Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. அகதிகள் கடத்தல் சந்தேகத்தில் 21 பேர் கைது; இத்தாலி காவல்துறை அதிரடி பழைய கார்களின் தொடரணியை பயன்படுத்தி ஜெர்மனி, ஆஸ்திரியா மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்குள் அகதிகளை கடத்தியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், ஐரோப்பா முழுவதுமுள்ள 21 பேரை, இத்தாலி காவல் துறையினர் கைது செய்திருக்கின்றனர். போலியான நிறுவனங்களின் பெயர்களில் பதிவு செய்த வாகன வலையமைப்பை பயன்படுத்தி, வடக்கு பகுதிக்கு குடியேறிகளை அனுப்புவதற்கு, பயணிக்கு தலா 500 அமெரிக்க டாலருக்கு அதிகமாக இந்த சந்தேக நபர்கள் கட்டணம் வசூலித்திருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர். சரியான ஆவணங்கள் இல்லாத பல குடியேறிகள் இருந்த காரோடு இத்தாலியர் ஒருவர் ஹங்கேரியில் கைது செய்யப்பட்டதை அடுத்து, ஓராண்டுக்கு முன்னர் இந்த ப…

  2. அகதிகள் குறித்து விழிப்புணர்வு: 8 நாடுகளுக்கு நடந்து செல்லும் அமல் இரவு, பகலும் தங்களது பெற்றோர்களுடன் உலகின் ஏதாவது ஒரு முனையில் அகதியாக செல்லும் இளம் குழந்தைகளின் அடையாளமாக மாறியிருக்கிறாள் அமல். குழந்தை அகதிகள் குறித்து உலக நாடுகளுக்கிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக அமல் என்ற சிறுமி வடிவலான பொம்மையை Handspring Puppet Company வடிவமைத்துள்ளது. சுமார் 3.5 மீட்டர் உயரம் கொண்ட அமல், துருக்கி – சிரியா எல்லையிலிருந்து மான்செஸ்டர்வரை நடந்தே பயணம் செய்ய இருக்கிறாள். அதாவது சுமார் 8,000 ஆயிரம் கிலோ மீட்டர். ஜூலை மாதம் தனது பயணத்தை தொடங்கிய அமல் நவம்பர் மாதம் நிறைவு செய்கிறாள். தான் பயணம் செய்யும் 8 நாடுகளின் கலாச்சார விழாக்களிலும்…

  3. அகதிகள் சம்மேளன தலைவராக கல்யாணசுந்தரம் ஜூன் 23, 2006 சென்னை: பாலம் என்ற தன்னார்வத் தொண்டு அமைப்பின் தலைவரான கல்யாண சுந்தரம், சர்வதேச அகதிகள் சம்மேளனத்தின் இந்தியத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னையைச் சேர்ந்த கல்யாண சுந்தரம் பல்வேறு சமூக சேவைப் பணிகளில் ஈடுபட்டுள்ளார். இந் நிலையில் லண்டனைத் தலைமையிடமாகக் கொண்ட சர்வதேச அகதிகள் சம்மேளனத்தின் இந்தியத் தலைவராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். அகதிகள் நல்வாழ்வில் அக்கறை கொண்டவர்களைக் கொண்ட குழுவை அமைத்து அந்தக் குழுவின் ஆலோசனையுடன் கல்யாண சுந்தரம் செயல்படுவார். தமிழகத்தில் இலங்கை அகதிகள் அதிக அளவில் உள்ளனர். தொடர்ந்து வந்தவண்ணம் உள்ளனர். இவர்களின் குறைகள், கோரிக்கைகள், பிரச்சினைகளை மத்த…

  4. அகதிகளின் சுகாதார காப்புறுதி வெட்டுக்களை எதிர்த்தும் இதனை நிறுத்தும் படி மத்திய அரசை கோரியும் கனடிய வைத்தியர்கள் பேரணிகளை நடாத்தினர். “மிகப்பெரிய நாள் நடவடிக்கை” என்ற பெயரில் குறைந்தது 20 கனடிய நகரங்களில் இந்த பேரணி நடாத்தப்படுகின்றன. வைத்தியர்கள், சுகாதார பராமரிப்பு நிபுணர்கள் போன்றவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டதாக கூறப்படுகின்றது. கடந்த வருடம் கூட்டமைப்பு நீதிமன்றம் அகதிகள் சுகாதார காப்புறுதி வெட்டு அரசியலமைப்பிற்கு விரோதமானதென வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ஒட்டாவா மேன்முறையீடு செய்தது. அகதிகள் பராமரிப்பு கனடிய வைத்தியர்கள் குழு அரசின் இந்த மேன்முறையீட்டை கைவிடும் படி ஒட்டாவாவை கேட்டுள்ளது. இந்த மேன்முறையீட்டிற்காக கொன்சவேட்டிவ் அரசாங்கம் 1மில்லியன் டொலர்கள…

    • 0 replies
    • 319 views
  5. அகதிகள் தங்கள் குடும்பத்தைச் சேர்க்கத் தடை! – யேர்மனிய எதிர்க்கட்சி தேர்தல் வாக்குறுதி! 70 Views யேர்மனியின் தீவிர வலதுசாரிக் கட்சி அதன் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டிருக்கிறது. குடியேற்றத்தையும் ஐரோப்பிய ஒன்றியத்தையும் கடுமையாக எதிர்த்துவருகின்ற ஏஎப்டி (Alternative für Deutschland-AfD) கட்சி, எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் 26 ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலுக்கான தனது வாக்குறுதிகளில் அகதிகளுக்கு எதிரான கடும் நிலைப்பாடுகளை அறிவித்துள்ளது. ‘இயல்பான யேர்மனி’ (‘Germany. But normal.’) என்ற அர்த்தம் கொண்ட சுலோகத்தின் கீழ் அக்கட்சி தேர்தல் பிரசாரத்தை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து யேர்மனியை வெளியேற்றுகின்ற டெக்ஸ…

  6. அகதிகள் நிலை: உணர்ச்சிவயப்பட்ட அமைச்சர்கள் கண்கலங்கிய கருணாநிதி இலங்கை அகதிகளுக்காக புதிதாக 50,000 வீடுகளைக் கட்டிக் கொடுக்க வேண்டும் என்று முதல்வர் கருணாநிதியிடம் தமிழக அமைச்சர் குழு பரிந்துரை செய்துள்ளது. இலங்கையிலிருந்து தமிழகம் வரும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இந் நிலையில் அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்களில் அடிப்படை வசதிகள் இல்லை. கட்டடங்கள் பாழடைந்து போய் உள்ளன. அவர்களுக்கு உரிய வசதிகளை தமிழக அரசு செய்து தர வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. இதைத் தொடர்ந்து வீட்டு வசதி வாரியத் துறை அமைச்சர் சுப.தங்கவேலன், இந்து அறநிலையத்துறை அமைச்சர் பெரியகருப்பன் ஆகியோரைக் கொண்ட குழுவை அமைத்த ¬ கருணாநிதி, இருவரையும் அகதிகள் முகாம்களுக்…

  7. அவுஸ்திரேலிய கடற்பரப்புக்கு வரும் சட்டவிரோத அகதிப்படகுகள் தொடர்பிலான தகவல்கள் இனிமேல் வழங்கப்போவதில்லை என்று அவுஸ்ரேலியா அறிவித்துள்ளது. அவுஸ்திரேலியாவுக்கு படகுகள் மூலம் வரும் சட்டவிரோத அகதிகளை திருப்பியனுப்புவது உட்பட்ட நடவடிக்கைகளை அவுஸ்திரேலியாவின் விசேட படையினர் மேற்கொண்டு வருகின்றனர் இந்தநிலையில் அகதிகளை திருப்பியனுப்புவது உட்பட்ட விடயங்களை மனித உரிமை காப்பு அமைப்புக்கள் விமர்சனம் செய்து வருவதால் படகு அகதிகள் தொடர்பான தகவல்களை உடனடியாக வழங்குவதை தவிர்க்கவுள்ளதாக அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொரிசன் தெரிவித்துள்ளார். சட்டவிரோத படகுகளை தடுப்பது அவுஸ்திரேலிய மக்களின் நலன்களை கருத்திற்கொண்டாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்எனவே தேவையேற்படும் போது மாத்திர…

  8. அகதிகள் படகு மூழ்கியதில் 6 குழந்தைகள் உட்பட பலர் பலி துருக்கி கடற்பரப்பில் அகதிகள் படகு ஒன்று மூழ்கியதில் 6 சிறுவர்கள் உட்பட பலர் பலியாகியுள்ளனர். நேற்று முன்தினம் கிரீஸ் நோக்கி புறப்பட்ட அகதிகள் படகு ஒன்றே இவ்வாறு மூழ்கியுள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து 18 சிறுவர்கள் உள்பட 65 பேர் ரப்பர் படகு ஒன்றில் கிரீஸ் நோக்கி புறப்பட்டு சென்றுள்ளனர். இந்நிலையில் படகு திடீரென கடலில் மூழ்கியுள்ளது. தகவல் கிடைத்ததும் விரைந்து வந்த துருக்கி கடற்படையினர் நீரில் தத்தளித்துக்கொண்டிருந்த 45 பேரை மீட்டுள்ளனர். எனினும் 6 குழந்தைகள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதுடன், அவர்களது உடல்களை கடற்படையினர் மீட்டனர். மற்றவர்களின் கதி என்ன ஆனது என தெரியவில்லை. கடந்…

  9. குடியேற்றக்காரர்களை ஏற்றிவந்த படகு ஒன்று லிபிய கடலோரமாக மூழ்கியதில் குறைந்தபட்சம் 650 பேராவது நீரில் மூழ்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகின்றது. குடியேற்றக்காரர்கள் ஐரோப்பாவுக்கு கடல் கடக்கும் நடவடிக்கையில் மிக அதிகமானோர் உயிரிழந்த சம்பவம் இது என்று ஐநாவின் அகதிகளுக்கான நிறுவனம் உறுதி செய்துள்ளது. 20 கப்பல்களும், ஒரு விமானமும் பங்கெடுக்கும் மீட்பு நடவடிக்கையை இத்தாலில் ஒருங்கிணைக்கின்றது. இதுவரை 50 பேர் மாத்திரம் மீட்கப்பட்டிருக்கிறார்கள். அந்த மீன்பிடிப் படகில் இருந்து இன்னுமொரு சரக்கு கப்பலுக்கு ஏறுவதற்காக, அனைவரும் முண்டியடித்துக்கொண்டு படகின் ஒரு புறத்துக்கு நகர்ந்ததால் இந்த விபத்து நடந்ததாக செய்திகள் கூறுகின்றன. http://www.bbc.co.uk/tamil/global/2015/04/150419_li…

    • 0 replies
    • 275 views
  10. அகதிகள் போர்வையில்... தலிபான்கள்: பிரான்ஸ் தீவிர விசாரணை! பிரான்ஸிற்குள் அகதிகள் போர்வையில் சில தலிபான்கள் ஊடுவருவியுள்ளதாக, அந்நாட்டு அதிகாரிகள் சந்தேகம் கொண்டுள்ளனர். கடந்த 18ஆம் திகதி, அபுதாபி விமானநிலையத்தில் இருந்து பரிஸிற்கு விமானம் மூலம் வந்த ஒருவரை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். கடந்த 15ஆம் திகதி காபூல் நகரம் தலிபான்களிடம் வீழ்வதற்குச் சில நாட்களின் முன், இவர் ஆயுதங்களுடன் தலிபான்களின் பக்கம் நின்றிருந்துள்ளமையை பிரான்ஸின் புலனாய்வுப்பிரிவினர் உடனடியாக அவதானித்துள்ளனர். அகதிகள் போல் பிரான்ஸிற்குள் ஊடுருவிய தலிபான் ஆக இவர் இருக்கலாம் என்ற அடிப்படையில், தனிப்பட்ட நிர்வாகக் கண்காணிப்புக் கட்டுப்பாட்டு நடவடிக்கையான MICAS நடவடிக்கையின் கீழ் இவரு…

  11. இந்த வார விருந்தினர் ரவிக்குமார் சட்டமன்ற உறுப்பினர் & விடுதலைச் சிறுத்தைகள் 'விடைகொடு எங்கள் நாடே! கடல் வாசல் தெளிக்கும் வீடே! பனைமரக் காடே, பறவைகள் கூடே, மறுமுறை ஒருமுறை பார்ப்போமா? ' என்கிற ஏக்கம் வழிகிற வரிகளின் அர்த்தம் புரிந்து வருந்தாமல், அதன் இலக்கிய நயத்தை வியந்துகொண்டு இருக்கிறோம் தமிழர்களே! வாழ்க்கையைத் தொலைத்து, வந்தேறிகளாக அவமானப் படுகிறவர்களின் மரணக் கூக்குரல் காற்றில் கலக்கிறது ஊமைப் பேரோசையாக! மேற்கத்திய இசை அலறும் கொண்டாட்டங்களிலும், பெருங்குரலெடுத்து இரையும் இயந்திரங்களின், வாகனங்களின் பரபரப்பிலும், அகதிகளின் அவல விசும்பல்களையும் அழுகைச் சத்தத்தையும் காதுகொடுத்துக் கேட்க யாருக்கு இதயம் இருக்கிறது? இரக்கம், கருணை, மனிதநேயம் போன…

  12. அகதிகள் முகாமில் சிறுமியை துஷ்பிரயோகம் செய்ய முயன்றவருக்கு நையப்புடைப்பு கிறீஸ் நாட்டில் உள்ள ஐடோமெனி அகதிகள் முகாமில் சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்ற நபரை பொதுமக்கள் நையப்புடைத்துள்ளனர். ஆப்பிரிக்கா மற்றும் ஆசிய நாடுகளில் உள்நாட்டு போரால் ஏராளமானோர் ஐரோப்பாவுக்கு செல்கின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் கிரீஸ் நாட்டின் வழியாகவே செல்கின்றனர். கிரீஸில் அண்டை நாடுகள் அகதிகளை ஏற்றுக்கொள்ள தயங்குவதால் ஏராளமான அகதிகள் கிரீஸ் – மெசிடொனியா எல்லையருகே உள்ள அகதிகள் முகாமில் தங்கவைப்பட்டுள்ளனர். தற்போது சுமார் 45 ஆயிரம் அகதிகள் வரை கிரீஸ் நாட்டில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் முகாமை சேர்ந்த அகதி ஒ…

  13. அகதிகள் முகாம் மீது விமான தாக்குதல்- 60 பேர் உயிரிழப்பு உலகம் சினி செய்திகள் ஐக்கிய அரபு அமீரகம் மீது இதுவரை இல்லாத வகையில் தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, ஹவுத்தி இராணுவ இலக்குகளை குறிவைத்து சவுதி கூட்டுப்படை வான் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. ஏமன் நாட்டில் அதிபர் மன்சூர் ஹாதி அரசு படைகளுக்கும் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. இந்தப் போரில் சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைகள் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக வான்வழியாகவும் தரைவழியாகவும் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களும் தாக்குதல் நடத்துகின்றனர். ஐக்கிய அரபு …

    • 3 replies
    • 393 views
  14. அகதிகள் விவகாரத்தில் கடுமையான நிலைப்பாடு பின்பற்றப்படும் – ஜெர்மன் அதிபர் அகதிகள் விவகாரத்தில் கடுமையான நிலைப்பாடு பின்பற்றப்படும் என ஜெர்மன் அதிபர் அன்ஜலா மோர்கல் அறிவித்துள்ளார். மோர்கலின் கன்சர்வேட்டிவ் கட்சி தேர்தலை இலக்கு வைத்து அகதிக் கோரிக்கையாளர் விவகாரம் உள்ளிட்ட சில விடயங்களில் கடுமையான அணுகுமுறைகளை பின்பற்ற உள்ளதாக அறிவித்துள்ளது. குறிப்பாக கௌரவக் கொலை, இரட்டைக் குடியுரிமை, அகதிகளுக்கான புகலிடம் வழங்குதல், பலவந்த திருமணங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் கடுமையான அணுகுமுறை பின்பற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயங்கள் தொடர்பில் இன்றைய தினம் விசேட தீர்மானமொன்று பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது.மு…

  15. அகதிகள்... அழுத்தங்கள்... சில மரணங்கள்! நெருக்கியடித்து நிறைந்திருக்கும் குடிசைகள். கூரைகளில் ஈரம் சொட்டிக் கொண்டிருந்தது. ஈரத்தின் காரணமாக மண் தரை சொதசொதப்பாய் இருந்தது. கால்கள் சேற்றில் படாமல் நடப்பது என்பது இயலாத காரியம். வட்டமான முகம், கொஞ்சம் சப்பையான மூக்கு, குட்டையான உருவம், மாநிறம் எனக் கொஞ்சம் சீன - திபெத் சாயலில் இருக்கும் இவர்கள் அனைவரும் கெரென் (Karen) இன மக்கள். இடம் - தாய்லந்து, மியான்மர் எல்லையில் இருக்கும் மயி லா (Mae La) அகதிகள் முகாம். காட்சி 1: கூரை ஓட்டைகளில் ஒழுகும் நீரைப் பிடிக்க அங்கொன்றும், இங்கொன்றுமாக சில சட்டிகளை வைத்துவிட்டு வாசற்படியில் வந்து அமர்கிறார் அந்த மூதாட்டி. அவரின் கண்கள் யாரையோ தவிப்போடு தேடிக் கொன்டிர…

  16. அகதிக் குழந்தைகள் நுழைவதைத் தடுக்கும் வகையில் ஜெர்மனியில் அமைக்கப்பட்டுள்ள மிகப் பெரிய சுவர் ஜெர்மனியின் மியூனிக் நகரில் மிகப்பெரிய சுவர் ஒன்று கட்டப்பட்டுள்ளது. ஜேர்மனியின் மியூனிக் நகரில் மக்கள் குடியிருப்புகளுக்கு அருகாமையில் உள்ளுர் அகதி முகாம் ஒன்று உள்ளது. இந்த முகாமிலுள்ள 160 குழந்தைகள் தமது பிரதேசத்துக்குள் நுழைவதைத் தடுக்கும் வகையிலேயே இந்த சுவர் அமைக்கப்பட்டுள்ளது. அகதிமுகாம் குறித்த பகுதியில் வந்ததன் பின்னர் கூச்சல் அதிகரித்து விட்டதாகவும் இதனால் தமது வீடுகளின் பெறுமதி குறைந்து விட்டதாகவும் தெரிவித்து தமது வசதிக்காக சுவர் கட்டப் போவதாக நீதிமன்றில் மியூனிச் நகர மக்கள் முறையிட்டனர். …

  17. அகதிக் குழந்தைகள் படும்பாடு அகதிகளுக்குப் புதுவாழ்வு தருவதில் மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கு சுவீடன் முன்மாதிரியாகத் திகழ்கிறது சொந்த நாட்டில் உயிருக்குப் பாதுகாப்பு இல்லாததால் பெற்றோரோ, உறவினர்களோ இல்லாமல் தனியாகவே சுவீடன் நாட்டுக்கு அகதிகளாக வரும் 18 வயது நிரம்பாத குழந்தைகள் படும்பாடு கல்மனதையும் கரைய வைக்கும். இவர்கள் வெவ்வேறு நாடுகளிலிருந்து வருகின்றனர். 9 வயது முதல் 17 வயது வரையிலான 50 குழந்தைகளை ‘மனித உரிமைகள் கண்காணிப்பு’ அமைப்பினர், எந்தவித வற்புறுத்தலும் இன்றி பேட்டி கண்டபோது இந்த விவரங்கள் வெளிவந்தன. கடந்த ஆண்டில் மட்டும் தனியாக வந்த 35,000 குழந்தைகளை சுவீடன் ஏற்றுக்கொண்டு அவர்களை முகாம்களில் தங்க வைக்காமல் க…

  18. சுவீடன் நாட்டில் புகலிடம் தேடுவோர் இல்லத்தில் தங்கிருந்த ஆப்கன் சிறுவர்கள் இருவரை வற்புறுத்தி அந்த இல்லத்தின் பெண் அதிகாரி உறவு கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுவீடனில் Sodermanland பகுதியில் அமைந்துள்ள புகலிடம் தேடுவோர் இல்லத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள பெண் அதிகாரி ஒருவர் இரண்டு ஆப்கன் சிறுவர்களை வற்புறுத்தி பாலியல் உறவு வைத்திருந்துள்ளார். அந்த சிறுவர்களை வேறு நாடுகளுக்கு அனுப்பவோ அல்லது சொந்த நாட்டிற்கே திருப்பி அனுப்பவோ அவர் தயாராக இல்லை என தெரிய வந்ததை அடுத்து அந்த சிறுவர்கள் வேறு அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளனர். அந்த இளவயது சிறுவர்களை கட்டாயப்படுத்தி இதுவரை 5 முறைக்கும் மேல் உறவு கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். விசா…

    • 0 replies
    • 450 views
  19. அகதித் தஞ்ச விண்ணப்பங்களை இரு பிரிவுகளாக வகைப்படுத்தும் பிரீதி பட்டேலின் சர்ச்சைக்குரிய குடிவரவுத்திட்டம் – தமிழில் ஜெயந்திரன் 154 Views ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான சாசனத்தில் ஐக்கிய இராச்சியம் 1951 இல் ஒப்பமிட்டதிலிருந்து, போரிலிருந்தும், பல்வேறு துன்புறுத்தல்களிலிருந்தும், பயங்கரவாத தாக்குதல்களிலிருந்தும் தம்மைக் காத்துக்கொள்வதற்காகத் தமது சொந்த நாடுகளை விட்டு வெளியேறி, எமது நாட்டைத்தேடி வந்த பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு அவர்கள் இங்கு குடியிருப்பதற்கான ஒரு வாய்ப்பை எமது நாடு வழங்கியிருக்கிறது. தாம் செலுத்த வேண்டிய வரிகளை ஒழுங்காகச் செலுத்தி, எமது சமூகத்துக்குப் பாரிய பங்களிப்பை வழங்கி, மாண்புமிக்க குடிமக்களாக அவர்கள் தற்போத…

  20. இ****** அகதியாக சென்ற ஈழத்தமிழன் நித்திரையில் அடித்துக் கொலை. அகதியாக இ**** வந்தால் இதுதான் பதில் என்று கூறி தாக்கினர். இலங்கை அரச வன்முறைகளுக்கு பயந்து இ******அகதியாக தலைமன்னார் ஊடாக சென்ற ஈழத்தமிழன் இ***** அகதி முகாமில் ஆழந்த நித்திரையில் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார். இ***** த**நாட்டின் மறக்கனம் என்ற இடத்திற்கு அருகாமையில் இந்த கோரச்சம்பவம் நடந்துள்ளது. இலங்கை அரசின் வன்முறைகளுக்கு பயந்து இ***** ஈழத்தமிழன் தனது மனைவி பிள்ளைகள் சகிதம் அண்மையில் அகதியாக சென்றுள்ளார். 26 வயதுடடைய நித்தியானந்தம் என்ற நேசன் தனது 24 வயது நிரம்பிய மனைவி கவிதா, 2 வயது குழந்தை பானு அல்லது மீராதர்சினியுடன் இ***** அகதியாக சென்றுள்ளார். தனது மனைவி குழந்தையுடன் ஆழ்ந்த நித்திரையில் உறங்கிய ந…

  21. அகதியாக மாறிய சீன சுற்றுலாப்பயணி சீனாவைச் சேர்ந்த சுற்றுலாப்பயணி ஒருவர், ஜேர்மனிக்கான சுற்றுலாப் பயணத்தை மேற்கொண்டபோது, அகதியாகக் கருதப்பட்டு, அகதி முகாமொன்றில் 12 நாட்கள் தங்கியிருந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. அவரது முழுப் பெயர் வெளியிடப்படாததோடு, "திரு. எல்" என்று மாத்திரமே அவரது அடையாளம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. மண்டரின் மொழி மாத்திரமே பேசத்தெரிந்த குறித்த சுற்றுலாப்பயணி, தன்னுடைய பணப்பையைத் தொலைத்துள்ளார். பொலிஸ் நிலையத்துக்குச் சென்று முறையிடும் நோக்கில் சென்ற அவர், அகதிகள் தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அலுவலகத்துக்கு மாறிச் சென்றுள்ளார். அங்கு சென்ற அவர், அங்கு வழங்கப்பட்ட படிவத்தை நிரப்பியுள்ளார். இதனைத் தொடர்ந்து, அங்கி…

  22. அகதியாக வந்து அமெரிக்காவின் முதல் பெண் வெளியுறவுத்துறை மந்திரியான காலமானார் அகதியாக வந்து அமெரிக்காவின் முதல் பெண் வெளியுறவுத்துறை மந்திரியான மேடலின் ஆல்பிரைட் புற்றுநோயால் காலமானார். அவருக்கு வயது 84. 1937 ஆம் ஆண்டு செக்கோஸ்லோவாக்கியாவில் பிறந்த மேடலின் ஆல்பிரைட்,1948 ஆம் ஆண்டு தனது குடும்பத்துடன் அமெரிக்காவிற்கு அகதியாக வந்து சேர்ந்தார். பின்னர் இவர் 1957 ஆம் ஆண்டு அமெரிக்க குடியுரிமை பெற்றார். பின்னர் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் முனைவர் பட்டம் பெற்றார். பின்னர் ஜனநாயகக் கட்சியின் செனட்டர் எட்மண்ட் மஸ்கியிடம் பணிபுரிந்தார். அதன்பிறகு இவர் 1996 ஆம் ஆண்டு அப்போதைய அமெரிக்க அதிபர் பில் கிளின்டனால் வெளியுறவுத்துறை மந்திர…

    • 1 reply
    • 324 views
  23. அக­தி­யாக வந்து பழி­தீர்ப்பேன்.! ஜேர்­ம­னிய சிறைச்­சா­லை­யொன்றில் தூக்­கி­ட்டு தற்­கொலை செய்த நிலையில் கண்­டு­பி­டிக்­கப்­பட்ட சிரிய அக­தி­யான சந்­தே­க­ந­பரின் சகோ­தரர் தனது உடன்­பி­றப்பின் மர­ணத்­துக்­காக பழி­தீர்க்கப் போவ­தாக சூளு­ரைத்­துள்ளார். ஜாபெர் அல்–பாக்ர் என்ற மேற்­படி சந்­தே­க­ந­பரின் குடி­யி­ருப்பில் வெடி­பொ­ருட்கள் அவ­தா­னிக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து அவர் தலை­ம­றை­வா­கி­யி­ருந்தார். தொடர்ந்து அவர் ஜேர்­ம­னியின் லெயிப்ஸிக் எனும் இடத்தில் வைத்து 3 சிரிய சகாக்­களால் மடக்கிப் பிடிக்­கப்­பட்டு பொலி­ஸா­ரிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்ட நிலை­யி­லேயே சிறைச்­சா­லையில் தூக்­கிட்டு உயி­ரி­ழந்­தி­ருந்தார். இந்­நி­லையில் அவ­ரத…

  24. ஆஸ்திரேலியாவில் தற்கொலை செய்து கொண்ட ஆப்கானிஸ்தான் அகதியின் உடலை ஆப்கானிஸ்தானில் உள்ள அவரது குடும்பத்திடம் ஒப்படைக்க ஆஸ்திரேலிய அரசு 15,000 டாலர்களை கேட்டுள்ளது. சயத் மிர்வாஸ் ரோஹனி என்ற 32 வயது அகதி, கடந்த மாதம் தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவரது உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைப்பத்தில் சிக்கல் நீடித்து வருகின்றது. ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் மருத்துவராக பணியாற்றிய இவர், ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்த நிலையில் மனுஸ்தீவில் நான்கு ஆண்டுகளாக சிறைவைக்கப்பட்டிருந்தார். அங்கு அவர் மனநல பாதிப்பை எதிர்கொண்ட நிலையில, மேலதிக சிகிச்சைகாக ஆஸ்திரேலியாவுக்கு மாற்றப்பட்டிருந்தார். ஆறு மொழிகள் பேசும் திறன்கொண்ட ரோஹனி, 2017ம் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகருக்கு கொண்டு வர…

    • 0 replies
    • 494 views
  25. அகன்ற மத்திய ஆசியா – சீனாவுக்கு எதிரான அமெரிக்காவின் நகர்வு பூகோள மட்டத்தில் அமெரிக்காவைத் தனிமைப்படுத்துவதற்கு சீனா முயற்சிகளை மேற்கொள்வதால் இதனை எதிர்ப்பதற்கு அமெரிக்கா பல்வேறு மூலோபாயங்களை வகுத்துள்ள போதிலும் தொடர்ந்தும் சீனா தனது பூகோள அரசியல் இலக்கை அடைவதில் குறியாகவே உள்ளது. சீனாவின் இந்த நகர்வானது ஜி20 உச்சி மாநாட்டின் போது உறுதிப்படுத்தப்பட்டது. அதாவது இந்த உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், வடகொரியாவால் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ICBM பரீட்சார்த்தத்தைக் கண்டித்து கூட்டுப் பிரகடனம் ஒன்றை நிறைவேற்றுவதற்கு முயற்சிகளை மேற்கொண்ட போது அதனை சீனா எதிர்த்தது. அமெரிக்காவின் மூலோபாயக் கூட்டாளியான இந்தியா மற்றும் அமெரிக்காவின் நகர்வு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.