Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. Started by uthayakumar,

    • 0 replies
    • 735 views
  2. இனிய இளகிய காலை ஒன்றில் மனவெளியில் மட்டற்று மயக்கங்கள் நீண்டு தெரியும் நெடுமரங்களோடு நட்பாய் நடக்கையில் நிமிர்வற்ற மரங்களின் உதிர்ப்பில் நிலம் முழுதும் நிறைந்து கிடக்கும் நிழல் தந்த இலைகள் நெஞ்சமதை நெகிழ்க்கின்றன உதிர்ந்த மரக்கிளைகளில் கொஞ்சலும் கொற்றலும் கூச்சலுமாய்க் கூடியிருந்த புலுனிகள் கூட்டம் கூடி ஒன்றாய் புல்லமர்ந்து கொற்றித் தின்றன எதையோ பின் கூடி எழுந்து கோலமிட்டபடி கண்ணிமை மூடித் திறக்குமுன்னே காணாமலும் போயின மீண்டும் அவை வந்து போகலாம் மிடுக்காய் அமர்ந்து மின்னலாய்ப் பறந்து மாயங்கள் செய்யலாம் காலம் மாறிக் கடும்பனி போனபின் குனிந்த மரங்கள் மீண்டும் குளிர் விரட்டி தளிர் கொள்ளலாம் நாம் மட்டும் தொலைந்த எம் இருப்பை எண்ணி தொலைவிலும் தெரியா துள…

  3. இது எனக்கான பாடல். எனக்கான இந்த பாடல் உங்களுக்கான அடையாளங்களை சுமந்திருக்கலாம் ......... ஆனாலும் -இது எனக்கான பாடலேதான். தரவையிலும் தரிசுநிலத்திலும் பாடிக்கொண்டிருக்கும் ஒற்றைப்பறவையின் பாடலொன்றை ஆழ்ந்து கேட்டிருந்தால், ஆளரவமற்று வெறுமையோடு அடங்கிக்கிடக்கும் பெருவீட்டில் அமைதியோடு முடங்கிக்கிடக்கும் நாயொன்றின் விழிகளை கூர்ந்து பார்த்திருந்தால், கனிநிறை மரத்தில் கிளைதாவி குரலெடுக்கும் அணிலொன்றின் தவிப்பின் காரணத்தை ஒருநாளாவது தேடியிருப்பின், எனக்கான இந்தபாடலின் நியமம் புரிபடக்கூடும். இல்லையேல், ஓசைப்பிணைப்புக்களாலும் வார்த்தைச்சிக்கல்களாலும் உணர்த்தப்படப்போவது எதுவென்று புரியப்போவதில்லை உங்களுக்கு எனது ப…

  4. எத்தைகைய ஒழுங்குமற்ற எனது சொற்றொடர்களை நீங்கள் கவிதை எனக் கொள்க. பின் நவீனத்துவம் எனக் கொண்டாலும் நலமே..!! சாமத்தில் வீடுசேர்ந்து வைகறையில் தலைசாய்ந்து நண்பகலில் கண்விழித்து - தாமதமுணர்ந்து தவித்து அரக்கபரக்க அங்கம் கழுவி மடித்துவைத்த உடுப்பணிந்து அழுக்கேறிய இருசக்கரத்திலமர்ந்து சாலையோர பெட்டிக்கடை தேடி சிகரெட்டுடையும் சிறுசமோசாவையும் சிற்றுண்டியாக்கி சிக்னலில் சிக்ககூடாதென சிரம்தாழ்த்தி சிவன் தொழுது அண்ணாசாலை நோக்கி வாகனம் பாய வழியில் குறுக்கிடும் வழிப்போக்கர்களை வைது வெம்மையால் வியர்வை வழிய - ஓடோடி அலுவலகத்தின் வாசல் கதவை திறக்க சில்லெனப் பாயும் குளிர்காற்று !!

  5. கற்பு அது எனக்கும் இல்லை என்னவளுக்குமில்லை கடிதம் அதை அனுப்பமட்டுமே தெரியும் வஞ்சனை அது தான் மூலதனம் குழிபறிப்பு பிறந்ததிலிருந்து தமிழ் பற்று அது தமிழனை முட்டாளாக்க சினிமா பணம் மற்றும் பறவை சுட பத்திரிகை பந்தி பந்தியாக எழுதி உடன்பிறப்பை முடக்க தொலைக்காட்சி இனாம் என்று தொடங்கி இருட்டடி அடிக்க கட்சி அது குடும்பச்சொத்து பிள்ளைகள் உலகவரிசை பணக்காறராக உண்ணாவிரதம் அது உண்மையைப்புதைக்க.........

  6. எப்படி அழைக்கப்படும் நானில்லாத எனது வீடு யாருமில்லாத இன்றில்......... என் பெயரால் அழைக்கப்படமுன் அண்ணாவின் பெயரால், அப்பாவின் பெயரால், அம்மாவின் பெயரால், அம்மம்மாவின் பெயரால், அழைக்கப்பட என் வீடு......... எப்பவோ துளைத்து கறல் ஏறிய சன்னங்களையும், எறிகணை சிதைத்து சிராம்பு கிளம்பிய வளைமரங்களையும், அண்ணாவை தொடர்ந்து எனது கீறல்களையும் சுமந்த வைரமரக்கதவுகளையும், மஞ்சள் பூக்கொடிமரம் சுற்றிபடர்ந்து மங்கலமாய் நின்ற தூண்களையும், சுமந்த என் வீடு......... எப்படி அழைக்கப்படும் யாருமில்லாத இன்று. எல்லையோர ஒற்றைபனையும், வேலிக்கிளுவையில் படர்ந்த கொவ்வையும், செம்பருத்தியும் நித்தியகல்யாணியும் நாலுமணிப்பூச்செடியும் முற்றத்து மண் அள்ளி கொ…

  7. அகராதி நீ என் அகராதி ..... அகரம் முதல் அந்தம் வரை..... அங்குலமாய் வர்ணிக்கும் அகராதிநீ..... அழகு தமிழ் வார்த்தைகளை...... அடுக்கடுக்காய் உனக்காக தொகுப்பேன்....!!! அகோராத்திரமும் உன்னை நினைத்து..... அல்லோலகல்லோலப்படுகிறேன்...... அணைக்கவும் முடியவில்லை....... அகலவும் முடியவில்லை ........ அகம் படும் பாட்டை எப்போ அறிவாய்......? அழகு தேவதையே அகத்தரசியே & அகராதி சொற்களில் கவிதை கவிப்புயல் இனியவன் மேலும் தொடரும்

  8. [size=5]மண்ணுக்காய் மரணித்து விண்ணுலகு சென்றவரே எம்மினமாய் உமைப் பெற என்னதவம் செய்தோம் மண்மீட்க மனம் கொண்டு மங்காப் புகழ் கொண்டீர் மண்ணின்று போயினும் உமை மறப்போமா நெருப்பாகி நீராகி நிர்மலமாகி நீர் நீள் துயில் கொண்டே நின்மதி கொள்வீர் எங்களை எண்ணி உங்களைத் தந்தீர் எதுமற்றோறாய் நாம் இன்னும் இருக்கிறோம் ஊர் கூடி ஒன்றாய் தேரிழுப்போமென நம்பிக்கை கொண்டே நாடு காத்திட்டீர் எதிரிகளாகி இன்றும் எட்டாய்ப் பிரிந்து எங்கணும் நிற்கிறோம் பேரிடி ஒன்று பெரு மழையுடன் ஊரெங்குமெனக் காத்திருக்கையில் மேகமிலா வானமாய் எம் மனங்கள் வெறுமையாகிப் போனதும் ஏன் உங்கள் கனவுகள் எங்களுக்கும் தான் என்றோ ஒருநாள் எ…

  9. பிறரிடம் வருந்தாதே .... உன்னை வருத்து வெற்றி ... நிச்சயம் ....!!! தன்னை வருத்தாதவன் ... வருத்ததோடுதான் .... வாழ்வான் ....!!! + கே இனியவனின் தத்துவ சிதறல்கள்

  10. சாட்சியம் காலத்தின் கட்டாயம் படுகொலைகள் பாலியல் வல்லுறவுகள் சித்திரவதைகள் என எம்மினம் சின்னாபின்னப்படுத்தப்பட்டு எமது தேசமும் எரிக்கப்பட்டபோது உலகம் கண்மூடி நிற்க உண்மைகள் புதைக்கப்பட்டன. இப்போ சீமெந்துச் சுவரில் முளைவிட்ட சிறு விருட்சம்போல் உண்மை மெல்ல மெல்ல வெளியேறுகிறது. தன்கடமையை மறந்த ஐ. நா மன்று கதிகலங்கி நிற்க மனிதவுரிமை மனச்சாட்சியாய் வாய்திறக்கிறது. சாட்சியம் கோரி வாய்திறக்கும் மனிதவுரிமை ஆதரவில்லாமல் அனாதையாய்விடக் கூடாது. பார்த்ததை பகிர்ந்ததை பட்ட துன்பத்தை துணிவுடன் எடுத்துக் கூறி தமிழர் துயர் துடைக்க சாட்சியம் வழங்கு சாட்சியமில்லாவிடத்து உண்மையும் அனாதையாகிவிடும். மனச்சாட்சியும் மௌனமாகிவிடும். தயங்காதே! தமிழீழ விடுதலைக்காய் தன்ன…

  11. மூன்றாம் காதல் -------------------------------------------------------------------------------- - நெப்போலியன் பத்தாம் வகுப்பு படிக்கையில் பக்கத்தில் அமர்ந்திருந்தவளுக்காய் எழுதிய காதல் கடிதத்தை அவன் அப்பாவை ? படிக்க வைத்துப் பார்த்த முதல் காதல் ! வேலைக்குச் செல்கையில் ரயில் வண்டியில் எதிர் இருக்கையில் இரண்டு வருடத்திற்கும் மேலாய் அடைகாத்து ? சொந்த வாகனம் உடையவன் அறிமுகம் கிடைத்ததும் பரிதவிக்க விட்டுப் பறந்துபோன இரண்டாம் காதல் ! மூத்தவன் வலது கையிலும் இளையவன் இடது கையிலும் என் விரல்களைக் கோர்த்தபடி நடந்துகொண்டிருக்க... கடைக்குட்டியை அவள் வயிற்றில் சுமந்தபடி முற்றுப்பெற்ற மூன்றாம் காதல். சுட்டது...இ…

  12. எங்களை நாமே கேட்டுக் கொள்வோம்? நிலம் பறிபோகிறது ஆத்திரப்பட்டு அழுகின்றார்கள் அவர்கள் எமக்கென்ன எதுவும் நடக்கட்டுமே புpள்ளைகள் கடத்தப்படுகின்றார்கள் என அலைந்து உலைந்து அரற்றுகின்றார்கள் அவர்கள் நாம் ஏன் கவலைப்படவேண்டும்? பெண்கள் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்டு படு மோசமான சித்திரவதைக்குள்ளாகின்றார்கள் எமது பிள்ளைகளுக்கு ஒன்றும் நடக்காதுதானே நாங்கள் ஏன் கவலைப்படவேண்டும் வலுக்கட்டாயமாக பிள்ளைகளை இராணுவத்தில் இணைக்க பிடித்துச் செல்கின்றார்கள் என வெந்து நொந்து அவர்கள் அழுகின்றார்கள் எங்களுக்கு என்ன நாங்கள் இங்கே வெளிநாட்டுக்குடியுரிமை பெற்று வசதிகள் எல்லாம் பெற்று வளமாக வாழ்கின்றோம் நாங்களும் அழுகின்றோம்தான் சின்னத்திரைகளில் வெள்ளித்திரைகளில் கதாநாயகனும் கதாநாயகிய…

    • 0 replies
    • 733 views
  13. அழகான அதிபர் உரை-பா .உதயன் அழகான அதிபர் உரை என்றாராம் அனைவரும் வாழ்த்து சொன்னாராம் நேற்று வரை தூற்றி நின்றவரும் அழகப்பெருமாளை ஆள வைக்க நினைத்தவரும் இன்று அவர் காலடியில் விழுந்தாராம் இதுவெல்லோ நாட்டுக்கு தேவையென்றாராம் சும்மாவா ரணில் என்றால் நரி என்றும் சிலர் சொன்னாராம் அனைவருமே இன் நாட்டு மக்கள் என்றாராம் இருள் கடந்து வெளிச்சம் வரும் என்றாராம் அது தனக்கு தெரிகிறது என்றாராம் அனைவருக்கும் வெளிச்சம் வர செய்வாராம் முன்பு ஆறு தடவை பிரதமராய் இருந்தாராம் அப்பவெல்லாம் ஏன் இவற்றை செய்ய மறந்தாராம் ஆட்டத்திலே இழந்தாலும் அசையாராம் எந்தப் பதவியையும் எப்போதும் வி…

    • 4 replies
    • 732 views
  14. The Song of the Defeated v.i.s.jayapalan Translated by Meena Kandasamy The song of the victors rises from every direction. The song, reaching its cresendo, lands like a spit on our faces. And yet, they are afraid. Why? Because they lack the armour of justice. Like the shoots of grass growing from the ashes of burn pastures, we too have our songs. Our songs, which are like warriors in camouflage: the victors call them dirges, Many epic vows begin from laments. As they say, Tears caused by a tyrant’s rule Will wash away his royal wealth. There are songs like this in the epics, that begin with the defeat of justice. …

    • 3 replies
    • 732 views
  15. மடியில் கிடத்தி இப்போதும் தலை கோதுகிறாள் அம்மா தன் செல்லப் பிள்ளையென குழந்‌தையென உறங்குகிறேன் நான் கைவிரல் பதியும் அப்பாவின் முரட்டு அடி இப்போதும் பயம் தான் எப்போதும் ஓரடி தள்ளியே நிற்கிறேன் அன்பாய் சொல்கையிலும் அதட்டலாய் தொனிக்கும் பாட்டியின் சொல்லை இப்போதும் மறுப்பதில்லை பழுத்து தழுத்த போதும் நரைத்த என் தலைக்கு பின்னிருந்‌து கழுத்தைக் கட்டிக்கொண்டு தொங்கும் என் பிள்ளை பிறந்‌தது நேற்றெனவே தோன்றும் ஆனால் ஒரு நமட்டுச் சிரிப்பில் சட்டென உணர்த்தி விடுகிறாள் மனைவி எனக்குக் கழுதை வயதாவதை கழுதையின் வயதென்னவோதான் தெரிவதில்லை லோ.கார்த்திகேசன்

  16. நாலு நாள் சுற்றுலாவும் நரிகள் அடைந்த புளுகும்..! நரிகளை பரிகளாகினார் மாணிக்கவாசகர்,புலிகளை நரிகளாக் 19.10.2014-கினார் மகிந்தரும்,பிரபாவும்.அடுத்த கட்டத்தை தாண்டும் தமிழினம் மீதான அழிப்பு -துலாத்தன். இருந்திருந்து பார்த்தேன் எழுதாமல் இருக்க முடியவில்லை. மனசுக்குள் குபீர் என்று ஒரு சிரிப்பு குமைவதாய் பரபரப்பு. உலையில் அரிசி ஏறாவிட்டாலும் பரவாயில்லை. உலைக்களத்தை திறக்காமல் உட்கார முடியவில்லை. மன்னாதி மன்னர் வந்துபோன கொட்டகைகள் இன்னும் கழற்றி முடியவில்லை. கொஞ்ச நாளுக்கு முதல் ஒரே கொலைவெறி கோழிக் கூட்டுக்குள்ளும் புகுந்து பதிவெடுத்தார்கள் படைத்தம்பிகள். புலி இருந்த குகைக்கே இந்தனை பயமா? அங்குமிங்கும் பார்த்துவிட்டு எங்கள் சனம் எள்ளி நகையாடியது. கடித்து குதறி கபளீகரம் செ…

  17. உண்மையிடம் கேட்டேன் ஒரு கேள்வி ...? நல்லது எது கெட்டது எது ...? உண்மை சொன்னது ..... வீட்டுக்குள்ளே செல்லும் போது செருப்பை .... கழற்றி வைக்கிறோம் .... செருப்பு ஒதுக்கப்படுகிறது .... கொழுத்தும் வெய்யிலில் .... பதைத்து துடிக்கும் போது .... செருப்பு சொர்கமாகிறது ....!!! நறுமணம் வீசும் போது ... மனம் சுவைக்கிறது ... துர்நாற்றம் வீசும்போது ... மனம் சுழிக்கிறது ...... காற்றே இல்லாத அறைக்குள் ..... அடைக்கப்பட்டு அடுத்து மூச்சு .... விட்டால் உயிர்பிழைக்கும் ... நிலையில் துர்நாற்ற காற்று .... சொர்க்கமாக மாறுகிறது ....!!! நாக்கு வறண்டு உடல் சோர்ந்து .... ஒரு துளி தண்ணீருக்கு மனம் ... ஏங்கி கொண்டிருக்கும்போது .... த…

  18. வாழ்வே உன் அர்த்தம் தேடி அலைகின்றோம் வழிநெடுகிலும் பொழுது போக அழுகின்றோம் எங்கள் காயங்களின் வினோதங்களை வேடிக்கை பார்க்கின்றோம் சாரலும் தூறலும் கூடவே பெருவெள்ளமும் மண்ணில் காய்ந்த குருதியை கழுவிச்செல்கின்றது புதுவெள்ளமாக திசைகளற்றுச் செல்கின்றது பள்ளம் எங்கேயோ அங்கு நகர்கின்றது எங்கள் வாழ்வும் அதன் நியாங்களும் கூடவே கரைந்து செல்கின்றது. வீழ்ந்தவர்களின் தடங்கள் ஊரெங்கும் பரவிக்கிடக்கின்றது உயிர்வலிகளுடன் நிறையக் காட்சிகள் நேற்று கனமாயிருந்தது அந்தப்பிள்ளை இங்குதான் சிதறிக்கிடந்தன் இந்தப் பிள்ளை இங்குதான் குடல் வெளித்தள்ளிக் கிடந்தான் இந்த தெருவில் அந்த முடக்கில் ஊரெங்கும் காடெங்கும் நேற்றுவரை எங்கள் செல்வங்களாக சித…

  19. முந்தை வினை முழுதும் மூர்க்கத்துடன் அறுக்க முனைகிறேன் ஆனாலும் முடிச்சவிழ்க்க முடியா முடிவுகள் அற்றதாய் வாழ்வு நீண்டுகொண்டே செல்கின்றது பிறவிப் பயன் அறிந்திடா பித்தம் தலைக்கேறிய மானிடராய் பேசுபொருளாய் ஆனதில் வாழ்வு படிந்தும் படியாமல் எப்பொழுதும் பயத்துடனே நகர்கின்றது பூனையில் காலின் எலியாய் அகப்பட்டுக்கொண்டிருக்கும் அர்த்தமற்ற வாழ்வின் நகர்வில் அகலமாகிக் கொண்டே செல்கின்றது ஆழ்மனதில் அசைக்கமுடியாது வேர்விட்ட நம்பிக்கைகள் இறுகப் பற்றியிருக்கும் இளையின் இறுமாப்பும் இன்னும் சிறிது நாளில் இல்லாமல் போய்விடுவதற்கான எல்லாக் காரணங்களும் எதிரிகளாகி என் மனத்துடன் ஏளனமாய்ச் சிரித்தபடி எதிர் யுத்தம் செய்கின்றன எனக்காகவே ஆர்ப்பரிக்கும் மனதின் அவலம் ஆழ்கடலில் மோ…

  20. முத்துக்குமரன்களும் முத்துவேலர்களும் தானாடாவிட்டாலும் தசை ஆடும்..அது ஆகாவிட்டால் தசை எரியும் ..முத்துக்குமரன்கள்... தானாடாவிட்டாலும் தசை நெரியும் முதுகுவலியில் (சாட்டாக) ஒதுங்கும்..முத்து வேலர்கள்... தமிழ் உணர்வு துரத்த ..தன்னுயிர் தானமாக்கும் முத்துக்குமரன்கள்.. தமிழ் உணர்வு வளர்த்து ... தன் வயிறு வளர்க்கும் முத்துவேலர்கள்.. தன் உறவுகள் துயர் பட ...உயிர் துறக்கும் ..முத்துக் குமரன்கள்.. தன் உறவுகள் கொழுத்துச் சிறந்திட ...உயிர் வளர்க்கும் ..முத்து வேலர்கள்.. ஒப்பிடவே முடியாத ..துயரம் ..கனக்கும் முத்துக்குமரன்கள்... ஒப்பிடலே இல்லாது ...காறி உமுழும் ...நிலையில் முத்து வேலர்கள்.. முன்னையது ..முத்து... பின்னையது..சொத்தை.. http://il…

    • 0 replies
    • 731 views
  21. Started by nochchi,

    அட்டைக் கத்தி -------------------------- 1915 படித்தவர் படியேறிச் சென்று சேர் பட்டம் வாங்கினர் 1948 சிங்கம் கத்தியோடு கொடியேறிக் கொண்டது தமிழர் நிலங்களி;லே சிங்களம் குடியேறியது 1918 முதல் கிழிக்கப்பட்டவை தமிழருடனான உடன்பாடுகள் மட்டுமல்ல உடலோடு உரிமைகளும்... தெளிவோடு சிந்தித்த தலைமையொன்றை தமிழர்கள் கண்டார்கள் முப்படை கொண்டு எம்முதுச நிலம் மீட்டார்கள் வந்தேறு குடிகளோடு வடவர்கள் கூடினார்கள் வரலாறு மீண்டும் தலைகீழாகியது தமிழர்களது கைகளிலே மீண்டும் அட்டைக் கத்தி அட்டைக் கத்தியையும் ஆயுதமாய் கொள்வானா எம் முன்னோர் சொன்ன „வல்லவனுக்குப் புல்லும் ஆயதம்' என்ற முதுமொழிக்கிசைவாக அறிவால் ஒளிர்வானா!

    • 6 replies
    • 731 views
  22. மனதெங்கும் எத்தனையோ மாயங்கள் அலைகளாய் எண்ணத்தில் தோன்றுவது எழுத்தில் வடித்திட முடியாததாய் காணும் காட்சிகள் கண்விட்டுப் போவதுபோல் நினைவுகளின் நீட்சிகள் தொடராதிருந்தால் எத்தனை இன்பம் மனம் எப்போதும் கொண்டிடும் காலத்தின் பதிவுகள் கனவின் கோலங்களாய் மனதில் மகிழ்வு தொலைத்து கண்கட்டிவித்தையில் கண் மூடும் வேளைகளில் கூட கபடியாடுகின்றன பகுக்க முடியாத எண்களாய் பகிரப்படும் நாட்கள் பம்பரமாய் சுழன்று மீண்டும் பரிதவித்து நிற்பதுவாய் நிமிடங்கள் நகர்த்தும் நாட்களாய் நெடுந்தூரம் செல்கின்றன தவிர்க்கவும் மறுக்கவும் மறக்கவும் முடியாததான பிணைப்பின் வலிமையில் மறுதலிக்கும் மனதின் செயல் எத்தனை கடிவாளமிடினும் எதுவுமற்றதாய் ஆகிவிடுகையில் எப்போதும் போல் என்னிலை ஏக்கங்…

  23. ஊருக்கு ஏற்றார்ப்போல் பேசி... உறவுகளுக்காக நடித்து...... வேலைக்கு ஏற்றார்ப்போல் ஆடி... வேண்டிய மட்டும் பொய் வார்த்தைகள் கூறி... நாட்களை நகர்த்துகிறேன் நான்.... என்னுடைய சுயத்தை இழந்தபடி.... http://www.ilankathir.com/?p=2622

  24. அறத்துப்பால்-கடவுள் வாழ்த்து -அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு (01)கே இனியவனின் திருக்குறள்-சென்ரியூ எழுத்தின் தாய் உலகின் தாய் -அகரம் - -

  25. இணையம் கண்டெடுத்த இதயம் (சும்மா ஒரு எதுகை மோனைக்காக!) எப்போதோ சந்தித்த ஒருவர் உலகத்தின் இன்னொரு மூலையில் வந்தபின் மீண்டும் ஹலோ சொல்வதால் வரும் சந்தோசம் பெரிது! கணினித் திரை வழி கைகள் சொடுக்கி இணையத்தில் தேடினேன் சந்தை நிலவரம் முதற்கொண்டு சாதிக் கலவரம் வரை உலகத்தின் வினையத்தனையும் விபரமாய்த் தரும் இணையத்தில் முந்தை ஒரு நாள் வீதியில் புன்னகைத்துச் சென்றவளும் சேதிகள் பலகொண்டு தேடியே வருவாள் என்று என்றேனும் நினைத்தேனா? விந்தையிது வென்று கூத்தாடி நான் மகிழேன்... இணையத்தின் அகன்ற கைகளில் உலகம் வெறும் எள்ளுருண்டை! http://kaviruban.spaces.live.com/blog/cns&...B!170.entry அண்ணா சும்ம…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.