Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ஐ எஸ் கட்டளைக்கு அமைய இராணுவப் பயிற்சி பெற்ற பலரை ஈராக் சிரியா கடவுச்சீட்டுக்களோடு அகதி என்ற போர்வையில் பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளை நோக்கி ஐ எஸ் கமாண்டர்கள் அழிவு நோக்கம் கருதி அனுப்பி வருவதாக புலனாய்வு அமைப்புக்கள் எச்சரித்துள்ளன. மேலும்.. தற்போது நிகழ்ந்து வரும் பெரும் குடியேற்றவாசிகளின் வருகையில் சம்பந்தப்பட்டுள்ளவர்களில் 10 இல் 6 பேர் பொருண்மிய அகதிகள் என்றும் அவர்கள் போரால் அல்லது அரசுகளால் நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்கள் அல்ல என்றும் இப்படியானவர்கள் அகதி அந்தஸ்துக்கே விண்ணப்பிக்க அருகதை அற்றவர்கள் என்றும்.. இந்த குடியேற்ற வருகையை கண்காணித்து வரும் நிபுணர்கள் தந்த சமீபத்திய அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. http://www.msn.com/en-gb/news/uknews/isil-exp…

  2. அகதி முகாம்களின் அவலநிலை விடைகொடு எங்கள் நாடே... பனைமரக் காடே.. பறவைகள் கூடே... மறுமுறை ஒருமுறை பார்ப்போமா?_ புலம்பெயர் வாழ்வின் துயரங்களை வலியோடு பதிவு செய்த பாடல் இது. இதோ மறுபடியும் இலங்கையில் யுத்தம் ஆரம்பமாகிவிட்டது. உயிர்பயம் உந்தித்தள்ள, தங்களின் ஆதி சொந்தங்களைத் தேடி, கள்ளத்தோணியில் கடல் கடந்து, அகதிகளாகத் தமிழ்நாட்டுக்கு வந்து கொண்டிருக்கிறார்கள் இலங்கைத் தமிழர்கள். நாளுக்கு நாள் அகதிகளின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டேயிருக்கிறத

    • 0 replies
    • 726 views
  3. அகதிகளான அழகு குழந்தைகள்... வாழும் இடத்தை பாருங்கள்! பிரான்ஸ் நாட்டின் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள அகதிகள் சேறு, சகதிகளுக்கு இடையில் மிகவும் மோசமான சூழ்நிலைகளில் வாழ்ந்து வரும் தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிரியா மற்றும் ஈராக்கில் நடைபெற்று வரும் உள்நாட்டு போர் காரணமாக பாதிக்கப்பட்ட அகதிகள் பிரித்தானியா செல்வதற்காக ஐரோப்பாவை நோக்கி படையெடுக்கின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் பிரான்ஸ் எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டு அங்குள்ள முகாம்களில் தங்க வைக்கப்படுகின்றனர். இந்நிலையில் அவர்கள் மிகவும் மோசமான சூழ்நிலைகளில் வாழ்வதாக தகவல் வெளியாகியுள்ளது. வடக்கு பிரான்ஸில் உள்ள டுன்கிர்க் (Dunkirk) நகரில் பலத்த மழை மற்றும் காற…

  4. அகதிகளின் உடைமைகளைக் கைப்பற்றும் டென்மார்க் சட்டத்திற்கு எதிர்ப்பு டென்மார்க்குக்கு வரும் சுமார் 2000 அகதிகளுக்கான முகாம்கள் தயார் டென்மார்க்கை ஆளும் மையவாத வலதுசாரிக் கட்சியான வென்ஸ்ட்ரே கட்சியின் மூத்த உறுப்பினர் ஒருவர் அந்த கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார். அகதிகளுக்கு எதிராக டென்மார்க் அரசு கொண்டுவரும் கடுமையான விதிகளை எதிர்த்தே அவர் கட்சியில் இருந்து விலகுவதாக கூறியுள்ளார். ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருக்கும் ஜென்ஸ் ரோத், டேனிஷ் சோஷியல் லிபரல் கட்சியில் இணையப்போவதாகவும் தெரிவித்துள்ளார். டென்மார்க்கை ஆளும் சிறுபான்மை அரசாங்கம் குடியேறிகள் தொடர்பான கடும்போக்கு நிலைப்பாட்டைக் கொண்டிருக்கும் மக்கள் கட்சியின் ஆத…

  5. அகதிகளின் குற்றச்சாட்டை ஏற்க முடியாது; அவுஸ்திரேலிய அரசாங்கம் இலங்கை அகதிகளின் கோரிக்கையாளர்கள் தொடர்பில் தமது நாட்டுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை ஏற்றுக் கொள்ள முடியாது என தென்னிந்தியாவிலுள்ள அவுஸ்திரேலியா தூதரக பிரதிநிதி சீன்கெலி தெரிவித்துள்ளார். சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு வரும் நபர்கள் தொடர்பில் அவுஸ்திரேலியா கடுமையான கொள்கைகளை கடைப்பிடித்து வருகிறது. கடந்த சில வருடங்களில் சுமார் 1200 பேர் கடல் வழியாக சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குள் பிரவேசிக்க முற்பட்டுள்ளனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எவ்வாறாயினும் அகதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் எழுந்துள்ள குற்றச்சாட்டு உண்மையானது என நிரூபிக்கப்பட்டால், அவர்களை நாவுரு தீவில் குடியேற…

  6. அகதிகளின் பிரவேசத்தை தடுக்க புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தும் ஒஸ்திரியா [ Thursday,18 February 2016, 04:36:52 ] ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஒஸ்திரியா சட்டவிரோதமான முறையில் மேற்கொள்ளப்படும் புகலிடக் கோரிக்கையாளர்களின் பிரவேசங்களை தடுப்பதற்கு புதிய திட்டமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கமைய ஒரு நாளைக்கு 80 பேரது புகலிட விண்ணப்பங்களை பரிசீலனைக்காக ஏற்றுக்கொள்ள அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்தப் புதிய திட்டத்தை நாளை வெள்ளிக்கிழமை முதல் அமுல்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக ஒஸ்திரியாவின் உள்விவகார அமைச்சர் ஜோஹன்னா மிக்குள் லைட்னர் (Johanna Mikl-Leitner) தெரிவித்துள்ளார். சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்களை தடுப்பதற்குரிய…

  7. அகதிகளின் மரணங்களைத் தவிர்ப்பது எப்படி? ஆபத்தான பயணங்களைத் தடுக்க, அகதிகளுக்கான போக்குவரத்து உதவிகள் வழங்குவதை முதலில் நிறுத்த வேண்டும் பரந்துவிரிந்த கடல். அருகில் அடிவானம். கடலில் இருக்கும்போது உங்களால் எந்தத் தொலைவையும் அறிய முடியாது. ஒவ்வொரு அடி உயரும்போதும் அடிவானம் விலகுகிறது. கடல் எல்லைக்கு மேல் ஐந்து அடிக்கு மேல், ஒரு மிதவையில் நின்றுகொண்டிருக்கிறீர்கள் - கரையிலிருந்து மூன்று மைல்களுக்கு அப்பால். மூழ்கிக்கொண்டிருக்கும் உங்கள் படகிலிருந்து, லிபியாவை உங்களால் பார்க்க முடியும்; மீட்புக் குழுவினரின் வருகையையும். அக்டோபர் மாதத்தின் தொடக்கத்தில், உதவிக் குழுக்களும் இத்தாலியக் கடல் காவல் படையினரும் லிபியா…

  8. அகதிகளின் வழக்குளை விசாரிக்க அவுஸ்திரேலியாவின் எந்த நீதிமன்றத்துக்கு அதிகாரம்? 32 Views அவுஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பில் வைக்கப்பட்டிருந்த அகதிகள்/தஞ்சக்கோரிக்கையாளர்கள் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டு வந்த நிலையில், அது தொடர்பான வழக்குகளை விசாரிப்பதில் அவுஸ்திரேலியாவின் எந்த நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளது என்ற விவாதம் மேலெழுந்துள்ளது. இது தொடர்பான அவுஸ்திரேலிய அரசின் முறையீட்டில், புலம்பெயர்வு சட்டத்தின் அடிப்படையில் தஞ்சக்கோரிக்கையாளர்கள் தொடர்பான விவகாரங்களை அவுஸ்திரேலிய உயர் நீதிமன்றத்தில் மட்டுமே விசாரிக்கப்பட்ட வேண்டும் என்ற வாதம் முன்வைக்கப்பட்டிருந்தது. இம்முறையீடு தொடர்ந்து அவுஸ்திரேலிய உயர் நீத…

  9. அகதிகளுக்காக கண்கலங்க முடியாது: அவுஸ்திரேலியா படகில் வரும் அகதிகளுக்காக அவுஸ்திரேலியா கண்கலங்க முடியாது என அவுஸ்திரேலியாவின் பிரதமர் மல்கொம் டேர்ண்புல் இன்று வியாழக்கிழமை (28) தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவுக்கு வெளியேயுள்ள செயற்பாட்டு முகாமை மூடவும் என பப்புவா நியூ கினி உத்தரவிட்டமையை அடுத்து, டேர்ண்புல்லின் குடியேற்றக் கொள்கை சிக்கலுக்குள்ளாகிய மறுதினமே மேற் படி கருத்து வெளியாகியுள்ளது. எதிர்வரும் வாரங்களில் தேர்தலை எதிர்கொள்ள எதிர்பார்த்துள்ள மல்கொம் டேர்ண்புல், படகின் மூலமாக வந்தடைந்த உண்மையாக அகதிகளை அவுஸ்திரேலியாவில் குடியேற்றுவதாலும், மேலும் பலர் ஆபத்தான பயணத்தைத் தொடர ஊக்குவிப்பதாக அமையும் எனத் தெரிவித்துள்ளார். ஆட்…

  10. அகதிகளுக்கான மருத்துவ உதவிக்கு தடைப்போடும் அவுஸ்திரேலியா அவுஸ்திரேலியாவுக்கு படகு வழியாக செல்ல முயற்சித்த அகதிகள் மனுஸ் மற்றும் நவுருத்தீவில் உள்ள முகாம்களில் பல ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு தங்கியுள்ள அகதிகளுக்கு மேலதிக மருத்துவ உதவிகள் தேவைப்படும் பட்சத்தில் அவர்களை மருத்துவர்கள் பரிந்துரையின் அடிப்படையில் அவுஸ்திரேலிய வைத்தியசாலைக்கு அனுப்ப, மருத்துவ வெளியேற்ற சட்டம் அனுமதிக்கின்றது. தற்போது, அதனை நீக்கும் விதமாக பாராளுமன்றத்தில் ‘புலம்பெயர்வு சட்ட திருத்த மசோதாவை’ ஆளும் லிபரல் கூட்டணி அரசு சமர்பித்துள்ளது. மனுஸ் மற்றும் நவுருத்தீவில் உள்ள மருத்துவ வசதி அகதிகளுக்கு தேவையான மருத்துவ உதவியை வழங்கும் விதத்தில் இல்லை என்பது நிரூபணமாகியுள…

  11. அகதிகளுக்கு உதவ ஆஸியின் விக்டோரியா மாநிலம் முன்வந்துள்ளது ஆஸ்திரேலியாவில் 260க்கும் அதிகமான தஞ்சக் கோரிக்கையாளர்களுக்கு தாங்கள் அடைக்கலம் அளிப்பதாக விக்டோரியா மாகாண அரசாங்கம் தெரிவித்துள்ளது. அகதிகளுக்கு ஆதரவாக விக்டோரியா மாநில முதல்வர் குரல் கொடுத்துள்ளார் அவர்கள் பசிஃபிக் பெருங்கடலிலுள்ள ஆஸ்திரேலிய அரசின் குடிவரவு மையங்களுக்கு அனுப்பப்படவிருந்த நிலையில், விக்டோரியா மாகாணத்தின் இந்த அறிவிப்பு வந்துள்ளது. இவர்களை நவ்ரூ தீவுக்கு அனுப்ப வேண்டாம் என ஆஸ்திரேலியப் பிரதமருக்கு, விக்டோரியா மாநில முதல்வர் டானியேல் ஆண்ட்ரூஸ் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அவர்கள் அங்கு அனுப்பப்பட்டால், உடல் மற்றும் மனரீதியான பெரும் தாக்கங்களுடன் கூடிய வாழ்க்கையை எதிர…

  12. அகதிகளுக்கு உதவ தொண்டர் அமைப்புகளுக்குத் தடை விதிக்கக் கூடாது உகந்த அரசியல் தீர்வு காணாவிடில் முந்திய வரலாறு மீண்டும் திரும்பும்! ஐ.நா. பொதுச்செயலாளர் மூன் எச்சரிக்கிறார் [24 மே 2009, ஞாயிற்றுக்கிழமை 9:00 பி.ப இலங்கை] இலங்கையில் வாழும் சிறுபான்மையின மக்களின் பிரச்சினைக்கு உகந்த அரசியல் தீர்வு காணப்படவேண்டும். அதன் மூலம் அவர்களிடம் நம்பிக்கையை கட்டி எழுப்ப வேண்டும் .இல்லையேல் இந்த நாட்டில் முந்திய வரலாறு மீண்டும் வரும் நிலையேஉருவாகும். இவ்வாறு எச்சரிக்கும் தொனியில் கருத்து வெளியிட்டிருக்கிறார் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன். போரினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள முகாம்களுக்கு தொண்டர் நிறுவனங்கள் செல்வதற்கு எந்தவித தடையும் …

  13. அகதிகளுக்கு புகலிடம் வழங்குவது தொடர்பில் சுவிஸில் வாக்குப்பதிவு! விரைவில் திகதி அறிவிப்பு! [ புதன்கிழமை, 20 சனவரி 2016, 01:12.18 AM GMT ] சுவிட்சர்லாந்து நாட்டில் அகதிகளுக்கு புகலிடம் அளிப்பது தொடர்பாக இறுதி வாக்கெடுப்பை பொதுமக்கள் மத்தியில் நடத்தவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. எதிர்வரும் சில மாதங்களில் சுவிட்சர்லாந்து நாட்டில் இரண்டு முக்கிய சட்டங்கள் அமுல்படுத்தப்பட உள்ளன. அவை அந்நாட்டின் பிரதான கட்சிகள் முன்வைத்த கோரிக்கைகளாகும். முதலாவதாக, அந்நாட்டின் மிகப்பெரிய கட்சியான சுவிஸ் மக்கள் கட்சி முன்வைத்துள்ள கோரிக்கையாகும். சுவிஸில் புகலிடம் கோரி வரும் அகதிகளை அரசு கட்டிடங்களில் தங்க வைக்கக் கூடாது. மேலும், அகதிகளுக்கு இலவசமாக சட்ட ஆ…

  14. அகதிகளுக்கு மருத்துவம் வழங்கும் சட்டம் நீக்கம்: ஆஸ்திரேலிய முகாம்களில் அகதிகள் நிலை என்ன ? ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம்களில் உள்ள அகதிகளை ஆஸ்திரேலியாவுக்கு அழைத்து சென்று மருத்துவ உதவி வழங்குவதற்கு வழிசெய்த ‘மருத்துவ வெளியேற்றச் சட்டம்’ நீக்கப்பட்டுள்ளது. இந்த நீக்கம், உடல்நலம் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட அகதிகளின் நிலைக் குறித்து அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பப்பு நியூ கினியா மற்றும் நவுரு ஆகிய தீவு நாடுகளில் ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம்கள் செயல்பட்டு வருகின்றன. நவுரு முகாம்களில் உள்ள அகதிகளை, மருத்துவ வெளியேற்றச் சட்டத்தின் கீழ் ஆஸ்திரேலியாவுக்குள் அனுமதிக்கலாம் என ஆஸ்திரேலியா அனுமதி வழங்கியிருந்த நிலையிலும் நவுரு அரசு அகதிகளை செ…

  15. ராமேஸ்வரம்: இலங்கையிலிருந்து ராமேஸ்வரம் வந்த அகதிகளுடன் ஊடுருவிய ஈரானியர்கள் குறித்து புலனாய்வுத் துறையினர் விசாரித்து வருகின்றனர். இலங்கை வவுனியா மற்றும் மன்னாரைச் சேர்ந்த 14 அகதிகள் நேற்று முன்தினம் ராமேஸ்வரம் வந்தனர். தனுஷ்கோடி போலீசார் விசாரித்ததில், "அகதிகளுடன் ஈரான் நாட்டைச் சேர்ந்த இருவர், இலங்கையிலிருந்து படகில் வந்தது தெரியவந்தது. இதில் ஒருவர் கிட்னி பாதிக்கப்பட்டு வீல்சேரில் வந்துள்ளார். இருவரையும் போலீசார் விசாரித்தனர். ஈரான் நாட்டில் உள்ள கரேஜ் பகுதியைச் சேர்ந்த அசிசுல் சுல்லா குஸ்நிஷான்(75), முகமது உசேன் காதீர்(58) என்பது தெரியவந்தது. பாகிஸ்தான் வழியாக இந்தியா வந்து இலங்கை சென்றதாக கூறினர். இவர்கள் கொண்டு வந்த சூட்கேஸ் மற்றும் பைகளை போலீசார் சோதனை செய்தத…

    • 3 replies
    • 1.3k views
  16. சிரியா, லெபனான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு தஞ்சம் அடைய அகதிகள் வந்த வண்ணம் உள்ளனர். இந்த நிலையில் 26 ஐரோப்பிய நாடுகளும் 50 ஆயிரம் அகதிகளை ஏற்றுக் கொண்டு அவர்களை தங்க அனுமதிக்க வேண்டும் என ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.அதை ஏற்று சுவிட்சர்லாந்து அரசு அகதிகளை எற்று தங்கவைத்துள்ளது. இந்த நிலையில் 10 அகதிகளை அங்குள்ள ஒபாவில்-லியவி என்ற கிராமத்தில் தங்க வைக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் அகதிகளை ஏற்க அக்கிராமத்தினர் மறுத்து விட்டனர். எனவே, அக்கிராமத்துக்கு ரூ.2 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அங்கு மொத்தம் 2,200 பேர் தங்கியுள்ளனர். அவர்களில் 300 பேர் கோடீசுவரர்கள்.அவர்கள் அகதிகள் வருகையை விரும்பவில்லை. கடுமையாக உழைத்து இக்கிராம…

  17. 23 Oct, 2025 | 11:04 AM பொருளாதாரம் மற்றும் சிறந்த வாழ்வாதாரத்தை நாடி ஐரோப்பிய நாடுகளுக்குச் சட்டவிரோதமாகக் கடல் வழியாகப் பயணித்த 40 பேர் படகு விபத்தில் உயிரிழந்தனர். ஆபிரிக்க நாடுகளைச் சேர்ந்த இந்த அகதிகள், மத்திய தரைக்கடல் பகுதியில் துனிசியா அருகே பயணித்தபோது இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஆபிரிக்க நாடுகளைச் சேர்ந்த 70க்கும் மேற்பட்டோரை ஏற்றிச் சென்ற ஒரு படகு, மத்திய தரைக்கடல் வழியாக ஐரோப்பிய நாடுகளுக்குப் புறப்பட்டது. துனிசியா நாட்டின் மஹ்தியா நகர் அருகே நடுக்கடலில் சென்றுகொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக அந்தப் படகு விபத்துக்குள்ளாகி கவிழ்ந்தது. இந்த விபத்து குறித்து தகவலறிந்த துனிசியா கடற்படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டன…

  18. அகதிகளை கைவிடும் ஐரோப்பா! மத்தியத் தரைக்கடல் பகுதியில் மூன்று வெவ்வேறு சம்பவங்களில் மூன்று படகுகள் கவிழ்ந்து, சுமார் 700 பேர் உயிரிழந்திருப்பது மிகுந்த வேதனையை அளிக்கிறது. கடல் பயணத்துக்குத் தகுதியில்லாத படகுகளில் செல்வது உயிருக்கு ஆபத்தானது என்று தெரிந்தும், ஆயிரக்கணக்கான மக்கள் பெண்கள், குழந்தைகளுடன் தங்களுடைய தாய்நாட்டை விட்டு முகம் தெரியாத மக்கள் வாழும் வேற்று நாடுகளுக்கு ஓடிக்கொண்டிருக்கிறார்கள். இடைத் தரகர்களை நம்பித் தங்கள் உயிரைப் பணயம் வைக்கிறார்கள். கடந்த ஆண்டு மட்டும் 3,700 அகதிகள் கடலில் மூழ்கி இறந்திருக்கிறார்கள். இந்த ஆண்டு இதுவரையில் 2,000 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். மேற்கு ஆசிய, வடக்கு ஆப்பிரிக்க நாடுகளில் நிலவும் உள்ந…

  19. சிரியா மற்றும் ஈராக் நாடுகளில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு பயந்து சிரியாவின் கொம்பானி நகரில் இருந்து கடந்த ஆண்டு துருக்கி சென்ற அப்துல்லா குர்தி என்பவர், தனது மனைவி ரெஹான், மூத்த மகன் காலிப்(வயது 5), இளைய மகன் அய்லான்(3) ஆகியோருடன் கனடா நாட்டில் அடைக்கலம் புக அனுமதி கேட்டார். அது நிராகரிக்கப்பட்டது. இதனால் கிரீஸ் நாட்டுக்கு கள்ளப்படகில் சென்று அங்கிருந்து ஏதாவது ஒரு ஐரோப்பிய நாட்டில் தஞ்சம் புகுந்தவிடலாம் என்று கருதினார். இதன்படி கள்ளப் படகில் பயணமானார் குர்தி. ஆனால் எதிர்பாராத விதமாக அவரது குடும்பம் கடலில் மூழ்கி பலியாகியது. அதில் அவரது மூன்று வயது மகன் அய்லான் கடற்கடையில் பிணமாக ஒதுங்கியது அனைவரது மனதையும் உருக்கிறது. இந்த படம் வெளி…

  20. அகதிகளை நாடுகடத்துவதற்கு அவுஸ்திரேலியன் எயர்லைன்ஸ் உதவக்கூடாது- மாயா வேண்டுகோள் இலங்கை அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்களை பலவந்தமாக நாடு கடத்தும் அவுஸ்திரேலியா அரசாங்கத்தின் நடவடிக்கைளிற்கு அவுஸ்திரேலியன் எயர்லைன்ஸ் விமானசேவை உதவக்கூடாது என எம் ஐ ஏ அழைக்கப்படும் ரப் இசைப்பாடகி மாதங்கி( மாயா ) அருள்பிரகாசம் வேண்டுகோள் விடுத்துள்ளார் கடந்த சில வாரங்களில் 12 இலங்கையர்களையும் ஒரு ஈராக்கிய பிரஜையையும் அவுஸ்திரேலிய அரசாங்கம் நாடு கடத்தியுள்ள நிலையிலேயே அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். அவர் இது குறித்து கார்டியனிற்கு தெரிவித்துள்ளதாவது அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரும் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் நடத்தப்படும் விதம…

  21. சிரியாவில் உள் நாட்டு போர் காரணமாக அங்கிருந்து மக்கள் அகதிகளாக வெளியேறுகின்ற நிலையில், அவர்களுக்கு நிம்மதியான மகிழ்ச்சிகரமான வாழ்வை அமைத்து கொடுக்க எகிப்து கோடிஸ்வரர் ஒருவர் கிரேக்கம் அல்லது இத்தாலியில் ஒரு தீவை விலைக்கு வாங்கி அதில் சிரியா அகதிகளை குடியேற்ற திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உள்நாட்டு போர் நடைபெறும் சிரியாவில் இருந்து மக்கள் அகதிகளாக வெளியேறி ஐரோப்பிய நாடுகளுக்கு செல்கிறார்கள். அவர்களை ஏற்க சில நாடுகள் மறுத்து வருகின்றன. இதனால், மத்திய தரைக்கடலில் செல்லும் போது படகுகள் கடலில் மூழ்கி ஏராளமான அகதிகள் மரணம் அடைகின்றனர். ஹங்கேரியில் இருந்து மற்ற நாடுகளுக்கு செல்லவிடாமல் அகதிகள் தடுத்து நிறுத்தப்பட்டனர். சிரியா அகதிகளுக்கு இது போன்று பல்வேறு பிரச்ச…

  22. அகதிகளை விரட்டும் ஐரோப்பிய நாடுகள்: குளிரில் நூற்றுக்கணக்கானோர் பரிதவிப்பு மேசிடோனியா எல்லையில் நூற்றுக்கணக்கான அகதிகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். தாங்கள் கடந்து செல்ல அனுமதிக்குமாறு பாதுகாப்பு படையினரிடம் அகதி ஒருவர் மண்டியிட்டு வேண்டுகிறார். படம்: பிடிஐ பாரீஸ் தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து ஐரோப்பிய நாடுகள் அகதிகளை தடுத்து நிறுத்தி விரட்டுவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. உள்நாட்டுப் போர் நடைபெறும் சிரியா, இராக், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து லட்சக்கணக்கான அகதிகள் ஐரோப்பிய நாடுகளில் தஞ்சமடைந்து வருகின்றனர். கடல்மார்க்கமாக துருக்கி மற்றும் கிரேக்கத்தின் தீவுப் பகுதிகளில் கரையேறும் அகதிகள் அங்க…

  23. அகதிகளைப் பரிமாற்ற பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா திட்டம்! பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஆகிய இரு நாடுகளும் ‘One in, One out‘ எனப்படும் புதிய திட்டத்தின் கீழ், அகதிகளை பரிமாற்றும் முயற்சியை தொடங்கியுள்ளன. இது தொடர்பான உத்தியோக பூர்வ அறிவிப்பு நேற்றைய தினம் வெளியானது. பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் பிரித்தானிய விஜயத்தினை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. சட்டவிரோத குடியேற்றத்தை தடுத்தல் மற்றும் அகதிகளை கட்டுப்படுத்தவே இத் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத் திட்டத்தின் கீழ், சிறு படகுகள் மூலம் இங்கிலாந்துக்குள் சட்டவிரோதமாக நுழையும் அகதிகள் பிரான்ஸுக்கு திருப்பி அனுப்பப்படவுள்ளனர். இதற்குப் பதிலாக, பிரான்ஸில் இருந்து அங்கீகாரம் பெற்ற…

  24. அகதிகள் மீது பிரான்ஸ் பொலிஸார் தாக்குதல் பிரான்ஸ் நாட்டில் கலே பிரதேசத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த அகதிகளின் குடியிருப்புக்களை அகற்றச்சென்ற பொலிஸாருக்கும் அகதிகளுக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டதால் பதற்ற நிலை உருவாகியுள்ளது. சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த கூடாரங்களை அகதி மக்களின் எதிர்ப்பையும் மீறி பொலிஸ் அகற்ற முற்பட்ட வேளையில் இந்த குழப்பநிலை ஏற்பட்டது. இதன்போது, அகதிகள் பொலிஸார் மீது கற்பிரயோகத்தை மேற்கொண்டதிற்கு எதிராக அவர்கள் மீது கண்ணீர் புகை மற்றும் தண்ணீர் தாரை பிரியோகித்தனர். மேலும் 23 அகதிகளை பொலிஸார் கைது செய்துள்ளனர். http://www.virakesari.lk/article/3…

  25. அகதிகள் 50 பேர் அரபிக் கடலில் மூழ்கியுள்ளதாக அச்சம் சோமாலியா மற்றும் எத்தியோப்பிய நாடுகளைச் சேர்ந்த 50 இற்கும் மேற்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் அரபிக் கடலில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. யேமனை நோக்கிப் படகில் பயணித்த அவர்களை கடத்தல்காரர்கள் நடுக்கடலில் விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான அமைப்பு தெரிவித்துள்ளது. குறித்த படகில் எத்தனைபேர் இருந்தார்கள் என்பதை துல்லியமாக கணிப்பிட்டுக் கூற முடியாதுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. யேமனை நோக்கிப் படகு சென்றுகொண்டிருந்த வேளை, பாதுகாப்பு அதிகாரிகள் படகினை அண்மித்து வருவதாகத் தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து புகலிடக் கோரிக்கையாளர்களை பண…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.