உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26679 topics in this forum
-
அலெப்போ தாக்குதலில் 11 குழந்தைகள் பலி சிரியாவின் அலெப்போ நகரின் அண்டைப் பகுதியில், போராளிகளின் பிடியில் இருக்கும் பகுதியில் அரசப் படைகள் நடத்திய தாக்குதலில், 11 குழந்தைகள் பலியாகியுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. அரசு படைகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் பயன்படுத்தபட்ட வெடிகளால் பலியான ஐம்பது பேரில் இக்குழந்தைகளும் அடங்குவர் என சிரிய ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். பிரிக்கப்பட்ட நகரத்தின் மேற்குப் பகுதியில், அரசுப்பிடியின் பகுதியில் போராளிகளின் துப்பாக்கிச் சூட்டில் இரண்டு குழந்தைகள் உட்பட எட்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த சமீபத்திய உயிரிழப்புகள், 48 மணி நேர போர் நிறுத்தத்திற்கு ரஷியா ஒப்புதல் வழங்கியுள்ளதாக ஐ.நா அறிவிப்பையடுத்து வந்துள்ளது. h…
-
- 0 replies
- 367 views
-
-
சிரியாவில் முற்றுகைக்குள்ளாகியிருக்கும் அலெப்போ நகரிலுள்ள மருத்துவமனைகளும் வான்தாக்குதல்களில் இருந்து தப்பவில்லை. அலெப்போவில் முற்றுகைக்குள் சிக்கியிருக்கும் ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கை அங்குள்ள மிகச்சில மருத்துவர்களின் கைகளிலேயே உள்ளது. தரையில்வைத்து மூளை அறுவை சிகிச்சை, சிறார்களின் முதுகுத்தண்டில் கொத்து குண்டுகளின் தாக்குதல், மருத்துவமனையின் கூரை இடிந்துவிழுந்ததால் உயிரிழப்புகள் ஆகியவை அலெப்போவில் இடம்பெற்றுள்ளன. இது குறித்த பிபிசியின் பிரத்யேகக் காணொளி.
-
- 3 replies
- 508 views
-
-
அலெப்போ போர் முடிந்தது சிரியா நகரான, அலெப்போவைக் கைப்பற்ற நான்காண்டுகளாக நடந்த போர் முடிவுக்கு வந்துவிட்டது போல் தோன்றுகிறது. அலெப்போ போர் முடிந்தது நகரில் எஞ்சியிருந்த கிளர்ச்சிப் போராளிகள் நகரை விட்டு வெளியேற அனுமதிக்க போர் நிறுத்தம் ஒன்று அறிவிக்கப்பட்டதிலிருந்து கடந்த சில மணி நேரங்களாக அங்கு மோதல்கள் நடக்கவில்லை என்று நகரவாசிகள் கூறுகின்றனர். ராணுவ நடவடிக்கை முடிந்துவிட்டது என்று ரஷ்யா கூறியிருக்கிறது. சிரியா படைகள் கிளர்ச்சியாளர்கள் வசம் இருந்த கடைசி சில பகுதிகளையும் தம் கட்டுப்பாட்டில் எடுத்திருக்கின்றன என்று ரஷ்யா கூறுகிறது. வரும் சில மணி நேரங்களில்,கடுமையாக காயமடைந்தவர்கள், பொதுமக்கள் மற்றும் கிளர்ச்சியாளர்கள…
-
- 1 reply
- 582 views
-
-
அலெப்போவில் குளோரின் வாயு தாக்குதல்? நூற்றுக்கணக்கானோர் மருத்துவமனையில் அனுமதி சிரியாவில், கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள அலெப்போ மாவட்டத்தில் குளோரின் வாயு மூலம் நடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் தாக்குதலை அடுத்து, நூற்றுக்கணக்கான மக்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அரசு ஹெலிகாப்டர்களில் இருந்து குண்டுகள் வீசப்பட்ட பிறகு, ஒருவர் உயிரிழந்துவிட்டதாக அந்த நகரில் உள்ள சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் குழந்தைகள். மூச்சுத்திணறலுக்காக அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆனால், ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை அதிபர் அசாத் அரசு தொடர்ந்து…
-
- 0 replies
- 330 views
-
-
அலெப்போவில் நிலவும் சூழலை டிவிட்டரில் பகிர்ந்த 7 வயது சிறுமியுடன் எர்துவான் சந்திப்பு சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் பிடியில் இருந்த கிழக்கு அலெப்போவில் உள்ள நிலைமை குறித்து டிவிட்டர் வலைதளத்தில் கருத்து வெளியிட்ட பானா அலாபெட் என்ற 7 வயது சிரியா நாட்டு சிறுமி, துருக்கி அதிபர் ரஸீப் தாயிப் எர்துவானை சந்தித்துள்ளார். 'ஏர்துவானை சந்தித்ததில் மகிழ்ச்சி' அங்காராவில் உள்ள துருக்கி அதிபர் மாளிகையில், பானா மற்றும் அவரது தம்பி ஆகியோர் எர்துவானின் மடியில் அமர்ந்திருப்பது படம் பிடிக்கப்பட்டுள்ளது. கிழக்கு அலெப்போவை விட்டு பானா மற்றும் அவரது குடும்பத்தினர் தப்பிச் சென்ற பின்னர், பானாவை துருக்கிக்கு அழைத்து வர எர்து…
-
- 0 replies
- 289 views
-
-
அமெரிக்காவின் அலெஸ்கா மாநிலத்தின் அன்கரேஜ் பகுதியில் சற்று முன்னர் பாரிய பூமி அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.இதனையடுத்து இந்தப் பகுதியின் சில இடங்களில் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. அன்கரேஜ் பகுதியில் இருந்து மேற்காக ஆயிரம் மைல் தூரத்தில் பசுபிக் கடல் பிராந்தியத்திலேயே இந்தப் பூமி அதிர்ச்சி இடம்பெற்றுள்ளது. 7.4றிச்டர் இளவு கொண்டதாக இது பதிவாகியுள்ளது. இந்த பூகம்பத்தால் ஏற்பட்ட பாதிப்புக்கள் பற்றி இதுவரை எதுவும் அறிவிக்கப்படவில்லை. பூகம்பம் ஏற்பட்ட 800 மைல் சுற்றளவு கொண்ட பிரதேசத்துக்கே சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரதான பூமி அதிர்வைத் தொடர்ந்து 7.2 றிச்டர் அளவிலான தொடர் அதிர்வொன்றும் பதிவாகியுள்ளது An earthquake of magnitude 7.2 has struck…
-
- 1 reply
- 561 views
-
-
அலைக்கழிக்கப்படும் ரோஹிங்கியா அகதிகள்: நிரந்தரத் தீர்வு எப்போது? உயிரைக் காப்பாற்றிக்கொள்ளத் தங்கள் நாட்டில் புகுந்த ஆறு லட்சத்துக்கும் மேற்பட்ட ரோஹிங்கியா முஸ்லிம் அகதிகளை மியான்மருக்குத் திருப்பி அனுப்ப முடிவு எடுத்திருக்கிறது வங்கதேசம். இது தொடர்பாக மியான்மருடன் வங்கதேசம் உடன்பாடு செய்துகொண்டுள்ளது. இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படாத நிலையில், பெரும் இன்னல்களுக்கு ஆளாகி அகதிகளாக வெளியேற்றப்பட்ட ரோஹிங்கியா முஸ்லிம்கள், மீண்டும் மியான்மருக்குத் திருப்பி அனுப்பப்படுவது மிகவும் கொடுமையானது. மியான்மரின் ராக்கைன் பகுதியில் ஏற்பட்ட கலவரங்களில் மியான்மர் ராணுவத்தினர் ரோஹிங்கியாக்களைக் கடுமையாக ஒடுக்கியதுடன் அவர்களுடைய வ…
-
- 0 replies
- 472 views
-
-
கொரோனா பயத்தில் நாடுகள் முடங்கி இருக்கும் போது, அலையலையாக, டிங்கி பிளாஸ்டிக் தோணிகளில் ஆங்கிலக்கால்வாயினை கடந்து அகதிகள் வருவது பெரும் தலையிடியாக மாறியுள்ளது. உறுதி அளித்தபடி இல்லாமல், பிரான்ஸ் நாடு, இவர்களை தடுக்க எவ்வித நடவைடிக்கைகளையும் எடுக்கவில்லை என பிரித்தானியா கவலை தெரிவித்து, இதனை தடுக்க நடவடிக்கை எடுப்பது முக்கியத்துவம் பெரும் என அறிவித்துள்ளது. நேற்று இரவு மட்டும் 66 பேர், 6 படகுகளில் வந்து உள்ளனர். முன்தினம் 64 பேர் வந்துள்ளனர்.
-
- 1 reply
- 739 views
-
-
அல் – கொய்தா தீவிரவாத அமைப்பு மீண்டும் வலுப்பெற்று வருவதாக எச்சரிக்கை! அல் – கொய்தா தீவிரவாத அமைப்பு மீண்டும் வலுப்பெற்று வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்க புலனாய்வு பிரிவினரை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகம் ஒன்று இதுகுறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது. பாகிஸ்தான் அபோடபாத் நகரத்தில் அமெரிக்க படைகளால் அல் – கொய்தா அமைப்பின் தலைவர் ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்டு எட்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. ஜிகாதி அமைப்புகளிலேயே மிகவும் பயங்கரமான அமைப்பாக அல் – கொய்தா கருதப்பட்டது. ஆயிரக்கணக்கானோர் இந்த அமைப்பில் இணைந்து மேற்குலகிற்கு எதிரான தாக்குதல்களை முன்னெடுத்து வந்தனர். இந்த தீவிரவாத அமைப்புக்கு வளமான பொருளாதார பின்புலமும் இருந்தது. எனினும் அந்த அமைப…
-
- 0 replies
- 446 views
-
-
பின் லாடனின் கொலையில் முக்கிய பங்கு வகித்தவரும் சிஐஏயின் முன்னாள் அதிபரும் முன்னாள் அமெரிக்கப் பாதுகாப்புத் துறைச் செயலருமான லியோன் இ பானெற்றா 2011 ஜுலையில் "We are within reach of strategically defeating AL-Qaeda" தந்திரோபாய ரீதியில் நாம் அல்-கெய்தாவைத் தோற்கடிக்கும் நிலையை அண்மித்துவிட்டோம்" எனப் பாக்கிஸ்த்தானில் வைத்துக் கூறினார். 2011 மே மாதம் அல் கெய்தாவின் தலைவர் பின் லாடன் கொல்லப்பட்டார் ஆப்கானிஸ்த்தானிலும் யேமனிலும் பல அல் கெய்தாவின் முன்னணித் தலைவர்கள் அமெரிக்காவின் சிஐஏயின் ஆளில்லா விமானங்களால் கொல்லப்பட்டனர். அத்துடன் அல் கெய்தாவினரின் தொடர்பாடல்கள் மிகவும் தடைப்பட்டிருந்தது. அவர்களின் தொடர்பாடல் கருவிகளை வைத்து அவர்களின் இருப்பிடங்களை அறிந்து அமெரிக்கா அவர…
-
- 12 replies
- 1k views
-
-
அல் கொய்தா இயக்கத்தின் தலைவர் ஸவாஹிரி உயிரிழந்ததாகத் தகவல்! November 21, 2020 அல் கொய்தா இயக்கத்தின் தலைவர் அய்மான் அல் ஸவாஹிரி (Ayman al-Zawahiri) உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2011ல் பின்லேடன் கொல்லப்பட்ட பின்னர் ஸவாஹிரி அல்கொய்தாவின் தலைமைப் பொறுப்பை ஏற்றார். இதனைத் தொடர்ந்து இவரின் தலைக்கு 25 மில்லியன் டொலர்களை விலையாக வைத்தது அமெரிக்கா. ஆனால் ஆப்கானிஸ்தானில் பதுங்கி வாழ்ந்த அய்மான் அல் ஸவாஹிரி ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கடும் மூச்சிரைப்பு காரணமாக ஜவாஹிரி உயிரிழந்ததாக பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ஊடகங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/913…
-
- 0 replies
- 824 views
-
-
டெல்லி: இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பு அல் கொய்தாவுடன் கைகோர்க்க திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்தியன் முஜாஹிதீன் அமைப்பு பயங்கர தீவிரவாத அமைப்பான அல் கொய்தாவுடன் கைகோர்த்து செயல்பட திட்டமிட்டுள்ளது. அல் கொய்தா தலைவர் ஜவாஹிரி ஜிகாத் பற்றி சில குறிப்புகளை அளித்த சில நாட்களில் இந்தியன் முஜாஹிதீன் இப்படி திட்டமிட்டுள்ளது. இரு தீவிரவாத அமைப்புகளுக்கும் இடையே விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகவிருக்கிறதாம். இந்தியன் முஜாஹிதீன் அல் கொய்தா இந்தியாவில் செயல்பட உதவி செய்யுமா அல்லது அந்த அமைப்போடு தன்னை இணைத்துக் கொள்ளுமா என்பது விரைவில் தெரிய வருமாம். இந்தியன் முஜாஹிதீனின் இந்த திட்டம் பாகிஸ்தானின் உளவு நிறுவனமான ஐஎஸ்ஐ-ஐ எரிச்சல் அடைய வைத்துள்ளதாம். இந்தியன் முஜாஹ…
-
- 0 replies
- 592 views
-
-
அல் ஜஸீரா உட்பட 21 இணைய தளங்களை முடக்கியது எகிப்து பயங்கரவாதத்துக்கு ஆதரவளிப்பதான குற்றச்சாட்டின் பேரில், அல் ஜஸீரா உட்பட 21 இணைய தளங்களை எகிப்து அரசாங்கம் முடக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பயங்கரவாதத்துக்கும் தீவிரவாதத்துக்கும் ஆதரவான செய்திகளும், பொய்யான தகவல்களும் இடம்பெறுவதாகக் கூறியே இந்த இணைய தளங்களை எகிப்து அரசு முடக்கியுள்ளதாகத் தெரியவந்துள்ளது. இச்செய்தியை உறுதிசெய்யவோ, மறுக்கவோ முன்வராத எகிப்து அரசு ஊடகம் ஒன்று, ‘அச்செய்தி உண்மையாகவே இருந்தாற்றான் என்ன? இதனால் எவ்வித பிரச்சினையும் இல்லை’ என்று குறிப்பிட்டுள்ளது. மேலும், மேற்படி இணைய தளங்கள் மீது எகிப்து அரசு சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என்றும் தெரியவ…
-
- 0 replies
- 263 views
-
-
அல்- ஹலீல்: கடந்த ஞாயிற்றுக்கிழமை (17.06.2012) அல் ஹலீல் பிராந்தியத்தில் கூலித்தொழிலில் ஈடுபட்டிருந்த பலஸ்தீனர்களைச் சுற்றிவளைத்துக்கொண்ட யூத ஆக்கிரமிப்பாளர் குழுவொன்று, அவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளது. வெறிக்கூச்சல் போட்டபடி இரு பலஸ்தீன் இளைஞர்களை விரட்டிப் பிடித்துக் கடத்திச் சென்ற ஆக்கிரமிப்பாளர்களின் அடாவடித்தனத்தைத் தடுத்து நிறுத்த முனையாமல், இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப்படை கைகட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்ததாகவும், காயப்பட்ட மற்றொரு பலஸ்தீனரைக் கைதுசெய்து இழுத்துச் சென்றதாகவும் சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிகள் வாக்குமூலம் அளித்துள்ளனர். கூலித் தொழிலாளிகளான அன்வர் அப்துல் ரப் (வயது 30), நயீம் அல் நஜ்ஜார் (வயது 32) ஆகிய இருவரின் சடலங்களும்…
-
- 0 replies
- 437 views
-
-
இரட்டை கோபுரத் தாக்குதலுக்கு பின்னர் அல்-காய்தாவை சர்வதேச பயங்கரவாத இயக்கமாக அமெரிக்க அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பு ஒசாமாவை அதிருப்திக்குள்ளாக்கியது. பாகிஸ்தானின் அபோதாபாத்தில் ஒசாமா மறைந்திருந்த பதுங்கிடத்தில் இதற்கான ஆதாரங்கள் எங்களுக்கு கிடைத்தன. அல்-காய்தாவின் ஆள்சேர்ப்புக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தியது. ஒசாமாவின் குறிப்புகள் இதனை தெள்ளத்தெளிவாக தெரிவிப்பதாக இருந்தன. ஆள்சேர்ப்பு நடவடிக்கையை எளிமையானதாக மாற்ற, இஸ்லாமியர்களுக்கு மிகவும் நெருக்கமான உணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தோடு பெயரைத் தேர்வு செய்ய அவர் முயற்சித்துள்ளார். அல்-காய்தா இஸ்லாமிய இயக்கமாக அறியப்படாமல், பயங்கரவாத இயக்கமாக அனைவராலும் அறியப்பட்டது ஒசாமாவின் மிகவும் யோசனைக்குள்ளாக்கியது. இது குறித்த ச…
-
- 0 replies
- 315 views
-
-
ஆபிரிக்க நாடுகளில் அல்-காய்தாவின் செயல்பாடுகள் அதிகரித்துள்ளதால், அந்நாடுகளின் பாதுகாப்புக்கு அமெரிக்கப் படைகள் அனுப்பப்பட உள்ளன. பயங்கரவாதத்தை கடுமையாக எதிர்த்து போரிட்டு வரும் அமெரிக்காவை, ஆப்பிரிக்க நாடுகளில் அதிகரித்து வரும் அல்-காய்தா மற்றும் அதனுடன் தொடர்புடைய அமைப்புகளின் மிரட்டல்கள் கவலையடையச் செய்துள்ளது. எனவே, ஆப்பிரிக்க நாடுகளுக்கு தனது படைகளை அனுப்பி பயங்கரவாத அமைப்புகளை ஒடுக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. அடுத்த மாத தொடக்கத்தில் அமெரிக்கப் படைகள் அங்கு அனுப்பி வைக்கப்பட இருக்கிறது. லிபியா, சூடான், அல்ஜீரியா, நைஜர் போன்ற நாடுகளில் அல்-காய்தாவுடன் தொடர்புடைய பயங்கரவாத அமைப்புகளின் செயல்பாடுகள் தீவிரமாக உள்ளன. கென்யா, உகாண்டா போன்ற நாடுகள், சோமாலிய…
-
- 0 replies
- 400 views
-
-
அல்-கொய்தாவின் 2 ஆம் தளபதி ஆப்கான் படையினர் நடத்திய தாக்குதலில் பலி! பயங்கரவாதிகள் பட்டியலில் இருந்த அல்கொய்தாவின் மூத்த தலைவரான அபு முஹ்சின் அல் மஸ்ரி உயிரிழந்துள்ளார். அமெரிக்க படையினரால் தேடப்படும் நபராக அறியப்பட்ட இவர் ஆப்கான் சிறப்பு படையினர் நடத்திய தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக ஆப்கானிய தேசிய பாதுகாப்பு பணியகம் உறுதிப்படுத்தியுள்ளது. அல்-கொய்தாவின் இரண்டாவது தளபதி என்று நம்பப்படும் எகிப்திய நாட்டைச் சேர்ந்த அல்-மஸ்ரி, ஆப்கானின், மத்திய காஸ்னி மாகாணத்தில் நடந்த ஒரு சிறப்பு நடவடிக்கையின் போது கொல்லப்பட்டார் என்று ஆப்கானிஸ்தானின் தேசிய பாதுகாப்பு பணியகம் சனிக்கிழமை தாமதமாக வெளியிட்ட ஒரு டுவிட்டர் பதிவில் சுட்டிக்காட்டியுள்ளது. அத்துடன் அமெர…
-
- 0 replies
- 396 views
-
-
அல்-ஜசீரா செய்தி நிறுவனத்தில் 500 பணி இழப்புகள் 1996-ம் ஆண்டில், கத்தார் அரசாங்கத்தின் நிதியுதவில் நிறுவப்பட்ட அல்-ஜசீரா செய்தி ஊடகத்துக்கு உலகெங்கிலும் 70க்கும் அதிகமான அலுவலகங்கள் உள்ளன சர்வதேச ஊடக நிறுவனமான அல்-ஜசீரா கிட்டத்தட்ட 500 பணியிடங்களை நீக்கவுள்ளது. அல் ஜசீராவின் தலைமை அலுவலகம் அமைந்துள்ள கத்தாரிலேயே அனேகமான பணியிழப்புகள் மேற்கொள்ளப்படவுள்ளன. உலகின் மற்ற இடங்களிலும் பல பணியிழப்புகள் ஏற்படவுள்ளன. 'ஊழியர்களின் வினைத் திறனை மேலும் அதிகரிப்பதை நோக்காகக் கொண்டே' இந்த நடவடிக்கையை மேற்கொள்வதாக அல் ஜசீரா அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. சர்வதேச ரீதியாக எண்ணெயின் விலையில் ஏற்பட்ட வீழ்ச்சி காரணமாக, கத்தார் அரசாங்கம் அல்…
-
- 0 replies
- 406 views
-
-
அல்-ஜசீராவை மூடு: கத்தார் மீது தடையை விலக்க வளைகுடா நாடுகள் நிபந்தனை இம்மாதத் தொடக்கத்தில் இருந்து கத்தார் மீது தடை விதித்திருந்த வளைகுடா நாடுகள் கத்தாரிடம் என்ன எதிர்பார்க்கின்றன என்பது குறித்து ஒரு பட்டியலை அளித்துள்ளன. 13 விஷயங்கள் அடங்கிய அந்த பட்டியலில், அல் ஜஸீரா தொலைக்காட்சியை மூடுவது, ஒரு துருக்கி ராணுவ தளத்தை மூடிவிட்டு, இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்புடனான எல்லா தொடர்புகளையும் துண்டிப்பது போன்றவை அடங்கும். கத்தாருக்கும், வளைகுடா நாடுகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்த முயற்சி செய்து கொண்டிருக்கும் குவைத் மூலம் இந்த பட்டியல் கத்தாருக்கு அளிக்கப்பட்டது. சௌதி அரேபியா, பஹ்ரைன், ஐக்கிய அரபு எமிரேட்டுகள் மற்றும் எகிப்து ஆகிய நாடுகள், கத்தார் பயங்…
-
- 0 replies
- 396 views
-
-
அல்-நூர் மசூதி திறக்கப்பட்டது: கண்ணீருடன் மக்கள் பிரார்த்தனை துப்பாக்கிச்சூட்டு தாக்குதல் இடம்பெற்று ஒருவாரத்தின் பின்னர் நியூஸிலாந்து அல்-நூர் மசூதி மீண்டும் இன்று சனிக்கிழமை திறக்கப்படுகிறது. நியூஸிலாந்து கிறிஸ்ட்சர்ச் அல்-நூர் மசூதி கடந்த 15 ஆம் திகதி வழமைக்கு மாறான சம்பவத்தால் அமைதியிழந்திருந்தது. வெள்ளிக்கிழமை விசேட தொழுகைக்காக நூற்றுக்கணக்கானோர் கூடியிருந்த நிலையில் அவுஸ்திரேலியா நபர் ஒருவர் வெறித்தனமாக மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 50 பேர் உயிரை இழந்ததோடு பலர் படுகாயமடைந்தனர். பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அல்-நூர் மசூதி மீண்டும் இன்று திறக்கப்படுகிறது. “தாக்குதலுக்கு பின்னரான முதல் பிரார்த்தனைகளுக்காக நாம் இன்று ஒன்றுகூடியு…
-
- 0 replies
- 549 views
-
-
அல்-ஹைய்தாவின் அச்சுறுத்தலை 2001 இல் அறிந்திருந்த பிரான்ஸின் புலனாய்வுப் பிரிவு அல்ஹய்தாவினால் அமெரிக்காவிற்கு உருவாகியுள்ள அச்சுறுத்தல் குறித்து பிரான்ஸின் புலனாய்வு பிரிவினர் 2000, 2001 ஆம் ஆண்டுகளில் ஒன்பது முறை எச்சரித்திருந்ததாகவும் விமானமொன்று கடத்தப்படலாம் என்பது அவர்களிற்கு தெரிந்திருந்ததாகவும் பிரான்ஸின்` லீ மொன்டே' குறிப்பிட்டுள்ளது. அல்ஹய்தாவிற்குள் ஊடுருவிய வெளிநாட்டு புலனாய்வாளர்கள் கண்காணித்து வருகின்றனர் என்பதை நிரூபிப்பதற்கான 328 பக்க ஆவணம் தன்னிடமுள்ளதாக குறிப்பிட்ட செய்தித்தாள் தெரிவித்துள்ளது. ஜனவரி 2001 இல் தயாரிக்கப்பட்ட ஆவணமொன்று இஸ்லாமிய தீவிரவாதிகள் விமானத்தை கடத்த முயல்வது குறித்து சுட்டிக் காட்டியுள்ளது. 2000 ஆம் ஆண்டு இது…
-
- 0 replies
- 684 views
-
-
ஈராக்கில் தனி நாடு அமைக்கும் வகையில் போர் நடத்தி வரும் ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு, அல்கன்சா என்ற பெயரில் பெண்கள் படையையும் உருவாக்கி உள்ளது என்ற அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது. ஈராக்கில், ஐ.எஸ்,ஐ,எஸ்., என்ற பயங்கரவாத அமைப்பு, அங்குள்ள அரசுக்கு எதிராக போர் நடத்தி வருகிறது. இந்த அமைப்பு சிரியாவிலும், ஈராக்கிலும் பல நகரங்களை கைப்பற்றி உள்ளது. ரக்கா, திக்ரித், மோசூல் உள்ளிட்ட பல நகரங்கள் இந்த அமைப்பின் பிடியில் சிக்கி உள்ளன. இதைத் தொடர்ந்து தங்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை இணைத்து, புதிய நாடாக ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்பு பிரகடனப்படுத்தி உள்ளது. இந்த பயங்கரவாத அமைப்பில் இந்தியாவை சேர்ந்த ஒரு தமிழர் உட்பட 18 பேர் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், …
-
- 1 reply
- 388 views
-
-
அல்காட்ராஸ் சிறைச்சாலையை மீண்டும் திறக்க ட்ரம்ப் உத்தரவு! கலிபோர்னியா கடற்கரையில் அமைந்துள்ள ஒரு தீவில் உள்ள முன்னாள் சிறைச்சாலையான அல்காட்ராஸை (Alcatraz) மீண்டும் திறந்து விரிவுபடுத்த தனது அரசாங்கத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஞாயிற்றுக்கிழமை (05) தெரிவித்தார். இது குறித்து சமூக ஊடகமான ட்ரூத் தளத்தில் பதிவிட்ட அவர், அல்காட்ராஸ் சிறைச்சாலை மீண்டும் திறக்கப்படுவது “சட்டம், ஒழுங்கு மற்றும் நீதியின் அடையாளமாக” செயல்படும் என்று அவர் கூறினார். அல்காட்ராஸில் உள்ள கூட்டாட்சி சிறைச்சாலை 1963 இல் மூடப்படுவதற்கு முன்பு அல் கபோன் போன்ற மோசமான அமெரிக்க குற்றவாளிகளை வைத்திருந்தது. இது இப்போது சான் பிரான்சிஸ்கோவின் மிகவும் பிரபலமான சுற்றுலா தலங்களில் ஒன்ற…
-
- 0 replies
- 382 views
-
-
அல்குவைதாவின் தாக்குதல் பட்டியலில் கனேடியர்கள்! அல்குவைதா அமைப்போடு தொடர்புடைய இணையத்தளமொன்று 100 க்கும் மேற்பட்ட கனடாவைச் சேர்ந்த கிறிஸ்தவ அராபியர்களை இலக்குவைத்து அவர்களைப் பட்டியலிட்டுள்ளது. முஸ்லிம்களை மதம்மாற்றும் முயற்சியில் ஈடுபடுத்துவதாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலைப் பார்த்துவிட்டு அதிலிருக்கும் சிலரோடு கனடா புலனாய்வுப் பிரிவினர் ஏற்கனவே தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். ஷுமுக் அல் இஸ்லாம் என்ற இணையத்தளமே இந்த நபர்களின் பெயர்,படம்,விலாசம்,தொலைபேசி இலக்கம், என்பனவற்றை வெளியிட்டுள்ளது. இவர்களுள் அநேகமானவர்கள் எகிப்திய கனேடியர்கள், வெளிப்படையாகவே இஸ்லாத்துக்கு எதிரான கருத்துக்களை வெளியிடுபவ…
-
- 2 replies
- 582 views
-
-
அண்மையில் அமெரிக்காவின் பயணிகள் விமானம் ஒன்று நடுவானில் தகர்க்க நடந்த முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து அமெரிக்காவின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவில்உள்ள விமான நிலையங்கள் கடுமையானபாதுகாப்பு வளையங்களுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இன்னிலையில் நத்தார் பண்டிகையினை முன்னிட்டுதொலைக்காட்சியில் நாட்டுமக்களுக்கு ஆற்றிய உரையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். அமெரிக்காமீது தாக்குதல் நடத்துவதற்கு அல்கெய்தா அமைப்பு திட்டமிட்டுள்ளது அல்கெய்தா அமைப்பு அமெரிக்காவிற்கு பலவித்த்தில் அச்சுறுத்தலாக உள்ளார்கள். உலகில் எந்த மூலையில் அல்கெய்தா அமைப்பு இருக்கின்றதோ அவர்களை தேடிக்கண்டுபிடித்து அழிப்போம் மக்களை அல்கெய்தாவின் தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் ந…
-
- 0 replies
- 654 views
-