கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5129 topics in this forum
-
நாம் ஏன் இப்படி இருக்கிறோம்: மனுஷ்ய புத்திரன் நாம் ஏன் இப்படி இருக்கிறோம் சதா முணுமுணுத்துக்கொண்டு எப்போதும் துணிகளை மடித்துக்கொண்டு எதையாவது சுத்தம் செய்துகொண்டு யாரையாவது சபித்துக்கொண்டு எதையாவது அடைய முயற்சித்துக்கொண்டு எதனிடமாவது தோல்வியடைந்துகொண்டு எப்போதும் நம்மை நிரூபித்துக்கொண்டு ஒரு சிகரெட்டைப்போல எரிந்துகொண்டு தேவையற்ற பொருட்களால் நம் தனிமையை நிரப்பிக்கொண்டு யாரிடமாவது நம்மைப் பிணைக்க முயற்சித்துக்கொண்டு ஒரு அபத்தமான சினிமாவின் முதல் காட்சியைப் பார்த்துக்கொண்டு கடற்கரையில் கூட்டத்தோடு கூட்டமாய் நின்றுகொண்டு நம் குழந்தைகளை சந்தேகித்துக்கொண்டு நம் வீட்டிலேயே திருடிக்கொண்டு கண்ணாடியின் முன் சுயமைதுனம் செய்துகொண்டு …
-
- 4 replies
- 3.5k views
-
-
சித்திரையாள் நித்திரையோ? சிதைந்த எம் வாழ்க்கை காணலையே! எத்தனை சித்திரை பிறந்து வந்தது இத்தரை நன்மை நடந்ததா இதுவரை? புதுச் சித்திரை மாது நீ நன்மை நடத்த வந்த தூது நீ துவக்கினால் உயிர்கள் தூங்கியது போதும் தூங்கவை துவக்குகளை காட்டுமிராண்டுகளை ஓட்டு நீ உலகை விட்டு இரக்கமில்லா மனிதப் பிராணிகளை கொளுத்து நீ விசாரணை விட்டு இரத்த மழை பெய்யாது ஆக்கிவிட்டு சாமாதான கீதங்களை இதயவீணை தோறும் மீட்டி விட்டு உலகைப் பார் கார்ச்சியளிக்கும் கவலை விட்டு கதிரை விளித்துப் புதிரை அவிழ்க விடிவே நீ வாராய் விரைந்தே நீ வாராய் நடுச் சாமமானாலும் நரகக் குழியானாலும் நீயே எமக்குக் கதி இதுவே எமது துதி எட்டி நின்று ஒட்டிப் பார்க்காது அண…
-
- 5 replies
- 1.5k views
-
-
Tribute to the profound personality who created Ariviyalnagar University Complex - தமிழை ஏந்திய திருமகனார் - தடங்களை வரிக்கும் பெருங்கவிதை! ******-*****-******-******-******-*****-****** தாயகத்துப் பயணத்திலே வழித்துணையாய் வாழ்ந்தவன் தலைமகனுக்கோர் அண்ணனாகி தனித்துவனாய் நின்றவன்!. கருத்தினிலே கண்ணியத்தை குருத்தினிலே கண்டதனால் உருத்துடனே உத்தமனின் உறவுமாகிக் கொண்டவன்! பெருத்தவோர் வங்கியை அழுத்தமாய் ஆண்டதால் பொருத்தமாய்ப் பொறுப்பினை விருத்தமாய்ப் பெற்றவன்! நிதித்துறை என்றவோர் நிகருயர் அலகினை மதிப்புடன் ஆண்டிடும் பொறுப்பினைப் பெற்றவன்!. இரண்டு பவுண் தங்கத்தினால் திரண்டு வந்த பங்களிப்பால் இருண்ட எங்கள் கிழக்கினுக்கோ…
-
- 0 replies
- 720 views
-
-
கண்ணாடி அறைக்குள்ளே காற்றாட கணிப்பொறிமுன் கண்கள் தேட கழுத்திலேயே சுருக்கு கயிறை கடிக்கொண்டு திரியும் வாழ்க்கை காதலை கூட கருமியைபோல குறுஞ்செய்திக்குள் குறுக்கிவிட்ட கூரமான வாழ்க்கை போக்குவரத்து நிறுத்தங்களில் நிராகரிக்கப் பட்ட நிமிடங்களை நிம்மதிக்காய் தேடும் நிஜமில்லா வாழ்க்கை கட்டியவளை அணைப்பதை கூட கடிகாரத்துக்குள் ஒதுக்கி வைத்த கயமைதனமான வாழ்க்கை மினுமினுக்கும் விளக்குகொளியில் மிடுக்கான உடையில் போதையில் மிதக்கும் வாழ்க்கை இதுமட்டுமா வாழ்க்கை இலைமீது மழைத்துளி அதை கொட்டி விளையாட காதலி; இமை இடையில் வரும் இன்ப கண்ணீர்துளி அதற்காகவே பிறந்த அம்மா கிள்ளி விளையாடி கிள்ளையோடு சண்டைகள் …
-
- 2 replies
- 1k views
-
-
-உமா- ஊடகவியலாளரும், கேலிச்சித்திர ஓவியருமான, மனித உரிமைவாதியுமான பிரகித் எக்னலியகொட இலங்கை அரசால் கடத்தப்பட்டு இன்றுடன் (24.01.2011) ஒரு வருடமாகிறது. இலங்கையில் கருத்துச்சுதந்திரம் மறுதலிக்கப்பட்டு, ஊடாகவியலாரினதும், மாற்றுக்கருத்தாளர்களினதும் வாழ்வு அச்சம் தருவதாகவுயுள்ளது. அரசின் மனிதவுரிமை மீறல்களிற்கு குரல்கோடுப்போருக்கு எதிரான தாக்குதல்கள் மும்முரப்படுத்தபட்ட சூழலில் சுதந்திரமாக கருத்து வெளியிடும் உரிமை மறுக்கப்பட்டுவருகின்றது. 2006 ஆண்டிலிருந்து 14 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். பல ஊடகவியலாளர்கள் கைதுசெய்யப்பட்டும், கடத்தப்பட்டும், தாக்குதல்களிற்கு உள்ளாக்கப்பட்டுமுள்ளனர்.Sunday Leader ஆசிரியர் லசந்த விஜேதுங்க கொல்லப்பட்டு இரண்டு ஆண்டுகள் மறைந்துள்ளன. …
-
- 0 replies
- 526 views
-
-
ஈழம் எங்கள் தேசம் தமிழ் ஈழம் எங்கள் தேசம் அதை அந்நியன் செய்கிறான் நாசம் பச்சைப் பசேலேன்ற வயற்காடு இன்று பச்சிளம் குழந்தைக்கும் சுடுகாடு வந்தாரை விருந்தோம்பும் புகலிடம் இன்று அந்நியப் படைகளின் உறைவிடம் எல்லாள மன்னனின் கோட்டை இன்று குள்ள நரிகளின் சேட்டை பாட்டன் பூட்டனின் களியாட்டம் இன்று சிங்களப் பேய்களின் வெறியாட்டம் இனியும் பொறுக்குமா எம்மினம் இது கங்கை கொண்ட தமிழினம் ஆற்றில் இரும்பு போல் தாழ மாட்டோம் காற்றில் சருகு போல் வீழ மாட்டோம் ஆற்றில் சருகு போல் மிதந்து நிற்போம் காற்றில் இரும்பு போல் நிலைத்து நிற்போம் நட்போடு வந்தவனை வாழ வைப்போம் நஞ்சோடு வந்தவனை வாளால் முடிப்போம் கையில் எடுப்போம் நெருப்…
-
- 0 replies
- 571 views
-
-
எழுந்து வா என்னோடு கை கோர் நீ எழுமுன்னே உன் கால்களை உடைக்க காத்திருக்கும் பகைவர் கரங்களை உடைத்து-நீ எழுந்து வா என்னோடு கை கோர் சிதறிப்போனது உன் உறவுகள் அல்லவா உன் கண்கள் இன்னும் கசியவில்லையா? தினம் தினம் கேட்கும் மரண ஓலங்கள் உன் காதில் விழவில்லையா? பலாத்காரம் செய்யபட்டவள் உன் சகோத்ரி அல்லவா உன் இர்த்தம் இன்னும் கொதிக்கவில்லையா? உன் இனத்தின் இறுதி மூச்சு ஊசலாடுதே இன்னும் அதை நீ உண்ரவில்லையா? எழுந்து வா என்னோடு கை கோர் நீ எழுமுன்னே உன் கால்களை உடைக்க காத்திருக்கும் பகைவர் கரங்களை உடைத்து-நீ எழுந்து வா என்னோடு கை கோர் கை இழ்ந்து கால் இழந்து காண சகிக்காது உடல் சிதைந்து ஒவ்வொருவராய் உயிர் துறக்க உலகையே எதிர்த்து உயிரை துச்சமென நி…
-
- 0 replies
- 661 views
-
-
படித்ததில் பிடித்தது. ஆனாலும் பல கேள்விகள் மனதில்.. அதனால் பகிரப் பிடித்தது.
-
- 0 replies
- 555 views
-
-
இன அழிப்பின் இறுதிப் போர் மே மாதம் கவிதைகள் தீபச்செல்வன் 17 May 10 12:15 am (BST) ஆட்களை இழந்த வெளி வானம் நேற்றுக் காலைவரை உறைந்திருந்தது. இப்பொழுது சிதறி கொட்டிக்கொண்டிருக்கிறது. வானம் அழுகிறதென யாரோ சொல்லிக்கொண்டு போகிறார்கள். இப்பொழுதுவரை எந்தத் தகவலும் இல்லை. சனம் தகர்ந்து அடங்கிப்போயிறுக்கிறது. குடி எரிந்து முடிகிறது. டெலிகப்ரர்கள் அலைந்து கூடாரங்களின் சிதைவுகளை படம் பிடிக்கிறது எரிந்த வாகனங்களை மீட்டுக் கொண்டு போகிறது ஐ.நா. எல்லாம் நசிந்துபோக அடங்கிக் கிடக்கிறது ஆட்களை இழந்த வெளி. கைப்பற்றப்பட்டவர்களாக குழந்தைகளை தொலைக் காட்சிகள் நாள் முழுவதும் தின்று கொண்டிருந்தது. நான் தேடிக்கொண்டிருக்கிறேன். …
-
- 1 reply
- 1.9k views
-
-
விடுதலையை நேசித்த எத்தனையோ விருட்ச்சங்களை தின்றுவிட்டது அநீதி ஆயினும் இன்னமும் விடுதலைக்கான வேட்கையை சுமந்து கொண்டு வீச்சுடன் எரிகிறது விடுதலைத்தீ சுதந்திரத்திற்கான கனவுகள் பொய்த்துப்போன கணங்களில் இருந்து கணன்று கொண்டேயிருக்கிறது எங்களின் இதயம் விடுதலை பெறும் நாளில் வீடுவருவோம் என்று சொல்லிச்சென்ற தோழர்களின் வருகைக்காய் எங்களின் வாழ்க்கையைப்போலவே இருண்டு கிடக்கும் வீட்டினை சுத்தம் செய்து வைத்திருப்பாள் தங்கை இப்பொழுதும் எப்பொழுதும்போல் தோழர்களுக்காய் இயலாமையில் எங்கள் இதயங்களைப்போலவே கொதித்துக்கொண்டிருக்கும் அடுப்பில் சமைத்துக்கொண்டிருப்பாள் என் தாய் நேற்றையைய்ப்போலவே இன்றைக்கும் தேடுகிறேன் இன்னமும் …
-
- 0 replies
- 966 views
-
-
''பயந்தோடிய படைகள் சிதைந்ந நிலை.....!!!'' கிழக்கின் மீது ஏறி ஆடி சிரிச்சு முடிச்சீக... இப்போ உங்க கிழிஞ்ச உடலை கண்டு ஏனோ வழி பிதுங்கி நிண்டீக....??? கண்ணை மூடி கணைகளை தான் ஏவி விட்டிக.... எண் கணக்கில் புலிகள் பலி என்று சொன்னீ;க.... வெற்றி கள நாயகராய் உம்மை உரைத்தீக.... இன்று வேண்டி கட்டி வாயடைத்து ஏன் நீண்டீக....??? முகமாலை முன்னரணில் முதுகுடைத்தீக... முறிந்து விழுந்த படைகளையே பொதியில் ஏற்றீக.... கனரகங்கள் கொண்டு வந்து கை அளித்தீக.... கரிகாலன் படையணியை பலமாக்கி விட்டிக.... இனி ஏறி வரும் களங்களிலே வேண்டி கட்டுங்க.... ஜயா மகிந்த ஆட்சிக…
-
- 2 replies
- 1.2k views
-
-
ஓடிப் போ.... கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு.... இல்லண்ணை வாயை நீ மூடு.... செய்யல உனக்கது நான் கேடு.... இப்ப இங்கது நீ மோடு... படிக்கனும் நிறைய நீ ஏடு.... முதலில படிக்க அங்கோடு.... விழுந்தது உனக்கது உயர் ஓட்டு.... செய்தாய் அதற்கது வீண் கேடு... அண்டுகள் ஆண்டுகள் இது கேடு.... செய்த தமிழன் அவன் கேடு.... ஆரியன் தினித்தது அது கேடு... அதை எதிர்காத திரவிடன் அவன் மோடு... வார்த்தையால் போடாத நீ சூடு.... உனக்கது பின்னாடி பெருங்கேடு.... இது காறும் உரைத்தது நீ போதும்... இத்துடன் நிறுத்தி நீ ஓடு.... நன்றி - வன்னி மைந்தன் - …
-
- 2 replies
- 1.1k views
-
-
மையவாதச் சகதிக்குள் இருந்து எட்டிப்பார்க்கும் தலைகள் அரிப்பெடுக்கும் முதுகை சொறிய எவன் வருவான் என தேடுகின்றது உலகின் எந்த மூலைக்குள் போனாலும் ஊர்க்காரனே சொறிந்துவிடவேண்டும் நாலுபேராவது சொறிந்தால் தான் வாழ்வுக்கு அர்த்தம்கிடைக்கின்றது இருந்தும் நாற்பதுபேர் சாட்டையுடன் நிற்பதை என்னும் உணர்ந்துகொள்ளவில்லை. எதிர்பார்த்தபடி அரிப்பு வழமைபோல விரைவில் கூடிவிட்டது தங்களுக்குள் சொறிய ஆரம்பித்துவிட்டார்கள் இம்முறை உங்களுக்குள் சொறிந்து விழையாடும் கோமாளி ஆட்டத்தில் மக்களுக்கு ஆர்வமில்லை ஏனெனில் துப்பாக்கிகளால் எமக்குள் சொறிந்துவிழையாடிய ஆயிரமாயிரம் விழையாட்டை கண்டு சலித்தவர்கள் கள்ளன் பொலீஸ் விழையாட்டு எமக்கு உயிரை எடுத்து விழையாடும் துரோகி த…
-
- 17 replies
- 3.4k views
-
-
"""""தலைவன் பார்கிறான் இலக்கு"""" அண்ணணின் கையிலே துவக்கு அவன் பார்கிறான் அங்கொரு இலக்கு எங்களின் தேசம் மீள் நமக்கு - இனி இன்னல்கள் இல்லை எமக்கு... அமைதி வரவது இருக்கு -தமிழா அழுகையை நீ இனி ஒதுக்கு ஆண்டே ஏழதில் இருக்கு அடிமை உடையுது உனக்கு... கண்ணீர் கதறலை ஒதுக்கு கரிகாலன் எழுகிறான் நமக்கு அச்சம் உனக்கது எதுக்கு? அண்ணன் பார்கிறான இலக்கு... விடுதலை விடியுது உனக்கு விழி நீரதை நீயது ஒதுக்கு கவலைகள் கதறல்கள் விலக்கு கரிகாலன் பார்கிறான் இலக்கு..... -வன்னி மைந்தன் -
-
- 0 replies
- 906 views
-
-
அடங்காநா வாய்பேசில் இவர்சொல்கொடு வாளெனெவே வீசும்புலவர் தொடங்காப்பா போற்பொய் யாகும்வீணே நீபார் வந்தபயன் பொருள்: உனது நாவை அடக்கமுடியவில்லை எனில் பேசற்க, இல்லையேல் நீ கூறும் சொற்கள் கொடிய வாள் வீச்சுக்கே ஒப்பானது. ஆதலால் நீ இந்த பூமியில் வந்து பிறந்ததன் பயன் ஒரு புலவனின் இயற்றப்படாத பாடல் போன்று பொய்யாகிப்போகும்.
-
- 5 replies
- 1.4k views
-
-
''ஒழிந்து விடு...'' தேர்தல் வந்ததுமே தெருவிறங்கி குரைத்தவரே ''மாலை போட்டு வந்தன்று மேடையேறி குலைத்தவனே... மானம் உள்ளாய் நீ என்றால் உன் நாக்குகளை வெட்டியெறி...'' ஓட்டெடுத்து சீற்ரெடுத்து ஒய்யார அமர்ந்து விட்டு மரணம் வருகுதென்றா மண்ணை விட்டு நீ போனாய்..? ( கனடா) திருந்தினாய் நீயென்று திருத்தி நாம் படித்தோம்- பாவி கையுட்டு மாறியதாலோ- நீ கை மாறி போனாய்....? கோழையே நீயா கொள்கை கொண்டாய்...? மக்களை காத்திடவா மன்றேறி நீ வந்தாய்...?? நினைத்தாலே சிரிப்பு ஆனாலும் வெட்கம் - நீ இருந்தாலே கேடு இன்று நீ ஒழிந்து விடு... - வன்னி மைந்தன் -
-
- 5 replies
- 1.3k views
-
-
நீங்கள் இப்போது நடந்துகொண்டிருக்கும் வீதியில்தான் குழந்தையொன்று பின்னந்தலையும் தாயுமில்லாமல் அழுதே இறந்தது நீங்கள் நடங்கள் நீங்கள் இப்போது பார்க்கும் வீட்டில்தான் போராளி ஒருத்தியை நான்கைந்துபேர் மொழிகலப்பற்று புனர்ந்தார்கள் நீங்கள் நடங்கள் நீங்கள் இப்போது கால் நனைக்கும் கடற்கரையில்தான் படகில் தப்பியோடமுயன்ற நிறைசூல் பெண் ஒருத்திசுடப்பட்டு இறந்துபோனாள் கூடவே அவளோடு... நீங்கள் நடங்கள் நீங்கள் இப்போது நிற்கும் பதுங்குகுழியில்தான் மேலே செல்லடியிலிறந்த ஆறுமாத குழந்தையை தூக்கவியலாமல் கையில் துவக்கோடும் தவிப்போடும் நின்றிருந…
-
- 0 replies
- 1.1k views
-
-
மாங்கிளியும் மரங்கொத்தியும் கூடுதிரும்பத் தடையில்லை நாங்க மட்டும் உலகத்திலை நாடு திரும்ப முடியலை நாடு திரும்ப முடியலை மாங்கிளியும் மரங்கொத்தியும் கூடுதிரும்பத் தடையில்லை நாங்க மட்டும் உலகத்திலை நாடு திரும்ப முடியலை மாங்கிளியும் மரங்கொத்தியும் கூடுதிரும்பத் தடையில்லை நாங்க மட்டும் உலகத்திலை நாடு திரும்ப முடியலை நாடு திரும்ப முடியலை சிங்களவன் படை வானில் நெருப்பை அள்ளிச் சொரியுது எங்களுயர் தமிழீழம் சுடுகாடாய் எரியுது சிங்களவன் படை வானில் நெருப்பை அள்ளிச் சொரியுது எங்களுயர் தமிழீழம் சுடுகாடாய் எரியுது தாய்கதறப் பிள்ளைகளின் நெஞ்சுகளைக் கிழிக்கிறான் தாயாகும் முன்னேயிளம் பிஞ்சுகளை அழிக்கிறான் தாய்கதறப் பிள்ளைகளின் நெஞ்சுகளைக் கிழிக்கிறான் தாயா…
-
- 1 reply
- 1.7k views
-
-
பல்லவி ஆண்: யாரும் எழுதாத பாடல் எழுதத்தானே ஆசை என் வாழ்வு இருக்கும் போதே எழுதி உயரத்தானே ஆசை உனக்காக எழுதும் பாடல் எந்த மெட்டிலும் இணைய வேண்டும் இசைத் தாளத்தில் மூழ்காமல் உயிர்வரிகளாய் இருக்க வேண்டும் பெண்: யாரும் எழுதாத பாடல் கேட்கத்தானே ஆசை என் வாழ்வு மலரும் போதே அதைக் கேட்கத்தானே ஆசை சரணம் 1 ஆண்: கண்ணுக்குள்ளே நீ எங்கே என்று என் கவிதைகளும் உளவு பார்த்ததோ நெஞ்சுக்குள்ளே நீ எங்கே என்று என் கனவுகளும் கேட்டு நின்றதோ பெண்: கண்ணுக்குள்ளே கலகம் செய்தாய் என் இதயத்தின் புதுத் திருடா கவலைகள் ஏனடா காதல் யுத்தம் செய்யப்போகிறேன் காத்திருந்து வாழப் போகிறேன் ஆண்: யாரும் எழுதாத பாடல் எழுதத்தானே ஆசை என் வாழ்வு …
-
- 2 replies
- 1.2k views
-
-
என்னணை அப்பு? இடிஞ்சு போய் இருக்கிறாய்! எல்லாம் முடிஞ்சுது...! அது தான் இப்படி! என்னப்பு நடந்தது? ஆரம்பப் புள்ளிக்கே.., திரும்ப வந்திருக்கிறம்! இல்லை...இல்லை..! இன்னும் கொஞ்சம் சறுக்கியிருக்கிறம்! என்னப்பு.. கள்ளுத் தத்துவமோ? கள்ளில முன்னேற்றம் ! அதை விடு..! பிளாவிலை குடிச்சனாங்கள், இப்ப..., கிளாசில குடிக்கிறம்! ஆயிரமாய்த் துலைச்சு..., அலங்கோலங்கள் சுமந்து..., விலாசங்கள் கலைந்து,,, தலையில துண்டோட...! என்னப்பு நடந்தது? கொஞ்சம் விளக்கமாய் சொல்லணை! அது தானே சொல்லிறன்.., ஆரம்பப் புள்ளிக்கே.., திரும்ப வந்திருக்கிறம்!
-
- 13 replies
- 2.7k views
-
-
I just can't control myself I can't be with no one else It seems like I'm addicted to The way you like to touch me I don't think they understand Why love at your command From the words you speak so deep Our bodies read I have to have you I love you............... You're perfect A manifestation of my dreams Body feel About a million different things எங்கேயோ சுட்டது....
-
- 1 reply
- 1.1k views
-
-
பிரபல ஆங்கிலப் பாடகி Amy Winehouse (24) இன் பிரபல்ய பாடலான.. " Love is a losing game " பாடல் வரிகள் பற்றி.. ஒப்பீட்டு விமர்சனம் அளிக்க.. (இரு வெவ்வேறு கால பாடல்களுக்குரிய பாடல்களில் அமைந்த வரிகளின் தன்மைகளை ஒப்பிட்டு..) கேம்பிரிஷ் பல்கலைக்கழக ஆங்கில பாடப் பரீட்சையில் கேட்கப்பட்டுள்ளது. எங்கே.. எம் கவி வித்தர்கள்.. நீங்களும்.. உங்கள் கருத்தை இவ்வரிகள் தொடர்பில் சொல்லுங்கள் படிப்போம்... (உங்களை ஒப்பிடச் சொல்லவில்லை) Though I battled blind Love is a fate resigned Memories mar my mind Love is a fate resigned Over futile odds And laughed at by the Gods And now the final frame Love is a losing game Amy Winehouse இன் இணையத்தளத்தில் பாடலை…
-
- 9 replies
- 2.3k views
-
-
சின்னஞ்சிறிய குழந்தை - அதன் சிந்தையில் வஞ்சகம் இல்லை கன்னல் மழலை பொழிந்து - எங்கள் காதிற்கு அமுதமளிக்கும் ஆசையுமில்லை மோசமுமில்லை - அது ஆணவம் கொள்வது இல்லை காசையு மெண்ணுவதில்லை - இதால் கவலைப் படுவதுமில்லை பிஞ்சுக் குழந்தை மனதில் - ஒரு பேதம் வளர்வதேயில்லை அஞ்சுதல் என்பதுமில்லை - அதை யார் வெறுப்பார்? யாருமில்லை இவ்வளவு பெரிய உலகில் - துயர் பிடித் அலைந்திடும் மக்கள் மத்தியில் சின்னக் குழந்தையாய் மாறி வாழ்ந்திட ஆசை...
-
- 0 replies
- 773 views
-
-
[size=3]அட[/size] [size=3]யாருங்க இப்ப [/size] [size=3]சாதி பார்க்கிறா?"[/size] [size=3]"ஆமா![/size] [size=3]யாரு இப்ப [/size] [size=3]சாதி பார்க்கிறா!!"[/size] [size=3]சங்கட மடத்துக்கு [/size] [size=3]அக்னி கோத்திரம்[/size] [size=3]சைவ மடத்துக்கு [/size] [size=3]பிள்ளைவாள் மாத்திரம்[/size] [size=3]பேரூருக்கு [/size] [size=3]வெள்ளாளக் கவுண்டர்[/size] [size=3]கோவிலூருக்கு [/size] [size=3]நாட்டுக்கோட்டைச் செட்டி[/size] [size=3]சாமித்தோப்புக்கு [/size] [size=3]நாடார் அய்யா[/size] [size=3]"அட[/size] [size=3]யாருங்க இப்ப [/size] [size=3]சாதி பார்க்கிறா?" [/size] [size=3]"ஆமா![/size] [size=3]யாரு இப்ப [/size] [size=3]சாதி பார்க…
-
- 2 replies
- 1k views
-
-
-
- 6 replies
- 1.1k views
-