உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26643 topics in this forum
-
நாம் தமிழர் கட்சி தலைவர் டைரக்டர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இந்தியாவின் வெளியுறவு செயலர் நிருபமாராவ், பாதுகாப்புச் செயலர் பிரதீப்குமார் ஆகியோருடன் இரண்டு நாள் பயணமாக இலங்கை சென்ற பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன், அந்நாட்டு அதிபர் ராஜபக்சே, வெளியுறவு அமைச்சர் பெய்ரீஸ் ஆகியோரைச் சந்தித்துப் பேசிய பிறகு கொழும்புவில் இந்திய பத்திரிகையாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில் இலங்கை இனப் பிரச்சினைக்கு தமிழர்களுடன் சேர்ந்து ஒரு அரசியல் ஏற்பாட்டை உருவாக்க வேண்டும். அதனை உடனடியாக, விரைவாகச் செய்ய வேண்டும் என்று இலங்கை அரசிடம் வலியுறுத்தியுள்ளோம் என்று கூறியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் இலங்கையில் இருந்து வெளியாகும் நாளிதழ்களிலும் இணையத் த…
-
- 0 replies
- 1.9k views
-
-
'இரான் முதலில் தன்னை கண்ணாடியில் பார்த்துக் கொள்ள வேண்டும்': அமெரிக்கா இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைMEHDI PEDRAMKHOU இரானில் ராணுவ அணிவகுப்பில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் 25 பேர் கொல்லப்பட்டதற்கு காரணம் என்ன என்பதை தெரிந்து கொள்ள, இரான் 'தன்னை தானே முகக்கண்ணாடியில் பார்த்துக் கொள்ள வேண்டும்' என ஐ.நாவுக்கான அமெரிக்கத்தூதர் வலியுறுத்தியுள்ளார். …
-
- 1 reply
- 537 views
-
-
பொரிஸ் ஜோன்சன் 8வது முறையாக தந்தை பட்டம் பெற்றுள்ளார். கெர்ரி ஜான்சனுக்கு கடந்த 5ம் திகதி குழந்தை பிறந்த நிலையில் 59 வயதான பிரித்தானிய முன்னாள் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் 8வது முறையாக தந்தை பட்டம் பெற்றுள்ளார். பொரிஸ் ஜோன்சன் மூன்று முறை திருமணம் செய்து கொண்டார் என்பதோடு அவரது இரண்டாவது திருமணத்தின் பின் நான்கு குழந்தைகள் அவருக்கு உள்ளனர். அவரது தற்போதைய காதலிக்கு ஏற்கனவே, ஒரு குழந்தை பிறந்தது, தற்போது திருமணத்திற்குப் பிறகு மேலும் இரண்டு குழந்தைகள் பிறந்துள்ளன. https://athavannews.com/2023/1338893
-
- 4 replies
- 448 views
-
-
Published By: RAJEEBAN 25 SEP, 2023 | 12:36 PM அவுஸ்திரேலியாவின் ஏனைய மக்களை போல அகதிகளையும் சமமாக நடத்தவேண்டும் என கோரி இலங்கை ஈரானை சேர்ந்த 20 பெண் அகதிகள் மெல்பேர்னில் குடிவரவு துறை அமைச்சர் அன்ரூ கைல்சின் அலுவலகத்திலிருந்து கான்பெராவின் நாடாளுமன்றத்தை நோக்கி நடைபேரணியை ஆரம்பித்துள்ளனர். அவுஸ்திரேலியாவில் பல வருடங்களாக வாழும் அகதிகள் புகலிடக்கோரிக்கையர்களை சமமாக நடத்தவேண்டும் என கோரியே பெண்கள் இந்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். வெள்ளிக்கிழமை இந்த போராட்டத்தை ஆரம்பித்துள்ள பெண்கள் இன்று மத்திய விக்டோரியாவின் மத்திய பகுதியில் உள்ள நகம்பையை சென்றடைந்தனர். முன்னைய அரசாங்கம் அகதிகளின் கோரிக்க…
-
- 107 replies
- 5.8k views
- 1 follower
-
-
இந்திய பெண்களின் முதல் ஓரினத் திருமணம் அமெரிக்காவில் நடைபெற்றுள்ளது. ஷெனொன் மற்றும் சீமா என்ற இருவருமே ஓரினத் திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர். இவர்கள் இருவரும் ஆறு வருடங்களுக்கு முன்னர் சந்தித்துள்ளனர். சந்திப்பு நிகழ்ந்து சில மாதங்கள் கழித்து இருவருக்கிடையே உறவு வளர்ந்துள்ளது. இதனால் இவர்கள் இருவரும் திருமண பந்தத்தில் இணைந்துகொள்ளத் தீர்மானித்துள்ளனர். இந்திய சம்பிரதாய முறைப்படி அவர்களுக்கு திருமணம் நடைபெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உடற்பயிற்சி நிலையமொன்றின் பயிற்சியாளராக ஷெனொன் பணியாற்றி வந்துள்ளார். அங்கு உடற்பயிற்சிக்காக வந்த சீமாவின் அழகு தன்னை ஈர்த்ததாகவும் அதனால் ஆழமான அன்புகொண்டதாகவும் ஷெனொன் தெரிவித்துள்ளார். http://virakesar…
-
- 20 replies
- 1.7k views
-
-
இணைய தள இளைஞர்களுடன் சந்திப்பு,கல்லூரி மாணவ, மாணவிகளிடம் குறுந்தகடு கொடுப்பது,கட்சி பொதுக்கூட்டம் என பிஸியாகவே இருக்கிறார் வைகோ. இவற்றுக்கு நடுவே தாயகத்தில் பேட்டிக்காக நேரம் ஒதுக்கிக் கொடுத்தார்.சொன்ன நேரத்துக்கு முன்னதாகவே வந்துவிட்ட அவர், சளைக்காமல் கேள்விகளுக்கு பதில் சொன்னார். அவரது பேச்சில் நிதானமும் சாதுரியமும் தெரிந்தது. ஈழப்பிரச்னை பற்றி பேசிய போது, அவரது கோபம் வெளிப்பட்டது. இனி அவரிடம் பேசியதிலிருந்து... தேர்தலில் அ.தி.மு.க.வெற்றி பெற்று ஆட்சி அமைத்துவிட்டது. அ.தி.மு.க. கூட்டணியிலிருந்து விலகியதற்காக இப்போது வருத்தப்படுகிறீர்களா? ‘‘அரசியலில் 48 ஆண்டுகளாக இருக்கிறேன். எங்கள் குடும்பம் காங்கிரஸ் இயக்கத்தை ஆதரித்து வந்தது. கல்லூரியில் சேர்ந்த பின்னர் அண…
-
- 0 replies
- 570 views
-
-
அமெரிக்காவில் பயங்கரம் : மர்ம நபரின் துப்பாக்கிச் சூட்டில் 22 பேர் உயிரிழப்பு! அமெரிக்காவில் மர்ம நபரொருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 22 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது. மைன் நகரில் உள்ள லெவிஸ்டன் பகுதியிலேயே நேற்றிரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. மேலும் இத்துப்பாக்கிச் சூட்டில் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர், எனவும் அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்த விசாரணைகளைப் பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர். https://athavannews.com/2023/1355686
-
- 19 replies
- 1.5k views
- 1 follower
-
-
பிரித்தானிய பிரதமர் தெரேசா மே இற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தோல்வி December 12, 2018 1 Min Read பிரித்தானிய பிரதமர் தெரேசா மேயிற்கெதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்கடிக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய பிரதமர் தெரேசா மே இற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை Dec 12, 2018 @ 09:23 பிரித்தானிய பிரதமர் தெரேசா மே இற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்று கொண்டு வரப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் மீதான வாக்கெடுப்பு இன்று மாலை 06 மணியளவில் நடக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொன்சர்வேற்றிவ் கட்சியின் 48பாராளுமன்ற உறுப்பினர்கள் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானக் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளதைத் தொடர்…
-
- 0 replies
- 463 views
-
-
குழந்தைக்கு ஹிட்லரை குறிக்கும் பெயர் சூட்டிய தம்பதிக்கு சிறை December 19, 2018 பிரித்தானியாவில் தம்பதியர் ஒருவர் தங்களது குழந்தைக்கு ஹிட்லரை குறிக்கும் வகையில் பெயர் சூட்டியதன் காரணமாக கைது செய்யளப்பட்டுள்ளனர். தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்தின் உறுப்பினர்கள் என குற்றஞ்சாட்டப்பட்டே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது. இவர்கள் தங்களது குழந்தையின் பெயரின் மத்திய பகுதியில் ஹிட்லரை போற்றும் விதமாக அடால்ப் எனப் பெயர் சூட்டியுள்ளனர். பிரித்தானியாவின் பான்பரி நகரத்தைச் சேர்ந்த தம்பதிகளான 22 வயது அடம் தோமஸ் மற்றும் 38 வயது க்ளவுடியா படடஸ் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நாஜி தத்துவங்களை செயல்படுத்த முனையும் நவ நாஜிக்கள் …
-
- 2 replies
- 1.2k views
-
-
படத்தின் காப்புரிமை Getty Images தனது அதிபர் பதவியை விட்டுக்கொடுத்தால், வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவுக்கு பொது மன்னிப்பு வழங்குவது தொடர்பாக தான் கருத்தில் கொள்ள போவதாக அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவரும், தேசிய சட்டமன்றத் தலைவருமான குவான் குவைடோ தெரிவித்துள்ளார். புதன்கிழமையன்று தன்னை வெனிசுவேலாவின் இடைக்கால அதிபராக அறிவித்துக்கொண்ட குவான் குவைடோ, நாட்டில் தற்போது நிலவிவரும் குழப்பம் மற்றும் நிலையில்லா தன்மையை முடிவுக்கு கொண்டுவர ராணுவம் உள்பட நாட்டின் அனைத்து துறைகள் மற்றும் அமைப்புகளையும் தான் அணுகவுள்ளதாக ஒரு நேர்காணலில் தெரிவித்தார். …
-
- 0 replies
- 346 views
-
-
சிரியாவில் தாக்குதலொன்றில் நான்கு ஈரான் இராணுவ அதிகாரிகள் பலி - இஸ்ரேல் மீது குற்றச்சாட்டு சிரியாவில் இடம்பெற்ற தாக்குதலொன்றில் ஈரானின் நான்கு சிரேஸ்ட பாதுகாப்பு அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளனர். சிரிய தலைநகரில் இடம்பெற்ற விமானதாக்குதல் ஒன்றிலேயே இவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் இஸ்ரேலே இந்த தாக்குதலை மேற்கொண்டதாக ஈரான் இராணுவம் குற்றம்சாட்டியுள்ளது. சிரிய தலைநகருக்கு தென்மேற்கில் உள்ள மசே பகுதியில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இந்த பகுதியில் இராணுவத்தினர் பயன்படுத்தும் விமானநிலையமொன்று உள்ளமை குறிப்பிடத்தக்கது. ஐக்கியநாடுகள் அலுவலகமும் தூதரகங்களும் இந்த பகுதியிலேயே …
-
-
- 5 replies
- 795 views
-
-
மெல்போர்ன்: மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான எம்.ஹெச்.148 ரக விமானம் என்ஜின் கோளாறால் 300 பயணிகளுடன் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. ஆஸ்திரேலியா தலைநகர் மெல்போர்னில் இருந்து மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான எம்.ஹெச்.148 ரக விமானம் மலேசியா தலைநகர் கோலாலம்பூருக்கு புறப்பட்டு சென்றது. புறப்பட்ட சென்ற சில நிமிடங்களிலே விமானத்தில் பிரச்சனை கண்டறியப்பட்டது. உடனடியாக விமானம் அவசர, அவசரமாக மெல்போர்னிலேயே தரையிறக்கப்பட்டது. விமானத்தில் இருந்த சுமார் 300 பயணிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனம் கடந்த ஆண்டு இருபெரும் விபத்துக்களை சந்தித்தது. மார்ச் மாதம் சுமார் 230 பயணிகளுடன் மலேசிய ஏர்லைன்சுக்கு சொந்…
-
- 2 replies
- 347 views
-
-
பட மூலாதாரம்,COLLIER LANDRY படக்குறிப்பு, கோலியர் லேண்ட்ரி பாயில் தனது தந்தைக்கு எதிரான விசாரணையில் சாட்சியம் அளித்தார். 3 மணி நேரங்களுக்கு முன்னர் -நான் கோலியர் லேண்ட்ரி பாயில். - உங்கள் வயது என்ன என்று சொல்லுங்கள். -எனக்கு 12 வயது ஆகிறது - நீங்கள் டிசம்பர் 30 அன்று ஒன்பது மணியளவில் படுக்கைக்குச் சென்றதாகச் சொன்னீர்கள். அன்றிரவு உங்களை தூக்கத்தை தொந்தரவு செய்யும் வகையில் ஏதாவது நடந்ததா? - என் சகோதரியிடம் இருந்து ஓர் அலறல் சத்தம் கேட்டது. அம்மாவுக்கு ஏதோ பிரச்னை என்றுதான் முதலில் நினைத்தேன். சிறிது நேரம் கழித்து, மூன்று நிமிடங்களுக்கு தொடர்ந்து சத்தமாக கதவை தட்டும் சத்தம் கேட்டது. - அந்த `ஒலி’ எப்பட…
-
- 0 replies
- 434 views
- 1 follower
-
-
ரஷ்யா விமானத்தில் திடீர் தீ – குழந்தைகள் உட்பட 41 பேர் பரிதாப உயிரிழப்பு! ரஷ்யாவின் மொஸ்கோவில் இடம்பெற்ற விமான தீ விபத்தில் குழந்தைகள் உட்பட 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) மொஸ்கோ விமான நிலையத்திலிருந்து மேர்மான்ஸ்க் நோக்கி பயணித்த எரோபுளொற் ஜேட் (Aeroflot Flight SU1492) விமானத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் விமானம் உடனடியாக திரும்ப தரையிறக்கப்பட்டது. இதன்போது விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கிய வேளை திடீரென புகை மூட்டத்துடன் தீ வேகமாக பரவியது. இதையடுத்து அவசரமாக விமான ஓடுதளத்தில் நிறுத்தப்பட்ட விமானத்தின் அவசரகால வழியினூடான பயணிகள் வெளியேற்றப்பட்டனர். எனினும் குறித்த விமானத்தில் விமான ஊழியர்கள் உட்பட 78 …
-
- 1 reply
- 993 views
-
-
பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் நிறுவனங்களுக்கான மசகு எண்ணெய் விற்பனையை ஈரான் நிறுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை கடந்த 9 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. பிரான்ஸ் பிரிட்டனுக்கான எண்ணெய் விற்பனையை நிறுத்தி அதற்கு பதிலாக புதிய வாடிக்கையாளர்களுக்கு எண்ணெய் விற்க தீர்மானித்துள்ளதாக ஈரான் எண்ணெய் அமைச்சின் இணைய தளத்திற்கு தெரிவித்துள்ளார். எனினும் ஐரோப்பிய நாடுகளான நெதர்லாந்து, கிறிஸ், போர்த்துக்கல், ஸ்பெயின் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளுக் கான எண்ணெய் விற்பனையை ஈரான் நிறுத்த வில்லை என குறிப்பிடத்தக்கது. ஐரோப்பிய ஒன்றியம் ஈரான்,அணு ஆயுதம் தயாரிப்பதாக குற்றம்சாட்டி எண்ணெய் தடைவிதித்தது. இந்த தடை எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி முழுமையாக நடைமுற…
-
- 0 replies
- 522 views
-
-
குடியேறிகளின் பிரச்சினையை சமாளிக்க புதிய திட்டம் bbc ஐரோப்பா நோக்கி வரும் குடியேறிகள் பல நெருக்கடிகளை சந்திக்கின்றனர். ஐரோப்பா நோக்கி வரும் குடியேறிகளை சமாளிக்க மேலும் ஒரு லட்சம் தற்காலிக குடியிருப்புகளை அமைக்க பல நாடுகள் இணங்கியுள்ளன. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை வந்தடைய முயற்சிக்கும் மேலும் ஒரு லட்சம் குடியேறிகளுக்கான தற்காலிக குடியிருப்புகளை அமைப்பதற்கு, மத்திய ஐரோப்பிய மற்றும், பால்கன் நாடுகளின் தலைவர்களும் இணங்கியுள்ளனர். பிரசல்ஸில் இடம்பெற்ற அவசர மாநாட்டில், ஒப்புதல் அளிக்கப்பட்ட பல விஷயங்களில் இதுவும் ஒன்றாகும். ஸ்லோவேனியா, மற்றும் கிரேக்கம் ஆகியவை தமது எல்லைகளை பாதுகாத்துகாத்துக் கொள்வதற்கு, அவர்களுக்கு உதவ நூற்றுக்கணக்கான காவல்துறையினர் அனுப்பி வைக்கப்பட உ…
-
- 1 reply
- 572 views
-
-
ஐஎஸ்-க்கு நிதி எங்கிருந்து வருகிறது? ஐஎஸ்-க்கு எதிராக போர் புரிய ஐநா அமைப்பே அறிவுறுத்திய பின்பும் கூட உலக நாடுகளுக்கு முன்னால் இருக்கும் பெரிய சவால் ஐஎஸ்.க்கு வரும் பணத்தை முடக்குவது எப்படி என்பதாகவே இருக்கும். டமாஸ்கஸின் புறநகர் பகுதிகளிலிருந்து பாக்தாத் புறநகர்ப்பகுதி வரை தங்கள் ஆதிக்கத்தை ஏற்படுத்தியுள்ள ஐஎஸ், உலகிலேயே பெரிய அளவுக்கு நிதியுதவி பெற்று வரும் பயங்கரவாத அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களிடம் மத போலீஸ் துறை உள்ளது, இவர்கள் பள்ளிகள் நடத்தி வருகின்றனர், உணவு மையங்கள் மற்றும் பிற நிர்வாக மையங்களையும் ஐஎஸ் நடத்தி வருகிறது. 'தி இகானமிஸ்ட்' பத்திரிகையின் படி, ஐஎஸ் போர் படையினருக்கு மாதம் 400…
-
- 0 replies
- 660 views
-
-
மாஸ்கோவின் சட்டவிரோதக் குடியேற்றக்காரர்களுக்கு பொது மன்னிப்பு ரஷ்யாவில் தஜ்கிஸ்தான் குடியேற்றக்காரர்கள் சிலர்ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் தங்கியுள்ள சட்டவிரோதக் குடியேற்றக்காரர்களுக்கு ரஷ்ய அதிகாரிகள் பொதுமன்னிப்பு வழங்கியுள்ளனர். மாஸ்கோவில் சுமார் பத்து லட்சம் குடியேற்றக்காரர்கள் இருப்பதாக மதிப்பிடப்படுகிறது. மாஸ்கோ மேயர் அலுவலகம் வழங்கியுள்ள இந்தப் பொதுமன்னிப்பு, மத்திய ஆசியாவைச் சேர்ந்த குடியேற்றக்காரர்களுக்கு வழங்கப்படுகிறது. தங்களைப் பதிவு செய்துகொள்ளவும், வேலை தேடிக்கொள்ளவும் அவர்களுக்கு ஒரு மாத காலம் தரப்படுகிறது. வெளிநாட்டவருக்கு எதிரான வெறுப்புணர்வு அதிகம் இருப்பதாலும், பொலிசார் மீதான அச்சம் காரணமாகவும் பலர் தங்களைப் பதிவு செய்துகொள்ள மு…
-
- 0 replies
- 707 views
-
-
மியன்மாரில் உள்ள ஒட்டுமொத்த ரொஹிங்கிய முஸ்லிம்களின் கிராமங்களும் அழிக்கப்பட்டு அங்கு பொலிஸ் பாசறைகள், அரச கட்டடங்கள் மற்றும் அகதி முகாம்களாக மாற்றப்பட்டிருப்பதாக தெரியவருகிறது. இது பற்றிய உண்மைகளை பி.பி.சி தொலைக்காட்சி கண்டறிந்துள்ளது. அரச சுற்றுப்பயணம் ஒன்றில் ரொஹிங்கிய குடியிருப்புகள் என செய்மதி படங்கள் மூலம் உறுதி செய்யப்பட்ட நான்கு இடங்களில் பாதுகாப்பு கட்டங்கள் அமைக்கப்பட்டிருப்பதை கண்டதாக பி.பி.சி குறிப்பிட்டுள்ளது. ரகினே மாநிலத்தின் கிராமங்களில் அந்தக் கட்டடங்கள் அமைக்கப்பட்டிருப்பதாக கூறுவதை அதிகாரிகள் மறுத்துள்ளனர். 2017 ஆம் ஆண்டு இராணுவ நடவடிக்கை ஒன்றின்போது 700,000க்கும் அதிகமான ரொஹிங்கியர்கள் மியன்மாரில் இருந்து தப்பிச் சென்றனர். இது ஒரு “பாடப்புத்தக…
-
- 0 replies
- 434 views
-
-
உலகின் பெரும்பாலான தற்கொலை குண்டு தாக்குதல்கள் தமிழ் புலிகளால்தான் நடத்தப்பட்டது என்பது குறித்து யாரும் ஆராயவில்லை என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஐக்கிய நாடுகள் பொது சபையில் பேசியுள்ளார்.
-
- 1 reply
- 831 views
-
-
கலிபோர்னியாவில் காட்டுத்தீ: 30 ஆயிரம் பேர் பாதிப்பு அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவில், செவ்வாய்க்கிழமை (7) இரவு கடுமையான காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இந்த காட்டுத்தீ லாஸ் ஏஞ்சல்சின் மலைப்பகுதிகளுக்கு வேகமாக பரவி வருகிறது. இதனால் அங்கு கடும் புகைமூட்டம் நிலவி வருகிறது. ஏராளமான வீடுகள், வாகனங்கள் தீயில் எரிந்து நாசமாகின. காட்டுத்தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி வருகிறார்கள். ஹெலிகாப்டர்கள் மூலம் தண்ணீர் ஊற்றப்பட்டு வருகிறது. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் வசித்துவந்த 26 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தீயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சுமார் 30 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும், அந்நாட்டு தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளது. …
-
-
- 105 replies
- 5k views
- 2 followers
-
-
TikTok ஒரு புதிய, சீனர் அல்லாத உரிமையாளரைக் கண்டறிய அல்லது தடையை எதிர்கொள்ள வேண்டிய ஒரு சட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைமுறைக்கு வர திட்டமிடப்பட்டுள்ளது - மேலும் அதற்கு முன்னர் நிறுவனம் விற்பனையை நிறுத்துவதற்கான சிறிய அறிகுறிகளும் இல்லை. அதாவது, 170 மில்லியன் அமெரிக்கர்கள் பொழுதுபோக்கு, செய்திகள் மற்றும் சமூகத்தைக் கண்டறிய அல்லது வணிகத்தை நடத்துவதற்குப் பயன்படுத்தும் தளத்திற்கான அணுகலை இழக்க நேரிடும், டிக்டோக் பல ஆண்டுகளில் முதல் புதிய தளமாக ஆன பிறகு, அமெரிக்க சமூக ஊடகப் பிரமுகர்களுக்கு உண்மையான போட்டி அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. Instagram மற்றும் YouTube. சுப்ரீம் கோர்ட் வெள்ளிக்கிழமை சட்டத்தை உறுதி செய்தது, தடையை ஒரு படி நெருக்கமாக கொண்டு வந்தது. ஆனால் தடை கா…
-
- 0 replies
- 256 views
- 1 follower
-
-
மத்திய அரசை நடத்துவது ஐ.மு. கூட்டணியா? எண்ணெய் நிறுவனங்களா? வைகோ கேள்வி பெட்ரோல் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்துள்ள ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ, மத்திய அரசை நடத்துவது ஐக்கிய முற்போக்குக் கூட்டணியா? கொள்ளையடிக்கும் எண்ணெய் நிறுவனங்களா? என கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சியைக் காரணம் காட்டி மத்திய அரசு பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.7.50 உயர்த்தி இருப்பது பகல் கொள்ளை ஆகும். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் பொருளாதார கொள்கைகள்தான், பணவீக்கத்துக்கும், ரூபாய் மதிப்பு சரிவதற்கும் காரணம் ஆகும். பெட்ரோல் விற்பனை மூலம் எண்ணெய்…
-
- 1 reply
- 463 views
-
-
பாரிஸ் தாக்குதல் சந்தேகநபர் சலாஅப்தெஸ்லாம் காணப்படும் CCTV வீடியோ பிரான்ஸ் அதிகாரிகளின் கையில் பாரிஸ் தாக்குதல் சந்தேகநபர் சலாஅப்தெஸ்லாம் காணப்படும் CCTV வீடியோ பிரான்ஸ் அதிகாரிகளின் கையில்: தலைமறைவாக உள்ள பாரிஸ் தாக்குதல் சந்தேகநபர் சலாஅப்தெஸ்லாம் காணப்படும் சிசிடிவி கமரா வீடியோ பிரான்ஸ் அதிகாரிகளின் கையில் சிக்கியுள்ளது. பாரிஸ் தாக்குதல் இடம்பெற்ற மறுநாள் பெட்ரோல்நிரப்பும் நிலையமொன்றில் குறிப்பிட்ட சந்தேகநபர் தனது வாகனத்திற்கு எரிபொருள் நிரப்புவது அங்கு காணப்பட்ட சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளது.அந்த வீடியோவில் அப்தெஸ்லாம் பதட்டமில்லாதவராக காணப்படுகின்றார். தாக்குதல்களை மேற்கொண்ட தீவிரவாதிகளிற்கான விநியோகங்களை மேற்கொண்டவர் இவர் என ப…
-
- 0 replies
- 427 views
-
-
உலக நாடுகளை நடுங்கச் செய்யும் ட்ரம்பின் புதிய வரி; இலங்கை பொருட்களுக்கு 44% வரி! அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பெரும்பாலான பொருட்களுக்கு 10% குறைந்தபட்ச வரியை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் புதன்கிழமை (02) அறிவித்தார். இதன் மூலம் அவர், பல நாடுகளின் பொருட்களுக்கு மிக அதிக வரிகளுடன், பணவீக்கத்தை அதிகரித்து அமெரிக்க மற்றும் உலகளாவிய பொருளாதார வளர்ச்சியைத் தடுக்கும் அச்சுறுத்தலான உலகளாவிய வர்த்தகப் போரை அதிக அளவில் தொடங்கியுள்ளார். எதிர்பாராத விதமாக அதிக வரி விகிதங்களுடன் தங்களை இணைத்துக் கொண்ட பல நீண்டகால அமெரிக்க நட்பு நாடுகளிடமிருந்து குழப்பமான கண்டனத்தைப் பெற்ற இந்த கடுமையான வரிகள், உலகின் மிகப்பெரிய நுகர்வோர் பொருளாதாரத்தைச் சுற்றி புதிய தடைகளை எழுப்புவதாக உறுதியளிக்…
-
-
- 3 replies
- 332 views
- 1 follower
-