உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26643 topics in this forum
-
ஐ.எஸ் தீவிரவாதிகளின் புதிய யுத்தி குறித்த தகவல் வெளியானது! ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஐரோப்பியர்கள் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐரோப்பிய ஒன்றியத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. 2011 முதல் 2016ஆம் ஆண்டு காலப்பகுதியில் இவர்கள் இணைந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தநிலையில் ஈராக் மற்றும் சிரியாவில் தமது கட்டுப்பாட்டுப் பகுதியை இழந்த ஐ.எஸ் அமைப்பினர், தமது அமைப்பில் சேர்ந்துள்ள வெளிநாட்டவரை சொந்த நாடுகளுக்கே திருப்பி அனுப்பி வைப்பதை புது தந்திரமாக மேற்கொண்டு வருவதாக கூறப்படுகின்றது. இதன் ஊடாக ஐரோப்பிய நாடுகளில் தாக்குதல்களை மேற்கொள்வதற்கு அவர்கள் திட்டமிட்டு வருவதாகவ…
-
- 1 reply
- 667 views
-
-
லண்டனில், பாரிய தீ விபத்து! லண்டனிலுள்ள கட்டடம் ஒன்றில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கிழக்கு லண்டனின் Barking பகுதியிலுள்ள ஒரு குடியிருப்பில், உள்ளூர் நேரப்படி நேற்று(ஞாயிற்றுக்கிழமை) 3.31 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து 10 தீயணைப்பு வாகனங்களில் விரைந்த 100 தீயணைப்பு வீரர்கள், நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் மாலை 6 மணியளவில் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதன்போது எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படாத நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். http://athavannews.com/லண்டனில்-பாரிய-தீ-விபத்த/
-
- 0 replies
- 491 views
-
-
பிரமிப்புகளை அளிக்கும் பிரான்ஸ் - 1 பாரீஸ் பேரணியில் பங்கேற்ற உலகத் தலைவர்கள்.| படம்: ஏஎப்பி ‘‘வாள்முனையைவிடப் பேனா வலியது’’ என்பார்கள். துப்பாக்கியைவிட வலியதா? இதுதான் பாரீஸின் தற்போதைய தலைப்புச் செய்தி. பிரான்ஸ் நாட்டின் ‘தலை’யான பாரீஸ் மிகப் பெரிய நகரம். இங்கு வசிப்பவர்களின் எண்ணிக்கை சுமார் 23 லட்சம். மொத்த பிரான்ஸில் சுமார் 19 சதவீதம் பேர் பாரீஸில் வசிக்கிறார்கள். பிரான்ஸின் இரண்டாவது பெரிய நகரம் மார்ஸெய்லெஸ் இது பாரீஸின் அளவில் மூன்றில் ஒரு பங்குகூட இல்லை. நாட்டின் நிர்வாக, வணிக, கலாச்சார மையம் பாரீஸ்தான். பாரீஸ் தும்மினால் பிரான்ஸுக்கு ஜலதோஷம் பிடித்துக் கொள்ளும் என்பார்கள். ’இன்று உலகின் தலைநகரமாகிவிட்டது பாரீஸ்’’ என்கிறார் அதன் அதிபர் பிரான்கோயிஸ் ஹோலாந…
-
- 11 replies
- 4.5k views
-
-
அண்மையில் பிரித்தானிய ஆளும் பழமைவாதக் கட்சி பேராளர் மாநாட்டில்.. பிரித்தானியாவின் அகதிக் கொள்கையில் மாற்றம் கொண்டு வரப்படும் என்றும்.. அகதி விசா நடைமுறைகளில் துஷ்பிரயோகத்தை குறைக்கும் வகையில் அது இருக்கும் என்றும்.. அகதி அந்தஸ்து கிடைத்தாலும் நிரந்தர வதிவுரிமை என்பது எனி எல்லாருக்கும் சாத்தியமாகும் என்று கூற முடியாது என்றும்.. அகதி அந்தஸ்து எந்த நாட்டுக்கு எதிராகக் கோரப்பட்டதோ அந்த நாட்டில் நிலைமைகள் முன்னேறும் பட்சத்தில் அகதி அந்தஸ்து வழங்கப்பட்டவர்கள் அங்கு திருப்பி அனுப்பப்படக் கூடிய வகையில் மாற்றங்கள் வர உள்ளதாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் தெரசா மே தனது பேச்சில் குறிப்பிட்டிருந்தார். The overhaul also includes a new system of "safe return reviews" so asylum seekers…
-
- 22 replies
- 1.9k views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஃபிராங்க் கார்ட்னர் பதவி, பாதுகாப்பு நிருபர், பிபிசி நியூஸ் 21 நிமிடங்களுக்கு முன்னர் இரான் நடத்திய பல்வேறு ஏவுகணைத் தாக்குதல்களுக்கு இஸ்ரேலின் பதிலடி விரைவில் தொடங்கும் எனத் தோன்றுகிறது. முன்பு, இரானின் நெருங்கிய கூட்டாளிகளாகிய ஹெஸ்பொலா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லாவையும், ஹமாஸின் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியேவையும் இஸ்ரேல் கொலை செய்ததற்கான பதிலடியாகவே இரான் இந்தத் தாக்குதலை நடத்தியதாகக் கூறுகிறது. இஸ்ரேலின் பதிலடி "துல்லியமானதாகவும் மரண அடியாகவும்" இருக்கும் என்றும், இரான் எதிர்பார்க்காத தருணத்தில் பதிலடி விழும் என்றும் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் யோவ…
-
- 0 replies
- 362 views
- 1 follower
-
-
வெள்ள பாதிப்பை பார்வையிட சென்ற ஸ்பெய்ன் அரச தம்பதியர் மீது சேறு வீச்சு! வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வலென்சியாவிற்கு விஜயம் செய்த போது கோபமடைந்த எதிர்ப்பாளர்களால் ஸ்பெய்ன் மன்னர் மற்றும் ராணி மீது சேறு மற்றும் பிற பொருட்களை வீசியுள்ளனர். கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான பைபோர்டா நகரில் எதிர்ப்பாளர்கள் அரச தம்பதிகள் மற்றும் ஸ்பெய்னின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் ஆகியோரை நோக்கி “கொலைகாரன்” என்று கூச்சலிட்டனர். எனினும், முகத்திலும் உடைகளிலும் சேறு படிந்த நிலையில், மன்னன் ஃபெலிப்பே மற்றும் ராணி லெடிசியா பின்னர் கூட்டத்தின் உறுப்பினர்களை ஆறுதல்படுத்துவதற்கு முனைந்தார். அதிகரித்து வரும் பதற்றம் காரணமாக, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மற்றொரு நகரமான சிவாவுக்குச் ச…
-
-
- 9 replies
- 525 views
-
-
நான் மகாத்மா காந்தியால் மிகவும் கவரப்பட்டேன் பாரக் ஒபமா தெரிவிப்பு வீரகேசரி நாளேடு - அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர்களுக்கான தெரிவில் ஜனநாயக கட்சியின் முன்னணி போட்டியாளராக விளங்கும் ஒபமா தான் மகாத்மா காந்தியின்பால் மிகவும் கவரப்பட்டுள்ளதாக தெரிவித்தார். சாதாரண மக்களால் அசாத்தியமான காரியங்கள் செய்ய முடியும் என்பதை ஞாபகப்படுத்தும் வகையில் மகாத்மா காந்தியின் உருவப்படத்தை தனது அலுவலகத்தில் வைத்துள்ளதாக ஒபமா கூறினார். ""நான் எனது வாழ்க்கையில் மகாத்மா காந்தியை ஒரு முன்னுதாரணமாகவே எப்போதும் காண்கிறேன். சாதாரண மக்கள் இணைந்து அசாத்திய காரியங்களைச் செய்யவும் மாற்றத்தைக் கொண்டுவரவும் முடியும் என்பதை அவர் செய்து காட்டியவர்'' என "இன்டியா அப்ரோட்'' பத்திரிகைக்கு எழுதிய கட்…
-
- 9 replies
- 2.2k views
-
-
தீவிரவாத தாக்குதல் அபாயம்: பெல்ஜியத்தில் உச்சகட்ட பாதுகாப்பு பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் மத்திய ரயில் நிலையம் முன்பு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்கள். படம்: ஏஎப்பி தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக பெல்ஜியம் முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 13-ம் தேதி இரவு பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 130 பேர் பலியாயினர். பெல்ஜியத்தை சேர்ந்த ஐ.எஸ். தீவிரவாத குழு தாக்குதலை தலைமையேற்று நடத்தியது விசாரணையில் தெரியவந்தது. பாரீஸை தொடர்ந்து பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட…
-
- 0 replies
- 562 views
-
-
பீய்ஜிங் விமான நிலையத்தில் 'உலகின் மிகப் பெரிய' புதிய பயணிகள் தளம் பீய்ஜிங்கின் புதிய விமான பயணிகள் தளம் சீனத் தலைநகர் பீய்ஜிங்கின் விமான நிலையத்தில் புதிய டெர்மினல் அதாவது பயணிகள் தளம் ஒன்று இன்று உத்தியோகப்பூர்வமாகத் திறக்கப்பட்டு, முதன்முதலாக பயணிகளை வரவேற்றுள்ளது. இவ்வாண்டில் பின்னர் நடக்கவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளின்போது ஏராளமான பயணிகள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அவர்கள் இத்தளத்தைப் பயன்படுத்துவார்கள். உலகின் மிகப் பெரிய விமான பயணிகள் தளம் இதுதான் என்று சீனா கூறுகிறது. 170 கால்பந்தாட்ட மைதானங்களின் பரப்பளவு கொண்டது அது. பிரிட்டிஷ் கட்டிட வடிவமைப்பாளர் நோர்மன் ஃபாஸ்டர் இதனை வடிவமைத்துள்ளார். நான்கே ஆண்டுகளில் ஐம்பதாயி…
-
- 0 replies
- 611 views
-
-
06 DEC, 2024 | 10:55 AM உலகம் அணுவாயுத யுகத்தின் விளிம்பில் உள்ளதாக பிரிட்டனின் ஆயுத படை தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். உலகம் மாற்றமடைந்துவிட்டது என தெரிவித்துள்ள அட்மிரல் சேர் டொனி ரடக்கின் உலகளாவிய சக்தி மாறுகின்றது, மூன்றாவது அணுசக்தி யுகத்தை எதிர்கொள்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார். இந்த யுகம் அதற்கு முந்தைய அணுசக்தியுகத்தை விட சிக்கலானது என தெரிவித்துள்ள பிரிட்டனின் ஆயுதப்படைகளின் தளபதி இந்த யுகத்தின் முதலாவது பனிப்போர், இரண்டாவது யுகத்தில் ஆயுதகளைவு முயற்சிகள் இடம்பெற்றன என தெரிவித்துள்ளார். உக்ரைனில் ரஸ்யாவின் யுத்தமும் மத்தியகிழக்கின் பல்வேறு யுத்தங்களும், உலகின் சமநிலைக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன எனவும்…
-
- 2 replies
- 321 views
- 1 follower
-
-
தமிழகத்தில் உள்ள கண்மாய், குளங்களில் மணற் கொள்ளையில் ஈடுபட தமிழகத்தை ஆளும் அதிமுக அரசு திட்டமிட்டுள்ளதாகவும், அதனை தடுக்க பொதுமுக்கள் முன்வருமாறும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார். தமிழகத்தின் ஆற்றுப்படுகையில் ஆளும் கட்சியினர் கணக்கின்றி மணலை அள்ளி விற்பனை செய்து, நமது ஆற்று வளத்தை சூறையாடி வருகிற செயல் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. உயர்நீதிமன்றத்தின் தலையீடு, பொதுமக்களின் விழிப்புணர்வு காரணமாக, பிரதான ஆற்றுப்படுகைகளில், மணல் திருட்டு குறைந்து உள்ளது. எனினும் ஆளும் கட்சிக்கு வருவாய் ஈட்டும் முக்கியத் தொழிலாக சட்டவிரோத மணல் திருட்டு அமைந்து உள்ளதால், பிரதான ஆற்றுப்படுகைகளைத் தவிர்த்து பல சிற்றாறுகள், கால்வரத்துப் பகுதிகள் காட்டாறுகளை…
-
- 2 replies
- 472 views
-
-
கொடூர கொலைகளும் முறையான நிர்வாகமும்: அம்பலமான ஐஎஸ் அமைப்பின் செயல்முறைகள் படம்: ராய்ட்டர்ஸ். அமெரிக்க அமைச்சர் ஜான் கெரி ஐஎஸ் அமைப்பை பைத்தியம் பிடித்த கொடூர அமைப்பு என்றும், பிரான்ஸ் அதிபர் ஹோலாந்தே காட்டுமிராண்டிகள் என்றும், பிரிட்டன் பிரதமர் கொலையை வழிபாடு செய்யும் அமைப்பு என்றும் வர்ணித்துள்ளனர். ஆனால் இஸ்லாமிக் ஸ்டேட் அமைப்பு இவற்றையெல்லாம் தாண்டியது என்பதே தற்போது வெளிவந்துள்ள செய்தியாகும். இது குறித்து 'தி கார்டியன்' ஊடகத்துக்கு கிடைத்துள்ள ஆவணங்களின் படி, ஐஎஸ் அமைப்பில் ஆட்சி அதிகாரிகள், சிவில் ஊழியர்கள் ஆகியோர் உள்ளனர் என்றும் இவர்களே மீன்பிடி தொழில் முதல் ஆடை ஒழுங்கு முறைகள் வரை அனைத்தையும் பற்றி விதிமு…
-
- 0 replies
- 479 views
-
-
ஐ.எஸ். தீவிரவாதிகளை அழித்துவிடுங்கள்: ஐநாவிடம் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்த 21-வயது யாஷிடி பெண் நியூயார்க்: ஐ.எஸ். தீவிரவாதிகளை முற்றிலுமாக அழித்துவிடுங்கள் என்று 21-வயது யாஷிடி இனப் பெண் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார். உலகையே மிரட்டும் ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் சிரியா மற்றும் ஈராக் நாடுகள் சிக்கி தவித்து வருகின்றன. ஐ.எஸ். தீவிரவாதிகள் குழந்தைகள், பெண்களை கடத்தி வந்து பாலியல் பலாத்காரம் செய்து சந்தைகளில் விற்பனை செய்தும், கொன்று குவித்தும் அட்டூழியம் செய்து வருகின்றனர். ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படைகள் மும்முரமாக தாக்குதல் நடத்தி வருகின்றன. கடந்த சில மாதங்களாக ரஷ்யாவு…
-
- 3 replies
- 844 views
-
-
திரையுலகினரின் உண்ணாவிரத போராட்டம்: ரஜினிகாந்த் கலந்து கொள்கிறார் சென்னை, ஏப். 2: கர்நாடகத் தில் தமிழர்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்களைக் கண்டித்து தமிழ்த் திரையுல கம் சார்பாக சென்னை சேப் பாக்கத்தில் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள உண்ணாவி ரதப் போராட்டத்தில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொள்கி றார். ஏற்கெனவே திட்டமிடப் பட்ட வெளிநாட்டுப் பயணம் காரணமாக நடிகர் கமல்ஹா சன் மதியம் 12 மணிக்கு பங் கேற்கிறார். தமிழ்த் திரைப்படத் துறையைச் சார்ந்த அனைத்துப் பிரிவினரும் கலந்து கொள்ளும் உண்ணாவிரதப் போராட்டத்தில் நடிகர், நடிகையர் உள்பட அனைத்துப் பிரிவினரும் கலந்துகொள்ள வேண்டும் என தமிழ்த் திரைப்பட சங்கங்கள் சார் பாக செவ்வாய்க்கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதிலும் கு…
-
- 64 replies
- 9k views
-
-
Five Eyes அமைப்பிலிருந்து கனடாவை வெளியேற்ற அழுத்தம் கொடுக்கும் அமெரிக்கா? Five Eyes அமைப்பிலிருந்து கனடாவை வெளியேற்ற அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கனடா, Five Eyes alliance என்னும் அமைப்பில் அங்கத்துவம் பெற்ற நாடாக இருந்து வருகின்றது. உளவுத்தகவல்கள் ஒத்துழைப்புக்காக 1941ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த அமைப்பில், கனடாவுடன், அமெரிக்கா, அவுஸ்திரேலியா, பிரித்தானியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள் கூட்டாளர்களாக உள்ளன. இந்நிலையில், வெள்ளை மாளிகை மூத்த அலுவலரும், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் நெருங்கிய ஆலோசகர்களில் ஒருவருமான பீற்றர் நவாரோ (Peter Navarro) என்பவர், தற்போது கனடாவை Five Eyes அமைப்பிலிருந்து கனடாவை வெளியேற்ற அழுத்தம் கொடுத்து வருகிறார் எனத…
-
- 0 replies
- 341 views
-
-
கனடாவில் பள்ளியில் மர்ம நபர் துப்பாக்கிச் சூடு: 5 பேர் பலி; காயம் 2 கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடியூ. கனடா நாட்டின் சஸ்கட்சேவன் மாகாணத்தில் உள்ள ஒரு உயர்நிலைப்பள்ளிக்குள் புகுந்த மர்மநபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஐந்து பேர் பலியாகினர். 2 பேர் படுகாயமடைந்தனர். இத்தகவலை அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ருடியூ உறுதிப்படுத்தியுள்ளார். ஸ்விட்சர்லாந்தின் டேவாஸ் நகரிலிருந்து அவர் கூறும்போது, "சஸ்கட்சேவனில் உள்ள லா லோச்சே பகுதியில் ஏழாம் வகுப்பில் இருந்து பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பயிலும் உயர்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்குள் துப்பாக்கியுடன் நுழைந்த மர்மநபர் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் ஐந்து பேர் பலியாகினர்.…
-
- 0 replies
- 435 views
-
-
சிம்பாப்வே துணை ஜனாதிபதியை கொல்ல முயன்ற மனைவி: வழக்கு விசாரணை ஒத்திவைப்பு சிம்பாப்வே துணை ஜனாதிபதி கான்ஸ்டான்டினோ சிவெங்காவைக் அவரது மனைவி கொலை செய்ய முயன்றதாக குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கு விசாரணை ஹராரே நீதிமன்றத்தில் நேற்று (திங்கட்கிழமை) எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, துணை ஜனாதிபதியின் மனைவியும், தொழிலதிபரும், முன்னாள் மொடல் அழகியுமான மேரி முபைவா, பலத்த பாதுகாப்புக்கு இடையில் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார். அப்போது அவர் மீது கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னதாக துணை ஜனாதிபதி கான்ஸ்டான்டினோ சிவெங்காவை, மருத்துவ சிகிச்சைக்காக தென்னாபிரிக்கா- பிரிட்டோரியா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது, கொல்ல முயன்ற…
-
- 0 replies
- 350 views
-
-
தமிழகம்: ஆதிக்க சாதிவெறித்தனத்தின் புதிய பரிமாணங்கள்! தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான ஆதிக்க சாதித் திமிரும், வன்கொடுமையும் மட்டுமின்றி, ஆதிக்க சாதிக் கும்பலின் சுயசாதிப் பற்றும், பெருமையும் பச்சையாக, அருவெறுக்கத்தக்க வகையில் மீண்டும் தமிழகத்தில் வெளிப்பட்டு வருகிறது. அரசு பொதுப் பள்ளியில் தாழ்த்தப்பட்டோர் சேர்க்கப்படுவதை மறுப்பதாக, தாழ்த்தப்பட்டோர் கோவில் நுழைவதைத் தடுப்பதாக, கலப்பு மணத்தை எதிர்ப்பதாக, தாழ்த்தப்பட்ட பஞ்சாயத்துத் தலைவர்களை அவமதிப்பதாக, ஆதிக்க சாதிக் கட்டுப்பாடுகளை மீறுபவர்களை ஊரை விட்டு ஒதுக்குவதாக, தீண்டாமைச் சுவராக, இரட்டை டம்ளராக, தாழ்த்தப்பட்டோர் படித்தும், உழைத்தும் சுயமரியாதையுடன் வாழ்வதைப் பொறுத்துக் கொள்ளமுடியாத பொறாமையாக இப்படிப் பல்வேறு வடிவங…
-
- 0 replies
- 2k views
-
-
இத்தாலியின் வெனிஸ் நகரை மீண்டும் வெள்ளப்பெருக்கு நனைத்துள்ளது. கடந்த நவம்பர் மாதம் பெரும் வெள்ளப்பெருக்க சந்தித்த வெனிஸ் நகரம் அதிலிருந்து மெல்ல மீண்டது. இந்நிலையில் வெனிஸ் நகரை வெள்ளப்பெருக்கு முற்றுகையிட்டுள்ளது. இதனால் அங்குள்ள புனித மார்க் சதுக்கம் உள்ளிட்ட இடங்களை தண்ணீர் சூழ்ந்துள்ளது. கிறிஸ்துமஸ் கொண்டாட உள்ள நிலையில் ஏற்பட்டுள்ள திடீர் வெள்ளப்பெருக்கு வெனிஸ் மக்களை துயரத்தில் ஆழ்த்தி உள்ளது. https://www.polimernews.com/dnews/94073/வெனிஸ்-நகரில்-மீண்டும்பெருக்கெடுத்த-வெள்ளத்தால்மக்கள்-தவிப்பு https://globalnews.ca/news/6329944/venice-italy-flooding-december/
-
- 0 replies
- 437 views
-
-
இதுவரை 425 பேர் உயிரிழப்பு: வுஹான் நகர் இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது! சீனாவின் வுகான் நகரில் கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவியுள்ள நிலையில் இதுவரை வெளியான தகவலின் பிரகாரம் 425 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பின் தகவலின்படி நேற்று (திங்கட்கிழமை) மாலை வெளியிடப்பட்டதன் அடிப்படையில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் வுஹான் நகரை சீன இராணுவம் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து மக்களுக்கான அடிப்படைப் பொருட்கள் கிடைப்பதற்கான வேலையில் இராணுவம் இறங்கியுள்ளது. இதன் ஒருகட்டமாக 200இற்கும் அதிகமான இராணுவ உயர் அதிகாரிகளுடன் 130 வாகனங்கள் வுஹான் நகரை அடை…
-
- 0 replies
- 476 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்… - அமெரிக்க- கியூப உறவில் ஒரு புதிய விடியலாக கம்யூனிஸ கியூபாவுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா விஜயம். - தென்னாப்பிரிக்க பல்கலைக்கழகங்களில் அண்மைக்காலமாக தொடரும் போராட்டங்கள் அங்கு மீண்டும் இன முரண்பாடு தொடர்வதை காண்பிக்கிறது. தனது தேசிய நல்லிணக்க திட்டத்தை பூர்த்தி செய்து விட்டதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. - தனது உயிரை காப்பாற்றியவரை சந்திக்க ஆயிரக்கணக்கான மைல்கள் பயணிக்கும் ஒருபென்குவின்.
-
- 0 replies
- 381 views
-
-
2020 ஜனாதிபதி தேர்தலில் டொனால்டிரம்பை வெற்றிபெறச்செய்வதற்கான முயற்சிகளை ரஸ்யா மீண்டும் ஆரம்பித்துள்ளது என அமெரிக்க புலனாய்வு அமைப்புகளின் தேர்தல்கள் தொடர்பான சிரேஸ்ட அதிகாரிகள் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களிற்கு தெரிவித்துள்ளனர் என சிஎன்என் தெரிவித்துள்ளது. டொனால்ட் டிரம்பினை தொடர்ந்தும் அதிகாரத்தில் வைத்திருப்பதற்கான இலக்குடன் ரஸ்யா மீண்டும் செயற்பட ஆரம்பித்துள்ளது என அவர்கள் எச்சரித்துள்ளனர். கடந்த வாரம் தேர்தல் பாதுகாப்பு அதிகாரிகள் இது குறித்து காங்கிரஸ் உறுப்பினர்களிற்கு முழுமையான தகவல்களை வழங்கியுள்ளனர். ஹக்கிங்,சமூக ஊடகங்களை ஆயுதமாக்குதல்,தேர்தல் உள்கட்டமைப்புகளை தாக்குதல் உட்பட பல விடயங்கள் குறித்து அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். ரஸ்யா டி…
-
- 1 reply
- 527 views
-
-
17,000 கோடியை சுருட்டிய சஹாரா! சுருட்டியும் பிடிபடாத அம்பானி!! கடன் பத்திரங்களை விற்று திரட்டிய ரூ 17,700 கோடி நிதியை வட்டியுடன் முதலீட்டாளர்களுக்கு திரும்பக் கொடுக்குமாறு உச்ச நீதிமன்றம் சஹாரா குழுமத்துக்கு உத்தரவிட்டுள்ளது. அதைத் தொடர்ந்து சஹாராவின் சார்பாக ‘உணர்ச்சிபூர்வமாக சொல்கிறோம்’ என்ற தலைப்புடன் ஆங்கில நாளிதழ்களில் முழு பக்க விளம்பரங்கள் கடந்த வாரங்களில் வெளியிடப்பட்டிருந்தன. (விளம்பரத்தை பார்க்க இங்கே அழுத்தவும்) சுப்ரதோ ராயால் 1978-ல் தொடங்கப்பட்ட சஹாரா உத்தர பிரதேச கிராம மக்களிடம் சிறு முதலீடுகளை திரட்டுவதன் மூலம் தனது வியாபரத்தை ஆரம்பித்தது. ஒரு நாளைக்கு ஒரு ரூபாய் என்ற அளவில் கூட சேமிப்பு வாங்கப்பட்ட இந்தத் திட்டம் 4 கோடி மக்களை ஈர்த்தது. இந்த அடித…
-
- 0 replies
- 949 views
-
-
உலகின் மிகப் பெரும் செல்வந்தர் பட்டத்தை இழந்தார் ஈலோன் மஸ்க். டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் உரிமையாளரான ஈலோன் மஸ்க், உலகின் மிகப் பெரும் செல்வந்தர் என்ற பட்டத்தை இழந்துள்ளார். ஒரக்கிள் மென்பொருள் நிறுவனத்தின் இணை நிறுவனர் லாரி எலிசன், அவரை முந்தி முதலிடத்தைப் பிடித்துள்ளார். இது குறித்து ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டு எண் தெரிவித்ததாவது, புதன்கிழமை காலை நிலவரப்படி எலிசனின் சொத்து மதிப்பு 393 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளது. இதேவேளை மஸ்க்கின் சொத்து மதிப்பு 385 பில்லியன் டொலர்களாகக் குறைந்துள்ளது. ஒரக்கிள் பங்குகள் 40 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்ததே எலிசன் 1 ஆவது இடத்தைப் பிடிப்பதற்குக் காரணமாகும். இவ்வாண்டு டெஸ்லா பங்குகள் சரிவு கண்டுள்ளமையும…
-
- 4 replies
- 298 views
- 1 follower
-
-
சிரியாவில் குண்டுவெடிப்பு: 101 பேர் உயிரிழப்பு சிரியாவின் ஜப்லே நகரில் குண்டு வெடிப்பு நடந்த பிறகு அப்பகுதியை பார்வையிடும் ஒருவர். | படம்: ஏ.ஏஃப்.பி. படம்: ஏஎஃப்.பி சிரியாவில் குண்டுவெடிப்பில் சிக்கி 101 பேர் உயிரிழந்தனர். தலைநகர் டமஸ்கஸ் மண்டலத்துக்கு உட்பட்ட ஜப்லே மற்றும் டார்டஸ் நகரங்களில் குண்டு வெடிப்புச் சம்பவம் நடந்துள்ளது. இன்று (திங்கள்கிழமை) காலை 7 மணியில் இந்த இரு நகரங்களிலும் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. மொத்தம் 7 சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்தன. ஜப்லே நகரில் 53 பேரும், டார்டஸ் ந…
-
- 0 replies
- 384 views
-