Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. இஸ்ரேலுக்கு விஜயம் செய்துள்ள கனேடிய வெளியுறவு அமைச்சர் ஜோன் பெயர்ட் ராம்லா பகுதி ஊடாக பயணித்த வேளையில், பாலஸ்தீனர்கள் அவரது வாகனத் தொடரணி மீது காலணிகள் மற்றும் முட்டைகள் என்பவற்றை வீசி தமது எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர். பாலஸ்தீன வெளியுறவு அமைச்சர் ரெய்ட் மாலிக்கை சந்திப்பதற்காக ஜோன் பெயர்ட் மேற்குக்கரை நகருக்கு பயணித்த வேளையிலேயே இந்த அதிருப்தி போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. “ஜோன் பெயர்ட்டை நாங்கள் பாலஸ்தீனத்திற்குள் வரவேற்கவில்லை” என்ற பதாதைகளையும் தாங்கியிருந்த போராட்டக்காரர்கள், அவருக்கு எதிரான பல்வேறு கோசங்களையும் எழுப்பி தமது கோபத்தினை வெளிப்படுத்தியுள்ளனர். கனேடிய அரசாங்கம் தொடர்ந்து இஸ்ரேலுக்கு சார்பான நிலைப்பாட்டினை வெளிப்படுத்திவரும் நிலையில், கனேடிய…

  2. வெளிநாட்டு தலைவர்கள் இந்தியா வரும் போது விமான நிலையத்தில் அவர்களை நாட்டின் பிரதமரோ, ஜனாதிபதியோ வரவேற்கும் மரபு கிடையாது. வழியனுப்பும் போது மட்டும் விமான நிலையம் வந்து வழியனுப்புவார்கள். மத்திய மந்திரி ஒருவர்தான் தலைவர்களை வரவேற்க விமான நிலையம் வந்து காத்திருப்பார். அதேபோல் இப்போது ஒபாமாவை வரவேற்கும் வரவேற்பு குழு தலைவராக மத்திய மந்திரி பியூஸ் கோயல் நியமிக்கப்பட்டு இருந்தார். அவர் ஒபாமாவை வரவேற்க பாலம் விமான நிலையம் வந்து வரவேற்பறையில் காத்து இருந்தார். ஆனால் திடீர் என்று பிரதமர் நரேந்திர மோடி பாலம் விமான நிலையத்துக்கு வந்தார். ஒபாமா விமானம் தரை இறங்கியதும் மோடி அந்த விமானத்தின் அருகே சென்று நின்று கொண்டார். அங்கிருந்த அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகளுடன் பேசிக் கொண்டு இருந…

  3. பட மூலாதாரம்,SOCIAL MEDIA படக்குறிப்பு, எம்.எஸ். படிக்க அமெரிக்கா சென்ற ஹைதராபாத் பெண்மின்ஹாஜ் ஜைதி கட்டுரை தகவல் எழுதியவர், அமரேந்திர யர்லகட்டா சதானந்தம் பதவி, பிபிசிக்காக 28 ஜூலை 2023, 08:30 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் அமெரிக்காவின் சிகாகோ நகரில் இளம்பெண் ஒருவர் சாலையில் படுத்திருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஹைதராபாத்தை சேர்ந்த பிஆர்எஸ் தலைவர் கலேகர் ரெஹ்மான் இதனை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவில் காணப்படும் இளம் பெண் தனது பெயர் மின்ஹாஜ் ஜைதி என்று கூறுகிறார். வெ…

  4. ஆஸ்திரேலியாவில் கடுமையான புயல் - காணொளி 20 பிப்ரவரி 2015 கடைசியாக தரவேற்றப்பட்டது 16:23 ஜிஎம்டி ஆஸ்திரேலியாவில் கடுமையான இரு புயல்கள் தாக்கியுள்ளன. மின்சாரம் துண்டிக்கப்பட்டு, பல வீடுகள் சேதமானதுடன், கரையோரப் பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். வெப்பமண்டல புயலான மார்சியா, குயின்ஸ்லாந்தின் கரையோரமாக யெப்பொன் மற்றும் செயிண்ட். லாரண்ஸ் ஆகிய இடங்களுக்கு இடையே வெள்ளியன்று காலையில் தாக்கியுள்ளது. போதுமான முன்னெச்சரிக்கை இன்றி வந்த அந்தப் புயல், 5 தர சூறைக் காற்றாக இருந்தாலும் பின்னர் அது தரம் 2 ஆக தரமிறக்கப்பட்டது. இருந்தபோதிலும், கடுமையான அலைகள் மற்றும் மழை ஆகியவை மிரட்டியிருக்கின்றன. பிறிதாக இன்னுமொரு வெப்பமண்டல புயலான ''லாம்'' வடக்கு பிராந்தியத்தின…

  5. ஈராக்­கிய திக்றித் பிராந்­தி­யத்தில் ஐ.எஸ். போராளிகளால் நால்வருக்கு மர­ண­தண்­டனை நிறை­வேற்­றப்­ப­டு­வதை வெளிப்­ப­டுத்தும் புதிய வீடியோ காட்­சி­யொன்று அந்த தீவி­ர­வாத குழு­வி­னரால் திங்­கட்­கி­ழமை வெளி­யி­டப்­பட்­டுள்­ளது. இது தொடர்பில் சர்­வ­தேச ஊட­கங்கள் செவ்­வாய்க்­கி­ழமை செய்­தி­களை வெளி­யிட்­டுள்­ளன. அர­சாங்­கத்­துடன் இணைந்து செயற்­பட்­ட­மைக்­கா­கவே மேற்­படி நால்­வ­ருக்கும் தீவி­ர­வா­தி­களால் மர­ண­தண்­டனை நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது.திக்றித் நகரைக் கைப்­பற்ற அந்­நாட்டு அர­சாங்கம் 30,000 படை­யி­னரை உள்­ள­டக்கி இரா­ணுவ நட­வ­டிக்­கை­யொன்றை ஆரம்­ பித்த தினத்­தி­லேயே இந்த வீடியோ காட்சி வெளி­யி­டப்­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது. மேற்­படி கொல்­லப்­பட்ட நால்வரு…

  6. ரசிகர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட பிரபலங்கள் குறிப்பாக நடிகர்கள் பயன்படுத்தும் உடைகளிலிருந்து கைக்குட்டையிலிருந்து ஒவ்வொன்றையும் ஏலம் விடும் கலாச்சாரம் பரவி வருகிறது. ஆனால் அமெரிக்காவில் ஹாலிவுட் நடிகரை முத்தமிட ஏலம் விடப்பட்டது. ரசிகைகள் போட்டி போட்டு ஏலத் தொகையை ஏற்றினர். அமெரிக்காவில் எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இதில் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான உள்ளங்களைக் கொள்ளை கொண்ட பிரபல ஹாலிவுட் நடிகரும் இயக்குனருமான ஜார்ஜ்குலூனி கலந்து கொண்டார். அப்போது எய்ட்சால் பாதிக்கப்பட்டவர் களுக்கு உதவுவதற்காக நிதிதிரட்டுவதற்காக ஏலம் ஓன்று நடத்தப்பட்டது. குலூனியை ரசிகைகள் முத்த மிடு வதற்காகத்தான் அந்த ஏலம். ஏலத்தில் வெல்பவருக்கு குலூனி முத்தம் தருவார் அந்…

  7. வென்றாலும் வீழ்ந்தாலும் அரசியல் தன்னைச் சுற்றியே சுழல வேண்டும் என்பதில் கவனமாக இருப்பார் கருணாநிதி. அதனால்தான் உள்ளாட்சித் தேர்தலுக்கான வேலைகளை மாநிலத் தேர்தல் ஆணையர் சோ.அய்யர் தொடங்குவதற்கு முன்பே, ''இந்தத் தேர்தலில் தி.மு.க. தனித்துப் போட்டி!'' என்று கருணாநிதி அறிவித்தார். கடந்த 40 ஆண்டுகளாக சவாரி பாலிடிக்ஸ் செய்துவரும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கு, இதை எப்படி எதிர்கொள்வது என்றே தெரியவில்லை. கருணாநிதியின் அறிவிப்புக்குக் கருத்து சொல்லாத தங்கபாலு, ''காங்கிரஸும் தனித்துப் போட்டி!'' என்று காமெடி பண்ணினார். ''இத... இதத்தான் எதிர்பார்த்தேன்' என்றார் இளங்கோவன். தீராத தலைவலியில் சிக்கி இருக்கும் சிதம்பரத்துக்கு இதைப்பற்றி எல்லாம் கவலைப்பட நேரம் இல்லை. ஜி.கே.வாசன் இப்போது கப்ப…

  8. கனடாவில் இருந்து ISIS இயக்கத்தில் இணைய சிரியா செல்ல முயன்ற 10 வாலிபர்கள் கைது! [Wednesday 2015-05-20 22:00] ஈராக் மற்றும் சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். இயக்கத்தினர் தொடர்ந்து வன்முறை செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த இயக்கத்தில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இளைஞர்கள் இணைந்து வருகிறார்கள். இவர்களை தடுக்கும் நடவடிக்கையில் பல்வேறு நாடுகள் ஈடுபட்டு உள்ளன. இந்தநிலையில் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் இணைவதற்காக கனடாவில் உள்ள மான்டிரையல்ஸ் டுருடியு சர்வதேச விமானநிலையத்தில் இருந்து ஈராக் மற்றும் சிரியாவிற்கு செல்ல முயன்ற 10 வாலிபர்களை கனடா போலீசார் அதிரடியாக பிடித்து கைது செய்துள்ளனர். இதுகுறித்து ராயல் கனடா மவுண்டேட் போ…

  9. தென்கொரியாவில் மெர்ஸ் வைரஸ் தொற்றியதால் பத்தாவது நபர் இறந்திருக்கிறார். அந்த நாட்டின் பொருளாதாரத்துக்கும் அந்த நோய் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. கடைகளும் உணவு விடுதிகளும் விற்பனையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக கூறும் நிலையில், தென்கொரிய மத்திய வங்கி தனது வட்டி வீதத்தை என்றும் இல்லாத அளவுக்கு ஒன்றரை வீதமாக குறைத்துள்ளது. இவை குறித்த பிபிசியின் காணொளி. http://www.bbc.com/tamil/global/2015/06/150611_mersvideo

    • 0 replies
    • 285 views
  10. Published By: RAJEEBAN 23 MAR, 2024 | 06:32 AM பிரிட்டிஸ் இளவரசி வில்லியம் கேட் மிடில்டன் புற்றுநோயல் பாதிக்கப்பட்டுள்ளார். வீடியோ அறிக்கையொன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார் புற்றுநோய் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து அதற்கு சிகிச்சை பெற்றுவருவதாக அவர் தெரிவித்துள்ளார். கடுமையான பல மாதங்களிற்கு பின்னர் இது மிகவும் அதிர்ச்சியை அளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் நான் நன்றாகயிருக்கின்றேன் ஒவ்வொரு நாளும் வலிமை பெற்றுவருகின்றேன் என அவர் தெரிவித்துளளார். நோய் பாதிப்பு குறித்த விபரங்கள் முழுமையாக வெளிவராத போதிலும் இளவரசி முழுமையாக குணமடைவார் என கென்சிங்டன் அரண்மணை நம்பிக்கை வெளிய…

  11. கவின் / வீரகேசரி இணையம் 11/4/2011 11:18:19 AM எந்நேரத்திலும் ஈரான் யுத்தத்துக்கு தயாராகவுள்ளதாகவும், இஸ்ரேல் மற்றும் மேற்குலக நாடுகள் தாக்கினால் திருப்பித் தாக்குவதற்கு தயாராகவுள்ளதாகவும் அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் அலி அக்பர் சாலி தெரிவித்துள்ளார். துருக்கி நாட்டு ஊடகமொன்றுக்கே அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், "இஸ்ரேலிடம் இருந்து கடந்த 8 வருட காலத்துக்கும் மேலாக எமக்கு அச்சுறுத்தல் இருந்து வருகின்றது. எமது நாடு ஒற்றுமையானது. எமக்கு இத்…

  12. பட மூலாதாரம்,TVBS கட்டுரை தகவல் எழுதியவர், கெல்லி Ng மற்றும் ரூபர்ட் விங்ஃபீல்ட்-ஹேயஸ் பதவி, பிபிசி செய்திகள், சிங்கப்பூர் மற்றும் தாய்பெய் 3 ஏப்ரல் 2024, 03:32 GMT புதுப்பிக்கப்பட்டது 15 நிமிடங்களுக்கு முன்னர் தைவானின் கிழக்குக் கடற்கரையில் இன்று (புதன்கிழமை, ஏப்ரல் 3-ஆம் தேதி) 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து தைவான் தீவு மற்றும் அதன் அண்டை நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நிலவியல் ஆய்வு மையத்தின் படி, இந்த நிலநடுக்கத்தின் தோற்றப்புள்ளி, தைவானின் ஹுவாலியன் (Hualien) நகருக்கு தெற்கே 18.கி.மீ. தொலைவில் உள்ளது. இந்த நிலநடுக்க…

  13. ரஷ்ய எல்லை பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்ட 68 யுக்ரேனிய ஏவுகணைகள். யுக்ரேன் வான்பாதுகாப்பு ஒத்துழைப்பினை விரைவுபடுத்தவுள்ளதாக பென்டகன் அறிவித்துள்ளது யுக்ரேனுக்கான ராணுவ ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக வான் பாதுகாப்பு ஏவுகணைகள் அனுப்பிவைக்கப்படவுள்ளதாகவும் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லொய்ட் ஒஸ்டின் தெரிவித்துள்ளார் ரஷ்ய படையினரின் வான் அச்சுறுத்தல் அதிகரித்துவருவதனால் அவசரமாக தமக்கு பாதுகாப்பு ஒத்துழைப்பு தேவைப்படுவதாக யுக்ரென் ஜனாதிபதி வொலேடிமிர் ஸெலன்ஸ்கி அமெரிக்காவிடம் கோரிக்னை முன்வைத்திருந்தார் இந்த நிலையில் யுக்ரேனுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்ட 60 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியிலான ராணுவ உதவியில் 6 பில்லியன் பெறுமதியான…

  14. திரைத்துறையில் உலக வல்லரசாக வேண்டும் என்பது பாகிஸ்தானின் ஆசை. இந்திய திரைத்துறையில் பதிந்திருக்கும் கண்களை தமது பக்கம் திரும்பச் செய்து, சர்வதேச மட்டத்தில் அத்துறையின் தன்னை முக்கிய பங்காளியாக்கும் நோக்குடன் ஒரு புதிய படத்தை அது வெளியிட்டிருக்கிறது. 'பின்ரோய்' என்ற அந்தப் படம் இந்திய திரைத்துறையின் வழமையான தயாரிப்புச் செலவுகளுக்கு நிகராக செலவிடப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளது. காதல் காட்சிகள், ஆடல்கள், பாடல்கள் என இந்திய சினிமாவின் பாணியை இது பின்பற்றுகின்றது. இது குறித்த பிபிசியின் ஒரு காணொளி. http://www.bbc.com/tamil/global/2015/07/150722_binroye

  15. பெய்ஜிங் , ( சின்ஹுவா) நாடுகள் மத்தியில் அதிகரிக்கின்ற வர்த்தக தற்காப்புவாதம் மற்றும் ஒருதலைப்பட்ச போக்கின் விளைவான குளறுபடிகளுக்கு மத்தியிலும், சீனாவின் மண்டலமும் பாதையும் செயற்திட்டம் ( China's Belt and Road Initiative -- BRI ) வளர்முக நாடுகளினதும் வளர்ச்சியடைந்த நாடுகளினதும் பலமான ஒரு வரவேற்பைப் பெற்றிருக்கிறது.இதுவரையில், 124 நாடுகளும் 29 சர்வதேச அமைப்புக்களும் சீனாவுடன் மண்டலமும் பாதையும் செயற்திட்ட ஒத்துழைப்பு உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டிருக்கின்றன. மண்டலமும் பாதையும் செயற்திட்டத்துடன் தொடர்புபட்ட மூன்றாவது தரப்பு சந்தை ஒத்துழைப்பை சீனாவுடன் சேர்ந்து மேம்படுத்துவதற்கு பிரான்ஸ் இணங்கிக்கொண்டிருக்கும் அதேவேளை, அந்த செயற்திட்டத்தை கூட்டாக முன்னெடுப்பதற்…

  16. லண்டனில் தமிழ் மக்கள் செறிவாக வாழும் 'ஹரோ ஒன்த ஹில்' பிராந்தியத்தில் உள்ள 'மெட்ரோ வங்கி' வங்குறோத்து நிலையை அடைந்துவிட்டதாகவும், அந்த வங்கியில் பாதுகாப்பு வைப்பிலிடப்பட்டிருக்கும் பொருட்களை இனிமேல் எடுக்கமுடியாது என்பதான வதந்திகள் சமூகவலைத்தளங்கள் ஊடாகப் பரவியதைத் தொடர்ந்து, இன்று நூற்றுக் கணக்கான மக்கள், குறிப்பாக தமிழர்கள் வாங்கிக்கு முன்பாக திரன்டிருந்தார்கள். தாம் பாதுகாப்பு பெட்டிகளில் வைப்பிலிட்ட நகைகள், ஆவணங்களை எடுப்பதில் நூற்றுக்கணக்கான தமிழ்கள் முண்டியடிப்பதை அங்கு காணக்கூடியதாக இருந்தது. இது தொடர்பாக அந்த வங்கியைத் தொடர்புகொண்டபோது, அதுவெறும் வதந்தி என்றும், மிகவும் லாபத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் தமது வங்கி மீது அபாண்டமான குற்றச்சாட்டை யாரோ வேண்டுமெ…

    • 23 replies
    • 2k views
  17. தவிக்கும் தாய்லாந்து - 1 தாய்லாந்தின் எரவானில் உள்ள பிரம்ம தேவன் கோயில். எரவான் ஆலயம் என்பது தாய்லாந்தில் மிகவும் பிரபலம். அதன் முக்கியக் கடவுள் ஓர் இந்துக் கடவுள்தான் பிரம்மா. பிரம்மாவை அங்கு ப்ராப்ரோன் என்கிறார்கள். சிறிய ஆலயம். ஆனால் அங்கு இரு வருடங்களுக்கு முன் சென்றிருந்தபோது வியப்பு ஏற்பட்டது. எக்கச்சக்கமான பக்தர்கள். அது ஒரு திறந்தவெளிக் கோயில். பக்கத்தில் பல உயர்ந்த கட்டிடங்கள். முக்கிய மாக, கிராண்ட் ஹையத் எரவான் ஹோட்டல். பாங்காக்கின் சிட்லோன் ரயில்வே நிலையத் துக்கு அருகில் அமைந்த பகுதி இது. இந்த ஆலயம் உருவான கதை சுவையானது. 1956ல் அரசுக்குச் சொந்தமான எரவான் ஹோட்டல் இங்கே எழும்பத் தொடங்கியது. ஆனால் கட்டுமானம் தொடங்கியதிலிருந்து நிறைய பிரச்னைகள். எதிர்பார்த…

  18. ஜேக்குவார், லேண்ட்ரோவர் கார் தொழிற்சாலைகளை டாடா வாங்கிக்கொள்ளட்டும் : தொழிலாளர்கள் விருப்பம் லண்டன் : இங்கிலாந்தில் தயாரிக்கப்படுபவை புகழ் பெற்ற கார்களான ஜேக்குவார் மற்றும் லேண்ட்ரோவர். இப்போது அமெரிக்காவை சேர்ந்த பிரபல கார் நிறுவனமான ஃபோர்டு நிறுவனத்திற்கு சொந்தமாக இருக்கிறது. இந்த இரண்டு கார் நிறுவனங்களையும் விற்று விட ஃபோர்டு நிறுவனம் முடிவு செய்திருந்தது. இதனை வாங்கிக்கொள்ள இந்தியாவின் டாடா நிறுவனமும், மகேந்திரா அண்ட் மகேந்திரா நிறுவனமும் போட்டி போடுகின்றன. இந்நிலையில் ஜாக்குவார் மற்றும் லேண்ட்ரோவர் கார் கம்பெனிகளின் தொழிலாளர்கள் யூனியனின் கூட்டமைப்பு, எங்கள் நிறுவனத்தை ஃபோர்டு நிறுவனம் விற்பதானால் அதை டாடா நிறுவனத்திற்கு விற்கட்டும் என்று விருப்பம் தெரிவித்துள…

    • 0 replies
    • 1.2k views
  19. ஐ.நா சர்வதேச நீதிமன்றத்தை நாடும் லண்டன் போக்குவரத்து துறை! லண்டன் போக்குவரத்து துறைக்கு சில நாடுகளின் தூதரகங்கள் செலுத்த வேண்டிய ஒருதொகைப் பணம் செலுத்தப்படாமல் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. லண்டனில் போக்குவரத்து நெரிசல் மற்றும் மாசுபாட்டை குறைப்பதற்காக 2003ஆம் ஆண்டு முதல் நெரிசல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகின்றது. இந்த நெரிசல் கட்டணமானது 1961ல் தூதரக உறவுகள் தொடர்பான வியன்னா மாநாட்டில் உருவாக்கப்பட்டதாகும். இந்த திட்டத்தால் கனரக வாகனங்கள் மாற்று வழியில் பயணம் செய்யவேண்டும். இதனால் நெரிசல் குறைவடையும். போக்குவரத்து நெரிசல் கட்டணம் அமல்படுத்தப்பட்டுள்ள வீதிகளில் குறைவான புகையை வெளிப்படுத்தும் சிறிய வகை வாகனங்கள் இலவசமாக பயணிக்க முடியும். அதிக புகைய…

  20. சிரிப்புப்பகுதியில் இணைக்க வேண்டிய செய்தி. பேனா முனையில் ஈழப் பிரச்சினைக்கு தீர்வு காண்போம் - இளங்கோவன் சென்னை: பேனா முனையை விட எதுவும் வலிமையானதல்ல. எனவே பேனா முனையில் ஈழப் பிரச்சினைக்குத் தீர்வு காண இலங்கைப் பத்திரிக்கையாளர்கள் உதவ வேண்டும் என்று மத்திய ஜவுளித்துறை இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார். சென்னை, காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். கல்லூரியில் இலங்கையைச் சேர்ந்த 20 பத்திரிக்கையாளர்கள், இதழியல் படிப்பில் 6 மாத டிப்ளமோவை முடித்துள்ளனர். அவர்களுக்கான சான்றிதழ்களை வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் இளங்கோவன் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், ஈழப் பிரச்சினையை சுமூகமாகத் தீர்க்க முடியும். தமிழகத்தில் சிலர் இதை …

  21. ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பிலிருந்து விலக, சில ஆண்டுகளுக்கு முன், பிரிட்டன் முடிவு செய்தது. அதற்கு பிரெக்சிட் மசோதாவை தாக்கல் செய்து, பார்லி.,யில் ஒப்புதல் பெற ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. பலமுறை ஓட்டெடுப்பு நடந்த போதும், அப்போதைய பிரதமர் தெரசா மே அரசு தோல்வியடைந்ததால், அவர் கடந்த ஜூன் மாதம் பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து புதிய பிரதமராக போரிஸ் ஜான்சன் தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், பிரெக்சிட் ஒப்பந்தத்தை நிறைவேற்ற வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. இதற்கான நம்பிக்கை ஓட்டெடுப்பு இன்று (செப்.,3) அந்நாட்டு பார்லி.,யில் நடைபெற்று வந்தநிலையில், ஆளும் கன்சர்வேடிவ் கட்சி எம்.பி., பிலிப் லீ, எதிர்கட்சி எம்.பி.,க்களின் வரிசையில் அமர்ந்தார். பிலிப் லீ எதிர்கட்சியான சுதந்த…

    • 3 replies
    • 572 views
  22. பாகிஸ்தானில் கடந்த 1990-ம் ஆண்டு நடந்த 4 குண்டு வெடிப்புகளில் தொடர்பு உடையவர் என்று கூறி கைது செய்யப்பட்ட சரப்ஜித் சிங் என்ற இந்தியருக்கு அந்த நாட்டு கோர்ட்டு தூக்கு தண்டனை விதித்தது. அவருக்கு எந்த நேரத்திலும் தண்டனை நிறைவேற்றப்படலாம் என்ற நிலை உள்ளது. இதற்கிடையே, கருணை காட்டி தன்னை விடுவிக்க வேண்டும் என்று கோரி சரப்ஜித் சிங் பாகிஸ்தான் அதிபர் முஷரப்புக்கு மனு அனுப்பி இருந்தார். அவரது கருணை மனுவை தீவிரமாக பரிசீலித்த முஷரப் அதை நிராகரித்து விட்டதாக பாகிஸ்தான் செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது. பாகிஸ்தானில் 35 ஆண்டு சிறைவாசத்துக்கு பிறகு விடுதலை செய்யப்பட்ட பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த காஷ்மீர் சிங் நேற்று முன்தினம் இந்தியா திரும்பின…

  23. 'ஆவீன மழைபொழிய இல்லம் வீழ அகத்தடியாள் மெய்நோக அடிமை சாக மாஈரம் போகுதென்று விதை கொண்டோட வழியினிலே கடன்காரர் மறித்துக்கொள்ள கோவேந்தர் உழுதுண்ட கடமை கேட்க குருக்கள் வந்து தட்சணைக்குக் குறுக்கே நிற்க பாவாணர் கவிபாடிப் பரிசுகேட்க பாவிமகன் படும்துயரம் பார்க்கொணாதே...' - துன்பத்தின் துன்பமாக வந்து போட்டுத் தாக்குவதைப் பற்றி விவேக சிந்தாமணியில் நொந்து போய் வரும் பாடல் இது. ராமேஸ்வரம் பகுதி மீனவர்களின் கதி இதையெல்லாம் தாண்டியே போச்சு! இலங்கைக் கடற்படைத் தாக்குதல், கண்ணி வெடி அச்சுறுத்தல், கடத்தல்காரர்கள் தொல்லை, போலீஸ் நெருக்கடி என்று திக்திக் வாழ்க்கை நடத்தும் நம் மீனவர்கள், 'எங்கள் பகுதிக்குள் மீன் பிடிக்க வராதே... வந்தால் பதிலடி கொடுப்போம்' என்கி…

    • 9 replies
    • 2k views
  24. கடாபியின் மகன் ஹன்னிபல் லெபனானில் கடத்தப்பட்டு விடுதலை லெபனானில் ஆயுதக்குழுவொன்றினால் கடத்தப்பட்டிருந்த முன்னாள் லிபியத் தலைவர் முகம்மது கடாபியின் மகன் விடுவிக்கப்பட்டிருந்தார். இவரைக் கடத்திய குழு, லிபியாவில் பத்தாண்டுகளுக்கு முன் காணாமல் போன ஷியா மதகுருவின் தகவல்களைக் கோரியிருந்தது. நேற்று, உள்ளூர் அல்-ஜடீட் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காணொளி ஒன்றில் தோன்றிய ஹன்னிபல் கடாபி, மதகுரு மௌசா அல்-சதார் பற்றிய தகவல்களை வைத்திருப்பவர்களை முன்வருமாறு கோரியிருந்தார். நான் தேவையானவர்கள் என நினைக்கும் மக்கள் கேட்பார்கள் என நம்புவதாகவும் அவர்கள் ஆதாரங்களை வைத்திருப்பதாகவும் அவற்றை தாமதமில்லாமல் உடனடியாக வெளிக்கொணருமாறும் இந்த வேதனை …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.