Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. லிங்கேஸ்வரன் விஸ்வா ஈழத் தமிழ் அகதிகளை இலங்கைக்கு திரும்ப அனுப்பக் கூடாது: முதலமைச்சருக்கு நாம் தமிழர் கட்சி வேண்டுகோள் இலங்கையில் சிங்கள பெளத்த இனவெறி அரசு நடாத்திவரும் திட்டமிட்ட இன அழித்தலில் இருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ள தமிழ்நாட்டிற்கு வந்த அகதிகளாக தஞ்சம் அடைந்தோரை, அவர்களின் விருப்பத்திற்கு எதிராக இலங்கைக்கே திருப்பி அனுப்பி வைக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இலங்கையில் போர் முடிந்துவிட்டது, அங்கே அமைதி திரும்பிவிட்டது என்கிற காரணங்களைக் கூறி, இங்கு அகதிகள் முகாம்களில் வாழ்ந்துவரும் தமிழர்களை திருப்பு அனுப்பும் முயற்சி கடந்த 2009ஆம் ஆண்டிலிருந்தே நடந்த வருகிறது. இங்குள்ள காவல் துறை அதிகாரிகள், ஐ.நா.வின் அகதிகள் பொறுப்பு அதிகாரிகள் ஆகியோர் …

  2. ஈழத் தமிழ் அகதிகளை திருப்பி அனுப்பும் தமிழகத்தின் திட்டத்திற்கு சீமான் கண்டனம் இலங்கையில் சிங்கள பௌத்த இனவாத அரசின் திட்டமிட்ட தமிழின அழிப்பில் இருந்து தப்பித்து தமிழ்நாட்டிற்கு அகதிகளாக வரும் ஈழத் தமிழர்களை தமிழக காவல் துறை திருப்பி அனுப்ப முயற்சிப்பதற்கு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை அகதிகளின் நல்வாழ்வைப் பொறுப்பை ஏற்றுள்ள மறுவாழ்வுத் துறைக்கு, தமிழக அரசு அப்படியொரு உத்தரவை செய்துள்ளதாக காவல் துறையினர் கூறுவதாகவும், இலங்கைக்குச் சென்று மீண்டும் தமிழகம் திரும்பும் ஈழத் தமிழர்களை அகதிகளாக ஏற்க வேண்டாம் என்றும், இதற்கு மேல்…

  3. ஈழத்தமிழனாகப் பிறந்ததுதான் குற்றமா? த.பெ. குணசீலன், கிளைச் சிறை முகாம், பூவிருந்தவல்லி, சென்னை - 600 056. பெறுநர் மதிப்பிற்குரிய ஐயா, பொருள்: நீதியான நியாயமான, சுதந்திரமான வாழ்வு வேண்டியும் தடையின்றி முறையான சிகிச்சை பெற பரிந்துரைக்க வேண்டியும் எனது நாட்டிற்கு திரும்பச் செல்ல உதவி வேண்டியும் மனிதாபிமான ரீதியில் உதவிபுரியுமாறு ஒரு ஈழத்தமிழ் அகதியின் விண்ணப்பம். மேற்குறிப்பிட்டுள்ள முகவரியில் வசிக்கும் ரமணன் த.பெ குணசீலன் ஆகிய நான் இலங்கையில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக அங்கே வாழமுடியாத சூழ்நிலையில், என் தம்பியை இலங்கை வவுனியாவில் இலங்கை இராணுவம் சுட்டுக்கொன்ற கோர நிகழ்வால் எனது மனைவி, எனது 3 வயது மகளுடன் சாவுக்குப் பயந்து …

  4. சென்னை: ஈழத்தமிழர்கள் கண்ணீரைத் துடைப்பதற்காக இரவு தூக்கமின்றி பாடுபடும் திமுக தலைவர் கருணாநிதி, இந்த நேரத்திலும் நம்மால் முடிந்த அளவிற்கு ஈழத்தமிழர்களின் வாழ்வில் எப்படியாவது நிம்மதியைத் தேடித்தர முடியாதா? என்றெண்ணியே டெசோ மாநாட்டினை கூட்டியுள்ளதாக கனிமொழி எம்.பி. கூறியுள்ளார். இது தொடர்பாக கருணாநிதியின் மகளும்,திமுக கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவை தலைவருமான கனிமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில்,"வருகிற 12-ம் தேதி சென்னை மாநகரில் 'டெசோ’அமைப்பின் சார்பில் ஈழத்தமிழர் வாழ்வுரிமைப் பாதுகாப்பு மாநாட்டினை திமுக தலைவர் கருணாநிதி கூட்டியுள்ளார். இலங்கையில் சிங்களவர்களின் ஆதிக்க வெறியினால் ஏற்பட்ட கலவரங்களில் பெரிதும் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களின் காயங்களுக்கும் அவர்…

  5. சென்னை:மாநில சிறுசேமிப்பு ஆலோசனைக் குழுத் துணைத் தலைவர் பதவியிலிருந்து லதிமுக தலைவர் விஜய டி.ராஜேந்தர் ராஜினாமா செய்துள்ளார். இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாகப் போராடப் போவதாக அவர் அறிவித்துள்ளார். லட்சிய திமுக கட்சியை விடாமல் நடத்தி வரும் டி.ராஜேந்தர் கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் போய்ச் சேர்ந்த முதல் கட்சித் தலைவராவார். அவரை கூட்டணிக்கு அன்போடு வரவேற்ற அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, சீட் தரவில்லை. இதையடுத்து அந்தக் கூட்டணியைவிட்டு திமுக கூட்டணிக்கு தாவி வந்தார். ஆனால், அங்கு இடப் பங்கீடு எல்லாம் முடிந்துவிட்டதால் அங்கும் சீட் கிடைக்கவில்லை. முதல்வர் கருணாநிதியின் இதயத்தில் மட்டுமே இடம் கிடைத்தது. தனது கட்சி சார்பில் ஒரே ஒரு இட…

    • 23 replies
    • 4.2k views
  6. ஈழத்தமிழரை பாதுகாக்க முல்லைத்தீவுக்கு படகு மூலம் செல்வோம்: தூத்துக்குடி வழக்கறிஞர்கள் சங்கம் அறிவிப்பு [ புதன்கிழமை, 04 பெப்ரவரி 2009, 12:51.46 PM GMT +05:30 ] இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் வரும் 9ம் தேதி படகு மூலம் முல்லைத்தீவு செல்லப்போவதாக தூத்துக்குடி வழக்கறிஞர்கள் சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் தமிழர்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்த இந்திய அரசு நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள், மாணவர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இலங்கை பிரச்சினை குறித்து ஆலோசிப்பதற்காக தூத்துக்குடி வழக்கறிஞர்கள் சங்கத்தின் அவசர கூட்டம் அதன் தலைவர் பிரபு தலைமையில் …

  7. 24.08.11 மற்றவை இந்தக் கால கல்லூரிப் பெண்களிடம் எந்தவிதமான ஆசைகள் அதிகம்...? காதலா? காசுள்ள புருஷனா? வெளிநாட்டில் வேலையா? வேறென்ன இருக்கும்.... கேள்வியோடு கல்லூரி மாணவிகள் சிலரது மனதைக் கிள்ளினோம்... அங்கே நாம் சிந்தித்தே பார்த்திராத சென்டிமெண்ட்டுகள், கனவுகள், லட்சியங்கள், பொறுப்புகள்... அம்மம்மா.... ‘‘அம்மா, அப்பாவுக்குக் கடைசி வரை சப்போர்ட் செய்யணும்’’ பட்டென்று பதில் சொல்கிறார் ப்ரீத்தி. ‘‘ஐயையோ இதெல்லாம் நமக்கு சரிப்படாதுப்பா.... நமக்கு ஆடம்பர வாழ்க்கைதான் செட் ஆகும். பெருசா வீடு, பணக்கார வாழ்க்கைன்னு வாழ்ந்து பார்க்கணும்’’ என மோனிகா சொல்ல, ‘‘மீடியாவுல ஃபேமஸ் ஆகணும்... விளம்பரப் படங்கள்ல போட்டோகிராபரா…

  8. தமிழர்களுக்கு மட்டும் ஒரு நியாயமா?-பால் தாக்கரே மும்பை: தமிழர்களின் நலன் காக்க தமிழக அரசியல் கட்சிகள் உணர்வோடு செயல்படுவதை யாரும் கண்டுகொள்வதில்லை. ஆனால் நாங்கள் மராத்தியர் நலன் காக்க தீவிரம் காட்டினால் எங்கள் மீது குறிவைத்து குற்றம் சாட்டுகின்றனர் என்று சிவசேனை தலைவர் பால்தாக்கரே கூறியுள்ளார். சிவசேனை கட்சி பத்திரிகையான சாம்னாவில் அவர் எழுதியுள்ள தலையங்கத்தில், உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் வாழும் தமிழர்களின் நலனை காக்க வேண்டும் என்பதில் தமிழ்நாட்டில் உள்ள கட்சிகள் உணர்வோடு நடந்து கொள்கின்றன. இலங்கை தமிழர் பிரச்சனையில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை திரும்ப பெற்று விடுவோம் என்று திமுக அரசு மிரட்டல் விடுத்துள்…

  9. ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்க ஐ.நா. சபையின் தலையீட்டைக் கோரும் தீர்மானத்தை இந்திய அரசு முன் மொழிவதன் மூலம் இலங்கையில் தற்போதுள்ள நிலைமைக்கு விரைந்து முற்றுப்புள்ளி வைக்க முடியும். அதன்மூலம் ஈழத் தமிழர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திடவும், அவர்கள் தங்களுடைய உரிமைகளை விவாதித்து தாங்களே தீர்மானித்துக் கொள்ளவும் இயலும். எனவே, இந்தியப் பேரரசு இதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு நேற்று நடைபெற்ற டெசோ மாநாட்டுக் கூட்டத்தில் தி.மு.க. தீர்மானம் நிறை வேற்றியுள்ளது.இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு நேற்றுமுன்தினம் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்த நிலையில் நேற்று இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. டெசோ மாநாட்டில் நிறைவேற்ற…

  10. முதலில் மகனுக்கு முடியெடுக்க இலங்கை செல்வதாக கூறிய கருணாஸ், தற்போது இலங்கையில் நடக்க இருக்கும் வானொலியின் ஆண்டுவிழாவில் கலந்து கொள்வதற்காக இலங்கை செல்வதாக முன்னுக்குப் பின் முரணாக கூறுகிறார். நாம் தமிழர் இயக்கத்தின் மீது பழி சொல்வதற்காக யாரோ பின்னணியில் இருந்து பகடைக்காயாக கருணாஸை இயக்குகிறார்கள் என்று அவரது நடவடிக்கை சந்தேகிக்க வைக்கிறது. முன்னதாக கருணாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:- எனது மகனுக்கு முடி எடுக்க இலங்கையில் உள்ள முருகன் கோவிலுக்கு செல்ல முடிவு செய்தேன். இன்று காலை விமானத்தில் டிக்கெட்டும் எடுத்து விட்டேன். நாம் தமிழர் இயக்கம் என்ற பெயரில் நான் இலங்கை செல்வதை கண்டித்து எனது செல்போனுக்கு 150-க்கும் மேற்பட்ட எஸ்.எம்.எஸ்.க்கள் வந்துள்ளன. சிங்களன் …

    • 12 replies
    • 1.1k views
  11. செங்கல்பட்டு காந்திபுரம் நெடுஞ்சாலையில் உள்ள கிளை சிறையில் கைதிகள் மேற்கொண்டு வரும் உண்ணாவிரதம் இன்று 5வது நாளாகவும் தொடர்கிறது. இச்சிறையில் ஈழத்தை சேர்ந்த 32 பேர் அடைக்கப்பட்டு உள்ளனர். கடவுச்சீட்டு இல்லாமல் தங்கியது, சந்தேகப்படும் வகையில் செயல்பட்டது போன்ற குற்றச்சாட்டுக்களின் பேரில் இராமேஸ்வரம், மதுரை, திருச்சி போன்ற நகரங்களில் பிடிபட்ட இவர்கள் கடந்த சில மாதங்களாக இங்கு அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தங்களை திறந்த வெளி முகாமுக்கு மாற்ற வேண்டும் என்று கோரி கடந்த 3 மாதங்களுக்கு முன் உண்ணாவிரதம் இருந்தனர். அதிகாரிகள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். 45 நாட்களுக்குள் உங்கள் கோரிக்கைக்கு தீர்வு காணப்படும் என்று தெரிவித்தனர். இதையடுத்து உண்ணாவிரதத்தை கைவிட்…

  12. Published By: RAJEEBAN 18 MAY, 2024 | 08:35 AM ஈழத்தமிழர்களின் சுதந்திரம் குறித்த சர்வஜன வாக்கெடுப்பை கோரும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானத்தினை அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் வரவேற்றுள்ளனர். ஈழத்தமிழர்களின் சுதந்திரம் குறித்த சர்வஜன வாக்கெடுப்பை கோரும் மற்றும் ஈழத்தில் இடம்பெற்றது இனப்படுகொலை என அங்கீகரிக்கவேண்டும் என கோரும் தீர்மானம் அமெரிக்க காங்கிரசில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் அதனை வரவேற்றுள்ளனர். தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டு உரைகள் ஆற்றப்பட்ட பின்னர் அமெரிக்க காங்கிரஸ்; உறுப்பினர்கள் காங்கிரஸ் நூலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டனர் . இந்த நிகழ்வில்…

  13. கனடாவின் (Canada) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் மனித உரிமைப் பாதுகாவலரும் செயற்பாட்டாளருமான ராதிகா சித்சபைசனின் ( Radhika Chitsabesan) புதிய ஆவணப்படமான ரே ஒப் ஹோப் (நம்பிக்கையின் ஒளிக்கீற்று) இன்றைய தினம் (05) ஸ்காப்ரோவில் (Scarborough) திரையிடப்படுகிறது. 1987 ஆம் ஆண்டு தனது ஐந்து வயதில் ராதிகா தமது குடும்பத்துடன் கனடாவுக்குத் தப்பிச் சென்றார். இந்தநிலையில் ரே ஒஃப் ஹோப், (Ray of Hope)ஆவணப்படமானது இலங்கையில் 26 ஆண்டுகால ஆயுதப் போராட்டம் மற்றும் தமிழ் மக்களின் இனப்படுகொலையின் தாக்கங்களையும், தமிழ் புலம்பெயர்ந்தவர்களின் தனிப்பட்ட கதைகளையும் அனுபவங்கள் மூலம் ஆராய்கிறது. புலம்பெயர்ந்த தமிழர்கள் பல கனடியர்கள், குறிப்பாக பெரிய பெருநகரங்களில் உள்ளவர்கள் ஒர…

      • Like
    • 4 replies
    • 953 views
  14. இந்திய மக்களின் அடிப்படைக் கோபமான கறுப்புப் பணம் என்கிற பூனை கொஞ்சம் கொஞ்சமாக சாக்கு மூட்டையை விட்டு வெளியே வந்து கொண்டிருக்கிறது. சுவிஸ் வங்கிகளின் கூட்டமைப்பின் அறிக்கையில் உலகின் அத்தனை நாடுகளின் கறுப்புப் பணத்தைச் சேர்த்தாலும், அதை விட அதிகமாக இந்திய கறுப்புப் பணம் அங்கே இரு ப்பதாகச் சொல்கிறது. நம் மக்களின் அடிப்படை தேவைகளைப் பூர்த்தி செய்து, விலைவாசியைக் கட்டுப்படுத்தி ஐக்கிய முற்போக்குக் கூட்டணியை வழி நடத்திச் செல்வதாகச் சொல்லப்படும் பொருளாதார மாமேதை மன்மோகன் சிங் இதைக் கேட்ட பிறகும் நாற்காலியைத் தேய்த்துக் கொண்டு தினமும் பிரதமர் அலுவலகத்துக்கு டைம் பாஸுக்காக வருகிறார். அதுமட்டுமல்ல, ‘‘சுவிஸ் வங்கியில் இருக்கும் பணத்தைத் திரும்பக் கொண்டு வருவது சாத்தியமி…

  15. ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்த இலங்கை அரசின் ஆதரவுடன் கொழும்பில் நடந்த சர்வதேச இந்திய திரைப்பட விருது விழாவுக்கு வர மறுத்த அமிதாப் பச்சனை இப்போது சமயம் பார்த்து அவமானப்படுத்தியுள்ளது ஐஐஎப்ஏ அமைப்பு. டொரன்டோவில் நடைபெறவுள்ள விருது விழாவுக்கு வரத் தேவையில்லை என்று அமிதாப்பிடம் அந்த அமைப்பு கூறி விட்டதாம். ஈழத்தில் நடந்த இனப்படுகொலையின் ரத்தக் கறை கூட மறையாத நிலையில், கொழும்பு நகரில் கடந்த ஆண்டு சர்வதேச இந்திய திரைப்பட விருது விழாவை நடத்த ஆதரவு கொடுத்தது இலங்கை அரசு. இதில் பங்கேற்க இந்தியத் திரையுலகினரும் ஆர்வத்தோடு தயாராகினர். தமிழகத்திலிருந்தும் மணிரத்தினம் உள்ளிட்ட பலர் அழைக்கப்பட்டிருந்தனர். மேலும், அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோரை முக்கியமாக எதிர்பார்த்தி…

    • 0 replies
    • 380 views
  16. இலங்கைத் தமிழர்களுக்கு 7 ஆயிரம் டன் உணவுப் பொருள் கருணாநிதி கோரிக்கையை ஏற்று மத்திய அரசு அனுப்புகிறது சென்னை, நவ. 17: இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு 5200 டன் அரிசி, 1500 டன் சர்க்கரை மற்றும் 300 டன் பால்பவுடரை இந்திய அரசு அனுப்பி வைக்கும் என்று முதல்வர் கருணாநிதிக்கு பிரதமர் மன்மோகன்சிங் கடிதம் எழுதியுள்ளார். இலங்கையில் தமிழர்கள் 45 பேரை இலங்கை ராணுவம் குண்டு வீசி படுகொலை செய்தது. அப் போது, Ôஇனிமேலும் மத்திய அரசு பொறுமை கடைப்பிடிக்க வேண்டுமாÕ என்று கருணாநிதி கேள்வி எழுப்பினார். முதல்வரின் அறிக்கையை பிரதமர் மன்மோகன்சிங்கிடம் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு கொடுத்தார். யாழ்பாணத்துக்கு செல்லும் நெடுஞ்சாலையை இலங்கை அரசு மூடிவிட்டது. அதனால் உணவு…

  17. உலகில் யாராவது தங்களுக்காக குரல் கொடுக்க மாட்டார்களா என ஏங்கித் தவித்த இலங்கைத் தமிழ் மக்களுக்கு ஒரு சின்ன வெளிச்சம் கிடைத்திருக்கிறது. இந்த ஆதரவாவது தங்களுக்குக் கிடைக்காதா என்றுதான் அவர்கள் நெடுநாட்களாக ஏங்கிக் கொண்டிருந்தார்கள். இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் மீதான போர் உக்கிரத்தை அடைந்த நிலையில் 2008 அக்டோபர் முதல் அப்போதைய தி.மு.க. அரசிடம் இலங்கைக்கு எதிராக சட் டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றக் கோரி ஈழ ஆதரவாளர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தனர். ஆனால், ‘காங்கிரஸை பகைத்துக் கொள்ளக் கூடாது’ என்ற காரணத்தால் அப்போதைய முதல்வர் கருணாநிதி அந்தக் கோரிக்கைக்கும் இலங்கைத் தமிழர்களின் அழுகுரலுக்கும் செவிசாய்க்கவே இல்லை. இந்த நிலையில், தமிழக சட்டமன்றத்தில் நிறைவ…

  18. ஈழத்தமிழர்களுடைய உரிமைப் போர்க்களத்தில் என்றைக்கும் முன்னால் நிற்போம்: வைகோ ஈழத்தமிழர்களுடைய உரிமைப் போர்க்களத்தில் நாங்கள் என்றைக்கும் முன்னால் நிற்போம் என்று வைகோ பேசினார். இலங்கையில் முள்ளிவாய்க்கால் பகுதியில் பல ஆயிரம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதன் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் பொதுக்கூட்டம் சென்னை புரசைவாக்கம் தாணா தெருவில் 17.05.2011 அன்று நடைபெற்றது. இந்தி கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, உலகத்தில் பல்வேறு நாடுகள், இலங்கையிலே ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். அது விசாரிக்கப்பட வேண்டும். போர்க்குற்றங்கள் விசாரிக்கப்பட வேண்டு என்று ஓங்கி குரல் கொடுக்கின்ற வேளையில், ஐ.நா. மன்றம் போர்க்குற்றங்…

  19. ஈழத்தில் தமிழினத்தை வேர​றுத்த சிங்கள அரசு, வெளிநாடுகளில் இருந்து ஈழத் தமிழர்களுக்கு ஆதர​வாகக் குரல் கொடுப்பவர்களை அச்சுறுத்த நினைக்கிறது. உள விலும் அச்சுறுத்தும் சம்பவங்​களிலும் கைதேர்ந்த சிலரை இந்த அசைன்மென்ட்டுக்காக தமிழ கத்துக்கு அனுப்பி இருக்கிறார்கள். ஈழப் போராட்டங்களுக்கும் புலிகள் ஆத ரவு நிலைப்பாட்டுடன் இருக்கும் முக்கியத் தலைவர்​கள் சிலர்தான் இந்த உளவு மனிதர்களின் குறி'' என்று அதிரவைக்கும் தகவலைச் சொன்னார் இலங்கையைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர். ஈழத்துடன் தொடர்பில் இருக்கும் உணர்வாளர்கள் சிலரிடம் விசாரித்தபோது, ''இலங்கையில் நடந்த நான்​காம் கட்ட ஈழப் போருக்குப் பிறகு, புலிகளின் செயல்பாடு அங்கே முற்றிலும் தடுக்கப்பட்டு​விட்டது. ஈழத்தைச் சிதைத்து விட்ட இலங்கை அரச…

    • 0 replies
    • 564 views
  20. ஆந்திர மாநிலம் நெல்லூர் நகரில் காந்தி சிலையருகே 'மனவாடுகள்' ஈழத்தமிழர்களின் படுகொலையை எதிர்த்து போராட்டம் நடத்திய படங்களை முகநூலில் கண்டேன்...உங்கள் பார்வைக்கு... திரு.வெங்கடேஸ்வரலு பேச்சு திரு.புரேந்தரின் பேச்சு Source: FB. .

  21. பிரிட்டனில் அகதிஅந்தஸ்துக் கோரி விண்ணப்பம்செய்த ஈழத்தமிழர் ஒருவரின் வழக்கில் திருப்புமுனையான, முக்கியமான தீர்ப்பை பிரிட்டனின் அகதி மேன்முறை யீட்டு நீதிமன்றம் நேற்று வழங்கியுள்ளது. வழக்குத்தாக்கல் செய்த அகதி, இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டால் அவர் அந்நாட்டு அரசாங்கத்தால் கைது செய்யப் பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்படு வார் என்று தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தீர்ப்புமூலம், பிரிட்டனின் உள் துறைத் திணைக்களத்தில் இலங்கைத் தமிழ் அகதிகள் தொடர்பான அணுகுமுறையிலும் நீதிமன்றங்களில் விசாரணையில் உள்ள அவர்களுடைய மேன்முறையீட்டு மனுக்கள் தொடர்பான சட்டநிவாரணங்களிலும் பெரும் மாற்றங்கள் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. வவுனியாவைச் சேர்ந்த பிரஸ்தாப நபர்…

    • 5 replies
    • 1.5k views
  22. அன்புள்ள தோழமைக்கு நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம், நம்மில் பெரும்பாலானோருக்கு நம் தொப்புள் கொடி உறவுகளான ஈழத்தமிழர்களுக்கு ஏதேனும் வகையில் உதவ வேண்டுமென்ற எண்ணம் இருக்கிறது. அப்படியொரு வாய்ப்பு நமக்குக் கிடைத்துள்ளது. கும்மிடிப்பூண்டி ஏதிலிகள் முகாமிலிருக்கும் ஈழத்தமிழ் மாணவர்களுக்குக் கல்வியளிக்கும் ஒரு வாய்ப்பு. ஏறத்தாழ 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு மேற்படிப்புக்காக உதவி வேண்டி நிற்கின்றனர். நம்மைப்போலவே ஈழச்சொந்தங்களுக்கு உதவும் நோக்கம் கொண்ட சிலர் (நடிகர் சூர்யா, சத்யராஜ், இயக்குனர் மணிவண்ணன் போன்றோர்) அங்குள்ள சில மாணவர்களைத் தத்தெடுத்து அவர்களுக்கான கல்வி மற்றும் அத்தியாவசியச் செலவுகளை ஏற்றுக் கொண்டுள்ளனர். இது நமக்கான பணியா…

  23. ஈழத்தமிழ் ரத்தம் – புத்தரின் எலும்பு – ராஜபக்சேவின் பக்தி! நேபாளத்தில் இருக்கும் லும்பினியில்தான் புத்தர் பிறந்தார் என்பது அனைவராலும் ஒப்புக் கொள்ளப்பட்டாலும், கி.மு ஐந்தாம் நூற்றாண்டில் அவர் மறைந்த கபிலவஸ்து எங்கே இருக்கிறது என்பது இன்னும் சர்ச்சையில் இருக்கிறது. இந்திய நேபாள எல்லைக்கு அருகில் உத்திரபிரதேச மாநிலத்தில் இருக்கும் பிப்ரவா எனும் இடத்தில் 19ஆம் நூற்றாண்டில் நடந்த தொல்லியல் ஆய்வுகளின் போது கண்டுபிடிக்கப்பட்ட சந்தன பேழைகள் புத்தரின் மறைவு காலத்தோடு பொருந்தி வந்ததால் இவ்விடமே கபிலவஸ்து என்று பிரிட்டீஷ் ஆய்வாளர்களால் கூறப்பட்டது. ஆனால் இதே காலத்தில் நேபாளத்தின் டெராய் பகுதியில் இருக்கும் திலுராகோட் எனும் இடம்தான் கபிலவஸ்து என்று வேறு ஆய்வாள…

  24. ஈழத் தமிழர் பிரச்சனை: கருணாநிதி உருக்கம்! ஆகஸ்ட் 19, 2006 சென்னை: இலங்கைத் தமிழர்களுக்கும், இங்குள்ள தமிழர்களுக்கும் உள்ள உறவு, தொப்புள் கொடி உறவு. இந்த உறவு,நமது சகோதர, சகோதரிகள் இலங்கையில் கொல்லப்படுவது நமக்கு இனிப்பான செய்தி அல்ல என்று முதல்வர் கருணாநிதி சட்டசபையில் உருக்கமாக தெரிவித்தார். இன்று கேள்வி நேரம் முடிந்ததும் மதிமுக தலைவர் கண்ணப்பன் கவன ஈர்ப்பு தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தார். அப்போது பேசுகையில், முல்லைத் தீவில் 61மாணவிகள் இலங்கை ராணுவத்தால் குண்டு வீசிக் கொல்லப்பட்டது குறித்து இந்த சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை திரிக்கப்பட்ட செய்திகளின் அடிப்படையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் என இலங்கை துணைத் தூதரகம் கூற…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.