Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. உக்ரேன் மீது 800 ட்ரோன்களை ஏவிய ரஷ்யா உக்ரேன் - ரஷ்யா மோதல் தொடங்கியதில் இருந்தே இதுதான் மிகப் பெரிய ட்ரோன் தாக்குதல் என்று கூறப்படுகிறது. இத்தாக்குதலில் உக்ரேன் அரசு தலைமை அலுவலக கட்டிடத்தின் மேல்தள பகுதியில் தீப்பிடித்து, புகை எழுந்தது. இதை சர்வதேச ஊடகவியலாளர்கள் உறுதி செய்துள்ளனர். 800 ட்ரோன்களை ஏவி தாக்குதல் நடத்தியுள்ளது ரஷ்யா. இந்த தாக்குதல் ஞாயிற்றுக்கிழமை (செப்.7) நடந்துள்ளது. இதுநாள் வரையில் கீவ் நகரில் அரசு கட்டிடங்கள் மீதான தாக்குதலை ரஷ்யா தவிர்த்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஞாயிற்றுக்கிழமை (07) அன்று ரஷ்யாவின் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலில் கீவ் நகரில் ஒரு வயது குழந்தை உட்பட இரண்டு பேர் உயிரிழந்ததாக தகவல் கிடைத்துள்ளது. இந்த தாக்குதலில் கர்ப்பிணி உட…

  2. Published By: Digital Desk 3 17 Sep, 2025 | 11:36 AM பாகிஸ்தானின் பிரபல குழந்தை நட்சத்திரமான உமர் ஷா ( Umar Shah) தனது 15 வயதில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவரது திடீர் மரணம் அந்நாட்டு ரசிகர்களையும், பிரபலங்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பிரபல 'ஜீதோ பாகிஸ்தான்' (Jeeto Pakistan) தொலைக்காட்சி தொடர் உட்பட பல நிகழ்ச்சிகளில் நடித்து வந்த உமர் ஷா, தனது வீட்டில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். 25 வயதிற்குட்பட்ட இளைஞர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவது என்பது மிகவும் அரிதானது. இந்நிலையில், சிறு வயதிலேயே உமர் ஷா உயிரிழந்தது பாகிஸ்தானில் உள்ள ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. உமர் ஷாவின் சகோதரரும், பிரபல டிக்டொக் நட்சத்திரமுமான அகமது ஷா, தனது சமூக வலைத்தள பக்கத்தில் …

  3. கொழும்பு: "வரும் டிசம்பர் மாதத்தில் இலங்கை ராணுவ உயரதிகாரிகள் 45 பேர் பயிற்சிக்காக இந்தியா செல்லவுள்ளனர்.தமிழக அரசியல்வாதிகள் முடிந்தால் தடுத்துக் கொள்ளட்டும்” ௭ன்று இலங்கை ராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய சவால் விடுத்துள்ளார். இலங்கை ராணுவத்தின் 63-வது ஆண்டு நிறைவையொட்டி அனுராதபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய ஜகத் ஜயசூரிய,"யுத்தத்தின் பின் தீவிரவாதத்தை எமது நாட்டில் இருந்து முழுமையாக அகற்றியுள்ளோம்.இந்த யுத்தத்தில் நாம் பெற்றுக் கொண்ட அனுபவங்களை ஏனைய நாடுகளுடன் பகிர்ந்து கொள்வதிலும் ஆர்வமாகவே உள்ளோம். இதன் அடிப்படையிலேயே இந்திய ராணுவத்தினருடன் இணைந்து கூட்டுப் பயிற்சிகளை இலங்கை ராணுவம் அண்மையில் நடத்தியது. இந்தியாவில் சுமார் 800 இலங…

  4. பெர்லின்: உலகின் தேவை அதிகரித்ததன் காரணமாக, சீன 'மாஸ்க்' குகளை பெற பல்வேறு நாடுகளின் ஏஜென்டுகள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுவருகிறார்கள். இதுஉலகின் தேவையை பிரதிபலிக்கிறது என ஜெர்மன் சுகாதார அமைச்சர் ஜென்ஸ் ஸ்பான் கூறினார். கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான உபகரணங்களை பெற ஒரு நிறுவனத்திற்கு சென்ற போது ஸ்பான் இவ்வாறு தெரிவித்தார். மற்ற நாடுகள் வாங்கும் 'மாஸ்க்'களை தான் அமெரிக்காவும் வாங்கிவருகிறது. இதனால் அது ஒரு வலுவான தேவையை மட்டும்தான் பிரதிபலிக்கும். ஆனால் அது நல்ல வளர்ச்சி அல்ல. இந்நிலையில் பாதுகாப்பான 'மாஸ்க்'குகளை உற்பத்தி செய்வதில் ஐரோப்பிய நாடுகளுக்கிடையே அதிக ஒத்துழைப்புக்கு வாய்ப்பு உள்ளது. இவ்வாறு ஸ்பான் கூறினார். https://www.dinamalar.com/news…

    • 1 reply
    • 827 views
  5. ஜெர்மன் மின் கட்டக் கட்டணங்கள் 2026 ஆம் ஆண்டில் பாதிக்கும் மேல் குறைய உள்ளன. ராய்ட்டர்ஸ் மூலம் அக்டோபர் 1, 2025 7:52 PM GMT+10 அக்டோபர் 1, 2025 அன்று புதுப்பிக்கப்பட்டது ஜனவரி 31, 2025 அன்று ஜெர்மனியின் லுயெட்டோ-வல்லுன் அருகே A24 மோட்டார் பாதைக்கு அருகில் உயர் மின்னழுத்த மின் இணைப்புகள் மற்றும் மின்சார தூண்கள் படத்தில் காட்டப்பட்டுள்ளன. REUTERS/Annegret Hilse/கோப்பு புகைப்படம் உரிமம் வாங்கும் உரிமைகள், புதிய தாவலைத் திறக்கிறது நிறுவனங்கள் 50ஹெர்ட்ஸ் டிரான்ஸ்மிஷன் GmbH ஆம்ப்ரியன் ஜிஎம்பிஹெச் டென்னெட் ஹோல்டிங் பிவி பெர்லின், அக்டோபர் 1 (ராய்ட்டர்ஸ்) - ஜெர்மனியின் டிரான்ஸ்மிஷன் சிஸ்டம் ஆபரேட்டர்கள் 2026 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட மின்சார கட்டக் கட்டணங்களை அறிவித்தனர், இது அரச…

    • 2 replies
    • 197 views
  6. சீனச் சறுக்கல் ராஜதந்திரத் துறையில், சர்வதேச அளவில் ஒரு பெரும் சறுக்கலைச் சந்தித்திருக்கிறது சீனா. “தென் சீனக் கடல் மீது சீனாவுக்கு வரலாற்றுபூர்வமான உரிமை ஏதும் கிடையாது, தனது செயல்கள் மூலம் பிலிப்பின்ஸ் நாட்டின் இறையாண்மை உரிமையை மீறியிருக்கிறது” என்று நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் உள்ள சர்வதேச நடுவர் மன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு சர்வதேச அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சீனா அசரவில்லை. முதலில் “இந்த வழக்கே ஒரு கேலிக்கூத்து” என்றது. அடுத்து, “இந்தத் தீர்ப்பு தென்சீனக் கடல் பகுதியில் சீனாவுக்கு இருக்கும் உரிமையை எவ்விதத்திலும் பாதிக்காது. எந்த நேரத்திலும் தென்சீனக் கடல் பகுதியில் இருந்து கடற்படையை இயங்குவோம். தீர்ப்பு ந…

  7. தமிழகத்தில் கூலிப்படைகள் உருவாக மதுவே காரணம் என, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ குற்றம்சாட்டினார்.தமிழகத்தில், பூரண மதுவிலக்கை வலியுறுத்தி, 2வதுநாள் விழிப்புணர்வு பிரசார நடைபயணத்தை, தூத்துக்குடிமாவட்டம் காந்திநகரில், நேற்று காலை வைகோ துவங்கினார். சொக்கன்குடியிருப்பு, வடக்குஉடைபிறப்பு,மணிநகர், நெய்யூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் வழியாக, தொண்டர்களுடன் வந்த அவர், வழியில், ஆசிரியர் பயிற்சி கல்லூரி மற்றும் பள்ளி மாணவ,மாணவியரை சந்தித்து, மதுவின் தீமை குறித்தும், அதை ஒழிக்கவேண்டியதன் அவசியம் குறித்தும், துண்டுபிரசுரம் தந்து வலியுறுத்தினார். மதுஒழிப்பு கொள்கையில் உறுதியாக இருக்கும்படி கேட்டுக்கொண்டார். உடன்குடியில் வைகோ பேசியதாவது: தி.மு.க.,- அ.தி.மு.க., அரசுகள் மது…

    • 0 replies
    • 516 views
  8. பெய்ஜிங், சீனா ராணுவம் அவ்வப்போது ஊடுருவி வருவதால் இந்திய-சீன எல்லையில் 100 போர் பீரங்கிகளை பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக இந்திய ராணுவம் நிலை நிறுத்தியுள்ளது. இதற்கு சீன ஊடகங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதுகுறித்து சீனாவின் அரசு ஊடகமான 'குளோபல் டைம்ஸ்' வெளியிட்டுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளவை பின்வருமாறு:- இந்தியாவில் சீன நிறுவனங்கள் அதிக அளவில் முதலீடு செய்ய விரும்புகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், இந்திய ராணுவம் 100 போர் பீரங்கிகளை நிலை நிறுத்தியிருப்பது மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. எல்லையில் பீரங்கிகளை நிறுத்திவிட்டு சீனாவின் முதலீடுகளை அதிகரிக்க இந்தியா விரும்புவது நகைப்புக்குரியதாக உள்ளது. பீரங்கிகளை நிறுத்தியிருப்பதன் எதிரொலியாக இந்…

  9. இண்டிகோ விமானத்தில் பயணி ஒருவர் ஐ.எஸ். ஆதரவு கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.துபாய் - கோழிக்கோடு இடையே இண்டிகோ விமானம் இயக்கப்படுகிறது. இந்நிலையில் இண்டிகோ விமானம் இன்று துபாயில் இருந்து கேரளா மாநிலம் கோழிக்கோடிற்கு சென்று கொண்டிருந்தது. அப்போது விமானத்தில் இருந்த பயணி ஒருவர் திடீரென எழுந்து நின்று ஐ.எஸ். ஆதரவு கோஷமிட்டதால் பயணிகளிடையே பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தை தொடர்ந்து கோழிக்கோடு சென்ற விமானம் அவசரமாக மும்பையில் தரையிறக்கப்பட்டது. உடனே அதிகாரிகள் வந்து சம்மந்தப்பட்ட நபரை கைது செய்தனர். தொடர்ந்து அந்த நபரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. http://www.seithy.com/breifNews.php?newsID=162435&category=…

    • 1 reply
    • 286 views
  10. நாளை மிஸ்வேர்ல்ட் இறுதிச் சுற்று-வெல்வாரா பார்வதி ஓமனகுட்டன்? 2008ம் ஆண்டுக்கான மிஸ் வேர்ல்ட் அழகிப் போட்டியின் இறுதிச் சுற்று நாளை ஜோஹன்னஸ்பர்க் நகரில் நடைபெறுகிறது. இதில் இந்தியாவின் சார்பில் கேரளத்தைச் சேர்ந்த பார்வதி ஓமனக்குட்டன் பங்கேற்றுள்ளார். ஒரு காலத்தில் உலக அழகிகளுக்கு மட்டுமே சொந்தமாக இருந்த மிஸ் வேர்ல்ட் பட்டங்களும், மிஸ் யுனிவர்ஸ் பட்டங்களும் ரீட்டா பெரைரா மூலம் இந்திய அழகிகளுக்கும் வாய்த்தது. ஆனால் சுஷ்மிதா சென்னுக்குப் பிறகுதான் நிறைய இந்திய அழகிகள், சர்வதேச அழகிககளாக சர்வ சாதாரணமாக உருவெடுக்க ஆரம்பித்தார்கள். 1966ல் ரீட்டா பெரைரா பட்டம் பெற்ற பின்னர் 94ல் ஐஸ்வர்யாவும், 97ல் டயானா ஹைடனும், 99ல் யூக்தா முகியும், 2000மாவது ஆண்டில் பிரியங்கா சோ…

  11. டெல்லியில் ஓடும் பஸ்சில் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட மாணவி, சிங்கப்பூரில் ரஜினிகாந்த் சிகிச்சை பெற்ற மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது உயிரை காப்பாற்ற டாக்டர்கள் இரவு, பகலாக போராடுகின்றனர். சிங்கப்பூரில் மாணவி டெல்லியில் கடந்த 16–ந்தேதி இரவில் ஓடும் பஸ்சில் ஒரு கும்பலால் கற்பழித்து, சிதைக்கப்பட்ட நிலையில் வெளியே மாணவி ஒருவர் வீசப்பட்ட சம்பவம், நாடு முழுவதும் பெருத்த கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எதிராக டெல்லியில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. டெல்லி சப்தர்ஜங் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, கடந்த 10 நாட்களாக உயிருக்காக போராடி வந்த மாணவி, உயர் சிகிச்சைக்காக சிங்கப்பூருக்கு நேற்று இரவில் ஆம்புலன்ஸ் விமானம் மூலம் எடுத்துச்செல்லப்பட்டா…

  12. ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதிகளிலும், சியாச்சின் பகுதியிலும் இந்தியத் துருப்புகளின் ஆயத்த நிலை குறித்து அறிவதற்காக ராணுவ தளபதி ஜெனரல் தீபக் கபூர் அங்கு விரைந்துள்ளார். இன்று காலை கபூர் சியாச்சின் புறப்பட்டுச் சென்றார். அங்கு இன்று முழுவதும் அவர் தங்கியிருப்பார். அங்குள்ள படைப் பிரிவுகளின் கமாண்டர்கள், மூத்த ராணுவ அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்துவார். பின்னர் ஸ்ரீநகர் திரும்பி, ஜம்மு காஷ்மீரில் உள்ள படைகளின் நிலவரம் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளார். இந்தியா தாக்குமோ என்ற பெரும் பீதி பாகிஸ்தானில் நிலவுகிறது. இதையடுத்து பாகிஸ்தான் விமானப்படை, ராணுவம் மற்றும் கடற்படையினர் முழு உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். எல்லைப் பகுதியில் ரேஞ்சர்களின் எண்ண…

  13. வீடியோ இணைப்பு - இஸ்ரேல், காசா மீது நேற்று மேற்கொண்ட தாக்குதல் இடம்பெற்ற சுமார் 24 மணித்தியாலங்களில் மீண்டும் இன்று பாரிய தாக்குதல்களை தொடுத்துள்ளது. இதனால் 255 பேர் வரை பலியாகியும் 600 பேர் வரை காயமடைந்ததாகவும் CNN செய்திகள் தெரிவிக்கின்றன. 60 வருடங்களின் பின் பலஸ்தீனியர்களுக்கு ஏற்பட்ட மிகவும் இரத்தம் தோய்ந்த நாளாக இது அமைவதாக வருணிக்கப்படுகிறது.வீடியோ இணைப்பு

  14. ராய்ப்பூர்: "கிரக நிலைகள் பாதகமாக இருப்பதால் தான், நாட்டில், பாலியல் வல்லுறவு சம்பவங்கள் அதிகம் நடக்கின்றன,'' என, சத்தீஸ்கர் மாநில உள்துறை அமைச்சர், நான்கிராம் கன்வர் கூறியுள்ளது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கரில், ராமன் சிங் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தின் உள்துறை அமைச்சராக, பா.ஜ.,வைச் சேர்ந்த, நான்கிராம் கன்வர், பதவி வகிக்கிறார். சமீப காலமாக, நாட்டில், பாலியல் வல்லுறவு சம்பவங்கள் அதிகம் நடப்பது குறித்து, அவர் கூறியதாவது: நம் நாட்டில், தற்போது கிரக நிலை சரியில்லை. கிரகங்கள் அனைத்தும், பாதகமான நிலையில் உள்ளன. இதனால் தான், பாலியல் வல்லுறவு போன்ற துயர சம்பவங்கள் அதிகம் நடக்கின்றன; இந்த பிரச்னைக்கு நம்மால், தீர்வு காண முடியாது. ஜோதிடர்கள் தான்,…

  15. கியூபெக் நகரத்திலுள்ள லே சொம்மே இரண்டாந்தரப் பள்ளியில் மூன்று பதின்மப் பருவத்தினர், வகுப்பு நண்பரையும் பள்ளி அவை அதிகாரிகளையும் கொலை செய்யச் சூழ்ச்சி செய்ததாகக் கூறப்படும் குற்றத்துக்காக ஓர் இரவைச் சிறையில் கழித்தனர். 14, 15 அகவையான இரு இளம் ஆடவரையும், அத்தொடு 16 அகவையான இளம் பெண் ஒருவரையும் காவல்துறையினர் புதன்கிழமை உசாவல் (‘விசாரணை’) செய்தனர். அனைவரும் மாநிலத் தலைநகரத்து ‘லே சொம்மே’ உயர்தரப் பள்ளி மாணவராவர். ஐயுறவானோரை இளைஞர் நயனகத்தில்(court) தோன்றற்கு வியாழனன்று நேரம் (குறி)ஒதுக்கப்பட்டுள்ளது. “கொலை செய்வதற்கு சூழ்ச்சித்திட்டம் போட்டதுவே குற்றச்சாட்டாக இருக்கும்” என்று காவல்துறையது பேசவல்லவரான கதறீன் வியெல்கூறினார். மின்னணுக் கருவிகள் கைப்பற்றப்பட்டு மாணவருடைய ‘லொக…

  16. உஸ்பெகிஸ்தான் அதிபர் இஸ்லாம் கரிமோவ் காலமானார் உஸ்பெகிஸ்தானின் அதிபர் இஸ்லாம் கரிமோவ் காலமானார் என்பதை அந்நாட்டு அரசாங்க தொலைக்காட்சியில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்காலத்தில் வாழ்ந்த மிகக் கடுமையான சர்வாதிகாரிகளில் ஒருவர் என்று விமர்சகர்களால் வர்ணிக்கப்பட்டவரான அதிபர் கரிமோவின் மரணம் உஸ்பெகிஸ்தானில் எதிர்காலம் குறித்த கேள்வியை எழுப்பியுள்ளது. கடந்த 1991 ஆம் ஆண்டு சோவியத் யூனியன் சிதறுண்டதை அடுத்து சுதந்திர உஸ்பெகிஸ்தானின் அதிபராக இஸ்லாம் அப்துகனியேவிச் கரிமோவ் தேர்தெடுக்கப்பட்டார். அந்தத் தேர்தலில் மட்டுமே முன்னாள் கம்யூனிஸத் தலைவரான அவரை எதிர்த்து, எதிர்கட்சியைச் சேர்ந்த ஒருவர் இயல்பாக தேர்…

  17. சுதந்திர நடமாட்டத்துக்கு பிரிட்டன் அனுமதித்தால் மட்டுமே பொது சந்தையில் இடம் -EU திட்டவட்டம்: ஐரோப்பிய ஒன்றியத்தின் பொதுசந்தையில் தொடர்ந்து நீடிப்பதற்கு பிரிட்டன் ஒன்றியத்தின் குடிமக்கள் கட்டுப்பாடுகள் எதுவுமின்றி சுதந்திரமாக நடமாடுவதற்கு அனுமதிக்க வேணடும் என்று ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் குடிமக்கள் பிரிட்டனில் குடியேறுவதற்கு தடைவிதிக்கப்பட்டால் ஒன்றியத்தின் தனி சந்தையில் பிரிட்டனுக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என்று ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் விலகுவது தொடர்பான பேச்சுவார்த்தையை ஒன்றியத்தின் சார்பாக முன்னெடுப்பவரும் , பெல்ஜியத்தின் முன்னாள் பிரதமருமான வெர்கொவ்ஸராட் தெரிவித்துள்ளார். …

  18. A Halifax navy intelligence அதிகாரியாக பணிபுரிந்த ஒருவர் ரஷ்யாவிற்காக கனடாவின் பல ரகசியங்களை பணத்திற்காக விற்பனை செய்ததாக எழுந்துள்ள புகாரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. A Halifax navy intelligence அதிகாரியா 41 வயது Delisle என்பவர் கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டுவரையிலான காலத்தில் சுமார் $71,817 பணத்தை ரஷ்ய உளவாளிகளிடம் இருந்து பெற்றுக்கொண்டு, கனடாவின் முக்கிய பல ரகசிய தகவல்களை பரிமாறியுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த பணத்தை அவர் மொத்தம் 27 தவணைகளில் பெற்றுள்ளதாக Crown attorney Lyne Decarie அவர்கள் இன்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். இந்த விசாரணை நடந்து கொண்டிருந்தபோது, குற்றம் சாட்டப்பட்ட Delisle நீல நிற ஸ்வட்டர் அணிந்துகொண்டு, தனது வழக்கறிஞருடன் நீதிமன்ற…

    • 0 replies
    • 402 views
  19. பெண் கல்விக்காக போராடுவதற்காக உயிர் பிழைத்துள்ளேன்" பெண் கல்வியின் முக்கியத்துவத்தை உலகிற்கு உணர்த்த முயன்ற பாகிஸ்தான் மாணவி யூசஃப்பாய் மலாலா (15), கடவுள் தனக்கு இரண்டாவது வாழ்க்கையை அளித்துள்ளாதாக கூறியுள்ளார். பெண் கல்வியை ஊக்குவித்த பாகிஸ்தான் மாணவி மலாலா (15) தலிபான் தீவிரவாதிகளால் கடந்த ஆண்டு துப்பாக்கியால் சுடப்பட்டார். தலை உள்பட பல இடங்களில் குண்டுபாய்ந்த நிலையில் பாகிஸ்தான் ராணுவ மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த அவருக்கு இலவச உயர் சிகிச்சை அளிக்க இங்கிலாந்து அரசு முன்வந்தது. தீவிர சிகிச்சை பெற்றுவந்த மலாலாவுக்கு இதுவரை 3 அறுவை சிகிச்சைகள் நடந்துள்ளன. மேல் சிகிச்சை அளிக்கப்பட வேண்டியிருப்பதால் குடும்பத்தாருடன் மலாலா லண்டனிலேயே தங்கியிருக்க ஏ…

  20. ஆயிரக்கணக்கான வட கொரிய தொழிலாளர்கள் சீனாவில் இருப்பதாக ஜப்பான் தகவல்! by : Anojkiyan http://athavannews.com/wp-content/uploads/2020/10/Thousands-of-North-Korean-workers-return-to-China-report-says-720x450.jpg சர்வதேச பொருளாதார தடைகளை மீறி 10,000 வட கொரிய தொழிலாளர்களை நாட்டிற்குள் சீன அதிகாரிகள் அனுமதித்திருக்கலாம் என ஜப்பானின் ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஜப்பானின் மைனிச்சி ஷிம்பன் செய்தித்தாள், வடகிழக்கு சீன நகரமான ஹஞ்சூனுக்கு வடகொரிய தொழிலாளர்கள் வந்ததாக தெரிவித்துள்ளது. வட கொரியாவின், நாம்போ மற்றும் சோங்ஜின் உட்பட அதன் மூன்று துறைமுகங்களில் சரக்குக் கப்பல்களை ஏற்கத் தொடங்கியுள்ளது. நவம்பர் மாதத்தில், கொரோனா வைரஸ…

    • 0 replies
    • 814 views
  21. சீனாவுடனான பதற்றத்திற்கு மத்தியில் 1.8 பில்லியன் டொலர்களுக்கு ஆயுதங்கள் வாங்கும் தாய்வான்! by : Anojkiyan http://athavannews.com/wp-content/uploads/2020/10/US-18-MK-48-Mod-6-Torpedoes-Taiwan-720x450.jpg சீனாவுடனான பதற்றத்திற்கு மத்தியில் 1.8 பில்லியன் டொலர்களுக்கு அமெரிக்காவிடம் இருந்து ஆயுதங்களை வாங்கவுள்ளதாக தாய்வான் தெரிவித்துள்ளது. இதனை அமெரிக்க வெளியுறவுத்துறையும் உறுதிப்படுத்தியுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “தாய்வானுக்கு வான்வழி- தரைவழி கப்பல் ஏவுகணைகள் மற்றும் பிற ஆயுத அமைப்புகள் ஆகியவைகளை விற்க 1.8 பில்லியன் டொலர்கள் மதிப்புள்ள ஒப்பந்தத்தில் இணைந்துள்ளோம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா தாய்வானுக…

    • 0 replies
    • 557 views
  22. கொவிட்- 19: 200 கோடி தடுப்பு மருந்துகள் ஏழை நாடுகளுக்கு வழங்கப்படும்! – யுனிசெப் அறிவிப்பு November 24, 2020 கொரோனாத் தொற்றுக்கான தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்கா, ரஷ்யா, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றன. இந் நிலையில் 2021ஆம் ஆண்டு சுமார் 200 கோடி கொரோனா தடுப்பு மருந்துகள் ஏழை நாடுகளுக்கு வழங்கப்படும் என்று யுனிசெப் (unicef) அமைப்பு தெரிவித்துள்ளது. குறிப்பாக ஆப்கானிஸ்தான், ஏமன் மற்றும் புருண்டி உள்ளிட்ட நாடுகளுக்கு வழங்கப்படும் என்றும், மருந்தை எடுத்துச் செல்ல 350 விமான நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாகவும் குறித்த அமைப்பு தெரிவித்துள்ளது https://thinakkural.lk/article/92106

  23. நைஜீரியாவில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகளை சுட்டும் கழுத்தை அறுத்தும் கொலை நைஜீரியாவில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகளை சுட்டும், கழுத்தை அறுத்தும் தீவிரவாதிகள் கொலை செய்தனர். போர்னோ பிராந்தியத்தைச் சேர்ந்த விவசாயிகள் அறுவடைக்குச் சென்றபோது இந்தக் கொடூரம் நிகழ்த்தப்பட்டதாக ஐநா சபை கூறியுள்ளது. இருசக்கர வாகனத்தில் வந்த தீவிரவாதிகள், துப்பாக்கியால் சுட்டும் கழுத்தை அறுத்தும் விவசாயிகளைக் கொலை செய்தனர். இந்தப் படுகொலைக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்காத நிலையில் போக்கா ஹராம் அல்லது ஐஎஸ் அமைப்பின் மேற்கு ஆப்பிரிக்கப் பிரிவு இதனைச் செய்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. http://athavannews.com/நைஜீரியாவில்-100க்கும்-மேற/

  24. பள்ளிச்சீருடை அணிந்து டேட்டிங் செல்ல வயதான நபர் தேவை என்ற விளம்பரத்தை ஃபேஸ்புக மற்றும் முன்னணி இணையதளங்கள் தடை செய்ய பிரிட்டன் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. பள்ளிச்சீருடை அணிந்து டேட்டிங் செல்ல வயதான நபர்கள் தேவை என்ற விளம்பரம் Mate1.com மற்றும் ஃபேஸ்புக போன்ற இணையதளங்களில் நேற்று வெளிவந்தது. இந்த விளம்பரத்தை பார்த்த சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் இந்த விளம்பரத்தை உடனே நிறுத்த இணையதளங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இம்மாதிரியான விளம்பரங்கள் பள்ளி செல்லும் மாணவிகளின் மனநிலையை பாதிக்கும் நிலையை உருவாக்கும் என்பதால் பிரிட்டன் அரசு இதுபோன்ற விளம்பரங்களை தடை செய்து வருகிறது. பள்ளிச்சீருடையில் உள்ள டேட்டிங் விளம்பரப்படம்...

    • 0 replies
    • 508 views
  25. உலகளவில் பசிக் கொடுமையை ஒழிப்பதில் எதிர்காலத்தில் மனிதர்களால் உட்கொள்ளக் கூடிய பூச்சிகள் ஆற்றக் கூடிய பங்களிப்பை ஐ நா அறிக்கை ஒன்று முன்னிலைப்படுத்தியுள்ளது. ஏற்கனவே 200 கோடி மக்கள் தமது உணவில் வெட்டிக் கிளி, வண்டு, எறும்பு உள்ளிட்ட பூச்சிகளை சேர்த்துக் கொள்வதாக ஐ நாவின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு கூறியுள்ளது. பெரிய அளவில் பண்ணைகள் வைத்து தொழில் முறையில் பூச்சிகளை உற்பத்தி செய்வது வருங்காலத்தில் உணவுப் பாதுகாப்புக்கு உத்தரவாதத்தை அளிக்கும் என்று அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. வேகமாக இனப் பெருக்கம் செய்யும் தன்மை கொண்ட பூச்சிகளிடம், புரதச் சத்து அதிகம் காணப்படுகிறது. மீன் மற்றும் கால்நடைகளின் உணவாகவும் இவை பயன்படும் வாய்ப்புள்ளது. அதேநேரம் பூச்சியை சாப்பிடு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.