உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26629 topics in this forum
-
60 நாள் காசா போர் நிறுத்த நிபந்தனைகளுக்கு இஸ்ரேல் ஒப்புதல்! தேவையான நிபந்தனைகளின் அடிப்படையில் காசாவில் 60 நாள் போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாய்க்கிழமை (02) தெரிவித்தார். மேலும், நிலைமைகள் மோசமடைவதற்கு முன்பு இந்த ஒப்பந்தத்தை ஹமாஸ் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார். அடுத்த வாரம் வெள்ளை மாளிகையில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்திக்க தயாராகி வரும் நிலையில் ட்ரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இந்த அறிவிப்பு பல ஆண்டுகளாக இப்பகுதியை பேரழிவிற்கு உட்படுத்திய தற்போதைய மோதலில் ஒரு திருப்புமுனையாகும். இது குறித்து ட்ரூத் சமூக ஊடகத் தளத்தில் ட்ரம்ப் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், எனது பிரதிநிதிக…
-
- 2 replies
- 191 views
- 1 follower
-
-
மென்பொருள் வளர்ச்சியும், தனிநபர் கணினி பயன்பாடும் உலகின் மேற்பரப்பில் தவழ்ந்து திரிந்து கொண்டிருந்த தருணங்களில், அவற்றின் முதுகில் இறக்கை கட்டி பறக்க வைத்தது பில்கேட்ஸ் என்ற மந்திரச் சொல். 1955ல் அக்டோபர் 28ல் பிறந்த பில்கேட்ஸ் அறுபது வயதை இன்று எட்டிப் பிடிக்கிறார். பில்கேட்ஸ் சொல்லும் பண்புகள் தன் இலக்குகளையும் ஆர்வத்தையும் தன் வாழ்க்கையின் எந்தவொரு சூழ்நிலையிலும் விட்டுக் கொடுத்ததே இல்லை. தன் வழக்கறிஞர் அப்பா, பில்கேட்ஸையும் வழக்கறிஞராக்க அனுதினமும் வாதாடிக் கொண்டிருந்தாலும் அவற்றையெல்லாம் உதறித்தள்ளிவிட்டு தனக்குப் பிடித்த கணினி சார்ந்த தொழிலை தேர்ந்தெடுத்தார். அவர் யாருக்காவும் தன் இலக்குகளில் இருந்து பின் வாங்வில்லை. அம்மாவின் செல்லப்பிள்ளையாக துறுதுறுவெ…
-
- 0 replies
- 2.3k views
-
-
ஒண்டோரியோவின் Thornhill பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு இன்றைய கிறிஸ்துமஸ், மிகவும் அதிர்ஷடகரமான நாளாகவும் இருந்துள்ளது. அவர் வாங்கிய லாட்டரி சீட்டு ஒன்றுக்கு $50 மில்லியன் டாலர் பரிசு கிடைத்துள்ளது. டிசம்பர் 21ஆம் தேதி நடைபெற்ற மெகா குலுக்கல் லாட்டரி பரிசு ஒன்று Susan Flam என்ற பெண்மணிக்கு கிடைத்துள்ளது. அவர் பரிசு விழுந்ததையே அறியாமல் தான் நடத்தும் கடை ஒன்றில் வேலை பார்த்து கொண்டிருக்கும்பொழுது, அதிகாரிகள் அவரை தேடி வந்து, அவருக்கு பரிசு விழுந்த விபரங்களை கூறியவுடன் ஆச்சரியத்தில் மூழ்கினார் அந்த பெண். Susan Flam என்ற பெண், சுமார் 60 வயதை கடந்தவர். இந்த வயதில், அதுவும் கிறிஸ்துமஸ் தினத்தன்று தனக்கு பரிசு விழுந்த செய்தியை கேட்டு தான் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக அவர் செய்…
-
- 1 reply
- 743 views
-
-
60 வருடங்களுக்கு முன் தனது உயிரை காப்பாற்றிய வீரரை சந்தித்த தலாய்லாமா..! திபத்திலிருந்து தப்பி வந்து இந்தியாவில் தஞ்சம் அடைந்த போது, தனக்கு உயிர் பாதுகாப்பு அளித்த இந்திய இராணுவ வீரரை 60 வருடங்களுக்கு பிறகு தலாய்லாமா சந்தித்துள்ளார். திபெத்தை சேர்ந்த 81 வயதான ஆன்மீகத்தலைவரான தலாய் லாமா, இந்தியாவின் வட கிழக்கு பகுதியான அருணாச்சல் பகுதிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில், 60 வருடங்களுக்கு முன் அவருக்கு உதவிய இந்திய இராணுவ வீரர் நரேன் சந்திர தாஸ் என்பவரை சந்தித்துள்ளார். மேலும் சீனாவிற்கு எதிரான போராட்டத்தில் தோல்வியுற்ற திபெத்திய குழுவினர், அந்நாட்டின் லாசா பகுதியிலிருந்து இரண்டு வார கடின பயணம் மேற்கொண்ட நிலையில் 1959 ஆம் ஆண்டு …
-
- 0 replies
- 300 views
-
-
ஹீலியம்நிரம்பிய பலூன்கள் மூலம் Robben Island முதல் Cape Town வரை சாதனை புரிந்திருக்கின்றார் தென்னாப்பிரிக்காவை சேர்ந்த ஒரு மெடிக்கல்மார்க்கெடிங்க் மேனேஜர். தென்னாப்பிரிக்காவில்வாழும் Matt Silver-Vallance என்ற 37 வயது நபர் ஹீலியம் என்ற வாயு நிரப்பிய 60 பலூன்களின் உதவியால் Robben Island முதல் Cape Town வரை உள்ள 3.7 மைல் தூரத்தை கடந்து புதிய உலக சாதனை புரிந்து உள்ளார். இதுவரை ஹீலியம் பலூனில் யாரும் இந்த இடத்தை கடந்ததில்லை. தென்னாப்பிரிககாவில்உள்ள நெல்சன் மண்டேலா குழந்தைகள் மருத்துவமனைக்கு நிதி திரட்டவே தான் இந்த சாதனையை செய்ததாக கூறும் இவர், தொலைக்காட்சிகளில் வானில் பறக்கும் நிகழ்ச்சிகளை பார்த்தே தனக்கு இந்த ஐடியா வந்ததாக பேட்டியில் கூறினார். இவரது சாதன…
-
- 0 replies
- 486 views
-
-
600 கி.மீ. தூரம் நடந்து வந்து வாக்களித்த குடிமகள் பக்கத்துத் தெருவில் இருக்கும் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்கவே, அய்யோ அந்த வரிசையில் நின்று யார் வாக்களிப்பது என்று சலித்துக் கொள்ளும் உலகத்தில் 600 கி.மீ. தூரம் காடு மலை முகடுகளில் ஏறி இறங்கி நடந்து சென்று வாக்களித்துள்ளார் ஒரு குடிமகள். இமாலயத்தை ஒட்டி உள்ள பூட்டானில்தான் அந்த உலகமகா குடிமகள் 65 வயதான ஷேவாங்க டேமா என்பவர் வசித்து வருகிறார். பூட்டானில் தற்போது மன்னர் ஆட்சி நடைபெறுகிறது. ஜனநாயகம் எனப்படும் மக்களாட்சி மலர உள்ளது. அதற்காக கடந்த திங்கட்கிழமை அன்று முதன் முதலாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த வாக்குப்பதிவில் பூட்டான் மக்கள் அனைவரும் அவர்கள் பிறந்த இடத்தில் அமைக்கப்பட்டிருக்கும் வாக…
-
- 0 replies
- 772 views
-
-
சீனாவின் மத்திய பகுதியில் உள்ள, சாங்ஷா என்ற இடத்திலிருந்து, குவாங்டாங் மாகாணத்தில் உள்ள ஒரு ஓட்டலுக்கு, இறைச்சிக்காக, 600க்கும் அதிகமான பூனைகள், 50 மூங்கில் கூடைகளில் அடைத்து எடுத்துச் செல்லப்பட்டன. பூனைகளை சுமந்து சென்ற லாரி, நேற்று, ஒரு இடத்தில் விபத்துக்குள்ளாகி நின்றுவிட்டது. உடனடியாக இந்த லாரியும் மீட்கப்படவில்லை. கூடைகளில் அடைக்கப்பட்டிருந்த பூனைகள் பல நாட்களாக பட்டினி கிடந்ததால், 100 பூனைகள் இறந்து விட்டன. இதனால், அந்த பகுதியில் துர்நாற்றம் வீசியது. இதை அறிந்த மிருக பாதுகாப்பு ஆர்வலர்கள், மீதமுள்ள பூனைகளை மீட்டுள்ளனர். இந்த பூனைகளை பாதுகாக்கும் பொருட்டு, அதற்குரிய விலையை கொடுத்து விடுவதாக பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். http://tamil.yahoo.com/600-%E0%AE…
-
- 0 replies
- 458 views
-
-
600க்கும் மேற்பட்ட உக்ரைனியப் படைகள் கொல்லப்பட்ட விவகாரம்: ரஷ்யாவின் கருத்துக்கு உக்ரைன் மறுப்பு! ஒரு தாக்குதலில் நூற்றுக்கணக்கான உக்ரைனியப் படைகள் கொல்லப்பட்டதாக ரஷ்யா கூறும் கூற்றை உக்ரைன் மறுத்துள்ளது. ரஷ்யா எந்த ஆதாரமும் இல்லாமல், கிழக்கு நகரமான கிராமடோர்ஸ்கில் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் 600க்கும் மேற்பட்ட உக்ரைனியப் படைகள் கொல்லப்பட்டதாக கூறுவதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. இது ரஷ்ய பிரச்சாரத்தின் மற்றொரு பகுதி என உக்ரைனிய இராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் செர்ஹி செரெவதி தெரிவித்தார். உக்ரைனியப் படைகள் தற்காலிகமாக தங்கியிருந்த கட்டடங்கள் மீது நடத்திய தாக்குதலில் 600க்கும் மேற்பட்ட உக்ரைன் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக ரஷ்…
-
- 0 replies
- 315 views
-
-
காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 63 தொகுதிகளிலும் அக்கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை தோல்வியடையச் செய்வோம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். இது குறித்து சீமான் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியது: நாங்கள் வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடுவது இல்லை என்று முடிவு செய்துள்ளோம். 2016-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவோம். தமிழர் தேசிய இனத்தோடு உணர்வு, உயிர், உடைமை என அனைத்திற்கும் எதிராகவும், இலங்கை அரசுக்கு துணை நிற்கும் காங்கிரஸ் கட்சியை 63 தொகுதிகளிலும் தோற்கடிப்பது என்று முடிவு செய்துள்ளோம். ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரிகள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், நீதிபதிகள் ஆகியோர் எங்களுக்கு ஆலோசனை வழங்க…
-
- 1 reply
- 778 views
-
-
636 அமெரிக்க ஆஸ்பத்திரிகளுக்கு ‘பைசர்’ கொரோனா தடுப்பூசிகளை அனுப்பும் பணி தொடங்கியது வாஷிங்டன், அமெரிக்காவை சேர்ந்த ‘பைசர்‘ நிறுவனமும், ஜெர்மனியை சேர்ந்த ‘பயோன்டெக்‘ நிறுவனமும் இணைந்து கொரோனா தடுப்பூசியை உருவாக்கி உள்ளன. அமெரிக்காவில் இதன் அவசர பயன்பாட்டுக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் துறை கடந்த 11-ந் தேதி ஒப்புதல் அளித்தது. அமெரிக்காவில், 16 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களுக்கு இதை போட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா முழுவதும் தடுப்பூசி போடும் மையங்களாக 636 ஆஸ்பத்திரிகள் மற்றும் கிளினிக்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில், மிச்சிகனில் உள்ள ‘…
-
- 0 replies
- 489 views
-
-
64 கோடி டாலர் ஜாக்பொட் கிடைத்த அதிர்ஸ்டசாலிகள் கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 31 மார்ச், 2012 - 13:06 ஜிஎம்டி அமெரிக்காவின் மிகப்பெரிய லாட்டரியில் (அதிர்ஸ்ட லாபச் சீட்டிழுப்பில்) வெற்றி பெற்றவர்களை தேடும் நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது. 64 கோடி டாலர் பெறுமதியான இந்த லாட்டரியை மூன்று டிக்கட்டுக்கள் பகிர்ந்துகொள்கின்றன. மேரிலாந்து, கன்சாஸ் மற்றும் இலினொய்ஸ் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த மூவருக்கே இந்த அதிர்ஸ்டம் கிடைத்திருக்கிறது. லாட்டரி சீட்டுகளுக்காக அமெரிக்கர்கள் 1.5 பில்லியன் லாடர்களை செலவிடுகிறார்கள். கடந்த ஜனவரி மாதம் முதல் எவருக்கும் ஜாக்பொட் கிடைக்காத காரணத்தால், பரிசுத் தொகை அதிகரித்து இவ்வளவு பெரிய அளவை எட்டியிருக்கிறது bbctamil …
-
- 19 replies
- 2k views
-
-
அமெரிக்கா ஈராக்கை கைப்பற்றியதில் இருந்து இதுவரை 655,000 ஈராக்கியர் பலியாகி உள்ளதாக CNN தளத்தில் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. எவ்வளவு தூரம் உண்மை என்று தெரியவில்லை. http://www.cnn.com/2006/WORLD/meast/10/11/...l.ap/index.html
-
- 5 replies
- 1.2k views
-
-
ஜெர்மன் நாட்டுக் கப்பல் ஒன்றின் மூலம் மீட்கப்பட்ட ஜோர்டன், ஹெலிகாப்டர் மூலம் அழைத்துவரப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சுமார் இரண்டு மாதங்களாக கடலில் தன்னந்தனியாகத் தவித்துவந்த ஒருவர் தற்போது மீட்கப்பட்டுள்ளார். மீன்களை உண்டும் மழை நீரைக் குடித்தும் அவர் உயிரைத் தக்கவைத்திருந்தார். வியாழக்கிழமையன்று நார்த் கரோலினாவுக்கு 200 மைல் தொலைவில் தவித்துக்கொண்டிருந்த லூயிஸ் ஜோடர்ன் என்ற 37 வயது நபரை அந்த வழியாகச் சென்ற ஜெர்மன் நாட்டு டேங்கர் கப்பல் ஒன்று பார்த்தது. அவர் சென்ற 35 அடி நீளமுடைய படகு தலைகீழாகக் கவிழ்ந்துவிடவே, அதன் முதுகுப் பகுதியில் அமர்ந்திருந்த அவர், இப்போது மீட்கப்பட்டுள்ளார். ஜனவரி மாத இறுதியில் அவர் காணாமல் போய்விட்டதாக அவருடைய குடும்பத்தினர் தெரிவ…
-
- 5 replies
- 519 views
-
-
67 பயணிகளுடன் நொறுங்கி விழுந்த விமானம்.! (படங்கள் இணைப்பு) 67 பயணிகள் மற்றும் 4 விமான அலுவலர்களுடன் பயணித்த பங்களாதேஷ் எயார்லைன்ஸ் இற்கு சொந்தமான Dash Q-400 எனும் விமானமொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று காலை பங்களாதேஷின் டாகா நகரில் இருந்து நேபாளம் நோக்கி பயணித்த குறித்த விமானம் நேபாளம், திருபவன் விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்ட போதே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. http://www.virakesari.lk/article/31554
-
- 1 reply
- 413 views
-
-
சான் டியாகோ : சிலி நாட்டில் சுரங்க விபத்தில் சிக்கியவர்களில் முதல் நபர் பத்திரமாக மீட்கப்பட்டார். சரியாக 68 நாட்கள் போராட்டத்துக்குப் பிறகு பிளாரன்சோ அவலாஸ் (31) என்பவர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். இன்னும் 32 பேர் சுரங்கத்தில் சிக்கியுள்ளனர். மீட்பு பணிகள் நடக்கும் இடத்தில் சிலி நாட்டு அதிபரும் இருந்தார். முதலில் மீட்கப்பட்ட பிளாரன்சோவை கைகொடுத்து வரவேற்றார். பிளாரன்சாவின் மனைவியும், குழந்தையும் அவரை கண்ணீர் மல்க வரவேற்ற காட்சி அங்கிருந்தவர்கள் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. நாசா உதவியுடன் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. நாளைக்குள் மீதமுள்ள சுரங்கத் தொழிலாளிகளும் பத்திரமாக மீட்கப்படுவார்கள் என தெரிகிறது.சுரங்கத்தில் சிக்கியுள்ள ஒவ்வொரு தொழிலாளியையும் …
-
- 16 replies
- 1.8k views
-
-
புதுடெல்லி அரசியல் சாசனத்தின் 9வது அட்டவணையில் 1973-ம் ஆண்டுக்கு பிறகு இடம் பெற்ற சட்டங்களையும் ஆய்வு செய்யும் உரிமை நீதி மன்றத்திற்க்கு உண்டு என்று உச்ச நீதி மன்றம் தீர்ப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் தமிழக அரசு கொண்டுவந்த 69% இட ஒதுக்கீடு உட்பட எராளமான சட்டங்களின்எதிர்காலம் கேள்விகுறியாகி உள்ளது. மேலும் இந்த தீர்ப்பின் மூலம் நீதி மன்றத்துக்கும், நாடளு மன்றத்திகும் இடையே மோதல் நிலையும் உருவாகி இருக்கிறது.
-
- 5 replies
- 1.6k views
-
-
பூமியிலிருந்து 30 கோடி கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சிறிய கிரகம் ஒன்றுக்கு, 7 ஆண்டுகளுக்கு முன் அனுப்பப்பட்ட ஜப்பானின் 'ஹயபுசா' விண்கலம் ஞாயிற்றுக்கிழமை பூமிக்கு திரும்பியது. பூமியிலிருந்து 30 கோடி கிலோமீட்டர் தூரத்தில் 'இட்டோகவா' என்ற சிறிய கிரகத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்ய 'ஜப்பான் ஏரோஸ்பேஸ் எக்ஸ்புளோரேஷன் ஏஜென்சி' கடந்த 2003ஆம் ஆண்டு மே மாதம் 'ஹயபுசா' என்ற விண்கலத்தை அனுப்பியது. இட்டோகவா கிரகத்தில் உள்ள மண்ணையும் கல்லையும் கொண்டு ஆராய்ச்சி செய்வதன் மூலம் சூரிய குடும்பம் தோன்றிய விதத்தை கண்டறிய முடியும் என ஜப்பானிய விஞ்ஞானிகள் நம்பினர். ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் நகரத்தருகே உள்ள ஊமரா என்ற இடத்தில் தரையிறங்கிய ஹயபுசா விண்கலம், இட்டோகவா கிரகத்திலிருந்து 18 …
-
- 0 replies
- 548 views
-
-
7 ஆயிரம் கோழிகள் அழிப்பு திபெத்தில் பறவைக்காய்ச்சல் நோய் பரவியிருப்பதாக உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், அந்நாட்டில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிகள் கொல்லப்பட்டன. இது குறித்து அந்நாட்டு வேளாண் மற்றும் கால்நடைத் துறை கூறியதாவது; திபெத் தலைநகர் இசாவில் இருந்த பண்ணைகளில் கோழிகள் இறந்ததையடுத்து, அக்கோழிகளின் மாதிரிகள் நோயியல் ஆய்வகத்தில் பரிசோதிக்கப்பட்டன. அப்போது, இறந்த கோழிகளுக்கு பறவைக்காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்தப் பண்ணைகளில் இருந்த 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிகள் கொல்லப்பட்டன. http://www.thinakkural.com/news/2007/3/11/...s_page23096.htm
-
- 0 replies
- 557 views
-
-
அமெரிக்காவில் வாழும் வெளிநாட்டினருக்கு கிரீன்கார்டு வழங்க விதிக்கப்பட்ட உச்சவரம்பை நீக்கும் மசோதா, பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டது. இது, அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது. இந்தியா உள்பட பல்வேறு வெளிநாட்டினர் அமெரிக்காவில் பணியாற்றுவதற்காக எச்1பி விசாவில் செல்கின்றனர். குறிப்பாக, தகவல் தொழில்நுட்ப (ஐடி) ஊழியர்கள் போன்ற உயர்திறன் கொண்ட பணியாளர்கள், அங்கு தங்கி பணியாற்றி வருகின்றனர். அவர்கள் அமெரிக்காவில் நிரந்தரமாக தங்குவதற்கு, அந்நாட்டின் நிரந்தர குடியுரிமை அட்டையான, ‘கிரீன் கார்டு’ பெற வேண்டும். ஆனால், தற்போதைய அமெரிக்க சட்டத்தின்படி, பிறநாட்டை சேர்ந்தவர்கள் 7 சதவீதம் பேர் மட்டும் கிரீன்கார்டு பெற முடியும். இதனால், பல ஆண்டுகளுக்கும் மே…
-
- 6 replies
- 846 views
-
-
7 தமிழரையும் கருணை அடிப்படையில் விடுதலை செய்ய உதவுங்கள் – சோனியாவுக்கு நீதிபதி தோமஸ் கடிதம்:- 7 தமிழரையும் கருணை அடிப்படையில் விடுவிக்குமாறு சோனியாவுக்கு நீதிபதி தோமஸ் கடிதம் எழுதியுள்ளார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் 7 தமிழரையும் கருணை அடிப்படையில் விடுவிக்க உதவ கோரி காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி தோமஸ் கடிதம் எழுதியுள்ளார். கடந்த 1991-ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்ட ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் முருகன், நளினி, சாந்தன், பேரறிவாளன் ஆகிய 4 பேருக்கு தூக்குத் தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. ராஜீவ் வழக்கில…
-
- 2 replies
- 654 views
-
-
வடக்கத்திய ஊடகமான 'ஹிந்துஸ்டான் டைம்ஸ்'ஸில் தமிழ் நாடு அரசின் 7 தமிழர்களின் விடுதலை ஆணையை நீங்கள் ஆதரிக்கிறீர்களா? அல்லது எதிர்க்கிறீர்களா? என பொது கருத்துக்கணிப்பு நடைபெறுகிறது. அனைவரும் தவறாது வாக்களித்து வடக்கர்களுக்கு நம் ஒட்டுமொத்த ஆதரவு தமிழ்நாடு அரசின் பக்கமே என நிரூபியுங்கள். வாக்களிக்க இணைப்பை சொடுக்கவும்! Do you support Tamil Nadu government's decision to release Rajiv Gandhi's killers? http://www.hindustantimes.com/htpoll/OpinionPoll.aspx?opx=329#pd_a_7811635 நன்றி!
-
- 19 replies
- 1k views
-
-
7 பேருக்கு ஒரே நாளில் தூக்கு ஜப்பானில் சுரங்கப்பாதை ஒன்றில் நச்சு வாயு தாக்குதல் நடத்தி, 13 பேரை கொன்று குவித்த சாமியார் உள்ளிட்ட 7 பேர் ஒரே நாளில் தூக்கில் போடப்பட்டனர். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் சுரங்கப்பாதை ஒன்றில், 1995ஆம் ஆண்டு, மார்ச் மாதம் 20ஆம் திகதி சரின் என்ற நச்சு வாயு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த நச்சு வாயு, இரண்டாம் உலகப்போரின்போது ஜேர்மனியில் நாஜிக்களால் உருவாக்கப்பட்ட ஆர்கனோ பாஸ்பரஸ் வகை நரம்பு வாயு ஆகும். இந்த வாயு தாக்குதலுக்கு ஆளான அப்பாவி மக்கள் சில விநாடிகளில் வாந்தி எடுத்தனர், சிலருடைய கண்களில் பார்வை பறிபோனது, சிலர் பக்கவாதத்துக்கு ஆளாகினர். 13 பேர் உயிரிழந்தனர். பெரும்பாலும் குற்றச்சம…
-
- 0 replies
- 595 views
-
-
கம்ப்யூட்டர் கோளாறு காரணாக, தரைகட்டுப்பாட்டு தளத்துக்கும், சர்வதேச விண்வெளி நிலையத்துக்கும் இடையேயான தகவல் தொடர்பு, துண்டிக்கப்பட்டது.அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகள் ஒன்றிணைந்து, விண்வெளியில், சர்வதேச விண் ஆராய்ச்சி மையத்தை நிறுவியுள்ளன. தற்போது, இந்த மையத்தில், இரண்டு அமெரிக்கர்களும், மூன்று ரஷ்யர்களும், கனடா நாட்டை சேர்ந்த விண்வெளி வீரர் ஒருவரும் தங்கியுள்ளனர்.இவர்களுக்கு தேவையான உணவு, பிராணவாயு, தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள், சோயுஸ் உள்ளிட்ட விண்கலங்கள் மூலம், அனுப்பப்பட்டு வருகின்றன. நேற்று முன்தினம், இந்த மையத்துடனான தொடர்பு, திடீரென துண்டிக்கப்பட்டது. அமெரிக்காவின், ஹூஸ்டன் நகரில் உள்ள, தரை கட்டுபாட்டு மைய அதிகாரிகள், விரைந்து ச…
-
- 2 replies
- 513 views
-
-
புதுடெல்லி: ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்திருப்பதற்கு பா.ஜ.க. மேலிடம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அதேநேரத்தில் தமிழக பா.ஜனதா தலைவர் ஆதரவு தெரிவித்துள்ளார். ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட 7 பேரை தமிழக அரசு விடுதலை செய்ய முடிவெடுத்திருப்பது குறித்து பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரான அருண்ஜெட்லி கூறும்போது, ''ராஜீவ்காந்தி கொலை கைதிகள் மீது பல்வேறு அமைப்புகளும் கருணையுடன் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை பா.ஜ.க. ஏற்கவில்லை. அவர்கள் எடுத்துள்ள முடிவுகள் ஏமாற்றம் தருவதாக இருக்கிறது. உண்மையில் தமிழக அரசின் முடிவு எனக்கு மிகுந்த வேதனையைத் தருகிறது. தமிழக அரசு அந்த முடிவை மாற்ற வேண்டும்'' என்றார். அருண்ஜெட்லி கூறியு…
-
- 0 replies
- 567 views
-
-
புதுடெல்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்பட 7 பேரின் விடுதலைக்கு எதிராக வழக்கின் விசாரணையை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம் செய்து உச்ச நீதிமன்றம் திடீரென உத்தரவிட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்கு தண்டனையை பிப்ரவரி 18 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. இந்த 3 பேர் உள்பட ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி உள்பட 4 பேரையும் விடுவிப்பது தொடர்பாக தமிழக அரசு தனது அதிகாரத்திற்குட்பட்டு முடிவெடுக்கலாம் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது. இதையடுத்து இந்த 7 பேரையும் விடுக்க முடிவு செய்து தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த …
-
- 13 replies
- 1.2k views
-