உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26693 topics in this forum
-
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் பதவிக்காலம் இந்த ஆண்டுடன் முடிவடைகிறது. இதனையடுத்து புதிய அதிபரை தேர்ந்தெடுக்க வரும் நவம்பர் மாதம் 8-ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதில் களம்காண உள்ள குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சி வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான பிரைமரி தேர்தல்கள் பல்வேறு மாகாணங்களில் நடந்து வந்தன. இதில் ஜனநாயக கட்சி வேட்பாளராக, முன்னாள் அதிபர் கிளிண்டனின் மனைவியும், முன்னாள் வெளியுறவு அமைச்சருமான ஹிலாரி கிளிண்டன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.தற்போது குடியரசு கட்சியை சேர்ந்த அமெரிக்க அதிபராக பொறுப்பு வகித்துவரும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா நேற்று முன்தினம் ஹிலாரி கிளிண்டனை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு அவரது வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். …
-
- 0 replies
- 322 views
-
-
கொரோனாவைரசிற்கு எதிராக எதிர்காலத்தில் உருவாக்கப்படும் மருந்தினை உலக நாடுகள் அனைத்தும் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு வழங்கப்படவேண்டும் என ஐநா தீர்மானமொன்றை நிறைவேற்றியுள்ள அதேவேளை இந்த தீர்மானத்தினை தடுப்பதற்கு முயற்சி செய்த அமெரிக்கா தோல்வியடைந்துள்ளது. கொரோனா வைரசிற்கு எதிராக எதிர்காலத்தில் உருவாக்கப்படும் எந்தவொரு தடுப்பு மருந்தினையும் சமமான ,தக்கதருணத்தில், திறமையான முறையில் பெற்றுக்கொள்வதை உறுதி செய்யவேண்டும் என மெக்சிக்கோ கொண்டுவந்த தீர்மானத்தினை ஐநாவின் 193 நாடுகள் ஆதரித்துள்ளன. அதனை தடுப்பதற்கு அமெரிக்கா முயன்றதாகவும் எனினும் அது சாத்தியமாகவில்லை எனவும் ஏஎவ்பி தெரிவித்துள்ளது. ஐநா தீர்மானத்தில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் முக்கிய பணி குறித்து குறிப்பிடப…
-
- 1 reply
- 641 views
-
-
தூத்துக்குடி: தூத்துக்குடியில் காகங்களை வேட்டையாடி, காடை பிரியாணி என்ற பெயரில் காக்கா பிரியாணி போடும் ஹோட்டல்களுக்கு சப்ளை செய்த அக்கா தம்பியை போலீஸார் கைது செய்தனர். தூத்துக்குடி தெர்மல் நகர் கடற்கரை பகுதியில் சிலர் காகங்களை வேட்டையாடி வருவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸார் அப்பகுதியை கண்காணித்தனர். இந்நிலையில் தெர்மல் நகர் கடற்கரைக்கு வந்த ஒரு பெண்ணும் வாலிபரும் ஏதையோ காகங்களுக்கு தூவினர். நூற்றுக்கும் மேற்பட்ட காகங்கள் அவற்றை கொத்தித் தின்றன. சிறிது நேரத்தில் அங்கேயே சுருண்டு விழுந்தன. மயங்கிய காகங்களை எடுத்து சாக்கு மூட்டையில் வைத்து கட்டினர். இதை பார்த்த போலீஸார் அவர்களை கையும் களவுமாக பிடித்து விசாரித்த்னர். அவர்கள் இருவரும் ராமநாதப…
-
- 13 replies
- 4.9k views
-
-
ஊரடங்கு தளர்வால் ஏற்பட்ட விளைவு!' - எழுந்த வேகத்தில் மீண்டும் வீழ்ந்த தென் கொரியா? தென் கொரியாவில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்ட ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்ட நிலையில் அங்கு மீண்டும் வைரஸ் வெடிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸை மிகவும் சாதூர்யமாகக் கையாண்டு தங்கள் நாட்டையும் மக்களையும் காப்பாற்றிய நாடாக சர்வதேச அளவில் புகழப்பட்டு வந்தது தென் கொரியா. வைரஸ் கட்டுப்படுத்துதலில் அவர்களிடமிருந்து பிற நாடுகள் பாடம் கற்க வேண்டும் என ஐ.நாவும், உலக சுகாதார அமைப்பும் வெளிப்படையாக அறிவித்தன. இந்த அனைத்துப் புகழுக்கும் சவால் விடுக்கும் வகையில் தென் கொரியாவில் மீண்டும் கொரோனா வேகமாகப் பரவத் தொடங்கியுள்ளது. …
-
- 0 replies
- 470 views
-
-
அமெரிக்கா கருத்து கூறுவது முட்டாள்தனமானது : இந்தியா-சீனா எல்லைப் பிரச்சினையில் சீனா ஆவேசம் சிக்கிம், லடாக் உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில் சீனா ராணுவத்துக்கும் இந்திய ராணுவத்துக்கும் சிலபல பிரச்சினைகள் ஏற்பட்டு வருகிறது, இந்தியா அத்துமீறி தங்கள் பகுதியில் நுழைவதாக சீனா கூறிய குற்றச்சாட்டை இந்தியா கடுமையாக நிராகரித்தது. இந்திய எல்லைக்குள் சீனா நுழைவதாக இதற்கு முன்பாக இந்தியத் தரப்பினர் குற்றம்சாட்டியதும் குறிப்பிடத்தக்கது. இதனால் ஏற்பட்ட பதற்றத்தை தணிக்க இருநாட்டு ராணுவ அதிகாரிகளும் பேச்சு நடத்தியதில் பதற்றம் குறைந்தது. இந்நிலையில் அமெரிக்க அதிகாரி ஒருவர் இது தொடர்பாகக் கூறும்போது, “எல்லையில் உள்ள சுமுகமாக நிலையை சீனா பதற்றமான சூழலாக மாற்றுகிறது. அண்டை நா…
-
- 1 reply
- 1.1k views
-
-
நாகர் (இமாச்சல்) : இமாச்சல் பிரதேசத்தில் ஆடுகள் மூலம் குற்றவாளியை கண்டுபிடிக்கும் விசித்திரமான நடைமுறை, பாரம்பரியமாக பின்பற்றப் பட்டு வருகிறது.புதிய கண்டுபிடிப்புகள், வியக்கவைக்கும் அறிவியல் வளர்ச்சி என உலகம் எங்கேயோ போய் விட் டது. குற்றங்களை கண்டுபிடிப்பதற்கு மோப்ப நாய் சோதனை, தடயவியல் சோதனை என பல நவீன முறைகளை போலீசார் கையாண்டு வருகின்றனர். இருந்தாலும், பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பகுதிகளிலும், மற்றும் சில குக்கிராமங்களிலும் இதுபோன்ற பிரச்னைகளுக்கு எல்லாம், இன்னும் பழங்கால நடைமுறையைத் தான் பின்பற்றி வருகின்றனர்.குறிப்பாக, இமாச்சல பிரதேசத்தில் குலு மாவட்டத்தில் உள்ள நாகர் என்ற கிராமத்தில் குற்றவாளியை கண்டுபிடிக்க விசித்திரமான முறை கையாளப்பட்டு வருகிறது.இந்த கிராம…
-
- 4 replies
- 1.1k views
-
-
“இன்னொரு பிறவி இருப்பதாக கற்பனை செய்து கொண்டு சொல்லுங்கள், அடுத்த பிறவியில் என்னவாக இருக்க விரும்புவீர்கள் என்ற கேள்விக்கு, மனிதனாகப் பிறக்க விரும்ப மாட்டேன் என்று மார்க்ஸ் பதிலளித்தார்” என்று உயிர் ஓசை இணைய இதழில் தனது கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார் கவிஞர் சுகுமாரன். “மனிதனாகப் பிறக்க விரும்ப மாட்டேன்!” – வாழ்க்கையின் துன்பங்களால் நைந்து போன ஒரு மனிதன், களைத்துத் துவண்ட ஒரு தருணத்தில் சொல்லியிருக்கக் கூடிய வார்த்தைகள்! எனினும் மார்க்ஸ் இங்ஙனம் சொல்லியிருக்கக் கூடுமா? “இதுநாள் வரை தத்துவஞானிகள் உலகை வியாக்கியானம் செய்தார்கள். நமது பணி அதனை மாற்றியமைப்பதுதான்” என்று பிரகடனம் செய்த ஒரு மேதை, “இயற்கையின் நடத்தையை ஆளும் இயக்க விதிகளை மனிதன் கண்டு பிடித்துவிடல…
-
- 0 replies
- 664 views
-
-
டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் உள்ள சுங்க இலாகாவுக்கு சொந்தமான பெட்டகத்தில் இருந்து மேலும் 59 கிலோ தங்கம் மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுடெல்லி: புதுடெல்லியில் உள்ள இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில், பயணிகள் மூலம் கடத்தி வரப்படும் தங்கம் சுங்கத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டு அதிக பாதுகாப்பு நிறைந்த பெட்டகத்தில் சீல் வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த அறையில் நடந்த திடீர் சோதனையில், கடந்த இரண்டு ஆண்டுகளில் 83 கிலோ தங்கக் கட்டிகள் திருடப்பட்டு, அதற்கு பதில் தங்கத்தைப் போன்று மின்னும் போலியான மஞ்சள் நிற உலோகக் கட்டிகள் வைக்கப்பட்…
-
- 5 replies
- 451 views
-
-
சிரிய தலைநகர் டமாஸ்கஸ்சிற்கு அருகில் உள்ள புறநகர் பகுதியில் கழுத்து அரிந்த 30 தலையில்லா முண்டங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு, கடும் சித்திரவதை செய்யப்பட்ட பின்னர் கழுத்துக்கள் வெட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சிரியாவின் பார்சா பகுதியில் போராளிகளுக்கும், சிரிய படைகளுக்குமிடையே நடைபெற்ற மோதலின் பின்னர் சிரியப் படைகள் பின்தள்ளப்பட்ட பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சிரிய போர் தொடர்பான ஆய்வுகளின் பொதுக்குழு கூறும்போது கைதானவர்களின் அடையாளம் தெரியக்கூடாது என்பதற்காகவே தலைகள் வெட்டி அகற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தது, இவர்களின் கருத்துப்படி சுமார் 50 உடலங்கள் கிடப்பதாகக் கூறப்படுகிறது. இந்தக் கழுத்தறுப்பு வேலைகள் நேற்று நடைபெற்…
-
- 0 replies
- 506 views
-
-
இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 50 வயது பெண் ஒருவர், தனது 28 வயது துருக்கி காதலனுக்காக தனது வாழ்நாள் முழுவதும் சேமித்து வைத்திருந்த சொத்து முழுவதையும் இழந்து, தற்போது தனிமையில் தவித்துக் கொண்டிருக்கின்றார். இங்கிலாந்தைச் சேர்ந்த Pat Ekins என்ற 50 வயது பெண், Marmaris என்ற இடத்தில் 28 வயது முஸ்லீம் இளைஞர் Ibrahim Halin என்பவரை சந்தித்து உள்ளார். கண்டதும் அவர் மீது காதல் கொண்ட அந்த பெண், தனது காதலருக்காக Preston, Lancashire, என்ற இடங்களில் உள்ள தனது வீடுகளை தனது குடும்பத்தினர்களுக்கு தெரியாமல் விற்பனை செய்து அதில் கிடைத்த பணத்தை தனது காதலருக்கு கொடுத்துள்ளார். மேலும் தனது வாழ்நாள் முழுவதும் அவர் சேமித்து வைத்திருந்த £70,000 பணத்தையும் காதலரிடம் கொடுத்துள்ளார். இந்நிலையில் …
-
- 3 replies
- 559 views
-
-
சிரியாவில் 65 இளைஞர்கள் தலையில் சுட்டு படுகொலை சிரியாவில் கடந்த 22 மாதங்களாக நடைபெற்று வரும் உள்நாட்டு சண்டையில் பல்வேறு கொடுமைகள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன. சிரியாவின் வர்த்தக நகரமான அலெப்போவில் 65 இளைஞர்கள் நெற்றி மற்றும் தோள்பட்டையில் சுடப்பட்ட நிலையில் கொல்லப்பட்ட கிடந்தனர். கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள அந்த இளைஞர்களின் உடல்கள் அங்குள்ள குவெய்க் ஆற்றுப்பகுதியில் கிடந்துள்ளன. இந்த ஆற்றில் மேலும் சடலங்கள் தண்ணீருக்குள் மூழ்கி கிடக்கின்றன என்று போராளிகள் குழுவினர் தெரிவித்துள்ளனர். பஸ்தான் அல் காசர் மாவட்டத்தில் எங்களுக்கு ஆதரவாக செயல்பட்ட இளைஞர்களை, போராளிகள் கடத்தி வந்து சுட்டுக்கொன்றுள்ளனர் என்று அதிபர் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது. அப்பகுதிகளில் இது ப…
-
- 2 replies
- 404 views
-
-
கடல் நீர்மட்டம் இது தொடர்பான ஆராய்ச்சி மற்றும் தட்ப வெப்ப நிலையை துல்லியமாக அறிந்து கொள்ள உதவும் பி.எஸ்.எல்.வி., சி - 20 ராக்கெட் சரல் உள்ளிட்ட 7 சிறிய செயற்கைகோளுடன், வெற்றிகரமாக விண்ணில் சீறிப்பாய்ந்தது. நாட்டின் அறிவியல் முன்னேற்றத்தில் ஒரு மைல்கல்லான இந்த சாதனை வெற்றி நிகழ்வை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நேரில் பார்வையிட்டார். இந்த வெற்றியை ஜனாதிபதியும், விஞ்ஞானிகளும் மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டனர். இந்தியா - பிரான்ஸ் கூட்டு முயற்சியில் சரல் என்ற புதிய செயற்கைக் கோளை, இஸ்ரோ நிறுவனம் தயாரித்துள்ளது. விண்ணில் செலுத்துவதற்கான, 59 மணி நேர, கவுன்ட் டவுன் நேற்று முன்தினம் காலை துவங்கியது. கடல் சார்ந்த வானிலை : கடல் ஆராய்ச்சிக்காக, இந்த செயற்கை கோளை வடிவமைத்து உள்ளனர்.…
-
- 0 replies
- 433 views
-
-
கோபமடைந்த குடியேறிகள் கிரேக்க அலுவலகங்களுக்கு தீ வைப்பு லெஸ்போஸ் தீவில் உள்ள அகதிகள் மற்றும் குடியேறிகள், அங்குள்ள தாற்காலிக அலுவலகங்களுக்கு தீ வைத்துவிட்டதாக கிரேக்க போலீசார் தெரிவித்துள்ளனர். தஞ்சக் கோரிக்கை அடங்கிய விண்ணப்பத்தைப் பரிசீலிக்க தாமதம் ஏற்பட்டதால் 70 ஆர்ப்பாட்டக்கார்கள் கோபமடைந்து இதனை செய்துள்ளனர் பெரும்பாலும் பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தைச் சேர்ந்த 70 ஆர்ப்பாட்டக்கார்கள், தங்களது தஞ்சக் கோரிக்கை அடங்கி விண்ணப்பத்தைப் பரிசீலிக்க தாமதம் ஏற்பட்டதால் கோபமடைந்து இந்த நடவடிக்கையில் இறங்கியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அருகிலுள்ள பல்கேரியாவிலும், ஆயிரக்கணக்கான குடியேறிகளால் பிரச்சனை உள்ள நிலையில், ஹர்மன்லி நகர் அருகே உள்ள அகதி ம…
-
- 2 replies
- 327 views
-
-
அமெரிக்கர் அல்லாத 30 லட்சம் பேரை உடனடியாக வெளியேற்றுவேன்: டிரம்ப் உறுதி அமெரிக்காவில் வாழும் பிறநாடுகளைச் சேர்ந்த குடியேறிகள் 30 லட்சம் பேரை உடனடியாக வெளியேற்றப் போவதாக அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். வாஷிங்டன்: அமெரிக்காவில் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப் அமெரிக்காவில் வாழும் பிறநாடுகளைச் சேர்ந்த குடியேறிகள் 30 லட்சம் பேரை உடனடியாக வெளியேற்றப் போவதாக இன்று அதிரடியாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தொலைக்காட்சிக்கு டிரம்ப் அளித்த பே…
-
- 9 replies
- 684 views
- 1 follower
-
-
சிறீலங்காவில் வெளிப்படை ஆதாரங்களோடு மனித உரிமை மீறல்கள் நடந்தும்.. ஐநா மூவர் குழு அதனை அறியத்தந்தும்.. ஒரு வித நடவடிக்கையும் எடுக்க முன்வராத ஐநா மனித உரிமைகள் அமைப்பு..(UNHRC) வெறும் செய்மதிப் படங்களை வைச்சுக் கொண்டு வடகொரியா மீது மனித உரிமை மீறல் விசாரணை செய்யப் போகுதாம்..! (குறிப்பா சிறீலங்கா மீது குற்றம் கண்ட தருஷ்மனே இங்கும் சம்பந்தப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..!) வடகொரியா ஐநாவை மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரிக்க.. நாட்டின் உள் வர அனுமதிக்காது என்பதால் ஐநா செய்மதிகளைக் கொண்டு இந்த விசாரணைகளை மேற்கொள்ளப் போகுதாம்..! ஜப்பான் கொண்டு வந்த இந்தத் தீர்மானத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் உட்பட.. ஐநா மனித உரிமைகள் கவுன்சிலின் எல்லா 47 நாடுகளும் ஆதரவளித்துள்ளன…
-
- 5 replies
- 450 views
-
-
எயார் கனடா விமானம் 143-க்கு நடந்தது என்ன | பாகம்-1 தொடரும்
-
- 14 replies
- 1.1k views
-
-
மியன்மாரின் வடகிழக்கில் உள்ள ஷான் மாகாணத்தின் தலைநகர் லாஷியோவில் முஸ்லிம்கள் மற்றும் பௌத்தர்களிடையே மோதல் இடம்பெற்றுள்ளது. பெளத்த மதத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை பெற்றோல் ஊற்றி முஸ்லிம் ஒருவர் எரித்ததாக வந்த செய்தியை அடுத்து இந்த கலவரம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பெண் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவதுடன் அவரை எரித்த நபர் தற்போது கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து ஏற்பட்ட மோதலில் முஸ்லிம்களின் பள்ளிகள் மற்றும் கடைகளுக்கு தீவைக்கப்பட்டது. இதனால் கலவரம் நடைபெற்ற பகுதிகளில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. சமீபத்தில் மியன்மாரில் இடம்பெற்ற மதக்கலவரத்தில் 200-கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக…
-
- 0 replies
- 685 views
-
-
ஜேர்மனிய நாடாளுமன்றக் கட்டடத் தரவுகள் ரஷ்யாவிடம்- உளவாளி கண்டறியப்பட்டார்! ஜேர்மனின் பன்டெஸ்ரக் (Bundestag) நாடாளுமன்றக் கட்டடத்தின் தரைத் திட்டங்களை ரஷ்ய உளவுத் துறையினருக்கு அனுப்பிய ஒருவரை அந்நாட்டு சட்ட வல்லுனர்கள் கண்டறிந்துள்ளனர். அவர், பன்டெஸ்ரக்கின் கட்டத்தின் மின்சார உபகரணங்களைப் பராமரிப்பதற்காக அனுமதியளிக்கப்பட்ட ஒரு நிறுவனத்தில் பணியாற்றியதுடன் தனது பணியின்போது குறித்த கட்டடத்தின் திட்டங்களுடன் கூடிய கோப்புகளைப் பெற்றிருந்தார் என அரச வழக்கறிஞர் அலுவலகம் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது. இந்நிலையில், இந்தக் குற்றச்சாட்டுகள் ரஷ்யாவிற்கும் ஜேர்மனிக்கும் இடையிலான உறவை மேலும் மோசமாக்கக்கூடும் என சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன. சட்ட வல்லுனர்களின் …
-
- 0 replies
- 541 views
-
-
ஈராக்கில் தற்கொலை தாக்குதல் : 31 பேர் பலி ஈராக் தலைநகர் பாக்தாத்தின் வடக்கு பகுதியான டிக்ரிட்டில் நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில் 30 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன் 42 படுகாயமடைந்துள்ளனர். பொலிஸ் துறையை சேர்ந்த ரோந்து படையினரை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் தற்கொலைப் படையை சேர்ந்த ஐந்து பேர் காவல் அதிகாரியின் வீட்டினுள் நுழைந்து தாக்குதல் நடத்தினர் என சலாஹ_தீன் மாகாண சபையை சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். தற்கொலைப்படையை சேர்ந்த மூன்று பேர் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். எனினும், இரண்டு பேர் தங்கள் மீது கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்க செய்தனர் என அகமது அல்-கரீம் என்பவர் தெரிவித்துள்ளார். குண்டு…
-
- 0 replies
- 305 views
-
-
கலைஞர் வீட்டை முற்றுகையிட முயற்சி: 3 ஆயிரம் பேர் கைது ராமநாதபுரம் எஸ்.வி. பட்டினம், சோழகன் பேட்டையில் உள்ள பள்ளிவாசலில் தொழுகை நடத்துவது தொடர்பாக முஸ்லிம்களில் இருபிரிவினரிடையே பிரச்சனை ஏற்பட்டது. இது தொடர்பாக நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இந்த நிலையில், கடந்த 31-ம் தேதி மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகளும், போலீஸாரும் பள்ளிவாசலை பூட்டி சீல் வைத்தனர். மேலும், அங்கு தொழுகைக்கு வந்திருந்தவர்களும் கைது செய்யப்பட்டனர். இதற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் கண்டனம் தெரிவித்தனர். பள்ளிவாசல் சீல் வைக்கப்பட்டதை கண்டித்து, தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் கோபாலபுரத்தில் உள்ள முதல்வரின் இல்லத்தை முற்றுகையிடப் போவதாக இவர்கள் அறி…
-
- 0 replies
- 2.2k views
-
-
ரூபாய் மதிப்பு வீழ்ச்சி.. நாடாளுமன்றத்தில் பிரதமர் இன்று விளக்கம்! டெல்லி: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் சரிவை சந்தித்து வரும் நிலையில் நாட்டின் பொருளாதாரம் நெருக்கடிக்குள்ளாகி இருக்கிறது. இது தொடர்பாக மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மன்மோகன்சிங் நாடாளுமன்றத்தில் இன்று விளக்கம் அளிக்க இருக்கிறார். ராஜ்யசபாவில் நேற்று ரூபாய் மதிப்பு வீழ்ச்சி குறித்தும் பொருளாதார நெருக்கடி குறித்தும் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. அப்போது சபையில் இருந்த பிரதமர் மன்மோகன்சிங், சிரியா மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தலாம் என்று எதிர்பார்க்கப்படும் சூழலில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. இதுபோன்ற …
-
- 2 replies
- 1.2k views
-
-
ஆப்கானிஸ்தானில் தாலிபன் தலைவர்களுக்கு இடையே மோதல் வெடித்தது: அதிபர் மாளிகையில் குழப்பம் குடாய் நூர் நாசர் பிபிசி இஸ்லாமாபாத் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, முல்லா அப்துல் கனீ பராதர் (நடுவில்) ஆப்கானிஸ்தானில் புதிய அரசை கட்டியெழுப்புவது தொடர்பாக தாலிபன் தலைவர்களுக்கு இடையே பெரிய அளவிலான மோதல் வெடித்திருப்பதாக மூத்த தாலிபன் அதிகாரிகள் பிபிசியிடம் தெரிவித்துள்ளனர். தாலிபயன் இயக்கத்தின் இணை நிறுவனரும் மூத்த தலைவருமான முல்லா அப்துல் கனீ பராதருக்கும் தாலிபன் அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கும் ஒருவருக்கும் இடையே கா…
-
- 10 replies
- 836 views
- 1 follower
-
-
மாட்டுத் தீவன ஊழலில் பிகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என்று சிறப்பு நீதிமன்றம் தீர்பளித்துள்ளது. லாலு பிரசாத் யாதவ் இதே வழக்கில் அரசியல்வாதிகள், அதிகாரிகள் என 44 பேர் மீது குற்றங்காணப்பட்டுள்ளது. இவர்களுக்கான தண்டனை வரும் 3 ஆம் தேதி அறிவிக்கப்படும். தீர்ப்பை அடுத்து லாலு பிரசாத் யாதவ் ராஞ்சி மத்திய சிறையில் சரணடைந்தார். கடந்த 17 ஆண்டுகளாக இந்த வழக்கு நடந்து வருகிறது. கால்நடைகளுக்கான தீவனம் மற்றும் மருந்துகளை வாங்குவதில் ஊழல் நடைபெற்றதாக மத்திய புலனாய்வு நிறுவனமான சிபிஐ வழக்குத் தொடர்ந்திருந்தது. இந்த தீர்ப்பால் நீண்ட சிறை தண்டனையை எதிர்கொள்ளும் சூழலில் லாலு பிரசாத் யாதவ் உள்ளார். சமீபத்தில் வழங்கப்பட்ட உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பி…
-
- 0 replies
- 248 views
-
-
வடக்கு அயர்லாந்தில்... ஐரிஷ் கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு, ஐரோப்பிய ஒன்றிய டிஜிட்டல் கொவிட் சான்றிதல்! வடக்கு அயர்லாந்தில் வசிக்கும் மற்றும் தடுப்பூசி போடப்பட்ட ஐரிஷ் கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு, ஐரோப்பிய ஒன்றிய டிஜிட்டல் கொவிட் சான்றிதல் வழங்கப்படவுள்ளது. சர்வதேச பயணத்தை அனுமதிக்கும் தடுப்பூசி கடவுச்சீட்டு, ஜூலை மாதம் அயர்லாந்து குடியரசில் நடைமுறைக்கு வந்தது. இந்தநிலையில், டிஜிட்டல் கொவிட் சான்றிதல் அணுக வடக்கு அயர்லாந்தில் உள்ளவர்கள், தற்போது ஒன்லைனில் விண்ணப்பிக்கலாம். வடக்கு அயர்லாந்தில் உள்ள பெரும்பாலான ஐரிஷ் கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் குடியரசிற்கு வெளியே தடுப்பூசி போடப்பட்டதால் சான்றிதழை அணுக முடியவில்லை. இந்த நடவடிக்கை இரண்ட…
-
- 0 replies
- 277 views
-
-
இலங்கைத் தமிழர்களின் நிலைமையை அறியும் விதமாக ஐந்து நாள் பயணமாக இலங்கைக்குப் போன தமிழக எம்.பி-க்கள் குழு கடந்த 14-ம் தேதி ரிட்டர்ன் ஆனது. முதல்வரே சென்று இந்தக் குழுவை விமான நிலையத்தில் எதிர்கொண்டார். ''எம்.பி-க்கள் குழு இலங்கையின் நிஜமான நிலையைக் கண்டிப்பாக வெளிப்படுத்தாது. பொருத்தமற்ற சாக்குபோக்குகளைச் சொல்லி சமாளிக்கும் விதமாகத்தான் அந்தக் குழு அறிக்கை சமர்ப்பிக்கும்!'' என ஜெயலலிதா, வைகோ உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் சொல்லிக் கொண்டிருக்க... இந்தக் குழுவில் இடம் பெற்றிருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை சந்தித்தோம். பயணக் களைப்பு அகலாத நிலையில், நெஞ்சறையும் நிஜங்களை கொஞ்சமும் மறைக்காமல் குமுறலும் கொந்தளிப்புமாக நம்மிடம் கொட்டத் தொடங்கினார் திருமா…
-
- 8 replies
- 3.4k views
-