உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26688 topics in this forum
-
சோமாலியாவில் கடும் சண்டை(BBCtamil) கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 1 ஏப்ரல், 2012 - 14:54 ஜிஎம்டி சோமாலிய படையினர் ( ஆவணப்படம்) சோமாலியாவில் சோமாலிலாந்து குடியரசை சுயமாகப் பிரகடனம் செய்த படையினருக்கும், பிரிந்துபோன பிராந்தியமான கட்டுமா மாநிலத்தின் விசுவாசப் படைகளுக்கும் இடையே கடுமையான சண்டைகள் நடந்திருக்கின்றன. சர்ச்சைக்குரிய வடமேற்கு சோமாலிய பகுதியில் இரு முனைகளில் நடந்த இந்தச் சண்டைகளை ஆரம்பித்ததாக இரு தரப்பும் ஒருவர் மீது ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளனர். பல மக்கள் கொல்லப்பட்டதாகவும், பலர் காயமடைந்ததாகவும் உள்ளூர் மருத்துவமனைகள் கூறுகின்றன. இந்த வருட முற்பகுதியில் சோமாலிலாந்தில் இருந்து கட்டுமா மாநிலம் பிரிந்த பின்னர் நடக்கும் மிகவும் மோசமான…
-
- 0 replies
- 342 views
-
-
பர்மாவில் நடந்துமுடிந்த இடைத் தேர்தலில் ஆங் சான் சூ சீயின் கட்சி போட்டியிட்ட 44 தொகுதிகளிலும் வெற்றிபெற்றுள்ளதாக பிபிசியின் பர்மிய மொழி சேவை தெரிவிக்கிறது. இடைத்தேர்தல் நடந்த 45 தொகுதிகளில் 44 தொகுதிகளில் சூ சீயின் ஜனநாயகத்துக்கான தேசிய லீக் கட்சி போட்டியிட்டது; ஒரு தொகுதியில் அக்கட்சி வேட்பாளரின் மனு நிராகரிக்கப்பட்டிருந்தது. ஆங் சான் சூசி தலைமையிலான என்எல்டி என்ற ஜனநாயகத்துக்கான தேசிய லீக் கட்சி இரண்டு தசாப்தங்களின் பின்னர் இப்போது தான் தேர்தலொன்றில் போட்டியிட்டுள்ளது. பர்மாவைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஆளும் இராணுவ- பின்புல அரசாங்கம் அண்மையில் அரசியல் சீர்திருத்தங்களைக் கொண்டுவர உறுதியளித்திருந்த நிலையில், உலகம் இந்தத் தேர்தலை ஒரு பரீட்சையாக பார்க்கிறது. …
-
- 2 replies
- 487 views
-
-
பிரான்சின் ஐந்தாவது குடியரசின் பத்தாவது ஜனாதிபதித்தேர்தலின் முதற்சுற்று எதிர்வரும் 22.04.2012ல் நடைபெறுகிறது. இரண்டாவது சுற்று 6.5.2012ல் நடைபெறுகிறது. பிரான்சிலும் அரசியல் சட்டங்கள் காலத்திற்கு காலம் மாற்றப்பட்டு மெருகூட்டப்பட்டு வந்திருக்கிறது. ஐந்தாவது தடவையாக 1958ல் நடைபெற்ற இவ்வாறான மாற்றத்தின் பின் ஐந்தாவது குடியரசு என அழைக்கப்படுகிறது. திருத்தியமைக்கப்பட்ட அரசியல் சட்டத்தின் கீழ் 1965ல் முதல்முறையாக சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் ஜனாதிபதியை தெரிவுசெய்யும்முறை அறிமுகமானது. ஐந்தாவது குடியரசினை உருவாக்க காரணமாக இருந்த அதிபர் சாள்துகோலே சர்வஜன வாக்கெடுப்பின் மூலமும் தெரிவுசெய்யப்பட்ட முதலாவது ஜனாதிபதியாவார். ஏழாண்டுகளுக்கு ஒரு தடவை நடைபெற்று வந்த பிரான்சின் ஜன…
-
- 15 replies
- 1.2k views
-
-
சாலையில் நடந்து செல்லும்போதுகூட விபத்து ஏற்பட்டு சாவு வரலாம். எதில்தான் ஆபத்து இல்லை? அணு உலையும் அப்படித்தான். அதை எதிர்த்து ஏன் உதயக்குமார் உள்ளிட்டவர்கள் போராடிக்கொண்டிருக்கிறார்கள்? என்பது பல்வேறு பட்ட மக்களின் கேள்வி. இந்த கேள்விக்கான பதிலை… தொடர்ந்து அணு உலைக்கெதிராக போராடிக்கொண்டிருக்கும் மக்கள் மருத்துவர் புகழேந்தியிடம் கேட்டோம். “அணு உலை பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்பது யாருக்கும் மாற்றுக்கருத்து இல்லை. பாதுகாப்பாகத்தான் உள்ளது என்று மத்திய மாநில அரசுகள்…வல்லுநர் குழுக்கள்…அணுசக்தி நிர்வாகத்தினர்…எல்லோருமே சொல்லித்தான் கூடன்குளம் அணு உலையை திறந்திருக்கிறார்கள். ஆனால், அணு உலை பாதுகாப்பாக உள்ளதா? என்பதுதான் மிகப்பெரியக் கேள்விக்குறி! காரணம்…சர்வதேச அணுச…
-
- 0 replies
- 713 views
-
-
விற்பனையை அதிகரிக்க நெருக்கடி- மது பானங்களை ஹோம் டெலிவரி செய்யும் டாஸ்மாக் கடைகள்! ஈரோடு: மதுபானக் கடைகளின் வருவாயை உயர்த்த வேண்டும் என்ற அதிகாரிகளின் நெருக்கடியால் இலவச ஹோம் டெலிவரி முறையை அரசு டாஸ்மாக் கடை பணியாளர்கள் நடைமுறைப்படுத்தத் தொடங்கியுள்ளனர். டாஸ்மாக் மதுபானக் கடைகள் ஒவ்வொன்றுக்கும் அதிகாரிகள் விற்பனை இலக்கை நிர்ணயித்துள்ளனர். விற்பனை இலக்கை எட்ட முடியாத கடையின் பணியாளர்கள் தற்காலிக பணிநீக்கம் செய்யப்படும் நிலையும் இருக்கிறது. இதைக் கண்டித்து தொழிற்சங்கங்களும் போராடி வருகின்றன. இந்நிலையில்தான் அதிகாரிகளின் நெருக்கடியை சமாளிக்கும் வகையில் ஈரோடு, பெருந்துறை சாலை, குமலன்குட்டை உள்ளிட்ட இடங்க்ளில் டாஸ்மாக் பணியாளர்கள்…
-
- 0 replies
- 988 views
-
-
சிரியாவின் எதிரணிக்குழுவுக்கு அங்கீகாரம் சிரியாவின் எதிரணிக்குழுவான சிரியாவின் தேசியக் கவுன்ஸிலை, சிரியாவின் அனைத்து மக்களின் நியாயபூர்வ பிரதிநிதிகளாக, சிரியாவில் அரசியல் மாற்றங்களை ஆதரிக்கும் நாடுகள் அங்கீகரித்திருக்கின்றன. இஸ்தான்புல்லில் நடந்த மாநாடு ஒன்றினை அடுத்து பேசிய துருக்கியின் வெளியுறவு அமைச்சரான அஃமட் டவுத்தொக்லு அவர்கள், சிரியாவில் மனித நேய உதவிகளுக்கான ஆதரவை அதிகரிப்பது என்று தாம் உடன்பாடு கண்டுள்ளதாகவும், அண்டைய நாடுகள் சிரியாவின் அகதிகளை ஏற்பார்கள் என்றும் கூறியுள்ளார். தமக்கெதிரான தாக்குதலுக்கு எதிராக தம்மை பாதுகாத்துக்கொள்வதற்கான சிரியாவின் மக்களின் உரிமையையும் அவர்கள் அங்கீகரித்திருக்கிறார்கள். வளைகுடா நாடுகளால் ஏற்பாடு செய்யப்பட்ட…
-
- 1 reply
- 348 views
-
-
மியான்மரில் தற்போது ராணுவ ஆட்சி நடக்கிறது. அங்கு 664 உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்றத்துக்கு கடந்த 2010-ம் ஆண்டு தேர்தல் நடந்தது. அதில் ராணுவத்தின் ஆதரவு கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் காலியாக உள்ள 45 இடங்களுக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெற்றது. கடந்த பொதுத் தேர்தலை புறக்கணித்த ஆங்சாங் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயக கட்சி இந்த இடைத்தேர்தலில் போட்டியிடுகிறது இதில் ஆங்சாங் சூகி உள்பட அவரது கட்சியினர் 44 தொகுதிகளில் அமோக வெற்றி பெறுவார்கள் என தெரியவந்துள்ளது. இந்த தேர்தலில் ஆங்சாங் சூகியின் கட்சி வெற்றி பெறுவதன் மூலம் அடுத்த பொதுத்தேர்தலில் மியான்மரில் ஜனநாயக ஆட்சி மலரும் வாய்ப்பு உருவாகும் என உலக நாடுகள் எதிர்பார்க்கின்றன.(தினமணி) …
-
- 1 reply
- 377 views
-
-
இந்திய அரசு அதன் இராணுவத்திற்கு கொடுக்கப்பட்ட சிறப்பு அதிகாரத்தை திரும்பப் பெற வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை வலிறுத்தி உள்ளது. ஐநா சபைக்கான சிறப்பு பிரதிநிதி கிறிஸ்டோப் ஹைன்ஸ் நேற்று (31) வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார். மணிப்பூர், காஷ்மீர் மற்றும் சில வட கிழக்கு மாநிலங்களில் இராணுவ சிறப்பு அதிகார சட்டம் நடைமுறையில் உள்ளது. முக்கியமாக எந்தெந்த மாநிலங்கள் தங்கள் உரிமைகளை நிலைநாட்ட போராட முனைகிறதோ அந்தந்த மாநிலங்களில் இந்த இராணுவ சிறப்பு சட்டம் நடைமுறையில் இருக்கும். இராணுவத்தின் துணை கொண்டு அரசு மாநில மக்களை அடக்கும். மணிப்பூர் மாநிலத்து மக்கள் அவர்களுக்கு என்று தனி இறையாண்மை உள்ளது என்றும் அவர்களுக்கு என்று இந்தியாவில் இருந்து வேறுபட்…
-
- 0 replies
- 314 views
-
-
இலங்கை போர்குற்ற நாடு தான் என்று வாக்களிக்கும் வரை போராட்டம் தொடரும் என்று அறிவித்து புதுக்கோட்டையில் உண்ணாவிரதம் இருந்து போராடிய , சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி.முத்துக்குமரன் சாலைவிபத்தில் மரணம் புதுக்கோட்டை, ஏப்ரல் 1: புதுக்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முத்துக்குமரன் (வயது 43) அன்னவாசல் அருகே நிகழ்ந்த சாலைவிபத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார்.இவர் புதுக்கோட்டை தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர்.இவர் இன்று கட்சி உறுப்பினர் ஒருவரின் வீட்டு நிகழ்ச்சிக்காக , தனது பொலீரோ ஜீப்பில் புதுக்கோட்டையில் இருந்து விராலிமலை நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அன்னவாசல் அருகே சொக்கநாதன்பட்டி என்னும் இடத்தில் ஜீப்பின் டயர் வெடித்து…
-
- 12 replies
- 751 views
-
-
64 கோடி டாலர் ஜாக்பொட் கிடைத்த அதிர்ஸ்டசாலிகள் கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 31 மார்ச், 2012 - 13:06 ஜிஎம்டி அமெரிக்காவின் மிகப்பெரிய லாட்டரியில் (அதிர்ஸ்ட லாபச் சீட்டிழுப்பில்) வெற்றி பெற்றவர்களை தேடும் நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது. 64 கோடி டாலர் பெறுமதியான இந்த லாட்டரியை மூன்று டிக்கட்டுக்கள் பகிர்ந்துகொள்கின்றன. மேரிலாந்து, கன்சாஸ் மற்றும் இலினொய்ஸ் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த மூவருக்கே இந்த அதிர்ஸ்டம் கிடைத்திருக்கிறது. லாட்டரி சீட்டுகளுக்காக அமெரிக்கர்கள் 1.5 பில்லியன் லாடர்களை செலவிடுகிறார்கள். கடந்த ஜனவரி மாதம் முதல் எவருக்கும் ஜாக்பொட் கிடைக்காத காரணத்தால், பரிசுத் தொகை அதிகரித்து இவ்வளவு பெரிய அளவை எட்டியிருக்கிறது bbctamil …
-
- 19 replies
- 2k views
-
-
தாய்லாந்து :குண்டுகள் வெடித்து 11 பேர் பலி தாய்லாந்து நாட்டின் தென் பகுதியில் உள்ள யாலா நகரில் கடைகள், ஓட்டல்கள், வர்த்தக நிறுவனங்கள் நிறைந்த பகுதியில் இன்று ஒரு சரக்கு வாகனத்தில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. குண்டு வெடித்த இடத்தில் ஏராளமான பேர் கூடினார்கள். அப்போது அங்கு ஒரு காரில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த குண்டு வெடித்தது. 20 நிமிட இடைவெளியில் 2&வது குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. இந்த இரு குண்டு வெடிப்புகளிலும் 11 பேர் பலி ஆனார்கள். 110 பேர் காயம் அடைந்தனர். http://www.nakkheeran.in/users/frmnews.aspx?N=73337
-
- 1 reply
- 384 views
-
-
ரஷ்யாவின் செயின்ட்பீட்டர்ஸ் பர்க்கில் இந்து மத அடையாளமாக உள்ள இந்து கோவில் ஒன்றை இடிக்க அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து கோவிலை நிர்வகித்து வரும் சுரேன் காராபெட்யான் என்பவர் கூறுகையில் கடந்த 1992-ம் ஆண்டு பெடரல் ஆராய்ச்சி மையத்தின் உதவியுடன் இப்பகுதியில் கோவிலை கட்டுவதற்கு நில உரிமையாளரிடம் 49 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. 20 ஆண்டுகளே முடிவடைந்துள்ள நிலையில் கோவிலை இடிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த கோவிலில் சமஸ்கிருதம், யோகா உட்பட இந்தியாவின் கலாசாரத்தை பிரதிபலிக்கும் கலாச்சார மையமாகவும் செயல்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்துக்களின் புனித நூலான பகவத்கீதைக்கு தடை விதிக்க கோரி…
-
- 0 replies
- 371 views
-
-
பிரான்சிய அதிபரின் வெற்றிக்கு பயன்படப்போகும் பயங்கரவாதம் பயங்கரவாத செயல்களை செய்பவர்கள் தமது செயல்களில் வெற்றி பெறுவதைவிட தமது எதிரணியினருக்கு வெற்றியை கொடுப்பதில் என்றும் முன்னணி வகித்து வருகிறார்கள். அமெரிக்க இரட்டைக் கோபுர தாக்குதல் ஜோர்ஜ் புஸ்சின் வெற்றிக்கு வழிவகுத்தது, இப்போது பின்லேடன் கொலை ஒபாமாவை வெற்றிப்படியில் நிறுத்தி வைத்திருக்கிறது. அதுபோல தேர்தல் கருத்துக்கணிப்பில் பின்னணியில் நிற்கும் பிரான்சிய அதிபர் நிக்கொலாய் ஸார்கோஸியும் பிரான்சில் நடைபெற்ற அல் குவைடா பயங்கரவாத செயலை தனக்கு சாதகமாக பயன்படுத்த ஆரம்பித்துள்ளார். பிரான்சில் நடந்து முடிந்த எழு பேர் படுகொலைகளைக் கேள்விப்பட்டதும் தேர்தல் பிரச்சாரத்தை நிறுத்திவிட்டு பயங்கரவாதியை பிடிப்பதில…
-
- 0 replies
- 307 views
-
-
உலகிலேயே மிகப் பெரிய ஏரி ஹகஸ்பியன் ஏரி? என்றுதான் பலரும் நினைக்கின்றார்கள். ஆனால், உண்மையில், இது ஓர் உப்பு நீர் (கடல்நீர்) ஏரியாகும். உலகின் பெரிய நன்னீர் ஏரி எது என்றால் அது, அமெரிக்கா - கனடா எல்லைப் பகுதியில் அமைந்துள்ள சுப்பீரியர் ஏரி (Lake Superior) ஆகும். 82 ஆயிரத்து 103 சதுர கிலோ மீற்றர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள இந்த ஏரி ஒரு குட்டிக் கடல் போலவே விளங்குகிறது. கப்பல் போக்குவரத்து, கரையை மோதும் அலைகள் என்று அப்படியே ஒரு கடல் போல காட்சியளிக்கிறது சுப்பீரியர் ஏரி. வட அமெரிக்காவில் உள்ள 5 பெரிய ஏரிகளுள் ஒன்றான சுப்பீரியர், வடக்கே கனடாவின் ஒன்டேரியா - அமெரிக்காவின் மின்னசோட்டாவையும், தெற்கே அமெரிக்காவின் விஸ்கான்சின், மிக்சிகன் மாநிலங்களையும் எல்லைகளாகக் கொண்டுள…
-
- 8 replies
- 1.2k views
-
-
சசிகலா மீது அதிமுக எடுத்திருந்த ஒழுங்கு நடவடிக்கைகள் ரத்து செய்யப்படுவதாக, அக்கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதா இன்று அறிவித்தார். சசிகலா அளித்த விளக்கத்தை ஏற்பதாக, முதல்வரும், அதிமுக பொதுச் செயலருமான ஜெயலலிதா தெரிவித்துள்ளார். அதேவேளையில், சசிகலா தவிர மற்றவர்கள் மீதான நடவடிக்கைகளில் மாற்றம் இல்லை என்று அவர் அறிவித்துள்ளார். ஜெயலலிதாவின் இந்த அறிவிப்பின் மூலம், சசிகலா மீண்டும் போயஸ் கார்டன் செல்வது உறுதியாகியுள்ளது. முன்னதாக, முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக தாம் கனவிலும் துரோகம் செய்ய நினைத்தது இல்லை என்றும், அவருக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்துவிட்டதாகவும் சசிகலா விளக்கம் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. http://news.vikatan.com/?nid=7306
-
- 2 replies
- 512 views
-
-
மிஸ் இந்தியா 2012- சண்டிகாரை சேர்ந்த வன்யாமிஸ்ரா தெரிவு! Published on March 31, 2012-12:52 am · வடஇந்தியா சண்டிகாரை சேர்ந்த வன்யாமிஸ்ரா (19வயது) 2012-ம் ஆண்டிற்கான மிஸ் இந்தியா வேர்ல்ட் அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மும்பை அந்தேரியில் பெமினா நிறுவனத்தின் சார்பில் மிஸ் இந்தியா வேர்ல்டு 2012-ம் ஆண்டுக்கான அழகிப்போட்டி தேர்வு நடைபெற்றது. போட்டியில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அழகிகள் கலந்து கொண்டனர். அவர்களின் நடை, பழக்க வழக்கம், மற்றும் பொது அறிவு உட்பட பல்வேறு பிரிவுகளில் கேள்விகள் கேட்கப்பட்டது. இதில் வன்யாமிஸ்ரா கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற போட்டி ஒன்றில் வென்றதன் காரணமாக இந்தாண்டிற்கான போட்டியில் எவ்வித சுற்றுக்களிலும் கலந்து கொள்ளாமல் நேரடிய…
-
- 1 reply
- 458 views
-
-
சீன ஆலையில் நிலைமைகளை மேம்படுத்த ஆப்பிள் ஒப்புதல் ஐபோன் மற்றும் ஐ-பேடுகளை தயாரிக்கும் சீனாவில் உள்ள தனது முக்கியமான விநியோக நிலையம் ஒன்றில் பணி நிலைமைகளை மேம்படுத்த ஆப்பிள் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளதாக ஒரு அமெரிக்க தொழிலாளர் உரிமைகளுக்கான அமைப்பு கூறியுள்ளது. சீனாவின் ஃபொக்ஸ்கொன் என்னும் இடத்தில் உள்ள இந்த ஆலையில் தொழிலாளர்கள் பெரும் சுகாதார மற்றும் பாதுகாப்பு ஆபத்துக்களை எதிர்கொள்வதாகவும், அவர்கள் அங்கு அளவுக்கு அதிகமான மணித்தியாலங்கள் பணியாற்ற வைக்கப்படுவதாகவும், அமெரிக்காவின் ஃபெயார் லேபர் நிறுவனம் நடத்திய புலனாய்வில் தெரியவந்துள்ளது. கிழக்கு சீனாவில் உள்ள இந்த ஃபொக்ஸ்கொன் ஆலையில் நடந்த ஒரு வெடி விபத்தில் இருவர் பலியான சம்பவத்தை அடுத்து இந்தப் புலன…
-
- 0 replies
- 285 views
-
-
கிழக்கு பாக்கிஸ்தான் இந்தியாவின் உதவியோடு வங்காள தேசமாக உருவாகியதைப் போல் பாக்கிஸ்தான் எனப்படும் முன்னாள் மேற்கு பாக்கிஸ்தான் அமெரிக்கா, இந்தியா ஆகியவற்றின் ஆதரவுடன் மீண்டும் உடையும் வாய்ப்பு இருக்கிறது. இம்முறை பாக்கிஸ்தானின் நான்கு மாநிலங்களில் மிகப் பெரியதும் இயற்கை வளங்களில் பெறுமதி கூடியதுமான பலுச்சிஸ்தான் (Baluchistan) புதிய நாடாக உருவாகும் வாய்ப்புக்கள் நிறைய இருக்கின்றன. பாக்கிஸ்தானின் முழு நிலப் பரப்பில் 44 விழுக்காட்டைக் கொண்டிருக்கும் பலுச்சிஸ்தானில் எரிபொருள்களான எண்ணை, எரிவாயு மற்றும் தங்கம், செம்பு போன்ற தனிமங்களும் காணப்படுகின்றன. அண்மையில் எடுக்கப்பட்ட கணக்குப்படி 19 டிரில்லியன் கன அடி (19 Trillion Cubic feet) எரிவாயு பலுச்சிஸ்தான் மண்ணடியில் கிடக்கிறத…
-
- 21 replies
- 1k views
-
-
இத்தாலியில் உள்ள கடாபிக்குச் சொந்தமான 7,500 கோடி ரூபா மதிப்பான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. லிபியா அதிபராக இருந்த மும்மர் கடாபிக்குச் சொந்தமான ஏராளமான சொத்துக்களை புதிதாக அமைந்துள்ள அரசு கைப்பற்றியுள்ளது. ஆடம்பர மாளிகைகள், தங்க, வைர நகைகள் மற்றும் கோடிக்கணக்கான பணம் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவை தவிர கடாபியும், அவரது குடும்பத்தினரும் பல நாடுகளில் சொத்துக்களை வாங்கி குவித்துள்ளனர். அங்குள்ள பாங்குகளில் பணம் மற்றும் தங்க, வைர நகைகள் முதலீடு செய்யப்பட்டுள்ளன. தற்போது அவையும் கண்டுபிடித்து முடக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இத்தாலியில் கடாபியின் சொத்துக்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே அங்குள்ள அவரது ரூ. 7,500 கோடி மதிப்பிலான சொத்துக்கள் ம…
-
- 0 replies
- 374 views
-
-
மிக அருமையாகக் கிடைப்பதால் சில தனிமங்களும் (Elements)உலோகங்களும் (Metals) அரிய மண் (Rare Earth) என்ற சொற்கள் மூலம் குறிப்பிடப்படுகின்றன. Rare என்றால் அரிய. Earth என்றால் மண் என்று பொருள். அரிய மண் தனிமங்களும் உலோகங்களும் எண்ணிக்கையில் பதினேழாக (17)இருக்கின்றன. இவற்றுள் ஸ்கன்டியம்(Scandium) இற்றியம் (Yttrium) என்பனவும் அடங்கும். சுவீடன் நாட்டின் இற்றார்பி (Ytterby) என்ற கிராமத்தில் இவை முதன் முதலாக நிலத்தில் இருந்து வெட்டி எடுக்கப்பட்டன. இதன் காரணமாக இந்தப் பதினேழு தனிமங்கள் உலோகங்கள் ஆகியவற்றின் பெயர்கள் இந்தக் கிராமத்தோடு தொடர்புடையவையாக இருக்கின்றன. 1948ம் ஆண்டு வரை உலகின் அரிய மண் தேவையை இந்தியாவும் பிறேசிலும் பூர்த்தி செய்தன. 1950களில் தென்னாபிரிக்கச் சுரங்கங்களில…
-
- 0 replies
- 618 views
-
-
கூடங்குளம் அணு உலை இரண்டு மாதங்களில் இயங்கும் கூடங்குளம் அணு மின் நிலையம் இரண்டு மாத்ததுக்குள் செயல்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா தமிழக சட்டசபையில் தெரிவித்துள்ளார். கூடங்குளத்தில் 1000 மெகாவாட் திறன் கொண்ட இரு அணு உலைகள் அமைக்கப்படுகின்றன. இதில் முதல் உலைக்கான பணிகள் கிட்டத்தட்ட முடிவடைந்துவிட்டதாக முதல்வர் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் தென்கோடியில் அமைக்கப்பட்டு வரும் கூடங்குளம் அணு மின் நிலையங்களை இயக்குவது மக்கள் போராட்டம் காரணமாக பல மாதங்கள் தள்ளிப்போய் உள்ளது. தமிழக அமைச்சரவை அணுமின் நிலையப் பணிகளைத் துவங்கலாம் என்று அனுமதி அளித்த அடுத்த நாளில் இருந்து அணு உலை எதிர்ப்பாளர் உதயகுமார் உள்ளிட்ட 15 பேர் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டன…
-
- 2 replies
- 567 views
-
-
ஒலிம்பிக் போட்டிகளுக்காக பிரிட்டனுக்கு செல்வோர் அங்கு திருமணம் செய்யத் தடை பிரிட்டனில் இவ்வருடம் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்காக செல்லும் விளையாட்டு வீரர்கள், பயற்றுநர்கள் மற்றும் அதிகாரிகள் அங்கு திருமணம் செய்துகொள்வதை பிரித்தானிய அதிகாரிகள் தடை செய்யவுள்ளனர். வெளிநாட்டவர்கள் பிரிட்டனில் வதிவிட உரிமை பெறுவதற்காக ஒலிம்பிக் போட்டிகளை பயன்படுத்துவதை தவிர்ப்பதே இதன் நோக்கமாகும். லண்டன் ஒலிம்பிக் போட்டிகளின்போது ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியிலுள்ள நாடுகளைச் சேர்ந்த சுமார் 20,000 பேருக்கு 6 மாத காலத்திற்கான பிரித்தானிய விஸா வழங்கப்படவுள்ளது. எனினும் அவர்கள் திருமணம் மற்றும் வேறு வகையான சிவில் வாழ்க்கை பந்தங்களில் இணைவது தடுக்கப்படும். அத்துடன் பிரிட்டனில் க…
-
- 10 replies
- 833 views
-
-
தமிழில் பேச வெட்கம் ஆனால்............. உருசிய அதிபர் மாளிகையின் பெயர் அழகு தமிழ் மொழியில்...!! உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டையும், பல்வேறு மன்னர்கள் பல்வேறு காலகட்டங்களில் ஆண்டுவந்துள்ளன்ர். தங்களது நாட்டை ஆண்ட மன்னர்கள் அவர்களது வரலாற்றையும், ஆட்சியையும் உலகிற்கு எடுத்துக்கூறும் விதத்தில், நினைவு சின்னங்களாக பல்வேறு அரண்மனைகளையும், மாளிகைகளையும், கோட்டைகளையும், சிற்ப்பங்களையும், கல்வெட்டுகளையும், ...கோவில்களையும், தேவாலயங்ளையும், மசூதிகளையும் கட்டியுள்ளனர். அவ்வாறு கட்டிய பல வரலாற்று சின்னங்கள் இன்று அந்த நாட்டின் சிறப்பாக விளங்குகிறது. அத்தகைய புகழ்வாய்ந்த பல வரலாற்று சின்னங்களில், இன்று நாம் பார்க்கவிருப்பது... உருசிய நாட்டின் புகழ்பெற்ற “ கிரெம்லின் மாளிகை …
-
- 9 replies
- 1.7k views
-
-
இஸ்ரேல் ஐ.நா மனித உரிமைப் பேரவை உறவைத் துண்டித்தது இஸ்ரேலுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால் ஐ.நா. மனித உரிமை அமைப்புடனானஅனைத்து உறவுகளையும் துண்டிப்பதாக அந்நாடு அறிவித்துள்ளது. பலஸ்தீனத்தின் உரிமையை அபகரிக்கும் வகையில் இஸ்ரேலிய குடியேற்றங்கள் அமைக்கப்படுகின்றனவா? என்பது குறித்து சர்வதேச அளவிலான விசாரணை நடத்த ஐ.நா. மனித உரிமை பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. பாகிஸ்தான் தலைமையில் இஸ்லாமிய நாடுகள் கடந்த வாரம் இத்தீர்மானத்தைக் கொண்டுவந்தன. அமெரிக்கா மட்டுமே தீர்மானத்தை எதிர்த்தது. இதைத் தொடர்ந்து ஐ.நா. மனித உரிமை பேரவையுடனான உறவைத் துண்டிப்பதாக இஸ்ரேல் அறிவித்திருக்கிறது. ___ http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=37317
-
- 8 replies
- 745 views
-
-
வாஷிங்டன்: இந்தியப் பெருங்கடலில் ஆஸ்திரேலியாவுக்கு சொந்தமான கோக்கோஸ் தீவில் ஆளில்லா வேவு விமான தளத்துடன் கூடிய பிரம்மாண்ட கடற்படை தளத்தை அமைக்க அந்நாடு அனுமதி அளித்துள்ளது. கடந்த ஆண்டு அமெரிக்க அதிபர் ஒபாமாவின் ஆஸ்திரேலியா பயணத்தின் போது இருநாடுகளிடையே ராணுவ ஒத்துழைப்பை அதிகரிப்பதுடன் ஆஸ்திரேலியாவின் டார்வின் தீவில் அமெரிக்க படைகளை நிலைநிறுத்தவும் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து இலங்கைக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடைப்பட்ட இந்தியப் பெருங்கடல் பகுதியில் ஆஸ்திரேலியாவுக்குச் சொந்தமான காக்கோஸ் தீவில் பிரம்மாண்ட கடற்படை தளத்தை அமெரிக்கா அமைக்க உள்ளது. ஆளில்லா வேவு விமானங்கள் கோக்கோஸ் தீவிலிருந்து நவீன வேவுவிமானங்களை அமெரிக்கா பற…
-
- 1 reply
- 422 views
-