உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26730 topics in this forum
-
சீனா தங்கள் நாட்டின் மீது போர் தொடுக்கும் வாய்ப்பு இருப்பதாக தைவான் நாடு தெரிவித்துள்ளது. அண்டை நாடான தைவானை, சீனா அங்கீகரிக்காததுடன், அதை தமது பகுதியாக உரிமை கொண்டாடி வருகிறது. அந்நாட்டுடன் எந்தவொரு வெளிநாடும் ராஜ்ஜீய உறவு வைக்கக் கூடாதெனவும் சீனா வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில், தைபேயில் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு தைவான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜோசப் வூ ((Joseph Wu )) பேட்டியளித்தார். அதில் அமெரிக்காவுடனான வர்த்தக போரினால் ஏற்படும் பொருளாதார பிரச்னையால் உள்நாட்டில் சந்திக்கும் நெருக்கடிகளில் இருந்து கவனத்தை திசை திருப்ப தைவான் மீது சீனா போர் தொடுக்க வாய்ப்பிருப்பதாக தெரிவித்தார். https://www.polimernews.com/dnews/87828/தைவான்-மீத…
-
- 0 replies
- 580 views
-
-
தைவான் விவகாரத்தில் சீனாவின் நிலைப்பாடு குறித்து வாங் யீ விளக்கம் பினோம்பெனில் கிழக்காசிய ஒத்துழைப்புக்கான அமைச்சர்கள் கூட்டங்களில் பங்கேற்ற பிறகு, சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ வெள்ளிக்கிழமை பிற்பகல் செய்தியாளர் சந்திப்பில், தைவான் விவகாரம் குறித்து சீனாவின் நிலைப்பாட்டை விளக்கிக் கூறினார். அவர் கூறுகையில், தைவான் விவகாரம் குறித்து அமெரிக்க தரப்பு பல பொய் தகவல்களையும் உண்மையற்ற அம்சங்களையும் பரப்பி வருகின்றது. இந்நிலையில், உண்மைகளை தெளிவாகக் காட்ட வேண்டியது அவசியமானது. தைவான் எப்போதும் ஒரு நாடு அல்ல. ஒரே சீனா என்பது மட்டுமே உண்டு. தைவான் நீரிணையின் இரு கரைகள் ஒரே நாட்டைச் சேர்ந்தவை. வரலாற்றிலும் இன்றைய காலத்திலும் காணப…
-
- 0 replies
- 562 views
-
-
தொகுதிப் பங்கீடுகள்: பல குழப்பங்களும், சில தெளிவுகளும் தமிழக தேர்தல்கள் அறிவிக்கப்பட்டதிலிருந்து, நடந்திருக்கும் நிகழ்வுகளை கொஞ்சம் நிதானமாக யோசித்துப் பார்த்தால், சிரிப்பாகவும், வேதனையாகவும், எரிச்சலாகவும் இருக்கிறது. இந்தத் தேர்தல் முறை எவ்வளவு பெரிய ஜனநாயக ஹம்பக் என்பதை அதன் நீள அகலங்களோடு படுதா விரித்துக் காட்டியிருக்கிறது. முதலில் திமுக அணியில் அது ஆரம்பித்தது. தொகுதிப் பங்கீட்டில் காங்கிரஸுக்கு அறுபதா, அறுபத்துமூன்றா என்ற கணக்கில் தன்மானம், சுய கவுரவம் என்ற வார்த்தைகளைக் கொட்டி வெடித்தது. இதுதான் சமயம் என ஜெயலலிதாவோ காங்கிரஸோடு கூட்டணி சேர ஆட்களை அனுப்பினார். டெல்லி போன தி.மு.க பொத்திக்கொண்டு வந்து நல்லபிள்ளையாக ‘அறுபத்து மூன்று’ என்று கீச்சுக்கு…
-
- 0 replies
- 734 views
-
-
தற்போதைய சூழலில் லோக்சபா தேர்தல் நடைபெற்றால் காங்கிரஸ் தலைமையிலான ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியைவிட பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கூடுதல் இடங்களைப் பெறும் என்று தி ஹிண்டு- சி.என்.என். ஐபிஎன் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தற்போதைய சூழலில் தேர்தல் நடைபெற்றால் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியானது 172 முதல் 180 இடங்கள் வரை கைப்பற்றும். அக் கூட்டணி 29% வாக்குகளைப் பெறும். இக்கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சியானது 156-164 இடங்களைக் கைப்பற்றலாம். அதாவது 27% வாக்குகள் கிடைக்கும். கடந்த தேர்தலில் 18.8% வாக்குகள் கிடைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் கூட்டணிக் கட்சிகள் 13-19 எம்.பிக்கள் (2%) …
-
- 0 replies
- 328 views
-
-
மங்களூர்: மங்களூரில் போதை மற்றும் மது விருந்தில் கலந்து கொண்ட மாணவிகள் மீது இந்து அமைப்பினர் நடத்திய வெறித் தாக்குதலின்போது பல மாணவிகளை அவர்கள் மானபங்கப்படுத்தியதாக பாதிக்கப்பட்ட மாணவிகள் குமுறலுடன் தெரிவித்துள்ளனர். மங்களூரில் உள்ல ஒரு ரிசார்ட்டில் என்ஜீனியரிங் கல்லூரி மாணவ, மாணவியர் சிலர் கூடி பார்ட்டி வைத்தனர். அப்போது இரவில் மது விருந்து நடந்ததாக தெரிகிறது. அப்போது திடீரென இந்து ஜாகிரண் வேதிகே என்ற இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் பெரும் கும்பலாக வீட்டுக்குள் புகுந்து வெறித் தாக்குதலில் ஈடுபட்டனர். அங்கிருந்த மாணவர்களை விரட்டி விரட்டி சரமாரியாக அடித்தனர். மாணவிகளையும் அவர்கள் விடவில்லை. சரமாரியாக அடித்தனர். இந்த தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படு…
-
- 0 replies
- 912 views
-
-
இங்கிலாந்தின் வெட்டி அரசி(அரச குடும்பம் என்று தான் சொல்லுறாங்க..அரசர் சும்மா குந்திட்டு இருக்கிறார்.. அவருக்கு நோ வலியு) குடும்பத்துக்கு ஓசி விளம்பரமுன்னா அளவு கணக்கே இல்லை. சாள்ஸ் - டயனா, சாள்ஸ் - கமீலா என்றும் இன்னும் பலவுமாக சோடி சேருறதும் புரியுறதுமே வேலையா இருந்தவங்களுக்கு.. இப்ப கொஞ்சக்காலமா.. டயனாவில் இழப்பின் பின்னரும் சாள்ஸ் ஒரு மாதிரியா கமீலாவோட செற்றிலானதன் பிறகு அரசி குடும்ப சோலிகள் குறைஞ்சிருந்திச்சு. இப்ப மிஸ்டர் வில்லியம் ( ஆமி ஒபீசர் - டயனா - சாள்ஸ் பிள்ளை) தொடங்கிட்டார் ரவுண்டு கட்ட. அவரு இப்ப தான் 2001 இல யுனில படிக்கேக்க பிடிச்ச காதலியை (Kate Middleton) விட்டுப் பிரிஞ்சுட்டதா இங்கிலாந்தில கதையடிபடுகுதாம்..! இது எங்க போய் முடியப் போகுதோ..…
-
- 2 replies
- 882 views
-
-
Historic day arrives after decades of war in Sudan பல துன்பியல் வருடங்களின் பின்னர் சூடானின் பொன்னாள் இன்று "I had to come early," Dennis says. "This is a vote for our country." - Edwina Loria, 18, also was determined to cast her ballot. "I want to be a first-class citizen," she says. "I want independence." "I am on a mission," says another voter, John Baptiste. "My mission is to vote. We have waited for 50 years, and we want to be separate. We have planned for many days to be here first." http://edition.cnn.com/2011/WORLD/africa/01/09/sudan.historic.day.arrives/ http://www.youtube.com/watch?v=iCffpwQUCZk&feature=player_embedded 1. தெற்கு சூ…
-
- 0 replies
- 375 views
-
-
தொடங்கியது மோதல்.. எமிரேட், சவுதியின் எண்ணெய் கப்பல்களை தாக்கி அழித்த ஈரான்? பகீர் குற்றச்சாட்டு! சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் கப்பல்கள், பெர்ஷியன் கடலில் தாக்கி அழிக்கப்பட்டுள்ளது. இந்த கப்பல்களை ஈரான் தாக்கி அழித்ததாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டு உள்ளது. ஹோர்முஸ் ஜலசந்தி என்பது ஈரான், ஈராக், ஓமன், சிரியா ஆகிய நாடுகள் எண்ணெய் ஏற்றுமதி செய்ய பயன்படுத்தும் ஒரே வழியாகும். இந்த ஒரே வழி மூலம் தான் உலக அளவில் கடல் வழியாக செய்யப்படும் பெட்ரோல் / டீசல் ஏற்றுமதியில் 40 சதவிகித ஏற்றுமதி நடக்கிறது. கணக்குப்படி பார்த்தால், மத்திய கிழக்கு நாடுகளின் எண்ணெய்களில் 90% சதவிகிதம் இது வழியாகவே வருகிறது. இந்த சிறிய கடல் பாதைதான் தற்போது பெரிய பிரச்சனை ஆகியுள்…
-
- 1 reply
- 1.7k views
- 1 follower
-
-
தொடங்குகிறது விண்வெளிச் சுற்றுலா - கட்டணம் எத்தனை கோடி தெரியுமா? பட மூலாதாரம்,VIRGIN GALACTIC படக்குறிப்பு, விர்ஜின் கேலக்டிக் விமானம் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் விண்வெளி சுற்றுலா நிறுவனமான 'விர்ஜின் கேலக்டிக்' தனது முதல் வணிக விமான சேவையை தொடங்க உள்ளது. இது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ள அந்நிறுவனம், இச்சேவை இன்று (ஜுன் 29-ம் தேதி) தொடங்கும் என கூறியுள்ளது. வணிக ரீதியான பயணத்தைத் தொடங்கும் இந்த முதல் விமானத்துக்கு 'கேலக்டிக் 01' என பெயரிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில், இரண்டாவது வணிக ரீதியான விண்வெளி விமானமான 'கேலக்டிக் 02' வரும் ஆகஸ்ட் மாதத்தில்…
-
- 10 replies
- 963 views
- 1 follower
-
-
உகண்டாவின் ஜனாதிபதி யோவேரி முசேவேனி வீதி ஓரத்தில் கதிரையொன்றில அமர்ந்து தொலைபேசி மூலம் உரையாடிக் கொண்டிருந்தபோது பிடிக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் “வைரஸாகி” வருகிறது. உகண்டா ஜனாதிபதி யோவேரி முசேவேனி கிராமப் புறத்திலுள்ள வீதியொன்றுக்கு அருகில் கதிரையில் அமர்ந்து தொலைபேசியில் உரையாடுவதும் சற்று தொலைவில் அவரின் வாகனத் தொடரணி காத்திருப்பதும் அப்புகைப்படத்தில் பதிவாகியுள்ளது. உகண்டா அரசாங்க ஊடகத்துறை அதிகாரியான டொன் வொனியாமா இப்புகைப்படத்தை பேஸ்புக்கில் வெளியிட்டிருந்தார். சுமார் 30 நிமிட நேரம் ஜனாதிபதி முசேவேனி தொலைபேசியில் உரையாடினாரென வொனியாமா தெரிவித்துள்ளார். வாகன…
-
- 0 replies
- 280 views
-
-
தொடரும் அகதிகள் துயரம்: 13 குழந்தைகள் உட்பட 22 பேர் கடலில் மூழ்கி பலி துருக்கியிலிருந்து கீரீஸுக்கு வந்த அகதிகள் படகு மூழ்கியது, நீரில் தத்தளிப்பவர்களை காப்பாற்றும் மீட்புப் பணியினர். | படம்: ஏ.எஃப்.பி. ஐரோப்பாவுக்குள் எப்படியாவது நுழையும் முயற்சியில் கிரீஸ் நாட்டு காலிம்னோஸ் மற்றும் ரோட்ஸ் தீவு நோக்கி வந்த அகதிகள் படகு கடலில் மூழ்கி 22 பேர் பலியாகியுள்ளனர். இதில் 13 பேர் குழந்தைகள். ஆனால், 144 பேர் காப்பாற்றப் பட்டதாக கிரீஸ் நாட்டு துறைமுக அதிகாரிகள் தெரிவித்தனர். வெள்ளிக்கிழமையான இன்று காலை காலிம்னோஸ் தீவில் 19 சடலங்கள் கரையொதுங்கின. இதில் 6 பெண்கள், 10 குழந்தைகள் அடங்கும். துருக்கியிலிருந்து படகில் காலிம்னோஸ் தீவுக்கு இந்த அகதிகள் வந்துள்ளனர். இதே போல் ரோட்ஸ் அர…
-
- 1 reply
- 664 views
-
-
7-வது நாளாக நீடிக்கும் இஸ்ரேல் தாக்குதல். | படம்: ஏ.பி. பாலஸ்தீனத்தின் காஸா பகுதி மீது இஸ்ரேல் மேற்கொண்டுள்ள வான்வழித் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 170 ஆக அதிகரித்துள்ளது. ஏழாவது நாளை எட்டியுள்ள வான்வழித் தாக்குதல் ஏற்படுத்தியுள்ள சேதம் குறித்து காஸா சுகாதாரத் துறை செய்தித்தொடர்பாளர் கூறும்போது, "தெற்கு காஸா பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலில் தந்தை, மகன் உள்பட 4 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். ரஃபான், கான் யூனிஸ் நகரங்களை குறிவைத்து இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலில் 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை இஸ்ரேலியப் படைகள் காஸா மீது வான்வழி தாக்குதல் நடத்தத் துவங்கியதில் இருந்து இதுவரை 170 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள…
-
- 0 replies
- 457 views
-
-
கொழும்பிலிருந்து தமிழர்கள் வெளியேற்றம், கிழக்கிலிருந்தும் தமிழர்கள் வெளியேற்றம், கிழக்கைப் பிடித்து விட்டோமென வெற்றி விழாவைத் தொடர்ந்து வடக்கிலும் இராணுவ நடவடிக்கையை தொடங்குவதாக சிறிலங்கா கூறும் நிலையிலும் தாய்த் தமிழகம் இப்படியேதான் இருக்குமா? என்று தமிழகத்திலிருந்து வெளியாகும் புதிய ஏடான "கருஞ்சட்டை தமிழர்" கேள்வி எழுப்பியுள்ளது. திராவிட தமிழர் இயக்கப் பேரவையின் செயலாளரான பேராசிரியர் சுப.வீரபாண்டியனை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்திருக்கும் "கருஞ்சட்டை தமிழர்" (ஓகஸ்ட் 2007) ஏட்டில் ஈழத் தமிழர் பிரச்சனை தொடர்பில் எழுதப்பட்டுள்ள கட்டுரை: ஈழத்தில் தமிழர் தாயகப் பகுதிகளான வடக்கு, கிழக்கு ஆகியவற்றில் கிழக்குப் பகுதி முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து…
-
- 1 reply
- 1.2k views
-
-
டார்ஜிலிங்: கூர்க்காலாந்து தனி மாநில கோரிக்கையை வலியுறுத்தி டார்ஜிலிங் மலை பிரதேசத்தில் போராட்டம் வலுத்து வருகிறது. அடுத்த 15 நாட்களுக்கான போராட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 400 போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தனித் தெலுங்கானா உருவாக்கப்படும் என்ற அறிவிப்பைத் தொடர்ந்து மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து டார்ஜிலிங் மலைபிரதேசத்தை பிரித்து கூர்க்காலாந்து தனி மாநிலமாக அறிவிக்கக் கோரி போராட்டங்கள் வெடித்தன. ஆனால் ஒருபோதும் தனி மாநில கோரிக்கையை ஏற்க முடியாது என்று அம்மாநில முதல்வர் மமதா பானர்ஜி அறிவித்து போராட்டத்தைக் கைவிட கெடுவும் நிர்ணயித்தார். இருப்பினும் மமதாவின் கெடுவை மீறி போராட்டம் தொடர்ந்தது. இதனால் போராட்டத்தில் ஈடுபட்ட 400 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். …
-
- 1 reply
- 444 views
-
-
தென் கொரியா, முன்னொருபோதும் இல்லாத மிகப் பெரும் இராணுவ ஒத்திகை ஒன்றை நிறைவு செய்துள்ளது. அணுவாயுதங்களைப் பாவித்துப் புனிதப் போர் ஒன்றை நடத்துவதற்குத் தமது நாடு தயாராக உள்ளதாக வடகொரியாவின் ஆயுதப்படைகள் அமைச்சர் கிம் யொங் சுன் (Kim Yong-chun) தெரிவித்தார். தென் கொரியா, முன்னொருபோதும் இல்லாத மிகப் பெரும் இராணுவ ஒத்திகை ஒன்றை நிறைவு செய்துள்ள நிலையில், அவரது கருத்து வெளியாகியது. தென் கொரியாவின் பயிற்சி நடவடிக்கைகள், வட கொரியாவின் மீதான ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கான ஆயத்தமென கிம் யொங் சுன் மேலும் தெரிவித்தார். இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லையில் இருந்து சுமார் 20 கிலோ மீற்றர் தூரத்தில் இடம்பெற்ற பயிற்சியில், நூற்றுக்கணக்கான தென் கொரியப் படையினரும், தாங்கிகளு…
-
- 0 replies
- 401 views
-
-
சீனாவுக்கு வெளியே பல நாடுகளில் தீவிரமடைந்து வரும் கொரோனா வைரஸ் நோய்தாக்கம் சீனாவில் ஓரளவிற்கு கட்டுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களுக்கு மீண்டும் நோய் தாக்கம் கண்டறியப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கொரோனா வைரஸ் நோய்த் தாக்கத்திலிருந்து முழுமையாக குணமடைந்ததாக வைத்தியசாலையில் இருந்து வீடுகளுக்கு அனுப்பப்பட்டவர்களை நான்கு நாட்களின் பின் மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்தியபோது அவர்கள் கொரோனா வைரஸ்ஸிற்கு நேர்மறையாக காணப்பட்டதாக சீனாவின் ஒரு வைத்தியசாலை தகவல் வெளியிட்டுள்ளது. மேலும் ஒரு கொரோனா வைரஸ் நோயாளி, குணமடைந்ததாக வைத்தியசாலையில் இருந்து அனுப்பப்பட்டு 18 நாட்களின் பின்னர் மீண்டும் …
-
- 0 replies
- 502 views
-
-
உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி அல்டமாஸ் கபீர் தமது பதவிக் காலத்தில் சர்ச்சைக்குரிய பாரபட்சமான தீர்ப்புகளை வழங்கியிருப்பதை மாற்றி தற்போதைய தலைமை நீதிபதி சதாசிவம் அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்து வருவது பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது. உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி வகித்த அல்டமாஸ் கபீர் அண்மையில் ஓய்வு பெற்றார். அவரைத் தொடர்ந்து தமிழ்நாட்டைச் சேர்ந்த சதாசிவம் தலைமை நீதிபதியாக பதவியேற்றார். அவர் தொடர்ந்தும் நீதித்துறை நேர்மை பற்றி விரிவாக பேசி வரும் நிலையில் அல்டமாஸ் கபீர் தமது பதவி காலத்தில் பாரபட்சமாக நடந்து கொண்ட வழக்குகளில் புதிய உத்தரவுகளையும் பிறப்பித்து வருகிறார். ஸ்பெக்ட்ரம் வழக்கில் தொழிலதிபர்களுக்கு ஆதரவு ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான வழக்குகளை உச்சநீ…
-
- 0 replies
- 386 views
-
-
தொடரும் சிங்கள கடற்படை அட்டூழியம்: தமிழக மீனவர்கள் வேதனை சிங்கள கடற்படியினரால் இதுவரை 500 தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று புள்ளி விபரம் தெரிவிக்கின்றது. இந்நிலையில் கடந்த வாரம் நாகை மீனவர் செல்லப்பன் கொல்லப்பட்டார். எத்தனையோ முறை சொல்லியும் கேட்காத சிங்கள கடற்படையை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தால் சீமான்,வைகோ, பழ.நெடுமாறன் உட்பட பலர் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். சிங்கள அட்டூழியம் தொடர்பாக மத்திய,மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்துவருகின்றன. இந்நிலையில் இன்று ராமேஸ்வரம், மண்டபம் பகுதியிலிருந்து நேற்று 1500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். நட…
-
- 5 replies
- 632 views
-
-
தொடரும் துயரம்: துருக்கியில் படகு கவிழ்ந்து அகதிகள் 14 பேர் பலி படம்: ராய்ட்டர்ஸ். துருக்கியின் ஏஜியன் கடல் பகுதியில் அகதிகள் வந்த படகு கவிழ்ந்ததில் 7 குழந்தைகள் உட்பட 14 பேர் மூழ்கி பலியாகியுள்ளனர். இவர்கள் கிரீஸ் நாட்டை அடைய முயற்சி மேற்கொண்டனர். இவர்கள் வந்த படகு கனக்கலே என்ற இடத்திலிருந்து கிரீஸின் லெஸ்பாஸ் தீவு நோக்கி வந்த போது இந்த துயரம் நிகழ்ந்தது. துருக்கி கடலோரக் காவற்படையைச் சேர்ந்தவர் சடலங்களை மீட்டனர். இதில் மேலும் 27 பேர் உயிருடன் மீட்கப்பட்டதாக டோகன் செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது. உயிருடன் மீட்கப்பட்டவர்களில் கர்ப்பவதி ஒருவரும் அடங்குவார். இவரது உடல் நிலை நல்ல நிலையில் உள்ளதாக அந்த செய்தி நிறுவனம் தெரிவித…
-
- 0 replies
- 406 views
-
-
கடந்த ஜூன் 28 ம் நாள் இரவு சத்திஸ்கார் மாநிலத்தில் உள்ள பீஜப்பூர் மாவட்டத்தில் சுமார் இருபது மாவோயிஸ்டுகளை ஒரு நீண்ட துப்பாக்கிச் சண்டைக்குப் பின் சுட்டு வீழ்த்தியதாக மத்திய ரிசர்வ் போலீஸ் படையும் சத்திஸ்கார் போலிசும் அறிவித்தன. இந்தியத் தொலைக் காட்சிகள் அதிலும் குறிப்பாக ஆங்கிலச் செய்தி நிறுவனங்கள் இந்த வெற்றியை நாள் முழுவதும் மீண்டும் மீண்டும் அறிவித்த வண்ணம் இருந்தன. மாவோயிஸ்டுகளுடனான போரில் இது ஒரு மிகப் பெரும் வெற்றியாக நாடு முழுவதும் பறை சாட்டப்பட்டது. தொலைகாட்சிகளில் போலீஸ் அதிகாரிகள், ஒய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் மீண்டும் மீண்டும் தோன்றி இது ஓர் மிகப் பெரும் வெற்றி என்ற கொண்டாடிக் கொண்டிருந்தனர். கூடவே, அமைச்சர் சிதம்பரம் தொலைக் காட்சியில் தோன்றி தமது தலைமையி…
-
- 1 reply
- 1.2k views
-
-
காணாமல் போன மலேசிய விமானம் கடத்தப்பட்டிருக்கலாம், ஆனால் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என மலேசிய பிரதமர் நஜீப் ரஸாக் தெரிவித்துள்ளார். மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து, சீனாவின் பெய்ஜிங் நோக்கி கடந்த 7ஆம் திகதி சென்ற மலேசிய விமானம் நடுவானில் மாயமானது. இதுநாள் வரையிலும் விமானம் குறித்த எவ்வித தகவலும் வெளியாகவில்லை. இந்நிலையில் விசாரணை நடத்திய மலேசிய அரசு, விமானம் கடத்தப்பட்டிருக்கலாம் என தெரிவித்துள்ளது. அனுபவமிக்க விமானிகளால் கடத்தப்பட்டதாக தகவல் இந்த விவகாரம் தொடர்பாக, அந்நாட்டின் விசாரணை அதிகாரி ஒருவர் இத்தகவலை வெளியிட்டுள்ளார். விமானத்தை நன்கு இயக்க கூடிய 1 அல்லது 2 பேர் விமானத்தை கடத்தியிருக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார். ஏனெனில் விமானத்தில் இருந்து விமான…
-
- 0 replies
- 629 views
-
-
தொடரும் மோதல் - ரஷ்யாவிற்கு பலத்த பாதிப்பு உக்ரேன் மற்றும் ரஷ்யா இடையேயான மோதல் 16-வது நாளாக தொடர்ந்து நீடித்து வருகிறது. ரஷ்ய படைகள் உக்ரேனின் முக்கிய நகரங்களில் ஏவுகணை, மற்றும் பீரங்கி தாக்குதல்களை நடத்தி வருகிறது. அதேநேரத்தில் ரஷ்யாவிற்கு உக்ரேனும் ஈடுகொடுத்து வருகிறது. இந்த போரில் இரு நாடுகளைச் சேர்ந்த பொதுமக்கள், வீரர்கள் என பலர் உயிரிழந்து உள்ளனர். அதே சமயம் உக்ரேனிலிருந்து அண்டை நாடுகளுக்கு இதுவரை 20 இலட்சத்திற்கும் அதிகமானோர் அகதிகளாக வெளியேறி உள்ளதாக ஐ.நா. அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். உக்ரேன்-ரஷ்யா போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 2,800-க்கு மேற்பட்ட உக்ரேன் இராணுவ தளவாடங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக ரஷ்யா இராணுவ அமைச்சகம் தெரிவித்துள்…
-
- 7 replies
- 629 views
-
-
தொடரும் வர்த்தக போர் - புதிய வரி விதிப்பு - டிரம்ப் அச்சுறுத்தல்! சீனாவுடன் நிலவும் வர்த்தக போரின் தொடர்ச்சியாக, 200 பில்லியன் டொலர்கள் அளவிலான சீன இறக்குமதி பொருட்களின் மீது 10 சதவீதம் கூடுதல் வரி விதிப்பு செய்யப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அச்சுறுத்தல் விடுத்துள்ளார். புதிய வரி விதிப்பை அமல்படுத்த இது தொடர்பான சீன இறக்குமதி பொருட்கள் எவை என்று கண்டறியுமாறு தனது வர்த்தக ஆலோசகர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். 50 பில்லியன் டொலர்கள் மதிப்பிலான சீன பொருட்கள் மீது 25 சதவீதம் வரிவிதிப்பை கடந்த வாரத்தில் டிரம்ப் அறிவித்தது குறிப்பிடத்தக்கது. இதற்கு பதிலடியாக 50 பில்லியன் டொலர்கள் மதிப்பிலான 650 அமெரிக்க இறக்குமதி பொருட…
-
- 0 replies
- 389 views
-
-
தொடர் சிக்கல்களில் துருக்கி - 1 துருக்கியின் இஸ்தான்புல் நகரின் ஒரு பகுதி. எட்டு நாடுகளால் சூழப்பட்டுள் ளது துருக்கி. சிரியா, இராக், ஈரான், அர்மீனியா, அஜர்பைஜான், ஜார்ஜியா, பல்கேரியா மற்றும் கிரீஸ். கருங்கடல், மத்திய தரைக்கடல், ஏஜியன் கடல் ஆகியவையும் துருக்கியின் எல்லைகள்தான். இரண்டு கண்டங்களில் அமைந்த நாடு துருக்கி ஆசியா, ஐரோப்பா. துருக்கியில் அமைந்த ‘கிராண்ட் பஜார்’ குறித்த ஒரு தகவலைக் கேட்டால், தி.நகரிலிருந்து இஸ்தான்புலுக்கு ஹெலிகாப்டர் வசதிகள் இருக்கக் கூடாதா என்று தமிழகப் பெண்கள் ஏக்கம் கொள்ளக் கூடும். இஸ்தான்புல் கிராண்ட் பஜாரில் மொத்தம் 64 நீளமான தெருக்கள். 4000-க்கும் அதிகமான கடைகள். துலிப் மலர்களின் தாயகம் நெதர்லாந்து என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறா…
-
- 14 replies
- 3.6k views
-
-
தொடர் தற்கொலை தாக்குதல்: நைஜீரியாவில் பயங்கரம் damithJuly 1, 2024 நைஜீரியாவில் (Nigeria) நடந்த தொடர் தற்கொலைத் தாக்குதலில் குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதுடன் 19 பேர் படுகாயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்படி தாக்குதல் சம்பவமானது நேற்றுமுன்தினம்(29)இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நைஜீரியாவின் வடகிழக்கு போர்னோ மாநிலத்தில் பெண் தற்கொலை குண்டுதாரிகளால் குவோசா நகரில் திருமணங்கள், இறுதிச் சடங்குகள் மற்றும் மருத்துவமனைகளை குறிவைத்து இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்த தாக்குதல்களில் குழந்தைகள், பெரியவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களும் உயிரிழந்துள்ளதாக போர்னோ மாநில அவசர முக…
-
- 0 replies
- 377 views
-