கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
நல்வரவு லண்டன் ஹீத்ரோவுக்கு நல்வரவு குடிவரவு, பொதிமண்டபம் இவ்வழி மஞ்சட் ஓட்டுக்கு இப்பால் வரிசையில் நில் கடவுச்சீட்டு? நுழைவுப்படிவம்? (கண்களால் மேலுங் கீழுந் துளாவல்) இது உன்னுடைய கடவுச்சீட்டா? விஸா எங்கு பெற்றாய்? கொஞ்சம் பொறு யாருடன் நிற்கிறாய்? முகவரி? தொலைபேசி? எத்தனை நாள் நிற்கிறாய்? ஏன்? எதற்கு? விமானப் பயணச்சீட்டை எடு கொஞ்சம் பொறு மஞ்சட் கோட்டுக்குப் பின்னால் நில், ஓரமாக அடுத்த ஆள் அடுத்த ஆள் அடுத்த... நீ வரலாம் அந்தப் பக்கமாக வைத்தியபரிசோதனைக்குப் போ சட்டையைக் கழற்று எக்ஸ் கதிர் இயந்திரத்தின் முன் நில் மூச்செடு, முதுகை நிமிர்த்தி நெருங்கி நில் கொஞ்சம் பொறு இந்தா உன் கடவுச்சீட்டு நீ போகலாம் பொதி மண்டபம் இவ்வழி…
-
- 17 replies
- 3.9k views
-
-
விரிக்கப்பட்ட ஒரு துண்டின் மேல் விழும் எச்சில்களுக்கு இரத்தம் வருத்த ஆடுகிறான் தன் பிஞ்சுகளோடு கனத்த உடலும் கால் தெரியும் அமைப்பும் ரசிக்கத்தான் கூட்டமுண்டு காலணா வீச ஆளில்லை கரணம் அடிக்கும் பூக்களை ரசிக்கத் தெரிகிறது சிந்தும் துளி ரத்தங்கள் கண்ணுக்குத் தெரிவதில்லை உழைக்கப் பல தொழில்கள் பிழைக்கப் பல தொழில்கள் பிச்சைக்குத் தொழிலுண்டா? வீசுங்கள் உங்கள் சட்டைப்பை காசுகளை. ஆகாயத்தின் மத்தியில் ஆடும் இவர்களின் வாழ்க்கையும் அடிக்கடி கலையும் மேகங்கள் கயிறின் நுனியில் உயிரை வைத்து பூக்கள் வாடும் மஞ்சள் வெயிலில் உதடுகள் வெடிக்க இவர்கள் ஆடுகிறார்கள் இறைவனின் கூத்து இறைவன் ஆடுகிறான் இவர்களின் வாழ்க்கையில் கூத்து.…
-
- 5 replies
- 1k views
-
-
உடல் ஒடிந்து போகையிலும் உள்ளமது உடையலயே எங்கள் தமிழ் நீதிக்கு ஏன் குரல் கொடுக்கலயோ...?? செவிகள் உண்டு உந்தனுக்கு செவிடாக நீயெதற்கு....?? கலைஞர் என்ற மாமனிதா கருணையது காட்டிவிடு... உந்தன் தமிழ் நாட்டினிலே போட்ட தடை எடுத்துவிடு எங்கள் தமிழ் நீயென்றால் இன்றுயதை செய்து விடு... வேங்கைகள் உந்தனுக்கு வேடுவர் இல்லையின்று அச்சமில்லை உந்தனுக்கு அவையினிலே செப்பிவிடு... தொப்பிள் கொடி உறவு நாங்கள் தொல்லையிலே வாழயிலே பந்தியிலே உந்தனுக்கு பாயசம் இன்றெதுக்கு...??? நல்ல மனம் உந்தனக்கு இல்லையென்று சொல்லவில்லை ஆயினும் நெஞ்சத்திலே வடுக்கள் இன்னும் ஆறலயே... உன்னை நம்பி எம்தமிழர் உன்னணியில் நிற்கையிலே எங்கள் ஈழ தேசத்திற்கு …
-
- 1 reply
- 812 views
-
-
நீயும் நானும் எதிரியடா- உனை நீண்டு வளர விட மாட்டேண்டா அல்லும் பகலும் அறுப்பேண்டா- உன் அத்தி வாரம் உடைப்பேண்டா... பாட்டன் ஆண்ட தேசமதை பறிக்க நீயும் வந்தாயோ...?? வெட்டி பயல்கள் நாமோட - உன்னை வெட்டி எறியாமல் விடுவேமோ...?? இல்லை நெஞ்சில் துணிவென்றோ எண்ணியே நீயும் வந்தாயோ அன்னியா உன்னை ஆண்டிடவே அகில தமிழர் விடுவாரோ...?? கொள்ளி கட்டை ஏந்தியே- எங்கள் கோட்டையை எரிக்க வந்தாயோ...?? இத்தனை துணிவு உனக்கென்றால் இனியும் உன்னை விடுவோமோ...?? - வன்னி மைந்தன் -
-
- 2 replies
- 1.1k views
-
-
பாரோரே பாருங்கள் அவன் பண்பை பயங்கரவாதியென்றே பட்டியலிட முற்ப்பட்ட பாரோரே பாருங்கள் அவன் பண்பை எதிரியெனில் எங்கிருந்தாலும் எதிர்த்தழிக்கும் எம் தமிழன்! ஏதிலியை ஏழைகளை எதிர்கொண்டு அழிப்பானோ? எங்கெனும் ஓர் குண்டை ஏதும் அறியார் மேல் எறிந்தானோ? பாராயோ அவன் பண்பை பாரோரே? பாடாயா அவன் பண்பை பாரெங்கும்! ஓங்கி அரையப்பட்ட இறைஅதுவே ஓங்கிய கரப்பக்கம் ஒடிந்து வீழ்தால் கொள்ளாத வேங்கையென மாவீரம் கொண்டவரோ! கொண்றிடுவர் ஏதிலியை ஏழைகளை! பார்த்தோமே பாரோரே செஞ்சோலை செங்குருதி! என்னற்ற குண்டுகளை எம் தமிழர் வீடுகளில் எடுத்தெரிந்து கொன்றதையும் பார்த்தோமே? தமிழனின் கறியிங்கே தாராளமாய் கிடைக்குமென்றே ஈனப் பிறவிகளின் இழிச் செயலாய் வாசகங்கள் பார்த்திருந்தும் பாரா…
-
- 4 replies
- 1.4k views
-
-
அன்னியத்து சிங்களங்கள் அரியாசனம் ஏறி விட்டு எம் தமிழை அழிக்கின்ற இன்னலதை காணலயோ...??? வந்தேறு குடிகளென்று- பகை வாய் விட்டு சொல்லையிலே எங்களது தமிழ் நாடு ஏனென்று கேட்கலயே.... உண்மையதை கண்ட பின்னும் ஊமையாகி நிற்கையிலே தன் மானம் உள்ளயவன் தலை நிமிர்தி கேட்கையிலே... குற்ற வாளி யென்றவனை கூண்டிலேற்ற முனையலாமோ...?? சட்டங்கள் என்று வந்து சங்கடங்கள் கொட்டலாமோ....?? கதிரையது ஏறிவிட கட்சி மாறும் கூட்டங்களே மனு நீதி விற்று விட்டு மன்றிலேறி என்ன செயவீர்....?? கொல்லர்கள் ஆழ்கின்ற கோட்டையது போலும்...??- அங்கு தமிழர்கள் அழிகையிலே தம்பட்டம் அடிக்கின்றீர்.... ''பாரதத்தின் மந்திரிக்கு பாதையிலே அடித்தவனை தூக்கி வைத்து தாளாட…
-
- 3 replies
- 1.4k views
-
-
-
- 30 replies
- 4.3k views
-
-
ஆணவத்தில் வானமேறி ஆட்டம் போட்டு வந்தவரே காலக்குறி வைத்து புலி கந்தகத்தால் குதறியதே.... கோட்டையிலே வந்தடித்தும் கொட்டமதா அடங்கவில்லை..?? வம்பிழுத்து நீயும் வந்தாய் வாங்கி கட்டி இன்று போனாய்... எத்தனை நாள் பொறுத்திருப்போம் எம்மவரை நீயழிக்க....?? காத்திருந்த நாள் கழித்து கள முனையில் இறங்கிவிட்டோம்... தேற்றம் கொண்ட எம் படைகள் தெருவிறங்கி வந்து விட்டார் கூற்றுவனே இனி உன்னை குழி தோண்டி புதைத்திடுவார்... வண்டு வந்து படம்பிடிக்க பறந்தடித்தா நீயும் வந்தாய்..?? கரணங்கள் அடித்துயின்று காணமலே எங்கு போனாய்...??? கூட்டமதா கூடி வந்து குண்டுகளை எய்ய வந்தாய்...?? சங்கரங்கள் ஆடியுனக்கு சமாதிகள் கட்டி விட்டோம்... தொல்லை தந்த…
-
- 2 replies
- 1.1k views
-
-
சில்லுடைந்து விழுந்த வண்டி சிலுக்காகி ஆடையிலே பல்லெடுத்து சிரிக்காம பார்த்து நானும் நிற்பேனோ...??? வந்த வழி தடுமாறி வழியோரம் கேட்கையிலே என்ன வென்று சொல்லாமால் எடுத்தெறிஞ்சு போவேனோ....?? கட்டழகு மேனி காட்டி கண்னேதிரே நீ வந்தா கண்ணெடுத்து பார்க்காமா கரையொதுங்கி போவேனோ...?? சுத்தி விட்ட துணி நளுவி தொப்பிளது தெரிஞ்சுப் புட்டா கை nவைத்து நுள்ளாம காளை நானும் நிற்பேனோ...??? முற்றத்து வாசலிலே துளசி மரம் முன்னிருந்தா கை யெடுத்து வணங்காமா காலெடுத்து போவேனோ....??? பதில் சொல்லு....! :P :P :P - வன்னி மைந்தன் -
-
- 2 replies
- 1.1k views
-
-
முன்னை அண்ணன் கொடுத்த இடி கட்டுநாயகாவில் பின்னை கொடுத்த இடி பலாலியிலே இன்று கொடுத்த இடி அடிவயிற்றிலே இன்னும் இறங்கும் இடி எங்கெங்கோ? வானோடிகளின் வல்லமை பாராமல் வாயார வாழ்த்தாமல் வாய்மூடி இன்னும் உறங்குவது ஏன் தமிழா? அன்று நின்று கடலாண்ட இராஜராஜனும் அவன் மகன் இராஜேந்திரனும் மீண்டும் பிறந்திருந்தால் இப்படித்தான் இருப்பாறோ? இணைந்து படைநடத்த இயன்றதெல்லாம் செய்யாறோ? என்னடா கொடுமை இது எங்கள் சகோதரனுக்கு எம் மன்னில் இடமில்லையாம் சொல்வது யார்? கன்னடத்து விஷநாகம் கடும் விஷத்தை கக்குவதும்! கலைஞ்சரின் கட்டுக்கதை கண்ணீர் நாடகமும்? என்னடா கொடுமை இது? - சிவராஜா
-
- 8 replies
- 1.4k views
-
-
செவ்வந்திப்பூ! பூத்திருக்கும் பூக்களெல்லாம் சந்தோசக் கவிதை சொல்லும்! பார்த்திருக்கும் பொழுதெல்லாம் புன்னகைகள் மின்னலிடும்! இறைவா உன் படைப்பினிலே இத்தனை இனிமைகளா? பூரித்து நிற்கின்றேன் பொன்மனதும் மலர்கிறது! விதியின் முடிவுகள்! மகிழ்ந்து மலர்ந்திருக்கும் வசந்தங்கள் வாழ்வில் இல்லை! என்றாலும்… மனமது மரத்து விடவில்லை! கூடிக் குலாவித் திரிந்து அணைபோட முடியாத அன்பையெல்லாம் அர்ச்சித்து போற்றுதற்கு ஜோடி என்று ஒன்றுமில்லை! என்றாலும்… கண்ணிலும் கருத்திலும் கனிவிற்கு குறைச்சலில்லை! கண்டதும் இருட்டு! காண்பதும் இருட்டு! காணப்போவதும் இருட்டாகலாம்! என்றாலும்… மென்மையான மெளனங்களில் துளியான நிம்மதியில் வாழ்க்கை கழிந்தே தீ…
-
- 9 replies
- 2.1k views
-
-
வெட்டடா வெட்டடா பகைவனே வெட்டடா பதுங்கிட நீயின்று பங்கரை வெட்டடா... நின்மதி தொலைத்து நித்திரை முழியடா- உன் கோட்டைகள் மீதிலே குண்டுகள் விழுமடா... ஆகயம் அதனையே அண்ணாந்து பாரடா புலியது பறவைகள் புயலென வருமடா... எண்ணெய் குதங்கள் எங்கினும் எரியுமே கடற் படை தளங்களும் கடுகதி சரியுமே... சட்டங்கள் போட்டா சாகவே அடித்தாய் வட்டீயும் முதலுமாய் வலிந்தே தருகிறோம்.... எத்தனை இன்னலை எமக்கது அழித்தாய் இந்தோ தருகிறோம் இன்னலை ஏரடா.... வல்ல அரசென்று வாயது அடித்தவா பிடரியில் கால் படா எங்கட ஓடினாய்...??? - வன்னி மைந்தன்
-
- 1 reply
- 1.1k views
-
-
-
தமிழன் வரமாய் வந்த -புலி வாலிபர்கள் போட்ட கிலிக் குண்டுகளாய்.. குதங்களெல்லாம்.. எரியுதையா..எரிகிறதே.. எம்மேலே..வட்டமிட்டு.. வகைவகையாய்.. தீ முட்டையிட்டு.. மழலையையும் மாமனையும்.. மண்ணிலே மரிக்கவிட்டு இனவெறியாட்டம் போட்டவன் புரிந்திருப்பான்..உயிர்வலி மக்கள் மீது குண்டு போட்டு.. எம்மாவீரர்.. அழிப்பதில்லை கண்மூடிக் குண்டெறிந்து.. விளையாடிப் போவதில்லை ஆயிரம் குண்டு போட்டும் இலக்கெட்டா ஆணவத்தை.. பிசகாத குறியாலே பிய்த்தெரிந்த எம்மருமை அண்ணாக்களே.. கண்ணீர் பொழிய வாழ்த்துகிறேன்.. களிப்பிலே நீந்துகிறேன்.. வெற்றியில் நிலைத்து வேள்வியில் தளைத்து நூறாண்டு வாழுங்கள்..
-
- 6 replies
- 1.3k views
-
-
;;மகிந்தாவிற்கு எச்சரிக்கை ..;; எங்கள் புலி வானமதை ஏளனங்கள் செய்தவரே கையேந்தி உலகமதில் கை பிச்சை எடுக்கிறீரோ...?? வேண்டி வந்த போர் கருவி வேளையின்றி கிடைக்கையிலே எங்கள் புலி வானமதை எட்ட நின்று முடிப்பீரோ....??? கம்பெடுத்து நாங்கள் வந்தால் களைந்தோடும் படைகளய்யா உங்களது கோட்டைகளை இன்றுயிவை காக்குமாய்யா....??? பகலிரவாய் வானமேறி பாவி உயிர் பறித்தவரே உந்தன் உயிர் காவெடுக்கா உறுமும் புலி அடங்கிடுமோ...?? எங்கள் புலி வீரரை என்னவென்று நீ நினைத்தாய்...? காத்திருந்தோம் உனையழிக்க கள முனைகள் திறந்து விட்டோம்... ஏற்றமுடன் நாம் நிமிர்வோம்- இனி ஏழரையே உனக்கு காண்- உன் கோட்டைகளே இனி சரியும் உனக்கு கோவணமும் இல்லை போ... …
-
- 3 replies
- 1.1k views
-
-
கங்காருவின் மைந்தர்களே களிப்பெமக்குத் தாருங்கள் சிங்கத்தின் குழந்தைகளை சிதறடிக்க விரட்டுங்கள் தடுப்பரண் போட்டெம்மை படுத்துகின்ற சிங்களத்தை துடுப்பாட்டக் களத்தினிலே கடுப்பாக்கி அனுப்புங்கள் மைதானம் வந்திருக்கும் மனிதக் கொலைகாரன் மகிந்த முகத்தினிலே மண்கவ்வ வையுங்கள் சிங்கக் கொடிதாங்கி சிரித்துக் கூத்தாட சீமைக்கு வந்தவனைப் - பார்த்துச் சிரித்துநிற்க உதவுங்கள்
-
- 5 replies
- 1.4k views
-
-
விமானக் கிலி காலமும் மாறுது காட்சியும் மாறுது கயவரின் தலைநகர் கதிகலங்குது குண்டுகள் தினமும் கொட்டிய சிங்களம் மண்டுகள் போலவே மருண்டு அலறுது காண்பது அனைத்தும் மஞ்சளாய் தெரிகிற காமாலைக் கண்ணனாய் காவல் புரியுது காகமும் அவர்க்கு காலனாய் தெரிந்திட கயவர் கூட்டம் கத்திக் குளறுது ஒளியினை எங்களின் வாழ்க்கையில் பொசுக்கியோர் ஒளியினை நிறுத்தியே ஒழிந்து மறைகிறார் வெளிச்சம் நிறுத்தியே வெருண்டு கிடக்கிறார் வெற்று வானிலே வெடிகளைச் சுடுகிறார் பகலிலே வந்தால் பார்க்கலாம் என்பதாய் பைத்தியக் காரனாய் பேட்டிகள் கொடுக்கிறரார் வினையினை மண்ணிலே விதைத்தவர் கேளுமே விடுதலை வரும்வரை விண்ணுமக்(கு) எதிரியே!
-
- 5 replies
- 1.2k views
-
-
எனக்காக ஒரு பாடல் தாய்மணணே நீ பாடு எனக்காக ஒரு பாடல்-என் தாய்போல நீ பாடு எனக்காக ஒரு பாடல்-உன் சேய்போல நீ தேடு உனக்காக நான் வாடல்-இன்னும் வாழாத வாழ்வோடு உனக்காக நான் வாடல் தாய்மண்ணைப் பிரிந்தாலும் தலைமுடியே உதிர்ந்தாலும் தாயக நினைவோடு... தளராமல் நான் இருப்பேன் அதற்காக நீ பாடு எனக்காக ஒரு பாடல் பிடிக்காத பிழைப்போடும் பெரும் பாடு பலபட்டும் உயிர்க் காற்றை உறையவிட்டு உனக்காக நான் உழைப்பேன் அதற்காக நீ பாடு எனக்காக ஒரு பாடல் உயிரை உயர்வாக நினைத்தாலும் உடலை கூடாகச் சுமந்தாலும் உற்றார்கள் உன்னை மறந்தாலும் என் உணர்வுதனை உருக்கிடுவேன் அதற்காக நீ பாடு எனக்காக ஒரு பாடல் அன்னிய வனவாச அவலத்தோடும் அன்னை மண் உன் நினை…
-
- 1 reply
- 1.1k views
-
-
சிந்திப்பாயா மனிதா எம்வாழ்கைதான் எத்தனை அழகு ஏன் எம்மை நாமே ரசிப்பதில்லை எதைத்தொலைத்து எதை தேடுகின்றோம் புரியாமல் போகும் வாழ்கைதனை சிந்தித்தால் என்ன இயற்கைதனை ரசிக்கும் எம்மால் மனிதனை ஏன் ரசிக்க முடியவில்லை அன்பு பாசம் காதல் சுயநலமாய் மாறியதோ ஆணும்பென்னும் சேர்த்தால்தானே வாழ்கை _இதனை புரிந்தும் சண்டைபோடுகின்றோம் இங்கே உணர்வுகள் மதிக்கப்பட்டால் பிரிவுக்கு என்னவேலை இதனை சிந்தித்தால் என்ன என்னவேடிக்கை பட்டி மன்றங்கள் போட்டு எம்உணர்வுகளை எமக்கே புரியவைக்கும் முயற்சி அதையும் நாமே செய்கின்றோம் வேதணையாக இல்லை…
-
- 5 replies
- 1.3k views
-
-
-
- 23 replies
- 3.9k views
-
-
திரைகடல் ஓடி திரவியம் தேட மூழ்கிய இடத்தில் நங்கூரம் இட்டு நிற்க்கும் கப்பல்-நாம் தலைமேல் பிரச்சனையும்-பொறுப்பும் சகோதரர்களில் கனவும் சுமந்து வந்தோம்- நாம் மூழ்கியதில் மூச்சுத்தினர வத்தது புலம்பெயர் நாடுமூச்செடுக்க முட்யாது தினறியதை அன்பு உடன்பிறப்புக்கு சொல்லவில்லை-நாம் உயிர் கொடுத்து உடன் பிறப்பை காப்பாற வந்தோம் உயிரின் பிரிவும் உறவின் பிறரிவு சமம் என்று அறியா- நாம் திரைகடல் ஓடி தமிழ்முகம் தேடி ஆறுதல் அடைந்தோம் கடைசியில் -நாம் http://www.tamil.2.ag/
-
- 2 replies
- 1.5k views
-
-
கடைசியாக எப்போது மழையை இரசித்தேன்? நினைவில்லை. கருநிறக் காளானென தெருவெங்கும் ஆங்காங்கே முளைத்திருக்கும் குடைகளின் விளிம்புகளிலிருந்து வெண்பனித் துகள்களாய்.. சரம் சரமாய்.. மழைநீர் கோர்த்துத் தொங்குவதை, தார்ச்சாலைகளில் விழுந்து தெறிப்பதை கடைசியாக எப்போது விழிவிரியப் பார்த்திருந்தேன்? அதுவும் நினைவில்லை. இன்றும் மழைபெய்தது. உச்சந்தலையில் தென்னைமரக் கொண்டையிட்டலைந்து, வீட்டுமுற்றத்தில் தேங்கி நிற்கும் மழைநீரில் காகிதப் படகு விடவென கொப்பித்தாள்களைக் கிழித்து அம்மாவிடம் வாங்கிக் கட்டிக்கொண்ட நாட்களில் பெய்த அதே மழை.., மறுபடியும் இன்று. இப்போதெல்லாம்.., என் கண்களுக்கு எதுவுமே தெரிவதில்லை எதிர்ப்படும் மனிதர்கள், தெருவில் கடந்து போ…
-
- 3 replies
- 1.1k views
-
-
என்னைக் கவர்ந்த சங்ககாலம் இதுவரை நான் படித்துச்சுவைத்த சுவைத்துக்கொண்டிருக்கின்ற சங்ககாலப்பாடல்களை அவற்றிற்கான சிறு சிறு விளக்க்கங்களுடன். . .
-
- 1 reply
- 1.2k views
-
-
எல்லாமும் நீயே அன்பாலே கவர்ந்திட்ட கண்மணியும் நீயே ஆவியுடன் இரண்டாகக் கலந்தவளும் நீயே இல்வாழ்வை இனிதாக்க வந்தவளும் நீயே ஈருடலில் ஓருயிராய் இணைந்தவளும் நீயே உணர்வுக்கு உயிரூட்டம் தந்தவளும் நீயே ஊடல்கள் செய்கின்ற முழுநிலவும் நீயே என்மனதை எளிதாகச் சரித்தவளும் நீயே ஏக்கத்தைக் களைந்திட்ட பெருநிதியும் நீயே ஐயங்கள் தீர்க்கின்ற அறிவணங்கும் நீயே ஓன்றித்துப்; போய்விட்ட எனதுயிரும் நீயே ஓயாமல் துன்பத்தைத் துடைத்தவளும் நீயே ஓளசதமாய் வந்திட்ட ஆரணங்கும் நீயே நீயே இனியெனக்கு எல்லாமும் நீயே
-
- 1 reply
- 1k views
-
-
காற்றோடு காற்றாக பறந்து செல்லும் வெற்றுக் காகிதங்கள் நாங்கள் அல்ல எழுதப்பட வேண்டிய புதுக்கவிதைகள் நாம் உறவுகளை இழந்து உணர்வுகளைப் புதைத்து முற்களின் பாதையில் நடக்கின்ற சிட்டுக் குருவிகள் நாம் `அ` எழுத வேண்டிய பிஞ்சுக்கைகள் பழுத்து சிவப்பாக புத்தகம் சுமக்கும் வயதிலே... சிலுவைகள் சுமக்கின்றோம் அன்னையவள் அன்பு முத்தம் எங்கே? அணைத்திடும் தந்தை கைகள் எங்கே? கண்ணீ ர் துடைத்திடும் தங்கை எங்கே? அன்புக்கு ஏங்கும் இதயங்களாக நாம் உறங்கிட முற்றமில்லை பசித்திடின் புசிக்கவில்லை மானம்காகாக்க உடைகூட இல்லை பசி எமக்கு நண்பன் தரை எமக்கு மெத்தை மழை எமக்கு குளியல் எம் இருள் களைந்து ஒளியேற்ற உதவிக…
-
- 20 replies
- 2.9k views
-