கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
இப்பாடலை எனக்கு பெரியார் திரவிடக் கழகத்தைச் சேர்ந்த யாழ்கள உறுப்பினர் தனிமடலில் அனுப்பி இருந்தார். கேட்க நன்றாக இருக்கிறது. http://www.thayagakaatru.com/songs-2009/el...n-thalaivan.mp3
-
- 5 replies
- 4.8k views
-
-
தளபதிகள் தவறு செய்வதில்லை! அவர்கள் தவறுகளே செய்வதில்லை, அது அவர்கள் எதையுமே செய்யாதலாலில்லை. அவர்கள் செய்கிற எதிலும் சரியான அனைத்தும் அவர்களுடையதாகவும் தவறான அனைத்தும் மற்றவர்களுடையதாகவும் உரிமைப் படுத்தப் படுகின்றன. அதைவிடவும், மற்றவர்கள் செய்கிறவற்றிலும் சரியானவற்றின் வழிகாட்டலுக்கான உரிமையும் அவர்களையே சாருகிறது. தவறானவற்றைப் பகிர பலருங் காத்திருக்கின்றனர். எனவே, அவர்கட்கு எல்லோரையுந் திருத்திக் கொண்டிருக்க முடிகிறது. என்ற போதும், அதே தவறுகள், நாள் தவறாமல் திரும்ப திரும்ப நிகழ்கின்றன. ஒவ்வொரு தடவையும், ஒவ்வொரு தவறும் அவர்கட்கன்றி மற்றவர்கட்கே உரித்தாகுகின்றன. அவர்கள் தவறுகளே செய்வதில்லை, ஏனெனில் அவர்கள் தளபதிகள். தளபதிக…
-
- 0 replies
- 1.8k views
-
-
பிஞ்சு நிலவு கவிதை - இளங்கவி.... பருவ ஏக்கத்தில் படுக்கைகள் நனைய...... என் கனவு பேரழகித் தேர்வுக்காய் பாதச் சுவடுகள் நடந்தன.... நிலவை மட்டும் தேடும் நேசக் கண்களுக்கு... என் மனதைக் குளிரவைக்க ஓர் நிலவு இன்னமும் கிடைக்கவில்லை.... சிறு தூரம் நடக்கிறேன்.... நடு நிசியின் நட்சத்திரக் கூட்டம் போல் வீதியோ ஜொலி ஜொலிக்க என் வேதனைக்கு விருந்தாக ஓர் வெண்ணிலவு... ஆம்.. அவள் ஓர் வெள்ளை நிலவு.... இவள் வேண்டாம்.... எனக்கு என் சொந்த மண்ணீன் காந்த நிலவு வேண்டும்... என் நடை தொடர சின்னச் சிரிப்பொலியொன்று என்னைச் சிறிதாய் கவர்ந்திழுக்க திசை நோக்கிப் பார்க்கிறேன் நம் தேசத்தது நிலவு அவள்.... அவள் கண்களோ பேசியது பல கதைகள்.... …
-
- 0 replies
- 752 views
-
-
தனித்த பெருவெளியில் வீரிட்டு அழுகின்றது வேலைக்காரனின் குழந்தைகள் அள்ளி அணைக்க முற்பட்டு தோற்றுப் போகின்றது புதையுண்ட கைகள் எலும்புகளில் இருந்து சதைகள் கரைந்து நரம்புகள் கரைந்து இத்து மக்கிவிட்டது கண்காணிகளே வாருங்கள் என் சடலக் குழிமேல் முருங்கை மரத்தை நடுங்கள் செழித்து வளர நான் உரமாக இருக்கின்றேன் காய்களை தின்று முறுகித் திரியுங்கள் முடியாது யாராவது பயிரிட்டு காய்களை மட்டும் அனுப்புங்கள் பணம் தருகின்றோம் யாரும் இல்லை இங்கே பறவாயில்லை நாங்கள் வேறு இடத்தில் வாங்குவோம் உங்களால் எழுந்து வந்து வாங்கித் தர முடியுமா? வேலை செய்ய விருப்பந்தான் ஆனால் முடியாது எலும்புகளும் இத்துப்போகும் நிலமைக்கு வந்துவிட்டது. …
-
- 3 replies
- 1.1k views
-
-
காதலைப்பிழிந்து பிழிந்து கவிதை வடிப்போம்..! மென்மனசுக்காரர் நாமெனப் பீற்றித் திரிவோம்..! எம்மைக் கடிக்கும் எறும்பையும் தடவிக்கொடுக்கும் வள்ளலார் ஆவோம்! மிருகவதைக்கு எதிரானவர் என்று கோஷமிடுவோம்..! ஏட்டில் எல்லாமே எழுதி வைப்போம்! சொல்லில் வாள் வீச்சு நடத்துவதே நம் செயலாக்கி மகிழ்வோம்! துடித்து அழும் என் இனம்.. உயிர் வதையில் வலி கொள்ளும்.. என் உதரம்.. முள்வேலிக்குள் அடைக்கப்பட்டுள்ள எம் உறவுகள்.. ம்ஹீம்.. அவர் விழிநீர் துடைக்க கூட விரல் கொடுக்கமாடோம்.. ஏனெனில் நாம் மனிதாபிமானிகள்..! - அஞ்சனா மூலம்: கரும்பு வலைப்பூ
-
- 7 replies
- 1k views
-
-
வணிகம் பேசினாலே மனிதம் பேசுவார்களா? இற்றைக்கு இரண்டு ஆண்டுகள் முன்புவரை ஒரு “தேசத்தின் குரல்” சர்வதேசத்தின் செவிப்பரைகளில் மோதி மோதி இந்து சமுத்திரத்தில், ஈழத்தமிழினத்தின் விழிகரித்த உப்புகடலில் குருதி கொப்பளித்துக் கிடக்கும் ஈழத்தின் இருப்பை உரைத்துரைத்து ஓய்ந்து போனது. கண் மறைந்து போன கால நீட்சியில் கற்றுக் கொண்டதும், கண்ணீர் விட்டதும், கனக்கும் இதயக்கூட்டின் கணக்கில் அடங்காமல் நீண்டநெடும் பயணத்தில் இன்னும் தொடர்கிறது. வேர் மடியின் தாகம் கொண்டு எத்தனையோ உன்னதங்களை, வேதனையைச் சுமந்து சுமந்து உலகிற்குக் காட்டியாயிற்று. தர்மத்தின் தலையில் சூது இல்லை என்பதையும் உணர்த்தியாயிற்று. நீறிட்டுக் கிடக்கின்றன நெருப்பின் முகவரிகள் …
-
- 4 replies
- 913 views
-
-
"தமிழ் முரசு"(ஞாயிறு பதிப்பு){சிங்கப்பூர் தமிழ் தினசரி} இல் இன்று படித்ததில் சட்டென்று மனதைப் பற்றிப் பிசைந்த கவிதை... மிக இலகுவான மொழி நடை... இலாகவமான,ஆனால் காத்திரமான சொல்லாட்சிகள் என்றதுடன்,ஈழத்தமிழர் அல்லாதவரின் கவிதை என்பதும் கவரத் தூண்டின... நன்றிகளுடன் யாழ் கள உறவுகளோடு பகிர்ந்து கொள்கிறேன் வேர் வாசிகள் - பிச்சினிக்காடு இளங்கோ வாழ்க்கையை விரும்பியவர்கள் மண் சுதந்திரத்தை மறுதலித்தார்கள். மண் சுதந்திரம் மானம் என்றவர்கள் வெடித்துச் சிதறினார்கள். களத்தில் நில்லாமல் காகிதத்தில் நின்றவர்கள் புரட்சியைப் போர்த்திக்கொண்டார்கள். கல்லறைகளில் எழும் கட்டடடத்தில் குடிபுக மல்லுக் கட்டுகிறார்கள் சனநாயகத் துணையுடன்
-
- 6 replies
- 1.7k views
-
-
வெள்ளைக் கூடுகள்.... கவிதை - இளங்கவி... இறுதியாக எங்கள் மனிதப் படுகொலைகள் நடந்த முள்ளிவாய்க்கால் பகுதியில் வசிக்கும் காகமும் குஞ்ச்சுகளும் பேசுவதாக ஓர் கற்பனை.... நம் புதுவீடு வெள்ளையாய் பளிச்சென்று இருக்கம்மா...! வெள்ளைமரக் குச்சிகள் இங்கே புதிதாகக் கண்டாயா....? இல்லையடா செல்லம்... இது இங்கே மரணிடத்த மனிதர்களின் எலும்பச் சிதறல்கள்.... மழையுடன் புயலும் தாங்கும் மாமிசச் சிதறல்கள்.... நாம் வானத்தில் பறந்ததால் ஓர் வழியாகத் தப்பித்தோம்... இவரோ பூமியில் வாழ்ந்ததால் புதைகுழியில் சிதறிக் கொண்டார்.... அவர் எலும்புச் சிதறல்களில் உமக்கு அழகாய் வீடமைத்தேன்... அவர் வாழ்ந்த இடமெல்லாம் நீர் விளையாட வழியமைத்தேன்... சரி..சரி சிங்க…
-
- 0 replies
- 522 views
-
-
காதலில் தொலைந்தேன்...... கவிதை வலியாக- -இளங்கவி அந்திப் பொழுது அழகன பூஞ்சோலையில்... ரோஜா குளியலில் நான் திழைத்திருக்க மல்லிகைக் குவியலாய் என் மனங்கவர அவள் வந்தாள்.... என் முன்னால் முட்செடியில் ரோஜாக்கள்... முழு நிலவாய் அவள் முகம்... மூன்றாம் பிறை நிலவு... நான் முனிவனா என்ன முகங்குனிந்து செல்ல...! சனங்கள் நெரிசலிலும் அவள் நடையை அழகாய் ரசித்திருக்க...... யாரோ ஒருவன் அடித்துவிட்டான் என் மணிபேசை... அதைத் தேடவா..? அவளைத் தொடர்வதா...? மனதில் உடன் பதில் உடனே தொடர் என்று.... காரணம்..கணப்பொழுதில் உன் கண்களினால் உன் மனதைச் சென்றடைந்தவள்... அவளுக்காய் உனை மறந்து உன் உடமையைத் தொலைத்தவன்... எனவே அவள் …
-
- 11 replies
- 1.2k views
-
-
மாவீரர் அஞ்சலி கவிதை - இளங்கவி உலகையே வியக்கவைத்த எங்கள் உன்னத வீரர்கள்..... சரித்திரங்கள் பலபடைத்த சாதனைச் சிகரங்கள்..... மலைகளைப் பிழந்து தமிழன் வீரம் சொன்னவர்கள்.... உலகையே எதிர்த்து நின்று எங்கள் உரிமையைக் கேட்டவர்கள்... உலகச் சதிகளினால் மண்ணுக்கு இரத்தம் தந்த வேங்கைகள்.... இறந்தும் நம் மானம் காக்கும் தமிழினத்தின் வித்துக்கள்.... ஒன்றல்ல இரண்டல்ல முப்பத்தையாயிரத்துக்கு மேல் தங்கள் மூச்சுக்களைத் திறந்து எங்களை மூச்சடைக்க வைத்தவர்கள்.... வியூகம் உடைக்க வாவென்று அழைக்கு முன்னே.. வரிசையில் முதல் சென்ற வரலாற்று நாயகர்கள்.... சுய நலம் நீங்கி பொது நலம் தாங்கி... விடுதலையே மேலோங்கி ; அதற்காய் மரணித்த …
-
- 25 replies
- 4.4k views
-
-
உங்கள் வீரம்...... இனத்தின்நெஞ்சை நிமிர்த்தியது உலகின் புருவங்களையும் உயர்த்தியது சொந்த ஆசைகளைத் துறப்பது ஒன்றுதான் உங்கள் ஆசையா? வித்(து)தகரே சிந்தனைக்குள் விடுதலை வெப்பம் செறிந்த மின்சாரம் பாய்ச்சிய தலைவனை மட்டுமல்ல உலக தமிழனையும் தலைநிமிர்த்திய உங்கள் செயல்களின் ஒவ்வொரு அசைவிற்கும் தலைவணங்குகின்றோம் உயரிய இலட்சியத்திற்காக உயிரை உருக்கிய உன்னத்த்தினை, உலகம் தீவிரவாதமாகவும் பயங்கரவாதமாகவும் பொருள் கொடுத்ததுதான் பாரிய பயங்கரவாதம் உயரிய தீவிரவாதம் கனவுகள் அழிந்திடுமோ என்று அழும் உங்கள் ஆன்மாக்களின் குரலால் அதிருகின்றது எங்கள் உணர்வு பத்ருகின்றது உள் மனது கவலை விட்டு உறங்கிடுங்கள் கண்மணிகள…
-
- 3 replies
- 1.2k views
-
-
சுயத்தை ஒடுக்கிய எங்கள் சூரியத் திருவே, வல்லமை சுரக்கும் வீரப்பெரும் வரலாறே, தாயக உள்ளொளி பெருக்கும் தர்மத்தின் உறுதியே, உலகனைத்துமான தமிழினத்தின் வாழ்வேந்தி வனையும் வல்லமையே பாடுகிறேன் ஒரு பல்லாண்டு. பன்னூற்றாண்டுகளின் படிமக்கறைகளைப் பகுத்தாய்ந்து புறஞ்செய்த காலபிரவாகமே, வல்லரச வியூகங்களை வலுவிழக்க வைத்த வல்வையின் வனப்பே, இன்றுங்கள் பிறந்த நாள் ஏழு கடல்களும், ஐந்து கண்டங்களும் அதிசயித்து நோக்கும் ஆதித்த கரிகாலரே ஈழத்திரு நிலத்தின் ஆணி வேர் அமைதி காக்கும் அதி சாதனைப் பொழுது இது, அர்த்தமற்றுப் போகாது. ஈழம் என்ற சொல்லுக்குள் இணைபிரியாக் காவியமே, இலக்கென்ற வடிவுக்குள் கலக்கமில்லா ஓவியமே, யாலம் உனை அழிக்காது சத்தியத்தின்…
-
- 2 replies
- 909 views
-
-
வரவும் வாழ்த்தும் மலர்வும் விதிப்படி உணர்வோம் ஈழமென்போர்க்கு மலரும் நாளை எதிர்பார்க்கும் சூழலாம் தமிழர்க்கு மகிழ்வு கிட்டும் -பிரபாகரனை நெஞ்சில் நினைப்பார்க்கு நினைப்பது கைகூடும் தம்வாழ்வு சிறப்போங்க வாழ்த்தும் அவரை. தமிழர் இடர் தீர சமரும் புரிந்த தமிழர் தலைவனடி நெஞ்சே வாழ்த்து தமிழர்க்கு என்றும் தனிநாடு உண்டு தாழ்ந்தவர் மேலோர் பேதங்கள் நீங்கி சிந்தையியில் என்றும் குறிக்கோள் ஒன்றாய் முந்தையோர் நினைவில் மூழ்கிடும் உறவால் தந்தையாய் வேலுப் பிள்ளையின் கருவால் வந்தவ தரித்தார் பிரபா கரனும் ஆழ்வது கடமை அதையறிந் தவரும் பாழ்படு சிங்களம் எதிர்த்தவர் சமர்க்களம் புகுந்தவர் படைகள் முழங்கிய போரால் எதிரிகள் பலரும் எதிர்க்களம் மாண்டது …
-
- 1 reply
- 761 views
-
-
தமிழ் தாய் ஈன்ற வீரர் தமிழீழம் தாங்கிய வீரர். அவர்கள் தான் எம் மாவீரர்கள். தமிழுக்காய் தமிழ் மண்ணுக்காய் தம் சுகபோகங்களை துறந்து காவியம் படைத்தவர்கள். அவர்கள் தான் எம் மாவீரர்கள். தம் இனம் தரணியில் தன்மானத்துடன் வாழ்வதற்காய்’ தம் உயிரைத் தியாகம் செய்தவர்கள் அவர்கள் தான் எம் மாவீரர்கள். தமிழர்கள் அடிமைப்படுவதையும் தம் தாயகம் பறிபோவதையும்-கண்டு வீறுடன் துடித் தெழுந்தவர்கள். அவர்கள் தான் எம் மாவீரர்கள். தானைத் தலைவன் வழியில் தடைகள் பல தகர்த்து தரை கடல் வான் படைகளாகவும் கரும்புலிகளுமாகி காவியமானவர்கள் அவர்கள் தான் எம் மாவீரர்கள் மறத் தமிழனாய் வாழ்ந்து காலன் வருகின்றான் என்று பின்வாங்காது களமாடி காவிய நாயகர்கள் ஆனவர்…
-
- 0 replies
- 657 views
-
-
தாயக கனவுடன் சாவினை தழுவிய ..... .. கார்த்திகை இருபத்தியேழு மாவீரர் தினம். மெளனமாய் அஞ்சலிப்போம்..... முப்பது வருடங்களுக்கு மேலாக எம்மை நாமே ஆளவேண்டும் சகல உரிமையுடன் வாழ் வேண்டும் என்னும் உன்னத நோக்கதுகாய் "தமிழர் தாயகம் தமிழ் ஈழம்" என்னும் தாரக மந்திரத தோடு சாவினை தழுவிய மா வீரர்களே இறுதி போரிலே , கந்தக குண்டுகளின் குண்டு மழையிலே சிதறுண்ட மக்களே குற்றுயிரும் ..குறை உயிருமாய் புதைக்க பட்டவ ர்களே ...நீங்கள் மண்ணுக்காய் விதைக்க பட்டவார்கள் விழி நீர் மழை சொரிய ,நினைக்கின்றேன் எத்தனை கனவுகள் ஆசைகள் விருப்பங்கள் என்பவற்றை மண்ணுக்காய் துறந்த மாவீரர்களே. தாயாய் தந்தையாய் சகோதரியாய் மனைவியாய் மகளாய் மகனாய் விதைப…
-
- 6 replies
- 1.9k views
-
-
எவர் கண்ணிலும் படாத ......... இறைவனுக்கு - இருப்பு.... உண்டென்றால்..... இருப்பவருக்காகவே .. எலாம் இழந்த இவருக்கு... என்ன பரிசு? வாழ்த்தா ? பாராட்டா? வசையா? எது வேண்டுமென்றாலும்.. எவரும் சொல்லட்டும்.. ஒன்று மட்டும்.. சொல்வேன்... இந்த ........ மானம் கெட்ட இனத்தில்... என்று நீ - பிறந்தாயோ..... அன்றே நீ ....... இறந்தாய் - போ ! இனி எதுக்கு வாழ்த்து?
-
- 1 reply
- 785 views
-
-
கல்லறைகளில் தெய்வங்கள் சபிக்கின்றன எங்கள் ஊர்களில் எம் தெய்வங்கள் கல்லறைகளில் தான் உயிர்ப்புடன் உறைந்திருக்கின்றன எம் தெய்வங்கள் கல்லாகிப் போனதில்லை எம் பிரார்த்தனைக்காக காத்திருந்ததும் இல்லை அவர்களின் நேர்த்திக் கடன்கள் எம்மை நோக்கியே இருந்தன கல்லறைக்கு போகும் முன் தம் கழுத்தில் தொங்கிய கனவை எம் உயிர்களில் மாட்டி விட்டே போயினர் எமக்காக பசித்திருந்தனர் எமக்காக விழித்திருந்தனர் எமக்காக நிலவற்ற இருள் வேளைகளிலும் தன்னந் தனியாக காடுகள் கடந்தனர் எதிரியின் இறுதி தோட்டா முடியும் வரைக்கும் உண்ணாதிருந்தனர் நெஞ்சம் தகிக்கும் கனவுகளை எம் தெய்வங்கள் கண்டன ஊரின் எல்லைவரைக்கும் எதிரியை துரத்துவதாக சன்னதம் க…
-
- 4 replies
- 1k views
-
-
வாழ்வே உன் அர்த்தம் தேடி அலைகின்றோம் வழிநெடுகிலும் பொழுது போக அழுகின்றோம் எங்கள் காயங்களின் வினோதங்களை வேடிக்கை பார்க்கின்றோம் சாரலும் தூறலும் கூடவே பெருவெள்ளமும் மண்ணில் காய்ந்த குருதியை கழுவிச்செல்கின்றது புதுவெள்ளமாக திசைகளற்றுச் செல்கின்றது பள்ளம் எங்கேயோ அங்கு நகர்கின்றது எங்கள் வாழ்வும் அதன் நியாங்களும் கூடவே கரைந்து செல்கின்றது. வீழ்ந்தவர்களின் தடங்கள் ஊரெங்கும் பரவிக்கிடக்கின்றது உயிர்வலிகளுடன் நிறையக் காட்சிகள் நேற்று கனமாயிருந்தது அந்தப்பிள்ளை இங்குதான் சிதறிக்கிடந்தன் இந்தப் பிள்ளை இங்குதான் குடல் வெளித்தள்ளிக் கிடந்தான் இந்த தெருவில் அந்த முடக்கில் ஊரெங்கும் காடெங்கும் நேற்றுவரை எங்கள் செல்வங்களாக சித…
-
- 1 reply
- 728 views
-
-
தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே! – இங்கு கூவிடும் எங்களின் குரல்மொழி கேட்குதா? குழியினுள் வாழ்பவரே! உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள் உறவினர் வந்துள்ளோம் – அன்று செங்களம் மீதிலே உங்களோடாடிய தோழர்கள் வந்துள்ளோம். எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள். ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள். நள்ளிரா வேளையில் நெய்விளக்கேற்றியே நாமும் வணங்குகின்றோம் – உங்கள் கல்லறை மீதிலெம் கைகளை வைத்தொரு சத்தியம் செய்கின்றோம் சாவரும் போதிலும் தணலிடை வேகிலும் சந்ததி தூங்காது – எங்கள் தாயகம் வரும் வரை தாவிடும் புலிகளின் தாகங்கள் தீராது. எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள். ஒருதரம் உங்களின் …
-
- 1 reply
- 3.9k views
-
-
தமிழ் வலைப்பூக்கள் இன்று தாரலமாக இருக்கிறது.ஒரு அறிக்கை சொல்லுகிர விதமாக இன்றில்லிருந்து கடந்த 4 மாதகாலமாகா 94% வலை பதிவுகள் புதிபிக்க படவில்லை என்பதாக. கோட்டிக்கணக்காக கொட்டி இருக்கு வலைப்பதிகளில், தமிழின் பங்கு குறைந்தது அல்ல. அதற்கு காரணம், தமிழர்கள் மத்தியில் இருக்கும் ஆர்வம்.எழுதனும் என்னும் ஆர்வம். ஆரம்பத்தில் கவிதைகளை மட்டும் கண்டிருந்த தமிழ் வலைகள், இன்று அதன் வளர்சி மூச்சடக்க வைக்கிறது. முன்பு தேம்கள் (blogger Temple)கொடுக்கப்பட்டது, அதற்குள் அழகிய எண்ணங்களை படங்களோடும், அனிமேசனோடும் கொடுத்து சுவைக்கை வத்தார்கள். இன்று? வலைப்பூவுக்கும் ஒரு இணையதளத்துக்குமான வித்தியாசத்தை இனம் காண்பது இலகுவாக இல்லை. ஆம் உதாரனத்துக்கு இலவச வலை டெம்பில்கள் (blogger Temple)இருப்பதா…
-
- 0 replies
- 1.5k views
-
-
கலைஞனுக்கு ஒரு மடல்.. அயல் நாடாம் தாய்த்தமிழ் திரு நாட்டின் மூத்த கலைஞனே.... வயதில் மூத்தோனே....'' தமிழ் நாட்டின் தறுதலையே..'' இத்தாலிக்காரியின் செருப்பே...'' தாய் நாடு - உன் தமிழ் நாடு கூட உன் மறைவிற்காய் கண்ணீர் வடிக்காது......'' கடல் நீரில் கூட - உன் சாம்பல் கரையாது...'' உன் இறப்பின் அன்று..... கண்ணீர் என்ற ஒன்று இருந்ததாய்... எவருக்கும் ஞாபகம் இருக்காது...'' அமைதிப்படை அன்றும்.... முகநூலில் இருந்து
-
- 2 replies
- 785 views
-
-
எனக்குத் தெரியாத தமிழ்மீதான என் கோபம் இன்னும் குறையவில்லை ஏனெனில் எப்பொழுதெல்லாம் அதை தெரிந்த கொள்ள் நினைக்கிறேனோ அப்பொழுதெல்லாம் தனி அறைகளில் சில கவியரசுகளிடம் மட்டும் மனம்விட்டு பேசிக் கொண்டிருக்கும் தமிழே நீயும் வசதியானவர்களின் வர்க்கம்தான் அதனால்தான் என்னைப் போண்ற ஏழைக் கிறுக்கன்களை உன் கண்களுக்கு தெரிவதே இல்லை -யாழ்_அகத்தியன்
-
- 3 replies
- 730 views
-
-
_________________________________ அவர்கள் பெருங்கனவுடனே மரணத்தை முத்தமிட்டனர். கடைசியில் அவர்களின் ஞாபகம் நிரப்பிவிடப்;பட்ட கல்லறைகளும் நம்மிடம் இல்லை. தாய்மார்கள் தீப்பந்தங்களையும் தமது பிள்ளைகளுடன் இழந்து விட்டனர். மனைவிமார்கள் தங்கள் புன்னகையுடன் கல்லறைமீதான தமது சொற்களையும் இழந்து விட்டனர். கனவின் அளவற்ற ஞாபகத்தில் வானம் முட்டிக்கிடக்கிறது. இம்முறை எந்தப் பூக்களும் மலரவில்லை. இலைகளில் குருதி ஒழுக பூமரங்களின் வேர்கள் அறுக்கப்பட்டிருக்கின்றன. தலைகளை மின்கம்பத்தில் மோதி இல்லாதவர்களை அழைக்கிறது நம்பிக்கையற்ற மனம். கனவை உறிஞ்சி எடுத்துக்கொண்டு அவர்களை தின்று முடித்துவிட்டது உலகம். அவர்கள் மீதெழுதப்பட்ட மரணப்பாடல் நெருப்பில் கிட…
-
- 1 reply
- 853 views
-
-
-
எனக்கும் கவிதை எழுத ஆசையாய்க்கிடக்கு. ஆராவது உதவி செய்வியளோ? அதுக்காக மண்டையுக்கை களிமண் உள்ளதெல்லாம் கவிதை எழுத ஆசைப்படுதுகள் எண்டு புறுபுறுக்காமல்............ எப்பிடி ஆரம்பிக்கோணும்?வசன நடையள் எழுத்துநடையளை ஒருக்கால் சொல்லித்தருவியளே?
-
- 54 replies
- 5.7k views
-