Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. சில்லுடைந்து விழுந்த வண்டி சிலுக்காகி ஆடையிலே பல்லெடுத்து சிரிக்காம பார்த்து நானும் நிற்பேனோ...??? வந்த வழி தடுமாறி வழியோரம் கேட்கையிலே என்ன வென்று சொல்லாமால் எடுத்தெறிஞ்சு போவேனோ....?? கட்டழகு மேனி காட்டி கண்னேதிரே நீ வந்தா கண்ணெடுத்து பார்க்காமா கரையொதுங்கி போவேனோ...?? சுத்தி விட்ட துணி நளுவி தொப்பிளது தெரிஞ்சுப் புட்டா கை nவைத்து நுள்ளாம காளை நானும் நிற்பேனோ...??? முற்றத்து வாசலிலே துளசி மரம் முன்னிருந்தா கை யெடுத்து வணங்காமா காலெடுத்து போவேனோ....??? பதில் சொல்லு....! :P :P :P - வன்னி மைந்தன் -

    • 2 replies
    • 1.1k views
  2. Started by nedukkalapoovan,

    1993 தைத்திங்கள் 16ம் நாள் இந்திய மத்திய அரசின் நயவஞ்சகச் சதிக்கு வங்கக்கடல் நடுவே தன்னை அர்ப்பணித்த கிட்டு மாமா உள்ளிட்ட வேங்கைகள் நினைவாக..! வெடியோசை எழுந்தது எங்கள் நெஞ்சோசை அழிந்தது களத்தோடு களமாடி கோட்டைக்குள் அடித்தெழுந்த அந்தப் புயலும் ஓய்ந்தது...! தங்க தமிழீழ வேங்கையது வங்கக் கடல் நடுவே சரிந்தது...! அசோகச் சக்கரத்தின் அகோரத் தாண்டவம் - எங்கள் மாமாவின் உடல் கிழித்தது...! ஆதிக்க வெறி பிடித்த அகிம்சா தேசமது அவன் ஆன்மா குடித்துக் குதூகலித்தது...! தமிழீழ அன்னையவள் கொடிதனைச் சுமந்தவன் ஆழி தன் அலையோடு மீண்டிட்டான் தமிழ் மண்ணை...! குரலோசை எழுந்தது - அது அவன் புகழோசை சொன்னது விடியலின் தாய் மகன் விடிவெள்ளியான கதை முடிவின்றிச் சொன்னது....! தர்ம…

  3. Started by slgirl,

    துரோகம் என்மீது பிரியம் உள்ளவன் போல நடித்த... பிரியமில்லாதவனுக்கு... இதயம் நொருங்கியவளின்... இரங்கற்பா ! எனக்கு எதையெல்லாமோ கற்றுக்கொடுத்தாய்! ஏழையாய் வாழ... கவிதை எழுத... அவமானப்பட... அதற்கு குருதட்சணையாகத்தான் என் காதலை பறித்துக்கொண்டாயோ மௌனம் சம்மதத்தின் அறிகுறி! ஆனால் உன் மௌனமோ என்... காதலின் சவக்குழி! நீ என்றேனும் இந்த கவிதையை பார்க்க நேர்ந்தால்... பதில் அனுப்பு எனக்கு துரோகம் செய்த காரணத்தை...

    • 2 replies
    • 1.4k views
  4. Started by slgirl,

    தோழனே... என் கண்ணில் நீர் வரக்கண்டு கதறிப் பதறிப் போனாய் தோழனே... உனதன்பினை மெச்சினேன் மெய்சிலிர்த்தேன்.. பரவசம் கொண்டேன்.. கண்ணீரோடு புன்னகைத்தேன்.. மடையா உன்னை யார் வெங்காயம் வெட்டும்போது வரச்சொன்னது???

    • 2 replies
    • 1k views
  5. மரண அடி விழுந்தவுடன் ஒழிந்தானே பகைவன்-அங்கு கரணம் இட்டு புகை எழவே புலம்பி நின்றான் மகிந்தன் இரணை மடுவில் குண்டெறிந்து தேடுகிறார் எலிகள்-இனி சரணம் சொல்லி கதை முடிப்பார் சீறிவரும் புலிகள் விடுதலைக்கு வானோடும் அது தாயகத்தின் அடிப்படை-அதை தடுப்பார் எவருண்டு அது தலைவனுக்கே வெளிப்படை கொடுப்பார் பல வெற்றிகளை தமிழீழ வான்படை-அவர் விடுப்பாரே போர்முரசம் எதிரியின் உயிர்பறித்து ஒப்படை உலகமெல்லாம் போற்றிடவே புவியாளும் புலிப்படை-நாம் கலக்கமின்றி வாழ்ந்திடலாம் தலைவன் மனம் தங்கம் எடை மறத்தமிழா நுகர்ந்திடுவாய் தாய்மண்ணின் நல் வாடை-அதை மறந்தால் நீ பிணந்தானே உன் மேனிக்கு ஏன் ஆடை ஆண்டாண்டு காலமதாய் நாம் ஆண்டுவந்த திருநாடு-இது வேண்டாத பேருக்கும் வாழ்வளித்த சி…

    • 2 replies
    • 1.1k views
  6. "சொந்தங்கள்" என்ற சொற்பதம் கழிவறைச் சேற்றுக்குள் புதைந்து ரொம்ப நாளாச்சு! அவர்களைத் தேடுவதைவிட என் வீட்டு குப்பைக் குழியில் நிறையவே கொட்டிக் கிடக்குது! சொல்லொன்று செயலொன்று... செய்ந்நன்றி மறந்தின்று... அவராடும் ஆட்டத்திற்கெல்லாம்..... ஆளும் நானில்லை... ஆடுகளமும் நானில்லை! ஆடிப்பார்க்க எனக்கும் ஆசைதான்! - ஆனால், அநியாயமாய்ப் போன அன்பென்ற ஒன்று, என்னோடு கூடிப்பிறந்ததாய்ப் பிதற்றுகின்றது இன்னும்! சொந்தமென்று ஒன்று என்னை ஓங்கி உதைத்து நான் வீழ்ந்தபோதும், நண்பனென்று சொல்லி உரிமையோடு என்னை தாங்கிப் பிடித்தது - நட்பு !!! என்னை நேசிக்கும் நட்புக்காய் உயிரையும் கொடுப்பேன்!!!!!!!!!!!!

  7. துரத்துகிறேன்...என்னைத்தான்* நிஜத்தைத் தொட நிழலின் வாலைப் பிடிக்கிறேன். நான் திருப்பித் தீண்டிட நிழலும் திருப்பிக்கொள்கிறதே? கற்பனைக்கு எல்லை குறிக்கிறேன் - அது என்னை மீறி எங்கோ சஞ்சரிக்கிறது... சுடும் நெருப்பை அறிந்த பிறகும் - அதுவே சுகமென - என் சுட்டு விரலை கரித்துக்கொள்கிறேன். கொடுங்காயங்கள் நிச்சயமென அறிந்தும், விபரீதத்தோடு - நான் விளையாடுகிறேன்! ஆற்றுபெறா ரணங்கள் பெற்றுத் தந்த பாடங்களை புரிந்து கொள்ள - நான் துரத்துகிறேன்... விடாது... என்னைத்தான். - சூர்யா

    • 2 replies
    • 1.3k views
  8. ஹலோவின் ஞாபகங்கள்..... சிவப்பும் மஞ்சளுமாய் காய்ந்து சிதறிக் கிடக்கிறது மேபிள் மரம் சொரிந்த உதிர்வுகளும் சருகுகளும் மழை விட்ட பின்னும் இலை சொட்டும் நீராய் ஞாபகத் தாலாட்டில் சாரல் அடிக்கிறது நினைவுத் தூறல்கள் சாளரத்தில் வழிகிறது கம்பிகளாய் மழைத்துளிகள் இதழ்கள் சிலிர்க்கின்றன ஈரமான ரோஜாக்கள் பேய் அலங்காரத்துடன் பிரியமாய் வாசல்களில் விதவிதமாய் மழலைகள் புத்தகப் பைகளுக்கு பதில் இன்று சொக்கிலட் பை இனிப்புப் பொதியுடன் இல்லம் திரும்பி வரவேற்பறையில் கடை விரித்து வகை வகையாய் பிரித்து பத்திரப் படுத்திய தம்பியைப் பார்த்து பெருமூச்சு விட்டான் பல்கலைக் கழகம் படிக்கும் அண்ணன் இன்னுமொரு முறை இப்படி இனிப்பு வாங்கி மகிழ மீண்டும் வருமா பள்ளிக் காலம்?

  9. ஆணவத்தில் வானமேறி ஆட்டம் போட்டு வந்தவரே காலக்குறி வைத்து புலி கந்தகத்தால் குதறியதே.... கோட்டையிலே வந்தடித்தும் கொட்டமதா அடங்கவில்லை..?? வம்பிழுத்து நீயும் வந்தாய் வாங்கி கட்டி இன்று போனாய்... எத்தனை நாள் பொறுத்திருப்போம் எம்மவரை நீயழிக்க....?? காத்திருந்த நாள் கழித்து கள முனையில் இறங்கிவிட்டோம்... தேற்றம் கொண்ட எம் படைகள் தெருவிறங்கி வந்து விட்டார் கூற்றுவனே இனி உன்னை குழி தோண்டி புதைத்திடுவார்... வண்டு வந்து படம்பிடிக்க பறந்தடித்தா நீயும் வந்தாய்..?? கரணங்கள் அடித்துயின்று காணமலே எங்கு போனாய்...??? கூட்டமதா கூடி வந்து குண்டுகளை எய்ய வந்தாய்...?? சங்கரங்கள் ஆடியுனக்கு சமாதிகள் கட்டி விட்டோம்... தொல்லை தந்த…

    • 2 replies
    • 1.1k views
  10. தமிழீழம் எங்கள் தாய் மூச்சு. தாயை நாம் எப்படி நேசிக்கிறோமோ அப்படி தான் ஒவொரு தமிழனும். நாம் கண்ட முதல் உலகம் நம் நாடு. நாம் விட்ட முதல் மூச்சு நம் நாட்டில். நாம் படித்த முதல் எழுத்து நம் நாட்டில். அது போல் நாம் தலை சாயும் கடைசி நாளும் எம் நாட்டில் தான். நம் தலை சாய்ந்தாலும் எம் போராட்டம் உடையாது. நம் மூச்சு நின்றாலும் எம் உலகம் என்றும் எம் கையில்.

  11. Started by slgirl,

    சில நேரம்... சில நேரங்களில் சில அழகான விசயங்கள் நம்மை கேக்காமலே நம் கண்முன் நிக்கலாம் மாலை நேர மழை துளிகள் ஏழை குழந்தையின் வெள்ளை சிரிப்பு அழகான நாய்க்குட்டி... இயற்கை எப்போதுமே அர்த்தம் நிறைந்தது சில சம்யங்களில் நண்பர்களும் அப்படியே அமையலாம்...

    • 2 replies
    • 1.1k views
  12. ஆனந்த விகடனில் இந்த வாரம் (26.11.15) "நடு விழா" என்ற எனது கவிதை வெளியாகியுள்ளதை யாழ் களத் தோழர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். நடு விழா! என்னைக் கொன்று அழைப்பிதழ் அடித்தார்கள் என்னைக் கொன்று இடம் அமைத்தார்கள் என்னைக் கொன்று மேடை சமைத்தார்கள் என்னைக் கொன்று இருக்கை செய்தார்கள் என்னை நட உன்னை அழைத்தார்கள்! நன்றி: ஆனந்த விகடன்.

  13. AI திருட்டு - பஞ்ச பூதங்கள் என்று எனது AI செல்லதிடம் கேட்டபோது அவள் தந்த கவிதை😂 நிலம் எனும் தாய் தன் மார்பில் நம்மை தாங்கி, நீரின் ஓசையில் நம் உணர்வுகள் பாய்ந்து, காற்றின் சுவாசத்தில் நம் சிந்தனைகள் ஓடி, நெருப்பின் வெப்பத்தில் நம் உயிர் ஜொலித்து, ஆகாயத்தின் அமைதியில் நம் ஆன்மா பரவி... பூமியின் உறுதியால் நம் பாதங்கள் நிலைபெற்று, நீரின் நெகிழ்வால் நம் நெஞ்சங்கள் மெலிதாகி, வாயுவின் வேகத்தில் நம் கனவுகள் பறந்து, அக்னியின் ஆற்றலில் நம் ஆழங்கள் வெளிப்பட்டு, ஆகாசத்தின் அகலத்தில் நம் ஆத்மா ஒளிர்ந்தது. இவை ஐந்தும் நம்முள் ஒவ்வொரு நொடியும் இசைபோல் ஒலிக்கின்றன, உறுதி, உணர்வு, இயக்கம், ஒளி, அமைதி — இவை இல்லாமல் உயிர் இல்லை, இவை ஒன்றாகவே நம் ஆன்மாவின் மொழி.

  14. தமிழா! நீ பேசுவது தமிழா? அன்னையைத் தமிழ்வாயால் 'மம்மி' என்றழைத்தாய்... அழகுக் குழந்தையை 'பேபி' என்றழைத்தாய்... என்னடா, தந்தையை 'டாடி' என்றழைத்தாய்... இன்னுயிர்த் தமிழை கொன்று தொலைத்தாய்... தமிழா! நீ பேசுவது தமிழா? உறவை 'லவ்' என்றாய் உதவாத சேர்க்கை... 'ஒய்ப்' என்றாய் மனைவியை பார் உன்றன் போக்கை... இரவை 'நைட்' என்றாய் விடியாதுன் வாழ்க்கை இனிப்பை 'ஸ்வீட்' என்றாய் அறுத்தெறி நாக்கை... தமிழா! நீ பேசுவது தமிழா? வண்டிக்காரன் கேட்டான் 'லெப்ட்டா? ரைட்டா?' வழக்கறிஞன் கேட்டான் என்ன தம்பி 'பைட்டா?' துண்டுக்காரன் கேட்டான் கூட்டம் 'லேட்டா?' தொலையாதா தமிழ் இப்படிக் கேட்டா? தம…

  15. நான் எப்பவுமே கோவிலுக்கு வந்த உன்னை திட்டுறதுக்கு தான் வருவேன் ஆனா இப்ப உனக்கு நன்றி சொல்ல வந்து இருக்கேன் அந்த பொண்ணு சொன்ன வார்த்தை மட்டும் முதல் சொல்லி இருந்தால் நான் இந் நேரத்துக்கு உயிரோட இருந்திருக்க மாட்டேன் நான் யாரு எப்பல்லாம் மறக்கிறானோ? அப்ப எல்லாம் நீ சரியாய் ஞாபகபடுத்திர எல்லாருக்கும் தெரியுர மாதிரி முகத்தை படைக்கிற நீ ஏன் யாருக்கும் தெரியாத மாதிரி "மனசை" படைக்கிற...

    • 2 replies
    • 900 views
  16. பெண்ணியம் : பல கோணங்கள் ---------- பெண்ணியம் அல்லது பெண்ணிலை வாதம் என்பது ஒரே நிலைப்பாடு கொண்டதல்ல. அதனுள் பல கருத்தியல்கள் - கோணங்கள் உண்டு. அவற்றுள், ஒரு சிலவற்றை மட்டும் இங்கே பார்க்கலாம். 1) மிதவாதப் பெண்ணியம் இது பெண்ணின் சிறப்புக்களைக் கூறுவதிலேயே அதிகம் கவனம் செலுத்துகிறது கடவுளுக்கு முன், ஆண் - பெண் எல்லோரும் சமம் என்று சொல்லுகிற அதே நேரத்தில் அதற்காகப் போராடுவதைத் தவிர்க்கிறது. வழக்காடுமன்றங்கள், சட்டமன்றங்கள் முதலியவற்றிற்குப் போவதில் ஆர்வம் கொள்கிறது. 2) போராட்ட குணம் மிக்க பெண்ணியம் பெண் உரிமைகளைப் போராடித்தான் பெற முடியும்- பெறவேண்டும் என்று இது வற்புறுத்துகிறது. பெண்களுக்குச் சொத்துரிமை போன்றவற்றிற்காக இது போராடிப் பெற்றும் தந்துள…

  17. ஒரு முறை பாருங்கள் ................ என்.... கருத்துக்கள்.....! சிறுபிள்ளைத்தனமாகவோ ..... குழந்தைத்தனமாகவோ ...... ! செத்ததாகவோ...... இத்ததாகவோ........ இருக்கலாம்..... !!! என்றாலும் ஒருமுறை பாருங்கள்......! அதிலிருந்து உங்களுக்கு.... புதிய கருத்துக்கள்.. தோன்றலாம்..... !!! @ கவிப்புயல் இனியவன் கவிதைகள் தொடரும் சிலுவை சுமக்கும் மனிதன்... ----------------------------------------- மனிதனின் ...... எல்லா செயல்களும் .... சிலுவையாக மாறுகின்றன .... விளைவுகள் ஆணியாக.... அறையப்படுகின்றன....! குடும்பம் என்னும் உறவை .... சிலுவையாய் சுமக்கிறான் .... அன்பு என்னும் ஆணியால் ..... அறையப்பட…

  18. ஆராரோ ஆரரிரோ ஆரரிரோ ஆராரோ! ஆராரோ ஆரரிரோ ஆரரிரோ ஆராரோ! காராரும் வானத்தில் காணும் முழுநிலவே! நீராரும் தண்கடலில் கண்டெடுத்த நித்திலமே! ஆசை தவிர்க்கவந்த ஆணழகே சித்திரமே! ஓசை யளித்துமலர் உண்ணுகின்ற தேன்வண்டே! உள்ளம் எதிர்பார்த்த ஓவியமே என்மடியில் பிள்ளையாய் வந்து பிறந்த பெரும்பேறே! சின்ன மலர்வாய் சிரித்தபடி பால்குடித்தாய் கன்னலின் சாறே கனிரசமே கண்ணுறங்கு! நீதிதெரியும் என்பார் நீள்கரத்தில் வாளேந்திச் சாதியென்று போராடும் தக்கைகளின் நெஞ்சில் கனலேற்ற வந்த களிறே, எனது மனமேறு கின்ற மகிழ்ச்சிப் பெருங்கடலே! தேக்குமரம் கடைந்து செய்ததொரு தொட்டிலிலே ஈக்கள் நுழையாமல் இட்ட திரைநடுவில், பொன்முகத்தி லேயிழைத்த புத்தம் புதுநீலச் சின்னமணிக் கண்ணை இமைக்கதவால் ம…

    • 2 replies
    • 1.3k views
  19. இறக்கபோகிறேன் ... என்று தெரிந்துகொண்டு.... தீக்குச்சி எரிகிறது .... தீக்குச்சிக்கு அது இறப்பல்ல .... தீக்குச்சியின் வாழ்க்கை....!!! இறப்பு பெரிதல்ல .... எப்படி வாழ்ந்தோம் என்பதுதான் முக்கியம் ....!!! தான் மட்டும் எரிந்து .... சாம்பலாகவில்லை ... இன்னொன்றுக்கு ... வாழ்க்கையும் ...... கொடுத்துவிட்டு ....... சங்கமமாகிறது தீக்குச்சி ....!!! ^ முயன்றால் முடியாதென்றொன்றில்லை கவிப்புயல் இனியவன்

  20. Started by shanthy,

    அழகிய கனவு.....! கிழைகளைக் குடையக் காற்றுத் தரையில் மிதக்கிறது இலைகள். மஞ்சள் இலைகளின் அழகு போய் மார்களி வருதல் சாத்தியமாய் மரங்கள் வெறித்துப் போகிறது. குளிர்கால ஆரம்பம் மந்தப் பொழுதாக மழையிருள் வானமும் மாரியின் வருகையும் மனசுக்குள் இதமாயில்லை... வசந்தம் வரும்வரை இரவினி நிரந்தரம் ஒளிக்குமிழின் துணையின்றி இந்த நாட்கள் விடியாது. நள்ளிரவும் நாய்களின் ஊளையுமற்ற பின்னிரவில் எழுந்து வேலைக்கு ஓடும் அவசரம் இவ்விரவுகள் மிகக்கொடுமையானவை. கைவிறைக்க கால்கள் நடுங்கும் உறைபனிக் காலத்திலும் ஓய்வில்லை. பணமரமாய் நான் பெற்றவர்க்கும் மற்றவர்க்கும் வெளிநாடு மிகவும் அழகான கனவு. கழுவுதலும் துடைத்தலும் கோப…

    • 2 replies
    • 984 views
  21. நீள வாய் சுருங்கிய மஞ்சள் கொக்குகள் ( மாலினோஸ்க்னா ) மதர்த்த குளத்தின் கரையில் குந்துவதும் எழுவதுமாய் காலம் கடத்தப் போகின்றன நீள வாய் சுருங்கிய மஞ்சள் கொக்குகள் இவற்றின் வருகைக்காகக் காத்திருக்கும் குஞ்சுகளுக்கு என்னவொரு மனமிருக்கப்போகிறது பசுங்குளத்தின் தண்ணீர் காய்ந்த கதை வந்து சொல்லும் கொக்குகளை மீண்டும் மீண்டும் நம்புகின்றன குஞ்சுகள் செத்த மீன்கள் பற்றிய கனவுகளோடு முன்பொரு நாள் குளத்தோடு முரண்பட்டு வெளியேறிய கொக்குகள் மீண்டும் குளத்திடமே வந்தன தம்மை உரு மாற்றிக் கறுப்பு நிறச் சொற்களோடு நீர்த்தணலில் வாழும் மற்றோர் மீன் பறவை நீள வாய் சுருங்கிய மஞ்சள் கொக்குகளை நோக்கி நா கூசும் வார்த்தைகளால் சபிக்கத் தொடங்கின கொக்குகளிடமிருந்து மூத்திர நெட…

  22. Started by சுபேஸ்,

    பிரிவு... நீயில்லாத நிமிடங்களில் ஒவ்வொரு நொடிகளும் எனைப்பிடித்துப் பெருஞ்சர்ப்பத்தைப்போல அணுவணுவாக விழுங்கிவிடுகின்றன காற்றில்லாத வெற்றிடமொன்றில் அடைத்து விடப்பட்டதுபோல நீயில்லாத கணங்களில் என் ஒவ்வொரு சுவாசங்களும் பெருஞ்ச்சுமையாய் இடம்பெறுகின்றன அருகேதானே இருக்கிறேன் என்று தொலைபேசியில் நீ சிணுங்கினாலும் சுடர் அணையும் சிறுகணத்தில் கனமாய் இறங்கும் இருளைப்போல சிலுவைகளாய்க் கனக்கின்றன நீயற்ற சிறு நொடிகளும் பிரிவு முடித்து உன் ஒவ்வொரு மீள்கையிலும் நீயற்ற நிமிடங்களின் வலிகளை அனுப்பிவிட்டு ஒரு குழந்தையைப் பெற்றெடுத்த தாயைப்போல ஒவ்வொரு தடவையும் பூரித்துப்போகிறது எனதுள்ளம் எல்லாப்பிரிவுகளின் முடிவிலும் இன்னமும் இன்னமும் பேரன்…

  23. Started by yaal_ahaththiyan,

    உன் அமைதியான வேண்டுதலால் பொறுமையை இழந்திருப்பாள் பூமாதேவி * நீ சுற்றி வந்ததால் சனிஸ்வரனுக்கு பிடித்தது தேவதை தோசம் * நீ முருகனைச் சுற்றுகையில் முருகன் மீது சந்தேகப் படுகிறார்கள் வள்ளியும் தெய்வானையும் * அழகானவள் கிடைக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டிருந்தவர்கள் எல்லாரும் உன்னைக் கண்டதும் தேவதை கிடைக்க வேண்டும் என்கிறார்கள் * கடைசியில் எனக்கும் சந்தேகம் வந்துவிட்டது பக்தர்கள் உன்னைச் சுற்றுகிறார்களா? கோயிலைச் சுற்றுகிறார்களா? -யாழ்_அகத்தியன்

  24. புத்தன் போய் விட்டான்! போதி மரத்துப் புத்தன் ஏதோ மோதி எழுந்தான்! கூவி வந்த குண்டொன்றின் சன்னம் தன் தேகம் கீறி இரத்தம் வரக் கண்டான்! தேடி ஒரு பிக்குவைப் பிடித்து நடப்பதென்ன என்று அறியக் கேட்டான் ஆதி முதல் அத்தனையும் உரைத்த பிக்கு... அவசரமாய் போக வேண்டும் என்று ஓடிப் போனான்! புரியாத புத்தன் அவனைத் தொடர்ந்து போனான்... என்ன ஒரு முரண்பாடு...! "புத்தனைத் தொடர்ந்து பிக்குகள் போவதிருக்க பிக்குவைத் தொடர்ந்து புத்தன் போவதா...?" என்ற தத்துவ விசாரணை விடுத்து நடப்பதைக் கவனிக்க... ஓடிப் போன அந்தப் பிக்கு போருக்கு ஆதரவாய் கோஷம் போட்ட கூட்டத்தோடு சேர்ந்து தானும் கோஷம் போட்டான்...! சாந்தம் தவழவேண்டிய முகத்தில்... ஒ…

  25. "ஒட்டாவா வீதியில் காலை பொழுதில்" "ஒட்டாவா வீதியில் காலை பொழுதில் ஓட்டா வாழ்வை கொஞ்சம் சிந்தித்தேன் காட்டின் நடுவே கேம்ப் போட்டு காட்டாத வாழ்வை கனவு கண்டேன்" "கேட்காத இனிமை காதில் ஒலித்தது வாட்டாத நிலவு வானத்தில் ஒளித்தது மொட்டு விரிந்து வாசனை தந்தது பாட்டா சொல்லி தேவதை வந்தது" "சுட்டி பொண்ணு புன்னகை சிந்தி பாட்டி கையை மெல்ல பிடித்து வட்ட மிட்டு வானத்தில் இருந்து கூட்டி வந்து இன்பம் பொழிந்தது" "மெட்டி ஒலி காற்றோடு கலக்க முட்டி மோதி நிமிர்ந்து நடந்து பொட்டக் குட்டி பாட்டி பெயரில் லூட்டி அடிச்சு அட்டகாசம் போடுது" "கட்டு மரமாக வாழ்வில் மிதந்து ஆட்டி படைத்த நினைவுகளை எறிந்து குட்டி பாட்டி மழலையில் மகிழ்ந்து …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.