உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26861 topics in this forum
-
சுவிஸில் 70,000 பேர் இணையதள பாவனைக்கு அடிமையாகியுள்ளனர் சுவிட்சர்லாந்தில் சுமார் 79,000 பேர் இணையதள பாவனைக்கு அடிமையாகியுள்ளதாகத் அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வுத் தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன. மேலும், 110,000 இணைய பாவனைக்கு அடிமையாகக் கூடிய அபாயம் நிலவுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. வேலை நேரங்களைத் தவிர வாரத்திற்கு 35 மணித்தியாலங்கள் இணையத்தைப் பயன்படுத்துவோர் இணையத தளத்திற்கு அடிமையாகியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இணையத்தை அதிகமாக பயன்படுத்துவதன் மூலம் பல்வேறு நோய்கள் ஏற்படுவதாக மருத்துவ நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இணைய அரட்டை மற்றும் இணைய விளையாட்டுக்கள் போன்றவைகளுக்கு அதிக அதிக முன்னுரிமை அளிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. …
-
- 4 replies
- 1.1k views
-
-
குடியரசா? “குடி’ மக்கள் அரசா? குடியரசு நாள் நாடெங்கும் கொண்டாடப்படுகிறது; “குடியரசு தினம் என்பது நாட்டுமக்கள் அனைவருக்கும் சட்டப்பூர்வமான உரிமைகள் வழங்கப்பட்ட நாள்’ என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார். குடிமக்கள் உரிமை பெற்ற நாள் என்று கூறலாம். ஆனால், இப்போது “குடிமக்கள்’ என்பது அந்தப் பொருளில் வழங்கப்படவில்லை; “குடிக்கும் மக்கள்’ என்பதே நடைமுறை வழக்காகிவிட்டது. அந்த அளவுக்குக் குடிக்கும் மக்கள்தொகை நாளுக்குநாள் பெருகிக் கொண்டிருக்கிறது; மக்கள்தொகைப் பெருக்கத்தைவிடவும் இது போட்டி போட்டுக்கொண்டு பெருகுவது சமுதாய அவலம். காந்திஜியின் அகிம்சை வழியில் நாடு விடுதலை பெற்றதாகக் கூறப்படுகிறது. அது உண்மையானால் அவர் விரும்பிய தீண்டாமை ஒழிப்பும், மதுவிலக்கும் இதுவரை …
-
- 3 replies
- 1.1k views
-
-
ரஞ்சிதாவும் வந்ததில்லை,பஜனையும் நடக்கவில்லை-மதுரை ஆதீனம் மதுரை: மதுரை ஆதீன மடத்தில் பஜனை நடந்ததாகவும், அதில் நடிகை ரஞ்சிதா பங்கேற்று இருந்ததாகவும், புனித நீர் கொடுத்தபோது மயக்க நிலையில் ஆபாச நடனங்கள் நடந்ததாக அவர் கற்பனையான, போலியான குற்றச்சாட்டுகளை மடத்தின் மீது சுமத்தியுள்ளார் இந்து மக்கள் கட்சியின் சோலைக் கண்ணன். உண்மையில்,இதுவரை நடிகை ரஞ்சிதா மடத்திற்கு வந்ததில்லை என்று கூறியுள்ளார் மதுரை ஆதீனம் இதுகுறித்து மாலைமலருக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், பெங்களூருவில் உள்ள நித்தியானந்தா தியான பீடத்தில் நடந்து வரும் சம்பவங்கள் மிகவும் வருந்ததக்கதாகும். மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நித்யானந்தாவை நியமனம் செய்தது முதல் அவர் மீது வேண்டுமென்றே கற்பனை குற்றச்ச…
-
- 4 replies
- 1.1k views
-
-
பஸ் படிக்கட்டில் பயணம் செய்யும் மாணவர்கள் பள்ளியிலிருந்து நீக்கப்படுவார்கள் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. சென்னை பெருங்குடியில் நேற்று முன்தினம் பஸ் மீது லாரி மோதியதில் படிக்கட்டில் பயணம் செய்த 4 மாணவர்கள் பலியானார்கள். இந்த சம்பவம் தொடர்பாக தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரித்தார். இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதை தடுக்க என்னென்ன பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பது குறித்து பதில் மனு தாக்கல் செய்ய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் நவநீதகிருஷ்ணன் ஆஜராகி பதில் மனு தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த மனுவில் கூறப…
-
- 14 replies
- 1.1k views
-
-
எனது காதலியை தொடாதே என அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவை நேருக்கு நேராக இளைஞர் ஒருவர் எச்சரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரிய வருவது அமெரிக்காவின் சிகாகோ நகரில் மார்டின் லூதர் கிங் சமுதாய மையத்தில் ஆளுநர் தேர்வுக்கான வாக்கெடுப்பு நடைபெற்றுகொண்டிருந்தா போது ஒபாமாவும் அவர் அருகே ஆயியா கூப்பர் என்ற 20 வயது இளம் பெண்ணும் வாக்களித்துக்கொண்டிருந்தனர். இதன் போது சிரித்த முகத்துடன் வாக்களித்துக்கொண்டிருந்த பெண்ணை பார்த்த ஒபாமா ஆர்வமிகுதியில் அப்பெண்ணை கட்டிபிடித்து முத்தமிட்டார். இதனை அருகே பார்த்துக்கொண்டிருந்த அவரது காதலன் மைக் ஜோன்ஸ் எச்சரிலடைந்து, உடனே ஒபாமாவை நேருக்கு நேராக பார்த்து மிஸ்டர் பிரஸிடென்ட் எனது காதலியை தொடாதீங்க என எச்சரிப்பது …
-
- 4 replies
- 1.1k views
-
-
ஹைதரபாத்: ஆந்திராவில் வரலாறு திரும்புகிறது... 1940களின் இறுதியில் இந்தியாவையே அதிர வைத்தது தெலுங்கானா விவசாயிகளின் ஆயுத முனையிலான வர்க்கப் போராட்டம்.. இப்போது அதே தெலுங்கானா பிரதேசம் "தனி மாநில" கோரிக்கைக்காக ஆயுதமேந்தப் போவதாக பிரகடனம் செய்திருக்கிறது. தெலுங்கானா யுவசேனா மற்றும் தெலுங்கானா செம்புலிகள் ஆகியவற்றின் பெயரில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளில், தெலுங்கானாவை எதிர்ப்போர் அழித்தொழிக்கப்படுவர்" என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. "ஆந்திர அரசே விலகிக் கொள்.. தெலுங்கானாவே எங்களது இலக்கு" என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. தெலுங்கானா செம்புலிகள் இயக்கத்தின் செயலாளர் சத்ரபதியின் பெயரில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அமைதி வழியில் தெலுங்கானாவை வென்றெடுக்க முடியாது. தெலுங்கான…
-
- 20 replies
- 1.1k views
-
-
'இலங்கைத் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு காண போதிய நடவடிக்கை எடுத்துள்ளோம். இலங்கை தமிழர்களுக்காக எதுவும் செய்யவில்லை என்கின்றனர். காங்கிரசை விட எந்த கட்சி நன்மைகள் செய்தது என்பதை சொல்ல முடியுமா?. அருமை தலைவர் ராஜிவ் இந்த மக்களுக்காக ரத்தம் சிந்தியதை மறக்க முடியுமா? இதை விட என்ன தியாகம் செய்ய முடியும்' என காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். தேர்தல் பிரசாரத்துக்காக கன்னியாகுமரி பிரதேசத்துக்குச் சென்றுள்ள சோனியா தொடர்ந்தும் பேசியுள்ளதாவது, இலங்கை தமிழர்களுக்காக காங்கிரஸ் கட்சி எதுவும் செய்யவில்லை என அரசியல் கட்சியினர் குற்றம்சுமத்துகின்றனர். இலங்கைத் தமிழர்களுக்காக காங்கிரஸை விட எந்த கட்சி நன்மைகள் செய்தது என்பதை சொல்ல முடியுமா?. அருமை தலைவர…
-
- 11 replies
- 1.1k views
-
-
ராகுல் காந்தி ஒரு பிரிட்டிஷ் பிரஜை: ஆவணங்களை வெளியிட்டு சுப்பிரமணியன் சுவாமி 'திடுக்' குற்றச்சாட்டு! புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி ஒரு பிரிட்டிஷ் பிரஜை என்று பரபரப்பான குற்றச்சாட்டை கூறியுள்ள சுப்பிரமணியன் சுவாமி, இது தொடர்பாக சில ஆவணங்களையும் வெளியிட்டுள்ளார். டெல்லியில் இன்று செய்தியாளர்கள் கூட்டத்தைக் கூட்டி இந்த குற்றச்சாட்டைக் கூறிய பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி, பிரிட்டனை சேர்ந்த Backops Limited என்ற தனியார் நிறுவனத்தின் இயக்குநர் மற்றும் செயலாளராக ராகுல் காந்தி பெயர் இடம்பெற்றுள்ளதாகவும், அந்த நிறுவனத்தின் வரவு செலவு கணக்கு ஆண்டறிக்கையில் ராகுல் காந்தி தன்னை ஒரு பிரிட்டிஷ் பிரஜை எனக் குறிப்…
-
- 1 reply
- 1.1k views
-
-
உலகின் சிறந்த நாடுகளின் பட்டியலை வெளியிட்டு வரும் தி எக்னாமிஸ்ட் என்ற பத்திரிகை 2013 ஆம் ஆண்டில் எந்த நாட்டில் பிறந்தால், இன்பமாக வாழலாம் என்ற கருத்துக் கணிப்பை வெளியிட்டுள்ளது. இதில் வழக்கம்போல் சுவிட்சர்லாந்து முதலிடத்தை தட்டிச் சென்றுள்ளது. சுவிஸை அடுத்து நார்வே, சுவீடன் மற்றும் டென்மார்க் அடுத்தடுத்த இடங்களை பெற்றுள்ளது. சென்ற வருடம் ஐந்தாம் இடத்தை பிடித்திருந்த கனடா, இவ்வருடம் நான்கு இடங்கள் பின் தள்ளி, ஒன்பதாவது இடத்தையே பெற்றுள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அமெரிக்கா, முதல் 10 இடங்களில் ஒன்றாக இருக்க முடியவில்லை. அதற்கு 16வது இடமே கிடைத்துள்ளது. அமெரிக்கா 1988 ஆம் வருடம் முதலிடத்தில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆசிய நாடுகளில் சிங்கப்பூர் மற்றும் …
-
- 4 replies
- 1.1k views
-
-
சனவரி 30 காலை 10 மணிக்கு புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் தலைமையில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் சென்னை பச்சையப்பன் கல்லூரியிலிருந்து திடீரென்று வெளியே வந்து பூந்தமல்லி நெடுஞ்சாலையை மறித்தார்கள். சுமார் ஒன்றரை மணிநேரம் நீடித்த இப்போராட்டத்தில் பு.மா.இ.மு மாணவர்கள் நெடுஞ்சாலையை மறித்து நாடகம் நடத்தினர். மாணவர்கள் முரையாற்றினர். ஆயிரக்கணக்கான வாகனங்கள் தேங்கி நின்றன. நேரம் செல்லச்செல்ல மாணவர் கூட்டமும் மக்கள் கூட்டமும் அதிகரிக்கவே செய்வதறியாமல் திகைத்த்து போலீசு. நோக்கம் நிறைவேறிய பின்னர் மக்களின் சிரமத்தைக் கணக்கில் கொண்டு ஒன்றரை மணி நேரத்துக்குப் பின்னர் மறியலை விலக்கிக் கொண்டார்கள் மாணவர்கள். பின்னர் அனைவரும் கைது செய்யப்பட்டனர். போர்க்குணத்துடன் நடைபெற்ற இந்த மறியல…
-
- 3 replies
- 1.1k views
- 1 follower
-
-
தமிழகத்தின் சென்னை தவிர பிற மாவட்டங்கள் மின்பற்றாக்குறையால் தவித்துக் கொண்டிருக்க,தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கடல் வழியாக மின்சாரம் கொண்டு செல்வதற்கான ஆய்வுப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்தச் செய்தி தமிழ்த்தேசிய ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் என பல தரப்பினரிடையேயும் பலத்த எதிர்ப்பைக் கிளப்பியுள்ளது. இலங்கையில் இனப்படுகொலை நடைபெற்றிருப்பதாக உலக நாடுகளே ஒப்புக் கொண்டிருக்கின்றன.போர் நடைபெறும்போதே தமிழர்களின் உணர்வை மத்திய அரசு மதிக்க வில்லை.போர் முடிந்த பிறகும் தொடர்ந்து இலங்கையுடன் பல ஒப்பந்தங்களைச் செய்து வருகிறது. தமிழக மீனவர்களையும் இலங்கை ராணுவம் தொடர்ச்சியாகத் தாக்கி வரும் நிலையில், ராமேஸ்வரம் வழியாக இலங்கைக்கு மின்சாரத்தைக் கொ…
-
- 1 reply
- 1.1k views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்… - துருக்கி சிரியா எல்லையில் சுட்டுவீழ்த்தப்பட்டது ரஷ்ய யுத்த விமானம்- துருக்கிய வான் பரப்பில் அத்துமீறி நுழையவில்லை என்கிறது ரஷ்யா! - விமானத் தாக்குதல்களால் மட்டும் ஐஎஸ் குழுவினரை தோற்கடிக்க முடியுமா? - சிரியா விவகாரம் பற்றி பேசுவதற்காக பிரான்ஸ் அதிபர் அமெரிக்கா செல்லும் நிலையில், ஐஎஸ் மீதான வான் தாக்குதல்களின் பலன்கள் பற்றி ஆராய்கிறது பிபிசி - பாரிஸ் தாக்குதலை அடுத்து, ஐரோப்பாவுக்குள் குடியேறிகளை அனுமதிப்பதில் அதிகரிக்கும் கெடுபிடிகளுக்கு எதிராக மசெடோனிய எல்லையில் குடியேறிகள் போராட்டம்!
-
- 0 replies
- 1.1k views
-
-
மகாராஷ்டிராவைச் சேர்ந்த தொழிலதிபர் பங்கஜ் பாரக் என்பவர் தனது 45-வது பிறந்த நாளுக்காக ரூ.1 கோடியே 30 லட்சம் மதிப்புள்ள தங்கச் சட்டையை வாங்கியுள்ளார். மும்பையில் இருந்து 260 கி. மீட்டர் தொலைவில் உள்ளது இயோலா நகரம். அந்த நகரைச் சேர்ந்த ஜவுளி தொழிலதிபர் பங்கஜ் பாரக். 8-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள அவர் சிறுவயதிலேயே ஜவுளித் தொழிலில் இறங்கி மிகக் குறுகிய காலத்தில் பெரும் தொழிலதிபராக உயர்ந்தார். பள்ளிப் பருவம் முதலே அவருக்கு தங்கத்தின் மீது தணியாத ஆசை. அதனால் எப்போதுமே சுமார் இரண்டு கிலோ அளவுக்கு தங்க நகைகளை அணிவதை வழக்கமாகக் கொண் டுள்ளார். அவர் தனது 45-வது பிறந்தநாளை வெள்ளிக்கிழமை கொண்டாடுகிறார். இதற்காக அவர் ரூ.1 கோடியே 30 லட்சம் மதிப்புள்ள தங்க சட்டையை வாங்கியுள்ளார். …
-
- 5 replies
- 1.1k views
-
-
. சென்னை: உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்குப் பிறகு அரசியல், அமைச்சர் பதவிகளை ஒதுக்கி வைத்து விட்டு மக்களுடன் ஒருவனாக நான் என்னை இணைத்துக் கொள்வேன் என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி . இதன் மூலம் அடுத்த ஆண்டு ஜூன் மாதத்துடன் அவர் அரசியலை விட்டு விலகப் போவதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமைச்சர்கள், திமுகவினர் மத்தியில் இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2009-2010-ம் ஆண்டு பட்ஜெட்டில் அருந்ததியருக்கு 3 சதவீத தனி உள் இடஒதுக்கீட்டை முதல்வர் கருணாநிதி வழங்கினார். மேலும், உயர்கல்வி வளர்ச்சிக்கு நன்கொடையாக ரூ.61 லட்சத்து 5 ஆயிரம் வழங்கினார். இதற்காக கருணாநிதிக்கு அருந்ததியர் மக்கள் சார்பில் நன்றி தெரிவித்து பாராட்டுக் கூட்டம் சென்னையில் நடந்தது. விழாவில…
-
- 3 replies
- 1.1k views
-
-
பலஸ்தீன சிறுமியின் துணிவு இஸ்ரேலியரை பார்த்து நீங்கள் பயங்கரவாதிகள் என்றும் முழு உலகமும் எம்பக்கம் என்கிறார். https://www.facebook.com/video.php?v=872457959433606
-
- 14 replies
- 1.1k views
-
-
டிஸ்கி: சந்திப்பில் அப்படி என்னதான் நடந்து இருக்கும்? மன்மோகன் சிங்கு: ஆவோ ஜி ஆ வோ ஜி ராஜ பக்சே ஜி... ராஜ பக்சே: ஆயி போவன் மன்மோகன் ஜி... (அருகில் இருக்கும் தமிழ்நாட்டு அரசியல் கைத்தடிகள் மனதிற்குக்குள் "ஆயி போவன்" ....என்ன சகுனமே சரியில்லையே... ஒருவேளை காலையில போலையோ") மன் மோகன் சிங்கு: பைட்டோ பைட்டொ ஜி... ராஜ பக்சே அமருகிறார்... மன்மோகன் சிங்கு: விருந்து முடிந்ததா சிறப்பாக இருந்ததா? ராஜ பக்சே: பரவாயில்லை ஆனா லெக் பீசு சரியா வேகலை... வயித்த லைட்டா கலக்குது... மன்மோகன் சிங்கு: அட சமயக்கார பய கொஞ்சம் அசந்துட்டிருப்பான் போகட்டும் சரக்கு நன்றாக இருந்ததா? ராஜ பக்சே: ஏனோ முன்ன மாதிரி ஓல்டு மங்கு காட்டம் இல்…
-
- 1 reply
- 1.1k views
-
-
டெல்லி: இந்தியாவிலேயே முதல் முறையாக, லஞ்சம் வாங்கியதாக ரா அதிகாரி ஒருவரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவரின் பெயர் டாக்டர் ஏ.எஸ்.நாராயண் ராவ். ரா அமைப்பின் தொழில்நுட்பப் பிரிவில் மூத்த விஞ்ஞானியாக பணியாற்றி வருகிறார். நேற்று இரவு இவரை டெல்லி கரோல்பாக்கில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் வைத்து ரூ. 1 லட்சம் வாங்கியபோது கையும் களவுமாக சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். சென்னையைச் சேர்ந்த ஒரு நிறுவனத்திற்கு ஏற்றுமதிக்கான உரிமத்தை வழங்குவது தொடர்பாக ரூ. 8 லட்சம் கேட்டுள்ளார் ராவ். முதல் தவணையாக ரூ. 1 லட்சம் தருவதாக சென்னை நிறுவனம் தெரிவித்தது. இந்தத் தகவல் சிபிஐக்குப் போனது. இதைத் தொடர்ந்து வலை விரித்த சிபிஐ அதிகாரிகள், கையும் களவுமாக ராவைக்…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஜூலை 26 முதல் ஓகஸ்ட் 4 ஆம் நாள் வரையான காலப்பகுதியில் சிறிலங்காவில் நடைபெறவுள்ள சார்க் மாநாட்டை முன்னிட்டு தமிழீழ விடுதலைப் புலிகள் அதிகாரபூர்வமாக போர் நிறுத்தத்தினை அறிவித்துள்ளனர். தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் சாதுர்யமான காய்நகர்த்தலால் பந்தை அரசாங்கத்தின் பக்கம் நகர்த்தியுள்ளார்.ஒரு இக்கட்டான சூழ்நிலைய அரசாங்கத்திற்கு இதன் முலம் ஏற்படுத்தியுள்ளார். இவ்வறிக்கையின் பின் வெளிவிவகார அமைச்சர் பதில் அறிக்கைகளை வெளியிட்டு பிதற்றிக்கொண்டிருக்கிறார். பொருத்தமான நேரத்தில் வந்த தலைவரின் அறிவிப்பு. விஷேடமாக இந்திய தலைவர்களுக்கு சற்று தடுமாற்றத்தை உண்டாக்கலாம். இன்றைய நாளில் நடக்க இருக்கும் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் காங்கிரஸ் தோற்றால் தேர்தல் நடைபெறும் வரை ஒரு இடைக்கால…
-
- 0 replies
- 1.1k views
-
-
ரஷ்யாவில் எதிர்கட்சி தலைவர் போரிஸ் நெம்ஸ்சோ மர்மநபரால் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். ரஷ்ய தலைநகரான மாஸ்கோவின் கெர்மலின் பகுதியில், நெம்ஸ்சோ நடைபயணம் மேற்கொண்டபோது துப்பாக்கியுடன் வந்த மர்மநபர் 4 முறை துப்பாகியால் சுட்டுள்ளார். இதில் நெம்ஸ்சோ உயிரிழந்ததாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது. இதையடுத்து அந்த பகுதி பாதுகாப்பு வளைத்திற்குள் கொண்டு வந்துள்ளனர். இந்த துப்பாகி சூடு சம்பவத்தின் போது நெம்ஸ்சோ உடன் இருந்த பெண் ஒருவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 55வயதான போரிஸ் நெம்ஸ்சோ அந்நாட்டின் முன்னாள் துணை பிரதமராக இருந்துள்ளார். http://www.ns7.tv/ta http://www.bild.de/
-
- 4 replies
- 1.1k views
-
-
-
மாலத்தீவு: இந்திய-சீன மல்யுத்தக் களம் மாலத்தீவு நாட்டில் செப்டம்பர் 23 அன்று அதிபர் தேர்தல் நடக்கவிருக்கும் சூழலில், அந்நாட்டின் அரசியல் மாற்றங்கள் குறித்த கவனம் எழுந்திருக்கிறது. சீனாவுடன் அதிக நெருக்கம் காட்டும் மாலத்தீவை இந்தியா எச்சரிக்கையுடன் அணுக வேண்டிய சூழலும் உருவாகியிருக்கிறது. சீனாவை நோக்கி மாலத்தீவு நகர்வதற்கு மாலத்தீவின் உள்நாட்டுக் குழப்பங்களுக்கு முக்கியப் பங்கு உண்டு. இந்நிலையில், இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான புவியரசியலின் முக்கியக் களமாக மாறியிருக்கிறது மாலத்தீவு. இந்தியாவுக்கும் மாலத்தீவுக்கும் இடையிலான உறவு நீண்ட வரலாற்றைக் கொண்டது. இரு நாடுகளும் இன மற்றும் கலாச்சாரரீதியாக மிகவும் நெருக்கமான உற…
-
- 4 replies
- 1.1k views
-
-
மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து சீனாவை நோக்கி கடந்த சனியன்று 239 பயணிகளுடன் பயணித்த மலேசியன் ஏர்லயின்ஸ் விமானம் காணமல்ப் போனது தெரிந்ததே. இந்த விமானத்தைத் தேடி சர்வதேச நாடுகள் ஒருங்கிணைந்த தேடுதல் பணி கடந்த 3-4 நாட்களாக தொடர்ச்சியாக நடைபெற்று வந்தவேளையில், முதல் முறையாகத் தென்சீனக் கடலில் இந்த விமானத்தின் சிதைவுகள் என்று உறுதியாக நம்பப்படும் மூன்று பாகங்களை சீன செய்மதியொன்று அடையாளம் காட்டியிருக்கிறது. விமானம் இறுதியாக தெரிந்த இடம் என்று சொல்லப்படும் இடத்திற்கு அருகில், விமானத்தின் பயணப்பாதையில் இந்தச் சிதைவுகளை சீனச் செய்மதி காட்டியிருக்கிறது. ஏறக்குறைய 15 மீற்றர்கள் அகலமும், 20 மீற்றர்கள் நீளமும் கொண்ட இந்தச் சிதைவுகள் மூன்று வெவ்வேறு இடங்களில் விமானத்தின் பயணப் பா…
-
- 6 replies
- 1.1k views
-
-
அணிசேரா நாடுகளின் மாநாட்டுக்குச் சென்றுள்ள இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை விமான நிலையத்தில் உட்கார வைத்துவிட்டு, பாகிஸ்தான் ஜனாதிபதி முஷாரப்பிற்கு முதல் மரியாதை வழங்கப்பட்டுள்ளது. மாநாடு நடக்கும் ஹவானாவில் மன்மோகன் சிங்கின் எயார் இந்தியா விமானம்தான் முதலில் தரையிறங்கியது. அதன் பிறகு, ஐந்து நிமிடங்கள் கழித்தே முஷாரப்பின் விமானம் தரையிறங்கியது. ஆனால், கியூப அரச அதிகாரிகள், பிரதமர் மன்மோகன் சிங் விமானத்திலிருந்து இறங்க அனுமதி வழங்கவில்லை. முஷாரப்பிற்கு முன்பாக வந்தும், கீழே இறங்காமல் அரை மணிநேரம் விமானத்திற்குள்ளாகவே பிரதமர், இந்திய அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் ஆகியோர் ஏறக்குறைய `சிறை' வைக்கப்பட்டிருந்தனர். முதலில் முஷாரப்பிற்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது…
-
- 1 reply
- 1.1k views
-
-
இங்கிலாந்தில் நிலவும் கடும் மூடுபனி காரணமாக கிட்டத்தட்ட 10 நிமிடத்துக்குள், 100 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிக் கொண்டன. இந்த விபத்துகளில் சிக்கி கிட்டத்தட்ட 200 பேர் காய்மடைந்ததாகத் தெரிய வந்துள்ளது. இங்கிலாந்து, கென்ட் மாகாணத்தில் தற்போது கடும் மூடுபனி நிலவுகிறது. எனவே, பகல் வேளையிலும் இருள் சூழ்ந்ததுபோன்று பனி மூடிக் காணப்படுகிறது. இதனால், சாலையில் செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்கு வெளிச்சத்தில் ஊர்ந்து செல்கின்றன. இந்நிலையில் நேற்று காலை, ஷெப்பி 4 வழிச்சாலை மேம்பாலத்தில் பனி மூட்டத்தால் வழித்தடம் தெரியாமல் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்துச் சென்றன.திடீரென பனி மூடியதால் சாலையில் நகர முற்பட்ட வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன. வாகன ஓட்டிகள் என்ன நடக்கிறது என்பதை யூகிப்ப…
-
- 0 replies
- 1.1k views
-
-
தமிழர் தேசிய இயக்கத்தின் மீதான தடையை நீக்குக! 'ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் வண்டி இழுக்கிறது... கொம்பை மறந்த மாடு.' உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் குத்தீட்டிகளாகக் கொம்புகள் முளைத்திருக்க, தன் நிலை, பலம் அறியாது நுகத்தடியில் பூட்டப்படும் மாடுகளைப் போல் அல்லவா, தொன்மை, வீரம், வரலாறு முதலானவைகளை அறிந்துணராது தமிழர்கள் இன்று உள்ளனர்! இந்தி(ய), இந்துத்துவ ஏகாதிபத்தியப் பிடியிலிருந்து விடுபடவும், திராவிட இயக்கத்தின் போலிகளான தேர்தல் அரசிய்ல கட்சிகள் மாயை களினின்றும் விடுபடவும் தமிழ் மக்களுக்காக தமிழர் தேசிய இயக்கம் கண்டார் பழ. நெடுமாறன் அவர்கள். முதலாம் மாநாட்டில், 'தமிழ்நாட்டுக்குத் தன்னுரிமை பெறுவது எமது இலட்சியம்' என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 10-02-2002…
-
- 0 replies
- 1.1k views
-