Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. வீரகேசரி இணையம் 7/24/2011 4:15:46 PM சீனாவில் அதிவேக ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டு விபத்திற்குள்ளானதில் 35 பேர் உயிரிழந்துள்ளதோடு 210 பேர் காயமடைந்துள்ளனர். சீனாவின் கிழக்கு மாகாணமான ஹிஜியாங்கில் பாலத்தின் மீது சென்றுக் கொண்டிருந்த புல்லட் ரயில் ஒன்று மின்சாரம் தடைபட்டதால் நின்றுள்ளது. இது தெரியாமல் அதே தடத்தில் பின் தொடர்ந்து வந்த மற்றொரு புல்லட் ரயில் நின்றுக்கொண்டிருந்த புல்லட் ரயில் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் புல்லட் ரயிலின் பல பெட்டிகள் கடும் சேதமடைந்துள்ளன. சில பெட்டிகள் பாலத்தின் மீது கீழே விழுந்துள்ளன. விபத்தில் இதுவரை 35 பேர் உயிரிழந்துள்ளனர். 210 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் சீன பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். …

  2. சீனாவில் அனைத்து இந்திய செய்தித்தாள்கள் மற்றும் செய்தி இணையதளங்களுக்கு தடை இந்திய ஊடகம் மற்றும் வலைத்தளங்களை சீனா தடை செய்து உள்ளது இதற்கு இந்திய செய்திதாள் சங்கம் நடவடிக்கை எடுக்க மத்திய அரசை கேட்டு கொண்டுள்ளது. பதிவு: ஜூலை 02, 2020 15:52 PM பீஜிங் நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சீன நிறுவனங்களை சேர்ந்த டிக்டாக், ஷேர்இட், வீ சேட் உள்ளிட்ட 59 செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது.மத்திய அரசு தடை எதிரொலியாக செல்போன்களில் ஏற்கனவே பதிவிறக்கம் செய்யப்பட்ட டிக் டாக் உள்ளிட்ட செயலிகள் முடக்கப்பட்டுள்ளன. சீன செயலிகளை மத்திய அரசு தடை செய்திருப்பது தொடர்பாக இந்தியாவுக்கான சீன தூதரகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் மத்திய அரசின் நடவடிக்கை இந…

  3. சீனாவில் ஆறு ஒன்றில் அமோனியக் கழிவுகள் கலந்ததால் பெருந்தொகையான மீன்கள் உயிரிழந்துள்ளன. சீனாவில் அதிகரித்து வரும் மக்கள் தொகை மற்றும் வாகனப்பெருக்கத்தின் காரணமாக அங்கு சுகாதார சீர்கேடு அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், சமீபத்தில் தனியார் தொழிற்சாலை ஒன்றில் இருந்து வெளியேறிய கழிவு நீர் அருகில் இருந்த ஆற்றில் கலந்ததால், அங்கிருந்த மீன்கள் இறந்து கிடக்கும் காட்சி அனைவரையும் திகைப்படையச் செய்துள்ளது. சீனாவின் ஹூபெய் மாகாணத்தில் உள்ள பியுஹே ஆற்றிலேயே மீன்கள் பெருந்தொகையில் உயிரிழந்துள்ளன. இதற்கு அருகில் உள்ள தனியார் இரசாயன தொழிற்சாலையின் அமோனிய கழிவுகள் கலந்தமையே காரணமெனத் தெரிவிக்கப்படுகின்றது. ஆற்றின் மேல்பகுதியில் மீன்கள் இறந்து கிடக்கும் தகவல் அறிந்து விரைந்து வ…

  4. சீனாவில் ஆலங்கட்டி மழை - 98 பேர் பலி : 5 இலட்சம் பேர் வெளியேற்றம் சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் பெய்த ஆலங்கட்டி மழையினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் இடிபாடுகளில் சிக்கி 98 பேர் பலியாகியுள்ளதுடன் 5 இலட்சம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் மணிக்கு 100 முதல் 125 கிலோமீட்டர் வேகத்தில் பெய்த கனமழையினால் ஜியாங்சு மாகாணத்தின் யான்செங் நகரில் உள்ள நூற்றுக்கணக்கான வீடுகள் நாசமடைந்தன. வெள்ளத்தில் பல வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. இடிபாடுகள் மற்றும் வெள்ளத்தில் சிக்கி 98 பேர் உயிரிழந்தனர். 1000 இற்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர் என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சூறைக்காற்றுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் ஏராளமான மரங்…

  5. பீஜிங்:இணையதளத்திற்கு அடிமையான சீன இளைஞர்கள் மற்றும் சிறுவர்களை மீட்க, ராணுவ ஸ்டைலில் சிறப்பு முகாம் துவக்கப்பட்டு உள்ளது.சீனாவில், 632 மில்லியன் மக்கள் இணையதளத்தை பயன்படுத்துகின்றனர். அவர்களில், 24 மில்லியன் பேர், இணையதள அடிமைகளாக உள்ளனர். இவர்களில் பெரும்பாலோர் சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள். இணையதள பயன்பாட்டால், சிறுவர்கள், இளைஞர்கள் அடிமையாகி, தங்கள் வாழ்வை இழப்பதை அறிந்த, ஆளும் சீன கம்யூனிச அரசு, இந்த நோயை, மருத்துவரீதியாக, 'இன்டர்நெட் அடிக்ஷன்' என்று அதிகாரப்பூர்வமாக பெயரிட்டு அறிவித்தது.தலைநகர் பீஜிங்கின் புறநகர் பகுதியில், 'ஈஅஙீ இணைய அடிமை சிகிச்சை மையம்' 2006ம் ஆண்டு துவங்கப்பட்டது.இந்த மையத்தில், ஏறக்குறைய, 6,000 இளைஞர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்க…

    • 0 replies
    • 164 views
  6. சீனாவில் இந்திய தூதரக அதிகாரி மீது தாக்குதல் சீனாவின் இவூ நகரில் இந்திய தூதரக அதிகாரியை சீன வர்த்தகர்கள் கும்பலாக சேர்ந்து தாக்கியதில் அவர் படுகாயமடைந்து மயங்கி விழுந்தார். இதையடுத்து அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். கிழக்கு சீனாவில் உள்ள இவூ நகரில் Euro Global Trading என்ற நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம் அந் நாட்டு வர்த்தகர்கள் சிலருக்கு பாக்கி வைத்துள்ளது. பணத்தை தராத அந்த நிறுவனத்தின் அதிபர் சீனாவிலிருந்து தப்பிவிட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து அந்த நிறுவனத்தில் பணியாற்றும் இரு இந்திய ஊழியர்களான தீபக் ரகேஜா, ஷியாம்சுந்தர் அகர்வால் ஆகியோரை சீன வர்த்தகர்கள் கடத்திச் சென்று சிறை வைத்தனர். இதையடுத்து அவர்களை மீட்க இந்திய வெளியுறவுத்துறை நடவடிக்கை…

    • 3 replies
    • 923 views
  7. பெய்ஜிங்: சீனாவில் இன்று மீண்டும் பயங்கர நிலநடுக்கம் தாக்கியுள்ளது. சீனாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள சிஸ்வான் மாகாணத்தில் மீண்டும் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 12ம் தேதியன்ற இதே பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் 12000 பேருக்கு மேல் பலியாயினர். இடிபாடுகளில் சிக்கித் தவிக்கும் மக்களை மீட்கும் நடவடிக்கைகள் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த பரிதாபம் நடந்துள்ளது. கடந்த முறையைவிட இந்த பூகம்பம் கடுமையாக இருந்தது. 12ம் தேதி ஏற்பட்ட பூகம்பம் ரிக்டர் அளவில் 7.61 ஆக பதிவாகியிருந்தது. பயங்கர பூகம்பம் ஏற்பட்ட சில நாட்களில் மீண்டும் லேசான பூகம்பம் ஏற்படுவது வழக்கம் என்று புவியியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஆனால் தற்போது மு…

    • 1 reply
    • 931 views
  8. சீனாவில் ராணுவ புரட்சி ஏற்பட்டுள்ளதாக இணையதளங்கள் மூலம் வதந்தி பரவியுள்ளது. சீன இணையதளங்கள் பலவற்றில் இராணுவ புரட்சி செய்தி வெளியிடப்பட்டதுடன், தலைநகர் பீஜிங் நகர தெருக்களில் ராணுவ டாங்கிகளும், கவச வாகனங்களும் உலவுவது போன்ற படங்களும் வெளியிடப்பட்டன. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த சீன அரசின் தணிக்கைத்துறை அதிகாரிகள், அந்த இணையதள செய்தியை முடக்கி வைத்தனர். ராணுவ டாங்கி படங்கள், ராணுவ ஒத்திகையில் எடுக்கப்பட்ட பழைய படங்கள் ஆகும். சீன ஜனாதிபதி ஹு ஜின்டாவோவின் பதவிக்காலம் இந்த ஆண்டு இறுதியில் முடிவடைகிறது. அதையடுத்து, துணை அதிபர் ஜி ஜின்பிங், புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் அதிபர் பதவியை பிடிக்க, ஆளும் கட்சியான…

  9. சீனாவில் இரு பெரும் நில அதிர்வுகள்: 3 பேர் பலி, 70 ஆயிரம் பேர் பாதிப்பு ! சீனாவில் நேற்று இரவு இடம்பெற்ற இரு பெரும் நில அதிர்வுகளில் சிக்கி 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் 27 பேர் காயமடைந்துள்ளனர். இதேவேளை, 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. சீனாவின் குயிங்காய் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 11.34 மணியளவில் சக்தி வாய்ந்த நில அதிர்வொன்று ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் 7.4 ரிச்டர் அளவுகோலில் பதிவாகி உள்ளது. இதனை தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. எனினும், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. இந்த நிலநடுக்கத்தால் நகரின் பல பகுதிகளில் அதிர்வுகள் உணரப்பட்டன. இதனால் ஏற்…

  10. சீனாவில் கொரோனா வைரஸ் பரவியவுடன் அங்கிருந்து 4 லட்சத்து 30 ஆயிரம்பேர் அமெரிக்காவுக்கு வந்துள்ளனர். அவர்களை சரியாக பரிசோதிக்காததால் அமெரிக்காவில் நோய் பரவியது தெரிய வந்துள்ளது. கோப்புபடம் வாஷிங்டன்: உலக அளவில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இதற்கு அமெரிக்காவின் மெத்தனமே காரணம் என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக, அமெரிக்காவின் முன்னணி பத்திரிகையான ‘தி நியூயார்க் டைம்ஸ்’-ல் நேற்று அதிர்ச்சிகரமான செய்தி வெளியானது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:- சீனாவில் கொரோனா வைரஸ் பரவியது பற்றி புத்தாண்டுக்கு முந்தைய நாளில்தான் சர்வதேச நாடுகளுக்கு சீனா சொன்னது. அதன்பிறகும் ஜனவரி மாத…

  11. பீஜிங்: சீன தலைநகர் பீஜிங்கில் இருந்து அமெரிக்காவுக்கு மணிக்கு 350 கிலோ மீட்டர் வேகத்தில் அதிவேக ரயில் போக்குவரத்து தொடங்க சீனா திட்டமிட்டு உள்ளது. சீனாவின் வடகிழக்கு பகுதி வழியாக 13 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் வரை அமெரிக்காவுக்கு கடலுக்கு அடியில் ரயில் இருப்பு பாதைகளை அமைத்து, சைபீரியா மற்றும் அலாஸ்கா நீரிணைப்பு வழியாக மணிக்கு 350 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் அதிவேக பறக்கும் ரயிலை விடுவதற்கு சீன பொறியியல் அகடமி திட்டமிட்டு உள்ளது. சீனாவில் இருந்து ரஷ்யா மற்றும் அலாஸ்கா வழியாக கடலுக்கு அடியில் 200 கிலோ மீட்டர் தூரம் தொடர் சுரங்க ரயில் பாதை அமைத்து, 13 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அமெரிக்காவை இணைக்கும் திட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. மிக விரைவில் …

  12. சீனாவில் உள்ள இந்திய தூதரக அலுவலகத்தில் முதன்மை செயலாளராக பணியாற்றி வந்தவர், எம்.எம். சர்மா. இவர் பீஜிங் நகரில் உள்ள அலுவலகத்தில் பணியாற்றிய போது, சீன ஆசிரியை ஒருவருக்கும், அவருக்கும் கள்ள தொடர்பு ஏற்பட்டது. இது பற்றிய புகாரில் பேரில், இந்திய அதிகாரி சர்மா, இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டார். இதுபற்றி டெல்லியில் வெளிஉறவுத்துறை அதிகாரி நவ்தேஜ் சர்னா கூறுகையில், "டெல்லியில் சர்மாவின் மனைவி மருத்துவமனையில் இருக்கிறார். எனவே சர்மாவின் வேண்டுகோள் படி, அவர் டெல்லிக்கு மாற்றப்பட்டு இருக்கிறார்'' என்றார். http://isoorya.blogspot.com/

    • 0 replies
    • 951 views
  13. சீனாவுடனான ஒற்றுமையை வெளிக்காட்ட கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ள பகுதியில் உள்ள தங்கள் நாட்டு மாணவர்களை மீட்கமாட்டோம் என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இது குறித்து இஸ்லாமாபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய, பாகிஸ்தான் பிரதமரின் நேரடி சிறப்பு சுகாதார ஆலோசகர் சபீர் மிஸ்ரா, நாடு, உலகம் ஆகியவற்றின் நன்மை கருதியே வுகானில் இருந்து பாகிஸ்தானியர்களை மீட்கவில்லை என்றார். ஒருவேளை பொறுப்பற்ற தன்மையுடன் நடந்துகொண்டு எங்கள் நாட்டினரை வுகான் நகரில் இருந்து மீட்டு பாகிஸ்தான் அழைத்துவந்தால் அந்த வைரஸ் காட்டுத்தீ போல பல இடங்களுக்கும் பரவிவிடும் என்று அவர் கூறினார். கொரோனா வைரஸ் பரவும் தன்மை கொண்டுள்ளதால் தற்போது உணர்ச்சிப்பூர்வமாக முடிவெடுக்க முடியாது என்று அவர் தெரிவித்தார். ht…

    • 7 replies
    • 890 views
  14. சீனாவில் இருந்து பிரித்தானியப் பிரஜைகள் வெளியேறவேண்டும் : வெளியுறவு அலுவலகம் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான சீனாவில் இருந்து பிரித்தானியப் பிரஜைகள் அனைவரும் வெளியேறவேண்டும் என பிரித்தானிய வெளியுறவு அலுவலகம் தெரிவித்துள்ளது. வைரஸ் பாதிப்புக்குள்ளான ஹூபே மாகாணத்திலிருந்து பிரித்தானியர்களை வெளியேற்றுவதற்கான பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக வெளியுறவு அலுவலகம் தெரிவித்துள்ளது. வைரஸால் பாதிப்பு அபாயத்தைக் குறைக்க சீனாவில் உள்ள பிரித்தானியப் பிரஜைகளை விரைவாக நாட்டை விட்டு வெளியேறும்படி அறிவுறுத்துகிறோம் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் டொமினிக் ராப் தெரிவித்துள்ளார். ஹூபே மாகாணத்தில் இருந்து வெளியேற விரும்பும் பிரித்தானியப் பிரஜைகளுக்கு உதவுவதற்காக நாங்கள் த…

  15. சீனாவில் இருந்து லண்டனுக்கு நேரடி ரயில் சேவை : 12 ஆயிரம் கிலோ மீற்றரை 18 நாட்களில் கடக்கும் ஐரோப்பாவுடனான தனது வர்த்தக உறவுகளை மேலும் பலப்படுத்திக்கொள்வதற்காக, ரயில் சேவை மூலம் நேரடியாக லண்டனுக்கே பொருட்களை அனுப்பத் தொடங்கியுள்ளது சீனா. இதன்படி, பொருள் வர்த்தகத்தில் முன்னணியில் விளங்கும் சீனாவின் யிவு நகரில் இருந்து முதன்முறையாக ரயில் ஒன்று பொருட்களுடன் லண்டன் நோக்கிப் புறப்பட்டுள்ளது. சுமார் 12 ஆயிரம் கிலோமீற்றர் தொலைவை பதினெட்டே நாட்களில் இந்தத் ரயில் கடந்து விடும் என்று சீனா தெரிவித்துள்ளது. இந்தப் பயணத்தின்போது குறித்த ரயிலானது கஸகஸ்தான், ரஷ்யா, பெலாரஸ், போலந்து, ஜேர்மனி, பெல்ஜியம் மற்றும் ஃப்ரான்ஸ் வழியாக லண்…

  16. சீனாவில் இறைச்சி விலங்குகள் குறித்த புதிய வரைவு பட்டியல் .. சீனாவில் இறைச்சிக்காக வளர்க்க வேண்டிய விலங்குகள் குறித்த புதிய வரைவு பட்டியலை அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ளது.வூகானில் இருக்கும் ஈரபதம் நிறைந்த கடல் உணவு மற்றும் இறைச்சி சந்தை விலங்குகளிடம் இருந்து கொரோனா பரவியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதையடுத்து, எந்த விலங்குகளை இறைச்சிக்கு வளர்க்கலாம் என்ற வரைவு பட்டியலை வெளியிட்டுள்ளது. இறைச்சிக்கு பன்றிகள், பசுக்கள், கோழிகள், ஆடுகள், மான்கள், தீக்கோழிகள், ஒட்டக இன அல்பாகா விலங்கு ஆகியவற்றை வளர்க்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நரி, கீரிப்பிள்ளை, காட்டு எலி ஆகியவற்றை வளர்க்கலாம், ஆனால் இறைச்சிக்கு பயன்படுத்த கூடாது என கூறப்பட்டுள்ளது. கெ…

    • 1 reply
    • 950 views
  17. சீனாவில் இஸ்லாமியவாத தீவிரவாதம் - காணொளி 7 மணி நேரங்களுக்கு முன்னர் சீனாவில் தீவிரவாத இஸ்லாத்தின் அச்சுறுத்தல் அதிகரிப்பதாக சீன அரசாங்கம் கூறுகிறது. 2014இல் பெரும்பாலும் முஸ்லிம்களைக் கொண்ட வீய்கர் இன சிறுபான்மையினரின் மேற்கு மாகாணமான, சின்சியாங்கில் அமைதியீனத்தை கையாள அரசாங்கம் முயற்சித்தது. அங்கு போலிஸ் செலவு இரட்டிப்பாக்கப்பட்டு, பல வீய்கர் இனத்தவர் கைது செய்யப்பட்டும் அங்கு வன்செயல்கள் ஓயவில்லை. அந்த சிறுபான்மை இன மக்களின் மசூதிகள் நிர்மூலம் செய்யப்பட்டதால் அவர்கள் பழிவாங்க முற்படுவதாகவும் கூறப்படுகின்றது. அந்தப் பகுதிக்கு செல்ல பிபிசிக்கு அபூர்வமான ஒரு வாய்ப்பு கிட்டியது. அப்போது தயாரிக்கப்பட்ட காணொளி யைக்காண கீழுள்ள இணைப்பை அழுத்தி காணலாம் http://www.bbc.c…

    • 0 replies
    • 487 views
  18. சீனாவில் உலகின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப மையம் ************************************************** தகவல் தொழில்நுட்ப மென்பொருள் ஏற்றுமதித் துறையில் இந்தியாவிற்கு சவாலாகும் மாபெரும் இலக்குடன் சீனா களமிறங்கியுள்ளது. அந்த நாட்டின் வடகிழக்கு மாகாணமான லயோனிங்கில் உள்ள டாலியான் என்ற கடற்கரை நகரில் உலகின் மிகப்பெரிய மென்பொருள் மற்றும் தகவல் தொழில்நுட்ப மையம் ஒன்றின் கட்டுமானப் பணியை சீனா துவக்கியுள்ளது. இது சீனாவின் வெறும் சிலிகான் பள்ளத்தாக்கு மட்டுமல்ல. முதல் தர பணிச் சூழலுடன் கூடிய தகவல் தொழில்நுட்ப நகரம் என்று டாலியான் நகர மேயர் பெருமையுடன் கூறுகிறார். இந்த மையம் 40 கி.மீ பரப்பளவில் கட்டப்படுவதுதான் இதன் சிறப்பம்சம். லியான் டியான்டி தகவல் தொழில்நுட்ப …

  19. உலகிலேயே பெரிய அணை சீனாவில் உள்ள யாங்சி ஆற்றில் 2006-ம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த அணையில் இருந்து 22 ஆயிரத்து 500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. அணை கட்டுமான பணி 1994-ம் ஆண்டு தொடங்கி 2006-ல் முடிவடைந்தது. இந்த அணையை கட்டி முடிக்க ரூ.2லட்சம் கோடி செலவிடப்பட்டது. அப்போது அணை பகுதியில் இருந்த 14 பெரிய நகரங்கள், 133 சிறு நகரங்கள், 1350 கிராமங்கள் காலி செய்யப்பட்டு 14 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டனர். அணை கட்டி முடிக்கப்பட்டதில் இருந்து அடிக்கடி அணை பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. இதுவரை 96 தடவை நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இனியும் 5386 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கண்டறிந்து உள்ளனர். நிலச்சரிவை தடுக்க 355 இடங்களில் தடுப்பு நடவ…

    • 0 replies
    • 775 views
  20. கொரோனா வைரஸ் குறித்த ஆரம்ப தகவல்களை தணிக்கை செய்தமைக்காக சீனாவை கண்டித்துள்ள எல்லைகளற்ற செய்தியாளர்கள் அமைப்பு ஊடகவியலாளர்களிற்கு சீனாவில் அதிக சுதந்திரம் வழங்கப்பட்டிருந்தால் உலகளாவிய தொற்றினை கட்டு;;ப்படுத்தியிருக்கலாம் அல்லது அதன் தாக்கத்தை குறைத்திருக்கலாம் என தெரிவித்துள்ளது. சீனாவில் ஊடக சுதந்திரம் காணப்பட்டிருந்தால், முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்தவர்களை சீனா மௌனமாக்காமலிருந்திருந்தால்,உலகளாவிய நோய் தொற்றை கட்டுப்படுத்தியிருக்கலாம் என எல்லைகளற்ற செய்தியாளர்கள் அமைப்பின் ஐக்கிய இராச்சியத்திற்கான பணியகத்தின் இயக்குநர் ரெபேக்கா வின்சென்ட் சிஎன்என்னிற்கு தெரிவித்துள்ளார். சில சந்தர்ப்பங்களில் நாங்கள் ஊடக சுதந்திரம் குறித்து தத்துவார்த்த ரீதியில் பேசுக…

  21. சீனாவில் எரிபொருள் தாங்கி வெடித்துச் சிதறியதில் 19 பேர் உயிரிழப்பு, 172 பேர் காயம் சீனாவில் எரிபொருள் தாங்கி ஒன்று வெடித்து சிதறியதால் 19 பேர் உயிரழந்ததுடன் 172 பேர் காயமடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சீனாவின் கிழக்குப் பிராந்தியத்திலுள்ள ஜேஜியாங் மாகாணத்தின் வென்லிங் என்ற நகரில் நேற்று (சனிக்கிழமை) இச்சம்பவம் இடம்பெற்றது. நெடுஞ்சாலையொன்றில் சென்றுகொண்டிருந்த எரிபொருள் தாங்கி வெடித்தத்தில் அருகிலிருந்த வீடுகள், தொழிற்சாலைகள் சேதமடைந்ததுடன் பாரிய தீ பரவி பல வாகனங்களும் தீக்கிரையாகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்த 172 பேர் தொடரந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் விபத்துக்கான காரணம் தொடர்பாக விசாரணைகள் இடம்பெற்று …

  22. சீனாவில் ஏற்பட்ட காட்டுத் தீ: தீயணைப்பு வீரர்கள் உட்பட 19 பேர் உயிரிழப்பு! by : Litharsan சீனாவில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி 18 தீயணைப்பு வீரர்கள் உட்பட 19 பேர் உயிரிழந்துள்ளனர். சிச்சுவான் (Sichuan) மாகாணத்தில் உள்ள சிச்சாங்கில் (Xichang) பண்ணை ஒன்றில் திடீரென ஏற்பட்ட தீ, பலத்த காற்றின் காரணமாக அருகில் உள்ள மலைப்பகுதிக்கும் வேகமாகப் பரவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இதில் சிக்கிய சுற்றுவட்டார கிராமத்தைச் சேர்ந்த வழிகாட்டி ஒருவரும், தீயணைப்பு வீரர்கள் 18 பேரும் உயிரிழந்தனர். இதுவரை ஆயிரம் ஹெக்டேயர் பரப்பளவில் தீ பரவியுள்ள நிலையில் தீயை அணைக்கும் பணியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தீயணைப்…

    • 0 replies
    • 295 views
  23. சீனாவில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் 150 பேர் பலி சீனாவின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகளில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் குறைந்தது 150 பேர் இறந்தனர். பலர் காணாமல் போயுள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். ஹெபெய் மற்றும் ஹூனான் மாகாணங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. குறைந்தது 114 பேர் ஹெபெயில் பலியாகியுள்ளனர். 111 பேரை காணவில்லை. 53 ஆயிரம் வீடுகள் அழிந்துள்ளன என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 15 பேர் பலியாகியுள்ள ஹெனான் மாகாணத்திலும் 72 ஆயிரம் பேர் வெளியேறியுள்ளனர். சிங்தாய் நகரத்தில் மட்டும் 25 பேர் பலியாகியிருப்பது வெள்ளப்பெருக்கிற்கு முன்னரே அரசு எச்சரிக்கவில்லை என்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.