கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
வானம் கறுத்து வடித்தது கண்ணீர் – மர வேரினை நனைத்து வீழந்தது மண்ணில்! உயிரது வாழ உதவிய அந்நீர் – அன்று மழையைப் போலே மண்ணில் சிலரும்! மானத்தமிழன் வாழ்ந்திட வேண்டி மரணத்தைக்கொடையாக கொடுத்திட்ட பலரில் உயரிய சிந்தனை பல கொண்டு உயர்ந்திட்ட உறவாய் நீயும் நின்றாய் எம் சோதரா! ஈழம் ஒன்றே தாகமாய்க்கொண்டு ஈய்ந்த உயிர்கள் பல எம்மண்ணில் உண்டு! தாயகக் கனவை நெஞ்சில் கொண்டு வாழ்ந்திட்டாய் நீயும் எம்முள் ஒன்று! நல்லது தீயது நெருப்பறியாது – தலைகீழாய் பிடித்தாலும் கீழ் பார்த்தெரியாது – காவிய காலத்தின் பின்னே மீண்டும் அக்கினி பூத்து உன்னால் புனிதமானது சகோதரா! மானத் தமிழரை உறவாய் கொண்டாய்! எங்கள் மனதை தமிழா நீ வென்றாய்! வாழ வேண்டும் ஈழம் என்றே வங்…
-
- 2 replies
- 1.1k views
-
-
எல்லாம் உயிர்பெறும் ச.ச.முத்து எங்கே அந்தக் கவிஞன்? இங்கேதான் நின்றானே.-யாரும் பார்த்தால் மெல்ல என்னிடம் காதருகில் சொல்லுங்களேன். எங்கே அந்தக் கவிஞன்? இங்கேதான் நின்றானே.-யாரும் பார்த்தால் மெல்ல என்னிடம் காதருகில் சொல்லுங்களேன். வன்னிமண்ணின் மொத்தஅழகும் நந்திக்கடலின் அலைவடிவும் அழகான என் தேசத்து எழில்அனைத்தும் அவன் இல்லாமல் எப்படியாய் உறைந்து கிடக்குது பாருங்கள்.-கால் படர்ந்த கல் எழுந்து அகலிகை ஆனதுபோல் அந்தக் கவிஞன் எழுதி என் தேசம் எழுந்து வரட்டுமே. மூச்சும் பேச்சும் இன்றி ஒரு மூலையில் கிடந்துவி;ட்டு போய்விடலாம்.-ஆனால் அவன் பாட்டும் சந்தக் கவியும் இன்றி எப்படியாய் காலம் இனிக் கரையும்.? எதிரிராணுவத்தில் சின்னஓய்வுப்பொழுதில் …
-
- 2 replies
- 934 views
-
-
மாதந்தை வேலுப் பிள்ளை மரணித்தார் என்றதுமே வேதனை தாங்கவில்லை வெம்பியழ இடமுமில்லை சோதனைகள் மத்தியிலே சோர்ந்தவர் மடிந்தாரோ பாதகர்கள் கொடுமையினால் புனிதரவர் இறந்தாரோ சாதனைகள் புரிந்தவொரு தமிழ்த்தலைவன் கருகொடுத்து மாதரசன் மணியாட்சி மகிழவொரு காலத்தே அதனழகைப் பார்க்காமல் உயிர்விடுத்தல் தகுமாமோ? சீதாவின் நிலையுறுத்தி சீரன்னை பார்வதியும் சேதியொன்று மறியாது சித்தங்கலங்கி நிற்க பேதையென வாடியங்கே புலம்புவது சரிதானோ? ஆதரிக்குந் தமிழரணி அணியணியாச் சிதறுதற்கு போதனைக்கு ஒருபெரியோன் இல்லாத குறையன்றோ வேதமொழி தாயகமாய் கொண்டவரால் நீதியங்கே அணிவகுத்த காலத்தை அழித்தங்கே அரக்கருடன் தாயகத்துக் கனவுகளை தகர்த்தெறியும் ஆட்சிவெறி தமிழ்மானம்…
-
- 1 reply
- 713 views
-
-
1 மாலை நேரக்காற்று முன்னிற்க மணநாளில் பவ்யமாய் விடை பெறுகிறாள் மணப்பெண் அவளது பர்தாவுக்குள் முகம் புதைத்தபடி மலர்களின் வாசனையோடிணைந்த புணர்ச்சியைப் போதிக்கிறாள் தமக்கை. தானே அறிந்திராத தடித்த புத்தகத்தின் பக்கங்களை துரிதகதியில் புரட்டுகிறாள் எந்த நாளில் புணர்ந்து கருவைத் தள்ளிவைக்கலாம் எனவும் ஹராமாக்கப்பட்டதெனவும்* கூடவே புணர்ச்சிக்குப் பிந்தைய சுத்த பத்தங்களையும் தன் குள்ள உருவத்திற்கேற்ற குற்றக் கண்களில் குறுக்கிடுகிற வாழ்வின் சுகவீனங்களையும் நைந்து போன புணர்ச்சியின் வெற்றுச் சூத்திரங்களையும் தனக்குள்ளாக ஒளித்தபடி அவ்வப்போது வெட்கத்தில் துவண்டு விழுகிற வார்த்தைகளை சிறுமியின் அசட்டுத் தன்னம்பிக்கையு…
-
- 1 reply
- 939 views
-
-
------------------------------------------------------------------ எல்லா அறிவிப்புகளும் முடிந்துவிட்டன. செய்திகளும் புகைப்படங்களும் எல்லோரையும் நம்பவைத்து சென்றுவிட்டன. அதே முட்கம்பிகளுக்குள் அம்மாவின் முகம் சுருங்கிக்கிடக்கிறது. தங்கையின் கூந்தல் வளராமலிருக்கிறது. எங்களுக்கிடையில் அதே முட்கம்பிச் சுருள்கள் அம்மாவின் அருந்திக்கொண்டு வந்த புன்னகையை காயப்படுத்திக்கொண்டிருக்கிறது. தங்கையின் கையிலிருக்கிற புத்தகத்தை கிழித்துக்கொண்டிருக்கிறது. எனக்காக அம்மா பிட்டினைச் சுமந்து வந்தாள். காத்திருப்பின் எல்லைகளை வீடு செல்லுகிற கனவினை நகரத்திற்கு மீள்கிற நம்பிக்கையை அம்மா முட்கம்பிகளில் சொருகியிருக்கிறாள். நுளம்புகள் கூடாரத்தை தூக்கிச் செல்லும்…
-
- 0 replies
- 738 views
-
-
மெல்ல மெல்லக் கசியும் உண்மைகளிலிருந்து நீண்ட பெருவெளிக் கனவு தற்கொலை செய்து கொள்கிறது..... முட்புதர்களின் அடர்த்திக்குள்ளிருந்து சொட்டுச் சொட்டாய் சேர்த்து வைத்தவையெல்லாம் இரத்தம் குளி(டி)த்துப் பெருத்து நாறிப் பிணங்களாய் மனித எலும்புக் கூடுகளாய் வெளிவருகிறது. நேசித்தவர்களும் நேசிப்பின் நினைவாய் விட்டுச் சென்ற வார்த்தைகளும் ஆள்மாறி ஆள்மாறி அவர்கள் பகிர்ந்தவற்றைப் பகிர்ந்து கொண்டு துயர் வலியில் தடயமறிவிக்காமல் தொடர்பிலிருந்து விடுபடுகிறார்கள். சீருடைகளோடு நிமிர்ந்து நின்ற வீரங்கள் சாவின் நிணம்மாறாத் தடைமுகாம் வேலிகள் பின் தலைகுனிந்து.... யாது நிகழ்ந்திற்று ஏது நடந்திற்றென்று ஏதுமறியா நிலையில் இலக்கத் தகடுகளால் அவர…
-
- 9 replies
- 1.6k views
-
-
கண்ணே இதுவரை துப்பாக்கியும் தோட்டாவும் போல் இணைந்திருந்த எம்காதல் இத்துடன் முடிந்ததா என்று எண்ணாதே இது என்ன சாதாரண காதலா தண்ணீரும் உரமும் இட்டா எம்காதலை வளர்த்தோம் இரத்தமும் தசையும் இட்டல்லவா எம்காதலை வளர்த்தோம் எல்லாளன் துட்டகைமுனு காலத்திலிருந்து இரண்டாயிரம் ஆண்டுகளாக வேர்விட்டு தளிர்விட்டு பூவிட்டு கனிவிட்ட காதலல்லவா இத்தனை இலகுவில் அழிந்துவிடுமா என்ன என்மேல் நீ கொண்ட காதல் மாறாதிருப்பது போல உன்மேல் நான் கொண்ட காதலும் அப்படியே இருக்கும் காலம் வரும் வரை காத்திரு கண்ணே நான் மீண்டும் உன்காட்டில் புலியாக வருவேன் அதுவரை உன்காலில் முள்ளாகவாவது இருப்பேன் http://gkanthan.wordpress.com/index/eelam/kaathal/
-
- 8 replies
- 4.9k views
-
-
அவனும் இவனும்.. அவனும் கொலை செய்தான்.. இவனும் கொலை செய்தான்.. முன்னவனை தியாகி என்றனர்.. பின்னவனை துரோகி என்றனர்..
-
- 1 reply
- 803 views
-
-
இன்பமில்லாத பொங்கலில்.... -------------------------------- காலையெழுந்தவள் கடமை தனதென்று பொங்கினாளவள் பிள்ளைகளுக்காகவென்று...... நித்திரை தொலைந்த இரவுகள் ஆனதால் அதிகாலையிலே படுக்கையைத் துறந்து நீராடிவிட்டு சமையலறையை எட்டிப் பார்த்தேன் பொங்கியிருந்தாள் ! பொங்கியழுதது என் மனம் அப்போ...... நம்பிக்கை பொங்கிய நாட்களை எண்ணி நம்பிக்கை தந்தோர் நடைபிணமானது எண்ணி விழுப்புண்ணடைந்தோர் விதியினை எண்ணி விலங்குகள் போல சிறைகளில் வாடும் தமிழரை எண்ணி தை பிறந்தால் வழி பிறக்குமாம்(!) தமிழன் வாழ்வில் எப்போது பிறக்கும் பிணங்களின் மேலே கண்டிய நடனம் தமிழன் எலும்புகளாலே மாலைகள் சூடும் தமிழ்த் தலைமைகள் இருக்கும் வரையிலே இ…
-
- 3 replies
- 772 views
-
-
பேய்கள் கூட்டத்தில் இரண்டு பெரிய பேய்கள் சுடுகாட்டை ஆழ்வதற்கு அதில் ஒரு பேயை தெரிவு செய்ய வேண்டும் ஒரு பேய்க்கு நல்லூர் கந்தன் துணை மற்றப் பேய்க்கு கதிர்காமக் கந்தன் துணை இரண்டு பேய்களின் வாய்களிலும் குருதியும் சதையும் பிரண்டுபோயுள்ளது இன்னும் வாயை கழுவக்கூட இல்லை சும்மா சொல்லக் கூடாது எங்கள் சனத்தை இரண்டுபேரும் நல்லாத் தின்றவங்கள் ஏவறை விட்டபடி வலம்வரும் பேய்களில் எமக்குப் பிடித்த பேய் எது? பேய்களில் என்னய்யா பிடிப்பும் வெறுப்பும்? இல்லை தமக்குப் பிடித்த பேய்களை சுட்டிக்காட்டுவது அவரவர் ஜனநாயக உரிமை தானே? நிச்சயமாக எங்கள் விருப்பப் படிதான் எங்களை தின்னவேண்டும் இந்த உரிமையை யாருக்காகவேனும் விட்டுக்கொடுக்க முடியா…
-
- 11 replies
- 2.2k views
-
-
தமிழர் சொரணை மீட்பு பொங்கல்.. வெற்று சவடால் அரசியல் மேடை பேச்சில் எச்சில் தெறிக்க.. ஆட்டு மைந்தைகள் கர்சீப் கொண்டு அதை துடைக்க.. மைக்கும் அதிர்ந்து தன்னை நிறுத்தி கொண்டது நம் வேலைக்கு இவர்கள் வேட்டுவைப்பார்கள் என்று.. ஈழத்தில் உன்உறவுகள் செத்து கிடக்க.. இவனோ தேரதல் பிரியாணியை தின்று நடக்க.. சொறிநாய் ஒன்று காலை தூக்கியது இது கல்லோ என்று.. தலைவனின் சுவரொட்டியை ஒட்டிவிட்டு அசையாமல் நின்றான் வேறுயாரும் கிழித்துவிடக்கூடாது என்று.. தின்ன அசைந்து வந்த எருமை மாடு அவனை கண்டு ஒதுங்கிபோனது இவனை விட நாம் மேல் என்று.. ஈழத்தில் உன் உறவுகள் சாகிறார்கள்-என்னால் என்ன செய்யமுடியும்? காவிரி பறிபோகிறது என்னால் என்ன செய்யமுடியும்? முல்லை பெரியாற்றை உட…
-
- 7 replies
- 1.8k views
-
-
-
அரசன் கொண்டு வந்த பழங்களுக்காக நாம் வழங்கிய பூக்கள் அரசன் பழங்களுடன் வந்திருக்கிறான். யுத்தத்தில் பிடுங்கப்பட்ட பழங்களை நேற்று மைதானம் எங்கும் எறிந்துகொண்டிருந்தான். நான் இப்பொழுதும் கேட்கிறேன் அடிப்படையாக எங்கள் வேலிகளில் இருக்க வேண்டிய மரங்களையும் குழந்தைகளின் பொம்மைகளையும் தந்துவிடு என்று. என் அன்பு மிகுந்த சனங்களே! எங்கள் பிடரிகளால் குருதி கசிந்துகொண்டிருக்க இந்த மைதானம் இழந்தவற்றைக் கோரிக்கொண்டிருக்கிறதை நீங்கள்தான் அமைத்து வைத்திருக்கிறீர்கள். எங்கள் கோரிக்கைகளும் அரசனின் தந்திரம் நிரம்பிய வாக்குறுதிகளும் நஞ்சுக் கனிகளில் மறைந்திருக்கின்றன. துக்கம் உறைந்த நாட்களை எண்ணி கவலைப்படும் எங்கள் தந்தையே! ஒரு நாள் குழந்தைகள் புதருக்கிடைய…
-
- 1 reply
- 709 views
-
-
என் உண்னதக் காதலலுக்கு புண்னைகையாய் வாந்தாய் பூவிழிலி ஓரம் நீர்த் துளி வழிவி என மேல் காதல் கொண்டாய் தேன் உதடால் மோகம் செய்து உருமை கொண்டாடினாய் பூ விரல் கொண்டு என் மேனி வருடினாய் அவள் கூந்தல் ஆண்டவன் செய்த கருநீர் அரிவி யார் இவளோ? தேன் அமுதோ? www.tamil1.tk www.tamil.2.ag
-
- 1 reply
- 884 views
-
-
காற்றும், வானும், நீர், நிலம், நெருப்பும் தழுவி உம் மெய் ஆற்றட்டும். மண்டியிடாத மன்னவனை எமக்களித்த மாமனிதா சரித்திரச் சங்கமிப்பில் நெருப்பெடுக்கும்போதில் மண்ணின் கணிதத்தில் மரணமும் ஜனனமய்யா. பாக்கு நீரிணையின் சிற்றலைகள் மிடுக்கெடுக்க உப்புக் காற்றுறையும் ஊறணியில் இனத்தின் மீளெழுச்சித்துயில் கொள்க. காற்றும், வானும், நீர், நிலம், நெருப்பும் தழுவி உம் மெய் ஆற்றட்டும். வல்வை மண் சாந்தி தரும்.
-
- 2 replies
- 835 views
-
-
நண்பர்கள் சமீபத்தில் லீனா மணிமேகலை எழுதிய இரண்டு கவிதைகளைப் படித்து விட்டு கட்டுரைக்கு வரவும். 1.முதல் கவிதை: நான் லீனா நான் இலங்கையில் இந்தியாவில் சீனாவில் அமெரிக்காவில் ஆப்பிரிக்காவில் செரோஜெவாவில் போஸ்னியாவில் துருக்கியில் ஈராக்கில் வியட்நாமில் பொலியாவில் ரெமானியாவில் வாழ்கிறேன் என் வேலை என்னிரு தொடைகளையும் எப்பொழுதும் பரப்பியே வைத்திருப்பது நாடு கோருபவ்ர்கள் ஜிகாத் தொடுப்பவர்கள் புரட்சி வேண்டுபவ்ர்கள் போர் தொடுப்பவர்கள் ராஜாங்கம் கேட்பவர்கள் வணிகம் பரப்புபவர்கள் காவி உடுப்பவர்கள் கொள்ளையடிப்பவர்கள் நோய் பிடித்தவர்கள் எவன் ஒருவனும் வன்புணர்வதற்கு ஏதுவாய் யோனியின் உதடுகளை அரிந்துப் போட்டு கருங்குழியென செத…
-
- 3 replies
- 3.9k views
-
-
கடந்து செல்லும் 2009....... -------------------------------------------- கடந்து செல்லும் 2009 மறந்திட முடியாத துயர ஆண்டு தமிழினம் குருதியும் சதையுமாய் கொடுமையைச் சுமந்த துயர ஆண்டு துயரங்கள் வாழ்வின் பகுதியானது துவண்டு நாம் வாழ்ந்திடல் பயன் தராது ! இழப்பின் வலிகளை இதயத்தில் பதிவோம் இனியென்ன உள்ளது என்றே நிமிர்வோம் பணியெங்கள் பணியது தேசம் மீட்பதே என்பதை எங்கள் இதயத்தில் பதிவோம் கனியெங்கள் கைகளில் வருமோர்நாளென்று காரியம் ஆற்றிடும் வலிமையை பெறுவோம்! கையைக் குலுக்கியே முதுகிலே குத்தினார் அவரைக் கட்டித் தழுவியே முகத்திலே அறையும் நல் தந்திரங்களை நாமும் தேடுவோம் நாளைய ஆண்டினை எமதாய் மாற்றுவோம்! நம்பிக்கையோடு எம் மனங்களை இணைப்போம் நாளையென்பதை…
-
- 7 replies
- 1.2k views
-
-
ஏய்.. பயங்கர வாத சமூகமே என் மீது காரி உமிழ்வாய் என் கருவருப்பாய் என்னினம் பங்கமுற்று அழிய கொல்லி ஈட்டுவாய் நான் எள்ளி நகைக்கவா????? ஏனென்று கேட்டால் என்னை தீவிரவாதி என்கிறாய்; நீ சுட்டுப் பொசுக்குவாய் புதைகுழிக்குள் உயிரோடு புதைப்பாய் மலை போல் என் மனிதர்களை கொட்டி எரிப்பாய் வெறி வந்தால் வீடேறி கற்பழிப்பாய் என் தேச விடுதலைக்கென போராடும் இதயங்களை வெளியே எடுத்து - நீ தானே.. நீ தானே… என கண்டம் துண்டமாய் வெட்டி வெட்டி அடுப்பு விறகிற்கு மத்தியிலேயிட்டு வெற்றி வெற்றி என கர்ஜிப்பாய்……………… நீ போராளி? நான் தீவிர வாதியா?????? பாருங்கள் உலகத்தீரே.. எங்களின் கண்களிலென்ன கண்ணீரா வடிகிறது அப்படி வேடிக்கை பார்கிறீர்களே, ரத்தம் உலகத…
-
- 3 replies
- 2.1k views
-
-
உன் வரவில் குளித்தாடுமா வெல்லம்? சந்தனம் கமழ, செந்தமிழ் குழைய மங்கலம் இழைய "வருக என் பொன்னாண்டே" என்று வரவேற்கும் இங்கிதம் தொலைந்து போன உள்ளம் உன் வரவில் குளித்தாடுமா வெல்லம்? வருக புத்தாண்டே. அழைத்தாலும், விட்டாலும் அகலக்தடம் விரித்து - எங்கள் வாழ்வின் வாசலில் வினையாற்றத் தொடங்கிவிட்டாய். அழைத்தென்ன? விட்டென்ன? அனுமதி கேட்டா வருகின்றாய்? வந்தது வந்துவிட்டாய் வலிய வந்த சீதேவியே! எங்கள் வாழ்வின் வாசலில் கோலமிடு. நேற்றுன் சோதரி வந்தெடுத்துப் போனாள். ஒப்பாரி ஓலங்களை மட்டுமே எங்களதாய் மிச்சப்படுத்தி, கண்மூடித் திறக்குமுன்னே களவாடிப் போய்விட்டாள். எங்களுக்கென்று பத்திரப்படுத்த, செல் விழுந்த சிதைவிடையே உயிர் காவி …
-
- 4 replies
- 1.1k views
-
-
-
ஒருகணம் வழித்தடம் திரும்பி... வீறுகொண்டெழுவோம்! 2010.. இது புத்தாண்டு! வாசல் திறந்து வரவேற்கின்றோம். ஆனால்... வண்ணக்கோலமிட முடியவில்லை. வளைதோரணம் கட்டவும் இயலவில்லை. வாசல் தொலைத்து வாடிக்கிடக்கின்றோம். அந்நியன் வாசலில் யாசகம்செய்து – ‘புத்தாண்டே வாராய்!’ என்று இரு கரம்நீட்டி அழைக்கின்றோம். பத்தோடு பதினொன்றாக ஆண்டுகள் வருவதுண்டு. வந்தவழியே திரும்பிப் போவதுமுண்டு. நாங்களும் வரவேற்போம் - முந்நூற்றறுபத்தைந்து நாட்கழித்து ஒவ்வோராண்டும் கடந்து சென்றுவிடும். 2009 வந்தது. உள்ளம் பட்டாம் பூச்சியாக சிறகு விரித்துப் பறந்தது. கண்கள் அகலத்திறந்து வாசல் நோக்கி விரிந்தது. இது எங்கள் ஆண்டு! இது எங்களுக்கான ஆண்டு! என்றன்றோ அப்பொழுது திளைத்தோம்?…
-
- 3 replies
- 1.5k views
-
-
கண் மூடிக்கடவுளைத்தரிசனம் பண்ணினேன் என் முன்னால் ஓர் உருவம் வந்து நிற்பதுபோல் காலடிச்சத்தம் கேட்டது இது யாராக இருக்கும் உள்ளம் கேள்வி கேட்டது இவ்வளவு கம்பீரமான காலடி சத்தம் மெதுவாகக்கண் திறந்தேன் ஆமாம் என் முன்னால் நானே நிமிந்து பார்க்கக் கூடிய ஓர் உருவம் மெல்ல நிமிந்து முகத்தைப்பார்த்தேன் என்னவனை முதல் முதலில் பார்த்த முதல் நாள் மறக்க முடியாத நாளும் கூட கோயிலில் கூட்டம் இருப்பதையே மறந்து உன்னையே பார்த்தேன் உன் மேல் வைத்த கண்ணை எடுக்க முடியவில்லை என்னை ஒரு முறையாவது திரும்பிப்பார்க்க மாட்டாயா என்ற ஏக்கத்தில் உன்னையே பார்த்துக்கொண்டு நின்றேன் கடவுளுக்கு என்னிடம் கருணையே இல்லையே என்று திட்டினேன் நான் திட்டியது அவன் காதில் …
-
- 20 replies
- 2.4k views
-
-
உன்னைப் பற்றி எழுதியே கவிதையாகி விடுகிறது என் கிறுக்கல்கள் ஒவ்வொன்றும் * என் முதல் கவியை நினைக்கும்போதெல்லாம் நான் மறப்பதில்லை உன் முதல் முத்ததை * என்னை கிறுக்கனாக்கிக் கொண்டிருக்கிறது உன்னை பார்த்த என் கவிதைகள் * நீ மிக அழகானவள் என்பதற்கு உன் மேல் பொறாமைப்படும் என் கிறுக்கல் ஒன்று போதாதா * எனக்கான உன்னை எப்படியாவது மிஞ்ச வேண்டும் என்பதே என் கவியின் தவம் -யாழ்_அகத்தியன்
-
- 0 replies
- 577 views
-
-
இறந்தால் சொர்க்கம் எப்படி இருக்கும் என்பதை வாழும்போது தந்து கொண்டிருப்பவள் நீ * யார் சொன்னது கண்பட்டால் வாழமுடியாது என்று என்னவள் கண் பட்டதால்தானே வாழ்கிறது என் கவிதைகள் * உன் மூக்குத்தி மின்னுவதில் தெரிகிறது வானவில்லின் அழகு * உன் பாதச்சுவடெங்கும் தேங்கிய மழை நீரில் உன் முகம் காட்டுகிறது நிலா * வாடாத உன் புன்னகை கண்டு பொறாமைப்படுகிறது பூக்கள் எல்லாம் * உன் வருடலுக்காய் ஏங்குகிறது என் நரைமுடிகள் -யாழ்_அகத்தியன்
-
- 5 replies
- 1.1k views
-
-
வா..வா!! ----------------------- கை குட்டையை கண்ணீரில் சலவை செய்த ஆண்டே 2005 போய்வா தோழா! சுனாமி என்று ஆரம்பித்தாய் ஜோசப் பரராஜசிங்கம் வரை கொன்று தொலைத்தாய்! என்ன உனக்கு நாம் செய்தோம் ஏன் இப்படி? இருந்தாலும் போய்வா! 2006 ஏ வா வா ! வண்ணப்பூக்கள் கொண்டு எம் வாசலில் கோலம் போடுவாயா? வாழ நினைக்கும் எங்கள் நெஞ்சில் கூரிய வாளதை.. பிறர் போல் மீண்டும் பாய்ச்சுவாயா? கெஞ்சி கேட்கிறோம்... நீயும் இரத்த சாரலை எம் முகத்தில் தூறாதே... தாங்கமாட்டோம்! வாய் மூடிபோன பீரங்கி வாய்களை ஒலிவம் கிளைகள் கொண்டு அடைத்துள்ளோம்! அதன் இலைகளை நெருப்பு கரம் கொண்டு இனியும் எரித்திடாதே.. அணைத்திடாதே! தர்மம் வெல்லும் என்று நினைத்தோம்-…
-
- 15 replies
- 2.9k views
-