Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. மரணம்! ஆண்டுத்திவசத்தோடு மறந்துவிடுகிறோம் விபத்து! காயத்துக்கு கட்டுப்போட்ட கையோடு மறந்துவிடுகிறோம் இழப்பு! நிவாரணம் கிடைத்ததும் மறந்துவிடுகிறோம் தேர்தல்! விரல் மை காயமுன் மறந்துவிடுகிறோம் விடுதலை! அற்ப சொற்ப சலுகைகள் கிடைத்ததும் மறந்துவிடுகிறோம் தியாகம்! நவம்பர் 27 இல் தீபங்கள் அணைத்ததும் மறந்துவிடுகிறோம் ஒற்றுமை! கூட்டம் முடித்து காரில் ஏறியதும் மறந்துவிடுகிறோம் துரோகம்! செய்தவனையே மறந்துவிடுகிறோம் மறதி!!! ஈழத்தமிழனுக்கு கிடைத்த வரமும்... சாபமும்...!!! -தமிழ்ப்பொடியன்-

    • 2 replies
    • 851 views
  2. உன்னை தேவதை ஆக்கியது உன்னை ...நான் காதலியாக.... மட்டும் நினைக்கவில்லை..... வழிபடும் தெய்வமாகாவும் கருதுகிறேன் ......சில வேலை நீ கூட ......சிரிப்பாக எடுக்கலாம் ......!!!. நீ இருந்துபார் நீயே ,,,,,உனக்கு கடவுளாக தெரிவாய் ....உன்னை தேவதை ஆக்கியது என் "நினைவு அலை" தான் இந்த உலகில் எண்ணத்தை விட ஒரு கருவி இல்லை....!!!

  3. சென்னையில் உள்ள ஒரு சகோதரிக்கு ஈழத்து பெண் கவிஞர்களது தொடர்பு தேவை. குறிப்பிட்ட சகோதரி தனது ஆய்வாக தமிழக பெண் கவிஞர்களை பேட்டி கண்டு வருகிறார். ஈழத்து பெண் கவிஞர்களையும் தொடர்பு கொள்ள விரும்புகிறார். தெரிந்தவர்களும் , விரும்பியவர்களும் இங்கோ அல்லது எனது தனிமடலுக்கோ எழுதலாம். நன்றி! info@ajeevan.com க்கு கூட எழுதலாம்.

    • 0 replies
    • 850 views
  4. பாரிஸ் நகரத் தெருக்கள் எல்லாம் இலைகளுதிர்த்தி ஏங்கும் தனித்த மரங்களைப்போல் ஏதோ ஒன்றிற்காய் வெளித்துக்கிடந்தது ஆங்காங்கே கூடும் சனங்கள் அரசல் புரசலாக அரசியல் பேசினர் அதற்கு பின்னால் உள்ள காரணங்களை மறைக்க மூச்சு விடாமல் ஊடகங்கள் உண்மை எனும் பெயரில் ஒப்பாரி கீதங்கள் இசைத்து மரணத்துக்கு பின்னான கற்பித்தலில் தீவிரவாதமாகச் சித்தரிக்கப் பட்டு அனுதாபத்தில் இனவாதம் மதவாதம் விதைத்தது நாடுபூராவும் துக்கநாள் பிரகடனப்படுத்தப்பட்டு வல்லரசுகளின் தலைவரின் வருகை மனிதாபிமானம் எனும் தொனியில் அவர்களால் மூடிய காலனி நாடுகளின் புதைகுழியில் பூக்கள் சொரிந்தது இதற்கிடையில் தாவீதின் கைகள் மாறிய காசையும் அவர்கள் வரைந்த கோட்டையும் உலகிற்கு க…

  5. பெருமைதான்... மழை வரும்போதும் உன்னை நினைக்கிறேன் வெயில் அடிக்கும் போதும் உன்னை நினைக்கிறேன் தயவுசெய்து திருடிட்டு போன என் குடையைக் கொடுத்திடு காதல் காதல் ஒரு மயக்க மருந்து மயங்கி விழுந்தால் கல்லறையில்தான் உனக்கு விருந்து பாவம் தூக்கத்தில் உன் சத்தங் கேட்டு எழுந்து விட்டேன் ஆனால் நீ இல்லை பின்புதான் தெரிந்தது அது என் பின் வீட்டுத் தெருநாய் என்று.. என்னத்த சொல்ல அவளை மறக்க நினைக்கும் போதெல்லாம் என் இதயம் கேட்குது வேற ஆளப் பாத்திட்டாய் போல என்று உங்களை மாத்தவே முடியாது மலரே உன் மீது விழும் துளிகள் பனித்துளி என்று நினைக்காதே நீ வாடாமல் இருக்க நான் விடும் கண்ணீர்த் துளிகள். …

    • 0 replies
    • 849 views
  6. என் பிள்ளையை காணலயே..... என் பிள்ளையை காணலயே எவனோ வந்து பிடிச்சானே யாருண்ணு தெரியலயே- அவன் யாருண்ணு சொல்லலையே.... கூட போனவங்க கூடி நின்றவங்க கூட்டத்தோடு காணலயே.... விளையாட போறெண்ணு வீதிக்கு போன புள்ள காணமால் வருவாண்ணு கனவா நான் கண்டேன்.... என்ன ஏதெண்ணு எனக்கேதும் தெரியலயே என் மனசு ஏக்கங்கள் இன்னும் குறையலயே.... ஏன் வந்து பிடிச்சானோ...?? என்ன செய்தானோ...?? எதுவும் அறியாத என் பிள்ளையை பிடிச்சானே.... கண்ணு போலவனை காத்து வந்தேனே கண்ணுhறு... பட்டதுவோ கடத்தி போனாங்களே... வெள்ளை வானென்று வெளியில சொன்னாங்க வேண்டாம் விளையாட்டென்று வேண்டி சொன்னேனே.... எதுவும் இல்லைண்ணு எழுந்தோடி போனானே வர…

  7. பார்வைபோல் இருளுக்குள் அலைமோதுகிறது பக்குவமாய் நான் கோர்க்கநினைக்கும் சொற்கள் ஒளி கொண்டு கலைப்பதற்குள் கருப்பைக்குள் வீசப்பட்ட விந்தைப்போல் எண்ணத்துள் கருக்கட்ட பாலின் ஆடையென நிலாமேல் படர்ந்து தவிக்கிறது நினைவெனும் பறவை எண்ணங்களின் பறப்பு விரிக்க விரிக்க காலப்பெருநதியை கட்டுடைத்துக் காத்தல் கற்றோடு கரைந்து தவிக்கிறது தனியே

  8. எனக்குள்ளே புதைந்து போன ஈழம் நீ உன்னை விட உன் நினைவுகளையே அதிகம் நேசிக்கிறேன் ஏன் தெரியுமா உன் நினைவுகள் மட்டும் என்னோடு இருப்பதால்

  9. நான் கொலைகாறன்... ஒட்டு கேட்டு நானும் அன்று ஓடி அங்கு வருகையிலே.... கூட்டுமாறு கொண்டுவந்து கூட்டி கூட்டி அடித்தவரே.... பழஞ்சோறு அள்ளி வந்து பரப்பி என்னில் எறிந்தவரே.... பாதணிகள் களட்டி வேறு பாவி மீது வீசினீரே.... ஆட்சியிலே ஏறும் வரை அடியேன் யான் பொறுமை காத்தேன்... இன்று பழஞ்சோற்றுக்கு வழியில்லை பட்டினியால் செத்துமடி.... கூட்டுமாறு கொண்டுவந்து பிணமதுவை கூட்டி அள்ளு.... தமிழன் தோலை உரித்து படைகள் பாதணியாய் பேட்டிடட்டும... ஊர்வலமா நடாத்தி வந்தாய் ஊரடங்கு போட்டுவிட்டேன்... சட்டமதா பேசி வந்தீர் சாக்கடையை திறந்து விட்டேன்.... குண்டுகளை வீசி உங்கள…

  10. மறைந்துவிட்ட கரும்புலிகளுக்காய் மலராகக் கண்ணீர்த்துளிகள்..... கவிதை..... இரவின் நிசப்தத்தை குழப்பிவிடும் சத்தம்..... இனத்தின் விடுதலைக்காய் தம்முயிரை ஈந்துவிடும் வீரம்...... கரும்புலிப் படகொன்றில் லெப்.கேணல் '' நிதி''யுடன் சேர்ந்து கப்டன் ' வினோதன்'' உம் கரும்புலிகளாய் கடல்பயணம்.... இது விடுமுறைப்பயணமல்ல வீடு திரும்புதற்கு.... இது விடுதலைப் பயணம் வேரோடு தம்முயிரையும் மாய்த்து... பல எதிரியையும் வேரோடு சாய்த்து.... இறுதியிலே களம் மீண்டும் திரும்பா காவியப் பயணம்... இதுவே நம் கரும்புலிகளின் பயணம்...... கரும் நீலக்கடலினிலே காவிச் சென்ற வெடிமருந்தை எதிரியின் கலத்துடனே மோதி தணலாக எரிந்திடுவர்..... எ…

  11. அன்பான உறவுகளுக்கு அன்பு வணக்கம்!!! எனக்கு கவி என்றால் கொள்ளை ஆசை ஆனால் கவி வரையதெரியாது அதேநேரத்தில் மிகவும் ரசித்து வாசிக்கும் ஒரு கவி வாசகி! அவ்வாறு வாசிக்கும் கவிதைகளை இங்கே பதியவுள்ளேன்!!!! நீங்களும் வாசித்து கவி பற்றிய உங்கள் கருத்தை தந்தருள வேண்டுகிறேன்!!!!!! விடுதலையின் படிக்கல்லில் கருவறையில் மங்லென்று கலங்குகிற நெஞ்சு கண்ணீர் சொரிந்து விம்முகிறது பிஞ்சு மழலை! புரிந்து உணர்ந்து காலம் கடந்தாயிற்று ஞானம் தான் இன்னும் பிறக்கவில்லை! வியவருட ப் பொழுதும் விடிந்தாயிற்று வெந்து நொந்தவர் வேலெடுத்தோம் வினையறுக்க! வேள்வித் தீயின் அா்ப்பனிப்புகளுக்கு சமர்ப்பணம் செய்யவேண்டியவனே அமைதியாய் அமர்ந்திருப்பதன் அர்த்தம் என்ன? ம…

  12. Started by ரதி,

    நாடிருந்தும் நாடோடியாய் நாளேல்லாம் நாடெல்லாம் ஓடுகின்றேன் ஓடுவதற்கு உடல்வலு தேவையில்லை மனவலு இருந்தால் மட்டும் போதும் ஓடுவதற்கு கால் எனக்கு தேவையில்லை போதிய உள வரம் வேண்டும் ஓடுவதால் மீண்டும் மீண்டும் உர‌ம் பெறுகின்றேன் நாம் ஓடாமல் இருப்பதற்கு ஓர் சுதந்திர‌ நிலம் அமைக்க வேண்டும் என்று இதை நான் எழுதவில்லை...எழுதியவர் ஒரு முன்னால் காலம் சென்ற புலிகளின் தளபதி...யார் என்று சொல்லுங்கள் பார்ப்போம்

  13. மௌனம் பேசும் வார்த்தைகள் தொலைந்து நின்ற தருணங்கள் கண்ணாடியில் மறைந்த வெட்கங்கள் கனவில் கலந்த ரகசியங்கள் உள்ளம் கேட்கும் ஓசையில் அடங்கிப் போகும் - உனக்குள் எனைத் தொலைத்த நாட்கள்!

  14. கவிதையின் கவிதைகள் http://3.bp.blogspot.../Photo-0052.jpg மனம் மாறும் மனங்கள் தினந்தோறும் மாறும்! உனைத்தேடும் இதயம் நிதமிங்கு ஏங்கும்! கரைதொடாத அலைகளுக்காய் கரைகள் காத்திருக்க, திசைமாறிய காற்றில் வழிமாறிய அலைகளாய்... பெண்கடல் ஆர்ப்பரிக்க, ஈரப்படாத கரைகள்... சுடுமணாலாய் உதிர்கிறது! கவிதை அனுப்பிய கவிதை பகுதி 04 ஐப் பார்க்க இங்கே அழுத்துங்கள் . http://www.yarl.com/forum3/index.php?showtopic=105723

  15. உயிரில் உள்ள ஒவ்வோர் அணுவும் வலியால் துடிக்க வாடும் எனக்கு- உதவிட இந்த உலகினில் யாருளர்...? நெஞ்சம் முழுதும் நிறைந்த சோகம்... கொஞ்ச மேனும் கருணை கொண்டு- உதவிட இந்த உலகினில் யாருளர்...? பெற்றார் இன்றிப் பிள்ளைகள் இன்றி உற்றார் இன்றி உழலும் எனக்கு- உதவிட இந்த உலகினில் யாருளர்...? நாளும் பட்டினி.. நாளையும் பட்டினி.. வீழும் கண்துளி விரல்கொண்டு துடைத்தினி- உதவிட இந்த உலகினில் யாருளர்...? எண்ணற்ற துக்கம்... இடையற்ற துயரம்... கண்ணுற்றுக் கலங்கிக் கடுகியே வந்து- உதவிட இந்த உலகினில் யாருளர்...?

  16. மனமேடை ஊஞ்சலிலே நடனமிடும் இசையசுரா உனதோடு சொன்னதையே உதையாக ஏன் நினைத்தாய்? நினைவிடையே தினவெடுக்கும் நீஎந்தன் நட்பென்று எனையா நீஎண்ணிவிட்டாய் உனையிகழும் பிறப்பென்று? பணமேதும் பகைக்கவில்லை பிணமாக மணக்கவில்லை குணமாக்கும் சிறுவார்த்தை பாசாணம் ஆனதுவோ எழுத்தின் எதிர்வீச்சால் என்னெண்ணம் கன்றியதோ வழுக்கிய வார்த்தையில் அழுக்கும்வந்து அணைத்ததுவோ?! துரும்பும் தூணாகும் காற்று கனத்திடுமா புகையும் நெருப்பாகும் படத்தில் எரிந்திடுமா திசைகள் மாறிடுமா பசைகள் விலத்திடுமா விதிகள் இதுவென்றால் விலத்தல் எவ்வாறு?!

  17. கனவு உப்பிய நெஞ்சறை – தீபச்செல்வன்:- ஒரு சோடி பட்டாம் பூச்சிகள் திரும்பாத திசையிற் சன்னம் தைத்துக் கிடந்தது கனவு உப்பிய நெஞ்சறை. உயிருக்கு மதிப்பற்ற நகரில் சக்கரங்களிலும் சப்பாத்துக்களின் கீழும் நசிந்தொட்டிய வெற்றுடல்கள். அவர்கள் நினைத்திருக்கக்கூடும் இத் தெருக்களுக்கு இரத்தம் புதிதல்ல சுடுகலன்களை நீட்டுவதும் அதிசயமல்ல கொல்வது இங்கு பிரச்சினையே இல்லை. குருதியில் தோய்ந்த பின்னிரவில் பிசுபிசுத்தன உருளும் பந்துகளும் சில்லுட…

  18. மாய வித்தைக்காரனின் புறாக்கள் - கவிதைகள் கவிதை: சுகுணா திவாகர், ஓவியம்: ரமணன் மாய வித்தைக்காரனின் புறாக்கள் அந்த மேஜிக் நிபுணர் எப்போதும் வெள்ளைக் கைக்குட்டையைத் தன் தொப்பிக்குள் நுழைத்து புறாக்களை வெளியே எடுப்பார். தாங்கள் பிறந்ததே இந்தத் தொப்பிக்குள்தான் என்று நம்ப ஆரம்பித்தன புறாக்கள். கொறித்துக்கொண்டிருந்த தானியங்களில் எல்லாம் கீறிக்கீறி மேஜிக் நிபுணரின் பெயரை எழுதிவைத்தன. பிறகு அவர் கைவித்தை அனைத்திலும் ஊடாடிப் பறந்து திரிந்தன. அழகான யுவதியை மேஜையில் கிடத்தி கத்தியால் இரண்டு துண்டாக்கிப் பின் ஒன்றாக்கவேண்டும். ஆனால், அவள் வயிற்றிலிருந்து சிறகடித்தபடி புறாக்கள் வந்தபோது மேஜிக் நிபுணரும் மலைத்துதான் போனார். காற்றிலிருந்த…

  19. முகம் தெரியா முகநூலில் நட்புறவாட மறந்து கலவி செய்ய எத்தனிக்கும் கயவர்களை இனம் காணுவோம்... ஓட ஓட விரட்டிடுவோம்... வளைதளத்தில் வக்கிரம் வரையறை மீறி இன்று முகப்புத்தகத்தில் முடிவில்லாமல் தொடரும் தொடர்கதையாய்.... முகப்புத்தகம் சிலருக்கு அவர்கள் காம இச்சையை தீர்க்கும் வடிகால் என்றே உருவாக்கிவிட்டார்கள்.... முகம்தெரியா ஆண் பெண்ணுடனோ அல்லது பெண் ஆணுடனோ அந்தரங்கங்களை பகிர்வதால் வருகிறது இந்த வினை.... எதற்கும் ஒரு வரைமுறை இருக்கிறது யார் அந்த கோட்டை தாண்டினாலும் அந்த உறவுக்கு அன்றோடு முற்றுப்புள்ளி வைக்க அறிய வேண்டும் அனைவரும்... உலகில் வாழவே தகுதியற்ற சில ஈனப்பிறப்புகள் போலி அடையாளத்தில் உலவும் இடமாக மாறிபோய் இருக்கிறது முகப்புத்தகம்...... ஒருபுறம் நல்லவர் போல் உறவ…

  20. அங்கே பிணங்கள் விழுந்துகொண்டிருக்கின்றன; 'எத்தனை விக்கெட்டுகள் விழுந்தன?" என்று விசாரித்துக்கொண்டிருக்கிறோ

    • 0 replies
    • 843 views
  21. போர்க்காலத்தில் வன்னியில் அம்மா சுகயீனமுற்றிருந்த பொழுது எழுதிய கவிதை. விடுதலைப் புலிகளின் உள்சுற்று இலக்கிய சஞ்சிகையான வெளிச்சம் இதழில் வெளிவந்தது. . 1.அம்மா போர் நாட்களிலும் கதவடையா நம் காட்டுவழி வீட்டின் வனதேவதையே வாழிய அம்மா. உன் விரல் பற்றிக் குறு குறு நடந்து அன்றுநான் நாட்டிய விதைகள் வானளாவத் தோகை விரித்த முன்றிலில் நின்று எனை நினைத்தாயா தும்மினேன் அம்மா. அன்றி என்னை வடதுருவத்தில் மனைவியும் மைந்தரும் நினைந்திருப்பாரோ? அம்மா அழிந்ததென்றிருந்த பச்சைப் புறாக்கள் நம் முற்றத்து மரங்களில் மீண்டு வந்து பாடுதாம் உண்மையா? தம்பி எழுதினான். வ…

    • 0 replies
    • 843 views
  22. அதிகாலை எழுந்து ....அம்மணமான உடையுடன் ....அம்மாவின் கையை பிடித்தபடி .....வீட்டின் முன்பக்கம் பின்வளவு ,,,,எல்லாம் சுற்றி திரிந்து ....அக்கா அண்ணா பள்ளி செல்லும் ....போது நானும் போகணும்....என்று கத்தியழுத அந்த காலம் ....வாழ்வின் "தங்க காலம் "......!!!பச்சைஅரிசிசோறு வேகும்போது ....அவிந்தது பாதி அவியாதது பாதி ....கஞ்சிக்கு கத்தும் போது ....பொறடாவாரேன் என்று சின்ன ....அதட்டலுடன் கஞ்சியை வடித்துதர ....பாதி வாய்க்குள்ளும் மீதி ...வயிற்றில் ஊற்றியும் குடித்த ....அந்த காலம் ....வாழ்வின் "பொற்காலம் "......!!!பாடசாலையில் சேர்ந்தபோது .....புத்தகத்தையும் என்னையும் ...தூக்கிகொண்டு சென்ற அம்மா ....சேலையின் தலைப்பை என் தலை ....மேல் போட்டு தன் தலை வெய்யிலில் ...வேக வேக வீட்டுக்கு வந்து .…

  23. Started by Kaviipriyai(Ziya),

    பகல் கனவு கன்னிப் பருவத்தின் வாசலிலே அவள் பொற்ச்சிலையாக நிற்கையிலே வீர நடை போட்டுக் கொண்டே அங்கே அழகிய வாலிபன் போகையிலே சந்தன வாசம் அவன் மூக்கைத் துளைக்கையிலே அத்திசை நோக்கியும் அவன் பார்க்கையிலே பட்டென பதிந்திட்ட அவள் முகம் உணர்ந்து அவன் தன்னிலை மறந்து கனவின் வாசலிலே..... இராத்திரி அவன் பார்த்த திரைப் படத்தினிலே காதலர்களாக வந்து ஆடிப்பாடியவர்கள் போலே அவனும், அவனை தன்னிலை மறக்க வைத்த பெண்ணுடனே காதல் கொண்டு ஆடிப்பாடினான் அமெரிக்காவினிலே.......... ஆடிபாடின வேளையிலே சட்டென யாரோ கைகள் அவன் தோளைத் தொடுகையிலே சிலிர்த்தவன் நெஞ்சினில் பல எண்ணங்களிலே தொட்டவர் கைகளை இறுகப் பற்றையிலே சடாரென விழுந்தது அறைகள் அவன் கன…

  24. MULLIVAIKKAL REMEMBRANCE DAY- POET'S VOW முள்ளிவாய்க்கால் நினைவு - ஒரு கவிஞனின் பிரதிக்ஞை, . Please perform it as songs, rap songs, and dance. No permission needed. பிடித்த வரிகளை பாடல் ஆடலாக நிகழ்த்த வேண்டுகிறேன். அனுமதி வேண்டியதில்லை. . தோற்றுப் போனவர்களின் பாடல். வ.ஐ.ச.ஜெயபாலன் . எல்லா திசைகளில் இருந்தும் எழுந்து அறைகிறது வெற்றி பெற்றவர்களின் பாடல். பாடலின் உச்சம் எச்சிலாய் எங்கள் முகத்தில் உமிழப்படுகிறபோதும் அவர்கள் அஞ்சவே செய்வார்கள். ஏனா? அவர்களிடம் தர்மத்தின் கவசம் இல்லையே.. . எரிந்த மேச்சல் நில…

    • 2 replies
    • 842 views
  25. காட்டிக் கொடுப்பவன் எங்கே? - அந்தக் கயவனைக் கொண்டு வா! தூணோடு கட்டு! சாட்டை எடுத்துவா இங்கே! - தம்பி சாகும்வரை அடி பின்பு கொளுத்து! அன்னைத் தமிழை மறந்தான்! - பாவி அடுத்தவன் கால்களை நக்கிக் கிடந்தான்! என்ன கொடுமை இழைத்தான்! - தீயன் எட்டப்பனார் வேலை செய்து பிழைத்தான்! மாற்றார்க் கழைப்பு விடுத்தான்! - வீட்டில் மதுவும் கொடுத்தான்! மகளும் கொடுத்தான்! சோற்றுப் பதவிகள் ஏற்றான்! - மானம் தூள் தூளாய் ஆக்கி நெருப்பிலே போட்டான்! பல்லாயிரம் நாட் பயிரை - வீரம் பாயும் தமிழ்க் குல மாந்தர் உயிரை எல்லாம் நிறைந்த தமிழை - தழலில் இட்டவன் உடல்மேல் இடடா தழலை! தீயன் உடல்தீயத் தீவை! - எங்கள் தெய்வத் தமிழ்வாழ இவன் சாவு தேவை! பாயும் புலியே! தமிழா! - தம்பி! பச்சைத் துரோகி …

    • 11 replies
    • 842 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.