உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26693 topics in this forum
-
மன்னர் சார்லஸ் மீது மீண்டும் முட்டை வீச்சு பிரித்தானிய மகாராணி 2ஆம் எலிசபெத்தின் மரணத்துக்குப் பின்னர் மன்னராக பதவியேற்றுள்ள 3ஆம் சார்லஸ், நாடு முழுவதும் பயணம் செய்து, மக்களைச் சந்தித்து வருகிறார். இந்நிலையில், வடக்கு லண்டனில் இருந்து 46 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள லுட்டன் நகரத்துக்கு நேற்று முன்தினம் சென்ற(06) அவர், அங்குள்ள மக்களைச் சந்தித்துக் கலந்துரையாடினார். இதன்போது எதிர்பாராத விதமாக கூட்டத்தில் இருந்து மன்னரை நோக்கி முட்டையொன்று வீசப்பட்டது. இதனையடுத்து உடனடியாக மன்னரை வேறொரு இடத்துக்கு அவரது பாதுகாப்பு அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். இந்நிலையில் இச்சம்பவத்துடன் தொடர்புடைய நபரைப் பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருவதாகத் தெரி…
-
- 7 replies
- 972 views
-
-
அணு ஆயுத திட்டத்தை கைவிடும் வரை வடகொரியாவுக்கு தொடர் அழுத்தம் கொடுக்க அமெரிக்கா முடிவு, வடகொரிய தலைவரின் ஆட்சிக்கு நிதி திரட்ட, வெளிநாடுகளில் வேலை செய்யும் தொழிலாளர்கள்- ரகசிய புலனாய்வில் திடுக்கிடும் தகவல்,பிளாஸ்டிக் கழிவுகளை அழிக்கும் புதிய என்சைம் கண்டுபிடிப்பு உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 295 views
-
-
சிரியா போர்: ராணுவத்தின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் வந்தது டமாஸ்கஸ் பகிர்க சிரியாவில் ஐ.எஸ் அமைப்பிடம் இறுதியாக இருந்த சிறு பகுதியை மீட்ட பின், டமாஸ்கஸை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளையும் முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துவிட்டதாக சிரியா ராணுவம் அறிவித்துள்ளது. படத்தின் காப்புரிமைAFP ஒரு காலத்தில் ஒன்றரை லட்சம் பாலத்தீன அகதிகளுக்கு அடைக்கலமாக திகழ்ந்த யார்மூக் (Yarmouk) மாவட்டத்தையும் மற்றும் அதன் அண்டை மாவட்டமான ஹஜர் அல் அஸ்வத் (Aswad) தையும் கைப்பற்றியதாக தேசிய தொலைக்காட்சி மற்றும் சிரியா செயற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். வெளியேறும் ஒப்பந்தத்தின்படி, ஐ.எஸ் போராளிகள் மற்றும் அவர்களது குடு…
-
- 0 replies
- 318 views
-
-
உலகிலேயே அதிகமாக ஆயுதங்களை இறக்குமதி செய்வதில் இந்தியா முன்னணி நாடாக உள்ளது என்று ஸ்வீடனைச் சேர்ந்த ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆய்வு அமைப்பின் அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது. சீனாவை விடவும் இந்தியாவின் ஆயுதங்கள் இறக்குமதி கடந்த 4 ஆண்டுகளில் அதிகமாகியுள்ளது. உண்மையில் சீனாவை பின்னுக்குத் தள்ளியது இந்தியா. உலகின் ஒட்டுமொத்த ஆயுதங்கள் விற்பனையில் இந்திய இறக்குமதி 9% பங்களிப்பு செய்வதாக அந்த அறிக்கை தெரிவித்துள்ளது. அதுவும் 2006ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரை இந்தியா வெறித்தனமாக ஆயுதங்களை இறக்குமதி செய்து குவித்து வருவதாக அந்த இயக்கம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் சிதாஷு கார் கருத்து தெரிவிக்க மறுத்து விட்டார். ச…
-
- 4 replies
- 940 views
-
-
மும்பை மாராட்டிய மாநிலம் வாசிம் மாவட்டம் ஷகிடா கிராமத்தை சேர்ந்தவர் சங்கீதா அகேலா இவர் தது தாலியை விற்று வீட்டில் கழிவறை கட்டு உள்ளார்.இதற்கு மராட்டிய மாநில கிராம வளர்ச்சி மந்திரி பங்கஜ் முண்டே சங்கீதாவை அழைத்து பாரட்டினார்.பின்னர் மந்திரி பிரதமர் நரேந்திர மோடியின் கழிவறைகள் தேவை குறித்து விழிப்புணர்வை உருவாக்க தனது புதிய தாலியை வழங்கினார். பின்னர் பேசிய பங்கஜ் முண்டே கூறியதாவது:- கழிவறைகள் நாட்டின் பல இடங்களில் இல்லை. இதன் விளைவாக பெண்கள பல பிரச்சினைகளை சந்திக்க வேண்டி உள்ளது.எனது பதவிக்காலத்தில் எனது எம்..எல்.ஏ தொகுதி நிதியில் 25 சதவீதத்திற்கு,கழிவறைகள் கட்டுவேன்.பெண்களுக்கு எந்த இடையூறு இருக்காத வகையில் அதிக அளவு கழிவறைகளை கட்டுவதே எங்கள் இலக்கு. இவ்வாறு அவர…
-
- 0 replies
- 423 views
-
-
மத்திய கிழக்கில் நீளும் பனிப்போர்: இஸ்ரேலிய இராணுவ அச்சுறுத்தலை தடுக்க ஈரான் திறந்துள்ள நிலத்தடி வான்தளம் ஐங்கரன் விக்கினேஸ்வரா அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தங்கள் சமீபத்திய இராணுவப் பயிற்சியில் அச்சுறுத்தி உருவகப்படுத்தியது போன்ற சாத்தியமான தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் வகையில் போர் விமானங்களை ஈரான் தயார்படுத்தி வருவதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இஸ்ரேலின் இராணுவ அச்சுறுத்தல் : ஈரானின் இராணுவத் தலைவர் மேஜர் ஜெனரல் அப்தோல்ரஹிம் மௌசவி மற்றும் ஈரானிய ஆயுதப் படைகளின் தலைமை அதிகாரி, மேஜர் ஜெனரல் முகமது பாகேரி ஆகியோர், ஈரானில் வெளியிடப்படாத இரகசிய இடத்தில், “ஈகிள் 44” எனப்படும் முதல் நிலத்தடி விமானப்படை தளத்தை கடந்த வாரம் பார்வையிட்டனர். ஆயினும் இத்தளத்தின் இருப்…
-
- 0 replies
- 637 views
- 1 follower
-
-
பாதுகாப்பை உறுதிப்படுத்த ஜேர்மனி தவறிவிட்டது! – டொனால்ட் ட்ரம்ப் ரஷ்யாவின் சமையல் எரிவாயு குழாய் திட்டத்திற்கு ஆதரவு வழங்கும் ஜேர்மனி, தமது நாட்டு பாதுகாப்புக்கு அதிக நிதியொதுக்கீட்டை மேற்கொள்ள தவறிவிட்டதென அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார். பிரஸல்ஸில் நடைபெறும் நேட்டோ உச்சிமாநாட்டில் கலந்துகொண்டுள்ள ட்ரம்ப், நெட்டோ பொதுச்செயலாளர் ஜீன் ஸ்டோலென்பெர்க்குடன் இணைந்து நேற்று (புதன்கிழமை) செய்தியாளர்களை சந்தித்தார். இதன்போதே ஜேர்மன் மீது பகிரங்கமாக இக்குற்றச்சாட்டை முன்வைத்தார். ஐரோப்பிய ஒன்றியத்தின் பாதுகாப்பிற்காக அமெரிக்கா அதிகளவு நிதியொதுக்கீட்டை மேற்கொள்கின்ற நிலையில், ஐரோப்பிய பொருளாதாரத்தில் பாரிய பங்…
-
- 0 replies
- 329 views
-
-
சட்டீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலில் திருநங்கை மேயராக தேர்வானார்! [Monday 2015-01-05 19:00] சட்டீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்ற மேயர் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்ட திருநங்கை ஒருவர் வெற்றி பெற்றுள்ளார். சட்டீஸ்கர் மாநிலம் ராய்கார்க் மாநகராட்சிக்கு நடந்த தேர்தலில் மது கின்னார் (35) என்ற திருநங்கை போட்டியிட்டார். இவர் பாஜக வேட்பாளர் மகாவீர் குருஜி என்பவரை 4,537 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன்மூலம் நாட்டிலேயே மேயராக தேர்வு செய்யப்பட்ட முதல் திருநங்கை என்ற பெருமையை மது கின்னார் பெற்றுள்ளார். தனது வெற்றி தொடர்பாக மது கின்னார் கூறுகையில், மக்கள் என் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். இந்த வெற்றியை மக்கள் எனக்கு வழங்…
-
- 1 reply
- 481 views
-
-
அவுஸ்திரேலியாவின் அகதிகள் தடுப்பு முகாமில் பாரிய மனிதாபிமான நெருக்கடி-மருத்துவர்கள் எச்சரிக்கை அகதிகள் மற்றும் சட்டவிரோத குடியேற்றவாசிகளை அவுஸ்திரேலியா தடுத்து வைத்துள்ள முகாம்களில் பாரிய மனிதாபிமான நெருக்கடி உருவாகி வருவதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். அவுஸ்திரேலியா அகதிகளை தடுத்துவைப்பதற்கு பயன்படுத்தும் நவ்று முகாமில் மனிதாபிமான நெருக்கடி உருவாகி வருகின்றது என தெரிவித்துள்ள அவுஸ்திரேலிய மருத்துவர்கள் சங்கம் இது தொடர்பில் கடிதமொன்றை பிரதமர் ஸ்கொட் மொறிசனிற்கு அனுப்பிவைத்துள்ளது. நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ளதால் ஏற்பட்டு வரும் உளஉடல் பாதிப்புகள் குறித்து கவலையளிக்கும் அறிக்கைகள் வெளியாகின்றன என அவுஸ்திரேலிய மருத்துவர்கள்…
-
- 0 replies
- 452 views
-
-
Published By: SETHU 02 AUG, 2023 | 09:58 AM பிரான்ஸின் தலைநகர் பாரிஸிலுள்ள ஆபரண விற்பனை ஒன்றில் புகுந்த 3 நபர்கள், சுமார் 15 மில்லியன் யூரோ (சுமார் 530 கோடி இலங்கை ரூபா, 136 கோடி இந்திய ரூபா)) பெறுமதியான ஆபரணங்களை கொள்ளைடித்துச் சென்றுள்ளனர். ஆடம்பர கடிகார விற்பனை நிலையமொன்றில் நேற்று செவ்வாய்க்கிழமை பட்டப்பகலில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 10 முதல் 15 மில்லியன் யூரோ பெறுமதியான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக பாரிஸ் வழக்குத்தொடுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது. டிப்டொப்பாக ஆடையணிந்த 2 ஆண்கள், ஒரு பெண் அடங்கிய குழுவினர், கைத்துப்பாக்கியொன்றுடன் கடையின் உள்ளே நுழைந்துள்ளனர். அங்கிருந்த ஊழிய…
-
- 0 replies
- 232 views
- 1 follower
-
-
சீனாவில் துப்பியவர்களுக்கு அபராதம் தலைநகர் பீஜிங்கில் பொது இடத்தில் எச்சில் துப்பியவர்கள் 50பேருக்கு முதன்முறையாக அபராதம் விதிக்கப்பட்டது. 2008 ஒலிம்பிக்சுக்கு முன்பாக நகரத்தை ஒழுங்குபடுத்தும் விதமாக புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பொதுஇடங்களில் குப்பை போடுபவர்கள், எச்சில் துப்புபவர்கள், வரிசைகளில் முந்துபவர்களை கட்டுப்படுத்த முயற்சிகள் மேற்கொல்ளப்பட்டுவருகின்றன.
-
- 10 replies
- 1.8k views
-
-
இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர வாட்ஸ்அப் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் பகிர்க இதை பகிர இந்த வெளிய…
-
- 0 replies
- 510 views
-
-
29 SEP, 2023 | 02:04 PM சுமார் 6,000 ஆண்டுகள் பழமையானதாக கருதப்படும் புல்லால் நெய்யப்பட்ட செருப்புகளான ஐரோப்பாவின் பழமையான காலணிகளை தென்மேற்கு ஸ்பெயின் அண்டலூசியாவில் உள்ள வௌவால் குகையில் கண்டறிந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 19 ஆம் நூற்றாண்டில் சுரங்கத் தொழிலாளர்களால் கொள்ளையடிக்கப்பட்ட ஸ்பெயினில் உள்ள வௌவால் குகையில் கண்டுபிடிக்கப்பட்ட பழங்காலப் பொருட்களில் அவை அடங்கும். ஆராய்ச்சியாளர்கள் கூடைகள் மற்றும் கருவிகளின் தொகுப்பையும் ஆய்வு செய்தனர். கண்டுபிடிக்கப்பட்ட பொருள்கள் தெற்கு ஐரோப்பாவில் மிகவும் பழமையான மற்றும் சிறந்த பாதுகாக்கப்பட்ட தாவர இழை என ஆய்வின் இணை ஆசிரியர் மரியா ஹெர்ரெரோ ஓட்டல் கூறினார். …
-
- 0 replies
- 328 views
- 1 follower
-
-
கேரளாவில் ரயிலில் அடிபட்டு பா.ஜ.க பெண் நிர்வாகி பலியானதை இரு வாலிபர்கள் படம்பிடித்து பேஸ்புக்கில் வெளியிட்டதுபரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேராளவின் கோட்டயம் நகராட்சியின் 19–வது வார்டு பா.ஜனதா கட்சியின் நிர்வாகி லைலா தங்கச்சன்(47). இவர் நேற்று தனது வீடு அருகே உள்ள ரெயில்வே தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றார். அப்போது திடீரென அந்த வழியாக கோட்டயத்தில் இருந்து எர்ணாகுளம் செல்லும் ரெயில் வேகமாக வந்தது. இதை கண்டதும், அதிர்ச்சியான லைலா தங்கச்சன் தண்டவாளத்திலேயே மயங்கி விழுந்தார். இதை பார்த்த ரயில்வே கேட் கீப்பர் தோமஸ் வஸ்தியான் சிவப்பு கொடி காட்டி ரயிலை நிறுத்த முயன்றார். ஆனால் அதற்குள் வேகமாக வந்த ரயில் லைலா தங்கச்சன் மீது மோதி விட்டதால், அவர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி…
-
- 0 replies
- 325 views
-
-
இராமர் பாலம் என்பது கட்டுக் கதை - மறவன்புலவு க. சச்சிதானந்தன் (ஐ.நா. முன்னாள் ஆலோசகர், கடலியலாளர்) அறிவியல் பார்வைக்கு முன் உடைந்து நொறுங்கும் கற்பனைக் கதைகள் ஆற்று முகத்துவாரத்தில் நீர்வரத்து குறைந்த காலங்களில் திட்டுகள் ஏற்படுவதுண்டு. இது போன்று திட்டு, ஆழம் குறைந்த கடலிலும் உருவாகின்றது. அந்த மாதிரியான ஒரு திட்டைத்தான் இராமர் பாலம் என்றும் மனிதன் கட்டினான் என்றும் கூறுகின்றனர். இந்தியாவையும் இலங்கையும் சந்திக்கும் மணல் திட்டுகள் தெற்கு, வடக்கு என இரண்டு இடத்தில் உள்ளன. தெற்கே உள்ள மணல் திட்டுகளை இராமர் கட்டினார் என்றால், வடக்கே உள்ள மணல் திட்டுகளை யார் கட்டியது? ஆனாலும், இந்தச் சிக்கலை மேலோட்டமாகச் சொல்வது நன்றாக இருக்காது. அறிவியல் பூர்வமாகவும் புவியி…
-
- 4 replies
- 2.4k views
-
-
பயங்கரவாதத்திற்கு எதிரான போரும் அவுஸ்திரேலிய பிரதமரும் பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தமானது ஒருபோதுமே முடிவுறப்போவதில்லை எனவும் பல தசாப்த காலங்களுக்கு அது நீண்டு செல்லும் என்றும் அவுஸ்திரேலியப் பிரதமர் ஜோன் ஹோவார்ட் தனது நாட்டு மக்களை எச்சரித்திருப்பதுடன் இஸ்லாமிய அடிப்படை வாதத்தினால் ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தலானது தொடர்ந்து வளர்ச்சியடைந்து செல்வதாகவும் சுட்டிக்காட்டியிருக்கிறார். எல்லைகளற்ற இந்த அச்சுறுத்தலின் யதார்த்த நிலை தொடர்பாக விழித்தெழுமாறு தனது நாட்டு மக்களுக்கு அவர் அழைப்பும் விடுத்துள்ளார். தங்களின் வாழ்க்கை முறை மீது இஸ்லாமிய அடிப்படை வாதம் வெறுப்புணர்வைக் கக்குவதாக சாடியுள்ளதுடன் மத சுதந்திரத்தை இந்த அடிப்படைவாதம் அழித்து நாசமாக்குவதுடன் நின்றுவிடா…
-
- 0 replies
- 789 views
-
-
இலங்கை பயணத்தை தவிர்க்குமாறு இங்கிலாந்து அறிவுரை! அத்தியாவசியமான பயணத்தைத் தவிர்த்து இலங்கைக்கு பயணம் செய்வதை இயன்றவரை தவிர்த்துக்கொள்ளுமாறு தன்னாட்டு மக்களுக்கு இங்கிலாந்து அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. கடந்த ஞாயிறு ஈஸ்டர் தினமன்று இலங்கையின் பல இடங்களில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவங்களின் காரணமாக 350 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன் 500 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகள் மீது நடத்தப்பட்ட இத்தாக்குதல்களின்போது உயிரிழந்தவர்களில் 8 பேர் பிரித்தானியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வெளிநாட்டவர்கள் விஜயம் செய்யும் இடங்கள் உட்பட மேலும் பல இடங்களில் கூடுதல் தாக்குதல்களை தீவிரவாதிகள் முன்னெடுப்பதற்கான வாய்ப்புகள் இன…
-
- 0 replies
- 513 views
-
-
100,000 அவுஸ்ரேலிய டொலர் மதிப்புள்ள தங்க கட்டிகள் கண்டுபிடிப்பு! அவுஸ்ரேலியாவில் 100,000 அவுஸ்ரேலிய டொலர் மதிப்புள்ள தங்க கட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கல்கூர்லி பகுதியிலுள்ள தங்கச் சுரங்கத்திற்கு அருகில் இந்த தங்க கட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பொழுதுபோக்காக எதையோ தேடிச் செல்லும் போது இவை கண்டுபிடிக்கப்பட்டதாக, தங்க கட்டிகளை கண்டுபிடித்தவர் குறிப்பிட்டுள்ளார். அவுஸ்ரேலியாவில் அகழப்படும் முக்கால்வாசித் தங்கம் கல்கூர்லியிலும், அதனைச் சுற்றியப் பகுதிகளிலும் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/100000-அவுஸ்ரேலிய-டொலர்-மதிப்ப/
-
- 0 replies
- 356 views
-
-
அமெரிக்கா: டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு – நேரில் கண்டவர்கள் கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், கேரி ஒடோனொயு, பெர்ண்ட் டெபுஷ்மேன் & மேட் மர்ஃபி பதவி, பிபிசி நியூஸ், பட்லர், பென்சில்வேனியா மற்றும் லண்டனில் இருந்து 2 மணி நேரங்களுக்கு முன்னர் பென்சில்வேனியாவில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மேடையில் இருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டார். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, டொனால்ட் டிரம்ப் முகம் சுளித்தபடி, அவரது வலதுபுற காதில் கை வைத்திருப்பதை சம்பவத்தின் காணொளிக் காட்சி…
-
-
- 70 replies
- 5.7k views
- 2 followers
-
-
கனேடியப் பொருளாதார வளர்ச்சி வேகம் மந்த கதியில் செல்வதாக அண்மைய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.கடந்த ஏப்ரல் – ஜீன் ஆகிய மாதங்களுக்கிடைப்பட்ட காலப்பகுதியில், மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 0.5 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.தொடர்ச்சியாக கடந்த இரண்டு காலாண்டுகளாக வீழ்ச்சிப் போக்கைக் கொண்டிருந்த மொத்த உள்நாட்டு உற்பத்தியானது, முதலாவது காலாண்டில் 0.8 வீத வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. எதிர்வரும் ஒக்டோபர் 19 இல் நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலை எதிர்கொள்ள கனேடியப் பிரதமர் ஸ்டீபன் ஹார்பருக்கு இவ்வீழ்ச்சி நிலையானது பாரிய நெருக்கடியைத் தோற்றுவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.இதனால் தேர்தல் பிரசார நேரடி விவாதங்களில் கனேடியப் பொருளாதாரம் முக்கிய விடயமாகக்…
-
- 0 replies
- 546 views
-
-
இந்துசமுத்திரத்தை நோக்கி கவனத்தை திருப்பியுள்ளது ஐஎஸ்- இந்திய புலனாய்வு அமைப்பு சிரியா ஈராக்கில் ஏற்பட்டுள்ள தோல்விகளை தொடர்ந்து எஸ் அமைப்பு தனது கவனத்தை இந்து சமுத்திரத்தை நோக்கி திருப்பியுள்ளது இதன் காரணமாக இந்தியா இலங்கைக்கு ஆபத்துக்களை எதிர்கொள்ளவேண்டிய நிலையேற்படலாம் என இந்திய புலனாய்வு அமைப்பொன்று எச்சரிக்கை விடுத்துள்ளது. கேரள காவல்துறையினரிற்கு இந்திய புலனாய்வு அமைப்பு அனுப்பியுள்ள மூன்று கடிதங்களில் இந்த ஆபத்து குறித்து சுட்டிக்காட்டியுள்ளது. ஈராக் சிரியாவில் தனது கட்டுப்பாட்டின் கீழ் காணப்பட்ட நிலங்களை இழந்த பின்னர் தங்கள் நாடுகளில் இருந்தபடியே வன்முறைகளில் ஈடுபடுமாறு ஐஎஸ் அமைப்பு தனது உறுப்பினர்களிற்கு வேண்டுகோள் விடுத்துவருகின்றது என இந்திய…
-
- 0 replies
- 413 views
-
-
அமெரிக்க ஜோர்ஜிஜா மாநிலத்தில் உயர்தர பாடசாலையில் துப்பாக்கி சூட்டில் நான்கு பேர் உயிரிழந்தனர். ஒன்பது படுகாயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 14 வயது மாணவனே துப்பாக்கி சூடு நடத்தியதாக சொல்லப்படுகிறது. கோடைகால விடுமுறை முடிந்து இன்று தான் பல பாடசாலைகள் தொடங்கியது. பாடசாலை எப்போது தொடங்கும் என்று காத்திருந்திருக்கிறார். https://www.cnn.com/us/live-news/apalachee-high-school-shooting-georgia-09-04-24/index.html
-
-
- 9 replies
- 629 views
- 2 followers
-
-
மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் அறிவிப்புகள் அனைத்தையும் தமிழிலும் வெளியிட வேண்டும் என்று அந்நாட்டு இந்தியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக, கோலாலம்பூரில் உள்ள ஸ்ரீ ஸ்ருதி மன்றத்தின் தலைவர் ததின் சேரி இந்திராணி சாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: மலேசியாவில் வசிக்கும் இந்தியர்களில் அதிகமானவர்கள் தமிழர்கள். இவர்கள் இந்தியாவிற்குச் செல்லும் போதும், இவர்களின் உறவினர்கள் மலேசியாவிற்கு வரும் போதும், விமான நிலையத்தில் மொழி தெரியாமல் திண்டாடுகிறார்கள். இதனால் கோலாலம்பூர் விமான நிலையத்தில் எ…
-
- 0 replies
- 750 views
-
-
அமெரிக்காவில் விமானத்தில் இருந்த இளைஞர் ஒருவர் திடீரென ஒசாமா பின்லேடனின் புகழ் பாடி, ஊழியர்களை தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் விமானம் உடனடியாக தரையிறக்கப்பட்டது. அமெரிக்காவின் ஆரிகன் மாநிலம் போர்ட்லேண்ட் நகரில் இருந்து டெக்சாஸ் மாநிலம் ஹூஸ்டனுக்கு கான்டினன்டல் ஏர்லைன்ஸ் விமானம் கடந்த வாரம் புறப்பட்டது. விமானத்தில் இருந்த பயணிகளுடன் சவுதி அரேபியாவை சேர்ந்த யாசீத் முகமது அபுநயன் (19) என்ற வாலிபரும் இருந்தார். விமானம் பறக்க தொடங்கிய பிறகு, அபுநயன் திடீரென எலக்ட்ரானிக் சிகரெட்டை பற்ற வைத்தார். ஒசாமா பின்லேடன் புகழ் பாடும் வரிகளையும் பெண்களுக்கு எதிராகவும் அவர் திடீரென பாட்டு பாடி கோஷம் போட்டார். புகை பிடிப்பதையும் கோஷம் போடுவதையும் நிறுத்துமாறு பய…
-
- 0 replies
- 651 views
-
-
இந்தியா இல்லாமல் உலகநாடுகளின் தொடர்புகளை ஏற்படுத்த முடியாது: மார்க் சக்கர்பெர்க்! புதுடெல்லி: இணையதள பயன்பாடு அதிகரித்துள்ள இந்தக் காலகட்டத்தில், இந்தியாவின் தொடர்பு இல்லாமல் உலகநாடுகளின் தொடர்புகளை ஏற்படுத்தமுடியாது என்று ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர் பெர்க் தெரிவித்துள்ளார். இந்தியா வந்துள்ள மார்க், டெல்லி ஐஐடி மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், "இந்தியாவில் இருப்பது உற்சாகமாக இருக்கிறது. புது ஆற்றலை கொடுக்கிறது" என்று கூறினார். பின்னர் அவரிடம் மாணவர்கள் கேட்ட கேள்விகளும் அவற்றுக்கு மார்க் அளித்த பதில்களும் வருமாறு: இந்தியா வர வேண்டும் என்ற ஆர்வம் ஏன் வந்தது? ஃபேஸ்புக்கின் முக்கிய மார்க்கெட் இந்தியா. இங்குதான்…
-
- 1 reply
- 1.3k views
-