Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. 13 பிரித்தானிய பிரதமர்கள், 12 அமெரிக்க ஜனாதிபதிகள், 10 இலட்சத்துக்கும் அதிகமான தூரம் பயணம் : 91ஆவது அகவவையில் கால்பதிக்கும் மகாராணி பிரித்தானிய மகாராணி எலிசபத்தின் 91 ஆவது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டுள்ளது. பிரித்தானிய மகாராணியின் 91 ஆவது பிறந்தநாளை ஒட்டி, உத்தியோகபூர்வ வாசஸ்தலமான பக்கிங்காம் அரண்மனையில் குடும்பத்தினருடன் கொண்டாடியுள்ளார். மேலும் 1926 ஆம் ஆண்டு பிறந்த எலிசபத், தந்தை 4ஆம் ஜோர்ஜின் மறைவிற்கு பிறகு 1952ஆம் ஆண்டு பிரித்தானிய மகாராணியாக முடிசூட்டப்பட்டார். அத்தோடு உலகிலுள்ள மன்னர் மற்றும் மகாராணிகளில் இவரே மிக வயதானவர் எனும் பெருமையை பெறுவதோடு, பிரித்தானிய அரச குடும்பத்தில் முடிசூட்டப்பட்டவர்களில் மிக ந…

  2. கனடா பிரதமரின் பெயரை குழந்தைக்கு சூட்டிய சிரியா அகதிகள் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில், கனடாவுக்கு வந்த முஹமத் மற்றும் ஆஃப்ரா பிலான் தம்பதியர் முற்றிலும் ஒரு புதிய நாட்டில், தங்களின் புதிய வாழ்க்கையை ஆரம்பித்தனர். படத்தின் காப்புரிமைAFRAA BILAN Image captionகுழந்தை 'ஜஸ்டின் ட்ரூடோ'வுடன் ஆஃப்ரா பிலான் சிரியாவில் உள்ள டமாஸ்கஸ் நகரை சேர்ந்த இத்தம்பதியர் மற்றும் இவர்களின் மகள் நயா மற்றும் மகன் நேல் ஆகியோர் கடும் பனிக்காலத்தில் மான்ட்ரல் நகருக்கு அகதிகளாக வந்து சேர்ந்தனர். கனடாவுக்கு வந்த மற்ற சிரியா அகதிகளை விமான நிலையத்தில் வரவேற்றது போல, இவர்கள் வந்த போது கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வரவேற்கவில்…

  3. சிறுவர்கள், பெண்கள் உள்ளடங்களாக நைஜீரியாவில் கடத்தப்பட்ட 100 பேர் மீட்பு வடமேற்கு நைஜீரியாவின் பாதுகாப்பு அதிகாரிகள் கொள்ளைக்காரர்களால் கடத்தப்பட்ட பெண்கள் மற்றும் சிறுவர்கள் உள்ளடங்களாக சுமார் 100 பேரை பாதுகாப்பாக மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த குழு ஜூன் 8 அன்று ஜம்பாரா மாநிலத்தில் கடத்தப்பட்டது. இதன்போது நால்வரும் கொல்லப்பட்டனர். ஜம்பாரா மாநில அரசு எந்தவிதமான மீட்கும் தொகையும் இன்றி கடத்தப்பட்டவர்களை மீட்டுள்ளதாக கூறியுள்ளது. எனினும் அது தொடர்பான மேலதிக விபரங்களை வழங்கவில்லை. இந் நிலையில் மீட்கப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவிகள் வழங்குவதற்கும், அதன் பின்னர் அவர்களை அவர்களது வீடுகளுக்கு அனுப்புவதற்கும் நைஜீரிய பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை…

  4. இம்மானுவேல் மெக்ரோன்: தாராளர்களின் புதிய முகம்! பிரான்ஸ் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம்மானுவேல் மக்ரோன் | படம்: ஏஎஃப்பி மெக்ரோனின் வெற்றிகளும், தோல்விகளும் பிரெஞ்சு தாராளவாதிகளின் மொத்தத் தலைமுறையையும் நிர்ணயம் செய்யும் பிரான்ஸ் அதிபர் தேர்தலில் இரண்டாம் கட்டத்தில் இம்மானுவேல் மெக்ரோனின் வெற்றி கிட்டத்தட்ட பட்டாபிஷேகக் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியிருப்பது உத்வேகம் தரும் விஷயம். ஆம், அவர் 60% வாக்குகள் பெற்றிருக்கிறார். அதேசமயம், பிரான்ஸின் சமீபத்திய வரலாற்றில் இல்லாத அளவுக்குக் குறைந்த வாக்கு சதவீதமும், செல்லாத வாக்குகளும் பதிவான தேர்தலில்தான் அவர் வென்றிருக்கிறார். மெக்ரோனுக்கு வாக்களித்தவர்களும் கூ…

  5. காபூல்: ஆப்கானிஸ்தானில் வாழும் ஹிந்துக்கள், சீக்கியர்களுக்கு அந்நாட்டு நாடாளுமன்றத்தின் கீழவையில் சிறப்பு பிரதிநிதித்தும் வழங்க வகை செய்யும் சட்டத்தை பிறப்பித்து அதிபர் ஹமீத் கர்சாய் உத்தரவிட்டிருக்கிறார். ஆப்கானிஸ்தானின் நாடாளுமன்றத்தில் கீழவையான Wolesi Jirgaவில் மொத்தம் 249 எம்.பிக்கள் உள்ளனர். Meshrano Jirga எனப்படும் மேல்சபையில் 102 எம்.பிக்கள் உள்ளனர். தற்போது ஆப்கானிஸ்தானில் வாழும் ஹிந்து மற்றும் சீக்கியர்களுக்கு அந்நாட்டு நாடாளுமன்றத்தின் பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டுள்ளதால் கீழவையில் உறுப்பினர்கள் எண்ணிக்கை 250ஆக அதிகரித்துள்ளது. ஹிந்து மற்றும் சீக்கியர்களுக்கு சிறப்பு பிரதிநிதித்துவம் வழங்கும் வகையிலான சட்ட திருத்தத்துக்கு அந்நாட்டு எம்.பிக்கள் கடும் எதிர்ப்பு தெ…

  6. இஸ்ரேல் நிலைகளை நோக்கி லெபனானின் ஹிஸ்புல்லா படை ஏவுகணை தாக்குதல்! இஸ்ரேல் நிலைகளை நோக்கி ஈரான் ஆதரவு பெற்ற லெபனானின் ஹிஸ்புல்லா படையினர், ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லெபனானில் தங்கள் நிலைகள் மீது இஸ்ரேல் விமானங்கள் தாக்குதல் நடத்தியதற்குப் பதிலடியாக இந்த ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஹிஸ்புல்லா படையினர் தெரிவித்துள்ளனர். எனினும், தெற்கு லெபனானில் இருந்து முன்னதாக வீசப்பட்ட ஏவுகணை குண்டுகளுக்குப் பதிலடி கொடுப்பதற்காகவே தாங்கள் வான்வழித் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்தது. இதுகுறித்து இஸ்ரேல் இராணுவ துணைத் தளபதி அம்னான் ஷெஃப்ளர் கூறுகையில், ‘லெபனானிலிருந்து தங்கள் பகுதிகளை நோக்கி 19 ஏவுகணை குண்டுகள் வீசப்பட்டத…

  7. கோவிஷீல்ட் ,சினோவெக் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு அவுஸ்திரேலியா அனுமதி Published by T. Saranya on 2021-10-01 13:08:56 அவுஸ்திரேலியா முழுவதும் 80 சதவீதமானவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதயைடுத்து உலகின் மிக தீவிரமான தொற்றுநோய் எல்லை கட்டுப்பாடுகளை தளர்த்தத் ஆரம்பித்துள்ளது. அந்தவகையில், இந்தியாவில் சீரம் நிறுவனம் தயாரித்துள்ள கோவிஷீல்ட் மற்றும் சீனாவில் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள சினோவெக் ஆகிய இரண்டு தடுப்பூசிகளையும் போட்டுக்கொண்டவர்கள் அவுஸ்திரேலியா நாட்டுக்கு பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இரு தடுப்பூசிகளையும் அங்கீகரிப்பதனால் அவுஸ்திரேலியாவில் கல்வி கற்க விரும்பும் சர்வதேச மாணவர்களுக்கு ஒரு குறிப்பிடத்தக்க தடையை நீக்கும் என கூறப்ப…

  8. கோபம் ஒரு பக்கம் வந்தாலும், மறுபக்கம் வயிறு குலுங்க சிரிக்க வைத்த ஒரு காமெடி காட்சி பின் வருமாறு:- திசையன்விளையை சேர்ந்த கோவில்ராஜ் மகன் செல்லத்துரை (வயது40). நெல்லை டவுணில் உள்ள லாரி சர்வீஸ் ஒன்றில் கிளீனராக வேலை பார்த்து வருகிறார். நேற்று மாலை பணி முடிந்ததும் நேராக “டாஸ்மாக்” சென்று ஒரு “குவார்ட்டரை” உள்ளே தள்ளினார். போதையில் லேசாக “லம்பி”யபடியே அங்கிருந்து கிளம்பி கொக்கிரகுளம் அருகே உள்ள தாமிரபரணி ஆற்றுக்கு வந்தார். கரையோரத்தில் தனது சட்டையை கழற்றி வைத்து விட்டு குளிக்கச் சென்றார். சுமார் அரை மணி நேரம் நன்றாக குளித்துவிட்டு கரைக்கு வந்த அவருக்கு ஒரு “ஷாக்” காத்திருந்தது. சினிமாவில் வருகிற மாதிரி அவரது மேல் சட்டையை யாரோ எடுத்து சென்றுவிட்டார்கள். …

  9. பிரிட்டனை தாக்கிய புயல் காற்றில் மூவர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். கெண்ட் பகுதியில் ஒரு சிறுவனும், வட்ஃபோர்ட்டில் ஒருவரும் புயலில் மரங்கள் வீழ்ந்ததால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். மேற்கு லண்டனிலும் ஒருவர் இறந்துள்ளார். ஐந்து லட்சத்து எண்பதினாயிரம் வீடுகள் மின் இணைப்பை இழந்துள்ளன. பிரிட்டனின் தென்பகுதிக்கான ரயில் பாதைகளில் மரங்கள் வீழ்ந்ததால் பல ரயில் சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. எதிர்பார்த்ததைவிட சேதம் அதிகம் என்று ரயில் வலையமைப்பு கூறியுள்ளது. ஹீத்ரோ விமான நிலையத்தில் இருந்து 130 விமானங்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன. ஐல் ஒஃப்வைட்டில் மணிக்கு 99 மைல் வேகத்தில் காற்று வீசியதாக காலநிலை அவதான நிலையம் கூறியுள்ளது. http://www.bbc.co.uk/tamil/multimedia/2013/10/131028_uk_…

  10. சூப்பர் புயல் ராய்: பிலிப்பின்ஸை தாக்கியதில் 1.3 கோடி பேர் பாதிக்கப்பட வாய்ப்பு ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, பிலிப்பின்ஸின் டி ஓரோ நகரில் தவிக்கும் மக்களை மீட்கும் கடலோரக் காவல்படையினர். தெற்கு பிலிப்பைன்ஸில் சூப்பர் புயல் ராய் தாக்கிதால் ஆயிரக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தஞ்சமடைய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். பரவலான வெள்ளம் மற்றும் பாதிப்புகள் பற்றிய எச்சரிக்கைகள் ஏற்கெனவே விடுக்கப்பட்டிருந்தன. சியார்கோவில் ஒரு பிரபலமான சுற்றுலாத் தீவில் கரையைக் கடந்தது ராய் புயல் கரையைக் கடந்தது. அப்போது மணிக்கு சுமார் 175 கிமீ (110 மைல்) வேகத்தில் காற்று வ…

  11. பாகிஸ்­தான், தீவி­ர­வா­தி­ க­ளின் புக­லி­ட­மாக உள்­ளது என்று ட்ரம்ப் கருத்­துத் தெரி­வித்­தி­ருந்த நிலை­யில் அமெ­ரிக்­கா­வு­ட­னான உறவை தற்­கா­லி­க­மாக முறித்­துக் கொள்­வ­தாக பாகிஸ்­தான் அறி­வித்­தது. அமெ­ரிக்க அதி­பர் ட்ரம்ப் ஆசி­யா­வுக்­கான புதிய கொள்­கையை அண்­மை­யில் வெளி­யிட்­டார். தெற்­கா­சியா தொடர்­பில் அவர் கருத்­துத் தெரி­விக்­கை­யில், ஆப்­கா­னிஸ்­தா­னில் தாக்­கு­தல்­களை நடத்­தி­வ­ரும் தலி­பான், ஹக்­கானி உள்­ளிட்ட பெரு­வா­ரி­யான தீவி­ர­வாத அமைப்­புக்­க­ளுக்கு பாகிஸ்­தான் துணை போகி­றது என்று குற்­றம்­சாட்­டி­னார். தீவி­ர­வா­தி­க­ளின் புக­லி­ட­மாக பாகிஸ்­தான் திகழ்­கி­றது. தேவைப்­பட்­டால் பாகிஸ்­தா­னில் புகுந்து வான்­வ­ழித் தாக்­கு­தல்­களை நடத்­து­வோம் என­வ…

    • 0 replies
    • 597 views
  12. காப்புறுதிப் பணத்திற்காக தனது காரை தானே எரியூட்டி அதில் மாட்டிக்கொண்டபின், வெள்ளை இனத்தவர் என்னை தீமூட்டப் பார்த்தனர் என்று கூறிய இந்தியன் ! http://au.news.yahoo.com/a/-/latest/6753886/man-faked-attack-to-claim-insurance/ Man 'faked attack to claim insurance'By Jamie Duncan, AAP February 3, 2010, 6:12 am Buzz up! Send EmailIMShare DeliciousTwitterMyspaceDiggStumble UponFacebookPrintRelated Links Cadbury cuts 60 workers in Melbourne February 2, 2010, 5:21 pm Cat killer sent to youth detention February 2, 2010, 4:41 pm Aussie stars among Tropfest finalists February 2, 2010, 6:20 pm Students in 'limbo' after college co…

    • 15 replies
    • 1.2k views
  13. புதுடெல்லி: சிதம்பரம் நடராஜர் கோயிலை தமிழக அரசு நிர்வகிக்க தடை விதித்து உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு கூறியுள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் தாலுகா குமுடிமூலை கிராமத்தைச் சேர்ந்தவர் சிவனடியார் ஆறுமுகசாமி (90). கடந்த 2000ம் ஆண்டில் இவர், சிதம்பரம் நடராஜர் கோயிலில் தமிழில் தேவாரம் பாடுவதற்கு சென்ற போது, கோயில் பொது தீட்சிதர்களால் தாக்கப்பட்டார். சிவனடியார் ஆறுமுகசாமிக்கு ஆதரவாக மனித உரிமை பாதுகாப்பு மையம், பாமக, விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் தமிழ் உணர்வாளர்கள் இணைந்து கடலூர் மாவட்டத்தில் பல்வேறு போராட்டங்களை நடத்தினார்கள். தமிழக அரசுக்கு மனுக்கள் அனுப்பி கோரிக்கையை தெரிவித்தனர். இதன்பின், 2008ம் ஆண்டு அப்போதைய திமுக அரசின் உத்தரவையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிவனட…

  14. பா.ஜனதா தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் 17–ந்தேதி முதல் 19–ந்தேதி வரை நடக்கிறது. இந்த கூட்டத்தை வெற்றிகரமாக நடத்துவது குறித்து பாராளுமன்ற குழு நேற்று கூடி விவாதித்தது. கூட்டத்துக்கு பிறகு பா.ஜனதா பொதுச் செயலாளர் அனந்தகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:– பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை ஆட்சியில் அமர்த்தியே தீருவது என்ற உறுதியுடன் தேசிய செயற்குழு கூட்டத்தை நடத்துகிறோம். இந்த கூட்டத்தில் நாடு முழுவதும் 10 ஆயிரம் அலுவலக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட இருக்கிறார்கள். தேர்தலை எதிர்கொள்வது, மோடியே பிரதமர் என்ற கோஷத்தை கடை கோடி கிராமங்கள் வரை கொண்டு செல்வது, அனைவரையும் வாக்களிக்க செய்வது போன்ற பணிகளில் கட்சியினருக்கு இவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். செயற்குழு கூட்டத்தில் லஞ்ச…

  15. வாய்க் கொப்பளிக்கும் மவுத்வாஷ்களை நீண்ட காலமாக பயன்படுத்துவோருக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக ஆராய்ச்சி நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.இதுதொடர்பாக, இரண்டு நாடுகளின் பல்கலைக்கழக ஆய்வு முடிவுகள் வெளியாகின. ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பல்கலை. மெல்போர்ன் பல்கலைக்கழக கூறியதாவது: பற்சிதைவு, வாய் துர்நாற்றத்தைக் கட்டுப்படுத்த பிரபலமான பல மவுத்வாஷ்கள் உள்ளன. அவை பயன் அளித்தாலும், குறுகிய காலத்துக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். தொடர்ந்து மவுத்வாஷ் பயன்படுத்துவோருக்கு வாய் புற்றுநோய் ஏற்பட 9 மடங்கு வாய்ப்புள்ளது. புகைபிடிப்பவர்களுக்கு இது பல மடங்கு புற்றுநோய் வாய்ப்பை ஏற்படுத்துகிறது. மது அருந்துவோருக்கு 5 மடங்கு அபாயம் உள்ளது. எனவே, மவுத்வாஷ்களை குறுகிய காலத்த…

  16. லண்டன் - ஸ்ட்ராட்போர்டில் உள்ள குயின் எலிசபெத் ஒலிம்பிக் பூங்காவில் அதிகளவு குளோரின் வாயு வெளியேறியதை தொடர்ந்து சுவாசக் கோளாறு காரணமாக 29 பேர் வைத்திசாலையில அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த பகுதியில் இருந்து சுமார் 200 பேர் வரையில் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய ஊடகங்கள் வெளியட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 50 பேருக்கு பூங்காவில் உள்ள துணை மருத்துவர்களால் சிகிச்சை வழங்கப்பட்டதுடன், அவர்களுக்கு "சுவாசிப்பதில் சிரமம்" இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அப்பகுதியில் வசிப்பவர்கள் ஜன்னல் மற்றும் கதவுகளை மூடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். …

  17. தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ‘சூப்பர் மலேரியா’ நோய் வேகமாக பரவி வருகிறது. அது சர்வதேச நாடுகளையும் ஆக்ரமிக்கும் அபாயம் உள்ளது என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மலேரியா என்ற உயிர்க்கொல்லி நோய் கொசுக்களால் பரவுகிறது. இந்த நோய்க்கு ஆண்டு தோறும் 21 கோடியே 20 லட்சம் பேர் பாதிக்கப்படுகின்றனர். மலேரியா நோய் தாக்குதலுக்கு ஏராளமான குழந்தைகள் பலியாகி வருகின்றனர். எனவே அந்த நோயை ஒழிக்க மருந்து மாத்திரைகள் கண்டு பிடித்து அவை பயன்படுத்தப்படுகின்றன. இருந்தும் அதை முற்றிலுமாக ஒழிக்க முடியவில்லை. இந்த நிலையில் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ‘சூப்பர் மலேரியா’ நோய் வேகமாக பரவி வருகிறது. அது சர்வதேச நாடுகளையும் ஆக்ரமிக்கும் அபாயம் உள்ளது என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ள…

  18. தலைவர்கள் தவறினால் - மக்கள் தலைமை ஏற்கவேண்டும்: - கோபி அன்னன் [Thursday, 2014-02-06 16:06:28] தலைவர்கள் மக்களை வழிநடத்த தவறினால், மக்கள் தலைமை பொறுப்பேற்று தலைவர்களை வழிநடத்த வேண்டும் எனவும், தலைவர்கள் மக்களின் வழியில் செயல்பட வேண்டும் எனவும் ஐ.நா.,வின் முன்னாள் பொதுச் செயலாளர் கோபி அன்னன் தெரிவித்துள்ளார். தட்பவெப்ப நிலை, புவி வெப்பமயமாதல், பொருளாதார மாற்றங்கள் உள்ளிட்ட உலகம் எதிர்கொண்டிருக்கும் சவால்கள் குறித்து தனியார் டிவி சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்த போது கோபி அன்னன் இவ்வாறு தெரிவித்தார். ஆப்கானிஸ்தானிலும், ஆப்ரிக்காவிலும் அமைதி திரும்பும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். உலக நாடுகள் குறித்தும், அவற்றின் நிலை குறித்தும் பேசிய கோபி அன…

  19. 6 மாதத்தில் உத்தரப்பிரதேசத்தில் 433 என்கவுண்டர்கள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க உத்தரப்பிரதேச மாநில அரசு நூற்றுக்கணக்கான சட்டவிரோத கொலைகளை செய்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. பத்திரிக்கையாளர் சரத் பிரதான் இதுகுறித்து விவரிக்கிறார். படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஆட்சிக்கு வந்தால் குற்றச் சம்பவங்களைக் குறைப்போம் என்று ஆதியநாத்தின் பா.ஜ.க உறுதி…

  20. வலியின்றி மிருகங்களை அறுக்குமாறு பிரிட்டனில் கோரிக்கை! [Thursday, 2014-03-13 13:08:10] பிரிட்டனில் சமய வழக்கங்களுக்காக மிருகங்களை வெட்டும்போது மனிதத் தன்மையை கடைப்பிடிக்க வேண்டும் என்று நாட்டின் மூத்த மிருக மருத்துவ அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். முஸ்லிம்கள் அல்லது யூதர்களின் இறைச்சி சந்தைகளுக்காக மிருகங்களை வெட்டும்போது, முதலில் உணர்விழக்கச் செய்துவிட்டு- மிருகங்கள் வலியை உணராதபடி அவற்றைக் கொல்ல வேண்டும் என்று பிரிட்டனின் மிருக மருத்துவச் சங்கத்தின் தலைவர் ஜோன் பிளக்வெல் கூறியுள்ளார். அது சாத்தியப்படாவிட்டால், அவ்வாறான நடைமுறை கடைப்பிடிக்கப்படவில்லை என்று அந்த இறைச்சியில் லேபல் குத்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். அல்லாவிட்டால், இந்த …

  21. மாவோயிஸ்டுகள் அப்பாவிகளை கொல்வதில்லை: லாலு காவல்துறையினருக்கு உளவு சொல்பவர்களையே மாவோயிஸ்டுகள் கொல்கின்றனர் என்று ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ் கூறியுள்ளார். பீகா‌ர் தலைநக‌ர் பா‌ட்னா‌வி‌ல் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌‌ம் பே‌சிய அவ‌ர், சத்தீஸ்கர் முதல்வர் ராமன் சிங் கருத்துக்கு லாலு பிராசத் எதிர்ப்பு. மாவோயிஸ்டுகள் எப்போதும் அப்பாவிகளை கொல்வதில்லை. தண்டேவாடா பேருந்து தாக்குதலில் கொல்லப்பட்டவர்களும் உளவாளிகளே. சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் பதவி உள்ளதற்கு ராமனே பொறுப்பேற்க வேண்டும். பீகார் முதல்வரும் மாவோயிஸ்டுகளை கையாளத்தெரியாமல் விழிக்கிறார் என்றார். மேலும் பேசிய லாலு, மாவோயிஸ்டுகள் மிகப்பெரிய தீவிரவாதிகள் என்ற ராமனின் கருத்துக்கு லாலு கண்…

    • 5 replies
    • 865 views
  22. புடினின் முன்னாள் மனைவி- இரகசிய காதலி உட்பட... 12பேருக்கு பிரித்தானியா, பொருளாதாரத் தடை! செல்வாக்கு மிக்க அரச பதவிகளுக்கு ஈடாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் முறைகேடான செல்வத்தை மறைத்ததாக குற்றம் சாட்டப்படும் 12பேருக்கு பிரித்தானியா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. அவர்களில் அவரது முன்னாள் மனைவி லியுட்மிலா ஓச்செரெட்னயா மற்றும் அவரது இரகசிய காதலியாக நம்பப்படும் 38 வயதான முன்னாள் ஒலிம்பிக் ஜிம்னாஸ்ட்டிக் வீராங்கனை அலினா கபேவா ஆகியோர் அடங்குவர். இதுதவிர, புடினின் நெருங்கிய குடும்ப உறுப்பினரான இகோர் புதின் என்பவர் மீதும் தடை விதிக்கப்படுகிறது. ரஷ்ய தொழிலதிபரான இகோர், பெசெங்கா சர்வதேச கடல் துறைமுக இயக்குனராக இருந்து வருகிறார். 38 வயதான அலினா க…

  23. பாகிஸ்தான் சிந்து மாகாணத்தில் இந்து கோவில் தீ வைத்து எரிப்பு! [sunday, 2014-03-30 11:53:36] News Service பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள இந்து கோவில் மர்ம நபர்களால் தாக்கப்பட்டு தீ வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. லத்திபாபாத் நகரில் உள்ள அனுமன் கோவிலுக்கு நேற்று முன்தினம் 3 நபர்கள் சாமி கும்பிட வந்துள்ளனர் தரிசனம் முடிந்ததும் அவர்கள் முதலில் அனுமன் சிலையை உடைத்துள்ளனர். பின்னர் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர். தாக்குதல் நடத்தியவர்கள முகத்தை துணியால் மறைத்திருந்ததால் அடையாளம் காண முடியவில்லை என்று கோவிலின் காவல் பொறுப்பாளர் தெரிவித்தார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இது வகுப்புவாத வன்முறை அல்ல என்று முதற்கட்…

  24. ஐ.நா.: காஷ்மீர் தொடர்பான அறிக்கையொன்றை விடுத்திருந்த ஐ.நா. பின்னர் அதிலிருந்தும் தன்னை தூர விலக்கிக்கொண்டதுடன், அந்த அறிக்கை தொடர்பாக இணைப் பேச்சாளர் மீது குற்றம் சுமத்தியுள்ளமை மிகவும் சிக்கலான விடயமாக இருப்பதாக நியூயோர்க்கை தளமாகக் கொண்ட இன்னர் சிற்றி பிரஸ் நேற்று வியாழக்கிழமை தெரிவித்திருக்கிறது. இன்னர் சிற்றி பிரஸ் இது தொடர்பாக விசாரித்து கண்டுபிடித்திருப்பது வருமாறு; காஷ்மீர் வன்முறைதொடர்பான ஆரம்பகட்ட பதிலானது ஐ.நா.வின் அரசியல் விவகார திணைக்களத்தால் தயாரிக்கப்பட்டது."காலை நேர பிரார்த்தனை" சந்திப்பின்போது இது தொடர்பாக அழைப்பு விடுக்கப்பட்டது. இதற்கு ஐ.நா. அரசியல் விவகாரத்தில் பொறுப்பான லின்பாஸ்கோ தலைமை தாங்கியிருந்தார்.பிறகு அதாவது அறிக்கை வெளியிடப்படுவதற்கு…

  25. தென்னாபிரிக்க இரவு விடுதியில் 22 இளைஞர்கள் மர்ம மரணம் ! தென்னாபிரிக்காவிலுள்ள இரவு விடுதியொன்றில் மர்மமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது. ஈஸ்டர்ன் கேப் மாகாணத்தின் ஈஸ்ட் லண்டன் நகரிலுள்ள இரவு விடுதியொன்றில், நேற்று ஞாயிற்றுக்கிழமை (26) அதிகாலை சிறுவர்கள் உட்பட 22 பேர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டனர். பாடசாலை ஆண்டு இறுதியை கொண்டாடுவதற்கான பதின்ம வயது மாணவர்களின் கொண்டாட்டங்களின் போதே இச்சம்பவம் இடம்பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உள்ளூர் மக்களுக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.00 மணியளவில் இது தெரியவந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இறந்தவர்கள் 12 முதல் 20 வயதானவர்கள் என பொலிஸ் அதிகாரி டெம்பின்கோசி கினானா தெரிவித்துள்ள…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.