உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26731 topics in this forum
-
கர்ப்பம் தரித்த 20 வாரங்களுக்குள் பெண்ணொருவர் தனது கருவை கலைப்பதற்கான உரிமையை வழங்கும் மசோதா நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. 1977ஆம் ஆண்டு முதல் நியூசிலாந்தின் குற்றவியல் சட்டத்தின்படி, குற்றமாக கருதப்பட்டு வரும் கருக்கலைப்பை அதிலிருந்து நீக்குவதற்கான வாக்கெடுப்பு நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. இதில் 68க்கு 51 என்ற கணக்கில் கருக்கலைப்பை குற்றமற்றதாக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது. இதற்கு முன்புவரை, கர்ப்பம் தரித்த பெண்ணொருவரின் உடல் நலனுக்கு "மி…
-
- 1 reply
- 761 views
-
-
நியூசிலாந்தில் ஒருபால் திருமண கொண்டாட்டங்கள் களை கட்டுகின்றன. ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் முதல்நாடாகவும் உலகில் 14வது நாடாகவும் நியூசிலாந்து ஒருபால் திருமணத்தை சட்டபூர்வமாக அங்கீகரித்துள்ளது. ஆஸ்திரேலியாவிலிருந்து 1000 ஜோடிகள் நியூசிலாந்து செல்லத் திட்டம் நாட்டின் 1955 ஆண்டு திருமணச் சட்டத்துக்கு திருத்தம் கொண்டுவந்துள்ளதன் மூலம் கடந்த ஏப்ரலில் நியூசிலாந்து ஒருபால் திருமணத்தை சட்டப்படி அங்கீகரித்தது.இன்று திங்கட்கிழமை 31 ஒருபால் ஜோடிகள் திருமண பந்தத்தில் இணைந்துகொள்வதாக அரச உள்துறை புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. இந்த சட்டத்துக்கு கிறிஸ்தவ செயற்பாட்டாளர்களிடமிருந்து கடுமையான எதிர்ப்பு கிளம்பியிருந்தது. ஆனால், ஆண்டாண்டு காலமாக இருந்துவந்த அநீதிக்கு இந்த சட்டம் முடிவ…
-
- 6 replies
- 419 views
-
-
இந்தியாவின் தாஜ்மகால், சீனாவின் பெருஞ்சுவர் உள்ளிட்ட 7 உலக அதிசயங்கள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன. இந்த நிலையில் தற்போது 8-வது உலக அதிசயமாக நியூசிலாந்தில் உள்ள ரொடோ மாகானா ஏரிக்குள் மூழ்கி கிடக்கும் மொட்டை மாடி கட்டிடங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. இவை 60 மீட்டர் ஆழத்தில் இருப்பது தெரிய வந்துள்ளது. இவை 19-ம் நூற்றாண்டை சேர்ந்தவை. எரிமலைகளின் சீற்றத்தால் கடந்த 125 ஆண்டுகளுக்கு முன்பு ஏரிக்குள் மூழ்கியிருக்கலாம் என கிவி மற்றும் அமெரிக்கா விஞ்ஞானிகள் கருதுகின்றனர். தண்ணீருக்குள் மூழ்கி கிடக்கும் மொட்டை மாடிகள், இளஞ்சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் ராட்சத திருமண “கேக்” வடிவத்தில் உள்ளது. அது கடந்த 1886-ம் ஆண்டு ஏரிக்குள் மூழ்கியிருக்கலாம் என கூறப்படுகிறது. …
-
- 0 replies
- 816 views
-
-
30 APR, 2025 | 10:35 AM நியூசிலாந்தில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவுகோலில் 6.2ஆக பதிவாகியுள்ளது. நியூசிலாந்தின் இன்வெர்கார் நகரிலிருந்து 300 கிலோமீற்றர் தொலைவில் உள்ள கடலுக்கு அடியில் 10 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் வீடுகள் குலுங்கியதால் மக்கள் அச்சமடைந்து வீட்டை விட்டு வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். இதனால் ஏற்பட்ட சேத விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை. https://www.virakesari.lk/article/213309
-
- 0 replies
- 236 views
- 1 follower
-
-
நியூசிலாந்தில் பயங்கர நிலநடுக்கம்-சுனாமி எச்சரிக்கை புதன்கிழமை, ஜூலை 15, 2009, 16:17 [iST] குயீன்ஸ்டவுன்: நியூசிலாந்து அருகே பசிபிக் கடலில் மாபெரும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 7.8 புள்ளிகளாகப் பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தையடுத்து நியூசிலாந்தில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தெற்கு, மேற்கு என இரு பெரும் தீவுகளைக் கொண்ட நாடு நியூசிலாந்து. இதில் தென் தீவின் மேற்குப் பகுதியில் அந் நாட்டு நேரப்படி இரவு 8.22க்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இன்வெர்கார்கில் என்ற நகருக்கு 161 கி.மீ. தூரத்தில் கடலில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோளில் 7.8 புள்ளிகள் என்ற அளவுக்குப் பதிவாகியுள்ளதால் நியூசிலாந்து முழுவதும் சுனாமி எச்சரிக்கை…
-
- 2 replies
- 1.7k views
-
-
வீரகேசரி இணையம் 7/6/2011 5:51:42 PM நியூசிலாந்தின் மத்திய பகுதியில் நேற்றுக் காலை, 6.5 ரிச்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தாபோ நகரத்தின் அருகே 30 கிலோ மீட்டர் தொலைவிலேயே நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தததாகத் தெரிவிக்கப்படுகிறது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. வீடுகள், கட்டிடங்கள் சேதமடைந்திருப்பதாகவும், சாலைகளில் விரிசல் ஏற்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிரிழப்பு பற்றிய எவ்வித தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை. http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=32554
-
- 1 reply
- 506 views
-
-
25 Nov, 2025 | 01:38 PM அவோராகி அல்லது மவுண்ட் குக் என அழைக்கப்படும் நியூசிலாந்தின் மிக உயரமான மலையில் இருந்து விழுந்து இரண்டு மலையேற்ற வீரர்கள் உயிரிழந்துள்ளனர். 3,724 மீட்டர் உயரமுள்ள மலையில் ஏறிய நான்கு பேரில் இருவர் உயிரிழந்தனர். திங்கட்கிழமை இரவு அவசர சேவைகளைத் தொடர்பு கொண்ட பின்னர் செவ்வாய்க்கிழமை அதிகாலை ஹெலிகாப்டர் மூலம் மற்றைய இருவரும் காயங்கள் ஏற்படாமல் மீட்கப்பட்டனர். பல மணி நேர தேடுதலுக்குப் பிறகு, உயிரிழந்த மலை வீரர்களின் சடலங்கள் அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டன. சடலங்கள் மீட்கும் பணி தற்போது “கடினமான ஆல்பைன் சூழலில்” நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நியூசிலாந்தின் தென் தீவு வரை நீண்டு இருக்கும் தெற்கு ஆல்ப்ஸின் மீது உயர்ந்து நிற்கும் …
-
- 0 replies
- 151 views
- 1 follower
-
-
நியூசிலாந்தில் மீண்டும் கரோனா பாதிப்பு: இருவருக்குத் தொற்று நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா கரோனா தொற்று இல்லாத நாடாக நியூசிலாந்து அறிவிக்கப்பட்ட நிலையில் மீண்டும் இருவருக்கு கரோனா வைரஸ் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஐந்து மாதத்துக்கும் மேலாக உலக நாடுகள் கரோனா வைரஸை எதிர்கொண்டு வருகின்றன. கரோனா வைரஸிலிருந்து விடுபட அமெரிக்கா, ரஷ்யா, பிரேசில், இந்தியா, பிரிட்டன் ஆகிய நாடுகள் செய்வதறியாமல் தவித்து வரும் சூழலில் நியூசிலாந்து சிறப்பான நடவடிக்கைகளைக் கையாண்டு கரோனா வைரஸைக் கட்டுப்படுத்தியது. இதனைத் தொடர்ந்து கடந்த வாரம் நியூசிலாந்து கரோனா வைரஸ் இல்லாத நாடாக அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக சில தளர்வுகளை அரசு கொண்டுவந்தது. ஆனால், எல்லைக்…
-
- 0 replies
- 310 views
-
-
நியூசிலாந்தில் விமானங்களை தாமதப்படுத்திய நாய் சுட்டுக்கொலை நியூசிலாந்து நாட்டின் போக்குவரத்து மிகுந்த ஆக்லாந்து விமானநிலையத்தில் விமானங்கள் புறப்படுவதற்கு இடைஞ்சலாக இருந்த ஒரு போலிஸ் மோப்ப நாயை போலிசார் சுட்டுக்கொன்றனர். பத்து மாத வயதான , தாடி போன்ற முடி கொண்ட கோலி மற்றும் குறைந்த முடி கொண்ட ஜெர்மன் வகை நாய் இனங்களின் கலப்பான கிறிஸ் என்று பெயர்கொண்ட இந்த நாயை காவல் துறை அதிகாரி ஒருவர் சுட்டுக்கொன்ற பிறகு, அங்கு விமான சேவைகள் இயல்பு நிலைக்கு திரும்பின. படத்தின் காப்புரிமைAVSEC அந்த நாய் குட்டி வெடிபொருட்களை கண்டறிய பயிற்சி கொடுக்கப்படும் வேளையில் ஆக்லாந்து விமான நிலையத்தில் வேறு இடத்திற்கு ஓடிவிட்டது. மூன்று மணி நேரமா…
-
- 0 replies
- 269 views
-
-
நியூசிலாந்து அருகே கடலில் மாபெரும் பூகம்பம்: கட்டடங்கள் சேதம்- சுனாமி பீதியில் தீவுகள்! ஆகஸ்ட் 02, 2007 வெலிங்டன்: நியூசிலாந்து நாட்டின் வடக்கே உள்ள வனாது தீவுக்கு அருகே தென் பசிபிக் கடலில் மிகப் பெரிய பூகம்பம் ஏற்பட்டது, இதனால் நியூசிலாந்து உள்பட அப் பகுதியில் உள்ள பல தீவுகள் குலுங்கின. சுனாமி ஏற்படலாம் என்ற பீதியும் பரவியது. Shot at 2007-08-01 நியூசிலாந்து நேரப்படி இன்று அதிகாலை 4.08 மணிக்கு இந்த பூகம்பம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோளில் 7.2 என்ற அளவுக்கு பதிவானது. இதனால் நியூசிலாந்தின் பல பகுதிகள் அதிர்ந்தன. சாலைகளில் வெடிப்புகள் ஏற்பட்டன. கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் அலறியடித்தபடி ஓடினர். மின் வினியோகமும் துண்டிக்கப்பட்டது. …
-
- 2 replies
- 1.1k views
-
-
பூமியில் எங்கும் இல்லாத அள வுக்கு நியூசிலாந்து சிலி இடையே தெற்கு பசிபிக் கடலில் உள்ள தனித் தீவில் பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கி கிடப்பது ஆய்வாளர்களைக் கவலை அடைய வைத்துள்ளது. தெற்கு பசிபிக் கடலில் ஆய்வு நடத்துவதற்காக ஆய்வு குழு வினர் சென்றுள்ளனர். அப்போது யுனெஸ்கோவால் உலக புராதன பகுதியாக அறிவிக்கப்பட்ட ஹெண்டர்சன் தீவில் ஏராளமான பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்திருப் பதைக் கண்டு மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர். நியூசிலாந்துக்கும், சிலிக்கும் இடையே உள்ள இந்த தீவில் விளையாட்டு பொம்மைகள், பல் துலக்கும் பிரஷ் உள்பட பல்வேறு வகையான பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டி கிடக்கின்றன. இந்த பூமியில் எங்கும் இல்லாத அளவுக்கு ஹெண்டர்சன் தீவில் பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்துள்ளது மிகவும் ஆபத்த…
-
- 0 replies
- 432 views
-
-
கிரேமெளத்: நியூசிலாந்தில் உள்ள நிலக்கரிச் சுரங்கத்திற்குள் சிக்கிக் கொண்ட 29 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். கிரேமெளத் பகுதியில் உள்ள பைக் ரிவர் நிலக்கரிச் சுரங்கத்திற்குள் இந்த 29 பேரும் சிக்கியிருந்தனர். கடந்த ஐந்து நாட்களாக இவர்கள் உள்ளேயே தவித்து வந்தனர். வெடிவிபத்து ஏற்பட்டதில் சுரங்கம் மூடிக் கொள்ளவே இவர்கள் அனைவரும் உள்ளே மாட்ட நேரிட்டது. இந்தநிலையில் இன்று பிற்பகல் இன்னொரு வெடிவிபத்து ஏற்பட்டது. இதனால் சுரங்கம் முற்றிலுமாக மூடி விட்டது. இதையடுத்து உள்ளே சிக்கியிருந்த 29 பேரும் உயிரிழந்திருக்கலாம் என்று போலீஸ் கண்காணிப்பாளர் கேரி நோல்ஸ் கூறியுள்ளார். முதலில் நடந்த வெடிவிபத்தைத் தொடர்ந்து மிகவும் அபாயகரமான மீத்தேன் வாயு சுரங்கத்திற்குள் பரவியிருந்தது.…
-
- 0 replies
- 418 views
-
-
நியூசிலாந்து சென்ற 4 படகுகள் இடைமறிப்பு! நியூசிலாந்து நோக்கிப் பயணித்த ஏதிலிகளின், நான்கு படகுகளை ஆஸ்திரேலிய அதிகாரிகள் இடைமறித்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. இலங்கையைச் சேர்ந்தவர்களும் அதில் உள்ளடங்கி இருக்கலாம் என்றும் கூறப்படுகின்ற போதும் இன்னும் உறுதிப்படுத்தப்பட வில்லை. அந்தப் படகுக ளில் 164 ஏதிலிகள் பயணி த்ததாகக் கூறப்படுகிறது. http://newuthayan.com/story/46930.html
-
- 0 replies
- 338 views
-
-
வெல்லிங்டன், நியூசிலாந்து: நியூசிலாந்தைச் சேர்ந்த ஒரு சொகுசுக் கப்பலில் 200 பயணிகளுக்கு நோரோ வைரஸ் அதாவது காலரா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தி டான் பிரின்சஸ் என்ற அந்த சொகுசுக் கப்பலில் 1500க்கும் மேற்பட்டோர் உள்ளனர். இதில் 200க்கும் மேற்பட்டோருக்கு இந்த வயிற்றுப் போக்கு பரவியுள்ளதாம். ADVERTISEMENT இந்தக் கப்பல் நேற்று ஆஸ்திரேலியாவுக்குப் புறப்படுவதாக இருந்தது. கடந்த 13 நாட்களாக இது கடலில் பயணித்து வந்தது. இந்த நிலையில்தான் தற்போது வயிற்றுப் போக்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளது. மியாமியைச் சேர்ந்த பிரின்சஸ் க்ரூய்ஸஸ் என்ற கப்பல் நிறுவனம்தான் இந்த கப்பலின் உரிமையாளர் ஆகும். இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரி டாக்டர் அலிஸ்டர் ஹம்ப்ரி கூற…
-
- 0 replies
- 399 views
-
-
நியூசிலாந்து பள்ளிவாசல்களில் துப்பாக்கிச் சூடு :9 பேர் உயிரிழப்பு நியூசிலாந்தில் சென்ட்ரல் கிறிஸ்ட்சர்ச் பகுதியில் உள்ள இரண்டு பள்ளிவாசல்களில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 9 பேர் உயிரிழந்துள்ளனர் என அந்நாட்டு பொலிஸார் தெரிவிக்கின்றனர். மேலும் பலர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. நியூசிலாந்தின் மையப்பகுதி என்றழைக்கப்படும் சென்ட்ரல் கிறிஸ்ட்சர்ச் பகுதியில் இச்சம்பவம் இன்று (வெள்ளிக்கிழமை) பதிவாகியுள்ளது. இந்த சம்பவத்தில் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். துப்பாக்கிசூடு நடத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் லைன்வுட் மஸ்ஜித் பள்ளிவாசலில் 110 பேர் வரையில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பங்களாதேஷ் கிரிக்கட் வீரர்கள் உட்பட சுமார் 30…
-
- 24 replies
- 3.2k views
- 1 follower
-
-
நியூசிலாந்து பாராளுமன்றத்துக்கு 2 பெண்கள் உள்பட 3 இந்தியர்கள் தேர்வு- 119 இடங்களை கொண்டுள்ள நியூசிலாந்து நாட்டின் பாராளுமன்றத்துக்கு நேற்று முன்தினம் இடம்பெற்ற தேர்தலில் எந்தக்கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆட்சி அமைப்பதற்கு 61 இடங்கள் தேவை என்ற நிலையில், 3 முறை அரசு அமைத்த தேசியக்கட்சி 58 இடங்களை பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவாகி உள்ளது. இந்த தேர்தலில், கலாநிதி பரம்ஜீத் பார்மர், பிரியங்கா ராதாகிருஷ்ணன் ஆகிய 2 பெண்கள் உள்பட 3 இந்தியர்கள் வெற்றி பெற்று, நியூசிலாந்து பாராளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். நியூசிலாந்து பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ள மற்றொரு இந்தியர் கன்வல்ஜீத் சிங் பாக்சி ஆ…
-
- 1 reply
- 256 views
-
-
நியூசிலாந்து பாராளுமன்றத்தில் 21 வயதான இளம் பாராளுமன்ற உறுப்பினர் ஆற்றிய உரை தற்போது சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. ஹக்கா (haka) எனப்படும் பாரம்பரிய வெற்றி முழக்கத்துடன் அவர் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை காண்போரை மெய்சிலிர்க்க வைக்கிறது. Hana-Rawhiti Maipi-Clarke எனும் குறித்த பெண் கடந்த 170 வருடங்களில் நியூசிலாந்து வரலாற்றில் பதிவான முதல் இளம் பாராளுமன்ற உறுப்பினர் ஆவார். நியூசிலாந்தின் ஆக்லேண்ட் மற்றும் ஹெமில்டனுக்கு இடையில் உள்ள Huntly எனும் சிறிய நகரத்தை சேர்ந்த இவர், கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளார். மாவோரி பழங்குடி இனத்தை சேர்ந்த இவர் நியூசிலாந்தின் பழங்குடி மக்களின் உரிமைகளுக்காக போராடி வருகிறார். …
-
- 9 replies
- 1.4k views
- 1 follower
-
-
நியூசிலாந்து பிரதமராக மீண்டும் ஜெசிந்தா – இன்று நடந்த தேர்தலில் அமோக வெற்றி! நியூசிலாந்தில் இன்று (17) இடம்பெற்ற பொதுத் தேர்தலில் தற்போது ஆட்சியில் உள்ள பிரதமர் ஜெசிந்தா அர்டன் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். நடைபெற்று முடிந்த இந்த தேர்தலில் தொழிலாளர் கட்சி மற்றும் தேசிய கட்சி இரண்டுக்கும் இடையில் போட்டி நிலவிய நிலையில் தொழிலாளர் கட்சி 64 ஆசனங்களை பெற்று பெற்றியை தமதாக்கியது. இதன்படி நியூசிலாந்தின் 40வது பிரதமராக 40 வயதுடைய ஜெசிந்தா இரண்டாவது முறையாக வெற்றி பெற்றுள்ளார். இதேவேளை தேசிய கட்சி 35 ஆசனங்களையும், ஏ.சி.ரி நியூசிலாந்து 10 ஆசனங்களையும், பச்சை கட்சி 10 ஆசனங்களையும், மோரி கட்சி ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது. https:/…
-
- 2 replies
- 1.3k views
-
-
நியூசிலாந்து பிரதமர் தனது காதலரை நிச்சயதார்த்தம் செய்தார் ! நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா அர்டேர்னுக்கும் அவரது நீண்ட நாள் காதலரும் தொலைக்காட்சி அறிவிப்பாளருமான கிளார்க் கேபோர்டுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வைப்பவமொன்றில் இருவரும் வைர மோதிரத்தை மாற்றி நிச்சயதார்த்தம் செய்து கொண்டுள்ளார்கள். உயிர்த்த ஞாயிறு விடுமுறையின் போது இருவரின் திருமண நிச்சயதார்த்தம் நடந்ததாக பிரதமர் ஜசிந்தாவின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் இவர்களுக்கு பெண் குழந்தையொன்று பிறந்துள்ளது.குழந்தைக்கு நெவி தி அரோஹா எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் உலகிலேயே பதவியில…
-
- 5 replies
- 956 views
-
-
நியூசிலாந்து பிரதமர் பதவியில் இருந்து விலக போவதாக ஜெசிந்தா ஆர்டெர்ன் அறிவிப்பு - காரணம் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES 51 நிமிடங்களுக்கு முன்னர் குறைந்த வயதில் தலைமை பொறுப்பை அடைந்த பெண் தலைவர் என்று அழைக்கப்படும் நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் அடுத்த மாதம் பதவி விலக போவதாக அறிவித்துள்ளார். தலைமைப் பொறுப்புக்கான ஆற்றல் இதற்குமேல் தன்னிடம் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். பணியில் இருந்த ஆறு சவாலான ஆண்டுகள் எவ்வாறு பாதிப்பை ஏற்படுத்தியது என்பதை விவரிக்கும்போது ஜெசிந்தா சற்று தடுமாறினார். தொழிலாளர் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து பிப்ரவரி 7ஆம் தேதிக்க…
-
- 7 replies
- 1k views
- 1 follower
-
-
நியூசிலாந்து புதிய கொடிக்கான போட்டியில் ஐந்தாவதாக ஒரு கொடி இதற்கு முன்பாக இறுதிப் போட்டிக்கு தேர்வான நான்கு கொடிகளின் மாதிரிகள். தங்கள் நாட்டுக்கென புதிய தேசியக் கொடியை வடிவமைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் நியூசிலாந்து, அதற்கான போட்டியில் ஐந்தாவதாக ஒரு கொடியையும் சேர்த்துக்கொண்டிருக்கிறது. தங்கள் நாட்டுக்கென புதிய தேசியக் கொடியை வடிவமைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் நியூசிலாந்து, அதற்கான போட்டியில் ஐந்தாவதாக ஒரு கொடியையும் சேர்த்துக்கொண்டிருக்கிறது. இந்தப் புதிய கொடியை வடிவமைப்பதெற்கென போட்டிகள் நடந்து இறுதிப் பட்டியலுக்கு நான்கு கொடிகளின் மாதிரிகள் தேர்வுசெய்யப்பட்டன. இம்மாதத் துவக்கத்தில் இறுதிப்பட்டியலுக்கான நான்கு கொடிகள் முன்வைக்கப்பட்டபோது, பெரும…
-
- 1 reply
- 817 views
-
-
நியூசிலாந்து நாட்டில் விமானிகளை கத்தியால் குத்தி விமானத்தை கடத்த முயன்றார் ஒரு பெண். அவரை பிற பயணிகள் மடக்கியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. நியூசிலாந்திந் பிளன்ஹீன் நகரிலிருந்து கிறிஸ்ட்சர்ச் நகருக்கு 19 பயணிகளுடன் ஒரு விமானம் புறப்பட்டு சென்றது. நடுவானில் விமானம் பறந்து கொண்டிருக்கும் போது ஒரு பெண் எழுந்து விமானியின் அருகே சென்றார். தன்னிடம் வெடிகுண்டு இருப்பதாகவும், விமானத்தை தான் சொல்லும் திசையில் செலுத்தாவிட்டால் விமானத்தை தகர்க்க போவதாகவும் அந்த பெண் மிரட்டினார். ஆனால் மிரட்டலுக்கு விமானி பணியாததால் அந்த பெண் இரு விமானிகளையும் கத்தியால் குத்தினார். விமானி அலறிய சத்தம் கேட்டு ஓடிய பயணிகள் பெண் மீது பாய்ந்து அவரை மடக்கினர். ரத்தம் சொட்டிய நி…
-
- 3 replies
- 1.5k views
-
-
வெல்லிங்டன்: நியூசிலாந்தில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நியூசிலாந்து தலைநகர் வெல்லிங்டனில் இன்று அதிகாலை 2.31 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகி இருந்தது. இந்த நிலநடுக்கம் நாட்டின் வட பகுதியில் உள்ள ஆக்லாந்து முதல் தென் பகுதியில் உள்ள ட்யூன்டின் வரை உணரப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின மற்றும் வீடுகள் சேதம் அடைந்தன. பல அலுவலக கட்டடிடங்களில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர். இந்த நிலநடுக்கத்தால் சிலர் காயம் அடைந்துள்ளனர். உயிர் இழப்பு ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை. நிலநடுக்கம் ஏற்பட்டபோது வெல்லிங்டனில் உள்ள பல லிப்டுகள் திடீர் என்று நின்றுவிட்டன. பின்னர் அதில் இருந்தவர்…
-
- 0 replies
- 330 views
-
-
நியூயார்க் - லண்டனுக்கு 5 மணி 13 நிமிடத்தில் பறந்த விமானம் - வேகத்தில் புதிய சாதனை அ-அ+ நார்வேயன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானத்தில் நியூயார்க்கில் இருந்து இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு 3 நிமிடத்துக்கு முன்னதாக வந்து புதிய சாதனை படைத்துள்ளது. நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க்கில் இருந்து இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு நார்வேயன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ‘போயிங் 787-9 டிரீம் லைனர்’ விமானம் புறப்பட்டு சென்றது. அந்த விமானம் அதிவேகமாக பறந்து 5 மணி 13 நிமிடத்தில் சென்றடைந்தது. பொதுவாக இது 6 மண…
-
- 8 replies
- 659 views
-
-
நியூயார்க் இசை-நாடக அரங்கில் தூவப்பட்ட மர்ம தூள் மனித சாம்பலா? அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள பிரசித்தி பெற்ற மெட்ரோபொலிட்டன் ஓபரா ஹவுஸ் என்ற இசைநாடக அரங்கில் சனிக்கிழமையன்று (நேற்று) பார்வையாளர்களில் ஒருவர் தகன சாம்பல் என்று சந்தேகிக்கப்படும் தூளை அவ்வரங்கில் இருந்த இசை குழுவின் மீது தெளித்த பிறகு, அவ்வரங்கத்தில் நடைபெற வேண்டிய பிற்பகல் காட்சி நிறுத்தப்பட்டது. ஓபரா ஹவுஸ் கியோம் டெல் என்ற இசைக்குழுவின் நிகழ்ச்சி இடைவேளையின் போது இந்த சம்பவம் நடந்துள்ளது. இதனால், இது குறித்து சோதனை நடத்த தீவிரவாத எதிர்ப்பு பிரிவுகள் இந்த அரங்கு அமைந்துள்ள லிங்கன் மையத்துக்கு வந்தன. இந்த சம்பவம் நடைபெற்ற போது , அரங்கில் இருந்த ஒரு நபர் தனத…
-
- 0 replies
- 380 views
-