Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ‘தேர்தல் நடத்த வேண்டும்’ டெல்லி சட்டசபையை கலைக்க ஆம் ஆத்மி ஒரு வாரம் ‘கெடு’ வீடு, வீடாக சென்று கையெழுத்து வேட்டை நடத்த அரவிந்த் கெஜ்ரிவால் திட்டம் புதுடெல்லி, ஜனாதிபதி ஆட்சி நடைபெறும் டெல்லியில் சட்டசபையை கலைக்க ஆம் ஆத்மி கட்சி, ஒரு வாரம் ‘கெடு’ விதித்துள்ளது. புதிதாக தேர்தல் நடத்துமாறு அரவிந்த் கெஜ்ரிவால் வற்புறுத்தி உள்ளார். ஜனாதிபதி ஆட்சி டெல்லி சட்டசபைக்கு கடந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெற்றது. அதில், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதையடுத்து, காங்கிரசின் ஆதரவுடன் ஆம் ஆத்மி கட்சி, ஆட்சி அமைத்தது. ஆனால், 49 நாட்களில், முதல்–மந்திரியாக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால் பதவி விலகினார். எந்த கட்சியும் மாற்று அரசு அமைக்க முடியாததால், ஜனாதிபதி ஆட்சி …

    • 0 replies
    • 344 views
  2. தேர்தல் நாள் நெருங்கிவர தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்கிறது கனடாவின் 41ஆவது பாராளுமன்றத் தேர்தல் இடம்பெறுவதற்கான நாள் நெருங்கிவரும் நிலையில் கனேடிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் நாடு தழுவிய ரீதியில் சூறாவழிச் சுற்றுப் பயணங்களை மேற்கொண்டிருக்கிறார்கள். கொண்சவேட்டிவ் கட்சியின் தலைவர் காப்பர் ஒன்ராரியோவிலும் புளொக் கியூபெக்கி கட்சியின் தலைவர் ஒட்டோவாவிலும் லிபரல் கட்சியின் தலைவர் வின்னிப்பெக்கிலும் இன்று தங்களது தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்கிறார்கள். அதிக வாக்காளர்களைக் கொண்ட ரொறன்ரோ பிராந்தியத்தின் பலமான வாக்குவங்கிதான் தேர்தல் முடிவுகளில் காத்திரமான செல்வாக்குச் செலுத்தப்போகிறது. புதிய ஆட்சியினை அமைக்கும் வகையில் தாங்கள் பாராளுமன்றில் அறுதிப்பெரும்பான்மையின…

    • 0 replies
    • 767 views
  3. தேர்தல் பிரசாரத்தின் போது மழையில் நடனமாடிய கமலா ஹாரிஸ் - சமூக வலைத்தளத்தில் வைரலான வீடியோ அமெரிக்காவில் அடுத்த மாதம் நடைபெறும் ஜனாதிபதி தேர்தலின் போது நாட்டின் துணை ஜனாதிபதியும் தேர்வு செய்யப்படுகிறார். அந்த வகையில் ஜனநாயக கட்சியின் சார்பில் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுகிறார். தேர்தலில் அவர் வெற்றி பெறும் பட்சத்தில் அமெரிக்க வரலாற்றில் முதல் பெண் துணை ஜனாதிபதி; முதல் கறுப்பின பெண் துணை ஜனாதிபதி; முதல் தெற்காசிய வம்சாவளி பெண் துணை ஜனாதிபதி; முதல் இந்திய வம்சாவளி பெண் துணை ஜனாதிபதி; முதல் தமிழ் வம்சாவளி பெண் துணை ஜனாதிபதி என பல சாதனைகளை பதிவு செய்வார். தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில…

  4. தேர்தல் பிரசாரத்தில் முகக்கவசத்தை தூக்கி எறிந்த ட்ரம்ப்! அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கொரோனா வைரஸ் (கொவிட்-19 தொற்றிலிருந்து மீண்ட பிறகு பங்கேற்ற முதலாவது தேர்தல் பிரசாரத்தில் தனது ஆதரவாளர்களை முத்தமிடத் தயார் எனக் கூறி முகக்கவசத்தை தூக்கி எறிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக இடைவெளி இல்லாமல் புளோரிடாவின் சான்ஃபோர்டில் நடந்த பேரணியில், பெரும்பான்மையானோர் முகக்கவசமின்றி பங்கேற்றனர். இதன்போது உரையாற்றிய ட்ரம்ப், ‘நான் இப்போது கொரோனா வைரஸ் தொற்றை கடந்துவிட்டேன். நான் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவன் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். நான் மிகவும் சக்திவாய்ந்தவனாக உணர்கிறேன். உங்கள் அனைவரையும் நான் முத்தமிடுவேன். ஆண்களையும், அழகானப் பெ…

  5. தேர்தல் பிரசாரத்துக்காக நிதி திரட்டியதில் சாதனை படைத்தார் ஹிலாரி கிளின்டன் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள செனட்டர் ஹிலாரி கிளின்டன் தனது பிரசாரத்திற்காக பெருமளவு நிதியை திரட்டியுள்ளார். இது அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் முன்னர் போட்டியிட்டவர்கள் திரட்டியதை விட அதிகமென தெரிவிக்கப்படுகின்றது. 2007 இன் முதலாவது காலாண்டுப் பகுதியில் ஹிலாரி 26 மில்லியன் அமெரிக்க டொலர்களை திரட்டியுள்ளதாக அவரது பிரசார முகாமையாளர் தெரிவித்துள்ளார். 2000 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் துணை ஜனாதிபதி அல்-கோர் திரட்டிய தொகையை விட இது பல மடங்கு அதிகம். ஜனநாயக கட்சி சார்பில் 2008 இல் ஜனாதிபதி தேர்தலில் ஹிலாரியே போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு காணப்படுகின்றது. …

  6. தேர்தல் பிரச்சாரத்தில் சவுதி பெண்கள் சவுதி அரேபியாவில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைகளை அந்நாட்டு பெண்கள் முதன் முறையாக ஆரம்பிதுள்ளனர். உள்ளூராட்சித் தேர்தலில் சவுதி பெண்கள் முதல் முறையாக வாக்களிக்கவுள்ளனர் அடுத்த மாதம் நடைபெறவுள்ள இந்த தேர்தலில், சுமார் 900 பெண்கள் போட்டியிடுகின்றனர். மக்கள் பிரதிநிதிகளை தேர்தெடுக்கும் தேர்தல் ஒன்றில் சவுதியில் பெண்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவது இதுவே முதல் தடவையாகும். சவுதியில் பொது இடங்களில் இருபாலாரும் ஒன்றாக இருப்பதற்கு கடுமையான தடைகள் உள்ளன. பொது இடங்களில் இருபாலாரும் ஒன்றாக இணைந்து இருப்பதை சவுதி சட்டங்கள் கடுமையாக எதிர்க்கும் நிலையில், ஆண் மற்றும் பெண் வேட்பா…

  7. தேர்தல் முடிவு வெளியிடும் நாளான நேற்று மானாட மயிலாட ஒளிபரப்பிய கலைஞர் ரி.வி! சனி, 14 மே 2011 15:00 தேர்தல் முடிவுகள் வெளியான நேற்று, அதைப் பற்றிய செய்திகளை, கலைஞர் "டிவி' வெளியிடாமல், "மானாட மயிலாட' நிகழ்ச்சியை ஒளிபரப்பியதால், தி.மு.க.,வினர் அதிர்ச்சியடைந்தனர்; பொதுமக்கள் ஆச்சரியமடைந்தனர். தமிழக சட்டசபை ஓட்டு எண்ணிக்கை நேற்று நடந்தது. இதை நேரடியாக ஒளிபரப்ப மற்ற தொலைக்காட்சிகளைப் போலவே, கலைஞர் "டிவி'யும் நேரடி ஒளிபரப்பும் வாகனங்களுடன் ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில் காத்திருந்தது. காலை 8 மணி முதல், ஓட்டு எண்ணிக்கை குறித்த செய்திகளையும் வெளியிடத் துவங்கியது. தபால் ஓட்டுகள் எண்ணிக்கை முடிந்து, முதல் சுற்று, இரண்டாவது சுற்று என, அடுத்தடுத்த சுற்றுகளில் த…

  8. தேர்தல் முடிவுகளை தனக்கு சாதகமாக மாற்ற மிரட்டல் விடும் ட்ரம்ப்பின் ஒலிப்பதிவு வைரல்! அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஜியார்ஜியாவின் உயர்மட்ட தேர்தல் அதிகாரியை மாநில ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை தனக்கு சாதகமாக மறுபரிசீலனை செய்யுமாறு வலியுறுத்தியுள்ள ஒலிப்பதிவு வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஒளிப்பதிவு தி வொஷிங்டன் போஸ்ட்டால் பெறப்பட்ட ஒரு மணி நேர தொலைபேசி அழைப்பு, தற்போது வைரலாக பரவிவருகின்றது. ஜார்ஜியா ஏற்கனவே பல தணிக்கைகளையும் முடிவுகளையும் மறுபரிசீலனை செய்திருந்தது. இது பைடனின் வெற்றியை உறுதிப்படுத்தியது. மேலும் அந்த முடிவுகளை அதிகாரப்பூர்வமாக சான்றளித்தது, இது ஜனவரி 6ஆம் திகதி காங்கிரஸால் அங்கீகரிக்கப்படும். இருப்பினும…

  9. Published By: RAJEEBAN 25 AUG, 2023 | 06:56 AM தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க முயன்ற குற்றச்சாட்டு தொடர்பில் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஜோர்ஜியாவில் அதிகாரிகள் முன்னிலையில் சரணடைந்துள்ளார். நியுஜேர்சியில் உள்ள பெட்மினிஸ்டர் இல்லத்திலிருந்து விமானம் மூலம் புல்டன் சிறைச்சாலையில் ஆஜராவதற்காக டிரம்ப் நியுஜேர்சி சென்றார் . புல்டன் சிறையில் அவர் குறித்த விபரங்கள் உடனடியாக பதிவு செய்யப்பட்டன, சிறையில் வைத்து அவரை அதிகாரிகள் புகைப்படம் எடுத்தனர் – அமெரிக்க வரலாற்றில் சிறையில் படமெடுக்கப்பட்ட முதலாவது முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் டிரம்ப பிணையில் விடுதலை …

  10. சென்ற ஞாயிற்றுக்கிழமை (25.05.14) இடம் பெற்ற ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்றத் தேர்தலின் முடிவுகள் ஐரோப்பிய நாடுகளிற் பல, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகிப் போவதை எடுத்துக்காட்டியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் மேல் சந்தேகப்படும் அரசியல் வாதிகளினதும், தீவிரவாத வலது சாரிகளினதும் பக்கம் ஒரு கண்டம் சார்வதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பி(f)ரான்ஸ் நாட்டில் காணப்படும் வேலையில்லாத் திண்டாட்டமும், ஜனாதிபதி வி(f)றான்சுவா கோலாந்தின் தவறான அரசியல் அணுகு முறையும், வலதுசாரிக் கட்சிகளின் தேசியக் கூட்டு முன்னணிக்கு (FN) 24.9 சதவீத வாக்குகளைப் பெற்றுத் தந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்தோடு தேசிய முன்னணி பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று ஆளும் கட்சியினரை விட ஐரோப்பியப் பாராளுமன்றத் தேர்தல…

    • 9 replies
    • 1.1k views
  11. தேர்தல் முறைகேடு விவகாரத்தில் டிரம்பின் பாராட்டைப் பெற்ற புட்டின் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முறைக்கேடுகள் தொடர்பாக ரஷ்ய அதிகாரிகள் 35 பேர் அமெரிக்காவிலிருந்து வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டிருந்தனர். அதற்கு பதிலடி கொடுக்கும் செயற்பாடுகளை ரஷ்யா மேற்கொள்ளாது என அந்நாட்டு ஜனாதிபதி விளாமிதிர் புட்டின் கூறிய கருத்தை அடுத்த அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொணால்ட் டிரம்ப் பாரட்டியுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் போது ஜனநாயக கட்சி வேட்பாளரான ஹிலாரிகின்டனின் பிரச்சாரங்கள் தொடர்பான மின்னஞ்சல்களை இணையவழி மோசடியூடாக களவாடி தரவுகளை விக்கிலீக்ஸ் மையத்திற்கு பறிமாறிய விடயத்தில் ரஷ்ய அதிகாரிகளே முன்னின்று செயற்பட்டனர் என்றும், இதற்கு …

  12. நடைபெற்ற தேர்தலின் மூலம், தமிழர்களுக்கு அரசியலில் முழு அதிகாரம் கிடைக்கும் என இந்திய மத்திய தொழில் மற்றும் வர்த்தகத் துறை இணை அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்தார். மேலும், இந்தத் தேர்தல் அகதிகளாக உள்ள தமிழர்கள் மீண்டும் தாயகம் திரும்ப வாய்ப்பாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார். சிவகங்கையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது, இலங்கை அரசியல் சாசனப்படி, ராஜீவ்-­ ஜெயவர்தன ஒப்பந்தப்படி 25 ஆண்டுகளுக்கு பின்னர் இலங்கையின் வடக்கு பகுதியில், தேர்தல் நடைபெற்றுள்ளது. இதன்மூலம், இலங்கையில் தமிழர்கள் 37 பேருக்கு அரசியல் அதிகாரம் கிடைக்கும். இதன்மூலம் தமிழர்கள் தங்களது உரிமைகளை நிலைநாட்ட மு…

  13. சென்னை: கர்நாடகத்தில் சட்டமன்றத் தேர்தல் முடியும் வரை ஓகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை ஒத்தி வைப்பதாக முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார். தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகம் செய்வதற்காக ரூ. 1,334 கோடி செலவில், ஓகேனக்கலில் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை அமல்படுத்த சமீபத்தில் முதல்வர் கருணாநிதி அடிக்கல் நாட்டினார். காமராஜர் ஆட்சிக்காலத்தில் பேசப்பட்ட இந்தத் திட்டம் இப்போதுதான் நனவாகும் சூழ்நிலை உருவானது. ஆனால் இந்தத் திட்டத்தை எதிர்த்து கர்நாடகத்தில் வன்முறை மூண்டது. இந் நிலையில் திடீர் திருப்பமாக கர்நாடக மாநில சட்டசபைத் தேர்தல் முடியும் வரை திட்டத்தை நிறுத்தி வைப்பதாக முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார். அதே நேர…

  14. அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பு தினத்தன்று தாக்குதலை மேற்கொள்ள திட்டமிட்டிருந்த குற்றச்சாட்டின் கீழ் ஆப்கானிஸ்தானை சேர்ந்த நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறிப்பிட்ட நபர் ஐஎஸ் அமைப்பின் பெயரால் தாக்குதல்களை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார் என அமெரிக்க நீதி திணைக்களம் தெரிவித்துள்ளது. ஒக்லஹோமா நகரில் வசிக்கும் 27 வயது நசீர் தவ்ஹெடி என்பவரே கைதுசெய்யப்பட்டுள்ளார். ஐஎஸ் அமைப்பினால் உணர்வூட்டப்பட்ட இந்த நபர் தேர்தல் வாக்களிப்பு தினத்தன்று வன்முறையில் ஈடுபடுவதற்கு திட்டமிட்டார் என எவ்பிஐ தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ள நபர் ஆயுதங்களை சேமிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார் என எவ்பிஐ அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். …

  15. தேர்தல் விதிமுறை மீறல்: மு.க. அழகிரிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் First Published : 06 Mar 2011 02:54:29 AM IST புது தில்லி, மார்ச் 5: தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக மத்திய ரசாயனம், உரத்துறை அமைச்சர் மு.க. அழகிரிக்கு தேர்தல் ஆணையம் சனிக்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அலுவல் ரீதியாக சென்னைக்கு வந்த அழகிரி, மதுரை சென்று அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. இது தொடர்பாக விளக்கம் கேட்டு அழகிரிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டதால், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டுமெனக் கூறியுள்ள தேர்தல் ஆணையம், விதிமுறைகளை கடைபிடி…

  16. தென் ஆப்ரிக்காவின் முக்கிய எதிர்க்கட்சி, தனது தேர்தல் விளம்பரத்தில் மண்டேலாவின் குரலை பயன்படுத்தியதற்காக அவரது குடும்பத்தினர் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். ஜனநாயக கூட்டணியின் விளம்பரத்தில், நீதி, அமைதி, வேலை, உணவு என்று மண்டேலாவின் குரல் ஒலிக்கிறது, பிறகு ஒரு இளம் பெண் வாக்குச்சாவடியின் உள்ளே நுழைகிறார்.அந்த பெண் குடியரசு கட்சிக்கு வாக்களிக்கிறார். இவ்வாறு அந்த விளம்பரத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது. வெள்ளையின மக்களின் உரிமையைக் காப்பாற்ற, இறந்த தனது தாத்தாவின் பெயரை களங்கப்படுத்தியதாக மண்டேலா குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.தென் ஆப்ரிக்காவில் அடுத்த மாதம் உள்ளூர் தேர்தல் நடைபெறவுள்ளதால் அங்கு அரசியல் பதற்றங்கள் அதிகரித்துள்ளன. …

  17. திருவனந்தபுரம் அருகே உள்ள நெடுமங்காட்டைச் சேர்ந்தவர் கிறிஸ்துதாஸ் (வயது31) இவர் அங்குள்ள மஞ்சா ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் படித்தார். 1990-ம் ஆண்டு முதன் முறையாக எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதினார்.அந்த தேர்வில் அவர் தோல்வி அடைந்தார். எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் எப்படியாவது வென்றுவிட வேண்டும் என்ற ஆசையில் தனித் தேர்வு எழுத தொடங்கினார். எழுதினார், எழுதினார், எழுதிக் கொண்டே இருந்தார். அக்டோபர், ஏப்ரல் என அடுத்தடுத்து தேர்வு எழுதினார் கடந்த ஆண்டு வரை 18 முறை எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதிவிட்டார். ஆனால் வெற்றிதான் பெறவில்லை. இதையடுத்து எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுத இந்த ஆண்டும் விண் ணப்பித்துள்ளார். இதற்காக புத்தகங்களை புரட்டி, புரட்டி படித்து வருகிறார். இந்த முறை எப்படியும்…

    • 12 replies
    • 1.3k views
  18. அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்தின் துணை தூதர் தேவயானி கொப்ராகோட் கைது செய்யப்பட்டு, மோசமாக நடத்தப்பட்ட விவகாரம் இந்தியா நாடாளமன்றத்தில் விவாதம் நடத்தும் அளவுக்கு சென்றுள்ளது. உத்தம்கோப்ரகடே. மகாராஷ்டிரா மாநில கேடர் ஐ.ஏ.எஸ் அதிகாரி. ஓய்வு பெற்றுவிட்டார். அவரது மகள் தான் தேவயானி. மருத்துவம் படித்தவர். ஐ.எப்.எஸ் தேர்வில் வெற்றி பெற்று 1999ல் வெளியுறவுத்துறையில் பணியில் சேர்ந்துள்ளார். அமெரிக்காவில் பணியாற்றுவதற்க்கு முன் பாகிஸ்தான், ஜெர்மனி, இத்தாலி தூதரகங்களில் அரசியல் பிரிவில் பணியாற்றியுள்ளார். அதன்பின்பே அமெரிக்காவுக்கு வந்துள்ளார். அவர் அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்தில் பணியில் சேர்ந்த ஆண்டு 2012. அங்கும் அரசியல், பொருளாதாரம், பெண்கள் விவகாரத்தை கவனிக்கும் துண…

  19. அமெரிக்காவில், இந்திய தூதரக அதிகாரி, தேவயானி கைது செய்யப்பட்ட பின், அவரது ஆடைகளை கலைந்து, அமெரிக்க அதிகாரிகள் சோதனை செய்தது போன்ற வீடியோ காட்சிகள், அமெரிக்க சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. 'இந்த வீடியோ காட்சிகள் பொய்யானவை' என, அமெரிக்கா மறுத்துள்ளது. விசா மோசடி வழக்கு: அமெரிக்காவுக்கான, இந்திய துணைத் தூதராக பணியாற்றிய தேவயானி கோப்ராகேட், விசா மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார். அந்நாட்டு அதிகாரிகள், தன் ஆடைகளை கலைந்து சோதனையிட்டதாகவும், தூதரக அதிகாரிக்கான மதிப்புடன் தன்னை நடத்தவில்லை எனவும் தேவயானி குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில், தேவயானியை அமெரிக்க அதிகாரிகள் சோதனையிடுவது போன்ற வீடியோ காட்சிப் பதிவுகள், அமெரிக்க சமூக வலைதளங்களில், வேகமாக பரவி வருகிறது. …

  20. மீண்டும் குற்றச்சாட்டுகள் இந்தியாவின் நியுயார்க் துணைத்தூதராக இருந்த தேவயானி கோபர்கடே மீது ஏற்கனவே தொடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், மீண்டும் அவர் மீது குற்றச்சாட்டுகள் பதியப்பட்டிருக்கின்றன. நியூயார்க் தெற்கு மாவட்ட வழக்கறிஞரின் அலுவலகத்திலிருந்து சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் இந்த புதிய குற்றச்சாட்டுகள், தேவயானிக்கு எதிராக போடப்பட்ட முந்தைய வழக்கு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டு இரண்டு நாட்களில் வருகின்றன. தேவயானிக்கு எதிராக குற்றச்சாட்டுகள் பதியப்பட்டபோது ராஜியப் பாதுகாப்பு இருந்ததால் அந்தக் குற்றச்சாட்டுகளை நீதிபதி தள்ளுபடி செய்திருந்தார். ஆனால் மீண்டும் குற்றச்சாட்டுகளை பதிவு செய்யலாம் என்றும் அவர் கூறியிருந்தா…

  21. இந்தியாவின் நியுயார்க் துணைத்தூதராக இருந்த தேவயானி கோபார்கடே கைது விவகாரத்தில், அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை, நியூயார்க் நீதிமன்றம் ஒன்று தள்ளுபடி செய்திருக்கிறது. தேவயானி, அவரது வீட்டுப் பணிப்பெண்ணை இந்தியாவிலிருந்து அழைத்து வர விசாவுக்கு விண்ணப்பித்தபோது, அவருக்குத் தரவிருந்த சம்பளம் பற்றி பொய்யான தகவல் தந்தார், மோசடி செய்தார் என்ற குற்றச்சாட்டுகளின் பேரில் அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின்போது, தேவயானி கைது செய்யப்பட்டு, நிர்வாணமாக்கி சோதனையிடப்பட்டது, இந்திய அமெரிக்க உறவுகளில் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது. ஆனால் இப்போது, நியுயார்க்கில் உள்ள மான்ஹாட்டன் மாவட்ட நீதிமன்றம், அவர் மீது குற்றச்சாட்டுகள் பதியப்பட்டபோது, அவருக்கு குற்றங்கள் …

  22. சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் தேவாரம் பாடச் சென்ற ஆறுமுகச் சாமி ஓதுவரை, அங்குள்ள தீட்சிதர்கள் அடித்து, உதைத்ததாக ஓதுவார் போலீஸில் புகார் கூறியுள்ளார். இதனால் அங்கு மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சிவ தலமான சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் உள்ள திருச்சிற்றம்பல மேடையில் நின்று தேவாரம், திருவாசகம் பாட வேண்டும் என ஓதுவார் ஆறுமுகசாமி நீண்ட காலமாக போராடி வந்தார். அவருடன் பல்வேறு தமிழ் அமைப்புகளும் போராடி வந்தன. இந்தக் கோரிக்கை தொடர்பாக முடிவெடுக்க தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றமும் சில மாதங்களுக்கு முன்பு தீர்ப்பளித்தது. இதையடுத்து திருச்சிற்றம்பல மேடையில் இருந்தபடி தேவாரம், திருவாசகம் ஆகியவற்றைப் பாடலாம் என தமிழக அரசின் இந்து அறநிலையத்துறை உத…

  23. (இத்தாலியில் பரபரப்பு) தேவாலயத்தில் ஆராதனைகள் இடம் பெற்றுக்கொணடிருந்த போது நபரொருவர் தனது சொந்த கண்களை தோண்டியெடுத்து அங்கிருந்த அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய சம்பவம் ஞாயிற்றுக்கிழமை இத்தாலியில் இடம்பெற்றுள்ளது. வியரேக்கியோ பிராந்தியத்திலுள்ள சாந்த அன்றியா தேவாலயத்தில் இடம்பெற்ற இச்சம்பவத்தையடுத்து கண்களை வெளியே தோண்டியெடுத்த அல்டோ பியன்சினி என்ற மேற்படி நபர் உடனடியாக வேர்சிலியா நகரிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதுபற்றி அவர் விபரிக்கையில் ஒரு குரல் ஒன்று எனது கண்களை தோண்டி எடுக்கும் படி என்னிடம் கூறியது என்று தெரிவித்தார். இந்த நபருடைய கண்களை மீளவும் பொருத்தி அவருக்கு பார்வை ஏற்படுத்துவது சாத்தியமில்லாது உள்ளதாக தெரிவித்திருந்த மேற்படி மர…

  24. பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் ஞாயிறன்று கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றில் நடந்த இரட்டை தற்கொலை குண்டுத் தாக்குதலில் எண்பதுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டின் பல்வேறு ஊர்களிலும் கிறிஸ்தவ சமூகத்தார் ஆர்ப்பாட்டங்களை நடத்திவருகின்றனர். கிறிஸ்தவர்கள் கூடுதல் பாதுகாப்பு கோருகின்றனர் கிறிஸ்தவர்களுக்கு அரசாங்கம் மேம்பட்ட பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று அவர்கள் குரலெழுப்புகின்றனர். பாகிஸ்தானின் அரசியல் தலைவர்களும் மத தலைவர்களும் குண்டுத் தாக்குதலைக் கண்டித்திருந்தனர்.தலைநகர் இஸ்லாமாபாத்தில் முக்கிய நெடுஞ்சாலை ஒன்றில் ஆர்ப்பாட்டக்காரர்கள் பல மணி நேரம் மறியல் போராட்டம் செய்ததாக தெரிவிக்கப்படுகிறது. கிறிஸ்தவர்கள் கூடுதல் பாதுகாப்பு கோருகின்றனர் அந்நாட்டின் …

  25. புதுடெல்லி: கிறிஸ்தவர்கள் தேவாலயங்களை கட்டுவதை நிறுத்தவில்லை என்றால் 1857 ஆம் ஆண்டு நடத்தப்பட்டது போல் மீண்டும் ஒரு மதகலவரம் முன்னெடுக்கப்படும் என்று விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் செயலாளர் சுரேந்திர ஜெயின் எச்சரித்து உள்ளார். மேற்குவங்க மாநிலம் நாடியாவில் கன்னியாஸ்திரி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் குறித்து விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் செயலாளர் சுரேந்திர ஜெயின் பேசும்போது, ''இது கிறிஸ்தவ ஆலயத்தின் சதித்திட்டம் ஆகும். கன்னியாஸ்திரிகள் மீதான பாலியல் தாக்குதல் கிறிஸ்தவர்களின் கலாசாரம், இந்துகளின் கலாசாரம் இல்லை. போப், கன்னியாஸ்திரி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதில் கவலை அடைந்திருந்தார் என்றால், ஓரினசேர்க்கையை ஊக்குவிப்பதை நிறுத்தட்டும்" என்றார். மேலும் ஹிசாரில் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.