Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ரஜினிக்கு பிச்சை அளித்த பெண்! செவ்வாய், 11 மார்ச் 2008 ஆசியாவிலேயே ஜாக்கி ஜானுக்கு அடுத்தபடியாக அதிக சம்பளம் வாங்கும் நடிகர் ரஜினிகாந்தை பிச்சைக்காரராக நினைத்த ஒரு பெண்மணி ரூ.10 தானம் அளித்துள்ளார். இந்தியாவில் மட்டுமில்லாமல் உலகளவில் வருமானத்தை குவித்த 'சிவாஜி' பட வெற்றிக்கு பிறகு ரஜினிகாந்த் வெளிநாடுகளுக்கு செல்லாமல் இந்தியாவிலேயே உள்ளார். தமிழ் திரையுலகத்தினால் சூப்பர் ஸ்டார் என்று போற்றப்படும் ரஜினி திடீரென பெங்களூருவில் உள்ள ஒரு கோயிலுக்கு தனது நண்பருடன் சென்றார். கசங்கிய சட்டை, சாதாரண லுங்கி அணிந்தோடு மட்டுமல்லாமல், பழுப்பு நிற துண்டை தலையில் கட்டியிருந்தார். கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கினாலும் கோயிலில் ரஜினி மிக எளிமையாக இருந்ததால், …

  2. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் 19-வது அகில இந்திய மாநாடு கோவையில் கடந்த 29-ந் தொடங்கி நடைபெற்று வருகிறது. மாநாட்டின் 3-ம் நாள் நிகழ்ச்சிகள் நேற்று நடைபெற்றன. மாநாட்டில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து கட்சியின் பொது செயலாளர் பிரகாஷ்கரத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- திபெத் தலைவர் தலாய்லாமா தனிநாடு கேட்கிறார். திபெத் என்பது சீனாவின் ஒரு பகுதி. அந்த பிரச்சினையில் நாங்கள் தலையிட மாட்டோம். அது சீனாவின் உள்நாட்டு பிரச்சினை. திபெத் பிரச்சினை தொடர்பாக தலாய்லாமா சீன நாட்டு அரசுடன் தான் பேசி தீர்க்க வேண்டும். அதை விடுத்து அந்த பிரச்சினையில் வெளிநாடுகள் தலையிடுவது நல்லது அல்ல. ஜம்மு-காஷ்மீர் மாநில மக்கள் தங்கள் பிரச்சினைகளுக்காக இந…

  3. பிரெக்ஸிற்றைக் குறிக்கும் 50 பென்ஸ் நாணயம் 31 ஆம் திகதி வெளியாகாது பிரெக்ஸிற்றைக் குறிக்கும் வகையில் ஓக்ரோபர் 31 ஆம் திகதி வெளியிடத் திட்டமிட்டிருந்த 50 பென்ஸ் நாணயங்கள் இந்த மாத இறுதியில் வெளியாகாது என்று கூறப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவதற்கு மேலும் மூன்றுமாதம் காலநீடிப்பு வழங்கப்படிருக்கும் நிலையில் 50 பென்ஸ் நாணயங்கள் வெளியாகும் திகதி பிற்போடப்பட்டுள்ளது. பிரெக்ஸிற்றைக் குறிக்க இன்னும் ஒரு நாணயம் தயாரிக்கப்படும் என்று திறைசேரியின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரித்தானியா வெளியேறிய பின்னர் அது புழக்கத்திற்கு வரும் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த மாத இறுதியில் பிரித்தானியா, …

  4. பதான்கோட் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த தேசிய பாதுகாப்பு படை அதிகாரியை பேஸ்புக்கில் இழிவுபடுத்திய கேரள வாலிபர் தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். பஞ்சாப் மாநிலம் பதன்கோட் விமானப்படை தளத்தில் பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள் 7 பேர் மரணமடைந்துள்ளனர். அவர்களில் ஒருவரான தேசிய பாதுகாப்பு படை அதிகாரி லெப்டினன்ட் கர்னல் நிரஞ்சன் குமார், தாக்குதல் சம்பவத்தின் போது கொல்லப்பட்ட பயங்கரவாதி ஒருவனின் உடலில் இருந்த வெடிகுண்டை செயல் இழக்க முயன்றபோது, அது வெடித்ததில் நிரஞ்சன் குமார் பலியாகியுள்ளார். கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த இவர் பெங்களூரில் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி ராதிகா பெங்களூரில் மருத…

  5. சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு எதிராக ட்ரம்ப் பொருளாதார தடை! டொனால்ட் ட்ரம்ப் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு (ICC) எதிராக ஆக்கிரமிப்பு பொருளாதார தடைகளை அங்கீகரிக்கும் ஒரு நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார். செவ்வாயன்று (04) அமெரிக்க ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்திய இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக பிடியாணை‍ உத்தரவினை முன்னதாக பிறப்பித்ததன் மூலம் ஹேக் நீதிமன்றம் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளதாக சுட்டிக்காட்டி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஐசிசி ஊழியர்கள் மற்றும் அவர்களது உறுப்பினர்கள், அமெரிக்க குடிமக்கள் மற்றும் சில நட்பு நாடுகளின் குடிமக்கள் மீது விசாரணை அல்லது வழக்குத் தொடரும் முயற்சிகளில் ஈடுபட்டதாக உறுதிசெய்தா…

  6. சிரியாவில் அல்-கொய்தா சிறை மீது ரஷ்யா வான்வழி தாக்குதல்... 57 பேர் பலி! பெய்ரூட்: சிரியாவில் உள்ள அல்-கொய்தா சிறை மீது ரஷ்யா நடத்திய வான்வழி தாக்குதலில் பொதுமக்கள், தீவிரவாதிகள் உள்ளிட்ட 57 பேர் பலியாகி உள்ளனர் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்து உள்ளது. சிரியாவில் கடந்த 2011-ம் ஆண்டு அரசுக்கு எதிரான போராட்டம் முற்றியபோது முதல் மோதல் வெடித்தது, இதனையடுத்து போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த போரில் இதுவரை பலர் உயிரிழந்து உள்ளனர். கடந்த செப்டம்பர் 30-ம் தேதியில் இருந்து ரஷ்யா, சிரியாவில் உள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் மற்றும் பிற தீவிரவாத இயக்கங்கள் மீது வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது. சிரியாவில் அல்-நுஸ்ரா மற்றும் ஐ.எஸ். இரண்ட…

  7. 23 FEB, 2025 | 09:39 AM பிரான்சின் முல்ஹவுஸ் நகரில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மூவர் காயமடைந்துள்ளனர். மூன்று பொலிஸார் காயமடைந்துள்ளனர். சம்பவம் இடம்பெற்ற இடத்தில் அல்ஜீரியாவை சேர்ந்த 37 வயது நபர் ஒருவர் காணப்பட்டார் என தெரிவித்துள்ள அதிகாரிகள் அவர் அல்லாகு அக்பர் என சத்தமிட்டார் என்பதை அடிப்படையாக வைத்து பயங்கரவாத குற்றம் என்ற அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். அந்த நபர் இரண்டு பொலிஸாருக்கு கடும் காயங்களை ஏற்படுத்தினார், தடுக்க முயன்ற 69 வயது போர்த்துக்கல் பிரஜையை குத்திக்கொன்றார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர் பயங்கரவாத கண்காணிப்பிலிருந்தவர் இதன் காரணமாக அவரை நாடு கடத்துவதற்கான உத்தரவு பிறப்பிக்…

  8. நமீபியாவின் புதிய ஜனாதிபதியாக 2ஆவது தடவையாகவும் ஜெயிங்காப் தென்மேற்கு ஆபிரிக்க நாடான நமீபியாவில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஹேக் ஜெயிங்காப் மீண்டும் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆளும் நமீபிய தென் மேற்கு ஆபிரிக்கா மக்கள் அமைப்பின் வேட்பாளரும், ஜனாதிபதியுமான 78 வயதான ஹேக் ஜெயிங்காப் 56 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். எனினும், இதுவரை இல்லாத வகையில் மிகக் குறைந்த வாக்கு விகிதத்திலேயே ஹேக் ஜெயிங்காப் வெற்றிபெற்றார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் முதல் தடவையாக ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். முதல் தடவை தெரிவின்…

    • 0 replies
    • 422 views
  9. வடிவமைத்த ஜெட் இயந்திரப் பொறிமுறையோடு இயங்கவல்ல hang-glider மூலம் சுவிஸ்லாந்தின் பனி படர்ந்த அல்ப்ஸ் மலைத் தொடர்களின் மேல் பறந்தார் சுவிஸ்லாந்தைச் சேர்ந்த 48 வயதான Yves Rossy என்பவர். இவர் ஒரு படைத்துறை வீரராவார். விமானம் ஒன்றின் உதவியோடு குறித்த உயரத்தை அடைந்ததும் வான் வெளியில் குதித்து அதில் மிதந்தபடி தனது ஜெட் இயந்திரம் பூட்டிய hang-glider ஐ இயக்கிய Yves Rossy, அதி வேகமாக வான் வெளியில் பறந்து வான வேடிக்கை காட்டிவிட்டு, பரசூட்டின் உதவியுடன் மீண்டும் தரையைத் தொட்டார். இச்சாதனை மிகு பறப்பினை உலகு வியந்து பார்க்கின்ற அதேவேளை ஆதிகாலத்தில் இப்படி இறக்கைகளைக் கட்டி மனிதன் பறக்க முயன்று மனிதன் தோற்றுப் போயிருப்பினும் பின்னர் விமானப் பொறிமுறை, விண்ணோடப் பொறிமுறைகளைக் …

    • 0 replies
    • 755 views
  10. பெரு நாட்டின் முன்னாள் ஜனாதிபதிக்கு 15 ஆண்டுகள் சிறை! பணமோசடி வழக்கில் பெரு நாட்டின் முன்னாள் ஜனாதிபதி ஒல்லாண்டா ஹுமாலாவுக்கு (Ollanta Humala) 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 62 வயதான ஒல்லாண்டா ஹுமாலா, கடந்த 2006 மற்றும் 2011-ம் ஆண்டுகளில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின்போது நாடு முழுவதும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். இதன்போது ஹுமாலாவின் தேசிய ஜனநாயக கட்சியானது தேர்தல் பிரசாரத்துக்காக அப்போதைய வெனிசுலா ஜனாதிபதி ஹியூகோ சாவேசிடம் இருந்து இலங்கை மதிப்பில் சுமார் 7 கோடி ரூபாய் வரை நன்கொடை பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதேபோல் பெருவின் ஓடெபிரெக்டிட் என்ற தனியார் கட்டுமான நிறுவனத்திடம் இருந்தும் நன்கொடை பெற்றதாக கூறப்ப…

  11. திருச்சி: திருச்சியில் முதல்வர் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் காளை முட்டியதில் ஒருவர் பலியானார், 165 பேர் படு காயம் அடைந்தனர். தமிழக முதல்வர் கருணாநிதியின் 85 வது பிறந்த தினத்தை முன்னிட்டு திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கு வளாகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என். நேரு துவக்கி வைத்தார். திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, கரூர் போன்ற மாவட்டங்களில் இருந்து சுமார் 200-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. போட்டியில் காளைகள் சீறிப்பாய்ந்தது. அப்போது காளைகளை அடக்க முயன்ற தஞ்சை மாவட்டம், கண்டிதம்பட்டுவை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர் பரிதாபமாக பலியானார். மேலும் 165 ப…

  12. [size=2][size=4]ஈரான் நாட்டின் மீது கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்னர் தரைவழியாக தாக்குதல் நடத்த தயாராகி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.[/size][/size] [size=2][size=4]ஈரான் அணு ஆயுதங்களை தயாரிக்கிறது என்பது மேற்குலக நாடுகளின் குற்றச்சாட்டு. இதற்காக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் பொருளாதாரத் தடை விதித்துள்ளன. மேலும் அணு ஆயுத தயாரிப்பை கைவிடுவது தொடர்பாக அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகள் இணைந்து ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இப்பேச்சுவார்த்தையில் எதுவித முன்னேற்றமும் ஏற்படவில்லை.[/size][/size] [size=2][size=4]இந்நிலையில் ஈரானில் யுரேனிய செறிவூட்டும் ஆலை இருப்பதாகக் கருதப்படும் போர்டோ நகரை இலக்கு வைத்து கிறிஸ்துமஸ் பண்டிக்கைக்கு முன்னதாக இஸ்ரேல் தர…

    • 9 replies
    • 1.1k views
  13. அமெரிக்க அதிபராக தேர்வானால் ப்ளும்பெர்க் நிறுவனத்தை விற்றுவிடுவேன் என்று அந்நிறுவன அதிபர் மைக்கேல் ப்ளும்பெர்க் (Michael Bloomberg) அறிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் பதவிக்கு நவம்பர் மாதம் தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலுக்கான ஜனநாயக கட்சி வேட்பாளரை தேர்வு செய்வதற்கான போட்டியில் மைக்கேல் ப்ளும்பெர்க்கும் களத்தில் உள்ளார். நியூயார்க் நகர முன்னாள் மேயரான அவர், அதிபராக தேர்வு செய்யப்பட்டால், ப்ளும்பெர்க் நிறுவனத்தை விற்றுவிடுவேன் என அதிரடியாக அறிவித்துள்ளார்.ப்ளும்பெர்க் உலக அளவில் செய்திகளையும், பைனான்சியல் தகவலையும் அளிக்கும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கிறது. 2019ம் ஆண்டில் மட்டும் சுமார் 71 ஆயிரத்து 593 கோடி ரூபாய் ( $10 billion in revenue) வருவாய…

    • 0 replies
    • 377 views
  14. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் ஸ்டெபனி ஹெகார்டி 3 மணி நேரங்களுக்கு முன்னர் நம்ரதா நங்கியாவும் அவரது கணவரும் இரண்டாவது குழந்தையை பெற்றுக்கொள்வது குறித்து தங்களது ஐந்து வயது மகள் பிறந்தது முதலே சிந்தித்து வருகின்றனர். ஆனால் எப்போதும் அவர்கள் முன் வந்து நிற்கும் கேள்வி: 'அந்த குழந்தைக்கு தேவையான செலவுகளை நம்மால் சமாளிக்கமுடியுமா?' மும்பையில் வசித்து வரும் நம்ரதா மருந்துகடையில் பணியாற்றுகிறார். அவரது கணவர் ஒரு டயர் கம்பெனியில் பணியாற்றுகிறார். ஆனால் ஒரு குழந்தைக்கான செலவுகளே அதிகமாக இருக்கிறது. பள்ளி கட்டணம், பள்ளி பேருந்து, நீச்சல் வகுப்புகள், பொது மருத்துவரிடம் செல்வது கூட அதிக செலவு ஏற்படுத்தக்கூடியதுதான். ஆனால் நம்ரதா வளரும் போது வேறு விதமாக இருந்தது,"நாங்கள் வெற…

  15. காசா போர்; பணயக் கைதிகளை ஒரே நேரத்தில் விடுவிப்பது தொடர்பாக கவனம் செலுத்தும் இஸ்ரேல்! காசாவின் போர் நிறுத்த பேச்சுவார்தையின்போது, எஞ்சியுள்ள அனைத்து பணயக் கைதிகளையும் ஒரே நேரத்தில் விடுவிப்பதற்கான ஒப்பந்தம் தொடர்பாக, கவனம் செலுத்தவுள்ளதாக இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெத்தான்யாகு தெரிவித்துள்ளார். இதேவேளை இது தொடர்பான எகிப்திய அதிகாரிகளுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தைகளுக்காக, தமது குழு கெய்ரோவுக்கு சென்றுள்ளதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது. கடந்த மாதம் இஸ்ரேலுக்கும், ஹமாஸூக்கும் இடையிலான மறைமுக பேச்சுவார்த்தைகள் முறிந்த பின்னர், இஸ்ரேல் தனது இராணுவத் தாக்குதலை விரிவு படுத்தியதுடன், காசா பகுதியைக் கைப்பற்றுவதற்கான சர்ச்சைக்குரிய திட்டத்தையும் இஸ்ரேல் அறிவித்தது. இருப்பினும், காசாவை …

  16. ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா பதவி விலகுவதாக அறிவிப்பு 07 Sep, 2025 | 04:05 PM ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா பதவி விலகுவதாக அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜூலை மாதம் நடைபெற்ற தேர்தலில் லிபரல் ஜனநாயக கட்சியின் பிளவை தடுக்கும் நோக்கில் தாம் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். 68 வயதான ஷிகெரு இஷிபா, கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் ஜப்பான் நாட்டின் பிரதமராக பொறுப்பேற்றார். எல்டிபி கட்சியின் தலைவர் பொறுப்பிலும் அவர் உள்ளார். இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் ஜப்பான் பாராளுமன்றத்தின் மேலவையில் அவருக்கு பின்னடைவு ஏற்பட்டது. அவரது எல்டிபி கட்சி மற்றும் அதன் கூட்டணி மேலவையில் பெருபான்மையை பெறவில்லை. முன்னதாக, கடந்த ஆண்டு நடைபெற்ற ஜப்பான் தேர்தலில் மக்களவையில் அவரது எல்ட…

  17. [size=5]Iranian: 'Our money is becoming more and more worthless every day'[/size] TEHRAN – Even though threats of war with Israel are almost a daily occurrence, what’s really on people's minds in this city is the economy. The United States, the European Union and the U.N. have imposed tough economic sanctions against Iran, blocking access to the international banking system and curbing sales of Iranian crude oil as a way to persuade Tehran to abandon its nuclear program. As a result, Iran’s currency, the rial, is in a constant state of flux, but mostly on a downward trajectory. These days, it seems to fall in value against the dollar on an hourly basis. On Tuesda…

  18. பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் அகமது அல் கதீப் பிபிசி உருது 37 நிமிடங்களுக்கு முன்னர் பாகிஸ்தான் - சௌதி அரேபியா பாதுகாப்பு ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, பிராந்தியத்தில் அதன் தாக்கம் மற்றும் சர்வதேச அரசியலில் அதன் முக்கியத்துவம் குறித்து தொடர்ந்து விவாதம் நடைபெற்று வருகிறது. இது பாகிஸ்தானில் ஒரு பெரிய வெற்றியாகக் கருதப்படுகிறது. பாகிஸ்தானும் சௌதி அரேபியாவும் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பான ஒத்துழைப்பை உள்ளடக்கிய ஒரு உத்தி சார்ந்த பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்தை (SMIDA) மேற்கொண்டுள்ளன. இந்த ஒப்பந்தத்தின் கீழ், ஒரு நாட்டின் மீதான தாக்குதல் அந்த இரு நாடுகளுக்கும் எதிரான தாக்குதலாகவே கருதப்படும். சௌதி அரேபியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான கூட்டுப் பாதுகாப்பு ஒப்ப…

  19. கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் முடக்க நிலையில் சிக்குண்டுள்ள நிலையில், அங்குள்ள ஒரேயொரு நாடு மட்டும் பெரியளவில் மாற்றமின்றி இயல்பு வாழ்க்கையை மேற்கொண்டு வருகிறது. ஆம், ஐரோப்பிய நாடான ஸ்வீடனில் பனிக்காலம் முடிந்து இப்போதுதான் கோடைக்காலம் தலையை காட்ட ஆரம்பித்துள்ளது. அந்த நாட்டின் தலைநகரில் மக்கள் எப்போதும் போல் கோடைக்காலத்தை கொண்டாட ஆரம்பித்துவிட்டார்கள். மரியாட்டர்கெட் பகுதியிலுள்ள தோர் சிலையின் அருகே மக்கள் குடும்பத்துடன் ஐஸ்கிரீமை சுவைத்துகொண்டிருக்கிறார்கள். இளைஞர்கள் சாலையெங்கும் ’ஹாப்பி-ஹவரில்’ கடைகளில் வழங்கப்படும் தள்ளுபடிகளில் வேண்டியதை விரும்பி வாங்கிகொண்டிக்கிறார்கள். ஸ்வீடன் தலைநகரில் கடைகளும், இரவுநேர வீடுகளும் இன…

    • 0 replies
    • 777 views
  20. அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஒரே நாளில் 1,480 பேர் பலியாகியுள்ளனர். பதிவு: ஏப்ரல் 04, 2020 07:08 AM வாஷிங்டன், சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் கோர தாண்டவம் ஆடுகிறது. வல்லரசு நாடான அமெரிக்கா தான், கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக தற்போது உள்ளது. தற்போதைய நிலவரப்படி அமெரிக்காவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 277,161 ஆக உள்ளது. அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா வைரசுக்கு 1,480 பேர் பலியாகியுள்ளனர். கொரோனா பெருந்தொற்று பரவிய பிறகு, அமெரிக்காவில் ஒரே நாளில் ஏற்பட்டுள்ள அதிகபட்ச உயிரிழப்பு இதுவே ஆகும். ஒட்டு மொத்தமாக அமெரிக்காவில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 7,406 ஆக உள்ளது…

  21. 18 Oct, 2025 | 01:39 PM இஸ்ரேல் மீது 2023 அக்டோபர் 7ஆம் திகதி ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்குத் தலைமை தாங்கியதாகக் கூறப்படும் மஹ்மூத் அமீன் யாகூப் அல்-முஹ்தாதி என்ற நபர் அமெரிக்காவில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த குற்றச்சாட்டின் பேரில் அமெரிக்க விசாரணைக் குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலின்போது, அமெரிக்கர்கள் மீதான கொலை மற்றும் கடத்தல் குறித்த விசாரணைகளுக்காக அலெக்ஸாண்ட்ரியா எம். தோமன் மேற்பார்வையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. ஒக்டோபர் 7 தாக்குதலின்போது ஹமாஸ் படையில் மஹ்மூத் இருந்ததாகக் கூறப்படுகிறது. இவர் அமெரிக்காவில் தங்கியிருப்பது விசாரணையின் போது தெரியவந்தது. அமெரிக்க விசா விண்ணப்பத்தில், தான் எந்தவொரு பயங்கரவாத நடவடிக்கையிலும் ஈடுபடவில்…

  22. பிரேசில் நாட்டில் கொரோனா தாக்கி சிகிச்சை பெற்று வந்த 97 வயதான மூதாட்டி ஒருவர் வைரஸ் தொற்றில் இருந்து முழுமையாக குணமாகி வீடு திரும்பியுள்ளார். உலகையே அச்சுறுத்தி வரும் உயிர்க்கொல்லி கொரோனா வைரசால் இதுவரை 1 லட்சத்து 15 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 லட்சத்தை நோக்கி செல்கிறது இந்த கொடிய வைரசுக்கு பலியானவர்களில் பெரும்பாலானோர் முதியவர்கள்தான் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. எனவே 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களை கொரோனா தாக்கினால் அவர்கள் உயிர் பிழைப்பது கடினம் என்று கூறப்படுகிறது. எனினும் சில நாடுகளில் 90 வயதை கடந்த முதியவர்கள் சிலர் கொரோனாவை…

  23. பறக்கும் வெடிகுண்டுகள் மூலம் யூரோ கால்பந்து தொடரில் தாக்குதல் நடத்த ஐஎஸ் தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஐரோப்பிய கால்பந்து தொடர் நாளை தொடங்கு ஜூலை 10 வரை நடக்கிறது. உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்களின் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ள இந்த தொடரின்போது ஐஎஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று அமெரிக்கா உள்ளிட்ட பலநாடுகளின் உளவு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்திருந்தன. இந்தநிலையில், யூரோ கால்பந்து தொடரின்போது பறக்கும் சிறிய விமானங்களான ட்ரோன்கள் மூலம் வெடிகுண்டுகள் மற்றும் கீழேவிழுந்தவுடன் வெடிக்கும் ரசாயன பொருட்கள் மூலமும் ஐஎஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள்…

  24. இங்கிலாந்து, வேல்சிலுள்ள பேணகங்களில், கடந்த இரு வாரங்களில் 4300 பேர் மரணம். மருத்துவமனைகளுக்கு வெளியே இறப்பு வீதம் மிகவும் அதிகரித்திருப்பதைக் காட்டுகின்ற உத்தியோகபூர்வமான புள்ளிவிபரங்களின் படி, இங்கிலாந்து மற்றும் வேல்சிலுள்ள பேணகங்களில் 4300 பேர் கடந்த இரு வாரங்களில் இறந்துள்ளனர். பிரித்தானியா முழுவதிலும் 25,000 இற்கும் மேற்பட்டோர் கொரோனாத் தொற்றுக்குள்ளாகி இறந்துள்ளதாக மிகவும் அண்மைய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. பேணகங்களை முறைப்படுத்துப்படுத்துவோரால் பெறப்பட்டதும் தேசிய புள்ளிவிபரங்களுக்கான அலுவலகத்தினால் முதன்முறையாக செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டதுமான தகவல்களின் படி, ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரையிலான காலப்பகுதியில் 4343 பேர் கொரோனாத்…

  25. அமெரிக்காவை நேட்டோவிலிருந்து வெளியேற்றுவதற்கான மசோதாவை மாஸி அறிமுகப்படுத்துகிறார். ஆஷ்லீ ஃபீல்ட்ஸ் எழுதியது - 12/10/25 3:22 PM ET பிரதிநிதி தாமஸ் மாஸி (ஆர்-கே.) புதன்கிழமை அமெரிக்காவை நேட்டோ கூட்டணியில் இருந்து வெளியேற்றும் மசோதாவை அறிமுகப்படுத்தினார். பிரதிநிதி அன்னா பவுலினா லூனா (ஆர்-ஃப்ளா.) இந்த மசோதாவிற்கு இணை அனுசரணை வழங்குவதாகக் கூறினார் , அதே நேரத்தில் செனட்டர் மைக் லீ (ஆர்-உட்டா) மேல் சபையில் துணைச் சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். "நேட்டோ ஒரு பனிப்போர் நினைவுச்சின்னம். நாம் நேட்டோவிலிருந்து விலகி, அந்தப் பணத்தை சோசலிச நாடுகளை அல்ல, நமது சொந்த நாட்டைப் பாதுகாக்கப் பயன்படுத்த வேண்டும்," என்று மாஸி ஒரு அறிக்கையில் கூறினார் . "முப்பது ஆண்டுகளுக்கு முன்பு சரிந்த ச…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.