கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5130 topics in this forum
-
அங்கோ உண்ண உணவில்லை உடுக்க துணியில்லை குடிக்க நீரில்லை உறங்க வழியில்லை சுகாதார வசதியில்லை மருந்தோ மருந்துக்குமில்லை உயிருக்கோ உத்தரவாதமில்லை உதவிடவோ யாரும் முன்வரவில்லை இங்கோ அமைதியில்லை மனம் நலமாயில்லை உறக்கமில்லை உடல்நலமில்லை உலகநாடுகளிடமோ இரக்கமில்லை ஏரெடுத்துப் எம்மை பார்ப்பாரில்லை தமிழர்கள் இப்போது சுவற்றில் பந்தாக அடிக்கப்படுகிறோம் நாம் திருப்பித் தாக்கும்போது கேள்வி கேட்க இங்கே யாருக்கும் அதிகாரமில்லை எந்த அருகதையுமில்லை
-
- 4 replies
- 1.4k views
-
-
மாறும் உலகில் மாற உன் உறவே நிரந்தரம் தேயும் வாழ்வில் நம்பிக்கை நீயே நிரந்தரம் இம்மை வாழ்வில் மறுமை நிரந்தரம் நான் மாண்டபின்னும் உன்னில் உயிர்பது நிரந்தரம் தாயின் அன்பு சேய்க்கு நிரந்தரம் நான் சாயும்போது காப்பது நீயே நிரந்தரம் செல்வங்கள் கொணரும் இன்பத்தில் இல்லை நிரந்தரம் நிலைவாழ்வு என்னும் நிஜமான நீயே நிரந்தரம அதன் விலையாக என்னை நீ உன்னில் இணைப்பாய் நிரந்தரம்
-
- 4 replies
- 1.9k views
-
-
நிர்வாணமாக கொலையுண்டவர்களின் பின்பக்கம் தேங்கிய நீரில் துடித்து மிதந்து கொண்டிருக்கின்றன பிடரிகளும் கண்களும் கைகளும். நிருவாணம் எல்லோரது உடைகளையும் களைந்து விடுகிறது. மிகவும் அஞ்ச வைத்தபடி கோணல் துவக்கு தலையின் பின்பக்கம் துளையிடுகிறது. நிலம் பரிதாபமான குருதியால் நனைகிறது. யாருடைய முகமும் தெரியவில்லை. எல்லோரிடமும் எங்கும் குருதி கொட்டிக்கொண்டிருக்கிறது. பேரூந்திலும் நகரத்தின் உள் தெருக்களிலும் வீட்டிலும் தொலைக்காட்சிப்பெட்டியிலிரு
-
- 14 replies
- 5.2k views
-
-
எப்படி மறப்பேன் என் தாய் நிலத்தை ? - நிர்வாணி - எங்களின் தாய்நிலத்தை அவ்வளவு இலகுவில் மறந்துவிடமுடியாது காலங்கள் எத்தனை கடந்தாலும் இந்த உடல் கோலங்கள் எத்தனை கண்டாலும் சொந்த மண்ணை மறந்திடமுடியாது மறந்துவிடச் சொல்கிறாள் என் காதலி கனடாவில் குடியேறிவிட்டோம் கனடியனாய் வாழ்ந்திடுவோம் வா என்கிறாள் எனதருமைக் காதலியே எதை மறந்துவிடச் சொல்கிறாய் ? தை பிறந்தால் பட்டம் விட்ட நாட்களையா ? அத்துளு வெளியில் பந்தடித்த நாட்களையா ? கோயில் திருவிழாவில் அழகான பெண்களைப் பார்த்து ஏங்கி நின்ற நாட்களையா? எதை மறந்துவிடச் சொல்கிறாய் ? சொல்லடி பெண்ணே எத்தனை காலமடி ? இன்று நினைத்தாலும் நெஞ்சம் இனிக்குதடி எப்…
-
- 10 replies
- 1.7k views
-
-
நிறமற்றவன் எதில்தான் இல்லை வர்ணம் இலையில் பூக்களில் மரத்தில் பூச்சிகளில் மனிதர்களில் எதில்தான் இல்லை வர்ணம் மனங்களில் சோதியில் சாதியில் வர்ணங்களற்று வாழவே முடியாது நம்மால் முஸ்லீமாய் இந்துவாய் கிறித்துவனாய் சீக்கியனாய் வர்ணங்களற்று வாழவே முடியாது நம்மால் புத்தனுக்கென்று ஒரு நிறமில்லை எந்த வர்ணத்தையும் அவன் வரைந்து கொள்ளவில்லை அதனால் தான் நம்மிடமிருந்து புத்தனையே துடைத்தோம் நம் வர்ணத்துக்கு புத்தன் ஆக மாட்டான் இம்சையே நம் இயல்பின் வண்ணமாயிருக்க நம் நிறத்தை மறுத்தார் ஒருவர் அஹிம்சையின் நிறத்தினை துப்பாக்கியால் துடைத்தோம் நம் குரூரத்தின் வர்ணத்தினை அவரிலிருந்து வெளியாக்கினோம் வெண்புறாக்கள் பறக்கும் …
-
- 3 replies
- 914 views
-
-
பார்த்தலையும், புன்னகைத்தலையும், நிராகரித்துவிடும் பலரை கடக்கவேண்டியிருக்கிறது. அரவணைப்புகான ஏக்கத்தைதையும் இன்றின் ஏமாற்றத்தையும் சுமந்து திரியும் சிலரையும் கடக்கவேண்டியிருக்கிறது. வீடுகளில், வேலைத்தளங்களில் - இருந்து ஏதாவதொன்றைக் காவி வருபவர்களையும், ஒரு சீக்கரெட் , கபே வழியாக ஏதோவொன்றை இறக்கி வைக்க முயல்பவர்களையும் சந்திக்க வேண்டியிருக்கிறது. லெதர் ஜக்கெற்றுக்களும் மப்ளர்களும் மனதையும் மூடிவிட ஐபோனும் கூலிங்கிளாசும் பொறிகளையும் தின்றுவிட கொட்டடி முதல் கொடிகாமம் வரை உறவாடி உணர்வோடு இருந்தம் என்பவரையும் பொறுத்துக்கொள்ள வேண்டித்தான் இருக்கிறது. சென் நதியிலும் லூவர் மியூசியத்திலும் ஈபிள் கோபுரத்திலும் நீண்ட மெற்றோக்களிலும் ஏறிவந்த பின்னும்…
-
- 9 replies
- 876 views
-
-
நிறுவைக்கோளாறு. -------------------------------------------------- தராசின் ஒரு பக்கத்தில் என் உறுதிப்பாடுகளை வைத்தேன் மறுபக்கத்தில் என் சந்தேகங்களை அவிழ்த்துக் கொட்டினேன் சந்தேகப் பக்கம் தாழ்ந்து நின்றது பின் உறுதிப்பாடுகளுடன் சிறிது விவாதங்களை அடுக்கினேன் அப்பாடா அதன்பின் தாழ்ந்து நின்றது உறுதிப்பாட்டின் பக்கம் உறுதிப்பாடுகளால் சந்தேகங்களை அளந்தேனா ? அல்லது சந்தேகங்களால் உறுதிப்பாடுகளை அளந்தேனா ? நிறுவைப் படிகள் எவை? நிறுக்கப்படுபவை எவை ? மீண்டும் மேலெழுந்தது உறுதிப்பாடுகளின் பக்கம் இவ்வாறாக இவ்வாறாக தமக்குள் ஏதோ நானறியா ரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டவைபோல் எழுவதும் தாழ்வதுமாய் என்னை ஏளனம் செய்தவாறே தமத…
-
- 2 replies
- 1.2k views
-
-
நான் ஆசையோடு வளர்த்து வரும் என் செல்லச் சேவல் அதிகாலையில் குhவிட பறவைகளின் இதமான இசை என்னை மெய் மறக்க வைக்க கண்களை இதமாக கசக்கிய படி முற்ரத்தில் அம்மா விளக்கு மாற்றினால் குhட்டிய அழகான அடையாளத்தில் கால் பதித்து கிணற்றடி மட்டும் போய் அருகில் நிற்கும் வேப்ப மரத்து குச்சி பிடுங்கி பல் துலக்கி பின் ஐpல் என்ற குளிர் நீரில் முகம் கழுவி வேலி ஓரத்தில் கொத்துக் கொத்தாக புhத்துக் குலுங்கி நிற்கும் நந்தியா வட்டை புhப் பறித்து இன்றய நாள் நல்ல நாளாக இருக்க கடவுளை வணங்கி தொழுவத்தில் கட்டி நிற்கும் பசுவில் அப்பா கறந்த பாலில் அம்மா அன்போடு தந்த சுடு சுடு தேனீரை குடித்து விட்டு என் சைக்கிளை எடுத்து என் கிராமத்து தெரு வெல்லாம் சுதந்திரமாக நான் ஓடி மகிழும் …
-
- 2 replies
- 720 views
-
-
நிறைவேறா ஆசைகள் ஆயிரம் கோடி ஆசைகள் என் நெஞ்சினில்...இருக்கிறது அன்னை கனவு நிறைவேறனும் அண்ணன் பொறுபானவன் ஆகனும் அக்கா என்றும் ஆனந்தமாய் இருக்கனும் தம்பி அவன் சுமைகள் குறையனும் தங்கை அவள் எதிர்காலம் சிறக்கனும் என்னவன் என்னக்கானவனாய் ஆகனும் என்னை நம்பி நட்பு வைக்கும் உறவுகள் வாழ் நாளில் என்றும் பிரியாது இருக்கனும் அலைகடல் கடந்து சென்றாலும் உறவுகளுடன் என்றும் குறையாமல் அன்பாய் இருக்கனும் கையில் இருக்கும் அன்பான நட்புகள் என்றுமே சுயநலமில்லாது இருக்கனும் எந்த எதிர்பார்புகளும் இல்லாது என் துன்பங்களில் என்னவர்கள் பங்கு கொள்ளனும் இப்படி எத்தினை எத்தினையோ ஆசைகள் எல்லாமே என்றும் நிறைவேறா ஆசைகள்
-
- 1 reply
- 1k views
-
-
நிலத்தை உடைத்துப் பீறும் நெருப்பாற்றை… நவம்பர் 11, 2020/தேசக்காற்று/உலைக்களம்/0 கருத்து நிலத்தை உடைத்துப் பீறும் நெருப்பாற்றை கைகளால் பொத்தலாம் என்றா நினைத்தாய்? மின்னாமல் ஒரு இடி எதிரியின் மடியிலே – விழுந்தது. பகைவனின் சிம்மாசனத்தின் பட்டு பட்டுத்துணியில் பொத்தல் விழுந்தது. கண்டியில் எண்கோண மண்டபத்தின் சுவர்கள் வெடித்துச் சிதறிக் கொண்டன. ஜெயவர்த்தனபுரத்தின் பாராளுமன்றப் படிக்கற்கள் மந்திரி;களின் பாதம்படுவதற்கு கண்டனம் தெரிவித்தன. ‘இலங்கை இராணுவம் அணிவகுப்புக்கு மட்டுமே அழகானது’ சிங்கள மக்கள் தெரிந்து கொண்டனர். “சிசில்” வெறும் விசில் என்பதை பூநகரிக்குள்ளே புலிகள் புகுந்தபோது கூலிப்படைகள் க…
-
- 0 replies
- 683 views
-
-
நிலம் மிதித்தவனின் வதை கோ- நாதன் எனதான மார்பு பால் சுரந்து மடியறங்கம் திரண்டிருக்க மழலை முகம் புதைத்து மகிழ்ந்த அதர சிறு புன்னகையினை பிடுங்கி பெரும் நிலத்தினை மிதித்தவன் தலை வெட்டி திருகித் தூக்கி வீசியிருந்தான். என் கால்களையும்,கைகளையும் பல பூட்ஸ்க் கால்கள் மண்ணிலழுத்தி மல்லாந்து கிடத்திய போது எனதான வெள்ளைத் தோலின் மார்புகளை கடைவாய்களும் கடித்து குதறி உமிழ.. இரத்தமும், காயமும் உடம்பெல்லாம் வழிந்து உறைந்தது.காமப் பிசாசுகள் முலையறுத்து முலைக் காம்பினை குழந்தையின் குதத்தில் திணித்து. மொத்த இயக்கங்களுமற்ற சின்ன யோனித் துவாரங்கள் வழியே எண்ணிக்கையற்ற பெருத்த ஆண்குறிகள் வக்கிரம் தீர்த்து கொண்டிர…
-
- 6 replies
- 657 views
-
-
நீ என்னைக் காதலிக்கவில்லை என்ற சொல்லை எறிந்தால் பதிலுக்கு உனக்கு மட்டும் கவிதைகளை தந்து கொண்டே இருக்கும் மரம் நான் * நான் மழைக்கு பள்ளிக்கூடம் ஒதுங்காததில் கவலைப்பட்டது என்றால் அது உனக்கு கவிதை எழுத துடித்த போது மட்டும்தான் * நல்ல வேளை நான் கவிதை எழுத முயற்சிக்கவில்லை அப்படி எழுதியிருந்தால் உன்னை விட அழகான கவிதையை என்னால் எழுதியிருக்க முடியாது * நீ கட்டி அணைத்தால் தூங்காது தலையணை நான் கட்டிப்பிடித்தால் தூங்காது பேனா * உன்னைப் பார்த்து யார் யாரெல்லாம் பொறாமைப் படுகிறார்களோ தயவு செய்து அவர்களைப் பார்த்து நீ கோவித்து விடாதே அவர்கள்தான் என் கவிதை…
-
- 2 replies
- 997 views
-
-
நிலவின் வருகை: ஒரு இரவின் இடையில் உயிரின் கலசம் உடைந்தது உணர்வுகளின் ஆர்ப்பரிப்பின் உச்சத்தில் அவளை இறுகத் தழுவினேன் இறுக்கி அணைத்தேன் முத்தமிடா இடங்களை காதலின் உச்ச வரிகள் நிரப்பிச் சென்றன யுகங்களுக்கு அப்பால் இருந்து கால பைரவன் உயிரின் துளிகளை சுமந்து என்னிடம் தந்தான் என் தேவதையின் காதல் இடைவெளியை அந்த உயிர் துளிகளால் நிரப்பினேன் ஒரு மொட்டின் அசைவை தன்னில் என் தேவதை எனக்குச் சொன்னாள் ஆயிரம் கலவிகள் கடந்த வீரத்தையும் தன் நீந்தலையும் என்னுள் என் ஆண்மை தன்னைப் பற்றி வாய் வலிக்கச் சொன்னது 2 அந்த அறை எனக்கு கருவறை அந்த அறையில் ஒரு உயிரின் வருகைக்காய் காத்திருந்தேன் என் தாய…
-
- 87 replies
- 11.9k views
-
-
நிலவே .... உன்னை உவமையாக கூறி .... காதல் செய்தும் காதலரை .... வாழ்த்திட ஒருமுறை வருவாயோ ..? உன்னையே உவமையாக கூறி .... காதலியை ஏமாற்றிய .... காதலனை சுட்டெரிக்க .... ஒருமுறை வருவாயோ ..? நிலவே உன்னிடம் .. நீர் ,நிலம், காற்று இருக்கிறதா ..? தொடரட்டும் விஞ்ஞான ஆய்வு ....! பூலோகத்திலோ உன்னால் ... நீர் ,நிலம், காற்றுமாசடைகிறது ....!!! நிலவே ஒருமுறை வருவாயோ .. சூழலை மாசுபடுத்தும் இவர்களை .... எச்சரிக்க மாட்டாயோ ...? நிலாவில் பாட்டி இருக்கிறார் .... இன்றுவரை நம்பும் குழந்தைகள் ....!!! பாட்டியுமில்லை பாட்டனுமில்லை ... வான் வெளி தூசிகளே அவை .... நிரூபிக்க ஒருமுறை வருவாயோ ...? மூடநம்பிக்கையை உடைத்தெறிய ... ஒருமுறை இறங்கி வருவாயோ ...?
-
- 1 reply
- 604 views
-
-
பெருவானில் புகழோடு உலாவரும் நிலவே பெருந்துயரில் மாய்கிறோம் காப்பாற்ற வாராயோ வெள்ளியும் விண்மீனும் உனக்கு வழித்துணை வெறியரும் கயவரும் எமக்குப் பெருவினை கதிரவன் வந்ததும் உனக்கு விடுமுறை கடைசி மூச்சுவரை எமக்குண்டோ விடுதலை இருண்ட வானுக்கு நீவந்து ஒளிதந்தாய் இருண்ட எம்வாழ்வுக்கும் சற்றேனும் வழிகாட்டு பிறநாடுகளைக் கெஞ்சினோம் புறமுதுகு காட்டினர் பிறைநிலவே நீயேனும் உதவிக்கு வாராயோ வேண்டினோம் தெய்வங்களை வெறுமனே இருந்தனர் வெண்ணிலவே நீயேனும் காப்பாற்ற வாராயோ http://gkanthan.wordpress.com/index/eelam/kaappaarru/
-
- 0 replies
- 605 views
-
-
ஒருவன்.... இருளுக்கு நடுவில் எப்படி உன்னால் சிரிக்க முடிகிறது? இன்னொருவன்.... உன் வாழ்வின் ஒவ்வொரு சொட்டும் வசீகரம் மிக்கது. மற்றொருவன்.... இன்றும் போல என்றும் இருந்தால் எப்படி இருக்கும்? நான்.... ஆற்று வெள்ளம் அள்ளிப்போகும் கிளிஞ்சல் வாழ்வு. வாழ்வின் கோப்பையை நிறைப்பது இரவு. இரவின் கோப்பையை நிறைப்பது நிலவு. ஆனால் அதிகாலை வேளைகளில் நீ புற்களில் அழுதுவிட்டுப்போவதை நான் மட்டுமே அறிகின்றேன். என்னிரு விழிகள் போதவில்லை உன்னுடன் சேர்ந்து அழுவதற்கு நான் கவிஞன் என்பதால் என்னிடம் வர்ணம் பூசாத வார்த்தைகள் கூட இல்லை. நீ ஏன் அழுகின்றாய் என்பதை இந்த உலகிற்கு சொல்லிப்போவதற்கு.
-
- 0 replies
- 580 views
-
-
என் ஊரில் முற்றத்து நிலவு என்னைத் தேடித் தவிக்க, ஊரைவிட்டு வந்த நான்... நிலவைத்தேடி, கண்கூசும் மின் விளக்குகளோடு அலைகின்றேன்... முகவரியில்லாத தேசமொன்றில்!!! அம்மாவின் நிலாச்சோறும், மண்வாசனையும்... அடிக்கடி அனுப்பும்... அன்பான அழைப்பிதழ்களையும், என் சூழ்நிலைக் காவலர்கள்... என் மன குப்பைக் குழியில், அப்போதே போட்டுப் புதைக்க... இருட்டு மட்டுமே துணையாக!! இன்னும் நிலவைத் தேடியபடி.... நான் முகவரி தெரியாத பயணத்தில்... பசியோடு!
-
- 6 replies
- 1.7k views
-
-
நிலாமுற்றம் பால்பொங்கும் மணலின் மேல் நம் நீண்ட இரவுகள்.. மாமரக்கிளையின் காற்றும்.. வேப்பிலை சலசலப்புக்களும்..... பாட்டி கதையும்... அம்மாவின் குழையல் சோறும்... நிலாவை முகில் மறைக்கும் நேரம்.. தங்கையை.. நான்.. வெருட்ட அவள் அழுவதும்... மீண்டும் நிலாக் கண்டு எல்லோரும் சிரிப்பதும்.. சுருட்டோடு கடக்கும்.. அப்பாவுக்காக மட்டும்.. ஒலி தாழ்ந்து இறங்கும் அரட்டையும்.... பாட்டி மடியில் தலையும்.. அம்மா மடியில் கால்களும்.. ஜொலிக்கும் மின்மினிகள்.... வியந்த வியந்து எண்ணுவதும்.... எல்லோரும் ஒன்றாய் மீண்டும் அந்த நிலாமுற்றம் என் வாழ்வில் வருமா..... எப்படி வரும்....? மெய் தொலைத்த அப்பா பாட்டி... மணமாகி... …
-
- 32 replies
- 5k views
-
-
-
நிலைத்தாயே வாழ்க! -------------------------- வாழ்த்தும் வயதுமில்லை வார்த்தைகளும் வரவில்லை வாழும் காலத்தில் வாழும் வரம் பெற்றதனால் மானமுடைத் தமிழினமாய் இப் பூமியிலே நாம்! எங்கள் தலை நிமிர சோதனையும் வேதனையும் தாங்கிய வேந்தனே காலப் பெருவெளியில் கலையாத பெருமொளியே நீலவானத்தின் ஒளித்திரளே நினைத் திங்களென முடியாது தேயாத தெளிந்த நிலை ஓயாத உழைப்பு நிலை காயாத பொன் வதனம் மாறாத புன் சிரிப்பு மறுவற்ற உபசரிப்பு நீயே நிலைத்தாயே எம்மினத்தின் மாறாத பெரும் குறியீடாய்! தமிழினத்தின் வரலாற்றில் வாராது வந்துதித்து வரலாறாய் வாழ்பவரே ஒருநாளும் மறையாது நிலைத்துவிட்ட மாமணியே வாழ்க! வாழ்க! வாழ்க! 26.11.2011
-
- 6 replies
- 981 views
-
-
என் சோம்பேறி மனசு செய்த வீரமான செயல் உன்னைக் கண்டதும் ஓடிப்போய் உன்னைத் தொட்டுவிட்டு திரும்பி வராததுதான் * கையசைத்துவிட்டு கல்லூரிக்குள் நுழைந்து விடுகிறாய் நீ விடை பெற்றுப் போகும் கடைசி நாள் மாணவன் போல் வீடு செல்ல மனமில்லாமல் நான் * நம் காதலுக்கு முதல் எதிரி நேரம்தான் பார் நாம் சேர்ந்திருக்கும் போது மட்டும்தான் போட்டி போட்டு ஓடுகிறது * உன்னைக் காதலிக்க வேண்டாம் என்பவர்களை கூட்டி வா ஒரு நிமிடம் நீ இல்லாத என்னை கொடுத்துப் பார்ப்போம் சமாளிக்க முடிந்தால் சமாதானம் பேசுவோம் * என் கைகளுக்கு இதுவும் தேவை இன்னும் தேவை என்னை எதுவும் கேக்காமலே உன்னை அணைத்து பழகி…
-
- 4 replies
- 1.3k views
-
-
பொம்மைகள் கொன்றெறியப்பட்டவெளியில்அழுகைப் பெருக்குப் படிந்த விழிககளுடன்காணாமல் போகச்செய்யப்பட்ட தந்தைக்காய்காத்திருக்கும் ஏதுமறியாச் சிறுமியேஉன் பிஞ்சுக் கைகளில் சொருகினர்துருவேறிய துப்பாக்கியைஏனெனில், நம்முடைய கைகளில் துப்பாக்கிகளிருப்பதுதான்அவர்களின் தேவைபிள்ளைகளைத் தேடும்எண்ணற்ற அன்னையரின் முடிவற்ற ஓலத்தின் நடுவேசிறையிலே முதுமையடையுமொரு மகனுக்காய்வீழ்ந்து புறளும் தாயேஉன் ஒடிந்த தேகத்தில்உடுத்தினர் தற்கொலை குண்டு அங்கியைஏனெனில், நம்மை சிறைச்சாலைகளில் அடைப்பதுதான்அவர்களின் தேவைஆட்களற்று இராணுவம் விதைக்கப்பட்டிருக்கும்ஆக்கிரமிக்கப்பட்ட பூர்வீக நிலத்தை விடுவிக்கஅகதிமுகாமொன்றில் தவமிருக்கும்மெலிந்துருகிய குழந்தையேஉன் தலையில் அணிவித்தனர் புலித் தொப்பியைஏனெனில், நம்மை அகதிமுகா…
-
- 0 replies
- 954 views
-
-
நினைவழியா பயணம் நீண்ட நெடிய பயணங்களின் பின்பு அங்கே தரித்து நின்றோம் செம்மண்ணின் வாசனையும் வேலி கதியால்களில் பூத்திருந்த முள் முருக்குகளின் பூக்களும் தொலைந்து போயிருந்த நினைவுகளில் உயிர் தடவிற்று கரிய நிற மாடு பூட்டி வண்டில் ஒன்று கடந்து போனது இருளும் நினைவும் நிலவின் ஒளியுடன் கலந்த இருந்த பொழுதில் தான் நாம் அந்த வீதியில் அமர்ந்து கொண்டோம் நேற்றும், முந்த நாளும் அதற்கும் முன்பாகவும் என் தோழர்கள் உயிர் சரிந்து வீழ்ந்த வீதி அது ஒவ்வொரு அங்குல நிலத்திற்காகவும் ஓர்மம் கொண்டு போராடி களம் வென்ற என் தோழர்களை தாங்கி நின்ற வீதி அது என் பாட்டனின், அவனதும் பாட்டனின் காலடிகளின் தடம் காக்க, அவ…
-
- 11 replies
- 1.8k views
-
-
நிழல் சொல்லும் நிஜங்கள்!! கண்ணுக்குள் இமையாக காதல் உணர்வையே இசையாக நெஞ்சுக்குள் முள்ளாய்......... காற்றே நீ மூசு, பின்.......கண்களாய் மோதிப் பார்க்க வந்தாயா--!! வெளிச்சத்தைக் கொண்டு ....... விழிகளில் கரைந்து மடலில் வரைந்தது _சுவிற்மிச்சி(MCgaL)
-
- 2 replies
- 1.2k views
-
-
நிழல்!! அழகிய நந்தவனத்தில் அநாதையான பறவை நான் சிறகுகள் எனக்கிருந்தும் சிறகடிக்க தெரியாது தவித்தேன் வானத்தில் பறக்க ஆசை வந்தும் தனிமையில் பறக்க வெறுத்தேன்..!! பறக்கும் பறவைகளை கண்டு பலநாட்கள் ஏங்கினேன். என் ஏக்கம் அறிந்து ஒரு பறவை என்னிடம் பதுங்கி பதுங்கி வந்தது.. எனக்கு பறவை மொழி கற்று தந்தது நானும் கற்றேன் மொழியை... மறந்தேன் என் தாய் மொழியை இறக்கைவிரித்து பறந்தேன் வானத்தில் பறந்த போது என் கண்களுக்கு தெரிந்த எல்லாமே சின்னதாகவே இருந்தன.. நிஜத்தை தொலைத்தேன் நிழலாக பறந்தேன் வானத்தில்.. நிஜம் எது நிழல் எது என குழம்பினேன் நானும்.. நந்தவனத்தில் இருந்த இனிமை எனக்கு கிடைக்கவில்லை வானில் நிஜத்தை தொ…
-
- 42 replies
- 8.9k views
-