உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26693 topics in this forum
-
ஆப்கானிஸ்தானில் அல்-கொய்தா, தலிபான்களுக்கு எதிராக அமெரிக்க கூட்டுப்படைகள் சண்டை நடத்தி வரும் வேளையில் ஆப்கன் அதிபர் ஹமீத் கர்சாயை, தலிபான் முக்கிய தலைவர்கள் திடீரென ரகசியமாக சந்தித்து பேசியது பரபரப்பினை ஏற்படுத்தி இருந்தனர். இப்பொழுது இவர் ஒரு தலிபான் நபர் அல்ல எனவும் இவர் நேச படைகளை ஏமாற்றி பணம் வேண்டி தலைமறைவாகி விட்டார். இது பெரிய அவமானமாக பார்க்கப்படுகின்றது. ஆப்கானிஸ்தானில் நிரந்தர அரசியல் தீர்வு ஏற்படுத்தும் பொருட்டு அதிபர் ஹமீத் கர்சாய் அமைதிக்குழுவினை நியமித்துள்ளார். இதில் பல்வேறு பிரிவினைவாத அமைப்புகள் உள்ளன. இந்நிலையில் தலிபான்கள்,மற்றும் அல்-கொய்தா அமைப்பைச் சேர்நத மூன்று முக்கிய தலைவர்கள் அதிபர் ஹமீத் கர்சாயை ரகசியமாக சந்தித்து பேசியுள்ளனர். இ…
-
- 0 replies
- 527 views
-
-
பிரித்தானியாவில் குளிர்காலத்தில் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் சாத்தியம் By T. SARANYA 07 OCT, 2022 | 01:18 PM பிரித்தானியாவில் எரிவாயு விநியோகம் குறைந்தால் குளிர்காலத்தில் மூன்று மணிநேரம் வரை மின்சாரத்தை இழக்க நேரிடும் என மின்சாரம் மற்றும் எரிவாயு பயன்பாட்டு நிறுவனமான தேசிய கிரிட் எச்சரித்துள்ளது. இது ஒரு "சாத்தியமற்ற" சூழ்நிலை என தெரிவித்துள்ளதுடன் நெருக்கடி அதிகரித்தால் விநியோக குறுக்கீடுகள் சாத்தியமாகும் எனவும் தெரிவித்துள்ளது. மின்வெட்டு தொடர்பில் பொது மக்களுக்கு முன்கூட்டியே அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக தேவை உள்ள நேரங்களில், ஒருவேளை காலை அல்லது மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை மின்வ…
-
- 5 replies
- 811 views
- 1 follower
-
-
யுக்ரேன் போர்: ரஷ்யாவிடம் ஆயுதங்கள் தீர்ந்துவிட்டதா? சமீபத்தில் கிடைத்த முக்கிய தடயங்கள் உண்மை கண்டறியும் குழு பிபிசி நியூஸ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, யுக்ரேன் தலைநகர் கீயவ் மீது நடந்த ஏவுகணை தாக்குதலில் கார்கள் மற்றும் கட்டடங்கள் அழிக்கப்பட்டன யுக்ரேன் மீது அடுத்தடுத்த தொடர் தாக்குதல்களை ரஷ்யா நடத்திய நிலையில், ரஷ்யாவுக்கு ஆயுதப் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாக சில பாதுகாப்பு வல்லுநர்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர். என்னென்ன ஆயுதங்களை ரஷ்யா பயன்படுத்துகிறது? சமீபத்திய நாட்களில் ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல்க…
-
- 6 replies
- 906 views
- 1 follower
-
-
காஷ்மீர் மனித உரிமை நிலவரம்: ஐ.நா. கவலை இந்திய நிர்வாகத்துக்கு உட்பட்ட காஷ்மீர் மற்றும் தீவிரவாத நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட வடகிழக்கு மாநிலங்களில் பாதுகாப்புப் படையினருக்கு பெருமளவு அதிகாரங்களை வழங்கும் சிறப்புச் சட்டங்கள் விலக்கிக் கொள்ளப்பட வேண்டும் என மனித உரிமைகளுக்கான ஐ.நா. மன்ற சிறப்புப் பிரதிநிதி மார்கரெட் செகாக்யா வலியுறுத்தியுள்ளார். படையினருக்கு எதிராக காஷ்மீரில் அண்மையில் பெரும் ஆர்ப்பாட்டங்களும் நடந்திருந்தன. ஏற்கெனவே பல முறை ஐ.நா. மனித உரிமைப் பிரிவினர் காஷ்மீரில் பயணம் மேற்கொள்ள அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், முதல் முறையாக இந்திய அரசு தற்போது அவர்களது பயணத்துக்கு அனுமதியளித்திருந்தது. அதையடுத்து, காஷ்மீர், ஒரிஸா, மேற்கு வங்கம், அஸ்ஸாம்,…
-
- 0 replies
- 831 views
-
-
பாரிஸ் நகரில் துப்பாக்கிச்சூடு, மூவர் மரணம் 23 Dec 2022 20:48 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 23 Dec 2022 21:07 பாரிஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரிசில் வெள்ளிக்கிழமையன்று (23 டிசம்பர்) மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் குறைந்தது மூவர் மாண்டனர். மேலும் சிலர் காயமடைந்தனர். இச்சம்பவம் பாரிசின் மத்திய வட்டாரத்தின் ஸ்ட்ராஸ்பொர்க்-செயின்ட டெனிஸ் பகுதியில் நேர்ந்தது. சந்தேக நபரான 69 வயது நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். காவல்துறையினர் சந்தேக நபரைக் கைதுசெய்தபோது அவர் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. தாக்குதலில் பயன்படுத்தப்பட்டதாகச் சொல்லப்படும் ஆயுதத்தையும் காவல்துறையினர்…
-
- 13 replies
- 1.2k views
-
-
சென்னை: பள்ளி ஆசிரியர் ஒருவர் தங்களுக்கு செக்ஸ் டார்ச்சர் தந்து வருவதாக 20க்கும் மேற்பட்ட மாணவிகள் இன்று காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதையடுத்து அந்த ஆசிரியர் தலைமறைவாகிவிட்டார். சென்னை கொருக்குப்பேட்டையில் உள்ள அரசு தியாகராஜர் மேல் நிலைப் பள்ளியைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட மாணவிகள் இன்று காலை காவல் நிலையத்துக்கு வந்து புகார் கொடுத்தனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது: நாங்கள் 8ம் வகுப்பு படித்து வருகிறோம். எங்களது கணக்கு ஆசிரியரான சுப்புராஜ் (45) தினமும் எங்களிடம் தவறாக நடக்கிறார். வகுப்பு முடிந்ததும் மாணவர்களை போகச் செச்லிவிட்டு மாணவிகளை மட்டும் இருக்கச் சொல்வார். நாங்கள் மட்டும் இருக்கும்போது எங்களிடம் செக்ஸ் வார்த்தைகளை பயன்படுத்தி அசிங்கமாக பேசுவார்…
-
- 0 replies
- 1k views
-
-
பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பர்க் இம்மாதம் இந்தியா வருகிறார்! [Thursday 2014-10-02 08:00] இணைய வரைபடத்தில் இந்தியாவின் முக்கித்துவம் அதிகரித்து வருவதன் இன்னொரு அடையாளமாக பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பர்க் இம்மாதம் இந்தியா வருகிறார். இண்டெர்நெட்.ஆர்க் அமைப்பின் முதல் மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா வரும் ஜூக்கர்பர்க், பிரதமர் நரேந்திர மோடியையும் சந்தித்து பேசுகிறார். சர்வதேச தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமை அதிகாரிகள் இந்தியாவை தேடி வரும் காலம் இது. அண்மையில் மின்வணிக ஜாம்பவானான ஜெப் பெசோஸ் இந்தியா வந்திருந்தார். இதே போல் மைக்ரோசாப்ட் சி.இ.ஓ சத்யா நாதெள்ளாவும் இந்தியா வந்தார். அதற்கு முன்னர் ஆண்ட்ராய்டு ஒன் போன் அறிமுகத்திற்கான கூகிள் நிறுவனத்தின் சுந…
-
- 0 replies
- 529 views
-
-
தமிழ்நாட்டில் பிறந்து அமெரிக்க குடியுரிமை பெற்ற தனது மகனை இந்தியா வந்து தன்னை சந்திக்க இந்திய நடுவணரசு அனுமதிக்க வேண்டும் என்று தமிழ்நாட்டைச் சேர்ந்த தாயார் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறார். தமிழ்நாட்டின் திருச்சியைச் சேர்ந்த முத்துவேல் செல்லையா அவர்கள் 1978 ஆம் ஆண்டு அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்து அங்கே வானிலை ஆராய்ச்சித் துறையில் பணிபுரிந்து வருகிறார். அமெரிக்க குடியுரிமை பெற்றவரான இவர், பல ஆண்டுகளாக வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் முக்கிய பொறுப்புக்களிலும் இருந்துவருகிறார். 1978 முதல் 1998 வரை இவர் பலமுறை இந்தியா வந்து தமிழ்நாட்டில் இருக்கும் தனது தாயார் பாப்பம்மாள் உட்பட தனது உறவினர்கள் அனைவரையும் சந்தித்து வந்தார். அனால் 2…
-
- 1 reply
- 1.3k views
-
-
பதவி விலகிய எகிப்திய அதிபர் கொஸ்னி முபாரக்கினதும், அவரது குடும்பத்தினரதும் சொத்துக்கள் கோடான கோடி சுவிஸ் வங்கியில் குவிக்கப்பட்டுள்ளன. இச்சொத்துக்கள் அனைத்தும் உடனடியாக முடக்கம் செய்யப்பட்டு உறை நிலையில் வைக்கப்படும் என்று சுவிஸ் வங்கியின் உயர் அதிகாரி லாஸ் குனூசல் என்பவர் ரூற்றஸ் செய்தித்தாபனத்திற்கு தெரிவித்துள்ளார். முபாரக் குடும்பத்தினர்க்கு 40.000 கோடி அமெரிக்க டாலர்கள் சுவிஸ் வங்கியில் வைக்கப்பட்டுள்ளது. ( 220 மில்லியாட் குறோணர்கள் ) அதுபோல முபாரக்கிற்கின் பெயரில் மட்டும் 10.000 கோடி டாலர்கள் குவிக்கப்பட்டுள்ளது. சட்ட முரணாக சுவிஸ் வங்கியில் பணம் குவிப்போர் குறித்த கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள குளோபல் பைனான்சியல் இன்ரிகிரிட்ரி தாபனம் மேலும் பலரை கண்காணித்து வருகிற…
-
- 5 replies
- 1.3k views
-
-
இஸ்ரேல் இராணுவம் நடத்திய தாக்குதலில் ஒன்பது பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பு! ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேல் இராணுவம் நடத்திய தாக்குதலில் ஒரு வயதான பெண் உட்பட ஒன்பது பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதாக பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் அவர்களை ஆம்புலன்ஸ்கள் அணுக முடியவில்லை எனவும் பலஸ்தீன சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். அதேவேளை உள்ளூர் மருத்துவமனையின் குழந்தைகள் பிரிவு இஸ்ரேலிய கண்ணீர்ப்புகைக் குண்டுகளால் தாக்கப்பட்டதாக அவர் மேலும் கூறினார். பலஸ்தீன போராளிக் குழுக்களான ஹமாஸ் மற்றும் இஸ்லாமிய ஜிஹாத் அவர்கள் இஸ்ரேலிய துருப்புக்களுடன் ஃப்ளாஷ் பாயிண்ட் நகரத்தில் போரிட்டு வருவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.…
-
- 3 replies
- 415 views
-
-
ஜப்பானின் ஒசாகா நகரத்தில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தில் சிக்கி குறைந்தபட்சம் ஒரு குழந்தை உள்பட மூன்று பேர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. மக்கள் அதிகமாக நடமாடும் காலை நேரத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தை அடுத்து அங்குள்ள விமான நிலையம் சில மணிநேரங்களுக்கு மூடப்பட்டது; ரயில் சேவைகள் தடைப்பட்டன மற்றும் தொழிற்சாலை பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டன. 6.1 என்ற அளவில் ஏற்பட்ட இந்த நி…
-
- 0 replies
- 299 views
-
-
கவர்ச்சியான கண்கள் உள்ள பெண்கள் கண்களை வெளியில் காட்ட தடை விதித்து சவுதி அரேபியாவில் புதிய சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த புதிய சட்டத்தின்படி கவர்ச்சியான கண்கள் உள்ள பெண்கள் அதை மறைக்கும் வகையில் பர்தா அணிய வேண்டும். இந்த சட்டத்தை கண்டித்து பலர் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இது குறித்து சவுதி அரசின் நல்லொழுக்க மேம்பாடு மற்றும் தீயவை தடுப்பு குழுவின் செய்தித் தொடர்பாளர் ஷஏக் மோத்லப் அல் நபத் கூறுகையில் :- கண்களை மறைக்குமாறு அதிலும் கவர்ந்திழுக்கும் கண்களை மறைக்குமாறு குழு உறுப்பினர்கள் பெண்களிடம் தெரிவிப்பார்கள். அவ்வாறு செய்யும் உரிமை எங்களுக்கு உண்டு என்றார். இந்த குழுவின் புதிய சட்டத்திற்கு முஸ்லீம்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று இளவரசர்…
-
- 0 replies
- 2.6k views
-
-
சீபீஐ அமைப்பு செல்பேசி ஒதுக்கீடு தொடர்பான குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தது செல்பேசி அலைகள் ஒதுக்கப்பட்ட விவகாரம் தொடர்பான குற்றப்பத்திரிக்கையை சீபீஐ அமைப்பு சிறப்பு நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்தது. இந்த வழக்கை விசாரிப்பதற்கெனச் சிறப்பாக அமைக்கப்பட்ட நீதிபதி சயினி தலைமையிலான சிறப்பு நீதிமன்றத்தில் இன்று எண்பதாயிரம் பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யப்பட்டது. முன்னாள் மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ராசாவுக்கும், மேலும் எட்டுப் பேருக்கும் எதிராகவும், மூன்று தொலைத்தொட்ர்பு நிறுவனங்களுக்கும் எதிராகக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. இந்த விவகாரம் தொடர்பாகச் சிறையில் உள்ள ராசா உட்பட்ட நான்கு பேருக்கும் எதிராக, ஏமாற்றியமை, ஆவண…
-
- 1 reply
- 804 views
-
-
கத்தாரின் புதிய பிரதமராக மொஹம்மத் பின் அப்துல்ரஹ்மான் அல் தானி பதவியேற்பு Published By: SETHU 08 MAR, 2023 | 06:00 PM கத்தாரின் புதிய பிரதமராக மொஹம்மத் பின் அப்துல்ரஹ்மான் அல் தானி பதவியேற்றுள்ளார் இதுவரை பிரமராகவும் உள்துறை அமைச்சராகவும் பதவி வகித்த ஷேக் காலித் பன் கலீபா பின் அப்துல்அஸீஸ் அல் தானியின் ராஜினாமாவை கத்தார் ஆட்சியாளரான அமீர் ஷேக் தமீம் பின் ஹமட் அல் தானி ஏற்றுக்கொண்டுள்ளார் என அவரின் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதுவரை வெளிவிவகார அமைச்சராக பதவி வகித்த மொஹம்மத் பின் அப்துல்ரஹ்மான் அல் தானி புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார் எனவும் அவர் செவ்வாய்க்கிழiமை (07) பதவியேற்றுள்ளார் எனவும் கத்தார் அ…
-
- 0 replies
- 236 views
- 1 follower
-
-
தமிழக ஓட்டு போடும் எந்திரம் கவனிக்க! இது ஒரு மின் அஞ்சலாக எனக்கு வந்தது. ஓட்டு எந்திரத்திற்கு (அட நம்ம வாக்காளர்கள்தான்..) ஒரு சின்ன தகவல்.. குஜராத் அரசு சமீபத்தில் சிறந்த அரசுக்கான விருதை, சர்வதேச அரசாங்க விருது வழங்கும் கவுன்சிலிடமிருந்து பெற்றுள்ளது. இந்த கவுன்சில் குஜராத் அரசிற்கு உலகத்திலேயே இரண்டாவது(2 ) சிறந்த அரசு என்ற விருதை வழங்கி கவுரவித்துள்ளது.. இதற்கு ஒரு இந்தியராக சந்தோசப்படும் அதே வேளையில் தமிழர்களாக நாம் வெட்க்கப்படவேண்டியுள்ளது. ஏனென்றால், குஜராத்தில் இலவசங்கள் கிடையாது, ஓட்டுக்கு பணம் கிடையாது. டாஸ்மாக் கிடையாது(மது விலக்கு அமல்படுத்தப்பட்ட மாநிலம்). கரண்ட் க…
-
- 2 replies
- 607 views
-
-
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டனம் அருகே நடுக் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தி, மீனவர்களை கடுமையாக தாக்கிக் காயப்படுத்தினர். கோட்டைப்பட்டனத்திலிருந்து 16ம் தேதி ஆரோக்கியசாமி, மருத்தி, ராசப்பன் உள்ளிட்ட நான்கு மீனவர்கள் 2 படகுகளில் மீன் பிடிக்கச் சென்றனர். இவர்கள் அய்யன்பட்டி என்ற மீனவ கிராமத்øத் சேர்ந்தவர்கள். கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு இலங்கை கடற்படையினர் வந்து தமிழக மீனவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் மீனவர்களின் ஒரு படகு உடைந்தது. இதையடுத்து நான்கு மீனவர்களும் தாங்கள் வந்த இன்னொரு படகில் ஏறித் தப்பினர். ஆனால் படகில் இருந்த மீனவர்களை இ…
-
- 0 replies
- 715 views
-
-
பெங்களூரு: டிவிட்டர் மூலம் ஐ எஸ் அமைப்பை நடத்தியதாக கைதான பெங்களூரு ஐ எஸ் அமைப்பைச் சேர்ந்த வாலிபர் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது உள்ளிட்ட பல்வேறு பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. ஈராக் மற்றும் சிரியாவின் ஒரு பகுதியைக் கைப்பற்றியுள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் அந்த பகுதியை இஸ்லாமிய நாடாக அறிவித்து உள்ளனர். உலகின் மற்ற நாடுகளிலும் தங்கள் இயக்கத்தின் செயல்பாடுகளைத் தொடங்கும் முயற்சிகளில் ஐ.எஸ். அமைப்பினர் தீவிரம் காட்டி வருகின்றனர். அவர்களது இந்த திட்டத்துக்கு டிவிட்டர், ஃபேஸ் புக் போன்ற சமூக இணையத் தளங்களை பயன்படுத்தி வருகின்றனர் என்ற தகவல் இந்தியாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக டிவிட்டர் இணையதளத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்காகப் பல கணக்குகள் …
-
- 3 replies
- 1.3k views
-
-
வியட்நாம் போர் நாயகனும் அமெரிக்க செனட்டருமான ஜான் மெக்கைன் காலமானார் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க ஜான் மெக்கைன், வியட்நாம் போரின் நாயகனாகவும் பின்னர் அமெரிக்க செனட்டராகவும் இருந்த குடியரசு கட்சியின் முன்னாள் அதிபர் வேட்பாளர் இன்று காலமானார். அவருக்கு வயது 81. படத்தின் காப்புரிமைEPA கடந்த ஜூலை 2017-ல் அவருக்கு மூளையில் புற்றுநோய் கட்டி தீவிரமான அளவில் இருப்பத…
-
- 0 replies
- 396 views
-
-
மியான்மர் கடற்பகுதியில் மிதக்கும் 'பேய் கப்பல்' இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணிநேரங்களில் நடைபெற்ற முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகின்றோம். மியான்மர் கடற்பகுதியில் மிதக்கும் 'பேய் கப்பல்' படத்தின் காப்புரிமைYANGON POLICE/FACEBOOK மியான்மரின் யங்கூன் கடற்பகுதியில் சந்தேகத்திற்குரிய பெரிய துருப்பிடித்த கப்பல் ஒன்று நின்று கொண்டிருந்தத…
-
- 0 replies
- 575 views
-
-
கிரிமியாவின் தொழில்நுட்ப கல்லூரியில் பயங்கரவாத தாக்குதல்- பத்திற்கும் மேற்பட்டவர்கள் பலி உக்ரைனிடமிருந்து ரஸ்யா கைப்பற்றிய கிரிமியாவில் கல்லூரியொன்றில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 10ற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கேர்ச் நகரில் உள்ள தொழில்நுட்ப கல்லூரியில் இனந்தெரியாத பொருள் வெடித்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரஸ்ய பாதுகாப்பு படையதிகாரியொருவர் இது பயங்கரவாத செயல் என குறிப்பிட்டுள்ளார். வெடிபொருளொன்றே வெடித்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டவர்கள் மாணவர்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன இதேவேளை உள்ளுர் தொலைக்காட்சியொன்று ஆயுதம் தாங்கிய நபர்கள் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர், கல்லூரியில் பல உடல்க…
-
- 1 reply
- 380 views
-
-
வீதிக்கு வந்த குடும்பச் சண்டை 1971 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் வெற்றிபெறும் தி.மு.க. தோல்வியைத் தழுவும் என்று எல்லோரும் எதிர்பார்த்த நேரத்தில் மிருக பலத்துடன் அறுதிப் பெரும்பான்மை பெற்று வெற்றிபெற்றது தி.மு.க. இதையடுத்து "தி.மு.க.வை இனி யாராலும் அழிக்க முடியாது. தி.மு.க. வினரே அதை செய்ய நினைத்தால் தவிர" என அப்போதைய ஊடகங்கள் விமர்சனம் செய்தன. அந்த விமர்சனத்திற்கு தற்போது வடிவம் கிடைத்துள்ளது. "என் வாழ்க்கையில் மகிழ்ச்சி என்பது தொடர்ந்து 24 மணிநேரம் கூட நீடித்ததில்லை. அப்படியே நீடித்தாலும் அதை தீப்பந்தம் கொண்டு சுட்டுப் பொசுக்குபவர்கள் தொலைவில் இருக்கும் எதிரிகளாகவும் இருக்கலாம். அவர்கள் அதனை செய்ய தாமதமானால் அருகிலிருக்கும் அன…
-
- 2 replies
- 1.1k views
-
-
Published By: RAJEEBAN 20 OCT, 2023 | 12:41 PM ஈராக்கில் உள்ள அமெரிக்க இராணுவதளங்களை இலக்குவைத்து ரொக்கட் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள்காட்டி ரொய்ட்டர் இதனை தெரிவித்துள்ளது. அய்ன் அல்அசா விமானப்படை தளத்திற்குள் பாரியவெடிப்பு சத்தங்கள் கேட்டன ஈராக்கிய படையினர் அந்த விமானதளத்தை மூடி சோதனைகளை ஆரம்பித்துள்ளனர் என தெரிவித்துள்ள ரொய்ட்டர் உயிரிழப்புகள் குறித்து விபரங்கள் வெளியாகவில்லை எனவும் செய்தி வெளியி;ட்டுள்ளது. கடந்த வாரம் ஈரானிற்கு நெருக்கமான ஈராக்கிய குழுக்கள் ஹமாஸ்விவகாரத்தில் அமெரிக்கா இஸ்ரேலிற்கு ஆதரவளிப்பதற்காக அமெரிக்காவின் நிலைகளை தாக்கப்போவதாக எச்சரித்திருந்தது. ஈரா…
-
- 0 replies
- 200 views
- 1 follower
-
-
தமிழ்நாடு தமிழ்நாடு இந்தியாவின் 28 மாநிலங்களில் ஒன்று. இது இந்தியத் துணைக்கண்டத்தின் தென்முனையில் உள்ளது. இதன் ஆட்சிப்பகுதி எல்லைகளாக மேற்கிலும் வடக்கிலும் கேரளா, கர்நாடகம் மற்றும் ஆந்திர மாநிலங்கள் உள்ளன. மத்திய அரசுப்பிரதேசமான புதுச்சேரி பகுதிகளைச் சுற்றிலும் தமிழ்நாடு தன் எல்லைகளைக் கொண்டுள்ளது. எல்லைகள் தமிழ்நாட்டின் புவியியல் எல்லைகளாக வடக்கே கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடரும், மேற்கே மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் நீலமலை, ஆனை மலை , பாலக்காடு கணவாயும் கிழக்கில் வங்காள விரிகுடாக் கடலும், தென்கிழக்கில் மன்னார் வளைகுடாவும், தெற்கில் இந்தியப் பெருங்கடலும் உள்ளன. மதராஸ் மாகாணம் தமிழகம் முன்பு ஆங்கிலத்தில் மெட்ராஸ் ஸ்டேட் என்றும் தமிழில் மதராஸ் மாகாணம் என்றும…
-
- 23 replies
- 30.9k views
-
-
பட மூலாதாரம்,LEANDRO PRAZERES / BBC NEWS BRAZIL படக்குறிப்பு, கயானாவில் எண்ணெய் வளம் மூலம் கிடைக்கும் பணம் நாட்டின் பொருளாதாரத்தில் முன்னெப்போதும் இல்லாத ஏற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கட்டுரை தகவல் எழுதியவர், லியாண்ட்ரோ ப்ரேஸரஸ் பதவி, பிபிசி செய்தி பிரேசில் 28 நிமிடங்களுக்கு முன்னர் சகோதரர்கள் ஷிவ் மற்றும் ஹேமந்த் 1982இல் உலகின் ஏழ்மையான நாடுகளில் ஒன்றான கயானாவை விட்டு வெளியேறி கனடாவுக்குச் சென்ற போது அவர்களது வயது 19 மற்றும் 16. ஒரு நல்ல வாழ்க்கைக்காக ஆயிரக்கணக்கான கயானா இளைஞர்கள் என்ன செய்தார்களோ அதையே அவர்களும் அப்போது செய்தனர். வட அமெரிக்கா சென்று தங்களுக்கென குடும்பங்களை உருவாக்கி வாழ…
-
- 0 replies
- 569 views
- 1 follower
-
-
சீக்கிய பிரிவினைவாதி படுகொலையை அடுத்து, கனடாவுடன் உறவில் கடும் விரிசல் ஏற்பட்டிருந்தாலும் பருப்பு இறக்குமதி அளவை இந்தியா இருமடங்கு அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியாகியுள்ளது. பருப்பு இறக்குமதி உற்பத்தியில் ஏற்பட்ட பற்றாக்குறை காரணமாக இந்தியாவை வெளிநாட்டு கொள்முதல்களை அதிகரிக்க தூண்டியதாக கூறுகின்றனர். சீக்கிய பிரிவினைவாதி ஹர்தீப் சிங் சஜ்ஜர் படுகொலையில் இந்தியாவின் பங்கு தொடர்பில் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளிப்படையாக குற்றஞ்சாட்டியிருந்தார். @reuters தங்களிடம் போதுமான ஆதாரங்கள் இருப்பதாகவும் ட்ரூடோ நாடாளுமன்றத்தில் பதிவு செய்தார். ஆனால் அந்த குற்றச்சாட்டுகளை இந்தியா மறுத்ததுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான தூதரக உறவுகள் பாதிப்புக்குள்ளானது. …
-
-
- 1 reply
- 471 views
-