Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. நெருப்போடு விளையாடுகிறது இந்தியா தென் சீனக் கடலில், எண்ணெய் துரப்பண பணிக்காக, வியட்நாமுடன் இந்தியா மேற்கொண்டுள்ள ஒப்பந்தம், நெருப்போடு விளையாடுவதற்குச் சமம். இந்தப் பணியில் இருந்து உடனடியாக இந்தியா பின்வாங்க வேண்டும்’ என, சீன பத்திரிகைகள் மிரட்டியுள்ளன. வியட்நாம் அதிபர் ட்ருவாங் டன் சங் கடந்த வாரம் இந்தியா வந்தார். அப்போது, அரசின் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கார்ப்பரேஷனுக்கும், வியட்நாமின் பெட்ரோ வியட்நாம் நிறுவனத்துக்கும் இடையில், எண்ணெய் துரப்பண பணி தொடர்பாக ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.இந்த ஒப்பந்தங்களின்படி, வியட்நாமின் தென் கடற்பகுதியில் உள்ள நாம் கோன் சன் என்ற எண்ணெய் வளப் பகுதியில், எண்ணெய் துரப்பணி மேற்கொள்ளப்படும்.தென் சீன கடலில் எண்ணெய் வளம் அதிகமாக…

    • 0 replies
    • 676 views
  2. கொல்லப்பட்ட கனேடிய சிறுமிக்கு பொதுமக்கள் அஞ்சலி கனடாவின் பிரம்ப்டன் பகுதியில் தந்தையால் கொடூரமாக கொல்லப்பட்ட 11 வயது சிறுமிக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர். சிறுமியின் பாடசாலை அருகே அமைந்துள்ள பூங்கா ஒன்றில் கூடிய அப்பகுதி மக்கள் மெழுகுவர்த்தி ஏந்தியும், பூக்கள் தூவியும் அஞ்சலி செலுத்தியுள்ளனர். சுமார் 200 பேர் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் பலரும் சிறுமியை நினைவு கூர்ந்துள்ளனர். கடந்த வியாழக்கிழமை பிற்பகல் ஹுன்டொனாரியோ ஸ்ட்ரீட் மற்றும் டெர்ரி வீதி பகுதி ஊடக ரூபேஷ் ராஜ்குமார் தனது மகளை அழைத்துச் சென்றுள்ளார். இதனையடுத்து அன்று மாலை குழந்தை மீண்டும் வீடு திரும்பாத நிலையில் தாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார். அதன் பின்னர் பொலிஸார் மேற்கொண…

  3. 18 ஏப்ரல் 2024, 08:18 GMT புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர் யுக்ரேனில் ரஷ்ய ராணுவ வீரர்களின் இறப்பு எண்ணிக்கை இப்போது 50,000ஐ கடந்துவிட்டதை பிபிசி உறுதிப்படுத்தியுள்ளது. ரஷ்யா இரண்டாவது ஆண்டிலும், இறைச்சி அரவை (Meat Grinder) உத்தி என்றழைக்கப்படும் அதன் தாக்குதல் உத்தியின்படி – அதாவது யுக்ரேனிய படைகளை வலுவிழக்கச் செய்வதற்காக கூட்டம் கூட்டமாக ராணுவ வீரர்களை களமிறக்கும் ரஷ்யாவின் உத்தி – பல ராணுவ வீரர்களை போருக்கு அனுப்பியது. அதன் விளைவாக ஏற்பட்ட ரஷ்ய வீரர்களின் இறப்புகள் முதல் ஆண்டைவிட தற்போது கிட்டத்தட்ட 25% அதிகமாக இருப்பதைப் பார்க்க முடிகிறது. பிபிசி ரஷ்ய சேவை, சுயாதீன ஊடக குழுவான மீடியாசோனா மற்றும் தன்னார்வலர்கள், பிப்ரவரி …

  4. டுபாயில் கோர விபத்து : 17 பேர் பலி டுபாயில் நேற்று மாலை இடம்பெற்ற பஸ் விபத்து ஒன்றில் 17 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ரமழான் கொண்டாட்டத்திற்காக ஓமன் நாட்டின் தலைநகரம் மஸ்கட்டிற்கு சென்று விட்டு, டுபாய் நோக்கி 31 பயணிகள் பஸ் ஒன்றில் நேற்று மாலை 6 மணியளவில் திரும்பிக்கொண்டிருந்த போது இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. டுபாய் ராசிதியா மெட்ரோ ரயில் நிலையம் அருகில் இருந்த அறிவிப்பு பலகையின் மீது திடீரென மோதி குறித்த பஸ் விபத்திற்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் பஸ்ஸில் பயணித்த 17 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த நிலையில் மேலும் 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் 12 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என…

  5. Published By: RAJEEBAN 17 SEP, 2024 | 08:29 PM தொலைத்தொடர்பு சாதனங்கள் திடீரென வெடித்துச்சிதறியதில் லெபனானின் ஹெஸ்புல்லா அமைப்பின் நூற்றுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் காயமடைந்துள்ளனர். பெய்ரூட்டின் தென்பகுதியில் உள்ள புறநகர் பகுதிகளிலும் லெபானின் ஏனைய பகுதிகளிலும் இந்த வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. பல பேஜர்கள் வெடித்துச் சிதறின என ஹெஸ்புல்லா அமைப்பின் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. காயமடைந்தவர்கள் தரையில் அமர்ந்திருப்பதையும் ஏனையவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படுவதையும் காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன. கடைகளில் வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றதை சிசிடிவிகள் காண்பித்துள்ள…

  6. பாக்.,முன்னாள் பிரதமர் பெனசிர் புட்டோ கொலை வழக்கில், முன்னாள் அதிபர் முஷாரப்பைத் தேடுவதற்காக பாகிஸ்தான் மத்திய புலனாய்வு ஏஜன்சி, இன்டர்போலை நாடுவதற்கு அந்நாட்டு உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. பெனசிர் கொலை வழக்கில், முன்னாள் அதிபர் முஷாரப் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு அவரது சொத்துக்கள்முடக்கப்பட்டுள்ளன. தற்போது அவர் லண்டனில் வசித்து வருகிறார். இவ்வழக்கு தொடர்பாக அவரைத் தேடிப் பிடிப்பதற்காக சர்வதேச போலீசான இன்டர்போலை நாடுவது என பாகிஸ்தான் அரசு சமீபத்தில் முடிவு செய்தது. இதையடுத்து இன்டர்போலைத் தொடர்பு கொண்டு, முஷாரப்பைத் தேடுவதற்காக சிவப்பு நோட்டீஸ் விடக் கோருவதற்கு பாகிஸ்தான் மத்திய புலனாய்வு ஏஜன்சிக்கு உள்துறை அமைச்சகம் அனுமதியளித்துள்ளது. htt…

    • 3 replies
    • 570 views
  7. அடாவடி பின்னணி கொண்ட ஆஸ்திரேலியா ஆஸ்திரேலியாவின் கான்பரா வனப்பகுதியில் திரியும் கங்காருகள். (கோப்புப் படம்) கங்காரு, கோலா கரடி, கிரிக்கெட், ஆப்ரா ஹவுஸ் (Opera House) இவற்றைத் தவிரவும் ஆஸ்திரேலியாவின் பக்கம் நம் கவனத்தைத் திருப்பு வதற்கு பல விஷயங்கள் உள்ளன. உலகின் ஆறாவது பெரிய நாடு என்பதைவிட கவனத்தை ஈர்க்கும் விஷயம் ஒரு மொத்த கண்டத்தையுமே அடைத்துக் கொண்டிருக்கும் நாடு அது என்பதுதான். எவ்வளவு நீண்ட கடல் எல்லை! 1.2 கோடி சதுர கிலோ மீட்டர் நீளம்! இப்போதும்கூட ஆஸ்திரேலி யாவின் கடற்கரைப் பரப்புகளில் தான் மக்கள் அதிகம் வசிக்கி றார்கள். (80 சதவீத ஆஸ்தி ரேலியர்கள் கடற்கரையிலிருந்து 100 கிலோ மீட்டருக்குள் அமைந்த பகுதிகளில்தான் வசிக்கிறார்கள்). நாட்டின் நடுபக்கமாக (அதாவது உட்…

  8. பாலஸ்தீன அதிபர் யாசர் அராபத் கடந்த 2004-ம் ஆண்டு மரணம் அடைந்தார். அவரை தொடர்ந்து அவரது பத்தா கட்சியை சேர்ந்த மகமது அப்பாஸ் ஆட்சி பொறுப்புக்கு வந்தார். ஆனால் அவரது படைகளுடன் ஹமாஸ் இயக்கத்தினர் கடுமையாக சண்டையிட்டு, காசா பகுதியை கடந்த 2007-ம் ஆண்டு கைப்பற்றினர்.அதைத் தொடர்ந்து, யாசர் அரபாத், ரமல்லா நகரில் வாழ்ந்து வந்த இல்லம் மூடப்பட்டு கிடக்கிறது. அந்த இல்லத்தில் யாசர் அராபத் நினைவு அருங்காட்சியகம் அமைக்கப்படுகிறது.இதற்காக அந்த இல்லத்தை ஹமாஸ் ஆட்சியாளர்கள், யாசர் அராபத் கட்சியினரிடம் முறைப்படி ஒப்படைத்தனர். இதையொட்டி நடந்த நிகழ்ச்சியில் பாலஸ்தீனின் அனைத்து பிரிவு அதிகாரிகளும் கலந்து கொண்டனர். http://www.seithy.com/breifNews.php?newsID=144605&category=WorldN…

  9. எழுதியவர் ,ஃபெர்கல் கியானே பதவி,சிறப்புச் செய்தியாளர் அந்த குழந்தையை ஆண்கள் அதிகமாக நிரம்பியிருக்கும் கூட்டத்தில் பார்ப்பது மிகவும் கடினமாக இருந்தது. மிகவும் சின்னஞ்சிறிய பெண் குழந்தை, அந்த கூட்டத்தின் கடைசியில் அமர்ந்திருந்தார். இஸ்ரேல் ராணுவ வீரர்கள், அங்கே இருந்த ஆண்களின் உடைகளையெல்லாம் பரிசோதனைக்காக நீக்க உத்தரவு பிறப்பித்திருந்தனர். வயதானவர்களும் கூட அதற்கு விதிவிலக்கல்ல. கேமராக்களின் பக்கம் அவர்களின் பார்வை திரும்பின. இந்த புகைப்படத்தை இஸ்ரேல் ராணுவ வீரரைத் தவிர வேறு யார் எடுத்திருக்கக் கூடும் . இஸ்ரேல் பாதுகாப்புப் படையினருடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் ஊடகவியலாளர் ஒருவரின் டெலிகிராம் பக்கத்தில் தான் முதன் முதலாக இந்த புக…

  10. பிலிப்பைன்ஸ்சில் விமான விபத்து: 9 பேர் உயிரிழப்பு! பிலிப்பைன்ஸ்சில் சிறிய ரக மருத்துவ மீட்பு விமானம் ஒன்று உல்லாச விடுதியொன்றின் மீது விழுந்து விபத்துக்குள்ளானதில் விமானத்தில் இருந்த 9 பேரும் உயிரிழந்தனர். விமானத்தில் ஒரு நோயாளி மற்றும் அவரது மனைவி, ஒரு மருத்துவர், 2 தாதியர்கள் மற்றும் 2 விமானிகள் உள்பட 9 பேர் பயணித்துள்ளனர். இந்த விமானம் லாகுனா மாகாணத்தில் உள்ள பான்சோல் நகருக்கு மேலே பறந்து கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டு அறை உடனான தகவல் தொடர்பை இழந்தது. இதையடுத்து, விமானம் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டு, அதனைத் தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டன. அப்போது குறித்த விமானம் அங்குள்ள உல்லாச விடுதியொன்றின் மீது வீழ்ந்து விபத்துக்குள்ளானமை கண்டுபிடிக்கப்பட்ட…

  11. கடலில் பலத்த சூறாவளி 4 மீனவர்கள் மாயம் ராமேஸ்வரம் கடலில்இ நள்ளிரவில் வீசிய பலத்த காற்றால் மீனவர்கள் 4 பேர் மாயமானார்கள். ராமேஸ்வரத்திலிருந்து 500 க்கும் மேற்பட்ட படகுகளில் மீன்பிடிக்க கடலுக்கு மீனவர்கள் சென்றனர். நடுக் கடலில் நள்ளிரவில் பலத்த காற்று வீசியது. மீன்பிடி வலைகள் அறுந்தன. கடல் கொந்தளித்ததால் மீன்பிடிக்க முடியாமல் பலர் கரை திரும்பினர். வலைகள் அறுந்ததில் பலத்த இழப்பு ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர். மேலும் படிக்க.. http://www.kalakam.com/forum/viewtopic.php?p=1277#1277

    • 6 replies
    • 1.4k views
  12. அமெரிக்காவில் சகோதரனை கொலை செய்த முன்னாள் பெண் காவலரை கருப்பின இளைஞர் ஒருவர் மன்னித்து, நீதிமன்றத்தில் ஆரத்தழுவிய நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அமெரிக்காவின் டல்லாஸ் மாவட்டத்தில் வசித்து வந்த பெண் காவலர் ஆம்பர் கைகெர் என்பவர், கடந்த ஆண்டு செப்டம்பர் 6ம் தேதி, தனது வீட்டின் அருகே 4வது தளத்தில் வசித்து வந்த கருப்பினத்தை சேர்ந்த போதம் ஜீன் என்ற இளைஞரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார். இந்த சம்பவத்தை கருப்பினத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என கூறி அந்நாட்டில் போராட்டம் வெடித்தது. ஆனால் இதனை மறுத்த ஆம்பர் கைகெர், சம்பவம் நடந்த அன்றைய தினம் தனது வீட்டுக்குள் ஜீன் கொள்ளையில் ஈடுபட முயன்றதாக தவறாக நினைத்து, தற்காப…

    • 1 reply
    • 630 views
  13. அமேரிக்காவில் 600 விமான சேவைகள் பாதுகாப்பு காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்டுள்ளதாக ராய்டர் செய்தி வெளியிட்டுள்ளது....................... வீடியோவை பார்பதற்க்கு...................... http://isooryavidz.blogspot.com/2008/03/hu...eled-in-us.html

    • 0 replies
    • 806 views
  14. பட மூலாதாரம்,REUTERS 15 ஜனவரி 2025, 02:22 GMT தென் கொரியாவின் பதவி நீக்கம் செய்யப்பட்ட அதிபரான யூன் சுக் யோல் சற்று முன் புலனாய்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இதனை தென் கொரிய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். அவரை கைது செய்ய இரண்டாவது முறையாக அதிகாரிகள் இன்று முயற்சி செய்தனர். முதல் முறையைப் போலவே, இம்முறையும் அவரது பாதுகாப்புப் பிரிவினர் அதிகாரிகளுக்கு ஒத்துழைக்க மறுத்துவிட்டனர். வீட்டை சுற்றிலும் யூன் சுக் யோலின் பாதுகாப்பு சேவையால் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. இதனால் வேறு வழியின்றி, சில அதிகாரிகள் ஏணிகளைப் பயன்படுத்தி அவரது வீட்டுக்குள் நுழைந்ததாக யோன்ஹாப் என்ற தென் கொரிய ஊடகம் தெரிவித்துள்ளது. யூன் சுக் யோலை கைது செய்…

  15. சௌதியில் தளர்த்தப்பட்ட கட்டுப்பாடு: உலகநாடுகள் வரவேற்பு சௌதி அரேபியாவில் இதுவரை காலமும் நடைமுறையில் இருந்த, ஆண்கள் – பெண்களுக்கான தனித் தனி நுழைவாயில் கட்டுப்பாடை தளர்த்துவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இதுவரை, அந்நாட்டில் உள்ள உணவகங்கள் குடும்பங்கள் மற்றும் பெண்களுக்கு என்று ஒரு நுழை வாயிலும் தனியாக வரும் ஆண்களுக்கு மட்டும் தனியாக ஒரு நுழைவாயிலும் வைத்திருக்க வேண்டியது கட்டாயம் என்று இருந்தது. இந்நிலையில், இனி இந்த, தனித் தனி நுழைவாயில் வைத்திருக்கவேண்டிய அவசியமில்லை என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. ஏற்கெனவே சௌதி அரேபியாவில் இருந்த பல கட்டுபாடுகளையும், குறிப்பாக பெண்களுக்கான கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு தளர்தி வருகின்ற நிலையில், அரசின் இந்த ம…

  16. இன்றைய நிகழ்ச்சியில்… - தென் சீனக்கடலின் சர்ச்சைக்குரிய தீவில் சீனா ஏவுகணைகளை நிறுத்தியதாக தாய்வானும் அமெரிக்காவும் குற்றஞ்சாட்டியதை அடுத்து அங்கு பதற்றம் அதிகரித்துள்ளது. - அகதிகளுக்கான பதிவு நிலையங்களை அதிகாரிகள் அமைக்க முயல கிரேக்கத்தின் கொஸ் தீவின்வாசிகள் கோபத்துடன் போராட்டம் நட்த்தியுள்ளனர். தமது வாழ்க்கையும், சுற்றுலா வருமானமும் பாதிக்கப்படும் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள். - மனநோயை புரிந்து கொள்ள மூளையை ஆராயும் விஞ்ஞானிகள் பற்றிய சில தகவல்கள்.

  17. காலே (Calais) குடியேறி முகாம் அகற்றம்; ஆயிரக்கணக்கானவர் அவதி ====================================================== சர்வதேச குடியேறிகளுக்கான அமைப்பின் தகவலின்படி இந்த ஆண்டில் (2016) இதுவரை, கிரேக்கம் மற்றும் இத்தாலியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான அகதிகளும் குடியேறிகளும் வந்து சேர்ந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் சிரியா, ஆப்கானிஸ்தான் மற்றும் இராக்கை சேர்ந்தவர்கள். இவர்களில் நானூறு பேர் வழிப்பயணத்தில் உயிரிழந்திருக்கிறார்கள். பெரும்பாலானோர் துருக்கிக்கும் கிரேக்கத்துக்கும் இடையிலான கடலைக் கடக்க முற்படுகையில் பலியாகியுள்ளனர். இவர்களில், இப்போது வடக்கு ஐரோப்பாவுக்கும், பிரான்ஸுக்கும் பயணிக்கும் பலருக்கு கலேயில் இருக்கும் "the Jungle" என்னும் முகாம் தான், தற…

  18. மாஸ்கோ மீது உக்ரைன் படைகளின் தாக்குதல்! விமான சேவைகள் முடக்கம் – உலக நாடுகள் அதிர்ச்சி! ரஷ்ய தலைநகர் மாஸ்கோ வியாழக்கிழமை அன்று மிகப்பெரிய ட்ரோன் தாக்குதலுக்கு உள்ளானது. ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மாஸ்கோவை இலக்காகக் கொண்டு ஏவப்பட்ட 35 உக்ரைனிய ட்ரோன்கள் உட்பட, மொத்தம் 105 ட்ரோன்களை வான் பாதுகாப்பு அமைப்புகள் இடைமறித்து அழித்துள்ளன. இந்தத் தாக்குதல் காரணமாக மாஸ்கோவைச் சுற்றியுள்ள விமானப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. மாஸ்கோ மேயர் செர்ஜி சோபியானின், “விழுந்த சிதைவுகளை அகற்றும் பணியில் அவசர சேவை வல்லுநர்கள் ஈடுபட்டுள்ளனர்” என்று டெலிகிராம் பதிவில் தெரிவித்துள்ளார். இது கடந்த ஒரு நாளுக்கு முன்பு மாஸ்கோ மீது 27 ட்ரோன்கள் ஏவப்பட்ட நிலையில் வ…

  19. 2018ல் புழக்கத்திற்கு வர இருக்கும் புதிய தாள் நாணயங்களில் இயல்பு கடந்த கனடிய பெண்ணின் உருவகம் அமையும் என பிரதம மந்திரி ஜஸ்ரின் ட்ரூடோ செவ்வாய்கிழமை அறிவித்தார். சர்வதேச பெண்கள் தின அர்ப்பணிப்பாக இன்று முத்திரை மற்றும் நாணயம் ஆகியவற்றை வெளியிட்டார். புதிய தாள் நாணயத்திற்கான போற்றுதலுக்குரிய ஒரு பெண்ணை தெரிந்தெடுக்கும் பொது ஆலோசனையை இன்று ஆரம்பிப்பதாகவும் தெரிவித்தார். எங்கள் நாட்டை கட்டி எழுப்பவதில் பெண்கள் ஒரு முக்கிய கருவிகளாவர். கிட்டத்தட்ட 150-வருடங்களாக வங்கி நோட்டில் கனடிய பெண் இடம்பெறவில்லை எனவும் கூறினார். பரிந்துரைக்கப்படும் பெண்கள்: கனடியராக பிறப்பால் அல்லது குடியுரிமை, கனடிய மக்களிற்கு பயன்படக்கூடிய தலைசிறந்த தலைமை…

  20. கொரோனா வைரஸ்! உலகம் முழுவதும் பரவினால் உயிரிழப்பு 65 மில்லியனை தொடலாம் : ஆய்வாளர்கள் எச்சரிக்கை வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ உலகம் முழுவதும் பரவும் அபாயம் காணப்படுவதாகவும் இது பரவினால் 18 மாதங்களில் உலகம் முழுவதுமாக 65 மில்லியன் வரையான மக்கள் உயிரிழக்கும் அபாயம் காணப்படுவதாகவும் அமெரிக்காவின் ஜோன் ஹொப்கின்ஸ் மருத்துவ பரிசோதனை பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக அந்த மருத்துவ பரிவோதனை நிலையத்தின் சிரேஷ்ட ஆய்வாளர் மருத்துவம் எரிக் டொனர் கூறுகையில் முதற்தடவையாக சீனா புகான் மாநிலத்தில் கொரொனா வைரஸ் பரவியிருந்தமை தொடர்பாக தாம் அதிர்ச்சியடைந்ததாகவும் இந்த வைரஸ் இதற்கு முன்னர் இருந்த சார்ஸ் வைரஸை விடவும் வேகமாக பரவும் வைரஸாக காணப்படுவதாகவும் இது உலகம் முழுவதும் …

  21. சென்னை: காவிரி, கூடங்குளம் உள்ளிட்ட முக்கிய பிரச்னைகளில் திமுக தலைவர் கருணாநிதி இரட்டை வேடம் போடுவதாக தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,"காவிரி நதிநீர்ப்பிரச்னை, கூடங்குளம் அணுமின் நிலையப் பிரச்சனை, டீசல் விலை உயர்வு, சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடு அனுமதி என அனைத்துப் பிரச்சனைகளிலும் இரட்டை நிலையினை கடைபிடித்து, குழந்தையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டும் ஏமாற்று வித்தையில் தான் கைதேர்ந்தவர் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்து இருக்கிறார் திமுக தலைவர் கருணாநிதி. மத்தியிலும்,மாநிலத்திலும் ஆட்சியில் இருந்த போதிலும்,காவிரி நதிநீர் ஆணையத்தைக் கூட கருணாநிதியால் கூட்டச் செய்ய இயலவில்லை. …

  22. சென்னை: பிரபல வயலின் இசைக்கலைஞர் குன்னக்குடி வைத்தியநாதன் திடீரென காலமானார். பிரபல இசைக்கலைஞர்சென்னையில் திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்து போனார். வயலின் இசையில் தனது விரல் லாவகத்தினால் தனக்கென தனி பாணியை உருவாக்கி மக்களை மயக்கியவர். மகுடி எடுத்து ஆடும் ஆடு பாம்பே என்ற பாடலை அனைவரையும் கவர்ந்திழுத்தவர். இயல் இசை நாடக மன்றத்தின் தலைவராக பல ஆண்டுகள் பணியாற்றியவர். சமீபத்தில் தமிழக அரசின் கலைமாமணி விருதையும் பெற்றார். வயலின் இசையில் மட்டுமால்லாமல் பல படங்களுக்கு திரை இசை அமைத்துள்ளார். சினிமா மட்டுமல்லாமல் கர்நாடக இசைக்கும் அவர் ஆற்றிய தொண்டு போற்றத்தக்கது. இவர் திரை உலகில் பின்னணி…

    • 20 replies
    • 6.6k views
  23. கொரோனாவின் தீவிர பரவல்: உலக அளவில் ஒரேநாளில் அதிக உயிரிழப்பை ஏற்படுத்திய நாள்! உலகம் முழுவதும் தீவிரமாகப் பரவி மனித அழிவை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் அமெரிக்கா மற்றும் பிரான்ஸில் தற்போது ஒவ்வொரு நாள் பொழுதிலும் ஆயிரக்கணக்கான மரணங்களை ஏற்படுத்தி வருகின்றது. உலக நாடுகளில் இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த 24 மணிநேரங்களில் அமெரிக்காவில் மட்டும் ஆயிரத்து 900ஐயும் தாண்டி மனித உயிரிழப்பு பதிவாகியுள்ளது. இந்நிலையில் உலக அளவில் 14 இலட்சத்து 31 ஆயிரத்து 706 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் மரணங்கள் 80 ஆயிரத்தைக் கடந்து தற்போது 82 ஆயிரத்து 80 ஆகப் பதிவாகியுள்ளது. மேலும், கொரோனா தொற்றில் இருந்து விடுபட்டு இதுவரை 3 இலட்சத்து 2 ஆயிரத்து 149 பேர் குணமடைந்துள்ள போது…

  24. Nov 2, 2025 - 08:18 AM இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ்ஷயர் பகுதியில் ரயில் ஒன்றில் பயணித்த பயணிகள் மீது நடத்தப்பட்ட கத்திக்குத்துத் தாக்குதலில் 10 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸ் தெரிவித்துள்ளது. தாக்குதல் நடந்த போது, பயணிகள் டொன்காஸ்டரில் இருந்து லண்டனில் உள்ள கிங்ஸ் கிராஸ் நோக்கிப் பயணித்துள்ளனர். கத்திக் குத்துக்கு உள்ளானவர்களில் 9 பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும், அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சம்பவத்தை அடுத்து, அந்த ரயிலின் போக்குவரத்து இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், நகரத்தின் பல வீதி…

  25. பங்களாதேஷில் இந்து ஆசிரமமொன்றைச் சேர்ந்த பணியாளர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை கத்தியால் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார். முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட அந்நாட்டில் சிறுபான்மை மதத்தவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பிந்திய தாக்குதல் இதுவெனத் தெரிவிக்கப்படுகிறது. ஸ்ரீ ஸ்ரீ தாகுர் அனுகுல்சந்திர ஆசிரமத்தைச் சேர்ந்த நிரஞ்சன் பண்டே (62 வயது) என்ற மேற்படி பணியாளர் காலை நேர நடைப் பயிற்சிக்குச் சென்ற போது தாக்குதல்தாரிகளால் இலக்குவைக்கப்பட்டுள்ளார். அவர் தனக்கு ஏற்பட்டுள்ள நீரிழிவு நோயின் பொருட்டு மருத்துவர்களின் ஆலோசனைப் பிரகாரம் தினசரி நடைப் பயிற்சியை மேற்கொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்துள்ளார். இந்நிலையில் அவரை சூழ்ந்து கொண்ட தாக்குதல்தாரிகள் குழுவொன்…

    • 0 replies
    • 364 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.