Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ஹாங்காங் சிறப்பு அதிகார மண்டலத்தில் இன்று மாவட்டம்தோறும் உள்ள கவுன்சில்களுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனையொட்டி போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் பாதுகாப்பு பணிகள் குறித்து காவல்துறை ஆணையர் கிறிஸ் டாங் தொலைக்காட்சி மூலம் பேட்டியளித்தார். ஹாங்காங்கில் கடந்த ஒருமாதத்திற்கும் மேலாக போராட்டங்கள் வெடித்துள்ளன. வேலைவாய்ப்பின்மை, ஊழலுக்கு எதிராக தலைவிரித்தாடும் வன்முறைப் போராட்டங்களை ஒடுக்க சீனா தனது படைகளை தயார் நிலையில் வைத்துள்ளது. இந்நிலையில் தேர்தல்கள் நடத்தப்படுவதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.வாக்காளர்கள் சுமார் 41 லட்சம் பேர் 452 கவுன்சில்களுக்கு வாக்களிக்க உள்ளனர். https://www.polimernews.com/dnews/89989/ஹாங்காங்கி…

    • 0 replies
    • 238 views
  2. உலகெங்கும் பல நாடுகளில் மக்கள் பல்வேறு காரணங்களுக்காக வீதிக்கு வந்து கடந்த இரண்டு வாரங்களாக போராடி வருகின்றனர். இரானில் எரிபொருள் விலை உயர்வை எதிர்த்து போராடி வருகிறார்கள் மக்கள். மக்கள் போராட்டத்துக்கு தலைமை தாங்கிய 100 தலைவர்களை இரான் அரசாங்கம் கைது செய்துள்ளது. இது இரானின் நிலை என்றால், லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் போராட்டங்கள் வெடித்துள்ளன. படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஇரான் போராட்டம் கொலம்பியாவில் வலதுசாரி அரசாங்கத்திற்கு எதிராக வெடித்த போராட்டத்தில், மூன்று பேர் வியாழக்கிழமை கொல்லப்பட்டனர். சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் அரசு எடுத்த நடவடிக்கைகளுக்கு எதிராக ஏறத்தாழ 2 லட்சம் மக்கள் வியாழக்கிழமை வீதியில் இறங்கி போராடினர். படத்தின் காப்புர…

    • 0 replies
    • 751 views
  3. அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்ய விரும்பினாலும், தேவைப்படும்போது எதிர்த்துப் போராட அஞ்ச மாட்டோம் என சீன அதிபர் ஜின்பிங் கூறியுள்ளார். அமெரிக்கா-சீனா இடையே முதல் கட்ட வர்த்தக ஒப்பந்தம் எட்டப்பட்டிருப்பதாக அதிபர் டிரம்ப் கடந்த அக்டோபர் 11ஆம் தேதி அறிவித்திருந்தார். ஆனால் இந்த ஒப்பந்தம் இன்னும் எழுத்து வடிவம் பெறவில்லை. சீனா இன்னும் பல விஷயங்களில் இறங்கிவர மறுப்பதால் பேச்சுவார்த்தையை முடிவடையாமல் இருப்பதாக டிரம்ப் கூறியிருந்தார். இந்நிலையில், பெய்ஜிங்கில் அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டுப் பிரதிநிதிகள் சந்திப்பின்போது பேசிய சீன அதிபர் ஜின்பிங், அமெரிக்காவுடன் வர்த்தகப் போரை தொடங்க தாங்கள் ஒருபோதும் விரும்பியதில்லை என்றும், ஆனால் அதற்காக தங்கள் நாடு அச்சப்படுகிறத…

    • 0 replies
    • 455 views
  4. விசா உள்ளிட்ட உரிய ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாக தங்கியிருந்த இந்தியர்களை கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் அமெரிக்க திருப்பியனுப்பியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவலை வெளியிட்டுள்ளது. அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலை யில் 145 இந்தியர்கள் இவ்வாறு திருப்பியனுப்பப்பட்டுள்ளனர். இவ்வாறு திருப்பியனுப்பப்பட்டவர்கள் 20 முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்களாக இருப்பதுடன், அவர்களின் கை மற்றும் கால்கள் கட்டப்பட்டிருந்ததாகவும், டில்லி வந்ததன் பின்னரே அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இவர்களுல் பெரும்பாலானோர் பஞ்சாப், அரியானா, மும்பை மற்றும் குஜராத்தை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவி…

  5. இஸ்ரேல் பிரதமர் மீது ஊழல்குற்றச்சாட்டு – பதவிவிலக மறுப்பு November 22, 2019 இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெட்டன்யாகூ மீது கையூட்டு பெற்றது, மோசடி மற்றும் நம்பிக்கை மீறல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை அந்நாட்டின் அரச தலைமை சட்டத்தரணி அவிச்சாய் மண்டெல்பிட் மூன்று வௌ;வேறு வழக்குகளில் குறிப்பிட்டுள்ளார். அந்நாட்டின் மிகப் பெரும் தொழிலதிபரிடமிருந்து பரிசுப் பொருட்களை நெட்டன்யாகூ பெற்றதாகவும், தன்னை பற்றி ஊடகங்களில் நேர்மறையான செய்திகள் வெளியிடப்பட வேண்டும் என்னும் நோக்கில் செயல்பட்டதாகவும் அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. தான் கனமான இதயத்துடன் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ள இஸ்ரேல் அரசின் தலைமை சட்டத்தரணி அவிச்சாய் மண்டெல்பிட், இதன் மூல…

  6. மிக நீண்ட காலம் பிரதமர் பதவி வகித்து சாதனை படைத்தார் ஷின்ஷோ அபே ஜப்பானில் மிக நீண்ட காலம் பிரதமர் பதவியை வகித்தவர் என்ற சாதனையை ஷின்ஷோ அபே படைத்துள்ளார். ஜப்பான் பிரதமராக ஷின்ஷோ அபே பொறுப்பேற்று நேற்று (புதன்கிழமை) உடன் 2,887 நாட்கள் நிறைவடைகிறது. இதன் மூலம், அந்த நாட்டில் மிக நீண்ட காலத்துக்கு பிரதமராக இருந்தவர் என்ற பெருமையை அபே பெற்றார். அவருக்கு முன்னதாக, கற்சுரா ராரோ என்பவரே ஜப்பானில் மிக நீண்ட காலம் ஆட்சி செய்த பிரதமர் என்ற பெருமையைப் பெற்றிருந்தார். 1901ஆம் ஆண்டு முதல் 1913ஆம் ஆண்டு வரை அவர் பிரதமராக இருந்தார். அவரது சாதனையை தற்போது ஷின்ஷோ அபே முறியடித்துள்ளார். அதுமட்டுமன்றி, ஜி-7 நாடுகளில் மிக நீண்ட காலம் பிரதமர் பொறுப்பை வகித்த 2ஆவது தலைவர் என…

  7. Friday, November 22, 2019 - 6:00am மேற்குக் கரையில் அமைக்கப்பட்டுள்ள யூதக் குடியிருப்புகள் சட்ட விரோதமானவை அல்ல என்று அமெரிக்கா அறிவித்துள்ளது வருத்தமளிப்பதாக ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது செய்தித் தொடர்பாளர் ஸ்டெபானி துஜாரிக் கூறியதாவது: மேற்குக் கரைப் பகுதியில் இஸ்ரேல் அமைத்துள்ள யூதக் குடியிருப்புகள் சர்வதேச சட்டங்களுக்கு எதிரானவை அல்ல என்று அமெரிக்கா கூறியுள்ளது. எனினும், அந்தக் குடியிருப்புகள் சர்வதேச சட்டங்களுக்கும், ஜெனீவா ஒப்பந்தத்துக்கும் எதிரானவை என்ற ஐ.நாவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. …

    • 0 replies
    • 311 views
  8. இந்தியாவால் தேடப்படும் தீவிரவாதியான மசூத் அசாரை ஐநா.பாதுகாப்பு கவுன்சில் அண்மையில் தீவிரவாதியாக அறிவித்து தடை விதித்தது. இதையடுத்து இந்தியர்கள் சிலரையும் இந்த பட்டியலில் சேர்க்க பாகிஸ்தான் அரசு முயற்சித்து வருகிறது. சீனாவின் துணையுடன் கடந்த வாரம் 2 இந்தியர்களை தீவிரவாதிகள் பட்டியலில் சேர்க்கும் படி பாகிஸ்தான் கோரியுள்ளது. பலூசிஸ்தான், பெஷாவர் ஆகிய இடங்களில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக அந்த இருவர் மீதும் வழக்குகள் பதிவாகியிருப்பதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. அண்மையில் ஆந்திராவைச் சேர்ந்த அங்காரா அப்பாஜி என்பவர் காபூலில் உள்ள வங்கியில் பணியாற்றி வந்த நிலையில் அவர் லாகூரில் தீவிரவாதத் தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டிய பாகிஸ்தான் அரசு அவரையும் தடை செய…

    • 0 replies
    • 573 views
  9. 338 உறுப்பினர்களைக் கொண்ட கனடா நாடாளுமன்றத்திற்கு அனிதா முதன்முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு மக்கள் சேவை மற்றும் கொள்முதல் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. கனடா அமைச்சரவையில் இந்தியர்கள் 4 பேருக்கு அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இடம் அளித்துள்ளார். மொத்தம் 37 அமைச்சர்கள் கனடாவின் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளார்கள். அவர்களில் டொரான்டோ பல்கலைக் கழகத்தில் சட்டத்துறை பேராசிரியராக இருந்த அனிதா ஆனந்த் உள்பட 7 பேர் புதுமுகங்கள். 338 உறுப்பினர்களைக் கொண்ட கனடா நாடாளுமன்றத்திற்கு அனிதா முதன்முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு மக்கள் சேவை மற்றும் கொள்முதல் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. கனடா அமைச்சரவையில் இந்த துறை முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இ…

  10. பிரித்தானியாவுக்குச் செல்லவிருந்த சரக்குக் கப்பலில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 25 அகதிகளை, குறித்த கப்பல் நேற்று நெதர்லாந்தை விட்டுச் சென்ற சிறிது நேரத்தில் நெதர்லாந்து அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்நிலையில், குறித்த கப்பலானது விரைவாக விளார்டிங்கனுக்கு திரும்பியதாக அவசர சேவைகள் தெரிவித்துள்ளன. சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு இரண்டு அகதிகள் எடுத்துச் செல்லப்பட்ட நிலையில், ஏனைய 23 பேரும் மருத்துவ சோதனையொன்றை துறைமுகத்தில் பெற்றுக் கொள்ளப்பட்ட பின்னர் பொலிஸாரால் விசாரணைகளுக்காக அழைத்துச் செல்லப்பட்டதாக பிராந்திய அவசர சேவைகளின் திணைக்களத்தில் பிரசுரிக்கப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அந்தவகையில், அகதிகள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியாத நிலையியில்…

    • 0 replies
    • 382 views
  11. பிரான்ஸ் வீதிகளில் படுத்துறங்கும் 700 சிறார்கள் குறித்து அரசுக்கு எச்சரிக்கை! பிரான்ஸின் வீதிகளில் படுத்துறங்கும் சுமார் 700 க்கும் மேற்பட்ட இருப்பிடமற்ற சிறார்கள் குறித்து தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. மனுஃபெஸ்ரோ (manifesto) எனும் தன்னார்வ தொண்டு நிறுவனம் இந்தத் தகவலை இன்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு நாள் இரவிலும் இல்-து-பிரான்ஸிக்குள் பாதுகாப்பற்ற முறையில் 700 க்கும் மேற்பட்ட சிறுவர்கள் படுத்துறங்குவதாக அந்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. அவர்களுக்கு முறையான தங்குமிடங்களை அரசாங்கம் துரிதமாக ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். இந்த வருடத்தில் மொத்தமாக எட்டு சிறுவர்கள் வீதிகளி…

  12. படத்தின் காப்புரிமை Getty Images பல தீவுகளின் தொகுப்பாக உள்ள பப்புவா நியூ கினியின் ஓர் அங்கமாக உள்ள பூகன்வில் எனும் தீவுக்கூட்டம் சுதந்திரமான தனி நாடாக வேண்டுமா என்பது குறித்த மக்களின் கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. இப்போது பப்புவா நியூ கினியின் ஒரு மாகாணமாக பூகன்வில் உள்ளது. சுதந்திரமான தனி நாடாக மக்கள் வாக்களித்தால் இந்த தீவுக்கூட்டம் உலகின் புதிய நாடாகும் வாய்ப்புள்ளது. சுமார் மூன்று லட்சம் மக்கள்தொகை மற்றும் 10,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுள்ள பூகன்வில் தனி நாடாக உருவானால் உலகிலேயே மிகச்சிறிய நாடுகளில் ஒன்றாக அமையும். சனிக்கிழமை தொடங்கவுள்ள கருத்தறியும் வாக்கெடுப்பில் பங்கேற்க சுமார் 2,07,000 பேர் தகுதி பெற்றுள்ளனர். …

    • 0 replies
    • 707 views
  13. ஹொங்கொங் மீது அமெரிக்கா பொருளாதார தடை ஹொங்கொங் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதிக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் சட்டமூலம் நிறைவேற்றியுள்ளது. ஹொங்காங் போராட்டத்தில் தொடர் வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வரும் நிலையிலேயே இவ்வாறு சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதில் முதல் சட்டமூலம் ஹொங்கொங் மீது தூதரக ரீதியில் நடவடிக்கை எடுக்கவும் பொருளாதார தடைகளை விதிக்கவும் வழிவகுக்கும். அதே போல் “ஹொங்கொங் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகம் 2019” என்ற பெயரில் நிறைவேற்றப்பட்டுள்ள மற்றொரு சட்டமூலத்தில் ஹொங்கொங் பொலிஸ் படையினருக்கு அமெரிக்க நிறுவனங்கள் சில ஆயுதங்களை வணிக ரீதியாக ஏற்றுமதி செய்வதை தடைசெய்யும். அத்துடன் இந்த சட்டமூலங்கள் ஹொங்கொங்கில் மனித உரிமை மீறல்களுக்கு …

  14. அசாஞ் மீதான விசாரணையை ஸ்வீடன் கைவிடுகிறது விக்கிலீக்ஸ் இணை நிறுவனர் ஜூலியன் அசாஞ் மீது 2010 இல் சுமத்தப்பட்ட பாலியல் வல்லுறவுக் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணையை ஸ்வீடனில் உள்ள வழக்குரைஞர்கள் கைவிட்டுள்ளனர். இந்தக் குற்றச்சாட்டை மறுக்கும் அசாஞ், 2012 இல் லண்டனில் உள்ள ஈக்வடோரியன் தூதரகத்தில் தஞ்சம் புகுந்து ஏழு ஆண்டுகளாக சுவீடனுக்கு ஒப்படைக்கப்படுவதைத் தவிர்த்துள்ளார். 48 வயதான ஆஸ்திரேலியர் ஜூலியன் அசாஞ் மே மாதம் ஈக்வடோர் தூதரகத்தில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டார். அத்துடன் பிணை நிபந்தனைகளை மீறியதற்காக அவருக்கு 50 வார சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. தற்போது அவர் லண்டனில் உள்ள பெல்மார்ஷ் (Belmarsh) சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பொது வழக்கு வ…

  15. ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில், பிரித்தானியப் படைகளால் பொதுமக்கள் கொல்லப்பட்டதை பிரித்தானிய அரசாங்கமும், ஆயுதப் படைகளும் மறைத்ததாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது. பிரித்தானிய ஒளிபரப்புக் கூட்டுத்தாபன பனோரோமா, சண்டே டைம்ஸால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையொன்றானது 11 பிரித்தானிய துப்பறிவாளர்களிடம் கதைத்திருந்த நிலையில், போர்க்குற்றங்களுக்கான நம்பத் தகுந்த ஆதாரங்களை தாங்கள் கண்டுபிடித்ததாகக் கூறியுள்ளனர். கொலைகளுக்கு படைவீரர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என உள்வீட்டினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், மேற்குறித்த குற்றச்சாட்டுக்களை நிராகரிப்பதாக பாதுகாப்பமைச்சு கூறியுள்ளது. ஈராக்கில் இருந்தபோது பிரித்தானியப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்களை …

    • 0 replies
    • 913 views
  16. தென் சீனக் கடல் பகுதியில் ராணுவ பலத்தை காட்டும் வேலையை நிறுத்திக் கொள்ள வேண்டும் என அமெரிக்காவிடம் சீனா கூறியுள்ளது. சரக்கு போக்குவரத்திற்கு மிகமுக்கியமான கடல் வழியான தென் சீனக் கடலுக்கு, சீனா முழுஉரிமை கொண்டாடுவதை அமெரிக்கா ஏற்கவில்லை. இந்த நிலையில் சீன பாதுகாப்பு அமைச்சர் வெய் ஃபெங்கும், அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் மார்க் எஸ்பரும் நேற்று பாங்காக்கில் சந்தித்துப் பேசினர். அப்போது தென்சீனக் கடல், ஹாங்காங் போராட்டம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக சீனாவின் பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வூ கியான் ((Wu Qian)) தெரிவித்துள்ளார். தென்சீனக் கடலில் அமைதி நிலவ வேண்டும் என்பதில் சீனா உறுதியாக இருப்பதாகவும், அந்த பகுதியில் தனது ராணுவ பலத…

  17. றொஹிங்யா இனப்படுகொலை | குற்றவியல் நீதிமன்றத்திற்குத் தயாராகும் ஒங் சான் சூ சீ சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விசாரணைக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது துரத்தப்பட்டு இரண்டாவது வருடத்தை வங்காள தேசத்தில் கொக்ஸ் பஜாரில் நினைவுகூரும் றொஹிங்யா அகதிகள் – படம்: ரஹ்மான் / ராய்ட்டர்ஸ் மியான்மாரில் (பர்மா) ரொஹிங்யா சிறுபான்மையினருக்கு எதிராக இனவழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக அந் நாட்டின் அரசு மற்றும் இராணுவத்தினர் மீது மனித உரிமை அமைப்புகள் நீணடகாலமாகக் குற்றஞ்சாட்டி வந்தன. அந்நாட்டின் தலைவர் ஓங் சான் சூ சி இக்குற்றங்களை மறுத்தது மட்டுமல்லாது அதுபற்றிய விசாரணைகளை மேற்கொள்ளவும் மறுத்து வருகிறார். அகிம்சை முறையில் ஜனநாயகத்தை மீட்கப் போராடியவர் எனக்கூறி இவருக்கு…

  18. அமெரிக்காவுடன் அர்த்தமற்ற பேச்சுவார்த்தைக்கு இடமில்லை- வடகொரியா திட்டவட்டம்! அமெரிக்காவுடன் இனிமேல் அர்த்தமற்ற பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என்று வடகொரியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்கா – வடகொரியத் தலைவர்கள் இடையே சந்திப்பு நடைபெறுவதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாகத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவரது இந்த அறிவிப்பு குறித்து இன்று பதிலளித்துள்ள வடகொரியா, எங்களுக்கு அமெரிக்காவுடன் அர்த்தமற்ற பேச்சுவார்த்தை நடத்த எந்த ஆர்வமும் இல்லை என்றும் இதனால் எங்களுக்கு அமெரிக்காவிடம் திரும்ப ஏதும் கிடைக்கப்போவதில்லை எனவும் தெரிவித்துள்ளது. உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி, வடகொரியா 22 ஏவுகணை சோதனைகளை நடத்தியது. இதில் இரண்ட…

  19. வடகொரியா நடத்திய அணுகுண்டு சோதனை, ஜப்பானின் ஹிரோஷிமாவில் வீசப்பட்ட அணுகுண்டைவிட 17 மடங்கு வலிமை வாய்ந்தது என இஸ்ரோ விஞ்ஞானிகள் குழு தெரிவித்துள்ளது. வடகொரியா மாண்டாப் மலைப் பகுதியில் கடந்த 2017ஆம் ஆண்டில் சக்திவாய்ந்த அணுகுண்டு சோதனையை நடத்தியது. இதுகுறித்து இஸ்ரோவை சேர்ந்த 3 வல்லுநர்கள் குழு ஆராய்ச்சி நடத்தி ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அணுகுண்டு சோதனை நடத்தப்பட்ட பகுதியில் தரைப்பரப்பு பெரும் சேதம் அடைந்ததையும், பக்கவாட்டில் உள்ள பகுதிகள் அரை மீட்டர் அளவுக்கு இடம்பெயர்ந்ததையும் ஜப்பானின் செயற்கைக்கோள் பதிவு செய்துள்ளது. இதன் அடிப்படையில், வடகொரியா சோதனை செய்த அணுகுண்டு 245 முதல் 271 கிலோடன் வரை சக்திவாய்ந்தது என இஸ்ரோ வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ளனர். இரண்டாம…

    • 0 replies
    • 474 views
  20. ஹாங்காக் போராட்ட களத்தில் ராணுவத்தை சீனா முதன்முதலாக களமிறக்கியுள்ளது. சர்ச்சைக்குரிய மசோதாவை எதிர்த்து தொடங்கப்பட்ட போராட்டம், அந்த மசோதா திரும்பப் பெறப்பட்ட பிறகும் நீடிக்கிறது. சீனாவிடம் இருந்த சுதந்திரம் வேண்டும் என்ற புதிய கோரிக்கையுடன் போராட்டக்காரர்கள் தங்களது போராட்டத்தை தொடர்கின்றனர். இந்நிலையில், ஹாங்காக் போராட்ட களத்தில் சீன ராணுவம் முதன்முதலாக களமிறக்கப்பட்டுள்ளது. வழக்கமான சீருடையில் அல்லாமல் டி-சர்ட், சாட்ஸ் அணிந்து தடுப்புகள் மற்றும் குப்பைகளை அப்புறப்படுத்தும் பணிகளில் வீரர்கள் ஈடுபட்டனர். https://www.polimernews.com/dnews/89033/ஹாங்காக்-போராட்ட-களத்தில்முதன்முதலாக-ராணுவத்தைகளமிறக்கியது-சீனா

  21. ஆஸ்திரேலியாவில் தற்கொலை செய்து கொண்ட ஆப்கானிஸ்தான் அகதியின் உடலை ஆப்கானிஸ்தானில் உள்ள அவரது குடும்பத்திடம் ஒப்படைக்க ஆஸ்திரேலிய அரசு 15,000 டாலர்களை கேட்டுள்ளது. சயத் மிர்வாஸ் ரோஹனி என்ற 32 வயது அகதி, கடந்த மாதம் தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவரது உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைப்பத்தில் சிக்கல் நீடித்து வருகின்றது. ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் மருத்துவராக பணியாற்றிய இவர், ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்த நிலையில் மனுஸ்தீவில் நான்கு ஆண்டுகளாக சிறைவைக்கப்பட்டிருந்தார். அங்கு அவர் மனநல பாதிப்பை எதிர்கொண்ட நிலையில, மேலதிக சிகிச்சைகாக ஆஸ்திரேலியாவுக்கு மாற்றப்பட்டிருந்தார். ஆறு மொழிகள் பேசும் திறன்கொண்ட ரோஹனி, 2017ம் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகருக்கு கொண்டு வர…

    • 0 replies
    • 495 views
  22. படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionரோஜர் ஸ்டோன் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை காக்கும் வகையில் அவரது ஆலோசகர் ரோஜர் ஸ்டோன் அந்நாட்டு நாடாளுமன்ற குழு விசாரணையின்போது பொய் சொன்னார் என்றும் சாட்சியங்களை அளித்தார் என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சாட்சியங்களை அழித்ததற்கு 20 ஆண்டுகள் வர சிறை தண்டனை விதிக்கப்படும். பிற குற்றங்களுக்கு ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும். இது அரசியல் உள்நோக்கம் கொண்ட வழக்கு என்று அவர் கூறியுள்ளார். கடந்த 2016ஆம் ஆண்டு ஹிலாரி கிளிண்டன் மீதான நன்மதிப்பை சேதப்படுத்தும் வகையில் சர்ச்சைக்குரிய மின்னஞ்சல்களை விக்கிலீக்ஸ் பதிப்பிப்பதற்கு முன்னதாக, அதுகுறித்த மேலதிக தகவல்களை தெரிந்துகொள்வதற்கு தான் எடுத்த…

  23. முன்னாள் துணை அதிபரை அவதூறாகப் பேசிய வழக்கில் அமெரிக்க அதிபர் டிரம்பை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது. இதையடுத்து அவரை பதவி நீக்கக் கோரும் தொலைக்காட்சி விவாதம் தொடங்கியுள்ளது. அமெரிக்காவில் அடுத்தாண்டு நடைபெறும் அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் டிரம்ப்பை எதிர்த்து, ஜனநாயகக் கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் போட்டியிடுகிறார். இவரது மகன் ஹன்டர் பிடென் உக்ரைனில் உள்ள இயற்கை எரிவாயு நிறுவனத்தில் முக்கியப் பொறுப்பில் உள்ளார். இந்த எரிவாயு நிறுவனத்தில் எழுந்த ஊழல் குற்றச்சாட்டு குறித்து விசாரித்த அரசு வழக்கறிஞரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என அந்நாட்டு அதிபரிடம் ஜோ பிடன் வலியுறுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்ட…

    • 0 replies
    • 351 views
  24. அமெரிக்காவின் முன்னாள் துணை அதிபர், வெறிநாய் போல் அடித்து கொள்ளபட வேண்டுமென வடகொரிய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வடகொரியா-அமெரிக்கா இடையேயான உறவு தொடர்பாக இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியிட்ட அறிக்கையில், வடகொரியாவின் அதிபர் கிம் ஜாங்கை கொலைகார சர்வாதிகாரி என, அமெரிக்காவின் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் விமர்சித்திருந்தார். இதற்கு பதிலளித்துள்ள வடகொரிய அரசின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனம், அதிகாரத்தின் மீது ஆசைகொண்ட ஜோ பிடன் போன்ற வெறிநாயை விட்டுவைப்பது பலருக்கும் ஆபத்தானது, தாமதிக்காமல் அவரை அடித்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளது. https://www.polimernews.com/dnews/88830/அமெரிக்காவின்-முன்னாள்துணை-அதிபரை-வெறிநாய்-போல்அடி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.