உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26679 topics in this forum
-
சோனியா வாழ்த்துடன் திமுக அணி வெல்லும்:திருமா காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் வாழ்த்துகளுடன், வரும் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்றார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன். திமுக கூட்டணிக் கட்சிகளின் தேர்தல் பிரசாரக் கூட்டம் இன்று மாலை சென்னை தீவுத் திடலில் நடைபெற்றது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முதல்வர் கருணாநிதி, பாமக தலைவர் ராமதாஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், திமுக அரசு கொண்டு வந்த நலத் திட்டங்களைப் பட்டியலிட்டார். ஜெயலலிதாவின் இரண்டு ஆட்சிகளிலும் பழிவாங்கல் நடவடிக்கைகளும், ஆடம்பர செயல்களுமே அவரது சாதனைகள் என்று குறிப்பிட்ட அவர்,…
-
- 18 replies
- 1.6k views
- 1 follower
-
-
ஹெய்தி அதிபர் தேர்தலில் அந்நாட்டின் புகழ்பெற்ற பாப் பாடகர் அதிபர் வேட்பாளர் தேர்வில் வெற்றி பெற்று அதிபராக தேர்வு செய்யும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. லத்தீன் அமெரிக்க நாடான ஹெய்தி நாட்டிற்கான அதிபர் தேர்தல் கடந்த ஆண்டு நவம்பரில் நடந்தது. இத் தேர்தலில் அந்நாட்டின் புகழ்பெற்ற பாப் பாடகர் மைக்கேல்மார்டிலி (50) போட்டியிட்டார். இவரை எதிர்த்து முன்னாள் அதிபரின் மனைவி மிர்லாண்டேமெனிகாட் (75) என்பவரும் போட்டியிட்டார்.இந்நிலையில் தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில் மைக்கேல் மார்டிலி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் வரும் ஏப்ரல் 16-ம் தேதி அதிபராக பதவியேற்கவுள்ளார். ஹெய்தியில் கடந்த 2010-ம் ஆண்டு நிகழ்ந்த பயங்கர பூகம்பத்தினால் ஆயிரக்கணக்கானோர் பலியாயின…
-
- 0 replies
- 756 views
-
-
ஆப்பிரிக்க நாடான காங்கோவில் தொடர்ந்து கலவரம் மற்றும் வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. எனவே, ஐ.நா.சபை அங்கு அமைதிபடையை அனுப்பியுள்ளது. அதில் 19 ஆயிரம் வீரர்கள் உள்ளனர். இவர்கள் கலவரக்காரர்கள் மற்றும் தீவிரவாதிகளிடம் இருந்து மக்களை காப்பாற்றி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று ஐ.நா.சபையின் அமைதிப் படை வீரர்கள், ஊழியர்கள் உள்பட 33 பேர் ஒரு விமானத்தில் கிசன்கனியில் இருந்து கின்ஷாசா நகருக்கு புறப்பட்டு சென்றனர். இந்த விமானம் கின்ஷாசா விமான நிலையத்தில் தரை இறங்கியது. அப்போது விமானம் தனது கட்டுப்பாட்டை இழந்து தரையில் மோதி தீப்பிடித்தது. இதனால் விமானம் வெடித்து சிதறியது. இச்சம்பவத்தில் விமானத்தில் பயணம் செய்த அமைதிப்படை வீரர்கள் மற்றும் விமான ஊழியர்கள் உள்பட 32 …
-
- 0 replies
- 462 views
-
-
உலகம் வெப்பமயமாகி விட்டதால் வழக்கத்தைவிட பனிப்பாறைகள் அதிக அளவில் உருகத் தொடங்கி விட்டன. அவை கடந்த 350 ஆண்டுகளைவிட தற்போது கூடுதலாக உருகி வருகிறது. தென் அமெரிக்காவின் படகோனியாவில் உள்ள பனிப்பாறைகள் மிகப் பெரியவை. அவற்றில் உள்ள 270 பனிப்பாறைகள் தற்போது உருகத் தொடங்கி உள்ளன. இதனால் அங்கு கடந்த 30 ஆண்டுகளில் ஐஸ்கட்டிகளின் அளவு மிகவும் குறைந்துள்ளது. இது படிப்படியாக குறைந்து பனிப்பாறைகள் இல்லாத நிலை உருவாகும். அதேபோன்று ஆல்ப்ஸ் மலையில் உள்ள பனிப் பாறையும் உருகி வருகிறது. இவ்வாறு உருகி வருவதால் பனிப்பாறைகள் இல்லாத நிலை உருவாகி, ஆறுகள் வற்றும் சூழ்நிலை ஏற்படும். அதேநேரத்தில் கடலில் நீர்மட்டம் உயர்ந்து பெரும்பாலான தீவுகள் மற்றும் கடலோர நகரங்கள் தண்ணீரில் மூழ…
-
- 0 replies
- 773 views
-
-
அனந்தப்பூர் : மூச்சுத் திணறல் மற்றும் நெஞ்சுவலியால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் உடல்நிலை, தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக, அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவமனை டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். ஆந்திரா, புட்டபர்த்தி, ஸ்ரீசத்யசாய் பாபாவிற்கு கடந்த மார்ச் 28ம் தேதி திடீரென நுரையீரல் கோளாறு ஏற்பட்டதையடுத்து, மூச்சுத்திணறலும் ஏற்பட்டது. இதையடுத்து, அவர், புட்டபர்த்தியில் உள்ள பிரசாந்திகிராமில் உள்ள சூப்பர் ஸ்பெஷாலிடி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். தற்போது, வெண்டிலேட்டர் உதவியுடன் சுவாசிக்கும் சாய்பாபாவின் உடல்நிலை , கவலைக்கிடமாக இருப்பதாக, அவருக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். சத்ய சாய் உயர் …
-
- 1 reply
- 1.1k views
-
-
தமிழகத்து தேர்தல் களத்தில் கருணாநிதிக்கு எதிராக ஈழத் தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சி! 2009ம் ஆண்டு மாவீரர் நாளை முன்னிட்டு வளரி வலைக்காட்சிக்காக பிரான்சு ஈழத்துக் கலைஞர்களின் கைவண்ணத்தில் உருவான "மூடுதிரை" எனும் நிகழ்ச்சி கலைஞர்; கருணாநிதிக்கு எதிராக தமிழகத்தின் கப்டன் தொலைக்காட்சி ஒளிப்பரப்பாக்கி வருகின்றது. சிறிலங்கா அரசுத் தலைவரை மையப்படுத்தி உருவாக்கம் பெற்றிருந்த இந்த நிகழ்ச்சி ஏற்கனவே பெருவாரியான தமிழர்களின் கவனத்தைப் பெற்றிருந்த நிலையில் மீண்டும் தமிழகத்தின் தேர்தல் களத்தில் முக்கிய கருவியாக கலைஞர் கருணாநிதிக்கு எதிராக கப்டன் தொலைக்காட்சி பாவிக்கின்றது. வளரி வலைக்காட்சிக்காக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தகவல்துறை துணை அமைச்சராக இருக்கின்ற …
-
- 1 reply
- 1.2k views
-
-
2009 ல் அத்திலாந்துக்கடலில் விபத்துக்குள்ளான பிறேசிலுக்கு சொந்தமான விமானத்தின் துண்டுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.மனித எச்சங்களும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் போக்குவரத்து அமைச்சர் கூறுகிறார்.
-
- 1 reply
- 860 views
-
-
சத்யசாய் பாபா சுகவீனமுற்று, வைத்திய சாலையில் அனுமதி. அவரின் உடல் நிலை, தேறியுள்ளதாக வைத்தியர்கள் தெரிவிப்பு. சாய் பாபா, விரைவில் ஸ்ரீலங்கா சென்று, மகிந்தராஜ பக்சவை சந்திக்க இருந்ததாக அண்மையில் செய்தி ஒன்று வெளியாகி இருந்தது. http://www.youtube.com/watch?v=OM1dpBKW_1k&feature=relmfu
-
- 9 replies
- 1.8k views
- 1 follower
-
-
உலகக் கோப்பை நமக்கு ஒரு கேடா..? நேற்று இரவு முதல் இந்திய நாடு முழுவதும் கொண்டாட்டங்கள். கும்மாளங்கள்..! ஏதோ இந்திய நாட்டின் கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வென்றுவிட்டதாம்..! அதனால் சந்தோஷமாம்..! நானும் மிகச் சமீபம் காலம்வரையிலும் நல்ல இந்தியனாகத்தான் இருந்து வந்தேன். சில, பல உண்மைகளை நேரில் அறியும்வரையிலும்.. படித்தறியும்வரையிலும் உண்மையான தேச பக்தனாகத்தான் இருந்து தொலைந்தேன்.. ஆனால் இப்போது இந்தியன் என்கிற அடையாளத்தை வெறுத்து ரொம்ப நாளாச்சு.. என்னிக்கு இவனுக கிரிக்கெட்டை சர்வதேச வியாபாரமா மாத்தினாங்களோ.. அன்னிக்கே கிரிக்கெட் மேல இருந்த பைத்தியமும் போயிருச்சு.. போதாக்குறைக்கு மேட்ச் பிக்ஸிங்ன்னு ஒண்ணை உறுதிப்படுத்திய நாளில் இருந்து இந்திய கிரிக்கெட் …
-
- 1 reply
- 1k views
-
-
அமெரிக்காவிற்குச் சென்றிருந்த கனேடிய தம்பதியைக் காணவில்லையாம் கனடாவின் பிரிட்டிஸ் கொலம்பியாவினைச் சேர்ந்த வயது முதிர்ந்த தம்பதியினர் கடந்த வியாழன் முதல் காணவில்லை என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் கனேடியப் பொலிசாரும் அமெரிக்க அதிகாரிகளும் இணைந்து காணாமற் போனவர்களைத் தேடிக் கண்டுபிடிக்கும் பணியினைத் தீவிரப்படுத்தியிருக்கிறார்கள். 59 வயதுடைய அல்பேட் சறிற்றின் மற்றும் 56 வயதான அவரது மனைவி றிரா சறிற்றின் ஆகிய இருவரும் கனடாவிலிருந்து தங்களது பணி நிமித்தம் அமெரிக்காவின் லாஸ் வேகஸ் பகுதிக்குப் பயணித்திருக்கிறார்கள். பெரும்பாலும் திங்கள், செவ்வாய் அல்லது புதன் கிழமைகளில் திரும்புவதாகக் கூறிவிட்டுச் சென்றவர்களிடமிருந்து எந்தத் தகவலும் இல்லாத நிலையில் இவர்…
-
- 0 replies
- 821 views
-
-
கனடாவின் வின்னிபெக்கில் தீயணைப்புப் படை வாகனம் மோதி ஒருவர் மரணம் கனடாவின் வின்னிபெக் பகுதியில ரெட்வூட் அவனியூ பகுதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் ஒருவர் கொல்லப்பட்டிருக்கிறார். இன்று அதிகாலை தீயணைப்புப் படை வாகனத்தில் மோதுண்டே இந்த நபர் இறந்திருக்கிறார். சம்பவ இடத்திலேயே தீயணைப்புப் படை வாகனம் இன்னமும் நிறுத்தப்பட்டிருக்கிறது. அருகே யாரும் செல்லாதவாறு பொலிசார் மஞ்சள் நாடாவினைக் குறுக்கும் நெடுக்குமாகக் கட்டியிருக்கிறார்கள். மோசமாக இந்தத் தாக்குதல் இடம்பெற்ற இடத்தில் தொடர்ந்தும் காணப்படும் வின்னிபெக் பிராந்தியப் பொலிசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுவருகிறார்கள். நகரத்தின் பவேஸ் மற்றும் செல்ரர் வீதிகளுக்கு இடையில் ரெட்வூட் பகுதியில் இந்த விபத்து இடம்பெற…
-
- 0 replies
- 746 views
-
-
சிறுவர் உடல் வலுவூட்டல் செயற்பாடுகளுக்கான ஊக்கத்தொகை இரட்டிப்பாகும் என்கிறார் காப்பர் தங்களது கென்சவேட்டிவ் கட்சியின் ஆட்சிபீடமேறுமிடத்து சிறுவர் உடல் வலுவூட்டல் செயற்பாடுகளுக்கான ஊக்கத்தொகை இரண்டு மடங்காக அதிகரிக்கப்படும் என்றும் வரவு செலவுத் திட்டம் சமப்படுத்தப்பட்ட பின்னர் இளைஞர்களுக்கான வலுவூட்டல் செயற்பாடுகளுக்கான ஊக்கத்தொகையும் அறிமுகப்படுத்தப்படும் என காப்பர் அறிவித்திருக்கிறார். கென்சவேட்டிவ் கட்சி ஆட்சிபீடமேறுமிடத்து சிறுவர் வலுவூட்டல் செயற்பாடுகளுக்கான ஊடக்கத்தொகை 500 டொலர்களிருந்து 1000 டொலர்களாக அதிகரிக்கப்படுமென்று இன்று காப்பர் அறிவித்திருக்கிறார். அதேநேரம் வரவுசெலவுத்திட்டம் சமப்படுத்தப்படுமிடத்து இளைஞர்களுக்கான புதிய உடல் வலுவூட்டல் ஊக்கத்தொகையா…
-
- 0 replies
- 732 views
-
-
இரண்டாவது தவணையும் சனாதிபதியாக பயணத்தை ஒபாமா தொடங்குகிறார் Barack Obama 2012 Campaign Announcement Expected Monday President Barack Obama is expected to announce that he will run for reelection in 2012 on Monday, CNN reports. Democratic sources tell the network that the president will alert supporters of his plans in a video sent via email or text message. http://www.huffingtonpost.com/2011/04/03/barack-obama-2012-campaig_n_844053.html Barack Obama to announce re-election bid this week President Barack Obama plans to announce his bid for re-election in 2012 with a message to supporters this week that aides hope will set him on course to become the firs…
-
- 3 replies
- 1k views
-
-
கட்சித் தலைவராக கருணாநிதியைத் தேர்ந்தெடுத்தது லட்சக்கணக்கான தொண்டர்கள்! ஆட்சி முதல்வராக கருணாநிதியை அமரவைத்து அழகு பார்த்தது கோடிக்கணக்கான மக்கள்! ஆனால், உண்மையில் கட்சியையும் ஆட்சியையும் கைக்குள் வைத்து, பவர் பாலிடிக்ஸைப் பக்குவமாகச் செய்துவருபவர்கள் யார் யார் தெரியுமா? 'திராவிட முன்னேற்றக் கழகம் ஒன்றும் சங்கர மடம் அல்ல. எனக்குப் பின்னால் என் மகன். அவருக்குப் பின்னால் அவரது மகன் என்று பட்டத்துக்கு வருவதற்கு! இந்தக் கட்சியில் பொதுக்குழு, செயற்குழு இருக்கிறது. அதுதான் அனைத்தையும் தீர்மானிக்கும்’ என்பது கருணாநிதி அடிக்கடி சொல்லும் வார்த்தைகள். ஆனால், கட்சியின் பொதுக்குழு, செயற்குழுவை மிஞ்சியதாக இருக்கிறது இந்த ஹோம் கேபினெட்! கருணாநிதியின் தலைமையில் தி.மு.க. வந்த …
-
- 1 reply
- 3.8k views
-
-
சீபீஐ அமைப்பு செல்பேசி ஒதுக்கீடு தொடர்பான குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தது செல்பேசி அலைகள் ஒதுக்கப்பட்ட விவகாரம் தொடர்பான குற்றப்பத்திரிக்கையை சீபீஐ அமைப்பு சிறப்பு நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்தது. இந்த வழக்கை விசாரிப்பதற்கெனச் சிறப்பாக அமைக்கப்பட்ட நீதிபதி சயினி தலைமையிலான சிறப்பு நீதிமன்றத்தில் இன்று எண்பதாயிரம் பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யப்பட்டது. முன்னாள் மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ராசாவுக்கும், மேலும் எட்டுப் பேருக்கும் எதிராகவும், மூன்று தொலைத்தொட்ர்பு நிறுவனங்களுக்கும் எதிராகக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. இந்த விவகாரம் தொடர்பாகச் சிறையில் உள்ள ராசா உட்பட்ட நான்கு பேருக்கும் எதிராக, ஏமாற்றியமை, ஆவண…
-
- 1 reply
- 804 views
-
-
-
- 11 replies
- 2.3k views
-
-
விமானத்தின் கூரையில் தீடீர் தூவாரம்! அமெரிக்காவில் விமானம் அவசர தரையிறக்கம்! Posted by uknews On April 2nd, 2011 at 8:10 pm / No Comments 118 பயணிகளுடன் வானில் பறந்துகொண்டிருந்த விமானமொன்றின் கூரையில் திடீரென துவாரம் ஏற்பட்டதால் அவ்விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் அமெரிக்காவில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது. சௌத்வெஸ்ட் எயார்லைன்ஸை சேர்ந்த இவ்விமானம் கலிபோர்னியா மாநிலத்தின் சாக்ரமென்டோ நகரிலிருந்து புறப்பட்டு சிறிது நேரத்தில் துப்பாக்கி வெடியோசை போன்ற சத்தம் கேட்டதாக விமானத்தில் பயணம் செய்த பிரெண்டா ரீஸ் எனும் பெண் தெரிவித்துள்ளார். “விமானத்தின் கூரையில் திடீரென பாரிய துவாரம் ஏற்பட்டது. அதற்கூடாக வானத்தை பார்க்க முடிந்தது’ என அவர் கூறினார்.வி…
-
- 1 reply
- 757 views
-
-
புலித் தடை நீக்க கையெழுத்து வாங்கும் இயக்குநர்! மெளனத்தை...அச்சத்தை... உடைப்போம்! மே மாத வெயில், தேர்தல் அனல், இந்த உஷ்ணத்தில், 'தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும்’ எனக் கோரி, சென்னையில் கையெழுத்து இயக்கத்தை நடத்தி முடித்திருக்கிறார் இயக்குநர் புகழேந்தி தங்கராஜ்! இந்த நிகழ்ச்சியைக் கடந்த ஆண்டு அக்டோபர் 18-ம் தேதி, சென்னையில் நடத்த இருப்பதாக புகழேந்தி அறிவித்து இருந்தார். போலீஸ் தரப்போ, 'தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாக பொது இடத்தில் கையெழுத்து இயக்கம் நடத்தக் கூடாது’ என தடைவிதித்தது. 'பொது இடத்தில் எனக் கூறித்தானே தடை விதிக்கிறீர்கள்...’ என கங்கணம் கட்டிய புகழேந்தி, சென்னைப் பத்திரிகையாளர் மன்றத்தில், அந்தக் கையெழுத்து இயக…
-
- 0 replies
- 749 views
-
-
சனிக்கிழமை, 2, ஏப்ரல் 2011 (7:0 IST) இலவச செல்போன்: புதுவை காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் தகவல் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள ஏழைகளுக்கு இலவச செல்போன், அனைத்து குடும்பத்தினருக்கும் இலவச குளிர்சாதன பெட்டி வழங்கப்படும் என்று புதுவை காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுவை சட்டமன்ற தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன் வெளியிட்டார். அதில் கூறப்பட்டிருப்பதாவது: புதுவை ழூனியன் ஆட்சி பரப்புக்கு சிறப்பு மாநில அந்தஸ்து வழங்க மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி பெற்று 40 தொகுதிகள் பெற வழிசெய்வோம். மக்களின் தற்கால அவசர மற்றும் அவசிய தேவைகளை கருத்தில்கொண்டு ஏழை, எளிய மக்களும் நவீன யுத்திகளை கையா…
-
- 0 replies
- 613 views
-
-
மனித உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் நாடுகளின் முன்னணியில் கனடா இல்லையென சர்வதேச மன்னிப்புச் சபை குறை கூறியது. மனித உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் நாடுகளின் முன்னணியில் கனடா தற்போது இல்லையென சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்தது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பிரகடனங்களில் கையெழுத்திட மறுத்தமை, ஆப்கானிஸ்தானில் கைதிகள் நடத்தப்பட்ட முறை தொடர்பாக தவறுகளை ஏற்க மறுத்தமை, வெளிநாடுகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கனேடியர்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கத் தவறியமை உட்பட, அண்மைய ஆண்டுகளில் கனடா எடுத்துள்ள பல நடவடிக்கைகளின் காரணமாக இந்தக் கருத்து ஏற்பட்டுள்ளதென சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் சலில் ஷெட்டி (Salil Shetty) கூறினார். இஸ்ரேல் தொடர்பான கனேடிய …
-
- 1 reply
- 604 views
-
-
அமெரிக்காவில் குர்-ஆன் எரிப்பு, ஆப்கானிஸ்தானில் ஐ.நா. பணியாளர்கள் கொலை ஏழு ஐ.நா. பணிப்பாளர்கள் உட்பட பன்னிரண்டு பேர் இன்று அப்கானிஸ்தானில் கொல்லப்பட்டனர். கடந்த மாதம் புளோரிடா மாநிலத்தில் "தீவிரவாத" அமெரிக்கர் ஒருவரால் இஸ்லாமியர்களின் புனித புத்தகமான குர்-ஆன் எரிக்கப்பட்டது. இதற்கு பழி வாங்கும் நோக்குடனேயே இந்த தாக்குதல் நடாத்தப்பட்டதாக எண்ணப்படுகின்றது. Twelve people were killed Friday in an attack on a U.N. compound in northern Afghanistan that followed a demonstration against the reported burning last month of a Quran in Florida, authorities said. The fatalities comprised seven U.N. workers and five demonstrators, officials said. Another 24 people w…
-
- 6 replies
- 1.4k views
-
-
ஐவரிகோஸ்டில் கடுமையான மோதல்கள் நடந்துகொண்டிருக்கின்றன. கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் அங்கு நடந்த தேர்தலில் வெற்றிபெற்றதாக சர்வதேச சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்ட அதிபர் அலசேன் ஒட்டாரா அவர்களின் படைகள், அந்த தேர்தல் முடிவை ஏற்றுக்கொள்ளாத முன்னாள் அதிபரான லாரண்ட் பாக்பூ அவர்களுக்கு விசுவாசமான படைகள் மீது கடுமையான தாக்குதல்களை நடத்திக் கொண்டிருக்கின்றன. தற்போது அங்கிருந்து வரும் தகவல்களின்படி பாக்போ அவர்களுக்கு ஆதரவான படைகள் மிகவும் மோசமாகப் பின்வாங்கிக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. அவரது படையில் இருந்த பலர், ஒன்றில் ஆயுதங்களை கைவிட்டு விட்டு தப்பி ஓடிவிட்டனர் அல்லது ஒட்டாராவின் படைகளுடன் சேர்ந்து விட்டனர் என்று செய்தியாளர்கள் கூறுகிறார்கள். கடந்த நவம்பர…
-
- 19 replies
- 1.9k views
-
-
போர்க்குற்றவாளி ராஜபக்சேவை மீண்டும் மீண்டும் சிவப்புக் கம்பளம் விரித்து இந்தியாவுக்கு அழைப்பதா? என்னை கொழும்பு விமான நிலையத்திலேயே திருப்பியனுப்பிய அவர், எந்த முகத்தை வைத்துக் கொண்டு இந்தியாவுக்கு வருகிறார், என கேள்வி எழுப்பியுள்ளார் திருமாவளவன். இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கை: இந்தியா-இலங்கை, நாடுகளுக்கிடையிலான உலகக் கோப்பை இறுதி கிரிக்கெட் விளையாட்டுப் போட்டியைப் பார்த்து ரசிப்பதற்கு சிங்கள இனவெறி அதிபர் ராஜபச்சே ஏப்ரல் 2-ந் தேதி மும்பை வர இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்த கொலைவெறியன் ராஜபக்சே இந்தியாவுக்கு மீண்டும் மீண்டும் வருகை தருவது தமிழ்ச் சமூகத்தை வேதனைப் படுத்துவதாக…
-
- 4 replies
- 886 views
-
-
ஜெ.வை சந்தித்தேனா? வைகோ ஆவேசம் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அரசியலில் எமது இயக்கத்தை பற்றியும், என்னைப் பற்றியும் கடுமையான விமர்சனங்கள் ஏடுகளில், ஊடகங்களில் வந்தாலும் அவற்றை ஜனநாயக பண்போடு தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவத்தை பெற்று இருக்கிறோம். எவ்வளவோ கடுமையாக நாம் காயப்படுத்தப்பட்ட நேரங்களிலும், ஆத்திரத்துக்கு கிஞ்சிற்றும் இடம் கொடுத்தது இல்லை. நாளிதழ் ஒன்றில் இன்றைக்கு மறுமலர்ச்சி தி.மு.க. தலைமை, அ.தி.மு.க. தலைமையை சந்தித்து பேசியதாக குறிப்பிட்டு தேர்தல் களம் என்ற தலைப்பில் பிரதானமாக வெளியிடப்பட்ட செய்திக்கு உள்ளே ஏழாம் பக்கத்தில் உண்மை என்ன? என்று கூறி, நான்கு வரிகளில் இது ஏப்ரல் முதல்நாள் செய்தி என குறிப்பிட்டு உ…
-
- 0 replies
- 2.1k views
-
-
சென்னையில் இருந்து திருப்பதிக்கு காரில் செல்கிறார் ராஜபக்சே இந்தியா இலங்கை இடையேயான உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டி நாளை மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கிறது. இப்போட்டியை பார்க்க இலங்கை அதிபர் ராஜபக்சே மும்பை வருகிறார். முன்னதாக திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கவும் ராஜபக்சே திட்டமிட்டுள்ளார். இதற்காக ராஜபக்சே இன்று சிறப்பு விமானம் மூலம் சென்னை வருகிறார். பின்னர் சென்னையில் இருந்து கார் மூலம் திருப்பதி கோவிலுக்கு செல்கிறார். அங்கு சுமார் 1 மணி நேரம் ஏழுமலையானை தரிசனம் செய்து சிறப்பு பூஜையில் கலந்து கொள்கிறார். பின்னர் இரவில் திருப்பதி மலையில் ரிலையன்ஸ் நிறுவனம் கட்டிக் கொடுத்த ஸ்ரீகிருஷ்ணா பிரமாண்ட விருந்தினர் மாளிகையில் தங்குகிறார். பின்னர் காலை அங்கிருந…
-
- 3 replies
- 1.4k views
-