உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26725 topics in this forum
-
ஆப்கானிஸ்தானில் நேட்டோவினால் வழிநடத்தப்படும் சர்வதேச பாதுகாப்புப் படைப் பிரிவான ISAF மூத்த தலிபான் தலைவர் ஒருவரைக் கைது செய்துள்ளனர். இவர் ஆப்கானின் தென் மாகாணங்களான ஹெல்மான்ட் மற்றும் கன்டஹார் ஆகிய பிரதேசங்களில் தற்கொலைப் போராளிகளுக்குப் பயிற்சி அளித்தவர் எனக் கூறப்படுகின்றது. ஹெல்மான்ட் மாகாணத்தில் உள்ள நாஹ்ர்-ஏ சராஜ் மாவட்டத்தில் வைத்து ஆப்கான் பாதுகாப்புப் படையினரும் நேட்டோவும் நடத்திய கூட்டுத் தாக்குதலில் ஏனைய போராளிகளுடன் சேர்த்து இவர் கைது செய்யப் பட்டுள்ளார். நீண்ட நேரத்துக்கு நிலவிய துப்பாக்கிச் சமரின் பின்னர் இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டது. இதனையடுத்து இராணுவத்தின் கஸ்டடியில் இவர் வைக்கப் பட்டுள்ளார். மேலும் இவர் தலிபான் தற்கொலைப் போராளிகளுக்கு மூத…
-
- 0 replies
- 282 views
-
-
சிரிய அதிபரை எதிர்த்து அந்நாட்டில் மக்கள் போராட்டம் நடந்து வருகிறது. இப்போராட்டத்தால் இதுவரை 70 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். சிரியாவில் நடந்து வரும் அரசுக்கு எதிரான போரில் ராணுவத்திற்கும், போராட்டக்காரர்களுக்கும் இதுவரை நடந்த சண்டையில் மொத்தம் 70 ஆயிரம் அப்பாவி மக்கள் பலியாகி உள்ளனர். அதனால் சிரிய மக்கள் தங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள லெபனான் மற்றும் அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். சிரியாவில் இருந்து வெளியேறி மற்ற அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்தவர்கள் சுமார் 2 லட்சம் மக்கள். 4 லட்சத்து 28 ஆயிரம் பேர் லெபனான் நாட்டில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளதாக அகதிகளுக்கான ஐ.நா. உயர்மட்ட குழு தெரிவித்துள்ளது. இவர்க…
-
- 0 replies
- 452 views
-
-
சீனாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் குறைந்த பட்சம் 72 பேராவது உயிரிழந்திருக்ககூடுமென அஞ்சப்படுகிறது. ரிக்டர் அளவில் 6.6 ஆக பதிவாகியிருக்கும் இந்த நிலநடுக்கத்தில் 600 மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். சீனாவின் தென்மேற்கில் சிசூயான் மாகாணத்தில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் சுமார் 20 வினாடிகளுக்கு மேல் பூமி குலுங்கியது. நிலநடுக்கம் காரணமாக வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்தன. இதனால் ஏராளமானோர் இடிபாடுகளில் சிக்கினர். தகவல் அறிந்ததும் மீட்பு படையினர் விரைந்து வந்து தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர். சீனாவின் லூஷான் நகரை மையமாக கொண்டு பூமிக்கு அடியில் 12 கி.மீட்டர் ஆழத்தில் உருவாகியுள்ள இந்த நிலநடுக்கம் யான் நகரம் மற்றும் அதை சுற்றியுள்ள …
-
- 4 replies
- 406 views
-
-
நாளை மறுநாள் நாடாளுமன்றம் கூட உள்ளது. எதிர்க்கட்சிகளைச் சமாளிப்பது குறித்து காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாகாந்தி கட்சியின் முக்கியத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். மத்திய அரசின் பட்ஜெட் தொடரின் இரண்டாவது கட்ட கூட்டத் தொடர் வரும் திங்கட் கிழமை துவங்க உள்ளது. இந்தக் கூட்டத்தில் எதிர்க் கட்சித் தலைவர்கள் நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல், நிலம் கையகப்படுத்துதல் மசோதா ஆகிய விவகாரங்களை எழுப்ப எதிர்கட்சிகள் திட்டமிட்டுள்ளன எனத் தெரிகிறது. டெல்லியில் நேற்று கூடிய இடது சாரி கட்சிகள் நிலம் கையகப்படுத்துதல் மசோதாவில் பிரச்சினை இருப்பதாக கூறியுள்ளன. இந்த நிலையில் எதிர்க் கட்சிகளை நாளை மறுநாள் கூட உள்ள நாடாளுமன்றத்தில் எப்படி சமாளிப்பது என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி முக்கியத் …
-
- 0 replies
- 432 views
-
-
பாஸ்டன் குண்டுவெடிப்பு தீவிரவாதிகள் இருவரில் ஒருவன் சுடப்பட்டு இறக்க மற்றொருவன் தப்பினான். தப்பியவனை போலீசார் தீவிர தேடுதல் வேட்டைக்குவீட்டுக்கு பின்புறம் படகினுள் பதுங்கியிருந்தவனை பிடித்தனர். சகோதரர்கள் இருவரும் 2002 முதல் அமெரிக்காவில் வசித்துவருகிறார்கள். தீவிரவாதி தங்கியிருந்த இடம் பிடிப்பட்ட தீவிரவாதி http://thavaru.blogspot.co.uk/2013/04/blog-post_20.html
-
- 0 replies
- 703 views
-
-
‘உலகில் ஏழைகள் அதிகம் வாழும் நாடு இந்தியா’ என உலக வங்கியின் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. ஏழைகள் குறித்த உலக வங்கியின் அளவீடு விவாதத்திற்கு உரியது என்பதற்கு அப்பால் வறுமையின் குறியீடு என வர்ணிக்கப்படும் ஆபிரிக்க நாடுகளுடன் ஒப்பிடும் போதுகூட இந்தியாவே உலகில் வறிய நாடு. 1.2 பில்லியன் ஏழைகள் உலகில் வாழ்வதாகவும் இத்தொகையில் மூன்றில் ஒரு பகுதி ‘வல்லரசு’ இந்தியாவில் வாழ்வதாகவும் உலக சாதனைத் தகவலை உலக வங்கி வெளியிட்டுள்ளது. அதாவது உலகம் முழுவதும் வாழும் ஏழைகளில் மூன்றில் ஒருவர் இந்தியாவில் வாழ்கிறார் என்பதே அத் தகவல். அதுவும் நாளொன்றுக்கு 65 இந்திய ரூபாய்கும் குறைவாவ வருமானத்தைக் கொண்டவர்களே எழைகள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தியா முன்னேற்றமடைந்து அன்னிய முதலீடுகளாலும் பல்தேசி…
-
- 5 replies
- 576 views
- 1 follower
-
-
டெல்லியில் பாலியல் பலாத்கார நிகழ்வுகள் தொடர் கதையாகி வரும் நிலையில், அண்டை வீட்டு நபரால் 4 நாட்கள் அடைத்து வைத்து பலாத்காரம் செய்யப்பட்ட 5 வயது சிறுமி உயிருக்கு போராடி வருகிறாள். டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்திற்கு பின்னர், 4 மாதங்களில் மேலும் பல பலாத்கார சம்பவங்கள் நிகழ்ந்துள்ள போதிலும், இந்த சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் மீண்டும் உலுக்கி உள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமி, தான் வசித்து வரும் வீட்டின் தரைதளத்தில் விளையாட சென்றபோது, தரை தளப்பகுதியில் வசித்துவந்த நபர் சிறுமியை வீட்டிற்குள் அடைத்து வைத்து கடந்த 4 நாட்களாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.சம்பவம் நிகழ்ந்த 40 மணி நேரம் கழித்தே அச்சிறுமியின் அழுகுரலை கேட்டு அவளது குடும்…
-
- 7 replies
- 632 views
-
-
“ஹிந்து” என்றால் திருடன் :கருணாநிதிக்கு வந்த சிக்கல் Written by tharsan // April 19, 2013 // Comments Off ”ஹிந்து” என்றால் திருடன் என்று பொருள் இருக்கிறது எனப் பேசிய திமுக தலைவர் கருணாநிதி 4 நாட்களுக்குள் விளக்கம் தர சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மயிலாப்பூர் வேத அறிவியல் மையத்தின் சார்பில் பி.ஆர்.கௌதமன் என்பவர் ஒரு மனுவை தாக்கல் செய்தார். அதில், கடந்த 24.10.2002 அன்று சென்னையில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் ஹிந்து என்றால் திருடன் என்று கருணாநிதி பேசியிருந்தார். இது ஹிந்து மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் படி இருக்கிறது.இதற்கு தகுந்த நடவடிக்கை கோரி மறுநாள் 25.10.2002 அன்று மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். அதன் மீது முதல் தகவல் அறிக்கை …
-
- 0 replies
- 558 views
-
-
தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த புத்தபிட்சு ஒருவர் இலங்கை செல்வதற்கு வழிதெரியாமல் வியாழக்கிழமை ராமேசுவரம் வந்தவரை மத்திய,மாநில உளவுப்பிரிவு அதிகாரிகள் விசாரித்து சென்னைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தாய்லாந்து நாட்டினை சேர்ந்த புத்த பிட்சு பி.ஜெ.எமுராய்.இவர் அவரது நாட்டிலிருந்து இலங்கை செல்ல சென்னை சென்றிருந்த போது அங்கிருந்த சிலர் ராமேசுவரத்திலிருந்து இலங்கைக்கு சுலபமாக செல்ல முடியும் என்று கூறியதைத் தொடர்ந்து அவர் சென்னையிலிருந்து ஓகா எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் ராமேசுவரம் ரயில் நிலையத்துக்கு வந்து சேர்ந்துள்ளார். இவரது வருகையை அறிந்த ராமேசுவரம் ரயில்வே போலீஸார் மத்திய,மாநில உளவுப்பிரிவு போலீஸாரிடம் இவரை ஒப்படைத்தனர்.அவர்கள் விசாரணை செய்து பத்திரமாக மீண்டும் சென்னைக்க…
-
- 5 replies
- 577 views
-
-
ஜெர்மன் பேக்கரி குண்டு வெடிப்பு வழக்கில் தீவிரவாதி மிர்சா ஹிமாயத் பெய்க்குக்கு, புனே விசாரணை நீதி மன்றம் தூக்கு தண்டனை விதித்து உத்தரவிட்டது.மகாராஷ்டிர மாநிலம், புனேயில் உள்ள ஜெர்மன் பேக்கரி என்ற கடையில் கடந்த 2010ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 13ம் தேதி பயங்கர குண்டு வெடித்தது. இதில் 5 வெளிநாட்டினர் உட்பட 17 பேர் கொல்லப்பட்டனர். 64 பேர் காயமடைந்தனர். இது தொடர்பாக பீட் மாவட்டத்தை சேர்ந்த சேர்ந்த மிர்சா ஹிமாயத் பெய்க் என்பவரை 2010 செப்டம்பர் மாதம் 7ம் தேதி போலீசார் கைது செய்தனர். அவரது வீட்டிலிருந்து 1200 கிலோ வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டது. பேக்கரியில் குண்டு வைக்க சதி திட்டம் தீட்டியது, குண்டு வைத்தது ஆகிய குற்றங்களுக்காக பெய்க் மீது புனே செஷன்ஸ் கோர்ட்டில…
-
- 0 replies
- 275 views
-
-
அமெரிக்க அதிபர் ஒபாமா மற்றும் செனட்டருக்கு விஷம் தடவிய கடிதம் அனுப்பிய குற்றவாளியை வளைத்து அதிரடியாக கைது செய்துள்ளது FBI. கைது செய்யப்பட்ட குற்றவாளியிடம் பாஸ்டன் குண்டுவெடிப்பிற்கும் அவருக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் ரகசியமாக விசாரணை செய்யப்பட்டு வருகிறது. கைது செய்யப்பட்ட குற்றவாளியின் பெயர் , Paul Kevin Curtis என்பதாகும். 45 வயதை சேர்ந்த இவர் ரைசின் என்ற கொடிய விஷம் தடவிய கடிதங்களை ஒபாமா, அமெரிக்க செனட்டர் Roger Wicker மற்றும் ஒரு அரசு அதிகாரி ஆகிய மூன்று பேர்களுக்கு அனுப்பியதை விசாரணையில் ஒத்துக்கொண்டார். அவரிடம் மேலும் தீவிரமாக விசாரணை செய்து அமெரிக்க FBI அவருக்கு துணையாக வேறு யாராவது இருந்தார்களா, விஷம் எங்கு வாங்கப்பட்டது போன்ற தகவல்களை பெறும் கோணத்தில் வி…
-
- 1 reply
- 464 views
-
-
அமெரிக்காவில் பாஸ்டன் மராத்தன் போட்டியின்போது நடந்த குண்டுத்தாக்குதல் தொடர்பில் அமெரிக்க காவல்துறையினர் சந்தேகநபர் ஒருவரை இலக்குவைத்து தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். முக்கிய பல்கலைக்கழகம் ஒன்றில் போலிஸ் அதிகாரி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து காவல்துறையினர் பெரும் தேடுதல் நடவடிக்கையை தொடங்கியுள்ளனர். தொடர்புடைய விடயங்கள் துஷ்பிரயோகம், மனித உரிமை, தாக்குதல், வன்முறை பாஸ்டனிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் வாட்டர்டவுன் என்ற இடத்தில் காரொன்றை விரட்டிச் சென்று தாக்குதல் நடத்தியதில் சந்தேகநபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். பாஸ்டன் மராத்தன் குண்டுவெடிப்பு தொடர்பில் வெளியாகியுள்ள படங்களில், வெள்ளைநிற பேஸ்பால் தொப்பியொன்றை அணிந்தவாறு காணப்படும் சந்த…
-
- 22 replies
- 1.2k views
-
-
நீதிபதிகளை சிறைபிடித்த வழக்கு: பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் கைது- நீதிமன்ற காவலில் வைப்பு. இஸ்லாமாபாத்: நீதிபதிகளை கூட்டாக சிறை வைத்தது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப்பின் ஜாமீன் மனுவை இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. இதையடுத்து அவர் இன்று கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் பல ஆண்டுகள் வெளிநாட்டில் இருந்துவிட்டு தற்போது தாய்நாட்டில் நடக்கும் தேர்தலில் போட்டியிட நாடு திரும்பியுள்ளார். தேர்தலில் போட்டியிட அவர் தாக்கல் செய்த வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் முஷாரப் அதிபராக இருக்கையில் 2007ம் ஆண்டு நவம்பர் மாதம் 3ம் தேதி நா…
-
- 1 reply
- 540 views
-
-
திங்கட்கிழமை அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் மாரத்தான் ஓட்டப் போட்டியில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் மூவர் பலியானதுடன் நூற்றுக் கணக்கானோர் காயமடைந்தனர். இக்குண்டு வெடிப்புடன் தொடர்புடைய இரண்டு நபரகளின் படங்கள் புலனாய்வுத் துறையினரிடம் சிக்கியுள்ளன. இதில் அவர்கள் ஓட்டப் போட்டி வீரர்கள் போலவே உடை அணிந்து கையில் சந்தேகத்துக்குரிய பைகளுடன் மாரத்தான் போட்டி முடிவுக் கோட்டில் இருப்பது தென்பட்டுள்ளது. எனினும் FBI இனர் இந்த புகைப்பட ஆதாரங்களை வெளிப்படுத்த மறுத்து விட்டனர். இந்த முக்கிய ஆதாரம் லோர்ட் மற்றும் டேய்லர் திணைக்களக் கடையின் பாதுகாப்பு வீடியோவில் பதிவாகியுள்ளது. யுத்தக் களத்தில் பாவிக்கப் படுவது போல கறுப்பு நிறப் பைகளில் ப்ரஷர் குக்கரில் இடப்பட்டிருந்த குண்டுகள் கிளைம…
-
- 4 replies
- 2.5k views
-
-
பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு சவுதி அரேபியாவில் விதிக்கப்பட்ட மரண தண்டனை நிறைவேற்றப்படுவதைத் தடுக்க, ஒரு மில்லியன் டாலர்கள் தொகையை பொதுமக்கள் நன்கொடை மூலம் திரட்ட பிலிப்பைன்ஸ் அரசு மக்களிடம் கோரிக்கை வைத்திருக்கிறது. பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த தொழிலாளியான ஜோசெலிடொ ஸப்பனட்டா, சவுதி அரேபியாவில் அவர் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளரைக் கொன்றதற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டார். ஆனால் சவுதி அரேபியாவின் சட்டப்படி, கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்துக்கு அவர்கள் கேட்கும் தொகையை தந்துவிட்டால், குற்றம்சாட்டப்பட்டவர் விடுதலை செய்யப்படுவார். இது வரை சுமார் 130,000 டாலர்கள் திரட்டப்பட்டுவிட்டது. சௌதி அரேபிய அரசு இந்தத் தொகையை தருவதற்கான கால அவகாசத்தை நவம்பர் மாதம் வரை…
-
- 0 replies
- 304 views
-
-
பாகிஸ்தானின் முன்னாள் இராணுவ ஆட்சியாளர் பர்வேஸ் முஷாரப்புக்கு வழங்கப்பட்டிருந்த முன்ஜாமீனை ரத்து செய்து, அவரை கைது செய்யும்படி நீதிபதிகள் ஆணை பிறப்பித்தனர். இதைத் தொடர்ந்து நீதிமன்றத்திலிருந்த முஷாரப் அவசர அவசரமாக அங்கிருந்து வெளியேறியிருக்கிறார். நீதிபதிகள் தம்மை கைது செய்யும் உத்தரவு பிறப்பித்ததும் நீதிமன்றத்திலிருந்த முஷாரப், தனது பாதுகாவலர்கள் புடைசூழ அங்கிருந்து வெளியேறினார். அப்போது நீதிமன்றத்தில் பாதுகாப்பு அதிகாரிகளும் இருந்தனர். நீதிமன்றத்திலிருந்து வெளியேறிய முஷாரப், தனது குண்டுதுளைக்காத வாகனத்தில் ஏறி இஸ்லாமாபாத்துக்கு வெளியில் இருக்கும் வலுவான பாதுகாப்பு ஏற்பாடுகள் நிறைந்த தனது பண்ணைவீட்டுக்கு சென்றார். முஷாரப்பை கைதுசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதற்க…
-
- 0 replies
- 399 views
-
-
17 ஏப்ரல், 2013 ஆப்ரிக்காவிலேயே மிகப் பெரிய பணக்காரரானான நைஜீரிய நாட்டின் அலிக்கோ டாங்கோட்டே தமது நாட்டில் ஒரு பெரும் எண்ணெய் சுத்திகரிப்பு தொழிற்சாலையை அமைக்கப் போவதாகக் கூறியுள்ளார். அந்தத் தொழிற்சாலை 2016 ஆம் ஆண்டு வாக்கில் நாளொன்றுக்கு 4,50,000 பீப்பாய்கள் எண்ணெயை சுத்திகரிக்கும் திறன் கொண்டதாக இருக்கும். இது தற்போதைய அளவை விட இரண்டு மடங்கு அதிகமாகும். இந்தச் சுத்திகரிப்பு தொழிற்சாலையை அமைக்க எட்டு பில்லியன் டாலர்கள் ஆகும் என்கிறார் அலிக்கோ டாங்கோட்டே. ஆப்ரிக்காவிலேயே கச்சா எண்ணெயை அதிகமாக உற்பத்தி செய்யும் நாடாக நைஜீரியா இருந்தாலும், அதை முழுமையாக சுத்திகரிக்க முடியாமல், பெரும்பாலும் இறக்குமதிகளையே அந்நாடு நம்பியுள்ளது. அவ்வகையில் இறக்குமதி செய்யப்…
-
- 0 replies
- 501 views
-
-
சுவிட்சர்லாந்தில் புகலிடக் கோரிக்கையாளர் சட்டத் திருத்தம் தொடர்பில் நாடு தழுவிய ரீதியில் வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. புகலிடக் கோரிக்கையாளர் தொடர்பில் சுவிட்சர்லாந்து அரசாங்கம் சட்டத் திருத்தங்களை அறிமுகம் செய்ய ஆர்வம் காட்டி வருகிறது. எனினும், இந்தச் சட்டத் திருத்தங்களுக்கு சவால் விடுக்கும் வகையில் சில கட்சிகள் நாடு தழுவிய ரீதியில் வாக்கெடுப்பு ஒன்றைக் கோரியுள்ளன. இடதுசாரிகட்சிகள், தொழிற்சங்கங்கள், மனித உரிமை அமைப்புக்கள் போன்ற அரசாங்கத்தின் புகலிடக் கோரிக்கையாளர் சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. இந்த புதிய சட்டத் திருத்தத்தின் மூலம், புகலிடக் கோரிக்கையாளர்களை பிரத்தியேகமாக தடுத்து வைத்து, அவர்களின் விண்ணப்பங்கள் விசாரிக்கப்படவுள்ளன. அரசாங்கத்தின் …
-
- 0 replies
- 393 views
-
-
இடிந்தகரையில் இன்று (18-4-2013) பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த பேராசிரியர் புல்லருக்கு அளித்திருக்கும் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி, அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது. ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என சுமார் ஆயிரம் பேர் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில், புல்லர் படத்தை உயர்த்திப் பிடித்து “இந்தியாவில் மரண தண்டனை ஒழிக்கப்பட வேண்டும்..” என்று குழந்தைகள் முழக்கமிட்டனர். -சி.என்.இராமகிருஷ்ணன் http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=97307
-
- 0 replies
- 480 views
-
-
டொரண்டோவில் பள்ளிக்குழதைகளை ஏற்றிச்சென்ற ஒரு மினிவேன் திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தீவிபத்திற்கு என்ன காரணம் என தெரியாமல் வேன் உரிமையாளரும், தீயணைப்புத்துறையினரும் திகைத்து உள்ளனர். இன்று காலை டொரண்டோவின் Elvina Bujari என்பவர் தன்னுடைய மகளையும், பக்கத்து வீட்டு குழந்தைகளையும் தன்னுடைய காரில் அருகில் உள்ள பள்ளிக்கு செல்வதற்காக தனது மினிவேன் வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். வேன் சிறிது தூரம் சென்றதும் திடீரென வேனின் பின் புறத்தில் இருந்து புகை வருவது கண்டு திடுக்கிட்டார். பின்னர் உடனே குழந்தைகளை கீழே இறக்கி பாதுகாப்பாக தள்ளி நின்றார். சிறிது நேரத்தில் மினிவேன் தீப்பிடித்து எரிந்தது. பின்னர் Elvina Bujari, 911 என்ற எண்ணிற்கு தொலைபேசியில் தகவல் கொடுத்தார்.…
-
- 0 replies
- 432 views
-
-
கனடாவின் பிரபல பாடகி Rita MacNeil, காலமானார். அவருக்கு வயது 68. இவர் கனடா நாட்டு மக்களை தன்னுடைய இனிய குரலின் மூலம் கவர்ந்து, பல விருதுகளை வாங்கி குவித்தவர். இவர் சிறிது காலம் உடல் நலம் குன்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. ஆனாலும் அவருடைய உடல்நிலை சீரடையாத காரணத்தால் அவர் ஏப்ரல் 16ஆம் தேதி மாலையில் காலமானார். இவர் பாடிய 10 ஆல்பங்கள் தங்கம், மற்றும் பிளாட்டினம் விருதுகளை பெற்றுள்ளது. Neil and Catherine என்ற தம்பதிகளுக்கு எட்டாவது குழந்தையாக பிறந்த Rita MacNeil,சிறுவயதில் மிகுந்த வறுமையில் வாடியவர். தன்னுடைய சுயவரலாறு புத்தகத்தில் தன்னுடைய இளமைக்கால வறுமை குறித்து மிகவும் நெகிழ்வோடு எழுதியுள்ளார். தன்னுடைய 17வது வயதில்…
-
- 0 replies
- 355 views
-
-
முதன் முறையாக இந்தியாவில் ஐநா விசாரணைக் குழு இந்தியாவில் பெண்கள் மீதான வன்முறை அதிகரித்துள்ளது தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக ஐ.நா. மனித உரிமை பேரவை சிறப்புத் தூதரை அனுப்ப முடிவு செய்துள்ளது. இந்தியாவில் பெண்களுக்கு உள்ள பாதுகாப்பு குறித்து சர்வதேச அளவில் கேள்வி எழும்பியுள்ளதையே ஐ.நா. மனித உரிமை பேரவையின் இந்த நடவடிக்கை வெளிப்படுத்துவதாக உள்ளது. ஏப்ரல் 22-ம் திகதி இந்தியா செல்லும் ஐ.நா. சிறப்புத் தூதர் ரஷிதா மான்ஜோ, 10 நாள்கள் தங்கியிருந்து தில்லியில் உயரதிகாரிகள், சமூக அமைப்பினரை சந்தித்து இந்தியாவில் நிகழ்ந்துள்ள பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து விவரங்களை கேட்டறிகிறார். தமிழகம், ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட பகுதிகளுக்கும் அவர் செல்ல இருக்கிறார். ஐ.நா.…
-
- 0 replies
- 467 views
-
-
அடுத்த ஆண்டு வரவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான சுவாரசியமான கருத்துக் கணிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அடுத்த தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி, காங்கிரஸ் கூட்டணிக்கு இரண்டுக்குமே ஆட்சி அமைக்கும் அளவுக்கு மெஜாரிட்டி கிடைக்காது என்கிறது இந்த கருத்துக் கணிப்பு. டைம்ஸ் ஆப் இந்தியாவின் டைம்ஸ் நவ் தொலைக்காட்சி CVoter ஆகியவை இணைந்து நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக நடத்திய இந்த கருத்துக் கணிப்பு சொல்வது என்னவென்றால், பா.ஜ.க. கூட்டணி, காங்கிரஸ் கூட்டணி இரண்டிலும் இல்லாத பிராந்தியக் கட்சிகளே, மத்திய அரசை தீர்மானிக்கப் போகின்றன. அதற்காக, அனைத்து பிராந்தியக் கட்சிகளும் அல்ல. அ.தி.மு.க. முலாயம் சிங்கின் சமாஜ்வாடி கட்சி, மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ், ஜெகன் மோகன் ரெட்ட…
-
- 6 replies
- 1k views
-
-
அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுக்கு அனுப்பப்பட்ட கடிதமொன்றில் ரிசின் என்னும் விஷப்பொருள் தடவி இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இதேபோல் அமெரிக்காவின் குடியரசு கட்சியை சேர்ந்த ´செனட்´ உறுப்பினர் ரோஜர் விக்கருக்கு வந்த ஒரு மர்ம கடிதத்திலும், இவ்வாறு விஷம் தடவப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. டென்னீசி மாகாணத்தில் உள்ள மெம்பிஸ் நகரில் இருந்து இது தபால் நிலையம் வழியாக அனுப்பப்பட்டிருந்தது. ஆனால், அந்த கடிதத்தை அனுப்பியவரின் முகவரி எதுவும் குறிப்பிடப்படவில்லை. கடிதத்தை பிரித்து படிக்கும் போதும் கையால் நாவில் எச்சில் படுத்தும் போதும் விஷம் உடலில் பரவி மரணத்தை ஏற்படுத்த இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. அமெரிக்காவில் கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-…
-
- 0 replies
- 372 views
-
-
தமிழ்நாட்டை சேர்ந்த தமிழர்கள் இருவர் சிங்கப்பூரில் நான்கு அழகிகளை விபச்சாரத்திற்காக விலைக்கு வாங்கிய குற்றத்திற்காக அதிரடியாக சிங்கப்பூர் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே இவர்கள் இருவரும் பல அழகிகளை வைத்து விபச்சாரம் செய்து கொண்டு வருவதாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இவர் தற்போது விலைக்கு வாங்கிய நான்கு அழகிகளும் சுமார் 20 முதல் 30 வயதை உடையவர்கள். தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்கள் பாலகிருஷ்ணன் தமிழ்ச் செல்வன் (வயது 28), கண்ணையா ஆனந்தபிரபு (25). இருவரும் 4 அழகிகளை விலைக்கு வாங்கி, சிங்கப்பூரில் விபசாரத் தொழில் நடத்தியதாக கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளனர்.இவர்கள் மீதான குற்றம் நிரூபிக…
-
- 0 replies
- 964 views
-