Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் நடைபெற்று வரும் Automobile தொழிலாளர்கள் போராட்டத்தில் ஜனாதிபதி ஜோ பைடன் கலந்து கொண்டு அவர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். மிச்சிகன் மாகாணத்தில் நடைபெற்ற Automobile தொழிலாளர்கள் போராட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதி நேற்று (செப்.26) கலந்து கொண்டார். ஜனாதிபதி தேர்தலுக்கான பரபரப்பு அதிகரித்துள்ள நேரத்தில் ஜோ பைடனின் இந்த செயல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. மேலும் அமெரிக்க வரலாற்றிலேயே தொழிலாளர்களின் போராட்டத்தில் கலந்து கொண்ட முதல் ஜனாதிபதி என்ற பெருமையையும் ஜோ பைடன் தட்டிச் சென்றுள்ளார். Automobile தொழிலாளர் கூட்டமைப்பு (UAW) சின்னம் பொறிக்கப்பட்ட தொப்பியை அணிந்தபடி போராட்டத்தில் கலந்து கொண்ட பைடன், தொழிலாளர்களுக்கு தன்…

  2. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கடந்த 1993ஆம் ஆண்டு ஒஸ்லோ உடன்படிக்கையில் கையெழுத்திட்ட போது இசாக் ராபின் மற்றும் யாசர் அராபத் இடையிலான கைகுலுக்கல் எல்லோரிடமும் ஒரு நம்பிக்கையை வளர்த்தது. கட்டுரை தகவல் எழுதியவர், பவுலா ரோசாஸ் பதவி, பிபிசி நியூஸ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கடந்த 1995ஆம் வருடம் நவம்பர் 4ஆம் தேதி ஒரு அரசியல் கொலை நடந்தது. அது அண்மைக்கால அரசியல் வரலாற்றையே புரட்டிப்போட்ட சம்பவமாக மாறியது. அந்த நாள் தீவிர யூத தேசியவாதியான இகல் அமீர், இஸ்ரேலிய பிரதமராக இருந்த இசாக் ராபினை (Yitzhak Rabin) நோக்கி இரண்டு முறை மிகத் துல்லியமாக துப்பாக்கியால் சுட்டார். இந்த துப்ப…

  3. இந்திய காஷ்மீரில் மனிதப் புதைகுழிகள் இந்திய நிர்வாகத்துக்குட்பட்ட காஷ்மீரில் கடந்த 20 ஆண்டுகளில் 2000க்கும் அதிகமான அடையாளம் காணப்படாத சடலங்கள், புதைகுழிகள் என்ற சுவடுகளே தெரியாத இடங்களில் புதைக்கப்பட்டிருப்பதாக அரசினால் நியமிக்கப்பட்ட ஆணையமொன்று கண்டறிந்துள்ளது. இதுவரை சுயாதீனமான மனித உரிமைக்குழுக்கள் தெரிவித்துவந்த குற்றச்சாட்டுக்களை முதற்தடவையாக அரசினால் நியமிக்கப்பட்ட ஆணையமொன்று முதற்தடவையாக உறுதிப்படுத்தியுள்ளது. ஐம்மு காஷ்மீர் மாநில மனித உரிமைகள் ஆணையம் தனது அறிக்கையை இதுவரை உத்தியோகபூர்வமாக சமர்ப்பிக்கவில்லை. ஆனால், அதனால் கண்டறியப்பட்ட சில முக்கியமான தகவல்கள் இந்திய ஊடகங்களில் கசிந்துள்ளன. 2,150 சடலங்கள் பெரும்பாலும் துப்பாக்கிச் சூட்டுக…

    • 1 reply
    • 1.1k views
  4. சிறு பொறி இருந்தாலே பற்றிக் கொள்ளும் தென் மாவட்டங்களில், இப்போது பெரு நெருப்பே கொளுத்தி விடப்பட்டிருக்கிறது. பரமக்குடியில் ஏற்பட்டுள்ள கலவரத்தால் தமிழகமே பரபரப்பில் இருக்க, “நீண்ட நாள் கோபத்தின் வெளிப்பாடுதான் இந்த துப்பாக்கிச் சூடு’’ என கலவரத்திற்கு பின்னணி சொல்லிப் பதறுகிறார்கள். தியாகி இம்மானுவேல் சேகரனின் நினைவு நாளையொட்டி (11-ம் தேதி) அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வழக்கம் போல் இந்த ஆண்டும் தலித் மக்கள் தயாராயினர். இது தொடர்பான பிரச்னைகள் இந்த மாத ஆரம்பத்திலேயே ஏற்பட்டது. மதுரை உத்தப்புரத்தில் இம்மானுவேல் சேகரன் குருபூஜை சம்பந்தமான ஃபிளக்ஸ் போர்டு ஒன்றை தலித் மக்கள் வைக்க, அதில் தங்கள் மனதைப் புண்படுத்தும் வாசகங்கள் உள்ளதாக இன்னொரு பிரிவினர் அதற்கு எதிர்…

  5. கொங்கோவின் எதிர்க்கட்சி வேட்பாளர், தன்னை ஜனாதிபதியாக அறிவித்துள்ளார்! கொங்கோ குடியரசின் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட எதிர்க்கட்சி வேட்பாளர் மார்ட்டின் ஃபயுலூ தன்னை ஜனாதிபதியாக அறிவித்துள்ளார். அத்துடன் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அவரது எதிர்தரப்பு வேட்பாளர் வெற்றிபெற்றதாக நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பையும் அவர் நிராகரித்துள்ளார். இந்தநிலையில் தற்போதுள்ள நெருக்கடிகளை மேலும் தூண்டிவிடும் விதமாக தானே ஜனாதிபதி தேர்தலில் அதிகபடியாக வாக்குகளை பெற்றுள்ளதாக ஃபயுலூ குறிப்பிட்டுள்ளார். “தவறான தேர்தல் முடிவுகளை உறுதிப்படுத்துவதன் மூலம், அரசியலமைப்பு நீதிமன்றம் ஒரு சர்வாதிகார ஆட்சிக்கு உதவுவதாக உறுதிப்படுத்தியுள்ளது. இது ஒரு அரசியலமைப்பு சதித்திட்டம்” என்று அவ…

  6. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சுபாஷ் சந்திர போஸ் பதவி, பிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் 1859க்கு முன்பு வரை உலகின் பெரும்பான்மையான மதங்கள், முதல் மனிதன் ஆதாமை கடவுளே படைத்தார் என்றே கூறி வந்தன. உலக மக்களும் தாங்கள் கடவுளால் படைக்கப்பட்டவர்கள் என்று தீர்க்கமாக நம்பி வந்தனர். அங்கொன்றும் இங்கொன்றும் இறைமறுப்பு, அறிவியல் சார் கருத்துக்கள் முளைத்து வந்திருந்தாலும் அதுவரை கடவுள் தான் மனிதனை படைத்தார் என்ற கோட்பாட்டை அசைக்க முடியவில்லை. திடீரென்று ஒரு தாடிக்கார மனிதன் தனது உயிரினங்களின் தோற்றம் என்ற கொள்கையை உலகின் முன் சமர்ப்பிக்க பிற சித்தாந்தங்கள் ஆடிப் போய்விட்டன. “மனித…

  7. சேது கால்வாய்: இலங்கையுடன் சேர்ந்து சதி செய்வோரை வெல்வோம் - கருணாநிதி ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 16, 2007 ஈரோடு: இலங்கையுடன் சேர்ந்து சேது சமுத்திரத் திட்டத்தை தடுக்க முயலுவோரின் சதிச் செயல்களை முறியடித்து அந்தத் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றுவோம் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். ஈரோட்டில் திமுக முப்பெரும் விழா நேற்று நடந்தது. அதில் கலந்து கொண்டு முதல்வர் கருணாநிதி பேசுகையில், திராவிட இயக்கத்தை வீழ்த்துவதற்காக நடைபெறுகின்ற முயற்சிகளில் ஒன்றாக நாம் நிறைவேற்ற இன்றைக்கு முனைந்திருக்கின்ற ஒரு பெரிய திட்டத்தை குழி தோண்டிப் புதைக்க சில குள்ளநரிகள், சில சூழ்ச்சிக்காரர்கள், சில குடிலர்கள் முயற்சி மேற்கொண்டிருப்பதை நம்முடைய இ…

  8. முதல்வர் கருணாநிதிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ள பாஜக முன்னாள் எம்.பியும், வி.எச்.பியைச் சேர்ந்தவருமான சாமியார் வேதாந்தி மற்றும் பாஜக தலைவர் அத்வானி ஆகியோரின் கொடும்பாவிகளை எரித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தலைமையில் 300க்கும் மேற்பட்ட தொண்டர்கள், அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலை முன்பு திரண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது அத்வானி, வேதாந்தி ஆகியோரின் கொடும்பாவிகள் எரிக்கப்பட்டன. உடனடியாக வேதாந்தி தனது பேச்சைத் திரும்பப் பெற வேண்டும் எனவும் அவர்கள் கோஷமிட்டனர். அபபோது செய்தியாளர்களிடம் திருமாவளவன் கூறுகையில், முதல்வர் கருணாநிதிக்கு விடுக்கப்பட்டுள்ள கொலை மிர…

  9. நவீன வேவு விமான சேவையை அமெரிக்கா இலங்கையுடன் பகிரவுள்ளது வீரகேசரி இணையத்தளம் ஆசிய பசுபிக் வலையத்தின் பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில் அமெரிக்கா அதிநாவீன வேவு பார்க்கும் விமானத் தொழினுட்பத்தை இலங்கை உட்பட ஏனைய ஆசிய நாடுகளுடன் பகிரவுள்ளது. இவ்விடயம் தொடர்பில் அமெரிக்கா மற்றும் இலங்கை அதிகாரிகளிடையே உத்தியார்பூர்வ கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. குளோபல் ஹெவாக் எனும் இவ் அதி நவீன வேவு விமானம் 2001 செப்டம்பர் 11ம் திகதிக்கு பின் சேவையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது. இவ் விமானம் துல்லியமாக இலக்குகளை 65,000 அடி உயரத்திலிருந்து 35 மணித்தியாலங்கள் வரை வேவு பார்க்கவுள்ளது. அத்துடன் சேகரித்த தரவுகளை விரைவாக தரைப்படைக…

  10. முல்லை பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக தமிழக- கேரள எல்லை பகுதியான குமுளியில் தொடர்ந்து பதட்டம் ஏற்பட்டுள்ளது. தமிழக வாகனங்கள் மற்றும் அய்யப்ப பக்தர்கள் தாக்கப்பட்டு வருவதால் வண்டிபெரியார், குமுளி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கம்பம் பகுதியில் கடையடைப்பு மற்றும் மறியல் போராட்டங்கள் நடந்து வருகிறது. இதனால் கம்பம், கூடலூர், குமுளி பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று காலை கேரள அரசை கண்டித்து கூடலூரில் மறியல் போராட்டம் நடந்தபோது கேரள முதல்- அமைச்சர் உம்மன்சாண்டி, முன்னாள் முதல்- அமைச்சர் அச்சுதானந்தன் ஆகியோரது கொடும்பாவியை கொளுத்தினர். ஏராளமானோர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கூடலூரை சேர்ந்த வாலிபர் செல்லப்பாண்டி (வய…

  11. ஜெயலலிதா அதிரடி முடிவு: சசிகலாவை அதிமுவில் இருந்து நீக்கினார்... மேலதிக செய்திகள் விரைவில்...... செய்தியின் மூலம் நக்கீரன், தற்ஸ் தமிழ்.

  12. ஆண்டுக்கு 5,00,000 அகதிகளுக்கு புகலிடம்: ஜெர்மனி அறிவிப்பு சிரிய அகதிகளுக்கு ஜெர்மனியில் வரவேற்பு. | படம்: ஏபி ஆண்டுக்கு 5 லட்சம் என்ற எண்ணிக்கையில், அகதிகளுக்கு புகலிடம் அளிக்கவுள்ளதாக ஜெர்மனி அரசு அறிவித்துள்ளது. முன்னெப்போதும் இல்லாத வகையில் ஜெர்மனிக்கு அகதிகளின் வருகை அதிகரித்துள்ள நிலையில், அந்நாட்டு துணைப் பிரதமர் சிக்மர் கேப்ரியேல் (sigmar gabriel )இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் அரசு தொலைக்காட்சி சேனலுக்கு அளித்த பேட்டியில், "ஆண்டுக்கு 5 லட்சம் அகதிகளுக்கு அடுத்த சில ஆண்டுகள் தொடர்ந்து புகலிடம் அளிக்க முடியும். இதில் எங்களுக்குச் சந்தேகமில்லை. இதைவிட எண்ணிக்கை அதிகமாகக் கூட இருக்கலாம். மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து வற…

  13. தொழிற்சாலை பெருக்கத்தால், கார்பன் டை ஒக்சைட் வாயு வெளியாவது அதிகரித்து வருகிறது. எண்ணெய், எரிவாயு, நிலக்கரி போன்றவற்றை எரிப்பதன் மூலமும் அவ்வாயு அதிக அளவில் வெளியாகி வருகிறது. இப்படி எரித்துக் கொண்டே போனால், அது பருவநிலையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.அதன்மூலம், அண்டார்டிக் பனிப்பாறைகள் முழுமையாக உருகி, கடல் நீர் மட்டம் பல மீட்டர் உயரும். அதனால், இந்த நூற்றாண்டின் இறுதிக்குள், உலகின் முக்கிய பெரு நகரங்கள் தண்ணீரில் மூழ்கி விடும் என்று பிரபல பருவநிலை விஞ்ஞானி ஜேம்ஸ் ஹன்சன் தலைமையிலான விஞ்ஞானிகள் குழு நடத்திய ஆய்வு தெரிவிக்கின்றது. குறிப்பாக, லண்டன், நியூயோர்க், ஷாங்காய், டோக்கியோ, ஹொங் கொங் , ஹம்பேர்க் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் தண்ணீரில் மூழ்கி விடும் என்று அந்த விஞ்ஞான…

  14. ஒரு பெண்ணை, வில்லன்கள் பாலியல் பலாத்காரம் செய்கிறார்கள். ஒரு கட்டத்தில் தற்கொலை செய்து கொண்டு இறந்து போகிறார் அந்தப் பெண். இதற்காக நீதி கேட்டு போராடுகிறார், சம்பவத்துக்கு சாட்சியான அவளுடைய தோழி. அவளை மிரட்டிப் பணிய வைக்க நினைக்கிறார்கள் வில்லன்கள். அது முடியாமல் போகவே, அவளையும் பாலியல் பலாத்காரம் செய்கிறார்கள். மருத்துவமனை, காவல்துறை, அரசாங்கம் எங்கு சென்றாலும், அவளுடைய குரல் எடுபடவில்லை. காரணம், அந்தக் கயவர் களுக்கு கேடயமாக இருப்பது ஓர் அமைச்சர்! இது சினிமா கதை அல்ல. ஒடிசா மாநிலத்தில் நடந்து இருக்கும் நெஞ்சை நடுங்க வைக்கும் நிஜ சம்பவம்! வழக்கம்போல, சினிமாவை மிஞ்சும் கொடூரம் என்றுதான் வர்ணிக்க வேண்டிஇருக்கிறது இந்தக் கொடுமையை! ஒடிசா மாநில நீதிமன்றம் மட்டும் தலையிடாமல்…

  15. பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக பொய் சொன்னாரா பிரிட்டிஷ் பெண்? 36 நிமிடங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES சைப்ரஸ் நாட்டுக்கு சுற்றுலா சென்றிருந்தபோது, அங்கு சுற்றுலா வந்திருந்த 12 இஸ்ரேலிய நாட்டு இளைஞர்களால் தாம் பாலியல் வல்லுறவுக்கு உள்ளானதாக புகார் தெரிவித்த பிரிட்டன் பெண், போலியான புகார் தெரி…

  16. 160 பள்ளிவாசல்களை மூடுகிறது பிரான்ஸ் நவம்பர் 13ஆம் திகதி பரிஸில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களைத் தொடர்ந்து, பிரான்ஸிலுள்ள ஏறத்தாழ 160 பள்ளிவாசல்களை மூடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அடிப்படைவாத, தீவிரவாதக் கருத்துக்களையும் வெறுப்பையும் பரப்பும் பள்ளிவாசல்களும் அனுமதிபெறாத பள்ளிவாசல்களுமே, இவ்வாறு மூடப்பட்டுள்ளன. பிரான்ஸிலுள்ள பள்ளிவாசல்களுக்கான இமாம்களை நியமிக்கும் பொறுப்பு வகிக்கும் ஹஸன் எல் அலோவுய், இந்தத் தகவலை வெளியிட்டார். உள்விவகார அமைச்சுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருவதாகவும், உத்தியோகபூர்வத் தகவல்களின் அடிப்படையில், 100 தொடக்கம் 160 வரையிலான பள்ளிவாசல்களை மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித…

    • 8 replies
    • 2.6k views
  17. கொலைக் குற்றச்சாட்டின் பேரில் டாக்டர் ஜெயந்த் அமெரிக்காவில் கைது [14 - March - 2008] டாக்டர் எமன் என வர்ணிக்கப்பட்ட ஜெயந்த் பட்டேல் அமெரிக்காவின் ஒரிகான் மாநிலத்திலுள்ள அவரது வீட்டில் வைத்துக் கைது செய்யபபட்டுள்ளார். தனது கடமைகளில் கவனயீனமாக இவர் இருந்ததால் இவரது நோயாளர்கள் பலர் இறந்தும் பலர் தீராத நோய்கள், தேவையற்ற சத்திரச் சிகிச்சைகள் போன்றவற்றுடன் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து இவர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டதனைத் தொடர்ந்து பொலிஸாரால் இவர் கைது செய்ப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவின் குவீன்ஸ்லாந்து மாநிலத்தில் 17 நோயாளிகளின் இறப்புக்கும் வேறு சிலரின் உடல் உபாதைகளுக்கும் அவரே பொறுப்பு என்று குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன. …

  18. பாரிஸ் தாக்குதல்: 3-வது தற்கொலை தாக்குதலாளியின் அடையாளம் தெரிந்தது பாரிஸ் தாக்குதல்களில் பலியான 130 பேரில் அனேகமானவர்கள் பட்டாக்லான் இசையரங்கில் நடந்த கொலைகளில் தான் உயிரிழந்தனர் பாரிஸில் கடந்த மாதம் பட்டாக்லான் இசையரங்கில் தாக்குதல் நடத்தியிருந்த மூன்றாவது தற்கொலை தாக்குதலாளியையும் காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர். வட-கிழக்கு பிரான்ஸில் உள்ள ஸ்த்ராஸ்போக் நகரைச் சேர்ந்த பெளத் மொஹமட் அக்காட் என்ற 23-வயது இளைஞனே அவர் என்று காவல்துறையினர் அறிவித்துள்ளனர். 2013-ம் ஆண்டில் தனது சகோதரனுடன் சிரியாவில் போரிடுவதற்காக அவர் சென்றிருந்ததாக கூறப்படுகின்றது. ஆனால், அவர் எப்போது பிரான்ஸுக்கு திரும்பினார் என்று தெரியவில்லை. மற்ற மூன்று தா…

  19. பாகிஸ்தானுடன் இணைந்து காஷ்மீர் பிரச்சினையைத் தீர்க்க இந்தியா முன்வர வேண்டும் என மலேசியப் பிரதமர் துன் மகாதீர் மொஹமத் வலியுறுத்தி உள்ளார். ஐக்கிய நாடுகள் மன்றத்தின் 74ஆவது பொதுப் பேரவையில் உரையாற்றிய அவர், ஜம்மு காஷ்மீர் விவகாரம் குறித்து தனது கருத்தைப் பதிவு செய்தார். காஷ்மீர் விவகாரம் தொடர்பான ஐ.நாவின் தீர்மானம் உள்ள போதிலும், அப்பகுதி வலுக்கட்டாயமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். இந்த ஆக்கிரமிப்பின் பின்னணியில் பல்வேறு காரணங்கள் இருக்கலாம் என்றாலும், இந்தியா மேற்கொண்ட நடவடிக்கை தவறானது என்று மகாதீர் திட்டவட்டமாகத் தெரிவித்தார். எனவே அமைதியான வழிமுறைகளின் மூலம் காஷ்மீர் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், இல்லையெ…

    • 0 replies
    • 447 views
  20. காணாமால் போன மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தின் பாகம் கண்டெடுப்பு? கடந்த இரு வருடங்களுக்கு முன், காணாமால் போன மலேசிய ஏர்லைன்ஸ் விமானத்தின் உடைந்த பாகங்கள் தாய்லாந்து கடற்கரை பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2014 ஆம் ஆண்டு மார்ச் 14ஆம் தேதி கோலாலம்பூரில் இருந்து 239 பேருடன் பெய்ஜிங் நோக்கி போய் கொண்டிருந்த மலேசியன் ஏர்லைன்சின் எம். எச். 370 விமானம் திடீரென்று மாயமானது. எவ்வளவோ தேடுதல் வேட்டை நடத்தியும் விமானம் என்னவாயிற்று என்ற எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதற்கிடையே கடந்த ஆண்டு இந்திய பெருங்கடலில் பிரஞ்சு ரீயூனின் தீவு பகுதியில் உடைந்த விமானத்தின் பாகம் போன்று ஒரு பொருள் கிடைத்தது. அதற்கு பின், வேறு எந்த தகவலும் காண…

  21. ஏமனின் ஹவுத்திகள் மீது ட்ரம்ப் பாரிய அளவிலான தாக்குதல்! செங்கடல் கப்பல் போக்குவரத்துக்கு எதிரான தாக்குதல்களுக்கு பதிலடியாக, ஏமனின் ஈரானுடன் இணைந்த ஹவுத்திகள் (Houthis) மீது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சனிக்கிழமை (15)பாரிய அளவிலான இராணுவத் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளார். இந்த தாக்குதலில் குறைந்தது 19 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஹவுத்திகளின் முக்கிய ஆதரவாளரான ஈரானை, அந்தக் குழுவிற்கான ஆதரவை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் ட்ரம்ப் எச்சரித்தார். இதனிடையே, ஹவுத்திகளுக்கு எதிரான புதிய தாக்குதல்களானது பல நாட்கள் அல்லது வாரங்கள் நீடிக்கும் என்று வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். கடந்த ஜனவரியில் ட்ரம்ப் பதவியேற்றதிலிருந்து மத்திய கிழக்கில் அமெரி…

  22. [size=4]ஆப்கானிஸ்தானில் உள்ள காபூல் நகருக்கு அமெரிக்க வெளியுறவு துறை மந்திரி ஹிலாரி கிளிண்டன் நேற்று திடீரென சென்றார். இது அறிவிக்கப்படாத பயணம் ஆகும்.[/size] [size=4]காபூலில் ஜனாதிபதி ஹமீத் கர்சாயை ஹிலாரி கிளிண்டன் சந்தித்துப் பேசினார். அதைத் தொடர்ந்து ஹிலாரி கிளிண்டன் நிருபர்களிடம் பேசுகையில், ஆப்கானிஸ்தானுக்கு எங்கள் கூட்டாளி என்ற அந்தஸ்தை வழங்குகிறோம். ஆப்கானிஸ்தானின் எதிர்காலத்துக்கு உதவுவதற்கான எங்கள் வாக்குறுதிக்கு இதுவே வலுவான அடையாளம் ஆகும்' என்றார்.[/size] [size=4]இந்த அறிவிப்பை தொடர்ந்து தங்களுக்கு தேவையான ஆயுதங்களை ஆப்கானிஸ்தான் இனி அமெரிக்காவிடமிருந்து வாங்கிக்கொள்ள வழி பிறந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.[/size] [size=4…

  23. மெக்ஸிகோ நாட்டு விமானம் ஒன்றில் ஏற அனுமதி மறுக்கப்பட்ட சீக்கியர்! [Wednesday 2016-02-10 07:00] அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த சீக்கிய நடிகர் ஒருவர் தமது தலைப்பாகை காரணமாக மெக்ஸிகோ நாட்டு விமானம் ஒன்றில் ஏற அனுமதி மறுக்கப்பட்டதாக கூறுகிறார்.பொதுமக்கள் முன்னிலையில் தனது தலைப்பாகையை கழற்றும்படி கூறப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், ஏரோமெக்ஸிகோவின் விமானத்தில் பயணிக்க முடியாமல் தடுக்கப்பட்டதாகவும் கூறுகிறார்.வாரிஸ் அலுவாலியா எனும் அந்த சீக்கியர் மெக்ஸிகோ சிட்டியிலிருந்து நியூ யார்க் செல்ல விமான நிலையம் வந்தபோது கூடுதல் பாதுகாப்பு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்தார். அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த சீக்கிய நடிகர் ஒருவர் தமது தலைப்பாகை காரணமாக மெக்ஸிகோ நாட்டு வி…

  24. அமெரிக்கத் தேர்தலில் அதிகரிக்கும் பிளவுக்கு என்ன காரணம்? அமெரிக்காவின் அதிபர் வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான கட்சி மட்ட தேர்தல்கள், அந்த நாடு அரசியல் ரீதியாக எவ்வாறு பிளவு பட்டிருக்கிறது என்பதை காண்பிக்கின்றன. குடியரசுக் கட்சியும், ஜனநாயகக் கட்சியும் ஒரு நாட்டின் எதிரெதிர் அரசியல் கட்சிகள் என்றில்லாமல் ஒருவரை ஒருவர் அறிந்திராத இரு வேற்றுகிரகவாசிகள் போல மாறிவருவதாக அறிவுஜீவிகள் கூறுகிறார்கள். அமெரிக்கத் தேர்தலிலும் அரசியலிலும் அதிகரித்துவரும் கடும்போக்கு நிலைப்பாடுகள் மற்றும் வேகமாக மறைந்துவரும் மிதவாத மையநிலைப்பாடுகள், அதற்கான காரணிகள் குறித்த ஒரு விரிவான பார்வை. http://www.bbc.com/tamil/global/2016/03/1603…

  25. உலக வரலாற்றில் கரைபடிந்த அத்தியாயம் ஒன்றை அமெரிக்கா வழங்கி இன்றுடன் 67 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. 1945ஆம் ஆண்டு ஓகஸ்ட் 6ஆம் திகதி காலை வழக்கம் போல் ஜப்பானின் துறைமுக நகரான ஹிரோஷிமா பரபரப்பாகிக் கொண்டிருந்த நேரத்தில், காலை 8.15 மணிக்கு “எனோலாகே” என்ற விமானம் லிட்டில் பாய்(சின்னப் பையன்) என்ற அணுகுண்டை நகரத்தின் நடுப்பகுதியில் போட்டது. அணுகுண்டைத் தாங்கி வந்த விமாமனத்தை ஓட்டிய விமானியும், படைத் தளபதியுமான “பால்டிப்பெட்ஸ்” என்பவரின் தாயார் பெயர் தான் எனோலாகே என்பதாகும். அணுகுண்டு விழுந்தவுடன் பயங்கரச் சத்தத்துடன் வெடித்து நகரத்திற்கு 2000 அடிகளுக்கும் மேல் தீப்பிழம்புகள் தெரித்தன. உடனடியாக 90,000 மக்கள் செத்து மடிந்தனர். மொத்தத்தில் சுமார் 16 கிலோ மீட்டர் நில…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.