கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5130 topics in this forum
-
நாலுலட்சம் பேரின் கண்ணீர் அணையுடைந்து வருகிறது. வல்லரசப் பலம் திரட்டி வன்னிக்குப் படையனுப்பிக் கொன்றதும் குறையுயிரில் துடிதுடிதுடிக்கக் குண்டள்ளி வீசியதும் கொன்றே முடிப்போமென்று கொழுப்பெடுத்து எழுந்ததுவும் பஞ்சாய்ப் பறக்காதோ ? பாவியர் பாடையில் ஏறாரோ ? பழியோ இதுவெங்கள் பாவமோ என்றெம் விழியுடைந்த நேரம் கல்மடுவில் கதவுடைந்ததாம் காணொளியும் கண்ணால் பார்த்தது போல் காதுகளில் எட்டிவிடும் செய்திகள் பொய்க்காமல் போகாதோ ? எமக்காய்ப் பொழுதொன்று விடியாதோ ? புலியைக் கொன்று முடித்துக் கடலில் தள்ளிவிட்டுப்படை திரும்பச் சிங்களர் வீடெங்கும் சிங்கக் கொடியேற்றுவோம் என்றெம் இதயங்கள் நோக வஞ்சம் வைத்து நஞ்சு துப்பியவன…
-
- 0 replies
- 1k views
-
-
சரஸ்வதி துதி வெள்ளைத் தாமரையில் வெண்ணிற உடை உடுத்து வீணை தனை மீட்டிடும் வாணியே... கலை மகளே..! வெள்ளை உள்ளத்துடன் எளிய தமிழ் கவிதைகளை எழுதிட நீ உதவிடம்மா... ******** நாளெல்லாம் நவராத்திரி யாழ் களத்திலே... நாமகளும் உறைந்திடுவாள் எங்கள் படைப்புகளிலே இனிய தமிழ் கவிகள், கதைகள் புதுமைக் கருத்துக்கள், செய்திகள் மனம் மகிழவைக்கும் நகைச்சுவை கண்ணுக்கினிய காணொளிகள் இவை வழங்கும் யாழ் களம் நான் பயிலும் பல்கலைக்கழகம். நாளும் நாம் எழுதும் படைப்புகள் நவதானியமாய் விதைக்கப்பட, இவை வழங்கும் படைப்பாளிகள் தாமே அழகிய கொலுக்களாக, வளரும் அழகு தமிழ் யாழ் களத்தில் அழியாது என்றும் இவரிருக்க. உள்ளத்தில் உள்ள ஆணவத்தை அழிப…
-
- 13 replies
- 2.5k views
-
-
நேற்று என்பதை மறந்து விடு நாளை என்பதை நெஞ்சில் நிறுத்திவிடு இது விளையாட்டும் இல்லை நடிப்பும் இல்லை இதுதான் வாழ்க்கை தாயும் இல்லை தந்தையும் இல்லை தலைவன் ஒன்றே தெய்வம் தங்கமும் தேவை இல்லை வைரமும் தேவை இல்லை மண்ண் ஒன்றே என் உயிர் மண்ணிற்கே எனது உடல் எனக்கு மூச்சுக் காற்றும் தேவை இல்லை தென்றல் காற்றும் தேவை இல்லை என் தேசத்தின் சுதந்திரக் காற்று ஒன்றே போதும் என் வாழ்க்கைன் போகட்டும் மண்ணிற்காக நாளை நம் பிஞ்சுகள் வாழட்டும் அவர்களிற்காக
-
- 5 replies
- 1.3k views
-
-
அடங்கிக்கிடக்கிறது. என்றும் இப்படி கிடந்ததில்லை இறகுகோதும் ஓசையாவது கேட்கும். எதுவுமில்லை. நேரம் அறியக்கூட பர்ப்பதுண்டு காலம் தப்பியதில்லை ஒருபோதும். காலம்...?? எங்கே போயிருக்கும், இரைபோதாமல் இன்னும் தூரம் போயிருக்குமோ இணைகூடி இடம் மாறி இருக்குமோ இரையாகி இருக்குமோ இறகு உருத்தியும், எச்சமிட்டும், சுள்ளித்தடிகளை விழுத்தியும், தூண் விட்டத்தில் குறுகுறுத்து தலை புதைத்தும், எங்கே போய் தொலைந்திருக்கும். "சனியன்" என்று வாய்விட்டு திட்டவேண்டும் போல ஒரு உணர்வு. காலம் காத்திருப்பை சேமிப்பதில்லை. சிக்கிக்கிடந்த ஓரிரு இறகுகளும் தவறி அலைகின்றன. எச்சங்கள் காய்ந்து துகளாகி இல்லாமல் போகின்றன. சந்தங்களால், குதூகலித்துக்கிடந்த கூட்டிலிருந்து வெற…
-
- 13 replies
- 1.2k views
-
-
பிரிட்டன் தெருவில் ஒற்றை மரணம்..! ஊடகங்கள் விம்புகின்றன ஊர்கள் அழுகின்றன..!! கொன்றவன் சரணடைய தயாராய் நின்ற போதும்.. சுட்டு வீழ்த்தி வீரம் காட்டி பிடித்து நீதி கேட்கிறது... ஊரையே கொல்ல கொள்கை வகுக்கும் உலகம்..! அடுத்தவன் நிலத்தில் குண்டுகள் கொட்டி பிடித்து அடித்து அழித்து... வளர்த்த பகை தேடி வந்து உயிர் எடுத்தால் அது... பயங்கரவாதம்..! இருந்தும்... மானுட உலகில் கேள்விகள் ஆராய்ச்சிகள் முளைக்கும்..! அதுவே.... மனிதனை இயந்திரம் கொன்றால் "Just war"..! நோபலின் நாயகன் சமாதானப் புறா ஒபாமாவின் தாரக மந்திரம் இது..! ஏவி விட்டு தூர இருந்து கொன்று விட்டால் இல்லை இல்லை.. ஊரையே அழித்திட்டால் சாட்சியும் இல்லை குற்றவாளியும் இல்லை அழுவதற்க…
-
- 0 replies
- 618 views
-
-
நாளைய உதயம் அதிகாலை வேளை அதன் கண்கள் இந்தக் குளிர்காற்றில் அழகாய் தெரிந்தன ஆழகிய வண்ணமாய் சிவப்பு,கறுப்பு,மஞ்சள் இயல்பாய் வந்து பதுங்கு குழியில் அரை குறை தூக்கத்தில் விழித்து இருக்கும் என் தாய்த்து வைக்கப்பட்ட துப்பாக்கி முனையில் அமர்ந்து சிறகசைத்து……………… அதன் வண்ணம் கொள்ளை அழகு என்னை என் குழந்தை பருவத்தையும் என் குடும்பத்தையும் கண்முன்னே கொண்டுவந்தது இன்னும் சூரியன் சுட்டெரிக்கவில்லை காய்ந்து போன புளுதி பூமியில் இன்னும் பனிச்சிவலைகள்;……………. நேற்றைய சண்டையில் என் தோழன் ஒருவன் வயிற்று காயத்துடன் கள மருத்துவமனையில் இன்னும் அந்த இரத்தம் புளுதியை கல்லாக்கி இருந்தது எங்களின் மனதை போல……………… தூரத்தே ஒரு முழக்கம்-நான் தளர்த்த…
-
- 0 replies
- 565 views
-
-
சொன்னால் தான் புரியுமா என் கண்ணே மனசுக்குள் பல வண்ணப் பட்டாம்பூச்சி பறப்பது... உள்ளுக்குள் தெரிந்தாலும் உண்மையிது புரிந்தாலும் நான் சொல்லிக் கேட்பதில் உனக்குப் பரவசம்! நாடுகள் எமைப் பிரிக்கும் எம் உயிர் தாங்கும் கூடுகள் தான் அதை மதிக்கும்... எம் உயிருக்கு ஏதடி இடைவெளி? உலவலாம் எங்கெங்கும் உலகமிது சமவெளி! விண்ணில் ஏறுவோம் விண்மீன் எறிந்து விளையாடுவோம் மண்ணில் இறங்கிப் பாடுவோம் பூக்களின் மகரந்தப் பொடி அள்ளித் தூவுவோம் வண்டுகள் எமை மொய்க்கும் உன் கண்ணிரண்டு கண்டு தம்மினமோ என்று யோசித்து நிற்கும்! யாசித்து வருவதில்லையே அன்பு நமைப் போல் நேசித்து நின்றால் …
-
- 3 replies
- 1.4k views
-
-
நாளைய விடியல் நாளைய விடியல் நாம் இருப்போமா..? நாளை சேவல் கூவக்கூடும் நாம் இருப்போமா..? நாளை இங்கு பூவும் மலரும் நாம் இருப்போமா..? ஆழமர நிழலில் அகதி வாழ்க்கை வன்னி மண்ணில் மணல் வீடு கட்டும் குழந்தைகள் அதை உடைக்கும் மழை வெள்ளம்! ஐ.நாவில் ஆயிரம் தொண்டர்கள் இருந்தென்ன..? எம்மை எல்லாம் மனிதப் பட்டியலிலா இணைத்துள்ளார்கள்..? மாமிசம் தின்னும் மடையர்கள்! ஆண்ட இனம் அகதியாய் அழியுமோ..? விழிக்குமோ தமிழினம் !? குஞ்சு குருமன்களாய் இளையவர், முதியவராய் உங்களில் சிலராய்.. உருக்குலையும் எங்கள் உடன்பிறப்புகள் இங்கு தினம் தினம்! பாலகன் ஒருவன் பாடுகிறான! பாவியர்கள் நாங்கள் ஏன்..? அவதியில் ஆக்கப்பட்…
-
- 6 replies
- 2.4k views
-
-
மகரந்தங்களின் கண்ணீரும் பருவம் தப்பிப்போன பாலணுக்களின் திட்டைக்களும் நிறைந்து கிடக்கின்றன தேன்களில்கூடுகளில், சுடர் தின்ற விட்டிலின் கனவுகள் கருகி பரவுகின்றன அழகோடு இயைந்த நிலவினைப் புணர தேடியலைகிறான் சூரியன் இரவினை கொன்றும் பிறக்கிறது இரவும் நிலவும். இலைகளை வெறுத்த கிளைகள் காத்திருக்கின்றன, பறவையொன்றின் விரல்களின் தீண்டலுக்காக, சாம்பல்மேடுகளில் மேய்ந்த மாடுகளின் மடிகள் கறக்கின்றன ஆசை தீய்ந்துபோன வெப்பத்தோடு, அன்பு... ஒருவர் மனம் நெகிழும்படி மற்றொருவர் வெளிப்படுத்தும் பாசமும் நேசமும் நட்பும் என்று தெளிவாக வரையறை செய்கிறது அகராதி. அநேக நாக்குகளில் வழிகிறது துர்நாற்றம் சிலவேளைகளில் விசமாகவும். அடங்க மறுத்து ஆர்ப்பரிக்கும் விடைகள…
-
- 17 replies
- 949 views
-
-
ஒரு கவியை கவி கொண்டு பாட........ மனசு வரிகளுக்காய் .......... வரண்ட வயலாய் ...இன்னும் சிந்தனைக்கு ஏதும் வராது சிறு மெளனம்.....கொள்கிறது! ஐயா........எல்லா கவிஞனும்......... எழுது கோலுக்கு நிறநீர் மட்டுமே......... நிரப்புவான்........நீரோ......... உயிர் உம்மோடு இருந்தவரை......... கண்ணீர் பாதி செந்நீர் பாதி கொண்டே...... இந்த கைவிடபட்ட இனத்துக்காய்.......... எழுத்தால் போர் செய்து காலமானீர்! என்ன சொல்லி உம்மை பாட? நரைத்த தலை தாடி உம்முருவம்........ அதனுள் நரை விழாத விடுதலை உணர்வு....... இது-இளமை கொண்டவர்கூட ........ எட்டப்பராய் திரியும் காலம்........ முதுமையின் சாயல் முகத்தில் விழுந்தும்..... கடைசிவரை எம் தேச தாகம் தீர்க்க.......…
-
- 1 reply
- 1.1k views
-
-
நிஐம்!!! காற்றும் ஒருகணம் வீசமறந்தது கடலும் ஒருநொடி அமைதியாய்... போனது... தேற்றுவாறின்றி நம தேசம் தேம்பி நிற்குது தேசத்து உறவுகள் எல்லாம் ஊரூராய் அலையுது அம்மி மிதித்து அருந்ததி பார்த்து........ சோடிசேர்ந்த சோடிக் குயில்களின்....... மகிழ்ச்சிகள் எல்லாம். இன்று முட்கம்பி வேலிக்குள்... முடங்கிக் கிடந்திட நான்கு சுவற்றுக்குள் நடப்பவை எல்லாம் கந்தல் துணியால் கட்டிய முகாமில்..... வேட்டை நாய்களுக்கு நடுவில் வேதனையுடன் நடக்குது....... குளவி முதல் கிளவிவரை.... மாற்ற ஒர் உடையில்லை... அன்றொரு நாள் நம் இளசுகள் காத்திருந்து காதல்செய்த வீதிகள் எல்லாம் வேதனை தாங்கி விம்மியே நிற்கின்றன..... தண்ணீர் ஊற்றி நாம் வளர்த்த நந்தவன மரம…
-
- 21 replies
- 3.5k views
-
-
நிகழ்காலமும் நிகழ்ந்த காலமும்... பெற்றவரை பிள்ளைகள் பேணிவந்த காலமது பிள்ளைகளால் பெற்றவர்கள் கூணுகின்ற காலமிது சொற்ப பணமிருந்தால் சொர்க்கம் தான் அந்தக்காலம் மெத்த பணமிருந்தால் நரகம் தான் இந்தக்காலம் அவதியுடன் வாழ்ந்தாலும் ஆண் உழைக்கும் காலமது சவுதிக்கும் சென்று பெண் உழைக்கும் காலமிது உயிர்காப்பான் தோழன் என்பர் உண்மைதான் அந்தகாலம் உயிர்கேப்பான் தோழன் இதை உணருகின்றோம் இந்தக்காலம் கட்டுப்பாட்டுடன் மனிதன் காதலித்த காலமது இஸ்டபடி இளைஞன் எதையும் செய்யும் காலமிது பூஞ்சோலைக்குள் மட்டும் புனித காதல் அந்தக்காலம் மிருகத்தின் சாலைக்குள்ளும் மீதமில்லை இந்தக்காலம் இன்றையதை விட நேற்றயது நல்ல காலம் நேற்றயதை விட நாளையது எப்படியோ???
-
- 6 replies
- 1.4k views
-
-
நிசம் தரிசித்த நீலப் புலி வந்தழித்தான் பகைவன் நம் வாசல் வரை சொந்தம் முதல் எமதான உற்றம்,சுற்றம்,மற்றும்; அந்தம் முதல் ஆதிவரை அழிப்பதாய் ஆக்கிரமிப்பின் ஆக்கிரோசமாய் தொண்டைக் குழிவரை குண்டாய் பொழிந்தான் அக் கணத்திலும் ஆயிரமாய் அழிந்தே போயின தமிழான உறவுகள் ஆனதுதான் இழப்பிலான மெய்வருத்தம், என்றாயினும் இழக்கவில்லை வலியின் வலிமை கொள் தோன்றாத வீரமதை தோற்றுவித்த வல்லாளன்-உலக மன்றம் முன் மாவீரத்தை நீலப்; புலியால் நிமிர்த்தியே வைத்தான் வலிமையே வாழ்வு வையகத்து வாழ்வோரின் வகையறுப்படுத்த முடியாத வாழ்வதன் வாழ்வியல் ஏதிலியாய் வாழ்வதனால் உள்ள சுகம் யாதும் உண்டா? போதிலினிலே உந்தன் அகம் ஏற்ற சுகம் சாற்றுவாயா? மாற்று வழி ஒன்றே உண்டு மாவீரம் உரை பாதை ஒன்ற…
-
- 0 replies
- 1.5k views
-
-
நிச்சயதார்த்தம் முடிந்ததும்... புதுப் பெண்பிள்ளையும், புது ஆண்பிள்ளையும் செல்போனில் பேசிக்கொள்கிறார்கள்... ஆண்: இதற்காகத்தானே இத்தனை நாளாய்க் காத்திருந்தேன்! பெண்: நீ என்னைவிட்டு விலகிவிடுவாயா? ஆண்: கனவிலும் அவ்வாறு நான் நினைக்கமாட்டேன். பெண்: நீ என்னை விரும்புகிறாயா? ஆண்: ஆமாம். இன்றைக்கு மட்டுமல்ல என்றென்றும். பெண்: நீ என்னை மறந்து விடுவாயா? ஆண்: அதைவிட நான் செத்துப் போயிடலாம்! பெண்: எனக்கொரு முத்தம் தருவாயா? ஆண்: கண்டிப்பாக... அதுதானே எனக்கு மிகப்பெரிய இன்பமான தருணம். பெண்: நீ என்னை அடிப்பாயா? ஆண்: ஒருபோதும் அந்தத் தவறை நான் செய்ய மாட்டேன். பெண்: நீ என்னுடன் கடைசிவரை கை கோர்த்து வருவாயா? …
-
- 3 replies
- 1.2k views
-
-
இனம் மதம் பணம் மொழி சாதகம் சாதி என்று இதுவரை அறியாத அந்த இதயம் மட்டும் உள்ள காதலுக்கு இறுதியில் கிடைப்பது என்ன????? இரக்கம் அற்ற முடிவு மட்டும் தானே?????
-
- 1 reply
- 870 views
-
-
நான் கவிதை எழுதியது நிஜம் அவன் உள்ளம் கவர்ந்ததும் நிஜம் அவன் சிந்தனைகளுக்கு சவால் விட்டதும் நிஜம் நான் காதல் கொண்டது நிஜம் அவனால் நேசிக்கப்பட்டதும் நிஜம் காதல் அன்பு பார்த்து வந்ததும் நிஜம் என் காதல் கல்லறைக்குப் பூத்ததும் நிஜம் நான் கண்ணீர்க்கு வாக்கப்பட்டதும் நிஜம் என் காதலன் நேசமானவன் என்பதும் நிஜம் ஆனால் நேசத்தை நிரூபிக்க காதல் நிஜமில்லாமல் போனதும்... நிஜம்..!! நன்றி: நித்தியா www.suduvanam.blogspot.com
-
- 7 replies
- 1.8k views
-
-
மறந்துவிட்டாயம்மா...! நானும் கருப்பையில் தான் கற்பம் தரித்தேன் என்னையும் பத்து மாதம் தான் சுமந்து பெற்றாள் தாய்ப்பால் ஊட்டித்தான் சீராட்டினாய் இவர்தான் தந்தை என்றும் அறிமுகப்படுத்தினாள் இது ஆண்சாதி என்றும் இது பெண்சாதி என்றும் இது தாவரங்கள் என்றும் இது விலங்கினம் என்றும் அவள்தான் அன்று இனம் காட்டினாள்! ஆனால்... சிரிப்பு மனிதனின் மறுபக்கம் என்றும் அசட்டுத்தனம் அவன் முகமூடி என்றும் பணம் உறவின் வேடம் என்றும் மதம் பகையின் தோழன் என்றும் சாதி காதலின் எதிரி என்றும் ஏனே அன்று அவள் அறிமுகப்படுத்த மறந்துவிட்டாள்...!! எழுதியவர்: நித்தியா
-
- 220 replies
- 28.8k views
-
-
நீண்ட நாட்களுக்கு முதல் யாழ் கள உறுப்பினரும் சிறந்த கவிதாயினியுமான ஜேர்மன் மண்ணை சேர்ந்த அன்புக்குரிய நண்பி நித்தியா எழுதியது நளினமேனி நவரசப் பந்தல் இனிய மெய்யான பொய் பொய்யோ மெய்யோ என அய்யோ என்னை மலைக்க வைக்கும் இரு குன்றுகள் நெய்யாய் எனை உருக்கி ஒரு கை போதாமல் என் இரு கைகளால் அள்ளி பருகப் பருகத் தாகம் பெருக முயல முயல முயற்சி நீள அகல அகல அனைத்தும் அகன்று ஒடுங்கி ஒன்றாய் நீயும் நானும்... நெருங்கி நெருங்கி நெருப்பு மூட்டி மூட்டிய தீயில் முழுவதும் தீய்த்து தீய்ந்து பயனாய் மூளும் தீயை தீயாய் மாறி யாண்டும் எரித்து எரிந்தது சுட்டு சூடு பறக்க... என் உடலில் உரசி உசிரை கரைத்து கரைந்து இரண்டற இன்றே கலந்த…
-
- 10 replies
- 786 views
-
-
புதியவள் ஒருத்தி என் அறையில் என்னோடு.. நடு நிசியை நோக்கி நேரம் ஆகிறது.. படுக்கைக்குப் போக.. விளக்கை அணைக்கவா இல்லை விடவா.. உள்ளம் தடுமாறுகிறது...! உள்ளூர ஒரு பயம் என்னை அணுகுவாளா உயர நகர்வாளா பின் என் உடல் மீது பாய்வாளா.. அவளிடம் அகோரத்தனம் இருக்குமா..??! அனுபவமின்றியவன் நான் சற்றே சிந்திக்கிறேன்.. தயங்குகிறேன்... அவளோ என் அறைக்குள் துணிவோடு.. அனுமதி இன்றி நுழைந்தவளாய் சுவரோடு ஒட்டியவளாய் நகர்வின்றி... என்னையே கண்ணெடுத்துப் பார்க்கிறாள் அதை அழைப்பு என்பதா எச்சரிக்கை என்பதா..??! சிந்தனை குழம்புகிறது..!! போனால் போகுது எனியும்.. விடுவதில்லை இவளை..! விட்டால் என் நித்திரை இன்றி இரவுகளுக்கு யார் பதில் சொல்வது..??! நொடிகளை வீணாக்காமல் …
-
- 20 replies
- 1.8k views
-
-
நினவுகளில்... என் அன்பே ஏனோ நான் இன்னமும் உன் நினைவுடனே நீ தான் சொல்லி விட்டாயே நாம் இனிமேல் நண்பர்கள் என்று என்னால் ஏனோ இதனை ஜீரணிக்க முடியவில்லை என்ன நான் செய்வேன் உந்தனை மறக்க நீயே எனக்கு ஏதும் வழி சொல் உன்னில் நான் நிஜமான உள்ளம் இழந்தேன்...இதை நான் திருப்பி பெற்றுகொள்ள விரும்பவில்லை நீயோ எடுத்து செல் என்று கூறி பல காலம் ஆகி விட்டது முடியாது அன்பே என்னால் அது என்றுமே முடியாது அன்பே எப்படி நான் வாழ்வேன் உந்தன் அன்பு அது என்னில் இல்லை என்றால் பதில் ஏதும் கூறு அன்பே என்னவனாய் நீ வர மாட்டாயா...???
-
- 7 replies
- 1.2k views
-
-
வானம் இன்று வண்ணமிழந்து அழுகிறது மேகம் கூட நிறமிழந்து பொழிகிறது ஊசிக் காற்று உடலை வருத்த உணர்வுகள் எல்லாம் உடல் சுருக்கி ஒன்றுமற்று ஓடியே செல்கின்றன இளவேனில் மழை இதமாய் நனைத்திடும் கோடையில் மழை குதூகலம் தந்திடும் மாலை மழை மனதை மயக்கிடும் குளிர்கால மழையோ குலை நடுங்கிக் கூதல் ஓடக் கொட்டமடக்கிடும் கோடையை நனைக்க மழை வேண்டும் குழந்தைகள் நனைய மழை வேண்டும் காதலர்களுக்கும் மழை வேண்டும் கனவுகள் கடந்து காலம் காட்டவும் நினைவுகள் களைந்து நின்மதியுறவும் நினைந்து நினைந்து நீ வாராது மழையே நினைக்கும் பொழுதில் மட்டும் நீ வா
-
- 3 replies
- 655 views
-
-
மனசு கொஞ்சம் வலிக்குது .....!!! -------- பச்சை நிற உடலழகியின்... வண்ண வண்ண பூக்கள் .... அங்காங்கே அழகுபடுத்தும் .... பச்சை நிற அழகியின் வதனம் .... சுற்றும் முற்றும் பார்த்தேன் ... தூரத்தில் யாரும் இல்லை ... தடுப்பாரும் யாருமில்லை ....!!! கிள்ளி எடுத்தேன் பூவை .... தள்ளி போகமுடியாமல் .. தன் வதனத்தை இழந்து ... தவிர்த்த செடியின் சோகத்தை ... இப்போ நினைத்தால் ..... மனசு கொஞ்சம் வலிக்குது .....!!! ஆற்றங்கரைக்கு போனேன் ..... அழகான ஆற்று நீரில் கால் .... பதித்தேன் தட்டி சென்றது மீன் ... கூட்டம் கூட்டமாய் குடும்பத்தோடு .... ஒற்றுமையாய் வந்தபடியிருந்தன ....!!! என்னை மறந்தேன் -தூண்டிலில் ... புழுவை செருகி துடிக்க துடிக்க .... …
-
- 0 replies
- 991 views
-
-
பணத்துக்காக .... திருமணம் செய்தேன்.... என்னை விட பணத்தை .... வட்டிக்கு கொடுப்பவன்..... சந்தோசமாய் ..... இருக்கிறான் .....!!! திருமணத்தை ...... மணவாழ்கையாக ..... செய்யாமல் .... பணவாழ்கையாய் ....... செய்தால் வாழ்க்கையும் .... சந்தை பொருள்தான் ....!!! ^ நினைத்து பார்த்தால் வலிக்கிறது கவிப்புயல் இனியவன்
-
- 1 reply
- 747 views
-
-
நான் நினைத்தேன் பெரிய கனவு ஒன்று.. என் கனவில் பெரிய நட்சத்திரம் ஒன்று வெளியானாது அது என் வாழ்வின் தூரம் என்று புத்தி கெட்ட என் மனசுக்கு அவன் என்னை விட்டு சென்ற பின்புதான் புரிந்தது ..
-
- 0 replies
- 539 views
-
-
நினைவஞ்சலி..( சந்தன கடத்தல் வீரப்பனுக்கு) எம் தமிழ் நாட்டின் எல்லையை காத்தவன்.... எண்ணிலே ஆண்டுகள் ஏறியே ஆண்டவன்.... தன் இனம் அழித்தவன் தலைகளை அறுத்தவன்..... தவறுகள் செய்தானை தவறாமால் அழித்தவன்... எம் தமிழ் அழிகையில் எண்ணியே அழுதவன்... நாம் அகதியாய் அலைகையில் அன்றவன் துடித்தவன்.... கருணை கொண்டவன் காட்டுக்குள் வாழ்ந்தவன்.... தன் வாழ்வு இழந்தவன் தமிழ் எல்லையை காத்தவன்... கடத்தலின் வீரனாய் காலமுன் எழுந்தவன்... சரித்திர வீரனாய் சாதனை படைத்தவன்.... பெண்களை தாயாய் எண்ணியே மதித்வன்... மதிப்பினை அவருக்கு மான்பாய் கொடுத்தவன்.... கடத்தல்கள்…
-
- 2 replies
- 1.5k views
-