உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26725 topics in this forum
-
சென்னை: நான் யாரை பாராட்டினாலும், உன்னிப்பாக பார்த்துக் கொண்டிருப்பேன். யாராக இருந்தாலும், என் கண்களுக்கு தப்ப முடியாது. திராவிட இயக்கத்தை கட்டிக்காக்க வேண்டுமென, போலியாக சொல்லிக் கொண்டு, மறைமுகமாக தவறு செய்கிறவர்கள் யாராக இருந்தாலும், அவர்களை நான் மன்னிப்பதில்லை. ஏனென்றால், எனக்கு அவர்களை விட, என்னை விட, கட்சி பெரியது; கொள்கை பெரியது என கருணாநிதி கூறியுள்ளார். Dinamalar
-
- 6 replies
- 831 views
-
-
ஜனவரி 26, 2009! வழக்கம் போல் சென்னை மெரினாவில் காவல்துறை அணிவகுப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தது. அரசுத் தொலைக்காட்சியில் தில்லியில் நடக்கும் இராணுவ அணிவகுப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தது. பிற தொல்லைக்காட்சிகளில் சிம்பு, தனுஷ், தமன்னா முதலான நாட்டுக்காக உழைக்கும் நல்லவர்களின் அணிவகுப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தது. இப்படியாக தேசப்பற்று பொங்கி வழிந்து கொண்டிருந்த நிலையில், சென்னை ஆளுநர் மாளிகைக்கு அருகில் சைதாப்பேட்டை பனகல் மாளிகைக்கு எதிரிலிருந்து ஒலிக்கிறதொரு இளம்பெண்ணின் குரல். “ஈழத்திலே வெறியாட்டம்! இங்கே எதற்கு கொண்டாட்டம்? குடியரசுக் கொண்டாட்டம்?” இம்முழக்கத்தை தொடர்ந்து எதிரொலித்து எழும்புகின்றன ஆயிரக்கணக்கான குரல்கள். சைதை பேருந்து நிலையத்தை கடந்து செல்லும் வாகனங்கள்…
-
- 1 reply
- 1.6k views
-
-
சர்வாதிகாரி ஹிட்லர், சைவ உணவு பழக்கம் கொண்டவர்' என, அவரிடம், "உணவு பரிசோதகராக' பணி புரிந்த பெண் தெரிவித்திருக்கிறார்.இரண்டாம் உலகப்போருக்கு காரணமானவரான ஜெர்மன் அதிபர் ஹிட்லர், ஒரு கொடுங்கோலராக, பரவலாக அறியப்பட்டவர். கோடிக்கணக்கான யூதர்களை கொன்று குவித்த அவர், "சைவ உணவுகளையே விரும்பி சாப்பிட்டார்' என, அவரது உணவை பரிசோதித்த குழுவில் பணிபுரிந்த, மாகோட் வோயெல்க், 95, என்ற பெண் தெரிவித்துள்ளார். ஹிட்லரின் உயிருக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால், அவர் உணவில் விஷம் கலக்கப்பட்டுள்ளதா என்பதை அறிய, அந்த உணவை முதலில் சுவை பார்க்க, தனியாக ஆட்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். இரண்டாம் உலகப்போர் சமயத்தில், ஹிட்லர் பயன்படுத்திய, "உல்ப்ஸ் லேர்' என்ற ராணுவ தலைமையகம் ஒன்றில், "உணவு …
-
- 0 replies
- 487 views
-
-
கொலைக்குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஆண்டுக்கணக்கில் பிடிபடாமல் வெளியுலகில் சுதந்திரமாக வாழும் இந்த காலத்தில் கொலையே செய்யாமல் 23 ஆண்டுகளாக சிறையில் வாடிய அமெரிக்கர் ஒருவரை தற்போது நிரபராதி என முடிவு செய்து விடுதலை செய்துள்ளது. அவர் விடுதலையான போது அவருடைய உறவினர்கள் கட்டித்தழுவி ஆனந்தக்கண்ணீர் வடித்து வரவேற்றனர். அமெரிக்காவின்,நியூயார்க் நகரை சேர்ந்த, டேவிட் ரான்டா, கடந்த, 1991ல், நடந்த வழிப்பறியின் போது, யூத மத குருவை கொன்றதாக, குற்றம் சாட்டப்பட்டார். இதையடுத்து, அவருக்கு, 37 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது. எனினும், தனக்கும் இந்த கொலைக்கும் தொடர்பு இல்லை என, அவர் கூறி வந்தார். கடந்த 23 ஆண்டுகளாக, சிறையில் இருந்த இவரை, "குற்றமற்றவர்' என, கூறி, புரூக்ளி…
-
- 0 replies
- 375 views
-
-
ஜெர்மனி: ஒரு மில்லியன் இணைய தொடர்புகள் ஹேக்கர்களால் துண்டிப்பு இணைய வலையமைப்பில் புகுந்து சேவைகளை முடக்குவோர் ஏறக்குறைய ஒரு மில்லியன் பயன்பாட்டாளர்களின் இணைய தொடர்புகளை துண்டித்திருக்கலாம் என்று ஜெர்மனியின் தொலைபேசி சேவை வழங்கும் நிறுவனமான டோயிட்ச்சே டெலகாம் தெரிவித்திருக்கிறது. ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய சேவையில் ஏற்பட்டிருக்கும் இந்த தடங்கல், வீடுகளுக்கு இணைய தொடர்புகளை வழங்கும் கருவிகளான ரவுட்டர்களை பாதித்துள்ளது. "வெளிபுறத்தார்" என்று அது கூறியிருப்போரால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்று இந்த நிறுவனம் கூறியிருக்கிறது. இதனால் அரசு பாதிக்கப்படவில்லை என்று ஜெர்மனி தெரிவித்திருக்கிறது. இத்தகைய முக்கிய இணைய உள…
-
- 0 replies
- 338 views
-
-
பல போர்களை ஜோ பிடன் தொடங்குவார்: சீன அரசாங்க ஆலோசகர் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பிடன், பல போர்களைத் தொடங்குவார் என சீன அரசாங்க ஆலோசகர் ஜெங் யோங்னியான் தெரிவித்துள்ளார். ட்ரம்ப் நிர்வாகத்தில் மோசமடைந்த உறவு, பிடனின் ஆட்சிக் காலத்தின் போது சரிசெய்யப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த கருத்து வெளியாகியுள்ளது. இதுகுறித்து ஆலோசகர் ஜெங் யோங்னியான் கூறுகையில், ‘அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பிடனின் நிர்வாகத்தின் கீழ், அமெரிக்காவுடனான அதன் உறவுகள் தானாகவே மேம்படும் என்ற மாயையை சீனா கைவிட வேண்டும். அத்துடன், அமெரிக்கா மேற்கொள்ளும் கடுமையான நிலைப்பாட்டை எதிர்கொள்ள சீனா தயாராக இருக்க வேண்டும். நல்ல பழைய நாட்கள் முட…
-
- 2 replies
- 904 views
-
-
இந்தியத் தரகு முதலாளிகளுக்கு பொன்முட்டையிடும் வாத்து, தகவல் தொடர்புத் துறையாகும். கடந்த பத்தாண்டுகளில் இந்தத் துறையில் முதலாளிகள் அடித்த கொள்ளை பல ஆயிரம் கோடிகளைத் தாண்டும். அதே அளவு கோடிகளை அரசும், பொதுத்துறையும் இழந்திருக்கிறது. இந்த இழப்பிற்கும், அந்தக் கொள்ளைக்கும் காங்கிரசு, பா.ஜ.க. இரு கட்சிகளும், அதிகார வர்க்கமும் காரணமாயிருக்கின்றன. இந்த அணிவகுப்பில் சமீபத்திய வரவு ஸ்பெக்ட்ரம் ஊழல். இதில் கொள்ளையடிக்கப்பட்டிருக்கு
-
- 0 replies
- 676 views
-
-
வடகொரியா தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுப்பதற்காக ஜப்பான் தலைநகர் டோக்கியோ முழுவதும் இடைமறித்து தாக்கும் ஏவுகணைகள் நிறுவப்பட்டுள்ளன. மேலும் வடகொரியாவை கடுமையாக தாக்கவும் ஜப்பான் தயாராகிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், நாங்கள் தாக்குதல் நடத்த திட்டமிட்டால், முதலாவதாக ஜப்பான் தலைநகர் டோக்கியோவை தாக்கி அழிப்போம் என்று வடகொரியா மிரட்டல் விடுத்துள்ளது. அமெரிக்க ராணுவத்திற்கு ஜப்பான் இடமளித்துள்ளதால் கோபமடைந்து இருக்கும் வடகொரியா தாக்குதல் நடத்தக்கூடும் என்றும் அச்சத்தில் ஜப்பானிய அதிகாரிகள் உள்ளனர். பேச்சுவார்த்தைக்கு வருமாறு தென் கொரியா விடுத்த அழைப்பை வடகொரியா நிராகரித்து விட்டது.பதற்றத்தைத் தணிப்பதற்காக பேச்சுவார்த்தைக்கு வருமாறு வடகொரியாவுக்கு தென் கொரியா க…
-
- 5 replies
- 892 views
-
-
லடாக்: எல்லைப் பிரச்சனை தொடர்பாக நடத்தப்பட்ட மூன்றாவது கட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில், லடாக்கை விட்டு வெளியேற வேண்டுமானால் ராணுவ நடவடிக்கையை இந்தியா கைவிட வேண்டும் என சீனா நிபந்தனை விதித்துள்ளது. காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியில் கடந்த 15ஆம் தேதி சீன ராணுவம் திடீரென ஊடுருவி, 19 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஆக்கிரமித்து 5 கூடாரம் அமைத்தனர். அவர்கள் லடாக் நோக்கி மேலும் முன்னேறாமல் இருக்க இந்திய ராணுவம் அங்கு குவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக வெளியேற சீனாவுக்கு இந்தியா வைத்த கோரிக்கையை அந்நாடு கண்டு கொள்ளவில்லை. இதையடுத்து இந்தியா- சீனா ராணுவ உயர் அதிகாரிகள் மட்டத்தில் பேச்சு வார்த்தை நடந்தது. 2 தடவை பேச்சு தோல்வி அடைந்த நிலையில் நேற்று இரு நாட்டு ராணுவ அதிகாரிகளும் ல…
-
- 7 replies
- 890 views
-
-
பங்களாதேசில் கட்டிட இடிபாடுகளில் சிக்கியிருந்த பெண் ஒருவர் 17 நாட்களுக்குப் பின்னர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். தலைநகர் டாக்காவுக்கு அருகே இருந்த ஒரு எட்டு மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 1021க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். அந்தக் கட்டிடத்தில் நான்கு ஆயத்த ஆடைத் தொழிற்சாலைகளும் ஒரு வங்கியும் செயற்பட்டு வந்தன.கட்டிட இடிபாடுகளுக்கிடையே இருந்த ரேஷ்மி என்ற அந்தப் பெண் நான் இங்கே இருக்கிறேன் என்று கத்தியதை கேட்டுள்ள மீட்புப் பணியாளர்கள் அவரை மீட்டுள்ளனர். கட்டிட இடிபாடுகளில் மிகப்பெரிய தூணுக்கும், பீமுக்கும் இடையில் சிக்கியிருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்துள்ளார். அந்தக் கட்டிடத்தில் இருந்த உணவுப் பொருட்களை உண்டும், கட்டிடத்தில் அடிக்கப்பட்ட தண்ணீரைக் க…
-
- 1 reply
- 281 views
-
-
ஜேர்மனி- நெதர்லாந்தில் கடுமையான பனிப்பெழிவு: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு! ஜேர்மனி மற்றும் நெதர்லாந்தில் பெய்து வரும் கடும் பனிப்பொழிவு காரணமாக, அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதித்துள்ளது. வடக்கு ஜேர்மனியில் காணப்படும் பனியால் நெதர்லாந்து மற்றும் சில நீண்டதூர இடங்களுக்கு ரயில் போக்குவரத்து இரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் ஜேர்மனியில், மைனஸ் 7 டிகிரி செல்சியசுக்கு வெப்பநிலை பதிவாகும் என்றும் பனிப்புயல்கள் உருவாகும் அபாயம் இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. பெர்லின், ஹனோவர் உள்பட பல்வேறு இடங்களுக்கு மறு உத்தரவு வரும்வரை ரயில்களை இயக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே நெதர்லாந்தில் 9ஆண்டுகளுக்கு பிறகு கடுமையான அளவு பனி…
-
- 6 replies
- 1k views
- 1 follower
-
-
உத்தரகாண்டில் மீண்டும் பனிச்சரிவு- 384 ராணுவ வீரர்கள் மீட்பு சங்மோலி: உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் நந்தா தேவி பகுதியில் பனிப்பாறை உடைந்து அங்குள்ள தவுலி கங்கா, ரிஷி கங்கா, அலகநந்தா நதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் கிராமங்களுக்குள் வெள்ளம் புகுந்தது. மேலும் அங்கு கட்டுமானப் பணிகள் நடந்து வந்த மின் நிலையத்துக்குள்ளும் சுரங்க பாதையிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதில் ஏராளமான தொழிலாளர்கள், பொதுமக்கள் சிக்கி கொண்டனர். இதையடுத்து மீட்பு பணிகள் நடந்ததில் பலர் பிணமாக மீட்கப்பட்டனர். அங்கு தொடர்ந்து மீட்பு பணி நடந்து வரும் நிலையில் இதுவரை 80 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. இன்னும் 126 பேர் பேரை காண…
-
- 1 reply
- 484 views
-
-
ட்ரம்புக்குப் பாடம் சொல்லும் டோனி! பிரிட்டனையும் அமெரிக்காவையும் அதிக வலியில்லாமல் வளப்படுத்தும் ஒரு பொருளாதார தேசியத்துக்காக… ஐரோப்பிய ஒன்றியம், சர்வதேச வர்த்தக முறை, நேட்டோ, ஐநா சபை போன்ற பெரிய அமைப்புகள் அனைத்தையும் கைவிட வேண்டும் என்பது பிரெக்ஸிட், ட்ரம்பிஸத்தின் மிக மிக ஆபத்தான வாதம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் ட்ரம்ப் உரையாற்றுவதற்கு 11 நாட்கள் முன்பு, பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டோனி பிளேர் ஆற்றிய உரை முக்கியமானது. “ட்ரம்பிஸத்தின் பிரிட்டன் மாதிரியை நிராகரிக்க வேண்டும்” என்று அந்த உரையில் உணர்வுபூர்வமாக வேண்டுகோள் விடுத்தார் டோனி பிளேர். “ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வில…
-
- 0 replies
- 411 views
-
-
பிரான்ஸில் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை! பிரான்ஸில் ஒருசில இடங்கள் தவிர்த்து ஏனைய இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் அறிவித்துள்ளார். இதன்படி இன்று (வியாழக்கிழமை) முதல் கட்டாய முகக்கவசம் என்ற கட்டுப்பாடு தளர்த்தப்படுகின்றது. இதுதொடர்பாக பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் நேற்று அமைச்சர்களுடனான சந்திப்பு நிறைவடைந்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், ‘இரவு நேர கட்டுப்பாடு எதிர்வரும் ஜூன் 20ஆம் திகதியுடன் நிறைவுக்கு வருகின்றது. இனிமேல் முடக்கநிலை கட்டுப்பாடுகள் இல்லை. அதேவேளை, முகக்கவசம் அணிவதும் இனிமேல் கட்டாயமில்லை. ஆனால், அதில் சில விதிவிலக்குகள் உண்டு. நெருக்கமான இடங்கள், நீண்ட வரிசையின் போது, அதிக மக்கள் கூட்ட…
-
- 0 replies
- 501 views
-
-
காலக்கெடுவிற்குப் பின்னர் ஆப்கானிலிருக்கும் படையினர் ஆக்கிரமிப்பாளர்களாக கருதப்படுவாரகள்: தலிபான் ஆப்கானிஸ்தானில் நிலைக்கொண்டுள்ள வெளிநாட்டுப் படையினர் தாங்களே அளித்த செப்டம்பர் மாத கால கெடுவுக்குள் முழுவதாக வெளியேறிவிடாவிட்டால், அவர்கள் ஆக்கிரமிப்பாளர்களாக கருதப்படுவார்கள் என தலிபான் அமைப்பு தெரிவித்துள்ளது. தூதரகங்களையும், காபூல் சர்வதேச விமான நிலையத்தையும் பாதுகாக்க முக்கியமாக அமெரிக்கத் துருப்புகளைக் கொண்ட 1000 படையினர் மட்டும் கெடுவுக்குப் பிறகும் ஆப்கானிஸ்தானில் தங்கியிருப்பார்கள் என்று கூறப்படும் பின்னணியில் தலிபனின் இந்த கருத்து வெளிவந்துள்ளது. இதுதொடர்பாக தலிபன் செய்தித்தொடர்பாளர் சுஹைல் ஷஹீன் கூறுகையில், ‘சுமார் 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் உள்ள நே…
-
- 0 replies
- 411 views
-
-
செயின்ட் பீட்டர்ஸ்பர்க்: சிரியா நாட்டின் மீது அமெரிக்கா தலைமையில் ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால் சர்வதேச பொருளாதாரம் மிகக் கடுமையாக பாதிப்படையும் என்று சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜி 20 நாடுகளின் உச்சி மாநாட்டுக்காக ரஷ்யா சென்றுள்ள சீனாவின் துணை நிதி அமைச்சர் ஜூ குயாங்யோ செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கில் செய்தியாளர்களிடம் பேசுகையில், சிரியா ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இதற்கு ஐக்கிய நாடுகள் சபைதான் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும். அதைவிடுத்து சர்வதேச நாடுகள் ராணுவ நடவடிக்கை மேற்கொண்டால் நிச்சயமாக சர்வதேச பொருளாதாரத்தில் குறிப்பாக எண்ணெய் விலையில் பெரும் எதிர்விளைவுகளே உருவாகும் என்றார். http://tamil.oneindia.in/news/2013/09/05/world-china-…
-
- 0 replies
- 392 views
-
-
புதிய திருப்பம்: அதிபர் தேர்தலில் ரஷ்ய தலையீடு குறித்து விசாரிக்க நேர்மைக்கு பெயர் பெற்ற அதிகாரி நியமனம் படத்தின் காப்புரிமைREUTERS Image captionராபர்ட் முல்லர் எஃப் பி ஐ-ன் தலைவராக 2001 லிருந்து 2013 வரை பதவி வகித்தார். அமெரிக்க அதிபர் தேர்தல் மற்றும் டிரம்பின் பிரசார உறவுகளில் ரஷ்யாவின் குறுக்கீடு இருந்ததாக சொல்லப்படும் குற்றச்சாட்டு விசாரணைக்கு எஃப் பி ஐ அமைப்பின் முன்னாள் தலைவர் ராபர்ட் முல்லர் தலைமை வகிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ராபர்ட் முல்லரின் பெயரை அறிவித்த துணை அட்டார்னி ஜெனரல், பொது நலன் கருதி வெளிநபர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். முல்லரின் நியமனம் இருதரப்பை சேர்ந்த அரசியல்…
-
- 1 reply
- 409 views
-
-
போர் நிறுத்தத்திற்கான... சர்வதேச அழைப்புகளை, நிராகரித்து தலிபான்கள் அமைப்பு! ஆப்கானிஸ்தானில் போர்நிறுத்தத்திற்கான சர்வதேச அழைப்புகளை தலிபான்கள் நிராகரித்துள்ளனர். முக்கிய வடக்கு நகரமான குண்டூஸையும், சர்-இ-புல் மற்றும் டலோகானையும் தலிபான்கள் கைப்பற்றியதாக கூறப்படுகிறது. ஐந்து பிராந்திய தலைநகரங்கள் தலிபான்களிடம் வீழ்ந்துள்ளன. இதனிடையே தீவிரவாதிகள் மீது அமெரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் விமானங்கள் மீண்டும் வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளன. சமீபத்திய தாக்குதல்களில் டஸன் கணக்கான தலிபான் போராளிகள் கொல்லப்பட்டதாக ஆப்கான் அதிகாரிகள் கூறுகின்றனர். இருப்பினும், தலிபானின் செய்தித் தொடர்பாளர் ஞாயிற்றுக்கிழமை, அமெரிக்காவின் தலையீடுக்கு எதிராக எச்சரித்தார். ஆ…
-
- 0 replies
- 309 views
-
-
241வது தேசிய தின நிகழ்வில் ஐக்கிய அமெரிக்கா வட அமெரிக்கா கண்டத்தில் வாசிங்டனை தலை நகராகவும் நிவ்யோர்க்கை பிரதான வணிக நகராகவும் கொண்ட 50 மாநிலங்களை உள்ளடக்கிய ஒரு நாடே ஐக்கிய அமெரிக்காவாகும். வடக்கே கனடாவையும் தெற்கில் மெக்ஸிகோவையும் கிழக்கே அட்லாண்டிக் கடல் மற்றும் மேற்கே பசுபிக் கடல் என்பனவற்றை எல்லைகளாகக் கொண்ட அமெரிக்கா பரப்பளவில் ரஷ்யா கனடா என்பவற்றுக்கு அடுத்ததாக 3வது பெரியநாடாக விளங்கும் இந்நாட்டின் 45வது ஜனாதிபதியாக 2016ஆம் ஆண்டு முதல் டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்று வழிநடத்திச் செல்கின்றார். இத்தாலி நாட்டைச் சேர்ந்த மெரிகோ வேஸ்புக்கி என்பவர் வணிக நோக்கத்திற்காக ஆசியாவை கடல் வழியாக கடக்க முற்படும் போது இன்றைய வட மற்றும் தென் அமெரிக்கா…
-
- 0 replies
- 440 views
-
-
ரியாத்: சவூதி அரேபியாவின் ஜெட்டாவில், இந்தியர் உள்ளிட்ட 3 பேருக்கு தலை துண்டிக்கப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. கொல்லப்பட்ட மற்ற இருவரும் இலங்கையர்கள். அவர்களில் ஒருவர் பெண் என்பது குறிப்பிடத்தக்கது. கொல்லப்பட்ட இந்தியரின் பெயர் முகம்மது பர்மில். கேரள மாநிலம் பட்டாம்பியைச் சேர்ந்தவர். மற்ற இலங்கையர் இருவரில் ஒருவர் பெயர் பந்தர் நிகார். பெண்ணின் பெயர் ஹலிமா அப்துல் காதர். இவர் பணிப்பெண்ணாக வேலை பார்த்து வந்தார். பர்மிலும், நிகாரும், சேர்ந்து, சவூதி அரேபியாவைச் சேர்ந்த மரியம் ஹுசேன் என்ற பெண்ணின் வீட்டுக்குள் புகுந்து அவரது வாயைப் பொத்தி நகைகளையும், பணத்தையும் திருடிச் சென்றனர். இந்த சம்பவத்தில் மரியம் ஹூசேன் மூச்சுத் திணறி உயிரிழந்தார். மரியம் ஹூச…
-
- 4 replies
- 1.8k views
-
-
புதைகுழியில் இருந்து மீண்ட சிறுமி - பாகிஸ்தான் பாலியல் பயங்கரவாதிகள். தனக்கு மூக்குப் போனாலும் பரவாயில்லை, எதிரிக்கு சகுனப் பிழை ஆக வேண்டும் என்பது போல் இந்தியாவில் அக்கிரமங்கள் செய்ய, தீவிரவாதிகள் வளர்வதை தனது மண்ணில் ஊக்குவித்த பாகிஸ்தானை, அதே தீவிரவாதம், தீட்டிய மரத்தில் கூர் பார்ப்பது போல், பதம் பார்கின்றது. பாலியல் வன்முறைகளை செய்வதும், கேட்டால், குறித்த பெண்ணின் தவறான ஒழுக்கம் காரணமாக, தாம் அந்த தண்டனை கொடுத்தோம் என சொல்வதும் வழக்கமாகி விட்டது. ஆட்டை, கடித்து மாட்டைக் கடித்து கடைசியாக சிறுமிகளை பாலியல் பாலத்காரம் செய்வது நான்கு மடங்காக கடந்த ஐந்து ஆண்டுகளில் அதிகரித்து உள்ளது. கடந்த வாரம், கிராமப் புறம் ஒன்றில் தனியே நடந்து சென்ற 13 வயது சிறுமியை கடத்த…
-
- 1 reply
- 587 views
-
-
ரஷ்யா மீது பொருளாதார தடைவிதிக்கும் மசோதாவிற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார். கடந்த ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் கிளாரி கிளிண்டனை தோற்கடித்து வெற்றி பெற்றார். இந்தத் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு அதிகம் இருந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்தக் குற்றச்சாட்டை அமெரிக்காவில் இருந்து வெளிவரும் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை வெளியிட்டது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கிளாரி கிளிண்டனை தோற்கடிக்க ரஷ்ய உளவுத் துறை செயல்பட்டனர் என்றும் குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து அமெரிக்காவின் செனட் சபை கமிட்டி நடத்திய விசாரணையில் உறுதியானது. இந்நிலையில் ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்கு…
-
- 0 replies
- 439 views
-
-
புதுடெல்லி/பனாஜி: பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் சிக்கியுள்ள தெஹல்கா முன்னாள் ஆசிரியர் தருண் தேஜ்பால், கோவா வந்தவுடன் கைது செய்ய போலீஸ் தீவிரமாக உள்ளதால், அவருக்கு நெருக்கடி முற்றியுள்ளது. தெஹல்கா முன்னாள் ஆசிரியர் தருண் தேஜ்பால் பாலியல் பலாத்காரம் செய்ததாக சக பத்திரிகை பெண் நிருபர் கொடுத்த புகாரின் பேரில் கோவா காவல்துறையினர் அவர் மீது பாலியல் பலாத்கார வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், தேஜ்பாலை நேற்று பகல் 3 மணிக்குள் விசாரணைக்கு ஆஜராகுமாறு கோவா காவல்துறையினர் சம்மன் அனுப்பினர். அதற்கு மாறாக, அவகாசம் கேட்டு தேஜ்பால் கடிதம் அனுப்பினார். இதனை கோவா காவல்துறை நிராகரித்து விட்டது. இதையடுத்து, அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது…
-
- 0 replies
- 371 views
-
-
நன்றி:http://thatstamil.oneindia.in/news/2009/12/25/i-am-not-bangalore-rest-karunanidhi.html கருநாகம் உலக செம்(கனி)மொழி மாநாட்டிற்கு அழைப்பு!.. உடன் பிறப்பே.. நேற்று நீ அடித்த டாஸ்மார்க்கு போதை தெளிந்திருக்காது என்று எனக்கு தெரியும்..இருந்தாலும் உன்னை நல்வழிபடுத்த வேண்டிய பொறுப்பு கழகத்திற்கு இருப்பதால் இக்கடிதம் எழுதுகிறேன்.. இக்கடிதம் எழுதாமலே நீ ஊரை அடித்து உலையில் போட்ட காசை கொண்டு..ஏழை எளியவர்தம் உணவு மற்றும் பயணகளைப்பு அயர்ச்சியை குவாட்டரும் கோழி பிரியாணியையும் கொடுத்து ஊரை வளைத்து நம் கனிமொழி மாநாடுக்கு நிறைத்துவிடுவாய் என எனக்கு தெரியும்.. இருந்தாலும் கடமை என்று உள்ளதல்லவா? எதிர்கட்சி அறிவீலிகளும் தமிழ் உணர்வு பதர்களும் இன்று எம்மை …
-
- 1 reply
- 1.7k views
-
-
- இன்று (30/03/10) 13:00 மோதல் நிகழவுள்ளது நேரடி இணைய ஒளி பரப்பு --> http://webcast.cern.ch/lhcfirstphysics/ read more http://www.yarl.com/forum3/index.php?showtopic=70418 -
-
- 4 replies
- 1.1k views
-