களின் சிந்தனையும் ! அடக்கடவுளே !!! இந்த ஒரு சேலையை எடுக்கவா இத்தனை மணி நேரம்” என்று சலித்துக் கொள்ளும் கணவன்களின் குரல்களால் நிரம்பி வழியும் எல்லா துணிக்கடை வாசல்களும். ஐயோ, உன் கூட துணி எடுக்க வந்தால் ஒரு நாள் போயே போச்சு…” என்று மனைவியிடம் புலம்பாத ஆண்கள் இருக்க முடியுமா என்ன ?. இதற்கெல்லாம் இனிமேல் பெண்களைக் குற்றம் சொல்லாதீங்க. ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையேயான ரசனை வேறுபாடுகள் அவர்களுக்கு இயற்கையிலேயே அமைந்த ஒன்று என்கிறார். பென்சில்வேனியாவைச் சேர்ந்த உளவியலார் ஒருவர். ஆண்கள் சட்டென ஒரு துணிக்கடையில் நுழைந்து தேவையானதை எடுத்துக் கொண்டு அரை மணி நேரத்தில் வெளியே வந்து சட்டென நடையைக் கட்டி விடுகிறார்கள். ஆனால் பெண்க…
-
- 1 reply
- 1.3k views
-
-
காதலிக்கிறவங்க எல்லாரும் சொல்லிக்கிறது "உண்மையாவே" காதலிக்கிறேன் என்று. ஆனால் காதலிக்கும் போது.. காதலன் அல்லது காதலிக்கு என்று பிரச்சனை உருவானால்.. உண்மையாகக் காதலிக்கிறவங்க என்ன செய்வாங்க..??! 1. ஓடி ஒளிப்பாங்க. 2. பிரச்சனையை எதிர்கொள்ள கூட இருந்து உதவுவாங்க. 3.இதுதான் சாட்டென்று கழற்றிவிடுவாங்க. இது தொடர்பில் உங்கள் பொன்னான வாக்குகளை அளித்து.. உங்கள் அனுபவங்கள் அல்லது கருத்துக்கள் அல்லது இரண்டையும் பகருங்கள். எதிர்காலக் காதலர்களுக்கு எது உண்மையான காதல் எது போலிக் காதல் என்று அடையாளம் காண இது உதவுவதோடு.. இவற்றை ஆரம்பத்திலேயே இனங்கண்டு விட்டால் பிற்காலத்தில் ஏற்பட இருக்கும் ஏமாற்றங்களை தவிர்த்து அவர்கள் தம் வாழ்வை சந்தோசமாக அமைக்க உதவுவதாகவும் அமையும்.
-
- 45 replies
- 8.5k views
-
-
கிரெடிட் கார்டை பாதுகாப்பாக பயன்படுத்த சில ஆலோசனைகள்... 1. கிரெடிட் கார்டு என்பது உங்கள் பர்சை உடனடியாக காலி செய்யாவிட்டாலும், உரியகாலத்தில் அளவுக்கதிகமான கட்டணத்தோடு காலி செய்யும். எனவே உங்கள் கிரெடிட் கார்டை கவனமாக பாதுகாக்க/கையாள வேண்டும். 2. கிரெடிட் கார்டுக்கான விண்ணப்பத்தை நிரப்பும்போது, அதை நீங்களே நிரப்புங்கள். தேவையானபோது மட்டும் விற்பனை பிரதிநிதியின் உதவியை நாடுங்கள். நிரப்பப்பட்ட விண்ணப்பத்தை நகல் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். அதைத்தொடர்ந்து கிரெடிட் கார்டுக்காக தனியே ஒருஃபைல் போட்டு கிரெடிட் கார்டு தொடர்பாக பில்கள் உட்பட அனைத்து கடிதத்தொடர்புகளையும், நீங்கள் கிரெடிட் கார்டு மூலம் பெற்ற பொருள் மற்றும் சேவை குறித்து அஞ்சல் மூலம் வரும் விளம்பரங்களையும் ச…
-
- 1 reply
- 1.7k views
-
-
''மாமியார் அல்ல.. தாயார்!'' சடசடவென காதல், படபடவென திருமணம், அதே வேகத்தோடு விவாகரத்து, பின் மீண்டும் இணைவு, ஜாம் ஜாமென்று மீண்டும் ஒரு கல்யாணம்! புருவங்கள் முடிச்சிடுகிறதுதானே? இந்தக் கதைக்கு சொந்தக்காரர்கள்.. கலாவும் பிரசாத்தும். ஆனால், சட்டமே பிரித்துவிட்ட அந்த பந்தத்தை மீண்டும் இழுத்துப் பிடித்து ஒன்று சேர்த்த பெருமை கலாவின் மாமியாருக்கே சமர்ப்பணம் என்பதுதான் நம் நெஞ்சைத் தொடுகிற ஆச்சர்ய சேதி! சென்னை, ராயப்பேட்டையில் உள்ள பிரசாத் வீட்டுக்கு சென்றபோது, தன் மருமகளுக்கு பூச்சூடிக் கொண்டிருந்தார் கிருஷ்ணவேணி.. கலாவின் மாமியார்! ''அத்தை.. நீங்க பேசினாத்தான் சரியாயிருக்கும்..'' என்று கலா சொல்ல, இயல்பாக பேச ஆரம்பித்தார் கிருஷ்ணவேணி. ''எங்களுக்கு க…
-
- 5 replies
- 2.8k views
-
-
இது சரியோ..??..தவறோ..?? எல்லாருக்கும் ஜம்மு பேபியின் வண்ண தமிழ் வணக்(கம்) ..மறுபடியும் வந்திட்டானே எண்டு கனக்க நீங்க யோசிக்கிறது விளங்குது கனக்க யோசிக்காதையுங்கோ என்ன..சரி நாங்கள் விசயதிகுள்ள போவோம் என்ன...!! அது பெரிசா ஒண்டுமில்ல பாருங்கோ இப்ப இணைய வழி மூலம் அரட்டை அது தான் "சட்" எண்டு வேற சொல்லுவீனம் பாருங்கோ இப்ப கந்தப்பு தாத்தா போன்ற பெரிசுகளிள இருந்து சுண்டல் அண்ணா போன்ற இளையவர்கள் முதல் ஒரு தொற்று வியாதி.. இதுக்கா நான் என்னவோ "சட்" பண்ணுறதில்ல எண்டு நீங்க நெனைக்க கூடாது..அதுக்கா இணைய வழி மூல அரட்டையை நான் தவறு எண்டு சொல்லவில்லை ஏன் எனில்..குறிப்பாக பொழுதுபோக மற்றும் நண்பர்களுடன் தொடர்பு வைத்திருப்பதிற்கு ஏன் சில வேளை படிப்பு சம்பந்தமான …
-
- 31 replies
- 5.8k views
-
-
உலகம் சுற்றும் வாலிபர்களின் அனுபவங்களைச் சொல்லும் "டிராவலர்ஸ் டைஜஸ்ட்" இதழ் உலகிலேயே மிகவும் அழகான பெண்கள் எங்கெங்கே இருக்கிறார்கள் எனும் பட்டியலைத் தயார் செய்ய உலகெங்கும் பறந்திருக்கிறார்கள். அதன் அடிப்படையில் அவர்கள் அமைத்த பட்டியலில் இந்தியா முதலிடத்தைப் பிடித்திருக்கிறது என பொய் சொல்ல மாட்டேன். ஸ்வீடன் நாட்டு தலைநகரான ஸ்டாக்காம் தான் உலகிலேயே பேரழகுப் பெண்களின் பேரணியாய் இருக்கிறதாம். ஜொள்ளுவிடும் ஆண்களுக்கான ஜொர்க்க பூமி அது என அந்த பத்திரிகை வர்ணித்துள்ளது. ஸ்வீடன் பெண்கள் கல்வியறிவும், பழகுதற்கு இனிமையும் அழகும், மொழியில் அழகிய உச்சரிப்பும் உடையவர்களாக இருக்கிறார்களாம். அர்ஜண்டீனாவுக்கு இரண்டாவது இடம். கூடவே Buenos Aires . கிழக்கு ஐரோப்பா, பால்டிக் ப…
-
- 27 replies
- 9.2k views
-
-
வழமையான ஒரு செவ்வாய்கிழமை. பல்கலைக்கழகத்திற்கு சென்றுவிட்டு வேலைத்தளத்தை நோக்கி காரில் பயணித்து கொண்டிருக்கின்றேன். கைத்தொலை பேசி அலறுகின்றது. கார் ஓட்டும் போது யார் எத்தனை முறை அழைத்தாலும் பதிலளிப்பதில்லை என சமீபத்தில் தான் ஒரு சத்தியம் பண்ணியது நினைவுக்கு வந்து தொலைத்தது. சாலை விளக்கு சிவப்பானதும் யார் என பார்த்தால் என்னுடைய மாமா. (உனக்கிருக்கும் 1000 மாமாவில் இது யார் என கேட்கப்படாது.) அதுவும் எனக்கு அதிகம் செல்லம் தரும் மாமா. காரை ஒரு இடத்தில் நிறுத்திவிட்டு பேசினால், மாமா மிகவும் பதட்டமாக இருப்பது குரலில் தெரிந்தது. போனை வையுங்க என சொல்லிவிட்டு மாமா வீட்டிற்கு போனால், மாமாவின் கண்களில் கண்ணீர். இதுவரை மாமா அழுது பார்த்ததில்லை என பொய் சொல்ல மாட்டேன். எங்கள் குடும்பத்த…
-
- 36 replies
- 6.7k views
-
-
புலத்தில் பிறந்தவர்களும், வளர்ந்தவர்களும் -அவமானப்படும் விடயம் எனக்கு நடந்தது, என்னை சுற்றியிருக்கும் சகோதர, சகோதரிகளுக்கு நடக்கும் ஒரு விடயம். (புலத்தில் பிறந்து வளர்பவர்கள், வளர்பவர்கள்) பிரச்சனை என்ன என்றால்? நாங்கள் தமிழ் கதைப்பது சரி ஆனால் யாழ்பாண தமிழ் கதைப்பதில்லாயாம்..அதாவது jaffna Slang . எனக்கு அதற்கு சரியான தமிழ் வார்த்தை தெரியவில்லை. (சோழியன் அண்ணாட்டா கேட்டிருக்கன்...பதில் வந்ததும் மாற்றப்படும்) தமிழ்கதைத்தால் போதாதா? இப்படி சொன்னால், தமிழ் கதைக்கும் பிள்ளை நாளை தமிழ் கதைக்க கூச்சப்படும்...யாராவாது ஏதாவது சொல்வார்களோ என.. காலை முதல் மாலை வரை வெளியே பாடசாலை, வகுப்புகள் என்று இருக்கும் ஒரு பிள்ளை, தமிழ் கதைத்தாலே அது பாராட்டபட வேண்டிய விடய…
-
- 22 replies
- 4.6k views
-
-
"வெள்ளைப் பொம்பிளை வேணுமெனக் கேட்கும் இலங்கைத் தமிழ்ப் பெடியள்" பொன்னர்: சில தமிழ்ப் பெடியள் தாங்க கட்டுறதுக்கு வெள்ளப்பொம்பிளை வேணும்...! வெள்ளைப் பிள்ளை பிறக்கிறது எண்டா குங்குமப்பூ சாப்பிட்டாச் சரி எண்டு நினைக்கினம்...! மன்னர்: அப்ப ஆபிரிக்கா கறுப்புப் பொம்பிளைகள் எல்லாம் தாங்கள் குங்குமப்பூ சாப்பிட்டு பிள்ளைப் பெத்தா ஆப்பிரிக்க சனத்தொகையே வெள்ளையாக மாறிப்போகுமே....? என்ன முட்டாள்தனமான கதை....? வெறும் முட்டாள்தனமான வெள்ளைமோகம்தான்...! பொன்னர்: அப்ப வெள்ளை நிறமான பொம்பிளை கேக்கிறது தமிழ்ப் பெடியளுக்கு வெள்ளைமோகமா இருக்கலாம்.... ஆனால் குங்குமப்பூ சாப்பிட்டா வெள்ளைப்பிள்ளை பிறக்கும் எண்டுறது? மன்னர்: அதுவும் ஒரு தவறான நம்பிக்கைதான். ஆனால் ஆதித்தம…
-
- 30 replies
- 6.3k views
-
-
எது அழகு? யார் அழகி? ஜெயபாஸ்கரன் உலகம், நாடுகள் மற்றும் நகரங்கள் தோறும் அழகிப் போட்டிகள் நடத்தி, அழகிகளைக் தேர்ந் தெடுப்பது என்பது இப்போது சிலருக்கு மிகவும் அத்தியாவசிய மானதொரு தேவையாகி விட்டது. ‘இவர்தான் அழகி’ என்று தேர்ந்தெடுப்பதற்கு ஒரு கூட்டம் தயாராக இருப்பது போலவே, இவர்தான் அழகியா? என்று வாய் பிளந்து வியப்பதற்கும் ஒரு கூட்டம் தயாராக இருக்கிறது. பக்கத்து வீடு பற்றி எரிந்து கொண்டிருக்கும்போது சிரித்து மகிழ்ந்தபடி சீட்டு விளையாடிக் கொண்டிருப்பவர்களுக்கும், சமூக மக்களின் துயரங்களைப் பற்றிக் கவலைப்படாமல் அழகிப்போட்டி நடத்திக் கொண்டிருப்பவர்களுக்கும் அப்படியொன்றும் பெரிய வித்தியாசம் கிடையாது. இவர் கொய்யாத்தோப்பு அழகி... இவர் கொண்டித்தோப்பு அழகி என்று…
-
- 0 replies
- 1.3k views
-
-
கணவரிடம் இதை மட்டும் சொல்லாதிங்க…! August 19, 2008 கணவன்-மனைவி இடையே எந்த ரகசியமும் இருக்கக் கூடாது. இருவரும் ஒருவரை ஒருவர் அகமும் புறமும் அறிந்திருக்க வேண்டுமென்று பொதுவாகச் சொல்வார்கள். ஆனால் அப்படி திறந்த புத்தகமாக இருக்காதீர்கள், அது நன்மையை விட தீமையைத் தான் அதிகம் ஏற்படுத்தும் என்கிறார்கள் உளவியல் நிபுணணர்கள். தம்பதிகள் காக்கும் தலையாய ரகசியங்களாக அவர்கள் கூறும் விஷயங்கள். பழைய நட்பு, காதல்… திருமண வாழ்க்கை மீதும், புதிதாக வாழ்வில் இணைந்திருக்கும் கணவர் மீதும் அளவற்ற மரியாதை வைத்திருக்கும் பெண்கள், தங்களின் முந்தைய காதல், நட்பு பற்றி வெளிப்படையாகச் சொல்ல வேண்டும், இல்லற வாழ்க்கையை ரகசியங்களுடன் ஆரம்பிக்கக் கூடாது என்று நினைக்கிறார்கள். ஆனால் அது வேலை…
-
- 29 replies
- 10.3k views
-
-
காதல் எங்கே போனது? சதீஷ் - ரேகா இருவரும் இப்போது பிரிந்துவிட்டார்கள். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை. குடும்ப நீதிமன்றத் தீர்ப்பின்படி குழந்தை இப்போது ரேகாவிடம் வளர்கிறது. இருவரும் காதல் கல்யாணம் செய்துகொண்டவர்கள். ''என் தலையெழுத்துடி, உன்னைப் போய் கல்யாணம் செய்துகொண்டேன் பார்'' - இப்படி ஆரம்பித்தது ஆரம்பக் கசப்பு. ''ஓடி ஓடி வந்து காதலிச்சுட்டு, இப்படிப் பேசுறீங்களே!'' - ரேகாவுக்கு அதிர்ச்சி! காதல் எங்கே போனது? ஆசை ஆசையாகக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டவர்கள் பிரிவது எதனால்? லியோ புஸ்காக்லியா (Leo puscaglia) என்கிற மனநல மருத்துவர், காதலைப் பற்றி ஆராய்ச்சி செய்தார். 'காதல் என்பது-நம்பிக்கை, அப்படியே ஏற்றுக்கொள்ளுதல், அக்கறையும் பகிர்வும்கொள்ளுதல்…
-
- 4 replies
- 6.7k views
-
-
தமிழ்நதி புளொக்கிலிருந்து மேற்படி கட்டுரையை இணைக்கிறேன். பெண்கள் சந்திப்பும் சில பேய்க்கதைகளும் “கேட்ட கேள்விக்குப் பதில் இல்லையெனில் மௌனமாய் இருக்கப் பழகுவது நல்லது”என்ற கவிதை வரிகளை, பெண்கள் சந்திப்பில் கலந்துகொண்டபோது எவ்வாறு மறந்திருந்தேன் என்பதை இப்போது நினைத்துப் பார்க்கும்போது என்மீதே ஆயாசம் பொங்குகிறது. உரிமைகளைக் குறித்துப் பேசக் கூடிய கூட்டத்திலும் பேச்சுரிமை என்பது தனிநபர்களின் செல்வாக்கு, அவர்களுடைய பின்புலம், சமூகத்தினால்(அன்றேல் அவர்களாலேயே) கட்டமைக்கப்பட்டிருக்கும் பிம்பங்கள் சார்ந்தது என்பதை அறியநேர்ந்ததில் வருத்தமே. முற்கூட்டிய தீர்மானங்களுடன் இப்பதிவினை வாசிக்க முனைபவர்கள் தயவுசெய்து வேறு பக்கத்தைக் கிளிக்கிட வேண்டுகிறேன். பெண்கள் ச…
-
- 15 replies
- 3.3k views
-