Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. தரையில் தமிழன் வீழ்ந்திட்ட நாள் இது அல்ல தன் நாடு மீட்க தன் உயிரை தமிழன் ஈய்ந்த நாள் இது மீண்டும் நாம் நிமிர்வோம் எப்போதும் நிமிர்ந்து நிற்போம் ஏகாதிபத்தியத்தின் எமாற்றலில் எமக்கானவை எல்லாம் இழந்தோம் தன் மானத்தை மட்டும் இழக்கவில்லை காத்திருக்கின்றோம் எம்மைக்கான காலம் வரும் வரை செருக்கிழந்து உருக்குலைந்து செல்வமெல்லாம் இழந்தபின்னும் சேர்ந்திடாதிருக்கிறோம் நாம் சேரும் நாளதனில் செழித்து வாழ்வோம் நாம் கொலைக்களங்கள் பல கண்டும் கொடுமைகள் நிதம்கொண்டும் அடிமைகளாய் வாழ மாட்டோம்.... விடுதலைத் தாகம் உண்டு... அதற்கான குரலும் உண்டு... கோழைகளாய் வீழ மாட்டோம்... …

    • 14 replies
    • 1.9k views
  2. அன்று எங்களை 1983 கலவரமும் தமிழர் போராட்டங்களும் உலுப்பியதுபோல கோபம் கொள்ள வைத்ததுபோல இன்று கலைஞர்களை, குறிப்பாகச் சமகாலக் கவிஞர்களை முளிவாய்க்கால் உறங்கவிடாமல் கோபத்தில் கொதிக்கவும் சபிக்கவும் வைக்கிறது. எமது வன்னி மண்ணின் இரட்டையர்களான கருணாகரனும் தீபச்செல்வனும் எழுதிய இரண்டு கவிதைகளை அதன் பொருத்தப்பாடு கருதிப் பதிவு செய்கிறேன். முள்ளிவாய்க்கால் 2017 - கருணாகரன் ( Sivarasa Karunagaran ) -------------------------------------------- இரத்தமும் உயிரும் உறைந்து அனலடிக்கும் இந்த மணல் வெளியில் நேற்றும் பட்டி பூத்திருந்தது இன்றும் பூத்திருக்கிறது நாளையும் பூக்கும் நேற்றைய பட்டிப் பூக்கள் தனித்திருந்தன. இன்று வெள்ளை உடைகளில் விருந்தாளிக…

    • 2 replies
    • 1.9k views
  3. Started by yakavi,

    வைகாசி 18.......? எங்கள் முகவரியை முற்றாக தொலைத்த நாள். அகத்தினிலே தீராத வலியை புதைத்த நாள். யேகத்தினிலே எல்லோரும் விழிசொரிய சொந்த நிலத்தை இழந்த நாள். வைகாசி காற்று கூட தனது வழமையான செயலைக் கூட செய்ய முடியாமல் கண்ணீர் விட்டநாள்.......

    • 9 replies
    • 1.6k views
  4. MULLIVAIKKAL REMEMBRANCE DAY- POET'S VOW முள்ளிவாய்க்கால் நினைவு - ஒரு கவிஞனின் பிரதிக்ஞை, . Please perform it as songs, rap songs, and dance. No permission needed. பிடித்த வரிகளை பாடல் ஆடலாக நிகழ்த்த வேண்டுகிறேன். அனுமதி வேண்டியதில்லை. . தோற்றுப் போனவர்களின் பாடல். வ.ஐ.ச.ஜெயபாலன் . எல்லா திசைகளில் இருந்தும் எழுந்து அறைகிறது வெற்றி பெற்றவர்களின் பாடல். பாடலின் உச்சம் எச்சிலாய் எங்கள் முகத்தில் உமிழப்படுகிறபோதும் அவர்கள் அஞ்சவே செய்வார்கள். ஏனா? அவர்களிடம் தர்மத்தின் கவசம் இல்லையே.. . எரிந்த மேச்சல் நில…

    • 2 replies
    • 836 views
  5. தோற்றுப் போனவர்களின் பாடல் – முள்ளிவாய்க்கால் போர்க் காலத்தின் சில கவிதைகள்: தொகுப்பு குளோபல் தமிழ் செய்திகள்:- முள்ளிவாய்க்கால் தமிழ் இனம் மறக்க முடியாத இனப்படுகொலையின் வடு. உரிமைக்காக போராடிய இனம் கறுவறுக்கப்பட்ட நிலம். முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை உலகத் தமிழ் இனத்தையே உலுப்பிய நிகழ்வு. இந்த தாக்கம் தமிழ் படைப்பாளிகளின் படைப்புக்கள் பலவற்றில் பெரும் தாக்கத்தை செலுத்தியுள்ளது. முள்ளிவாய்க்காலின் சாட்சியாக, குரலாக, இனப்படுகொலையை பதிவு செய்த சில குறிப்பிடத்தக்க கவிஞர்களின் கவிதைகளை தொகுத்து தருகிறது குளோபல் தமிழ் செய்திகள். -ஆசிரியர் ஜெய…

  6. தன்மானம் இழந்து தலைகுனிந்து தரையில் தமிழன் வீழ்ந்திட்ட நாள் இன்று ....... என்று இனி நாம் நிமிர்வோம் ??????? ஏகாதிபத்தியத்தின் எமாற்றலில் எமக்கானவை எல்லாம் இழந்தோம் இன்னும் தான் வரவில்லை எவரும் செருக்கிழந்து உருக்குலைந்து செல்வமெல்லாம் இழந்தபின்னும் சேர்ந்திடாதிருக்கிறோம் நாம் கொலைக்களங்கள் பல கண்டு கொடுமைகள் நிதம்கொண்டு அடிமைகளாய் வாழ்கையிலும் கோபமின்றி குரலின்றி கோழைகளாய் வாழ்கின்றோம் செங்குருதி தோய்ந்து செத்தழிந்து போனவர்கள் கந்தகக் காற்றில் கரைந்து போனவர்கள் உயிருடன் மண்ணில் புதைந்து போனவர்கள் அத்தனை பேரிடமும் மண்டியிட்டு மன்னிப்புக் கோருகிறேன் …

  7. வெற்று காகிதம் .. ... நாட்களும் நகருகின்றன. நெருடும் நினைவுகளுடன் வாழ்க்கையும் நகருகின்றது. வண்ண எழத்துக்களாலும். கிறுக்கல்களாலும் வாழ்க்கையின் பக்கங்கள் நிரப்படுகின்றது. கற்பனையில் சில கவிதைகள் நினைவில் சில கவிதைகள் நிகழ்வில் சில கவிதைகள் என என்கை எழுகின்றது. நான் இழந்தவைகள் ஏதுவாயினும் எஞ்சியிருப்பது நம்பிக்கையே. அடி மனதில் அடுக்கடுக்காய் அலுமாரியில் அடுக்கிய புத்தகங்களாய் மீண்டும் புரட்டிப் படிக்க நினைத்தால் புண்பட்டு போகுது என் மனசு . நான் எங்கு சென்றாலும் துன்பங்களும் வேதனைகள் என் கழுத்தை நெரிக்கின்றான. எத்தனை பேரின் சொல் காயப…

    • 0 replies
    • 619 views
  8. எப்படி மறப்பது இந்த மே 18 ஐ .....? ------------------- பகீரதன் தாழம் பூவோடும் தாமரைத் தட்டோடும் நாகதீபம் வரை வந்து போகிறீர்கள் . வெள்ளை உடுப்புடுத்தி நீங்கள் வரும்போது வெள்ளைக் கொடியோடு வெண் புறாக்கள் போன கதை வந்து வந்து போகுது. . எதோ கொண்டு வருகிறீர்கள் கொடுத்ததும் பார்க்கிறீர்கள். இனி இவர்கள் மறந்து போவார்கள் மாண்ட தமிழர்களை மறைத்த உறவுகளை. . எப்படி மறப்பது இந்த மே 18 ஐ..... ? - இது கொன்ற தினத்தை கொண்டாடிய நாள் அல்லவா! . மேனி கருகி மேடாய் தெரிந்த நாள் கூட்டாய் கொன்று குவித்ததை கூகிளில் பார்த்து கூக்குரல் இட்ட நாள். குழிவெட்டி எம் குஞ்சுகளை குடும்பத்தோடு புதைத்த…

  9. Started by yakavi,

    அம்மா சொல்லிக்கொடுத்து சொல்லாமல் சொன்ன சொல் "அம்மா"... எண்ணும் கணக்கில் எண்ணாமல் எண்ணும் நெஞ்சம் "அம்மா"... தத்தி நடை நடந்து மண்ணில் தடக்கி அங்கே விழுகையிலும் முட்டி நிற்க்கும் கண்ணீர் முன்னே முந்தி வரும் வார்த்தை "அம்மா"... தள்ளாடும் வயதினிலும் சொல்லாடல் மாறாமல் உள்ளோடும் உயிரோடு உறைந்த உயர்ந்த வார்த்தை "அம்மா"... கண் மூடிப் தூங்க பாயில் போகும் போதும் "அம்மா" கனவு கண்டு உளறி வாய் உதிர்க்கும் வார்த்தை "அம்மா"... உண்ட உணவு தொண்டை வரை நிறைந்துவிடும் போதும் எடுத்துப் பெரு மூச்சுவிடும் வேளையிலும் "அம்மா"... களைத்து உடல் இளைப்பாறும் வேளையிலும் கூட இதமாய் கையை நிலத்தில் உன்றி சொல்லும் வார்த்தை "அம்ம…

    • 5 replies
    • 1.2k views
  10. பிரளயத்தின் சாட்சி கண்கொண்டு பார்க்க முடியாது ஒரு பறவை இரத்தம் சொட்டச் சொட்ட நந்திக்கடற்கரைச் சேற்றுக்குள் பிய்த்து வீசப்பட்டிருப்பதை முதலில் நிர்வாணத்தால் கொலை செய்தனர் பின்னர் ஆண்குறிகளால் பின்னர் துப்பாக்கிகளால் அழுகிய பிணங்களைப் புணரும் வீரமிகு படைகள் வேறெதைச் செய்வர்? யாருமற்ற கடற்கரையில் ஈனக்குரல் எழுப்புகையில் ஒரு ஊர்க்குருவியும் துணைக்கில்லை வற்றப்பளையம்மன் எங்கு சென்றாள்? யாராலும் எழுத முடியாது நேரிட்ட நிர்க்கதியை சிந்திய கண்ணீரை உறிஞ்சபடப்ட்ட இரத்தத்தை பிய்த்தெறியப்பட்ட கதையை இறுதிக்குரலை நிராயுதயபாணிகளை வேட்டையாடும் கொலையாளிகளிடம் ‘அது நானில்லை’ என்று சொன்னாய் …

    • 1 reply
    • 624 views
  11. மே 18க்கு……! அழைத்தாலா வருவாய்? யார் யாரை அழைப்பது? அழைத்தாலா வருவாய் யார் யாரை அழைப்பது அறியத் தருவாயா ஊரூராய் பிணக்காடாய் உன் உறவும் பிணமாக போனதந்த நாளினிலே எதுவும் கேட்காதே புறப்பட்டு வாவென்று சொல்ல வேண்டுமெனில் வினாவொன்று இருக்கிறது நீ தமிழனா! வெற்றியிலே பங்கேற்று வீரமுடன் வீறுகொண்டாய் வீழ்ச்சியிலே யாரென்று விலகி நிற்பதென்ன காலத்தின் நகர்வுகளோ காட்சிகளாய் விரிகிறது அன்னை மண்ணிருந்து அழகாய் வளர்ந்தவனே உன்னை உருவாக்கி உலகில் வாழவைத்த அன்னை மண்பட்ட அவலம் உரைப்பதற்கு அழைப்பு உனக்கெதற்கு அழைப்பு வேண்டுமெனில் வினாவொன்று இருக்கிறது நீ தமிழனா! நீ தமிழனா இல்லை மனிதனா மனிதம…

    • 4 replies
    • 1.3k views
  12. தன்னை ஈய்ந்த (கொடுத்த )தாய்மை தன் முதற் பேறாய் என்னைக் கருவுற்ற வேளை உமிழ் நீரால் வாய் நிறைந்திருந்த காலை மாமியார் வீட்டு மாங்காய் ருசித்தது பால் பழமும் கசந்தது ,புளியங்காய் சுவைத்தது காலப்போக்கில் உதரம் சற்றே பருத்து அயலவர்க்கு அடையாளம் காட்டியது முன் வீட்டு மாமியின் புளிக்கஞ்சி தேனானது மாசம் ஆக புரண்டு படுக்க இடைஞ்சலானது முருங்கைக் கீரை சத்துணவானது எட்டி நடக்கையிலே இளைப்பு தோன்றியது இளம் வெந்நீர்க் குளியலில் உடல் சிலிர்க்கையில் குழந்தை நான் உள்ளிருந்து உதைத்த போது என் தந்தை என்னே தாய்மை என்றார் எண்ணி ஒன்பதாம் மாதம் முடிவில் நாட்கள் எண்ணும் வேளை தன்னில் இடுப்பு வலியும் சேர்ந்து அடி வயிறு வலியெடுக்க அரசினர் வைத்திய சால…

    • 10 replies
    • 2.5k views
  13. அம்மாவாம் அம்மா....! பத்து மாதங்கள் பகலையே காட்டாமல் இருட்டு வயிற்றில் படுக்க விட்டாள் புஷ்டியான ஆகாரம் தானுண்டு -- தனக்கு இஷ்டமான காரம் விட்டாள்....! பிரசவத்தில் அவள் பட்ட வலியை பிறசமயத்தில் ஊரார் நன்றாய் உளறுகின்றார் கருப்பையால் புவியேற நான்கொண்ட துன்பம் இங்கெவர் உரைப்பார் காண்....! பத்தியமென்று பகாசுரன் போல தின்று அறுத்த மீனெல்லாம் அரைத்த குழம்பாக்கி விருப்பமுடன் விழுங்கினாள் தன் பிள்ளை அருந்த பால் சுரக்கவே....! கொழுக் மொழுக்கென்று முட்ட முட்ட அணைத்து பால்தந்தாள் முப்பத்தாறு மாதம் அடுத்தென்னை மடியில் இருத்தி -- தந்தாள் வேப்பெண்ணை பூசியே முலையை.....! …

    • 12 replies
    • 2.4k views
  14. புத்தர் பிறந்த நாளுக்கு இரத்தக் கறைகளுடன் அது இலங்கைக்கு வருகிறது… குஜராத் முஸ்லிம்களின் குருதி பருகிய கொம்பேறி மூக்கன் அது… காஷ்மீரின் கண்ணீரில் கண்மூடிக் குளிக்கின்ற கட்டுவிரியன் அது… இஸ்லாமிய விழுமியங்களில் இயன்றவரை நஞ்சுமிழும் இனவாத சர்ப்பம் அது… ஆர். எஸ். எஸ். தேள்களை அரவணைத்துப் போஷிக்கும் ஆபத்தான அரவம் அது… மனிதர்க்கன்றி இப்பாம்பு மாடுகளுக்குத்தான் மரியாதை செலுத்தும்… மூத்திரம் குடிக்குமிந்த மூடப் பாம்புக்கு மூத்திரம் கழுவிச் சுத்தமாயிருக்கும் முஸ்லிம்களின் மீதுதான் ஆத்திரம் எல்லாம்… இந்தப் பொல்லாத பாம்பின் மூச்சிலும் விஷமிருக்கும்… ஆதலால் மூடி வையுங்கள் ஜன்னல்களை!AkuranaToday.com | Read more http://www.akuranatoday…

  15. மென்மதி மலர்மீது பூம்பனித் துளிகள் தேனி சிறகசைக்கத் துளிகள் ஒன்றாயின மஞ்சள்த் தேனியின் காலின் கறுப்பிற்கு மகரந்தச் செம்மஞ்சள் முறுவலை என்முகம் முளுதாய்ப் பிரசவித்தது. மலையில் உருளும் பனியருவி போல நேரம் உருண்டு தொலைந்தது கூடவே மாயையும் கரைந்துபோனது நிறம் மணம் மறைந்து ஆவி ஒன்றென ஆகி நின்றோம் எரியும் கட்டையோடு பிறிதொரு கட்டைபோடின், ஒரே நெருப்பு இரண்டிலும் எரிவதுபோல் தேனியும் மென்மதியும் மகரந்தமும் என்னுசிரும் ஜோதியில் ஒன்றாய்ப் புரிந்து கிடந்தன எங்கும் பரந்த முடிவற்ற வெளி ஆதியும் அந்தமும், அடியும் முடியும், நேரமும் மரித்த வெளி அருவத்துள் உருவத்துள் அனைத்துள்ளும் பரந்த ஒரே வெளி கடலிற்குள் உப்பற்ற நீர்த்துளி இல்லை இவ்வெளிக்குள் துளிகள் இல்லை, ஒ…

  16. தேநீர் கவிதை: வழிப்போக்கன் நான் வழிப்போக்கன் வழிகள் என் முகவரிகள் * மழையில் நனைவது எப்போதும் இருக்கும் மழை நீர் அருந்துவது எனக்குப் பிடிக்கும் * இளைப்பாறும் போதெல்லாம் நான் நிழலுடன் பேசுகிறேன் மனம் மரத்துடன் பேசுகிறது * என் பயணம் அடைதலில் இல்லை தொடர்தலில் இருக்கிறது * ‘வெகுதூரம் வந்த பின்னும் வெகுதூரம் இருக்கு இன்னும்’ இந்த வரி அதிகம்…

  17. மடிசாய வரம் தா... ஆண்டைந்து சென்றாலும் அகலாத நினைவோடு கண்ணுக்குள் கலையாத கனவானாய் நிலையாக எம் அன்புத் தாய் நீயே எமக்கெல்லாம் வரம் நீயே உயிரோடு உறவாடும் உலகெல்லாம் நீதானே மனசெல்லாம் நிறைந்திட்ட பிரியாத வரம் நீயே உடலாலே பிரிந்தாலும் உணர்வோடு இணைந்தாயே இணைகின்ற உறவெல்லாம் இருந்தாலும் தாயே உன் இதயத்திற் கிணையான உணர்வாக முடியாதே நிழலாக நீ நின்றாய் சிறகின்றித் தவிக்கின்றோம் பரிவோடு வருடும் உன் பாசத்தை நினைக்கின்றோம் இல்லாமை இருந்தாலும் இயல்பாக எமைத்தாங்கி சுகமாக அணைக்கின்ற சுமைதாங்கி நீ அம்மா எமதன்புத் தாய் இன்றி இதயத்துள் அழுகின்றோம் விழிநீரைத் துடைக்கின்ற விரலின்றித் தவிக்கின்றோம் அழுதாலும் தொழுதாலும்…

  18. POETRY OF THE ANGELS தேவதைகளின் கவிதை . இது என்னுடைய முக்கியமான கவிதைகளில் ஒன்று. என்றும் பதினாறான என் வாழ்வுதான் என் கவிதைகள். பாதி மானுடமாகப் படைக்கப் பட்டு பாதி மனசு பாதி அறிவு பாதி அனுபவமென வாழ்கிற என் ஒத்தைக் கண் ஆண்பால் வாழ்வில் எதை முழுமையாக கற்றுக்கொள்ள முடியும்? . ஆனால் பெண்களுக்கு ஒரு அனுகூலமிருக்கு. ஆண்களோடு வாழ்ந்து, ஆண்களைப் பெற்று. ஆன்களைக் கைவிடாமல் வளர்த்து பேணுவதால் ஆண்களின் பாதி உலகை அவர்களால் தரிசிக்க முடியுது. . என் வாழ்வில் என் போராட்டங்களில் என் கலைகளில் என் கவிதைகளில் எங்காவது சற்று முழுமையிருந்தால் அது என் தாயிடமிருந்தும் என் பெண்பால் உறவுகளிடமிருந்தும் பின்னர் இன்றுவரை என் வாழ்வின் பாதையில் கண்டு கேட்டுப் பழகிய தோழியரிடமிருந்தும் கற்று…

    • 1 reply
    • 1.2k views
  19. கண்ணீர் யுகத்தின் தாய்! குழந்தைகள் அலைய பூமியில் வெளிச்சம் அணைந்த பொழுது ஒரு யுகத்தின் தாய் இறந்திருந்தாள் பூமி பேரதிர்ச்சியில் நடுங்கியது தாய்மாருக்காய் அழுதழுது கண்ணீர் விடும் குழந்தைகள் வாழும் யுகத்தில் கனத்தன வீடுகள் குழந்தைகளுக்காய் அழுதழுது கண்ணீர் விடும் தாய்மார்கள் வாழும் யுகத்தில் கனமடைகிறது பூமி தாய் கட்டிய சுவர்களில் கனவின் காட்சிகள் நெளிந்தன நிலம் மெழுகும் தாயின் விரல்களில் சிக்காத புதல்வர்களின் பதச்சுவடுகள் தொலை தூரத்தில் தவித்தன அடுப்பில் பொங்கியது துயரம் இலட்சம் குழந்தைகள்தாய்மாரை இழக்க இலட்சம் தாய்மார் கு…

  20. கடல் நுழையும் மணற் பதுங்குகுழி ஒரு பக்கத்து வானத்தில் பெருந்துயர் மிகு சொற்கள் எல்லாருக்குமான பாவங்களைச் சுமக்கும் சனங்களின் குருதி மிதக்கும் துண்டுக் கடலில் கறுப்பு இரவு திரிகிறது. எல்லாவற்றையும் கிடங்கிலிருந்து கழித்து ஓ.. என்ற பெரும் மூச்சை மணல்வெளியில் புதைத்தாய் வானம் தாறுமாறாய் கிழிந்தது. சப்பாத்துகள் நெருக்கி கடலில் தள்ளிவிடத்துடிக்கும் ஒரு துண்டு நிலத்தில் எச்சரிக்கப்பட்டிருக்கும் வாழ்வு மணல் போல உருந்துபோகிறது. எல்லாவற்றையும் இழந்து ஒடிவரும் இரவு சிக்கியது மிருகத்தின் வாயில் எறிகனை கடித்த காயத்திலிருந்து கொட்டும…

    • 1 reply
    • 934 views
  21. தேநீர் கவிதை: இல்லாத வீடு தன் நண்பனை அறிமுகப்படுத்தினான் என் நண்பன். ஒரு காலத்தில் ஒரே ஊரில் வசித்திருந்ததில் ஒருமித்தோம் இருவரும். ‘அந்த மாவு மில்லுக்கு ரெண்டு வீடு தள்ளி எங்கள் வீடு' என்றார். ‘உங்கள் வீட்டுக்கு அடுத்த வீட்டில் ஒரு துர்மரணம் நிகழ்ந்ததில்லையா?' என்ற என் ஊகத்தை மறுத்தார் அவர். ‘நீங்கள் வைத்திருந்த பவழமல்லி தெருவெல்லாம் மணக்குமே?' என்ற அவர் நினைவுப் பரிமாறல் என்னைக் குழப்பியது. …

  22. கருத்தும் கவிதையும் - வ.ஐ.ச.ஜெயபாலன் . பெண்கவிஞர் ஒளவ்வையார் கற்பை உடலுடனோ மனசுடனோ இணைக்காமல் ”கற்பெனப் படுவது சொற் திறம்பாமை” என ’சொல்; சம்பந்தப் பட்டதாக வரையறை செய்கிறார். சொல் அடிபடையில் குழந்தை பெறுவது தொடர்பானதுதான். சொல் அடிப்படையில் உன்னோடு வாழும்வரை வேறு பெண்ணை/ஆணைச் சேரேன் என்பதுதான், இது இருவருக்கும் பொதுவானது. . இந்த வரைவிலக்கணத்தின்படி என் அனுபவத்தில் நோர்வீயிய ஆண்களும் பெண்களும் கற்புநிலையில் உச்சம் என்பேன். ஒரு சமயத்தில் ஒருவன் ஒருத்தியென தளம்பாமல் வாழ்வது, மனம் கசந்தால் நேரே பேசி விலகியபின் மட்டுமே வேறு துணை தேடுவது என அவர்கள் பண்பில் சுதந்திரமான கற்புநிலை. சிறக்கிறது. இதனால் உறவின் வெளியே தொடர்புகள் அக குறைந்த சூழல் அமைந்துள்ளத…

    • 1 reply
    • 819 views
  23. சிங்களத்தில் பிரபலமான எனது கவிதை. . வசந்தகாலம் 1971 . இலங்கைத் தீவில் 1971 ஏப்பிரல் 5ல் ஆரம்பித்த சிங்கள இளைஞர்களின் கிளர்ச்சி ஜூன் மாதம் பல்லாயிரம் சிங்கள இளைஞர்களின் படுகொலையுடன் முடித்து வைக்கப்பட்டது. 1971 ஏப்பிரல் கிளற்ச்சியின்பின்னர். ”தமிழ் இளைஞர்கள் அமைதியானவர்கள். சிங்கள இளைஞர்கள் பயங்கர வாதிகள்” என சிங்கள அதிகாரிகள் பலர் சொன்னதை நான் கேட்டிருக்கிறேன். . சிங்கள இளைஞர்கள் சிங்கள மக்களின் பங்குபற்றுதலோ தமிழ் முஸ்லிம் மலையக (தமிழ் பேசும்) மக்கள் பற்றிய அக்கறை இல்லாமலும் ”சிங்கள சமூக நீதி” அடிப்படையில் இக்1970ல் ஜெவிபி (Janatha Vimukthi Peramuna ) கிளற்சித் தலைவர் ரோகண விஜயவீர இதயநோய் சம்பந்தமாக வைத்திய…

    • 0 replies
    • 1.4k views
  24. விழிநீரால் குளிப்பாட்டி எனக்கு விடை தருவாயா? ஆணதாய், பெண்ணதாய் பிம்பங்கூட பேரன்பில் மாய்ந்ததாய் மனதில் தோன்றி ஊரதும், உலகதும் உறைந்தே போக – உன் உறவது மட்டுமே உயிர் மேவுமோ? தோளிலே சாயவே வரத்தைக் கேட்டேன் தோல்வியில் சாயெனச் சாபம் பெற்றேன் வாயது விட்டழா வலிந்த பெண்மை – உனைக் கண்டதும் கண்ணீரில் கரைவதென்ன? நேற்றுவரை மோகித்த கனவு எல்லாம் நெடுந்துயர் தந்ததன்றி வேறு இல்லை ஆற்ற வா…. அன்பே! அருகே நீதான் – அன்றில் ஆற்றாத துயரோடு……. உயிர் போகுமோ? எதையுமே கேட்டதில்லை உன்னிடத்திலே என்னையும் தந்ததில்லை உன் கரத்திலே பிரிவினை மட்டுமே பேறாய் பெற்றேன் – இந்தப் பேதையின் நெஞ்சம் செய…

  25. செத்தும் காத்த என் அம்மாவின் பிறந்தநாள் நினைவில் . அம்மா பிறந்தது 1917 உடுவில் மகளிர் கல்லூரி வரவேற்ப்பில் மகத்மா காந்திக்கு மாலை சூடி ஆசி பெற்றது நவம்பர் 2017 (இறக்கிற வரைக்கும் காந்திய செல்வாகுடனேயே வாழ்ந்தார், விடுதலையும் சமூக சமத்துவமும் கவிதையும் அவரிடமிருந்து கற்றதுதான்.) . 2013 நவம்பரில் அம்மாவின் சமாதிக்குச் சென்றபோது கோத்தபாய ராசபக்சவின் விசேட உத்தரவின் பேரில் என்னைக் கைதுசெய்ய இராணுவம் எங்கள் பண்ணைக்கும் வன்னிவளான்குழம் கோவிலுக்கும் நடுவிலுள்ள காட்டுக்குள் காத்திருந்தனர், நல்ல வேலையாக நான் கார் சார்தியிடம் ”40 வருடமாக ஒவ்வொரு தடவை பண்ணைக்கு வரும்போதும் வன்னிவிளான்குளம் அம்மன் கோவிலில் கற்பூரம் கொழுத்திவிட்டு வரும்படி சொல்லுவார். 40 வருடங்களாக நான…

    • 6 replies
    • 1.3k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.