உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26696 topics in this forum
-
ஸ்ரீநகர்: உலகக் கோப்பை கிரிக்கெட் அரையிறுதி போட்டி யில், ஆஸ்திரேலியாவிடம், இந்திய அணி தோல்வி அடைந்ததை, காஷ்மீர் மக்கள், பட்டாசு வெடித்து கொண்டாடினர். பா.ஜ., ஆதரவுடன், மக்கள் குடியரசு கட்சியை சேர்ந்த, முப்தி முகமது சயீத் தலைமையிலான ஆட்சி, ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் நடக்கிறது.கடந்த 26ம் தேதி, சிட்னியில் நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் அரையிறுதி போட்டியில்,இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் விளையாடின.சமபலம் பொருந்திய இரு அணிகள் மோதியதில், இந்தியா 95 ரன் வித்தியாசத்தில், ஆஸ்திரேலியாவிடம் தோற்றது.இந்திய அணி தோல்வி அடைந்ததை அறிந்தரசிகர்கள், தற்கொலை வரை சென்றனர். ஆனால், இந்திய அணியை சேர்ந்த, உமேஷ் யாதவை, ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் ஸ்டார்க் அவுட்டாக்கி, பெவிலியனுக்கு அனுப்பிய போது, …
-
- 2 replies
- 445 views
-
-
http://www.youtube.com/watch?v=XStbVLNj2ng
-
- 0 replies
- 978 views
-
-
கனடாவில் ஒண்டோரியா அருகிலுள்ள லாசாலி என்ற இடத்தில் கார் நிறுத்தத்தில் வைக்கப்பட்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால், தீ மளமளவென வீடு முழுவதும் பரவி வீட்டையே இழந்து நிற்கிறது ஒரு குடும்பம். வீட்டின் உரிமையாளர் காரில் இருந்து புகை மளமளவென வருவதைப் பார்த்தவுடன் உடனே தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்தார். தீயணைப்புத் துறையினர் வந்து தீயை அணைப்பதற்குள் தீ வீட்டையே நாசமாக்கிவிட்டது என்று கூறினார். 20 தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடிய பின்னர் தீ அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்தினால் சுமார் $30,000 டாலர்கள் மதிப்புள்ள பொருட்கள் சேதமாகியுள்ளதாக வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார். தீ விபத்திற்கான காரணம் இன்னும் அறியப்படவில்லை. தீயினார் சேதமடைந்த வீட்டின் படம…
-
- 1 reply
- 577 views
-
-
Published By: VISHNU 18 DEC, 2023 | 08:22 PM (நா.தனுஜா) அடுத்த தேர்தலில் தமது கட்சி ஆட்சியமைத்தால், இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலையுடன் தொடர்புபட்ட ஆட்சியாளர்களுக்கு எதிராக 'மக்னிற்ஸ்கி' முறையிலான தடைகளை விதிப்பதற்குத் திட்டமிட்டிருப்பதாக கனேடிய எதிர்க்கட்சித்தலைவர் பியெர் பொலியெவ்ர் தெரிவித்துள்ளார். கனடாவின் பிரதமரைத் தெரிவுசெய்வதற்கான அடுத்த தேர்தலில் தமது கட்சி வெற்றிபெற்று ஆட்சியமைத்தால், உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் நடைமுறைப்படுத்துவதற்குத் திட்டமிட்டிருக்கும் நடவடிக்கைகள் குறித்துத் தெளிவுபடுத்துகையிலேயே கனேடிய பாராளுமன்றத்தின் பிரதான எதிர்க்கட்சியான கன்சவேட்டிவ் கட்சியின் தலைவர் பியெர் பொலியெவ்ர் மேற்கண்டவ…
-
- 16 replies
- 1k views
- 1 follower
-
-
உலகின் கவனத்தை ஈர்த்துள்ள ஒருபாலின திருமணம் - தனது நீண்டகால தோழியை மணமுடித்தார் அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் Published By: RAJEEBAN 17 MAR, 2024 | 01:02 PM அவுஸ்திரேலியாவின் வெளிவிவகார அமைச்ச பெனிவொங் தனது நீண்டகாலதோழி சோபி அல்லோச்சசுடன் திருமணபந்தத்தில் இணைந்துகொண்டுள்ளார். அவுஸ்திரேலியாவின் இந்த ஒருபால் இனத்தவர்கள் திருமணம் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. அடிலெய்ட் ஹில்ஸ் பகுதியில் சனிக்கிழமை இடம்பெற்ற இந்த திருமண நிகழ்வில் பிரதமர் அன்டனி அல்பெனிஸ் உட்பட தொழில்கட்சியின் பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டுள்ளனர். சமூக ஊடகங்களில் இது குறித்த தகவல்களை பதிவிட்டுள்ள பெனிவொங் இந்த விசேடமான…
-
-
- 4 replies
- 573 views
- 1 follower
-
-
போயிங் விமானங்களை இடைநிறுத்த போவதில்லை: அமெரிக்கா அறிவிப்பு போயிங் 737 மக்ஸ் விமான சேவைகளை இடைநிறுத்த போவதில்லை என அமெரிக்க விமானப் போக்குவரத்து அதிகாரசபை திட்டவட்டமாக அறிவித்துள்ளது. எத்தியோப்பிய விமான விபத்தை தொடர்ந்து எழுந்த செனட் சபை உறுப்பினர்கள் மற்றும் தொழிலாளர் சங்கங்களின் அழுத்தங்களுக்கு மத்தியில் அமெரிக்கா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும், போயிங் 737 மக்ஸ் விமானங்களை முடக்கி வைக்கும் செயற்பாடு அடிப்படையற்றது எனவும் அமெரிக்கா கூறியுள்ளது. அத்துடன், போயிங் 737 மக்ஸ் விமானத்தின் பாதுகாப்புக் குறித்து தாம் முழு நம்பிக்கை கொண்டிருப்பதாகவும் அமெரிக்க விமானப் போக்குவரத்து அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது. எத்தியோப்பியன் எயர்லைன்ஸ் விமானம் கடந்த…
-
- 0 replies
- 283 views
-
-
ஊழல் பெருச்சாலிகள் போராட்டக்காரர்களை களங்கப்படுத்துவதா? வைகோ கேள்வி சென்னை: போபர்ஸ் பீரங்கி பேர ஊழலில் கோடிக்கணக்கில் பணத்தைக் கொள்ளை அடித்து, வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைத்ததோடு, அதற்கு புரோக்கர் வேலை பார்த்த வின்சட்டாவையும் வெளிநாட்டுக்குத் தப்ப வைத்த ஊழல் பேர்வழிகள், பங்குச்சந்தை ஊழல், தற்போதைய இமாலய ஸ்பெக்ட்ரம் ஊழல்களின் மூலமாக உலகத்திலேயே மிகப்பெரிய ஊழல் செய்த பேர்வழிகளாகப் பெயர் எடுத்த கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் நியாயமாகப் போராடுகின்ற மீனவ மக்களையும், தென் மாவட்ட மக்களையும், களங்கப்படுத்த முயல்கின்றனர் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, அணுமின் நிலையம் பாது…
-
- 2 replies
- 766 views
-
-
ஜீ – 20 மாநாட்டின்போது சமூக வலைத்தளங்கள் குறித்து ஆராயுமாறு வலியுறுத்தல்! நடைபெறவுள்ள ஜீ – 20 மாநாட்டின்போது சமூக வலைத்தளங்கள் குறித்து ஆராயுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. ஜப்பானிய பிரதமர் ஷின்ஸோ அபேவிற்கு அவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன் அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். அத்துடன், உலகளாவிய ரீதியில் சமூக வலைத்தளங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் எனவும் அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன் கோரியுள்ளார். கடந்த வௌ்ளிக்கிழமை நியுசிலாந்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் நேரடி ஔிபரப்பை பேஸ்புக் நிறுவனத்தினால் தடைசெய்ய முடியாமல் போனமை குறித்தும் ஸ்கொட் மொரிசன் கடும் கண்டனம் வௌியிட்டுள்ளார். இதேவேளை, 50…
-
- 0 replies
- 485 views
-
-
கனடா- ஆர்சிஎம்பியின் வலையத்தளம் ஞாயிற்றுகிழமை பல மணித்தியாலங்களிற்கு செயலிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த செயலிழப்பிற்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை.ஞாயிற்றுகிழமை மாலை தளம் மீண்டும் வழமைக்கு திரும்பியதாக கூறப்பட்டுள்ளது.பிரிட்டிஷ் கொலம்பியாவில் கடந்த வாரம் RCMPஅதிகாரி சம்பந்தப்பட்ட ஒரு துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்த படையினரை குறிவைத்து சைபர் குழு இணையம் அனாமதேய சூழுரைப்பு ஒன்றை விடுத்துள்ளது. இந்த சூழுரைப்பு விடுத்த மறு நாள் வலைத்தள செயலிழப்பு ஏற்பட்டுள்ளது.இது குறித்து ஆர்சிஎம்பியனர் உடனடியாக எதுவும் தெரிவிக்கவில்லை.நிலைமையை கண்காணித்து வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்Steven Blaney-யின் காரியாலயம் தெரிவித்துள்ளது.அண்ம…
-
- 0 replies
- 539 views
-
-
இது ஒரு கருத்து மட்டுமே. இது ஒரு காரணம் (இங்கு) முன்பு சொல்லி இருக்கிறேன் - (முன்பு நடந்த உலக யுத்தங்களும் பொருளாதாரத்தில் (தடை போன்றவற்றில்) தான் தொங்கியது) - பெரிய யுத்தங்களுக்கு இட்டுச்செல்லும் சாத்திய கூறு கூடி வருகிறது. இந்த கருத்தில் சொல்லியது நடக்காது இருக்க வேண்டும் என்கிறால், (மேற்கு) கடல், ஆகாயம், தரை வழி வழங்கல் பாதைகளை தடுத்தல், கடற்படை முற்றுகை (naval blockade) போன்றவையே அடுத்த வழி, ஆனால், அது யுத்த பிரகடனம். https://www.businessinsider.com/us-russia-sanctions-impact-dedollarization-oil-inflation-war-ukraine-2024-5 The US and the West are facing the blowback of sanctions against Russia, economist says …
-
- 0 replies
- 607 views
-
-
ஜப்பானில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு நிரந்தர குடியுரிமை : ஜப்பான் அரசு வெளிநாட்டு ஊழியர்களுக்கான நிரந்தர குடியுரிமையை வழங்க ஜப்பான் அரசு தீர்மானித்துள்ளது. அதன்படிஇ வெளிநாட்டு ஊழியர்களின் திறன்களை மேம்படுத்தும் நோக்கில்இ தொழில்நுட்ப வேலைவாய்ப்பு பயிற்சி திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் நேற்று பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. திருத்தப்பட்ட புதிய சட்டம் 2027 முதல் ஜப்பானில் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு ஊடக அறிக்கைகளின்படிஇ குடிவரவு கட்டுப்பாடு மற்றும் அகதிகளை அடையாளம் காணும் முந்தைய அடிப்படைகளும் திருத்தப்பட்டுள்ளன. மூன்று ஆண்டுகளுக்குள் குறிப்பிட்ட திறமையான தொழிலாளர்களாக ஜப்பானில் பணிபுரிய வெளிநாட…
-
- 0 replies
- 322 views
-
-
ராமேசுவரம் தீவு கடற்பகுதியில் திருக்கை மீன்களின் வரத்து அதிகரிப்பு Ads by Google எஸ். முஹம்மது ராஃபி COMMENT · PRINT · T+ பாம்பன் மீனவர்கள் வலையில் சிக்கிய அரியவகை வீணைத் திருக்கை மீன் | படம்: எஸ்.முஹம்மது ராஃபி ராமேசுவரம் தீவு கடற்பகுதியில் திருக்கை மீன்களின் வரத்து தற்போது அதிகரித்துள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியில் மீன்களின் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்ததால் கடந்த ஆகஸ்ட் 8 முதல் தொடர்ச்சியாக 19 நாட்கள் வேலை நிறுத்ததில் ஈடுபட்டதால் வாழ்வாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்ட விசைப் படகு மீனவர்கள் வேலை நிறுத்தை வாபஸ் பெற்று வியாழக்கிழமை கடலுக்குச் சென்று வெள்ளிக்கிழமை கரை திரும்பினர். கரை திரும்பிய மீனவ…
-
- 0 replies
- 1.2k views
-
-
உச்சிப்புளி கடற்கரைப்பகுதியில் 4 துப்பாக்கிகள் புதைத்து வைக்கப்பட்ட இடத்தில் மேலும் துப்பாக்கி புதையல் உள்ளதா என்று போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். துப்பாக்கிகள் ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே உள்ள பிரப்பன்வலசை கடற்கரையில் நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) சிறுவர்கள் மணலைத் தோண்டி விளையாடிக்கொண்டிருந்த போது மணலில் 4 எந்திரத் துப்பாக்கிகள் புதைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து அவற்றை கைப்பற்றினர். இந்த துப்பாக்கியில் ஒரே நேரத்தில் 20 தோட்டாக்களை போட்டு தொடர்ந்து சுட முடியும். 200 மீட்டருக்கு அப்பால் உள்ள இலக்குகளை கூட தாக்கும் சக்தி கொண்ட இந்த துப்பாக்கிகள் கொரில்லா தாக்குதலுக்கு பயன்பட…
-
- 0 replies
- 839 views
-
-
ஸ்லோவீனியாவுக்குள் பெருந்திரளான குடியேறிகள் வருகை ஸ்லொவீனியாவுக்குள் கடந்த இருபத்து நான்கு மணி நேரத்தில் 12,000க்கும் மேற்பட்ட குடியேறிகள் வந்திறங்கியுள்ளதாக, அந்நாட்டு காவல் துறை தெரிவித்துள்ளது. குடியேறிகள் வருகையை ஸ்லொவீனியா சமாளிப்பதில், ஐரோப்பிய ஒன்றியம் எப்படி உதவ வேண்டும் என்பது தொடர்பிலான பேச்சு வார்த்தைகளுக்காக, குடியேற்றத்துக்கான ஐரோப்பிய ஆணையர் டிமிட்ரிஸ் அப்ரம்போலிஸ் இன்று ஸ்லொவீனியா செல்லும் நிலையில், இந்த புள்ளி விவரங்கள் வெளியாகியுள்ளன. மக்களின் வருகையை சமாளிப்பதில் ஐரோப்பிய ஒன்றித்தின் உதவி வேண்டும் என்று ஸ்லொவீனியாவின் உள்துறை அமைச்சர் வெஸ்னா யோர்கோஸ் நிந்தார் கோரியுள்ளார். ஐரோப்பாவுக்கு பயணிக்கும் குடியேறிகளின் பெரும் எண்ணிக்கையை கையாள ஒருங்கிணைந்த ஐர…
-
- 2 replies
- 751 views
-
-
ரொஹிங்கிய அகதிகளை மியன்மாருக்கு திருப்பி அனுப்பும் மற்றொரு புதிய முயற்சி தோல்வி அடைந்துள்ளது. இதற்காக ஐந்து பஸ்கள் மற்றும் 10 டிரக்குகள் பங்களாதேஷினால் தயார்படுத்தப்பட்டபோதும் எவரும் அதில் செல்வதற்கு வரவில்லை. “நாம் காலை 9 மணியில் இருந்து காத்திருந்தோம் எந்த அகதியும் திரும்பிச் செல்வதற்கு வரவில்லை” என்று தக்னாப் அகதி முகாமுக்கு பொறுப்பான பங்களாதேஷ் அதிகாரி ஒருவர் ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திற்கு நேற்று தெரிவித்தார். “இதுவரை யாரும் வரவில்லை” என்று அவர் நேற்று பிற்பகல் குறிப்பிட்டார். மின்மாரின் ரகினே மாநிலத்தில் இராணுவ நடவடிக்கையை அடுத்து 2017இல் சுமார் 740,000 முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்ட ரொஹிங்கிய அகதிகள் பங்களாதேஷுக்கு தப்பிச் சென்றனர். அவர்கள் …
-
- 0 replies
- 435 views
-
-
தமிழக முதல்வர் கலைஞர் ஒரு திருமணவிழாவில் மணமகனுக்கு பெயர் மாற்றம் செய்ய விரும்பி தமிழ் பெயராக அன்புச்செல்வன் என்று மாற்றம் செய்து அழைத்தார். இதனை எங்கள் மறைந்த அரசியல்துறை பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் நினைவாக அவர் மனதில் நீங்காத உணர்வுகளின் பாதிப்பாக இப்பெயரை வைத்தார் என்று எடுத்து கொள்ளலாமா? மேடையில் திருமணம்-பெயர் மாற்றம்: முன்னதாக மாநாட்டு மேடையில் செங்கல்பட்டு நகர திமுக செயலாளர் சதீஷ்பாபு-ரேவதியின் திருமணத்தை சுயமரியாதை திருமணமாக கருணாநிதி நடத்தி வைத்தார். அப்போது பேசிய கருணாநிதி. நான் இங்கே மணமகனுக்கு ஒரு வேண்டுகோளை வைத்து வாழ்த்துகிறேன். சதீஷ்குமார் என்ற அவர் பெயரை மாற்றி தமிழ் பெயர் சூட்ட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார…
-
- 0 replies
- 968 views
-
-
அமெரிக்க ரெக்சாஸ் மாநிலத்தில் டலஸ் என்னும் இடத்தில் அடித்த புயல்காற்றால் ரைக்ரர் ரெய்லர் பெட்டிகள் தீப்பெட்டி உருள்வதைப் போல் உருட்டிக் கொண்டு போகிறது.12000 இறாத்தல் எடை கொண்ட பெட்டியை நீண்ட தூரத்திற்கு காற்றில் கொண்டு போகின்றது. (CNN) -- Tornadoes ripped through the Dallas-Fort Worth area Tuesday, tossing tractor-trailers like toys and causing widespread damage to homes and other structures. One tornado was spotted on the ground five miles east of downtown Dallas, the National Weather Service said. All flights at Dallas-Fort Worth International Airport were grounded and passengers and airport employees were moved into shelters as the storm system spawned multiple fun…
-
- 0 replies
- 490 views
-
-
போர்முனைக்கு மீண்டும் செல்வேன் இளவரசர் ஹாரி இங்கிலாந்து இளவரசர் சார்லசின் இளையமகன் ஹாரி ஆப்கானிஸ்தான் போர்முனையில் இருந்து சமீபத்தில் தான் திரும்பினார். அவர் மீண்டும் போர்முனைக்கு செல்வதற்கு விரும்புவதாக தெரிவித்தார். இதற்கு ராணுவம் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இன்னும் ஒரு ஆண்டுக்கு அவர் போர்முனைக்கு செல்வதை நினைத்துக்கூட பார்க்கக்கூடாது என்று தெரிவித்து உள்ளது. இங்கிலாந்து இளவரசர் ஹாரி ராணுவ கல்லூரியில் படித்து பயிற்சி பெற்றவர். அவர் போர்முனைக்கு சென்று யுத்த அனுபவம் பெற விரும்பினார். இதற்காக அவர் ஈராக் போர்முனைக்கு செல்ல விரும்பினார். அவர் அங்கு சென்றால் அவரை தீவிரவாதிகள் கடத்திச் செல்லப்போவதாக அறிவித்தனர். இதனால் அவர் ஈராக் செல்லும் திட்டத்தை அந்த…
-
- 3 replies
- 1.4k views
-
-
இங்கிலாந்தின் தலைநகர் லண்டன் உட்பட பிரிட்டனின் தெற்கு மற்றும் மேற்கு பகுதிகள் எங்கனும் பலமான காற்று வீசிக் கொண்டிருக்கிறது. பேரிரச்சலுடன் காற்று வீசுவதுடன் மழையும் பெய்து கொண்டிருக்கிறது. இதற்கிடையே அத்திலாண்டிக் சமுத்திரத்தில் உருவான தாழமுக்கம் புயற் சின்னமா ஐயர்லாந்து, வேல்ஸ் மற்றும் இங்கிலாந்தின் மேற்கு, தெற்கு கரைகளை நோக்கி நகர்ந்து வருவதால் இந்நிலை ஏற்பட்டுள்ளது. புயலுக்கு நேரடியாக முகங்கொடுக்கும் பகுதிகளில் மணிக்கி 80 மைல் அல்லது 130 கிலோமீற்றர்கள் என்ற வேகத்தில் காற்று வீசிக் கொண்டிருக்கிறது. இதனால் மரங்கள் வேருடன் புடுங்கி எறியப்பட்டுள்ளன. கூரைகள் தூக்கி வீசப்பட்டுள்ளன என்று செய்திகள் கூறுகின்றன. லண்டனிலும் இரைச்சலுடன் பலமான காற்று வீசுவதுடன் …
-
- 14 replies
- 2.5k views
-
-
2015-ல் அமெரிக்காவில் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 1000 பொதுமக்கள் பலியானதாக தகவல் நியூயார்க்கில் கருப்பினத்தவர்களின் பாதுக்காப்பின்மை குறித்து விழிப்புணர்வு போராட்ட. | கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ். 2015ல் அமெரிக்க போலீஸ் நடத்திய பல்வேறு தாக்குதலில் பொதுமக்களில் 965 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதில் பலியானவர்களின் எண்ணிக்கையில் ஆயுதம் இல்லாத கருப்பினத்தவர்களே அதிகம் என ஓர் ஆய்வு கூறிகிறது. அமெரிக்காவில் இனவெறுப்பு ரீதியான உள்நாட்டு வன்முறைகள் கடந்த சில ஆண்டுகளாகவே அதிகரித்த நிலையில் உள்ளது. துப்பாக்கி கலாசார வன்முறை நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இது குறித்த ஓர் ஆய்வை வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்ட…
-
- 0 replies
- 541 views
-
-
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவதை (பிரெக்சிற்) அடுத்தாண்டு ஜனவரி 31ஆம் திகதி வரை தாமதப்படுத்த ஐரோப்பிய ஒன்றியம் இன்று இணங்கியுள்ளதாக ஐரோப்பிய சபையின் தலைவர் டொனால்ட் டஸ்க் தெரிவித்துள்ளார். http://www.tamilmirror.lk/உலக-செய்திகள்/பரகசறற-தமதபபடதத-ஐரபபய-ஒனறயம-இணஙகயத/50-240503 Brexit: European leaders agree extension to 31 January EU leaders have agreed in principle to extend Brexit until 31 January 2020 - meaning the UK will not leave as planned on Thursday. EU Council President Donald Tusk said it was a "flextension" - meaning the UK could leave before the deadline if a deal was approved by Parliament. It comes as MPs prep…
-
- 0 replies
- 324 views
-
-
ஜனவரி1ல் அமுலுக்கு வரும் புதிய சட்டங்கள் மற்றும் கொள்கைகள். Mohanay December 31, 2015 Canada கனடா-ஜனவரி 1, 2016ல் பல புதிய சட்டங்கள், அரசாங்க கொள்கைகள் மற்றும் ஏற்கனவே அமுலிலிருக்கும் சட்டங்களின் இணை மாற்றங்கள் என்பன அமுல் படுத்தப்பட உள்ளன. புதிய வருடத்தில் ஏற்படும் மாகாண மற்றும் மத்திய மாற்றங்கள் அனைவரது வாழ்க்கையிலும் ஒரு பெரிய அல்லது சிறிய அளவிலான மாற்றங்களை ஏற்படுத்தும் என தெரியவருகின்றது. மத்தியதர வர்க்கத்தினரின் வருமான வரி குறைப்பு: ஜஸ்ரின் ட்ரூடோவின் வாக்குறுதி பிரகாரம் நடுத்தர வர்க்கத்தினரின் வருமான வரி குறைப்பு ஜனவரி 1லிருந்து நடைமுறைக்கு வருகின்றது. இந்த குறைப்பு டொலர்கள் 45,282லிருந்து டொலர்கள் 90,563ற்கு இடைப்பட்ட வருமானத்திற்கு 22சதவிகிதத்திலிரு…
-
- 0 replies
- 563 views
-
-
Published By: DIGITAL DESK 3 29 JAN, 2025 | 03:02 PM ஆசியா மற்றும் உலகம் முழுவதும் உள்ள சீனர்கள் குடும்பத்தினர், நண்பர்கள், பிரார்த்தனைகள் மற்றும் ஏராளமான உணவுகளுடன் சீனப் புத்தாண்டை வரவேற்றுள்ளனர். அதன்படி, ஒவ்வொரு ஆண்டுக்கும் ஒரு விலங்கின் பெயர் வைக்கப்படும் நிலையில், இவர்கள் டிராகன் ஆண்டுக்கு விடைகொடுத்து பாம்பு ஆண்டை வரவேற்றுள்ளனர். "வசந்த விழா" என்றும் அழைக்கப்படும் லூனார் புத்தாண்டு அல்லது சந்திரப்புத்தாண்டு இன்று 29 ஆம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி வரை 15 நாள் நாட்கள் சீன மக்களால் கொண்டாடப்படுகிறது. சீனாவிலும் பிற இடங்களிலும் உள்ள சீன மக்கள் இந்த ஆண்டின் மிக முக்கியமான பண்டிகையாகக…
-
- 0 replies
- 163 views
- 1 follower
-
-
கண்ணீர் சிந்திய ஒபாமாவால் பரபரப்பில் உலகம்! [ செவ்வாய்க்கிழமை, 05 சனவரி 2016, 09:58.23 PM GMT ] துப்பாக்கி கலாச்சாரத்தை கட்டுப்படுத்துவது தொடர்பாக பேசும் போது அமெரிக்க அதிபர் ஒபாமா கண்ணீர் விட்டு அழுத சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் பெருகி வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் துப்பாக்கி சூட்டினால் பலியாகியுள்ளனர். எனவே இதை கட்டுப்படுத்துவது தொடர்பாக அதிபர் ஒபாமா பொதுமக்கள் மத்தியில் உரை நிகழ்த்தினார். அப்போது அவர் பேசியதாவது, கடந்த 2012ஆம் ஆண்டும் நியூடவுன் பகுதியில் துப்பாக்கிச்சூட்டில் 20 குழந்தைகள் பலியானார்கள். அந்த குழந்தைகளை பற்றி நினைக்கும்போது எல்லாம…
-
- 1 reply
- 561 views
-
-
படக்குறிப்பு, மும்பையில் செயல்படும் ஏவியோ ஃபார்மா எனும் மருந்து உற்பத்தி நிறுவனம், பல்வேறு வணிக பெயர்களில் மாத்திரைகளை தயாரித்து, சட்டபூர்வமான மருந்துகள் போல் தோற்றமளிக்கும் வகையில் அவற்றை உற்பத்தி செய்கின்றன கட்டுரை தகவல் எழுதியவர், பிபிசி ஐ விசாரணைகள் பதவி, பிபிசி உலக சேவை 9 மணி நேரங்களுக்கு முன்னர் இந்திய மருந்து நிறுவனம் ஒன்று, உரிமம் பெறாத, தீவிர போதை பழக்கத்துக்கு உள்ளாக்கும் ஓபியாய்டுகளை (ஓபியம் செடியிலிருந்து தயாரிக்கப்படும் வலி நிவாரண மற்றும் சட்ட விரோத மருந்துகள்) தயாரித்து, அவற்றை மேற்கு ஆப்பிரிக்காவுக்கு சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்து, அங்கு பெரும் பொது சுகாதார நெருக்கடியை உண்டாக்குகிறது என்று பிபிசி ஐ (BBC Eye) நடத்திய புலனாய்வு விசாரணையில் தெரியவந்துள்ளது. மும…
-
-
- 2 replies
- 480 views
- 1 follower
-