உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26708 topics in this forum
-
ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புடைய 10,000 டுவிட்டர் கணக்குகளை முடக்கிய இணைய ஊடுருவல் குழு பிரான்ஸின் தலைநகர் பாரிஸில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற தாக்குதல்களையடுத்து “அனானிமஸ்” எனும் மர்ம இணைய ஊடுருவல் குழுவொன்று, பயங்கரவாதிகளுக்கு எதிராக இணையவழி போரை ஆரம்பித்துள்ளது. பயங்கரவாதத்துடன் தொடர்புடையவர்களின் சமூக வலைத்தள கணக்குகளில் ஊடுருவி அக்கணக்குகளை முடக்குவதற்கு இக்குழுவினர் திடசங்கற்பம் பூண்டுள்ளனர். இதுவரை ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புடைய 10,000 பேரின் டுவிட்டர் கணக்குகளை தாம் முடக்கியுள்ளதாக அக்குழுவினர் நேற்று தெரிவித்துள்ளனர். பாரிஸ் தாக்குதல்களை திட்டமிடுவதற்கு சமூக வலைத்தளங்களை பயங…
-
- 0 replies
- 474 views
-
-
ஏமனில் சிறைச்சாலை மீது தாக்குதல் 100க்கும் மேற்பட்டோர் பலி September 2, 2019 ஏமன் நாட்டில் ஹவுத்தி போராளிகளின் சிறைச்சாலை மீது சவூதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைகள் நடத்திய வான்வழி தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக செஞ்சிலுவைச் சங்கத்தின் சர்வதேச குழு தெரிவித்துள்ளது. ஏமனின் தாமர் நகரத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் காயமடைந்த 40க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருவதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இரவு நேரத்தின் போது, ஆறு வான் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்ட சத்தம் கேட்டதாக உள்ளூர்மக்கள் தெரிவித்துள்ளனர் அதேவேளை ஏமன் அரசபடைக்கு ஆதரவாக செயல்படும் சவூதி தலைமையிலான கூட்டுப்படை தாங்கள் நடத்திய தாக்க…
-
- 0 replies
- 325 views
-
-
வோசிங்டனின் தலைநகர காவல்துறையின் கட்டளை பீடத்தின் ராடரில் மர்மபொருள் ஒன்று தென்பட்டதை தொடர்ந்து நேற்று வெள்ளை மாளிகையில் பரபரப்பு தோன்றியதுடன் உடனடியாக பாதுகாப்பு பல மடங்காக அதிகரிக்கப்பட்டது. நசனல்மோலிற்கு தெற்கு பகுதியின் வான்பரப்பில் மர்ம பொருள் ஒன்று காணப்படுவதை ராடரில் அவதானித்த அமெரிக்காவின் பாதுகாப்பு அமைப்புகளின் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கையில் இறங்கினர். பாதுகாப்பு தரப்பினர் உடனடியாக அந்த மர்மபொருளை இடைமறிப்பதற்காக விமானங்களையும் அனுப்பினர். ஆரம்பகட்ட மதிப்பீடுகள் அனுமதிக்கப்படாத விமானமொன்று வோசிங்டனின் வான்பரப்பில் நுழைந்துள்ளது என தெரிவித்ததை தொடர்ந்து அதிகாரிகள் உடனடியாக வெள்ளை மாளிகையின் பாதுகாப்பை அதிகரித்தனர். அமெரிக்காவின் பாத…
-
- 0 replies
- 504 views
-
-
[size=4]போரின்போது இலங்கை அரசுடன் இந்திய அரசும் தமிழக அரசும் கூட்டு சேர்ந்து செயற்பட்டன! – அருந்ததி ராய் செவ்வி!![/size] [size=4]'இலங்கைப் போருக்கு எதிராகப் பேசிய ஒரு சிலரில் நானும் ஒருத்தி. ஆனால், நான் என்ன பேசினேன், என்ன செய்தேன் என்பது அல்ல முக்கியம். நீங்கள் என்ன செய்தீர்கள்? உங்கள் தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் என்ன செய்தார்கள்? இலங்கை அரசுடன் இந்திய அரசும் தமிழக அரசும் கூட்டு சேர்ந்துதான் செயல்பட்டன. எல்லாம் சுயநல அரசியல்![/size] [size=4]இப்போதும்கூட தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாம்களை நேரில் பார்த்து, அங்குள்ள மக்களின் இழிநிலையைப் பற்றி நான் பேசி இருக்கிறேன். நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை உங்கள் மனசாட்சிக்கே விட்டுவிடுகிறேன்.'[/size] [size=4]இவ்வா…
-
- 1 reply
- 601 views
-
-
அமெரிக்காவில் பயணிகள் விமானத்துக்கு அருகில் பறந்த ஆளில்லா போர் விமானம் படம்: ஏ.பி. லாஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச விமான நிலையம் அருகே லுஃப்தான்சா பயணிகள் ஜெட் விமானம் பறந்து கொண்டிருக்கும் போது 200 அடிக்கு அருகில் ஆளில்லா போர் விமானம் ஒன்று மோதும் அபாயம் தவிர்க்கப்பட்டுள்ளது. இது குறித்து விமானத்தை தரையிறக்கியவுடன் லுஃப்தான்சா ஏ380 விமானத்தின் பைலட் புகார் அளித்தார். விமானம் அப்போது 5,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது. விமான நிலையத்திற்கு 14 மைல்கள் கிழக்காக பறந்து கொண்டிருந்தது. அப்போது தான் இந்த ட்ரோன் அபாயம் ஏற்பட்டது. ஆனால் விமானி சாமர்த்தியமாக அதிலிருந்து திசைதிருப்பி பாதுகாப்பாக தரையிறக்கினார். ஆளில்லா போர் விமான பற்றிய தகவல் இல…
-
- 0 replies
- 376 views
-
-
இந்தியன் நாஷனல் ஆர்மி (Indian National Army) என்றும் ஐஎன்ஏ (INA) என்றும் அழைக்கப்படும் இந்திய தேசிய இராணுவத்தை நேத்தாஜி சுபாஸ் சந்திர போஸ் ஜப்பான் ஆட்சிக்கு உட்பட்ட சிங்கப்பூரில் நிறுவினார். அதில் இருந்தவர்களில் பாதிப் பேர் தமிழர்கள். மேஜர் ஜெனரல் அழகப்பா, கேணல் சோமசுந்தரம், பிரிகேடியர்கள் நாகரத்தினம், எஸ்.ஏ அய்யர், திவி, கப்டன் டாக்டர் லக்சுமி சைகல், என்போர் தமிழர்கள். நேத்தாஜிக்குப் பிடித்த தமிழர் உணவைத் தயாரித்துக் கொடுத்த சமையற்காரர் காளி தமிழராவர். மறு பிறவி ஓன்று இருக்குமானால் நான் தமிழனாகப் பிறக்க விரும்புகிறேன் என்று சொன்னவர் சுபாஸ். அவருடைய ஜான்சி ராணி பெண்கள் அணியில் தமிழ்ப் பெண்கள் இடம்பெற்றனர். அவர்கள் பெருமளவில் மலேசியா, சிங்கப்பூரைச் சேர்ந்தவர்கள்…
-
- 1 reply
- 3.5k views
-
-
பிரஸ்ஸல்ஸில் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்த பிறகு மாயமான இன்போசிஸ் ஊழியர் ராகவேந்திரன் கணேஷ் உயிரிழந்துவிட்டதாக பெல்ஜியம் நாட்டு இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸ் விமான நிலையத்தில் கடந்த 22 ஆம் தேதி ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப் படைத் தாக்குதலில் 34 பேர் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்தின் போது பிரஸ்ஸல்ஸில் இன்போசிஸ் நிறுவனத்தில் பணிபுரிந்த சென்னையைச் சேர்ந்த ராகவேந்திரன் கணேசன் என்பவர் மாயமானார். மேலும் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடப்பதற்கு ஒரு மணிநேரத்திற்கு முன்பு மும்பையில் வசிக்கும் தனது தாய் அன்னபூரணியிடம் ஸ்கைப் மூலம் அவர் பேசியுள்ளார். இதையடுத்து அவரை தேடும் பணி தொடர்ந்து வந்தது. இந்நிலைய…
-
- 0 replies
- 559 views
-
-
பிரித்தானிய பிரதமர் டேவிட் கமெரோன் தனது காலஞ்சென்ற தந்தையின் வெளிநாட்டிலான முதலீட்டு நிதியிலிருந்து வருமானங்களைப் பெற்றதாக ஒப்புக் கொண்டதையடுத்து பதவி விலகுவதற்கான கடும் அழுத்தத்தை எதிர்கொண்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. பிரித்தானிய பிரதமர் 'ஐ.ரி.வி' தொலைக்காட்சி சேவைக்கு வியாழக்கிழமை இரவு அளித்த பேட்டியின் போது, தான் 2010 ஆம் ஆண்டு பிரதமராக பதவியேற்பதற்கு முன்னர் பஹமாஸை அடிப்படையாகக் கொண்ட பிளயர்மோர் நம்பிக்கை நிதியத்தில் தனது மறைந்த தந்தை அயன் கமெரோனிற்கு உடைமையாக இருந்த பங்குகளிலிருந்து வருமானத்தைப் பெற்றுக் கொண்டுள்ளதை ஒப்புக் கொண்டுள்ளார். பனாமாவை அடிப்படை…
-
- 0 replies
- 461 views
-
-
இடிந்தகரை: தோழர் ராஜுவுடன் தொலைபேசி நேர்காணல்! in News, பாட்காஸ்ட், போராடும் உலகம், போராட்டத்தில் நாங்கள், போலீசு கூடங்குளம் இடிந்தகரை மக்களுடைய போராட்டத்துக்கு எதிராக அரசு ஏவிவிட்டிருக்கும் அடக்குமுறை தொடர்கிறது. ஆனால் மக்கள்தான் வன்முறையைத் தூண்டியதாக அரசுடன் சேர்ந்து கொண்டு ஊடகங்கள் பொய்ப் பிரச்சாரத்தை அவிழ்த்து விட்டிருக்கின்றன. இன்று உதயகுமார் கைதாக முன்வர இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன. இந்நிலையில் கடந்த இரு நாட்களாக இடிந்தகரையில் இருக்கும் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜுவுடன், ம.க.இ.க வின் மாநிலச் செயலர் தோழர் மருதையன் தொலைபேசியில் நிகழ்த்திய உரையாடலின் ஒலிப்பதிவை வெளியிடுகிறோம். கடந்த இரு…
-
- 0 replies
- 559 views
-
-
பட மூலாதாரம், Anadolu via Getty Images கட்டுரை தகவல் அத்னான் எல்-பர்ஷ் பிபிசி அரபிக் மர்வா கமால் பிபிசி அரபிக் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் "பழைய ராணுவ வாகனங்கள் ராட்சத நடமாடும் குண்டுகளாக மாற்றப்பட்டு, குடியிருப்புப் பகுதிகளின் நடுவில் வைத்து தொலைவிலிருந்து வெடிக்கச் செய்யப்படுகின்றன. அவை முழு கட்டடங்களையும் தரைமட்டமாக்கி, அருகில் உள்ள எவரையும் நொடிகளில் துண்டு துண்டாக்கிவிடுகின்றன - அவற்றின் தாக்கம் வான்வழித் தாக்குதல்களை விடவும் மோசமானது மற்றும் பேரழிவு தரக்கூடியது." காஸா மக்கள் 'வெடிகுண்டு ரோபோக்கள்' என்று அழைக்கும் ஆயுதத்தை அங்கு வசிக்கும் ஆலம் அல்-கூல் இப்படித்தான் விவரித்தார். தாங்கள் இதுவரை சந்தித்த எந்தப் போரிலும் இதுபோன்ற ஆயுதத்தை பார்த்ததில்லை என்றும், இதைப் பயன…
-
- 0 replies
- 298 views
- 1 follower
-
-
சென்னை: தன்னைப் பற்றியும், தனது தோழி சசிகலா குறித்தும் அவதூறாக செய்தி வெளியிட்டதாக கூறி ஜூனியர் விகடன் மற்றும் குமுதம் ரிப்போர்ட்ஸ் வார இதழ்களுக்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஒரு பத்திரிகைக்கு தனது வக்கீல் நவநீத கிருஷ்ணன் மூலமாக ஜெயலலிதா அனுப்பியுள்ள நோட்டீஸில், கட்சியின் பொதுச் செயலாளர் நான் தான்; போடுங்கள் கையெழுத்து என்று சசிகலா கூறியதாக சசிகலா அரங்கேற்றிய பவர்கட் பிளான் என்ற தலைப்பில் செய்தி வெளியாகியுள்ளது. இந்த செய்தி எனது புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் திட்டமிட்டு விஷமத்தனத்துடன் உண்மைக்கு புறம்பாக புனையப்பட்ட தகவல்களை கொண்டு வெளியிடப்பட்டுள்ளது. எனது அரசியல் எதிரியான கருணாநிதி உத்தரவுபடியே அந்த செய்தி வ…
-
- 0 replies
- 769 views
-
-
தீவிரவாதி ஒமர் மடீனைவிட என் மீதே ஒபாமாவுக்கு கோபம் அதிகம்: டிரம்ப் சர்ச்சைப் பேச்சு டிரம்ப். | படம்: ராய்ட்டர்ஸ். ஆர்லாண்டோ தீவிரவாதி மீதான கோபத்தைவிட ஒபாமாவுக்கு தன் மீதே அதிக கோபம் இருப்பதாக அமெரிக்க குடியரசுக் கட்சி அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அண்மையில் ப்ளோரிடா மாகாணத்தின் ஆர்லாண்டோ நகரில் கேளிக்கை விடுதி ஒன்றில் ஐ.எஸ். ஆதரவாளர் நடத்திய தாக்குதலில் 50 பேர் பலியாகினர். 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து கருத்து தெரிவித்திருந்த டொனால்ட் டிரம்ப், "நமக்கு இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் சிக்கல் இருக்கிறது" எனக் கூறியிருந்தார். இதற்கு கடும் கண்டனம் தெரிவ…
-
- 1 reply
- 283 views
-
-
உலகில் முதல் முறையாக, சீனாவில், மூளைச்சாவு அடைந்தவரின் நுரையீரல் தானமாக பெறப்பட்டு, கொரோனாவால் பாதிக்கப்பட்டவருக்கு பொருத்தப்பட்டது. கொரோனாவின் தாயகமாக கருதப்படும் வூகான் நகரை சேர்ந்த, ஸ்வை ஜிகியாங் என்ற 65 வயது நபர், நுரையீரலில் ஏற்பட்ட இழைநார் வளர்ச்சியால், 2 நுரையீரல்களும் முற்றிலுமாக பாதிக்கப்பட்டு, மூச்சு விட சிரமப்பட்டதை தொடர்ந்து, அவருக்கு 60 நாட்களாக செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது. பல்வேறு மருத்துவமனைகளில் இருந்து, வரவழைக்கப்பட்ட சிறப்பு மருத்துவர்கள் மூலம், 8 மணி நேரம் நடைபெற்ற நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சையை தொடர்ந்து, புதிதாக பொருத்தப்பட்ட நுரையீரல்கள் சீராக செயல்படத் தொடங்கியதால், அவர் தற்போது பூரண குணமடைந்துள்ளார். https://www.polimer…
-
- 0 replies
- 377 views
-
-
ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகுவது பிரிட்டனுக்கு நன்மை தராது - கேமரன் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறும் தீர்மானம் நாட்டின் நன்மைக்குரியதல்ல. ஆனால் அந்த தீர்மானம் மதிக்கப்பட்டு சிறந்த சாத்தியமான முறையில் நடைமுறை படுத்தப்பட வேண்டும் என்று பிரதமர் டேவிட் கேமரன் தெரிவித்திருக்கிறார். நிறைந்திருந்த மக்கள் பிரதிநிதிகளின் மத்தியில் உரையாற்றியபோது அவர் இவ்வாறு தெரிவித்திருக்கிறார். அவர் பதவி விலக போவதாக அறிவித்த பிறகு ஆற்றுகின்ற முதல் உரையில், முறையாக விலகல் நடைமுறை குறித்து தனக்கு அடுத்து வரும் பிரதமர் தீர்மானிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். பிரிவு 50 என்று அறியப்படும் பொறிமுறையில் எந்த மாதிரியான புதிய உறவை உருவாக்குவது என்ற…
-
- 0 replies
- 272 views
-
-
ருவாண்டாவில் நிகழ்ந்த இனப்படுகொலையின் சூத்திரதாரியென பெயரிடப்பட்ட பெலிசியன் கபுகா 25 ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கைக்கு பின்னர் நேற்று சிக்கினார். பிரான்ஸில் அடையாளத்தை மறைத்து வாழ்ந்து வந்த அவரை பொலிசார் கைது செய்தனர். 20ஆம் 20 ஆம் நூற்றாண்டில் நடந்த மிக மோசமான படுகொலைகளில் ருவாண்டாவில் நடந்த படுகொலைகளும் அடங்கும். 84 வயதான அவர், அடையாளத்தை மறைத்து, வேறொரு நபரின் அடையாளத்துடன் அஸ்னியர்ஸ்-சுர்-சீன் பகுதியில் ஒரு பிளாட்டில் வசித்து வந்ததாக பிரெஞ்சு நீதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. ருவாண்டாவில் தேடப்படும் மிக முக்கிய மனிதரான அவரது தலைக்கு 5 மில்லியன் அமெரிக்க டொலர் அறிவிக்கப்பட்டிருந்தது. தனது பிள்ளைகளுடன் அவர் தலைமறைவாக வாழ்ந்து வந்துள்ளார். “உலகில் அத…
-
- 3 replies
- 848 views
-
-
கடந்த 3 ஆண்டுகளில் 394 ராணுவ வீரர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோனி, மக்களவையில் தெரிவித்தார். ராணுவம் தொடர்பாக எழுத்துப்பூர்வமாக அவர் அளித்த பதில்களில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: 2000ஆம் ஆண்டு முதல் இப்போது வரையிலான 12 ஆண்டுகளில் மொத்தம் 3,987 ராணுவ வீரர்கள், எதிரி நாட்டவரின் தாக்குதல்கள், நக்சல் ஒழிப்பு நடவடிக்கை, பயங்கரவாதிகளுடனான மோதல் உள்ளிட்டவற்றின்போது உயிரிழந்துள்ளனர்.முன்னதாக 1999ஆம் ஆண்டு கார்கில் போரில் மட்டும் 530 வீரர்கள் வீர மரணமடைந்தனர். கடந்த 3 ஆண்டுகளில் ராணுவ வீரர்கள் மீது 169 மனித உரிமை மீறல் புகார்கள் வந்துள்ளன. இவற்றில் 162 புகார்கள் தவறானவை என்பது கண்டறியப்பட்டது. ஜம்மு - காஷ்மீர், வடக…
-
- 0 replies
- 460 views
-
-
மின்னஞ்சல் விவகாரம்: 'ஹிலரி கிளிண்டன் மீது வழக்குப் பதியப்போவதில்லை' -எப்.பி.ஐ ஹிலரி கிளிண்டன் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலராக இருந்த போது, ரகசிய அரசு தகவல்களைப் பெற ஒரு அந்தரங்க மின்னஞ்சல் செர்வரைப் பயன்படுத்தியதற்காக அவர் மீது கிரிமினல் குற்றச்சாட்டுகளைப் பதிய பரிந்துரைக்கபோவதில்லை என்று அமெரிக்காவின் மத்திய புலனாய்வு நிறுவனம் கூறுயிருக்கிறது. அதிபர் பதவிக்குப் போட்டியிடும் ஹிலரி கிளிண்டன் ரகசியத் தகவல்களை கையாள்வது குறித்த சட்டங்களை மீறியிருக்கலாம், ஆனால் அவர் வேண்டுமென்றே தவறாக நடந்துகொண்டார் என்பதற்கான அறிகுறி ஏதும் இல்லை என்று எப்.பி.ஐயின் இயக்குநர் ஜேம்ஸ் கோமி கூறினார். இந்தப் பிரச்சனை அமெரிக்க நீதித்துறைக்கு விடப்பட்டு…
-
- 0 replies
- 276 views
-
-
கொரோனா வைரஸ் உங்கள் மனைவி போன்றது மந்திரி பேச்சு-பெண்கள் அமைப்புகள் கண்டனம் கொரோனா வைரஸ் உங்கள் மனைவி போன்றது என இந்தோனேசிய மந்திரியின் பேச்சுக்கு பெண்கள் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. பதிவு: மே 29, 2020 16:02 PM ஜகார்தா இந்தோனேசியாவில் 24 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கபட்டு உள்ளனர். 1,496 இறப்புகளை உறுதிப்படுத்தியுள்ளது.வைரஸ் இறப்புகளின் உண்மையான எண்ணிக்கை அதிகாரப்பூர்வ எண்ணிக்கையை விட பல மடங்கு அதிகம் என்று ஆய்வாளர்கள் மதிப்பிடுகின்றனர். இந்த நிலையில் இந்தோனேசிய பாதுகாப்பு மந்திரி முகமது மஹ்புத் இந்த வார தொடக்கத்தில் உள்ளூர் பல்கலைக்கழகத்திற்கு ஆன்லைன் மூலம் ஆற்றிய உரையில் கூறியதாவது:- நம் உடல்நலத்தில் கவனம் செலுத்தினால் கொர…
-
- 0 replies
- 508 views
-
-
இந்திய நிர்வாகத்துக்கு உட்பட்ட காஷ்மீரில், தீவிரவாத இயக்கத்தின் முக்கியத் தலைவன் கொல்லப்பட்டதை அடுத்து, போலிசாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே சனிக்கிழமை ஏற்பட்ட கடும் மோதலில், ஆர்ப்பாட்டக்காரர்கள் 6 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் 70 பேர் காயமடைந்தனர். காஷ்மீரின் புதிய தீவிரவாதத்தின் போஸ்டர் பாய் என்று அழைக்கப்படும், 21 வயதான புர்ஹான் வானி, ஷ்ரீநகருக்கு தெற்கே 45 மைல் தொலைவில் உள்ள அனந்த்நாக் பகுதியில் பதுங்கியிருந்தபோது, அதுகுறித்த பாதுகாப்புப் படையினருக்கு ரகசியல தகவல் கிடைத்ததது. அதைத் தொடர்ந்து நடந்த மோதலில் வெள்ளிக்கிழமை புர்ஹான் வானி கொல்லப்பட்டார். ''முழுமையான தாக்குதல் நடவடிக்கையில், புர்ஹான் வானியுடன் மேலும் இருவர் கொல்லப்ப…
-
- 1 reply
- 349 views
-
-
அமெரிக்க கோழி இறைச்சிக்குத் தடை விதித்த சீனா பெய்ஜிங்கில் கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்து வரும் சூழலில், அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் கோழி இறைச்சிக்கு சீனா தடை விதித்துள்ளது. அமெரிக்காவில் இயங்கும் டைசன் உணவு உற்பத்தி நிறுவனத்தில் பணிபுரிந்த ஊழியர்கள் பலருக்கு சமீபத்தில் கரோனா உறுதிப்படுத்தப்பட்டது. இந்நிலையில் இந்த நிறுவனத்திலிருந்து ஏற்றுமதியாகும் இறைச்சிக்கு சீனா தடை விதித்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து சீன ஊடகங்கள் தரப்பில், “பெய்ஜிங்கில் கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்து வரும் சூழலில் அமெரிக்காவின் டைசன் நிறுவனத்திடமிருந்து கோழி இறைச்சியை இறக்குமதி செய்வதை தற்காலிகமாகத் தடை செய்கிறோம். மேலும் பெய்ஜிங்கில் செயல்பட்ட பெப்சி …
-
- 0 replies
- 836 views
-
-
கருணைக்கொலை (ஒளி வடிவில்) தனது உயிரை மாய்த்துக்கொள்ளும் ஒருவர்.
-
- 0 replies
- 1.3k views
-
-
ஆடையில்லாமல் சாலையில் கிடந்தபோது பொதுமக்களை வேடிக்கை பார்க்கவிட்ட பொலிசார்! - டில்லி மாணவியின் நண்பர் குற்றச்சாட்டு [saturday, 2013-01-05 08:24:41] பாலியல் வன் கொடுமைக்கு உள்ளாகி உயிரிழந்த மாணவியின் ஆண் நண்பரின் பேட்டியை ஒளிபரப்பிய ஜீ நியூஸ் தொலைக்காட்சி மீது டில்லி போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது. இந்திய தண்டனைச் சட்டத்தின் 228(ஏ) (பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களின் அடையாளத்தை வெளிப்படையாக தெரிவித்தல்) பிரிவின் கீழ் ஜீ நியூஸ் தொலைக்காட்சி மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது என டில்லி மாநகர போலீஸ் செய்தித் தொடர்பாளர் ராஜன் பகத் தெரிவித்தார். மாணவி பலாத்காரம் செய்யப்பட்டபோது உடன் சென்றிருந்த அவரது நண்பர் வெள்ளிக்கிழமை இரவு ஜீ…
-
- 5 replies
- 1.3k views
-
-
அகதியாக மாறிய சீன சுற்றுலாப்பயணி சீனாவைச் சேர்ந்த சுற்றுலாப்பயணி ஒருவர், ஜேர்மனிக்கான சுற்றுலாப் பயணத்தை மேற்கொண்டபோது, அகதியாகக் கருதப்பட்டு, அகதி முகாமொன்றில் 12 நாட்கள் தங்கியிருந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. அவரது முழுப் பெயர் வெளியிடப்படாததோடு, "திரு. எல்" என்று மாத்திரமே அவரது அடையாளம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. மண்டரின் மொழி மாத்திரமே பேசத்தெரிந்த குறித்த சுற்றுலாப்பயணி, தன்னுடைய பணப்பையைத் தொலைத்துள்ளார். பொலிஸ் நிலையத்துக்குச் சென்று முறையிடும் நோக்கில் சென்ற அவர், அகதிகள் தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அலுவலகத்துக்கு மாறிச் சென்றுள்ளார். அங்கு சென்ற அவர், அங்கு வழங்கப்பட்ட படிவத்தை நிரப்பியுள்ளார். இதனைத் தொடர்ந்து, அங்கி…
-
- 0 replies
- 363 views
-
-
தமிழர்கள் பிரிந்து போக விரும்புகிறார்கள். http://news.yahoo.com/s/prweb/20090101/bs_...t317AAiIC3NybYF
-
- 5 replies
- 3.3k views
-
-
பதினொரு ஆண்டுகளில் முதல் முறையாக அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தை தாக்கியுள்ள முதலாவது புயல் கரையை கடந்துள்ளது. ஃபுளோரிடாவின் வளைகுடா கடலோரத்தில் மணிக்கு 130 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய ஹெர்மைன் என்ற இந்த புயலால் ஏற்பட்டுள்ள உயிர் ஆபத்து பற்றி ஆளுநர் ரிக் ஸ்காட் எச்சரித்திருக்கிறார். அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. பல்லாயிரக்கணக்கான வீடுகளில் ஏற்கெனவே மின்னிணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. கடலோரத்தில் வாழும் மக்கள் உள்பகுதிக்கு இடம்பெயர கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். பள்ளிக்கூடங்களையும், அரசு அலுவலகங்களையும் மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான தேசிய பாதுகாப்பு படைப்பிரிவினர் நிவாரணப் பணிகளுக்காக அணிதிரட்டப்பட்டுள்ளனர். http://www.bbc.com…
-
- 1 reply
- 575 views
-