உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26851 topics in this forum
-
தானே: மும்பை அருகே அரசு போக்குவரத்துக் கழக பேருந்தின் பெண் கண்டக்டரை பயணி ஒருவர் அடித்து உதைத்து, ஆடையை கிழித்து மானப்பங்கம் செய்ததை மற்ற பயணிகள் வேடிக்கை பார்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மும்பையை அடுத்துள்ள தானே மாவட்டத்தில் அமைந்திருக்கும் கல்யாணிலிருந்து பன்வேல் செல்லும் அரசு போக்குவரத்துக் கழக பேருந்து இன்று காலை 8.30 மணி அளவில் பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டுச் சென்றது. அந்த பேருந்தில் 34 வயது பெண் கண்டக்டர், அப்பொழுதுதான் தனது முதல் டிரிப் பணியை தொடங்கினார். இங்குள்ள பேருந்துகளில், பயணிகள் பின்பக்கமாக ஏறி, முன்பக்கமாக இறங்குவதுதான் நடைமுறையாக உள்ளது. இந்நிலையில் 30 வயதுடைய அபிஷேக் சிங் என்பவர் வழியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில், பயணிகள் வழ…
-
- 4 replies
- 1.4k views
-
-
புத்தகயா கோவிலில் வெடிகுண்டுகள் மீட்பு – தலாய்லாமா குறி வைக்கப்படுகின்றாரா? புத்த மதத்தின் மிகவும் புகழ்பெற்ற புனித தலமாகவும் தலாய்லமா தங்கியிருக்கும் புத்தகயா கோவிலில் 2 வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பீகார் மாநிலத்தின் தலைநகர் பாட்னாவில் இருந்து 100 கி.மீட்டர் தொலைவில் உள்ள புத்தகயாவில் திபெத்திய மத தலைவர் தலாய்லமா தங்கியிருந்து தனது ஆன்மீக பணிகளை மேற்கொண்டு வருகினறார். இந்நிலையில் நேற்றரவு அவர் தனது கடமைகளை முடித்து விட்டு தனதுஅறைக்கு சென்றநிலையில், அவரின் அறைக்கு அருகே 2 உள்ளூர் தயாரிப்புக்களான 2 வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதனைத்தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வெடிகுண்டுகள் அப்புறப்படுத்தப்பட்டத…
-
- 0 replies
- 302 views
-
-
புலிகள் மீதான தடையை நீக்கு. கையெழுத்து இயக்கம் அன்பார்ந்த தோழர்களே, புலிகள் இயக்கம் மீதான தடையை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி தோழர் புகழேந்தி தங்கராஜ் எடுக்கும் முன் முயற்சியில், ஒரு கையெழுத்து இயக்கம் நடத்த உத்தேசிக்கப் பட்டுள்ளது. இது குறித்து, காவல்துறையிடம் அனுமதி கேட்டு அளித்த கடிதத்திற்கு பதில், திங்கட்கிழமை வரும் என்று எதிர்ப்பார்க்கப் படுகிறது. தமிழக மக்கள் உரிமைக் கழகம் சார்பாக சென்னை மெமோரியல் ஹால் அருகே, இதே காரணத்தை வலியுறுத்தி செவ்வாயன்று, ஆர்ப்பாட்டம் நடத்த உத்தேசிக்கப் பட்டு, அதற்கும் அனுமதி கேட்டு அதன் செயலர் புகழேந்தி கடிதம் அளித்துள்ளார். உங்களுக்கு அனுமதி ஏன் மறுக்கக் கூடாது என்று விளக்கம் கேட்டு, வெள்ளியன்று, தமிழக மக்கள் உர…
-
- 0 replies
- 649 views
-
-
உலக அரங்கில் இந்தியா ஐ நா சபையின் நூற்றாண்டு வளர்ச்சி இலக்குகள் பற்றி உலகமெங்கும் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன, 2015ம் ஆண்டுக்குள் உலகில் வறுமையை ஒழிக்கவேண்டும், சிசுமரணம், கல்லாமை, எய்ட்ஸ், மலேரியா மற்றும் காசநோயை ஒழிப்பது, அனைவருக்கும் உணவுபாதுகாப்பு அளிப்பது, அடிப்படை கல்வியை உரிமையாக்குவது என பல அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால் இது ஒவ்வொரு ஆண்டும் பிரதமர் சுதந்திரதின உரையில் வாசிப்பது போன்று தான் இருக்கிறது, ஏனென்றால் இந்த வாசிக்கவேண்டிய உரையை 1947 லிருந்து இன்னமும் மாற்றவில்லை, பிரதமர்கள், கட்சிகள் மாறியிருக்கலாம், ஆனால் வறுமையை ஒழிப்பது நாடு சுதந்திரம் பெற்று 63 ஆண்டுகளாகியும் முற்றுப்பெறவில்லை மாறாக பட்டினி பட்டாளங்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டேயிருக்கிறத…
-
- 0 replies
- 5.6k views
-
-
"முஸ்லிம்" இன சிறுபான்மையினரை... சீனா தடுத்து வைத்திருப்பது, மனிதகுலத்திற்கு எதிரானது: ஐ.நா. மனித உரிமைகள்! சின்ஜியாங்கின் வடமேற்குப் பகுதியில் உய்குர் மற்றும் பிற பெரும்பான்மையான முஸ்லிம் இன சிறுபான்மையினரை சீனா தடுத்து வைத்திருப்பது மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அலுவலகம் தெரிவித்துள்ளது. நேற்று (புதன்கிழமை) பிற்பகுதியில் நீண்ட தாமதமான அறிக்கையில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அலுவலகம் இதனைத் தெரிவித்தது. 45-பக்க அறிக்கையில், சீனா தன்னிச்சையாக சுதந்திரம் பறிக்கப்பட்ட அனைத்து நபர்களையும் உடனடியாக விடுவிக்கவும், அவர்களது குடும்பங்களை கண்டுபிடிக்க முடியாமல் போனவர்களின் இருப்பிடத்தை தெளிவுபடுத்…
-
- 0 replies
- 285 views
-
-
அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ள அவுஸ்திரேலிய அரசு வேண்டுகோள் அவுஸ்திரேலிய அரசு தனது மக்களை அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டுகோள் விடுத்துள்ளது. தனது நாட்டின் பொருளாதாரம் அதிக மக்கள் தொகையை பொறுத்துள்ளது என்றும் கூறி உள்ளது. அவுஸ்திரேலியாவின் மக்கள் தொகை பெருக்கம் ஏற்பட்ட ஒரு காலத்தில், தங்கள் நாட்டினர் `தாய்க்கு ஒன்று, தந்தைக்கு ஒன்று, நாட்டுக்கு ஒன்று' என்று மூன்று குழந்தைகள் பெற்றுக் கொண்டால் போதும் என்று அவுஸ்திரேலிய பொருளியலாளர் பீற்றர் காஸ்டேலோ வலியுறுத்தினார். ஆனால், நாடு முழுவதும் எடுக்கப்பட்ட புதுக் கணக்கெடுப்பு மக்கள் தொகை எண்ணிக்கையை குறைவாக காட்டுவதை உணர்ந்த அவர் தற்போது அதிக குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள தன் நாட்டினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ள…
-
- 7 replies
- 1.7k views
-
-
தற்போது உலகெங்கிலும் பரபரப்பாக பேசப்படும் செய்தி அயர்லாந்து பெயில் அவுட். வெளிப்படையாக செய்தியை பார்ப்போர் எல்லாம் அனுமானிப்பது 'அயர்லாந்து அரசு பொறுப்பில்லாமல் வரவுக்கு மீறி செலவு செய்து நாட்டை படுபாதாளத்தில் தள்ளி இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளின் உதவியால் மீட்கப்படுகிறது' என்பதாகும். ஆனால் உண்மையான செய்தி அதுவல்ல. தற்போது உண்மையில் பெயில் அவுட் நடப்பது அயர்லாந்துக்கு அல்ல. இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய தனியார் வங்கிகளுக்குத் தான். இதன் பயனை அனுபவிக்கப் போவது அயர்லாந்து மக்கள் அல்ல. ஐரோப்பிய தனியார் வங்கிகளும், இங்கிலாந்து மற்றும் யூரோ அரசாங்கமும் தான். ஆனால் இதனால் ஏற்படப் போகும் இழப்புகள் விழப்போவது அயர்லாந்து மக்களின் தலை மீது தான். ஆச்சரியமாக இருக்கிறதா? அது தான…
-
- 4 replies
- 726 views
-
-
16 நாடுகளில் 40 மலையேற்றம் புரிந்து சாதித்த அமெரிக்கப் பெண் ஹிலாரி நீல்சன் நவீன் சிங் கட்கா சுற்றுச்சூழல் செய்தியாளர், பிபிசி உலக சேவை 4 அக்டோபர் 2022 பட மூலாதாரம்,NORTH FACE புகழ்பெற்ற பனிச்சறுக்கு மலையேற்ற அமெரிக்க வீராங்கனையான ஹிலாரி நீல்சன் இமயமலையில் ஒரு வாரத்துக்கு முன்பு உயிரிழந்தார். அவரது உடல் நேபாள தலைநகர் காத்மாண்டுவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 2) அன்று பெளத்த முறைப்படி எரியூட்டப்பட்டது. ஒரு தலைமுறையை சார்ந்த பெண்களின் மத்தியில் அவர் ஒரு உந்து சக்தியாக விளங்கியது எப்படி என சக மலையேற்ற வீரர்கள் பிபிசியிடம் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர். 2012ஆம் ஆண…
-
- 0 replies
- 217 views
- 1 follower
-
-
இங்கிலாந்து பிரதமர் லிஸ் டிரஸ் ராஜினாமா தினத்தந்தி லண்டன், இங்கிலாந்து பிரதமராக கடந்த மாதம் பதவியேற்ற லிஸ் டிரஸ், வரி குறைப்புகளை ஆதரிக்கும் வகையில் திட்டங்களை வெளியிட்டார். மினி பட்ஜெட்டில் வரி குறைப்பு அறிவிக்கப்பட்டது. கடன் வாங்கி இதை சரிக்கட்டலாம் என தெரிவிக்கப்பட்டது. இத்திட்டத்திற்கு பிரதமரின் சொந்தக் கட்சி எம்.பி.க்கள் சிலர் அதிருப்தி தெரிவித்தனர். நாட்டின் பொருளாதாரம் மோசமாக இருக்கும் நிலையில், இந்த திட்டத்தை பிரதமர் மறுபரிசீலனை செய்யவேண்டும் என கருத்து தெரிவித்தது பிரதமர் லிஸ் டிரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. அதன்பின்னர் நிதி மந்திரி குவாஸி குவார்டங்கை பதவியிலிருந்து அதிரடியாக நீக்கி பிரதமர் லிஸ் டிரஸ் உத்தரவிட்டார். ஜெரேமி ஹன்ட் அ…
-
- 7 replies
- 488 views
- 1 follower
-
-
அதிமுக விஜய் கூட்டணி. விஜயகாந்த் மற்றும் திமுக விற்கு வைக்கும் செக். நான் ஒரு தடவை முடிவு பண்ணிட்டா... அப்புறம், என் பேச்சை நானே கேட்க மாட்டேன்’ என்று வசனம் பேசிய விஜய், பல தடவை யோசித்து அ.தி.மு.க-வில் கூட்டணி சேர முடிவு செய்துவிட்டார் என்று நாம் சொன்னது பலித்தேவிட்டது. இதோ விஜய்யின் அரசியல் கவுன்ட் டவுன் இனிதே ஆரம்பம்! ஜெயலலிதா - எஸ்.ஏ.சந்திரசேகரன் சந்திப்பு, சென்ற வார சென்சேஷன். ஏன் இந்த திடீர் சந்திப்பு? விஜய், சந்திரசேகரனுக்கு நெருக்கமான கோடம்பாக்கப் புள்ளியிடம் பேசினோம். ''விஜய், அரசியலில் இறங்குவது திடீர் முடிவல்ல. கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பே எடுக்கப்பட்ட முடிவு இது. அதற்கான வேளை இப்போது வந்து விட்டது. கிட்டத்தட்ட விஜய்யை அ.தி.மு.க பக்கம் கொண்டுபோய்…
-
- 0 replies
- 1k views
-
-
‘பெண்கள், முஸ்லிம்கள், தலித்துகள் மீது திட்டமிட்டு தாக்குதல்’: மவுனம் காக்கும் மோடியை விளாசிய ‘தி நியூயார்க் டைம்ஸ்’ நாளேடு இந்தியாவில் பெண்கள், முஸ்லிம்கள், தலித்துகள் ஆகியோருக்கு எதிராகத் திட்டமிட்டு பிரச்சாரம் செய்யப்பட்டு, தாக்கப்படுகின்றனர். இதைக் கண்டிக்காமல் மவுனம் காக்கும் மோடி தேர்தலில் மிகப்பெரிய அரசியல் விலை கொடுக்க வேண்டியது வரும் என்று ‘தி நியூயார்க் டைம்ஸ்’ நாளேடு தலையங்கத்தில் பிரதமர் மோடியைக் கடுமையாக விமர்சித்துள்ளது. அப்பாவி முஸ்லிம்கள் மீது பசுக் குண்டர்கள் நடத்திய தாக்குதல், உ.பி. உன்னாவ் மாவட்டத்தில் பாஜக எம்எல்ஏவால் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது.காஷ்மீரில் 8வயது…
-
- 1 reply
- 274 views
-
-
உஜ்ஜைன்: ஆண் மானை அடைய நடந்த முயற்சியில், பெண் மான்களுக்குள் நடந்த சண்டையில் 9 பெண் மான்கள் பரிதாபமாக இறந்தன. மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைன் நகரில் மிருகக் காட்சி சாலை உள்ளது. இங்கு 60 மான்களுக்கும் மேல் உள்ளன. இவற்றில் 10 மான்களை மட்டும் தனியாக ஒரு இடத்தில் அடைத்து வைத்திருந்தனர். அவற்றில் ஒன்று மட்டுமே ஆண் மான். மற்றவை பெண் மான்கள். இந்த ஒத்தை ஆண் மானை அடைய பெண் மான்களுக்குள் போட்டி ஏற்பட்டது. இதுதொடர்பாக கடுமையான சண்டையும் நடந்தது. பல மணி நேரம் நடந்த இந்த சண்டையில் 9 மான்களும் அடுத்தடுத்து இறந்தன. இந்த பெண் மான்களுக்கிடையே சிக்கிய ஆண் மானும் பரிதாபமாக உயிரிழந்தது. மான்களுக்கு இடையே சண்டை ஏற்பட்டால் 'சோப்ளாங்கி' மான்கள், தப்பித்து ஓடி விடும். ஆனால் கு…
-
- 3 replies
- 1.5k views
-
-
உயிரைக் காப்பாற்றி ஹீரோ ஆக முயற்சித்தார் என்ற குற்றத்திற்காக உ.பி. முதல்வர் ஆதித்யநாத்தும் அவரது படை பரிவாரங்களும் சிறையிலடைத்த டாக்டர். கஃபில் கானின் கடிதத்தின் தமிழாக்கம். ************************** “ஜாமீன் கிடைக்காத சிறை வாசத்தில் எட்டு மாதங்கள் கடந்து விட்டன... நான் உண்மையாகவே குற்றவாளியா...?” சிறைக்கம்பிகளுக்குப் பின்னால் தாங்கமுடியாத சித்திரவதைகளுக்கும் அவமானங்களுக்கும் பிறகும் கூட ஒவ்வொரு நிமிடமும் கடந்து போன ஒவ்வொரு காட்சியையும் கண் முன்னே நடப்பது போலவே நினைத்துப் பார்க்கிறேன்...! சிலநேரங்களில் நான் எனக்குள்ளேயே கேள்விகளைக் கேட்டுகொள்கிறேன்... “நான் உண்மையிலேயே குற்றவாளி தானா..? இந்த கேள்வி எனக்குள் எழும்போதெல்லாம் என் இதயத்தின் அடியாழத்த…
-
- 0 replies
- 534 views
-
-
இஸ்ரேலும், இரானும் ஏன் சிரியாவில் சண்டையிடுகின்றன? - 300 வார்த்தைகளில் பகிர்க படத்தின் காப்புரிமைAFP சிரியாவிலுள்ள இரானின் ராணுவ நிலைகளின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து சக்தி வாய்ந்த இருநாடுகளுக்கிடையேயான மோதல் நிலைப்பாடு மேலும் மோசமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அங்கு தற்போது நிலவி வரும் சூழ்நிலைக்கான பின்னணியை காண்போம். இஸ்ரேலும், இரானும் எப்படி பகை நாடுகளாயின? 1979ல் ஏற்பட்ட இரானிய புரட்சியின் பின்னர், அந்நாட்டின் மத கடும்போக்காளர்கள் அதிகாரத்திற்கு வந்ததது முதலே இஸ்ரேலை ஒதுக்குவதற்கு வலியுறுத்தி வருகின்றனர். இஸ்ரேல் முஸ்லீம்களின் நிலத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்…
-
- 0 replies
- 363 views
-
-
பெண்களின் மீது பாலியல் ரீதியாக துன்புறுத்துகின்றது ரஷ்யா – கமலா ஹாரிஸ் குற்றச்சாட்டு ! உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை எடுத்ததன் மூலம் ரஷ்யா மனித உரிமைகளை மீறுவதாக அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் குற்றம் சாட்டியுள்ளார். ஜேர்மனியின் முனிச் நகரில் நடைபெற்ற பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்த மாநாட்டில் பல நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர், மேலும் மாநாட்டில் உக்ரைன் நெருக்கடி குறித்தே முக்கிய கவனம் செலுத்தப்பட்டது. உக்ரைனுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையை கடந்த பெப்ரவரி மாதம் ரஷ்யா தொடங்கிய நிலையில் இதில் பல பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக கமலா ஹாரிஸ் கூறியுள்ளார். மேலும் உ…
-
- 0 replies
- 341 views
-
-
டெல்லி: வரும் 24ம் தேதி இலங்கைக்கு செல்கிறேன். திரும்பி வருகையில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள 5 தமிழக மீனவர்களுடன் வருவேன் என்று பாஜக தலைவர் சுப்பிரமணியன் சாமி தெரிவித்துள்ளார். கடந்த 2011ம் ஆண்டு கச்சத் தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 5 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. அவர்கள் மீது போதைப் பொருள் கடத்தியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த கொழும்பு உயர் நீதிமன்றம் அந்த 5 பேருக்கும் மரண தண்டனை விதித்தது. இந்நிலையில் இது குறித்து பிரதமர் மோடி இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாக பாஜக தலைவர் சுப்பிரமணியன் சாமி ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அவர்களை இந்திய சிறைக்கு மாற்ற ராஜபக்சே ஒப்புக் கொண்ட…
-
- 0 replies
- 832 views
-
-
Thursday, March 31st, 2011 | Posted by thaynilam ஊழல் மலிந்த நாடுகளில் இந்தியாவிற்கு நான்காவது இடம் ஆசியா பசிபிக் பிராந்திய நாடுகளில் ஊழல் மலிந்த 16 நாடுகளில் இந்தியா நான்காவது இடத்தை பிடித்துள்ளதாக ஹபெர்க்’ என்ற வர்த்தக ஆலோசனை நிறுவனம் மேற்கொண்ட கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மிக மோசமான ஊழல் மிகுந்த நாடுகளின் பட்டியலில் 10-க்கு 8.7 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தை இந்தியா பிடித்துள்ளது. இந்த வரிசையில் கம்போடியா (9.27) இந்தோனேஷியா (9.25) பிலிப்பைன்ஸ் (8.9) ஆகிய நாடுகள் முறையே முதல் மூன்று இடம் பெற்றுள்ளன. ஊழலற்ற நாடுகளில் சிங்கப்பூர் முதலிடம் (0.37) வகிக்கிறது. ஹாங்காங் (1.10)- ஆஸ்திரேலியா (1.39)- ஜப்பான் (1.90)- அமெரிக்கா (2.39) ஆகிய நாடுகள் அ…
-
- 3 replies
- 810 views
-
-
பாகிஸ்தானில் ஆட்சியை பிடிக்க ஆயத்தமாகிறார் இம்ரான் கான், இந்தியாவுடன் நல்லுறவை மேம்படுத்த விருப்பமுள்ளதாக செய்தியாளர்களுக்கு பேட்டி உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 333 views
-
-
-
1970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்! இது 1970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்..இன்றைய தலைமுறையினருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.அதிகாரம் அத்தனையையும் மூடி மறைத்துவிட்டது.அப்போது முதன்முறையாக முதல்வர் பதவியில் அமர்ந்திருந்தார் கருணாநிதி. தலைமுறைக்கும் தாந்தான் முதல்வராக இருக்க வேண்டும் என அடித்தளம் அமைத்துக்கொண்டிருந்த நேரம் .அதே காலகட்டத்தில் ‘ஜவகரிஸ்ட்’என்ற பத்திரிக்கையும் வெளிவந்து கொண்டிருந்தது!அதன் ஆசிரியர் ஒன்றும் அறியப்படாதவர் அல்ல.ஒரு காலத்தில் கலைஞர் கருணாநிதி மேடையேறி பேச உழைத்துக்கொண்டிருந்த என்.கே.டி.சுபிரமணியம்! அவர் நடத்திய ஜவகரிஸ்ட் பத்திரிக்கையில் ,இந்த தேதியில் சென்னையில் உள்ள இந்த மருத்துவமனையில்,இந்த நேரத்த…
-
- 0 replies
- 1.2k views
-
-
பரிஸ் வீதியில் கத்திக்குத்து - இரு பெண்கள் பலி பிரான்ஸ் தலைநகர் பரிசின் புறநகர் பகுதியான டிரப்பசில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் இரு பெண்கள் கொல்லப்பட்டுள்ளனர். அதன் பின்னா கத்திக்குத்தில் ஈடுபட்டவரும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். கத்திக்குத்து தாக்குதலின் பின்னர் அந்த நபர் வீடொன்றிற்குள் மறைந்திருந்தார் பின்னர் வீட்டிலிருந்து வெளியே வந்து பொலிஸாரை அச்சுறுத்தினார் அவ்வேளை அவர் சுட்டுக்கொல்லப்பட்டார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலிற்கான காரணத்தை இதுவரை வெளியிடாத அதிகாரிகள் கொல்லப்பட்டவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இது குடும்ப தகராறு என கருதலாம் எனவும் குறிப்பிட்டுள்ளனர். இதேவேளை இ…
-
- 0 replies
- 602 views
-
-
சதாமிற்கு மரண தண்டனை விதித்த ஈராக் நீதிபதி, இங்கிலாந்தில் அடைக்கலம் கேட்கிறார் ஈராக்கின் முன்னாள் ஜனாதிபதி சதாம் ஹுசைனுக்கு மரண தண்டனை விதித்த ஈராக் நீதிபதி, தனது உயிருக்குப் பயந்து இங்கிலாந்தில் அடைக்கலம் கேட்டுள்ளார். ஈராக்கில் ஆட்சி கவிழ்க்கப்பட்ட சதாம் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க தனி கோர்ட் அமைக்கப்பட்டது. இதன் தலைமை நீதிபதியாக ரிஸ்கர் அமின் பணியாற்றி வந்தார். ஆனால், ஈராக் அரசின் நிர்ப்பந்தத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அவர் பதவி விலகினார். அதையடுத்து, ரவோப் அப்துல் ரகுமான், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தலைமை நீதிபதியாக பதவி ஏற்றார். இவர் குர்திஷ் இனத்தை சேர்ந்தவர். கடந்த 1982 ஆம் ஆண்டு சதாமை கொல்ல முயன்ற 148 ஷியா பிரிவு முஸ்லிம்கள் கொல்லப்பட்ட வ…
-
- 0 replies
- 648 views
-
-
ஜப்பானை தாக்கிய கடுமையான சூறாவளியால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை பதினொன்றாக உயர்வு. ஐ.எஸ். சித்ரவதையில் இருந்து தப்பிக்க மலைப்பகுதிகளில் தஞ்சம் அடைந்த யஸீடி சமூகம் - வசிப்பிடங்களுக்கு திரும்பாமல் வாழுகின்றனர். சிக்கலான வழக்குகளில் சந்தேக நபர்களை கண்டறிய பிரிட்டன் புலனாய்வாளர்களுக்கு உதவும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் போன்ற செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 518 views
-
-
ஓடு பாதையில் இருந்து விலகி மண்ணில் சிக்கிய டெல்லி விமானம்: 169 பயணிகள் உயிர் தப்பினர் புதுடெல்லி, ஏப். 9- தாய்லாந்து நாட்டில் உள்ள பாங்காக்கில் இருந்து ஏர் இந்தியா விமானம் ஒன்று டெல்லி வந்தது. 169 பயணிகள் இருந்தனர். சர்வதேச விமான நிலையத்தில் காலை 6.26 மணிக்கு தரை இறங்கியது. அப்போது விமானத்தின் சக்கரங்களை இயக்கும் கியர் சரியாக வேலை செய்ய வில்லை. இதன் முன் சக்கரத்தின் இயக்கம் பாதிக்கப்பட்டது. இதனால் விமானம் ஓடு பாதையைவிட்டு விலகி மண்ணில் ஓடி நின்றது. ஓடு பாதையைவிட்டு விலகி ஓடினாலும் விமானம் வேறு எந்த பொருளிலும் மோதவில்லை. நிலை தடுமாறி கவிழவும் இல்லை. சக்கரங்கள் மண்ணில் சிக்கி அப்படியே நின்று விட்டன. இதனால் விமானத்தில் இருந்தவர்கள் அனைவரும் உயிர் …
-
- 0 replies
- 622 views
-
-
சவுதியில் தீ விபத்து : 6 இந்தியர்கள் பலி! _ வீரகேசரி இணையம் 7/2/2011 5:37:42 PM Share சவுதி அரேபியா தலைநகர் ரியாத் அருகே அல் பதா என்ற இடத்தில் உள்ள ஒரு வீட்டின் 2ஆவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 6 இந்தியர்கள் பலியானார்கள். 7 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இறந்தவர்களில் 5 பேர் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்களாவர். இவர்களின் உடலை இந்தியா கொண்டு வர இந்திய தூதரகம் ஏற்பாடு செய்து வருவதாக அமைச்சர் இ.அகமது தெரிவித்துள்ளார். http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=32501 விபத்தில் பலியானவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
-
- 0 replies
- 364 views
-